ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

3 posters

Go down

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? Empty கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

Post by சபீர் Tue Jun 08, 2010 1:26 pm

கருவுற்றிருக்கும் போது பயணங்களை, குறிப்பாக வெளியூர்ப் பயணங்களைப் பெண்கள்
தவிர்த்துவிடுவது நல்லது. காரணம், இதுபோன்ற சமயங்களில் சில பெண்களுக்கு
ரத்தப்போக்கு அதாவது Threatened Abortion எனும் நிலை உண்டாகலாம். அதுபற்றி இப்போது
விளக்கமாகச் சொல்கிறேன்.

கருவுற்றிருக்கும் ஆரம்ப மாதங்களில் சில
பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. அதுபோலதான் ரஞ்சிதாவுக்கும் ஏற்பட்டது.
சென்ற செப்டம்பர் 10_ம் தேதிதான் அவளுக்குக் கடைசியாகப் பீரியட்ஸ் வந்தது. அக்டோபர்
21_ம் தேதி என்னிடம் வந்தவளுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்ததில் அவள் தாய்மை
அடைந்திருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்த சில நாட்களில் கர்ப்பமுற்றதற்கான
தலைசுற்றல், வாந்தியெடுத்தல் போன்ற அத்தனை அறிகுறிகளும் அவளிடம் தென்பட, அந்தக்
குடும்பம் சந்தோஷப்பட்டது. அதுவும் ரஞ்சிதா _ சிவகுமார் தம்பதியருக்கு அது
முதல்குழந்தை எனும்போது சந்தோஷத்துக்கு சொல்லவும்
வேண்டுமா...

எதிர்பாராதவிதமாக சில நாட்களில் (நவம்பர் 11) அவளுக்கு சிறுசிறு
துளிகளாக ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின் ஓரிரு நாட்களில் அது நின்றுபோனது. மீண்டும்
அடுத்தமாதம், அதாவது டிசம்பர் 9_ம் தேதியும் அவளுக்கு முன்பு போலவே ரத்தப்போக்கு
ஏற்பட.... பதறிப்போனது குடும்பம். பதற்றத்தோடு என்னை அணுகியதும் ரஞ்சிதாவுக்கு
ஸ்கேன் செய்து பார்த்தேன். கரு எந்த பாதிப்பும் இல்லாமல் நார்மலாக இருப்பது
தெரியவந்தது.

பீரியட்ஸ் சமயத்தில், கருவுற்ற சில பெண்களுக்கு இதுபோல
ரத்தப்போக்கு ஏற்படும். இதற்குக் காரணமுண்டு. கரு உண்டாகி, வளரும்போது அது
பெரும்பாலும் கருப்பையை இடைவெளியே இல்லாமல் அடைத்தபடி நின்றுவிடும். அப்படி
உருவாகும் கரு, கர்ப்பப்பையை முழுவதுமாக அடைத்துக் கொள்ளாமல் சிறு இடைவெளி விட்டு
நிற்கும்போதுதான் இதுபோல ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

பாதிப்பு ஏதும்
உண்டா?

இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்பதால் பயப்படத் தேவையில்லை.
கருத்தரித்த ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். இந்த ரத்தப்போக்கின்போது
பெரும்பாலும் வலி இருப்பதில்லை. என்றாலும் ரத்தப்போக்கு ஏற்படத் தொடங்கியதுமே
மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. காரணம் அது அபார்ஷன்தான் என்பதையோ, சாதாரண
ரத்தப்போக்குதான் என்பதையோ அவரால்தான் உறுதிபடச் சொல்லமுடியும். மருத்துவரின்
அறிவுறுத்தலின் பேரில் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிட, தேவையற்ற பயங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

சில மருத்துவர்கள் இதுபோன்ற ரத்தப்போக்கைக்
கட்டுப்படுத்த ‘எண்ணெய் ஊசி’ என்று பரவலாக அழைக்கப்படும் ஒருவித ஹார்மோன் ஊசி
போட்டுவிடுவார்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பேஷண்டோ அவருடைய சொந்தக்காரர்களோ
கூட எண்ணெய் ஊசி போட்டுவிடச் சொல்லி எங்களிடம் கேட்பார்கள். இந்த ஊசி போடுவதால்
எல்லாம் பெரிய பலன் இல்லை. உண்மையில் அபார்ஷன் ஆகப்போகிறதென்றால் அதை நம்மால்
தடுத்து நிறுத்தமுடியாது. உருவான கருவில் சில சமயம் க்ரோமோசோம் (ஒருவருடைய
தோற்றத்தையும் செயல்பாடுகளையும் நிர்ணயிக்கும் பொருள் இது!) குளறுபடிகள் உள்ளிட்ட
சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட கருவை மேற்கொண்டு வளரவிடாமல்
இயற்கையே அழித்துவிடும் ஒரு வழிதான் அபார்ஷன். பாதிக்கப்பட்ட அதுபோன்ற கருவை மேலும்
பொத்திப் பாதுகாக்காமல் வெளியே வரவிடுவதுதான் நல்லது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? Empty Re: கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

Post by சபீர் Tue Jun 08, 2010 1:26 pm

தாம்பத்திய உறவின்போது ரத்தப்போக்கு
வந்தால்...

கருவுற்றிருக்கும் சமயத்தில் கணவருடன் உறவு வைத்துக்
கொள்ளும்போது சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பயமுறுத்துவதுண்டு. இதுவும்
அபார்ஷன்தானோ என்று நினைத்து பயந்துவிடாதீர்கள். கருவுற்றவுடன் கர்ப்பப்பையின்
வாயில் பகுதி மிகவும் மிருதுவாகிவிடும். அந்தப் பகுதியில் அதிகப்படியான ரத்தம்
தேங்கி நிற்கும். உறவு கொள்ளும்போது இந்தப் பகுதியில் உராய்வு ஏற்பட்டு அதனால் அந்த
மிருதுப் பகுதியிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இதனால்தான் இப்படி ஏற்படுகிறது
என்பது புரியாமல் சிலர் அபார்ஷன் ஏற்பட்டுவிட்டதாகப் பதறிப்போவார்கள். இதையெல்லாம்
தவிர்க்கத்தான் கருத்தரித்த ஆரம்ப நாட்களில், உறவு கொள்ள வேண்டாம் என்று
மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ரத்தப்போக்கு ஏற்படுவதால் வேலையே
செய்யாமல் பெண்கள் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டும் என்பதில்லை. பயணங்களைத்
தவிர்த்துவிட்டு வழக்கம்போல வீட்டு வேலைகள் செய்யலாம். வேலைக்குப் போகும் பெண்கள்
ஓரிரு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு பிறகு புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலைக்குச்
செல்லலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? Empty Re: கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

Post by சபீர் Tue Jun 08, 2010 1:27 pm

மசக்கை வாந்தி ஏன்?
கருவுற்ற சில மாதங்களுக்குப் பெண்கள்
சர்வகாலமும் வாந்தி எடுப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த மசக்கை வாந்தி எதனால்
ஏற்படுகிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ‘குழந்தைக்கு நிறைய முடி
இருந்தால் வாந்தி அதிகமா வருமாம்!’ என்ற பொதுவான நம்பிக்கைகளிலும் அறிவியல்
உண்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இது சற்றே வருத்தி எடுக்கும் அறிகுறிதான்
என்றாலும் கரு நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் நல்ல அறிகுறி இது. இந்த
மசக்கை வாந்தி பிரச்னையை சில மாத்திரைகள் மூலம்
கட்டுப்படுத்திவிடலாம்.

மசக்கைக்கு மாத்திரை
சாப்பிடலாமா?

‘மாத்திரையெல்லாம் போட்டால் குழந்தை கலைஞ்சிடும். கை,
கால் விளங்காமல் பிறக்கும்’ என்று சிலர் பயமுறுத்துவார்கள். இந்த பயத்துக்குக்
காரணம் உண்டு. பல வருடங்களுக்கு முன் மசக்கை வாந்தியைக் கட்டுப்படுத்த Thalidomide
எனும் மாத்திரையை வெளிநாட்டவர் கண்டுபிடித்து அதை விற்பனைக்கும் கொடுத்தார்கள்.


மாத்திரையும் கச்சிதமாக செயல்பட்டு வாந்தியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.
ஆனால், மாத்திரை சாப்பிட்ட பெண்களின் குழந்தைகள், கை கால் சரியான வளர்ச்சி பெறாமல்
பிறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்புறம் அந்த மாத்திரை மார்க்கெட்டில் காணமல்
போனது வேறு விஷயம். அந்த சரித்திரத்தை மறக்காதவர்கள்தான் இன்றைக்கும் மசக்கை
வாந்திக்கு மாத்திரை போடக்கூடாது என்கின்றனர்.

வாந்தியைக் கட்டுப்படுத்த
இன்று கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் முற்றிலும் பாதுகாப்பானவைதான். என்றாலும்,
எந்தவித மாத்திரையையுமே மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில்தான் போட்டுக்
கொள்ளவேண்டும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? Empty Re: கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

Post by சபீர் Tue Jun 08, 2010 1:27 pm

ஸ்கேன் ஏன் செய்யவேண்டும்?
‘குழந்தை நல்லாதான் வளருதானு ஒரு
ஸ்கேன் செய்து பாத்துட்டா போச்சு!’ என்று, படிப்பறிவில்லாத பேஷண்டுகள்கூட
சர்வசாதாரணமாக ஸ்கேனிங் பற்றிப் பேசுமளவுக்கு, இன்று மக்கள் மத்தியில் அத்தனை
பிரபலமாகிவிட்டது ஸ்கேனிங் கருவி. அல்ட்ரா சவுண்ட் எனும் ஒலி அலைகளை உடலில்
செலுத்தி குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க ஸ்கேனிங் உதவுகிறது. மனித காதுக்கு
எட்டாத ஒலி அலைகளை உடலில் செலுத்தி, இந்தப் பரிசோதனை
செய்யப்படுகிறது.

கருவுற்ற பெண்ணுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்து
கர்ப்பத்தை உறுதி செய்வது வழக்கம். இன்று யூரின் டெஸ்டோடு ஒரு ஸ்கேன் செய்தும்
பார்த்துவிடுகிறோம். கர்ப்பப் பையில்தான் கரு வளர்கிறது என்பது நாம் எல்லோரும்
அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் கரு தப்பிதமாக கருக்குழாயில் வளர்ந்துவிடுதுண்டு.
இதுபோன்ற பிரச்னைக்குரிய கேஸ்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கவும் ஸ்கேனிங்
பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட கரு அபார்ஷன் கட்டத்தைத் தாண்டி வளர்வதைக் தடுக்கவும்
ஸ்கேனிங் பயன்படுகிறது.

சிலருக்கு பீரியட்ஸ் ரெகுலராக வராது.
இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் தேதியை (Due date) துல்லியமாகக்
கணிப்பது சிரமமாகிவிடும். இவர்களுக்கு ஸ்கேனிங் செய்து குழந்தையின் அளவு பார்த்து
குழந்தை பிறக்கப்போகும் தேதியைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். பிறக்கப்போவது
இரட்டைக் குழந்தையாக இருந்தால் அதற்கும் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள ஸ்கேனிங்
உதவுகிறது.

ஒரு பெண் கருவுற்றிருப்பது உறுதியாகி 6_10 வாரங்களுக்குள் ஸ்கேன்
செய்யலாம். பொதுவாகவே ஒருவருக்கு கர்ப்ப காலத்தின்போது வெவ்வேறு கட்டங்களில்
மொத்தமாக மூன்று ஸ்கேன்கள் செய்து பார்த்தால் போதும். பிரச்னைக்குரிய கருவுக்கு
டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்கேன் செய்து பார்க்கும் எண்ணிக்கை கூடவோ குறையவோ
செய்யலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? Empty Re: கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

Post by சபீர் Tue Jun 08, 2010 1:27 pm

எப்போதெல்லாம் ஸ்கேன் செய்வது?
முதல் ஸ்கேனை 8_10
வாரத்துக்குள் செய்யலாம். அடுத்ததாக 20_22 வாரங்களுக்குள் செய்யலாம். இந்த
சமயத்தில் ஸ்கேன் செய்யும்போது மூளை, இதயம், கிட்னி போன்ற குழந்தையின் முக்கிய
உடல்பாகங்களின் வளர்ச்சி துல்லியமாகத் தெரியும். மூன்றாவது ஸ்கேனை எட்டாவது
மாதத்தில், அதாவது 32_34வது வாரங்களுக்குள் செய்துவிடலாம்.

எத்தனை ஸ்கேன்
செய்து பார்த்தும் சில குழந்தைகள் ஒரு காது மடங்கியோ, சில விரல்கள் இல்லாமலோ
அவ்வப்போது பிறப்பதுண்டு. ஸ்கேன் செய்து பார்த்தும் இப்படியாகிவிட்டதே என்று சிலர்
மருத்துவர்களிடம் வருந்துவது உண்டு. சிலர் கோர்ட் படியேறுவதும் உண்டு. உண்மையில்
ஸ்கேனிங் மூலம் ஒரு குழந்தை 100% நார்மலாக வளர்கிறது என்று சொல்லிவிடமுடியாது.
இதற்குப் பல காரணங்கள் உண்டு.

சில சமயங்களில் கருவுற்றிருக்கும் பெண் ரொம்ப
குண்டாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட பெண்ணின் உடலுக்குள் அல்ட்ரா சவுண்ட் அலைகள்
சரியாக நுழையமுடியாமல் போக வாய்ப்புண்டு. அப்படியாகும்போது சில பகுதிகள்
துல்லியமாகத் தெரியாமல் போகலாம். மேலும் ஸ்கேன் செய்யும்போது குழந்தை
படுத்திருக்கும் நிலையைப் பொறுத்துதான் ரிசல்ட் கிடைக்கும். குழந்தையின் இடதுபுறம்
முழுமையாகத் தெரியும் சமயங்களில் வலது புறத்திலுள்ள சில தகவல்கள் பதிவு ஆகாமல் போக
வாய்ப்புண்டு. இப்படி ஸ்கேன் ரிசல்ட் துல்லியமாக இல்லாமல் போக பல காரணங்களை
அடுக்கிக் கொண்டே போகலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? Empty Re: கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

Post by சபீர் Tue Jun 08, 2010 1:27 pm

ஆணா, பெண்ணா தெரிஞ்சுக்க முடியுமா?
‘யு.எஸ்ல எல்லாம் அஞ்சாம்
மாசமானதுமே குழந்தை ஆணா, பெண்ணானு சொல்லிடறாங்க தெரியுமா? நீங்க ஏன் அப்படிச் சொல்ல
மாட்டேங்கறீங்க?’ என்று என்னுடைய சில பேஷண்டுகள் கேட்பதுண்டு. யு.எஸ். போன்ற
வளர்ந்த நாடுகளில் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதை
சந்தோஷத்துடனேயே பெற்றுக் கொள்பவர்கள்தான் அதிகம். நம் நாட்டில் அப்படி ஒரு நிலைமை
இல்லையே... ஆண் குழந்தையென்றால் பெற்றெடுப்பதில் ஆர்வமாக இருக்கும் சில பெற்றோர்,
பெண் குழந்தை என்றதும் அதை அழிக்கத் துடிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின்
எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால்தான் அரசாங்கம் Sex Determination¬ò யை
(குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிதல்) தடைசெய்துள்ளது.

உண்மையில் சுமந்து
கொண்டிருக்கும் அந்தக் கரு ஆணா, பெண்ணா என்று, அந்தப் பத்து மாதமும் பொறுத்திருந்து
பார்ப்பதில்தான் த்ரில்லே இருக்கிறது. இது அனுபவசாலிகளுக்கு மட்டுமே புரிந்த
விஷயம்...




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? Empty Re: கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

Post by ரபீக் Tue Jun 08, 2010 1:32 pm

மிகவும் சிறந்த படைப்பை தந்தமைக்கு நன்றி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? Empty Re: கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 1:38 pm

அருமையான பொக்கிஷங்களாக பாதுகாக்கப்படவேண்டியவை இந்த மருத்துவ கட்டுரைகள் எல்லாமே சபீர்...

மிக மிக பயனுள்ளதாகவும் எல்லோரும் பயந்து போகாமல் இருக்க இது ரொம்ப உதவியாக இருக்கிறது....

உண்மையே..... கருத்தரித்தப்பின் ரத்தப்போக்கு என்றால் பயந்து தான் போகிறோம்.. அபார்ஷன் என்று....

பெண்களுக்கு இந்த தகவல்கள் எல்லாமே ஒரு வரப்ரசாதமாகும் சபீர்...

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..? Empty Re: கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum