புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
5 Posts - 3%
i6appar
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
441 Posts - 47%
heezulia
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
30 Posts - 3%
prajai
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_m10சுய இன்பம் - சில உண்மைகள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய இன்பம் - சில உண்மைகள்!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 9:17 pm

என் பள்ளி இறுதியாண்டில் (2002), ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத மாலை நேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். ரிமோட்டின் ஏதோவொரு பொத்தான் என்னை சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலையில் கொண்டு தள்ளியது. அங்கிருக்கும் எத்தனையோ சிவராஜ்களில் ஒரு மூத்த சிவராஜ் பேசிக்கொண்டிருந்தார்.

"தமிழ் நாட்டு இளைஞர்கள் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். சுய இன்பம் அனுபவிப்பதால், ஆண்மை இழப்பு ஏற்படும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது. உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவிழக்கும்.

என்னிடம் தினமும் இது போல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வருகிறார்கள். அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். என் பேரக்குழந்தைகள் இப்படிச் சீரழிவதை என்னால் தாங்க முடியவில்லை. உங்களுக்கும் கைப்பழக்கம் இருந்தால், நீங்கள் என்னிடம் வாருங்கள். நான் உங்கள் தாத்தா மாதிரி. உங்கள் வீட்டுக்குத் தெரியாமல் நான் உங்களைக் குணப்படுத்துகிறேன்.." அது இது என்று மிகவும் அக்கறையாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கண்ணீர் வேறு வடித்தார்.

நான் அரண்டு போய்விட்டேன். நான் மட்டுமல்ல. என் வயதையொத்த எந்தவொரு இளைஞன் பார்த்தாலும் பயந்துதான் போவான். இதில் மறைத்து வைக்க ஒன்றுமில்லை. வயது அப்படி! ஒரு ஆர்வத்தில், வளரும் தன்னுடலை ஆராய்தலின் ஈர்ப்பில், தனியாக இருக்கும் சில சந்தர்ப்பங்களில் சுயபுணர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியிருக்கும் ஒரு விவரந்தெரியாத விடலையிடம் இப்படிப்பட்ட தகவல்கள் தரப்பட்டால் விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும்.

மிகவும் பயந்து போனால் அவன் என்ன செய்வான். அப்படி, இப்படி என்று எப்படியாவது காசைப் புரட்டிக் கொண்டு, கோவை லலிதா லாட்ஜில் மாதாமாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் ஆஜராகும் ஒரு சிவராஜைப் பார்க்கப் போவான். காசைக் கொடுத்து விட்டுக் காலில் விழுவான். "அவரும் நீ ஒண்ணும் பயந்துக்காத தம்பி நாங்க பாத்துக்கறோம்" என்று வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு லேகியத்தையும், சூரணத்தையும் கொடுத்துவிட்டு "வர்ட்ட்டா.." என்று போய்விடுவார்.

நமக்கு அந்த அளவுக்கெல்லாம் தைரியம் இல்லையென்றாலும், எனக்குக் குழந்தை பிறக்காது என்று உள்ளூர நம்பத் தொடங்கிவிட்டேன். அவர் வேறு மறதி, பயம், சந்தேகம் போன்ற சகஜமாய் நிகழ்பவற்றையெல்லாம் கூட இந்த 'வியாதி'க்கான அறிகுறிகளாகச் சொல்லியிருந்ததால் பேனாவை மறந்து விட்டுப் பள்ளி சென்று விட்டால் கூட பயமாகவே இருந்தது. ஒரு மாதிரி என்னை நானே தேற்றிக் கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று இருந்தேன். பள்ளி, கல்லூரி எல்லாம் முடிந்தது.

இப்போதுதான்.. ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு செக்ஸாலஜிஸ்ட் ஒருவரிடம் உரையாடும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது (அப்போதும் தற்செயல்தான். நானாகப் போகவில்லை). அவரிடம் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன். சுய இன்பம் குழந்தைப் பேற்றைப் பாதிக்குமா என்று. சிறு புன்னகையுடன் அவர் சொன்னார்-

"Masturbation is a Healthy Sexual Behaviour. நீ சுய இன்பம் செய்யவில்லை என்றால்தான் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகளுண்டு. செய்கிறாய் என்றால் You are sexually perfectly alright. 95% ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியானால் 100க்கு 95 பேருக்குக் குழந்தை பிறக்காமல் அல்லவா போக வேண்டும். அப்படி இல்லையே. துணையுடன் வாரமிருமுறை உறவு கொண்டால் தீங்கில்லை என்று சொல்லும் உன்னுடைய அந்த மருத்துவம் (சிவராஜ்), அதே செயலை திருமணத்துக்கு முன்பு துணையில்லாமல் செய்து கொண்டால் மட்டும் எப்படித் தவறென்று சொல்ல முடியும்?

If Masturbation is wrong, and of course Sex is also WRONG. அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடாமல் பார்த்துக் கொள்தல் மட்டும் அவசியம். அது வெறும் பழக்கம் மட்டுமே. வியாதி அல்ல.

நீ உன்னைக் குழப்பிக் கொள்ளாதே. அதிகபட்சம் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையென்ற இடைவெளியில், சீராக உன்னால் சுய இன்பத்தைக் கட்டுப்பாட்டுடன் செய்ய முடிகிறது என்றால், ஒரு சராசரியான செக்ஸ் வாழ்க்கை உனக்காகக் காத்திருக்கிறது. சந்தோஷமாக இரு!"

சுய இன்பத்தை அடுத்து நம் சிவராஜ் அவர்கள் கூறிய இன்னொரு முக்கியமான 'வியாதி' - சொப்பன ஸ்கலிதம்! அதாவது உறங்குகையில் விந்து வெளியாதல். திருவாளர் சிவராஜ் அவர்கள் இதையும் ஒரு மிகக் கொடிய நோயாக சித்தரித்தார். இதைப் பற்றியும் கேட்டேன். அவர் பதில் -

"வளரும் இளைஞனின் உடலில் குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தியாகத் தொடங்கும் உயிரணுக்கள், முதல் முறை வெளியாவதற்கு இயற்கையே ஏற்படுத்தியிருக்கும் ஒரு முறைதான் இந்த சொப்பன ஸ்கலிதம். சரியாகச் சொன்னால் பெண்கள் ருதுவாதலை ஒத்த ஒரு ஆண் பூப்பெய்தல். ஆங்கில மருத்துவம் இதை Nocturnal Emission என்கிறது. துளி கூட இதனால் உடல் நலத்திற்கோ, குழந்தை பெறுதலுக்கோ பாதிப்பில்லை. இளைஞன் உடலுறவுக்குத் தயாராகி விட்டதற்கு ஒரு alerting mechanism தான். முதல் முறை மட்டுமல்ல. வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் இது ஏற்படலாம். பயப்படத் தேவையே இல்லை."

'என்னடா இது.. தூங்கும்போது இப்படி ஆகுதே' என்று குழம்பிப் போயிருக்கும் இளைஞன் சிவராஜ் பேசுவதைக் கேட்டால் என்ன ஆகாமல் இருப்பான்?

இவையெல்லாவற்றையும் விட மருத்துவர் சொன்ன அடுத்த வாசகம்தான் மிக முக்கியமானது.

"ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் 2 ஆண்டுகளாகப் பணிபுரியும் உனக்கே இவையெல்லாம் தெரியாது எனும் போது, இந்நாட்டின் மற்ற இளைஞர்களை நினைத்து மிகுந்த அச்சப்படுகிறேன்."

இவ்வரிகள்தான் நம் சமூகம் எனக்கு மாட்டிவிட்ட முகமூடியைப் பிய்த்தெறிந்து விட்டு, இதை எழுதும் தைரியத்தைக் கொடுத்தன. இப்படியே படித்தவன், படிக்காதவன் என்று எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால், பின் நம் இளைஞர்களுக்கு உண்மையை யார்தான் சொல்லித் தருவது?

பாலியலை மூடி மூடி வைப்பதன் மூலம் நாம் இங்கே காப்பாற்றுவதற்கு எந்தக் கலாச்சாரம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. செக்ஸ் என்ற சொல் வீடுகளுக்குள் புழங்கத் தகாதவொன்றாகவே இருக்கிறது. கெட்ட வார்த்தை! உடலியல் குறித்தான எந்த ஒரு விளக்கமும் குழந்தைகளுக்குப் பெற்றோரிடமிருந்து தரப்படுவதில்லை.

பண்பாடு, கலாச்சாரம் என்பதான மாயைகள் ஏற்படுத்தியிருக்கும் பொய் வலைக்குள் இவை சாதாரணமாக சாத்தியம். சரி. வீட்டில் தான் இந்நிலை. பள்ளியிலாவது தரமான பாலியல் கல்வி தரப்படுகிறதா எனில், நமக்குக் கிடைப்பதெல்லாம் ஒரு பெரிய 'இல்லை' மட்டுமே.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் கல்வியெல்லாம் சொல்லித்தர மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தரக்குறைவான செயல். அவமானம்! சிறார்கள் அவர்கள் உடலையும், உறுப்புகளையும் பேணுவதற்குக் கற்றுத் தருவதிலிருக்கும் ஆசிரிய தர்மம் புரியாதவர்கள். தத்தம் பிள்ளைகளுக்கே அவற்றைத் சொல்லித் தர எண்ணம் வராதவர்கள், ஊரான் பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்றுவிப்பார்கள்?

அவ்வளவு ஏன்? நான் இங்கே இத்தனை நியாயம் பேசுகிறேனே.. எப்படி? நான் எழுதுவதை என் பெற்றோர்கள் படிப்பதில்லை என்ற தைரியந்தான். என் உடன் பிறந்தோர் இருக்கும் வகுப்புக்கு பாலியல் கல்வி தரச் சொன்னால் செல்வேனா. மாட்டேன்! நம்முடைய மூன்றாந்தர சமூகம் என்னை அப்படித்தானே வளர்த்து வைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்காவது இந்தத் தேவையில்லாத தயக்கங்கள் இல்லாத வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பில் வளரும் இளைஞர்கள், பாலியல் மற்றும் உடலுறவு சம்மந்தப்பட்ட தவறான தகவல்களை வணிக நோக்கில் பரப்பும் காசாசை விஷமிகளிடம் எளிதாகச் சிக்கிவிடும் அபாயங்கள் மயிரிழை அளவேனும் குறையவும், எனக்குத் தெரிவதற்குத் தாமதமான நடைமுறை மற்றும் அறிவியல் பூர்வமான உண்மைகளை ஒரு சிலருக்கேனும் சரியான தருணத்தில் கொண்டு சேர்க்கவும் இது ஒரு சிறு முயற்சி.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.ayurvediccure.com/over_masturbation.htm
http://www.webmd.com/sex-relationships/guide/masturbation-guide
http://www.afraidtoask.com/masturbate/MedView.htm
http://en.wikipedia.org/wiki/Nocturnal_emission
நன்றி
உயிர்மை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri May 07, 2010 9:22 pm

அதுதான் அவருக்கு ஆப்பு வச்சுடாங்களே மணி ....
இது எல்லாம் விளம்பர யுக்தி .... சுய இன்பம் - சில உண்மைகள்! 56667

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 9:24 pm

நிர்மல் wrote:அதுதான் அவருக்கு ஆப்பு வச்சுடாங்களே மணி ....
இது எல்லாம் விளம்பர யுக்தி .... சுய இன்பம் - சில உண்மைகள்! 56667
இல்லை ஜி இன்னும் நிறைய பேர் இதனால் நரம்பு தளர்ச்சி வருமோ என பயந்தவர்களை பார்த்திருக்கிறேன்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri May 07, 2010 9:31 pm

maniajith007 wrote:
நிர்மல் wrote:அதுதான் அவருக்கு ஆப்பு வச்சுடாங்களே மணி ....
இது எல்லாம் விளம்பர யுக்தி .... சுய இன்பம் - சில உண்மைகள்! 56667
இல்லை ஜி இன்னும் நிறைய பேர் இதனால் நரம்பு தளர்ச்சி வருமோ என பயந்தவர்களை பார்த்திருக்கிறேன்

நம் நாட்டில் பாலியல் கல்வி இல்லாததே இதற்க்கு காரணம் மணி ....
யார் சொன்னாலும் அப்படியே நம்புறது நம் மக்களின் தலையாய பணியாகவே இருக்கிறது ..
அது உண்மையா என்று ஆராய்ந்து பார்ப்பதே கிடையாது ...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 9:33 pm

நிர்மல் wrote:
maniajith007 wrote:
நிர்மல் wrote:அதுதான் அவருக்கு ஆப்பு வச்சுடாங்களே மணி ....
இது எல்லாம் விளம்பர யுக்தி .... சுய இன்பம் - சில உண்மைகள்! 56667
இல்லை ஜி இன்னும் நிறைய பேர் இதனால் நரம்பு தளர்ச்சி வருமோ என பயந்தவர்களை பார்த்திருக்கிறேன்

நம் நாட்டில் பாலியல் கல்வி இல்லாததே இதற்க்கு காரணம் மணி ....
யார் சொன்னாலும் அப்படியே நம்புறது நம் மக்களின் தலையாய பணியாகவே இருக்கிறது ..
அது உண்மையா என்று ஆராய்ந்து பார்ப்பதே கிடையாது ...

நூற்றுக்கு நூறு உண்மை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 9:37 pm

சமுதாயத்திற்கு விழிப்புணர்வு தேவை.
நம் கல்வியிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 07, 2010 10:47 pm

மிகவும் பயனுள்ள பதிவு...! நன்றி அஜித்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 07, 2010 10:49 pm

இதைப் பூட்ட அவசியம் இல்லை... அனைவ்ரும் அறிய வேண்டிய விடயம் தானே...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக