புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 12 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.


   
   

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்




உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?




[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:29 pm

srinihasan wrote: ஆமாம் நாங்கள் அனைவரும் இருகின்றோம்... [You must be registered and logged in to see this image.]

உண்மையேப்பா...அன்பு நன்றிகள் ஸ்ரீனிஹாசன்..... [You must be registered and logged in to see this image.]



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 1:30 pm

மஞ்சுபாஷிணி wrote:
பாலா என்னை சிரிக்கவைக்கும் பதிவுகள் நீ போடவே இல்லையே என்னாச்சு பாலா?

ஒண்ணுமில்லே கொஞ்சம் லீவ் உட்ருக்கேன்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:31 pm

சபீர் wrote:உங்கள் தொடர் இளப்பைப்பற்றி எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிக்கா.
மஞ்சு அக்கா உங்களுக்கு என்னால எப்படி ஆறுதல்சொல்லுவதென்றே தெரியவில்லை அக்கா.இதைப்படிக்கும்போதே எனக்கு நெஞ்சம் சோகத்தில் கணக்கிறது அக்கா எனக்கே இப்படியென்னறால் நீங்கள்...............இத்தனை நாள் தாங்கி இருப்பதை நினைக்கும் போது உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன் அந்த தைரியத்தை தந்த இறைவனுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.மனிதன் பாழாய்ப்போன பணத்துக்காக எதையும் செய்ய தயாராக உள்ளான் நிச்சயம் இந்த கொலைய செய்தவர்களுக்கு நாசம் உண்டாகும் அக்கா.அந்த வெறி நாய்கள் சிதறி அழியும் செய்தி உங்கள் காதில் மிகவிரைவில் எட்டும் அக்கா [You must be registered and logged in to see this image.]
என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக ஏற்று எனது ஆறுதலை எடுத்துக்கொள்ளுங்கள் அக்கா.இதை மீண்டும் ஒரு முறை படித்தால் அழுகைவந்திவிடும் அக்கா அந்தளவுக்கு உங்கள் தொடர் இளப்புகள் உள்ளது.இருந்தபோது இறைவனிடம் அனைத்தையும் பாரம்கிடைத்துவிட்டு ஆறுதலாக இருங்கள் அக்கா.உங்கள் மன ஆறுதலுக்கு இறைவனிடம் நானும் வேண்டிக்கொள்கிறேன் அக்கா [You must be registered and logged in to see this image.]

ஹௌ ஸ்வீட்... இத்தனை அன்பை பெற இறைவனுக்கு நான் நன்றிகள் அதிகம் சொல்கிறேன் சபீர்....

அன்பு நன்றிகள் சபீர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Jun 22, 2010 1:56 pm

என்னையும் எனது அனுபவம் எழுதிட அழைத்தமைக்கு நன்றி சபீர், அனைவரது இன்பங்களினையும் துன்பங்களினையும் பகிர்ந்துகொள்ளும் இத்திரி மென் மேலும் சிறப்புடன் திகழ வாழ்த்துகின்றேன்,
பகிர்ந்து கொண்ட அனைவரது அனுபவத்தினையும் வாசித்தேன் எல்லோருமே உணர்வு பூர்வமாக எழுதியுள்ளார்கள், இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை, எதையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்கு எமது அனுபவங்கள் உதவுகின்றன, அவ்வனுபவங்களை மீட்டு அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் இதமாகின்றது. அதற்கு வழிசெய்யும் வகையில் திரியாரம்பித்த சபீரிற்கும், ஈகரைக்கும் எனது நன்றிகள்.


எனது துன்பமான அனுபவத்தினை இப்போது பதிகின்றேன் சற்று நீண்டதாக இருக்கும் பொறுமையுடன் படியுங்கள், இன்பமான அனுபவம் பின்னர் பதிகின்றேன்.



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Jun 22, 2010 2:02 pm

புதைந்த ஞாபகம்......



மறந்துபோக வேண்டுமே என்று எங்கோ என்னுள் புதைத்து வைத்த அந்த புதைக்கப் பட்ட ஞாபகம் இன்றும் என்மனதில் வந்து என்னை கிளறி விட்டுப் போனது...

குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளை இந்திய அமைதிப்படை கைதுசெய்து அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க முற்பட்ட சமயம் தமது கொள்கையின் படி சயனைற் அருந்தி உயிர்துறந்தனர். அதற்குப் பின்னர்தான் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தம் வெடித்தது.

இறுதியாக கோப்பாய் எனும் இடத்தில்தான் நேருக்கு நேர் யுத்தம் நடந்ததென்று நினைக்கின்றேன் பின்னர் புலிகள் தமது தாக்குதல்களின் வியூகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இருந்தாலும் குண்டுகளின் சத்தங்கள் தொடர்ந்தும் கேட்டபடிதான் இருந்தது.... !


தென்மராட்சியில் இதுவரை எதுவும் நடக்கவில்லை அதனால் சண்டை நடந்த இடத்தில் இருந்து கூடுதலானவர்கள் வெளியேறி தென்மராட்சியில் தஞ்சம் புகுந்திருந்தனர். எமது வீட்டிலும் நான்கு குடும்பத்தினர் தங்கி இருந்தனர் அதேபோல்தான் ஒவ்வொருவர் வீட்டிலும் பல குடும்பங்கள் தங்கி இருந்தனர்.

சண்டை தொடங்கியதில் இருந்து பாடசாலை நடக்கவில்லை வீட்டில் இடம் பெயர்ந்து வந்தவர்களின் பிள்ளைகளும் நானும் மற்றும் என் சகோதரர்களும் சில சமயம் பக்கத்து வீட்டாரும் சேர்ந்து ஏதாவது விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்போம். பாடசாலை போக முடியவில்லை என்ற கவலை மறந்து மற்றையவரும் இடம் பெயர்ந்து வந்தோமே என்கின்ற கவலையை மறந்தோ அல்லது மறப்பதற்காகவோ. ஏதாச்சும் விளையாடுவோம்.


எமது வீட்டில் இருந்து நகரச் சந்தை ஒரு கிலோமீற்ரர் தொலைவில் உள்ளது முன்னரை விட இப்போது தென்மராட்சியில் மக்கள் தொகை கூடியதால் சந்தை நிரம்பி வழியும். சந்தையை அண்மித்தபடி அரச மருத்துவமனை. அப்பா அங்கேதான் வேலை பார்க்கின்றார் ....
எமது வீட்டில் இருந்தவர்களும் சந்தைக்குச் சென்று திரும்பி விட்டார்கள். நானும் எமது வீட்டில் இருந்தவர்களின் பிள்ளைகளும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம் ...

திடீரென வானத்தில் ஒருவிசித்திரமான ஹெலி பெரும் இரைச்சலுடன் வட்டமிட்டு சந்தையை நோக்கி பதிவதைக் கண்டோம் ஓரிரு நிமிடத்தில் .....ட்றாறாங்ங்.... என்று சத்தம் கேட்டது. பின்னர் திரும்பவும் அந்த ஹெலி மேலெழும்பி போய்விட்டது .... இதுவரையில் அப்படிச் சத்தத்தை கேட்டதேயில்லை. ஷெல், குண்டு, துப்பாக்கி, இவற்றின் சத்தங்கள் தெரியும் ஆனால் இந்தச் சத்தம் புதுவிதமாக இருந்தது....?!

முற்றத்தில் நின்ற எம்மை வீட்டினுள் வரும்படி அழைத்தார்கள்... சிறிது நேர நிசப்தம் பின்னர் வேலைக்கு போன அப்பா இன்னமும் வீடு திரும்பவில்லையே என்று அம்மா பதற்ரப்பட.... வீட்டில் இருந்த மாமா மார் தாங்கள் போய் பார்த்து வருவதாக கூறி சைக்கிலையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
எனது மனதில் ''கடவுளே அப்பாவுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாது நல்லபடியாக வீடுவந்து சேரவேண்டும்'' என்று இறைவனை வேண்டியபடி இருந்தேன்...!


நேரம் ஆக ஆக மனதில் பயம் குடிகொண்டது. போன மாமாவினரையும் காணவில்லையே எனும் ஏக்கம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தது. சில மணி நேரத்தின் பின்னர் அப்பாவும் மாமாவினரும் வந்தார்கள். அவர்கள் முகத்தில் கவலை படர்ந்திருந்தது. உடையெல்லாம் ரத்தத்தால் நனைந்திருந்தது. அம்மாவும் நாங்களும் பதறியடிக்க அப்பா இடை மறித்தார். ''சத்தம் போடாதைங்கோ எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை'' என்று விட்டு நடந்ததை விபரித்தார்....


இந்தியன் ஆமியின் ஹெலி அப்பா மருத்துவ மனையில் இருந்த சமயம் வானத்தில் வட்டமிட்டு பின்னர் சந்தையை நோக்கி பதிந்து குண்டுகளை?? வீசியதாகவும் அதன் பின்னர் கெலி போய் சிறிது நேரத்தில் சந்தையில் இருந்து இறந்தவர்களின் உடல்களும் காயப் பட்டவர்களும் மருத்துவ மனைக்கு எடுத்து வரப்பட அவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட அப்பாவைத் தேடிப் போன மாமாவினரும் இணைந்து கொண்டனர். நேரம் ஆக வீட்டில் அனைவரும் பயத்துடன் இருப்பார்கள் தங்களைத்தேடுவார்கள் என்பதனால் தாம் வந்துவிட்டதாக சொன்னார்.


அன்றைய இரவு ஒருவரும் சரியாகத் தூங்க முடியவில்லை நடந்த தும்பியல் சம்பவங்களைப் பற்றிய பேச்சு. மனதில் நிறைந்திருந்தது சிறிது நேரத்தின் பின்னர் கண்ணயர்ந்து விட்டேன்.

எங்கள் வீட்டு நாய் தொடர்ந்து குரைக்க கண் விழித்து என்னவாக இருக்கும் என எட்டிப்பார்த்தேன். எனக்கு முன்னரே கண் விழித்த அப்பாவும் மற்றையவர்களும் சொன்னார்கள் நகருக்குள் ஆமி வந்து விட்டதாம் அதுதான் நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த சனங்கள் எல்லாம் கிராமத்தின் உட் பகுதிகளை நோக்கி இடம் மாறிக் கொண்டிருப்பதாக.

எங்கள் வீடும் பிரதான வீதியை அண்மித்து இருப்பதனால் எமக்கு பாதுகாப்பனதல்ல. ஓரிரு நாட்களிற்கு நாங்களும் ஒரு மைலேனும் கிராமத்தின் உள்ளே போய் இருந்துவிட்டு நிலமையைப் பார்த்து பின்னர் திரும்பவும் வீடு வருவோம் என முடிவெடுக்கப் பட்டது. ஆனால் எங்கு போவது...? வீட்டில் இருந்தவர்களுடன் சேர்த்து இருபது பேரும் எங்கே போய் தங்குவது ...? எனும் கேள்விகள் முன்னின்றன. பின்னர் எமது வீட்டில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போவதாக முடிவு செய்யப் பட்டு சில தினங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் , உடைகளும், பணம், நகை, போன்ற பெறுமதியானவைகளும் எடுத்துக்கொண்டு நாம் பிறந்து வளர்ந்த அந்த வீட்டை விட்டு கோவிலை நோக்கி அந்த அதிகாலையில் சூரிய உதயத்தின் முன்னரே வெளிக்கிடுகின்றோம்.

எமது அயலவர்களும் சேர்ந்து எம்முடன் வெளிக்கிட்டனர். ஆனால் பக்கத்து வீட்டு அப்பு மட்டும் வெளிக்கிடவில்லை. ''இந்த வயது போன காலத்தில என்னால அலைய ஏலாது என்ன நடக்கிற தென்றாலும் அது எனக்கு என்ர வீட்டிலையே நடக்கட்டும் நீங்கள் போட்டு வாங்கோ என்னைப் பற்றி கவலைப் படாதைங்கோ'' என விரக்தியாகப் பேசினார். எனது மனம் கனத்து வெடிப்பது போல் இருந்தது. எத்தனை பேர் இப்படி சொந்த நாட்டிலேயே சொந்த வீடுவாசலை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக அலைகின்றார்கள். ... நினைவுகளில் நாளையைப் பற்றிய சிந்தனையுடன் நாமெல்லாம் கோவிலை நோக்கி நகரத்தொடங்கினோம்.

கோவிலை வந்தடைந்ததும் வந்த களை தீர கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்துவிட்டு கோவிலின் அருகில் இருந்த அரசமரத்தருகில் எல்லோரும் கூடி இருந்தோம். எமக்கு முன்னரே வேறு பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லோருமாக எழுபது பேர்வரை அந்தக் கோவிலில் தஞ்சம் புகுந்திருந்தோம். ஒவ்வொருவர் முகமும் வாடிப்போய் இருந்தது. எல்லோருக்கும் மதிய உணவு செய்வதற்கான ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது ஒவ்வொருவர் கொண்டுவந்த அரிசி,மரக்கறி,பருப்பு, போன்றவற்றை ஒன்றாகப் போட்டு கறிச்சோறாக சமைப்பதற்கு கோவிலில் ஏற்கனவே இருந்த பெரிய பாத்திரம் எடுத்து மடப்பள்ளியில் அடுப்பு பற்ற வைக்கப் பட்டது.

அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. வீட்டில் இருக்கும் அரிசி மூட்டையில் ஒன்றை போய் எடுத்துவந்தால் ஒரு சில நாட்களிற்கான சாப்பாட்டுப் பிரச்சனை இருக்காதே என்று! அம்மாவிடம் சொன்னேன் ''எமது வீட்டடிக்கு இன்னும் ஆமி வரவில்லைத்தானே..? நான் கெதியாப் போய் ஒரு மூடை அரிசியை சைக்கிலில் கட்டிக்கொண்டு வாரேனென்று! அதற்கு அம்மா சொன்னா ''போக வேண்டாம் அங்கு ஒருத்தரும் இல்லை தேவை என்றால் பிறகு பார்ப்போம்'' என்று அதற்கு நான் ''இல்லை உடனும் வந்துடுவேன்'' என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்து மிதிக்க அங்கு நின்ற நண்பன் மோகன் தானும் வருவதாகச் சொல்லி சைக்கிலில் ஏறி விட்டான்..... தூரத்தில் ''அப்பாட்டை சொல்லிட்டுப் போ' என்று அம்மா சொல்வது கேட்டது. எனது சைக்கிள் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.


இடை வழியில் மோகன் சொன்னான் ''டேய் மச்சான் எதுக்கும் நகர்ப் புறம் போய் ஆமி வந்திருக்கிறானா என்று எட்ட நின்று பாத்திட்டு வருவமோ..?'' என்றான். எனக்கும் சரி போய் பார்த்தால் போயிற்று என்று தோன்ற சைக்கிள் வீட்டையும் தாண்டி நகரை அண்மித்துக் கொண்டிருந்தது.

சிறிது தூரத்தில் இருந்தே பிரதான வீதியின் குறுக்காக மணல் மூடைகள் அடுக்கப் பட்டு பாதுகாப்பு அரண் அமைக்கப் பட்டிருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ''டேய் உண்மையிலே ஆமிக்காரன் நிக்கிறாண்டா வா திரும்பிப் போவம்" என்று சைக்கிலை நிப்பாட்டினேன். ''சரி உள் வீதியால போவம் அப்படியே தபால் கந்தோரடியால போய் டச்சு றோட்டால் வீட்டுக்கும் போவம்'' என்றான் எனக்கும் அது சரியாகப் பட அரச மருத்துவ மனையுடன் இருந்த வீதியால் உட்பக்கம் போய் பின்னர் ஒரு குச்சொழுங்கையினுள் சைக்கிலை சொலுத்தும் போது அருகில் இருந்த வீட்டு மதிலின் பின்னால் இருந்து ''ஹான்ஸ் அப்'' என்ற குரல் கேட்டது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தால் ஓர் ஆமி எம்மை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறு நின்று கொண்டிருக்க வேறு இரண்டு ஆமிக்காரர் எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தனர்!

எனது இதயத்துடிப்பை மட்டுமல்ல மோகனின் இதயத்துடிப்பையும் என்னால் கேக்கக்கூடியவாறு இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். ஓடுவோமா? அல்லது அப்படியே கையைத்தூக்கிடுவோமா என்று சிந்திப்பதற்கே நேரம்கிடைக்கவில்லை வந்த ஆமிக்காரர் மிகவும் நெருங்கிவிட்டதால் கையை உயர்த்தினோம். வந்தவர்கள் முதலில் எமது உடலைச்சோதனையிட்டார்கள். பின்னர் கையைத்தூக்கியவாறே நகரின் உள்நோக்கி எம்மை துப்பாக்கி முனையில் இட்டுச்சென்றார்கள். நான் அப்பாவுடன் அழுது அடம்பிடித்து வாங்கிய புதிய ஏசியாச் சைக்கிலையும் அப்படியே போட்டு விட்டு இனி என்ன நடக்கப்போகின்றதோ எனும் பயத்துடன் நகருக்குள் போகின்றோம்.

காலில் ஈயத்துகள்கள் மிதிபட்டன பார்க்கும் இடமெல்லாம் இரத்தக்கறை படிந்திருந்தது நவீனசந்தையின் முற்புறத்தில் உள்ள சிற்றுண்டிக் கடை எரிந்து கரிப்பிடித்ததுபோல் காட்சிதந்தது. சுவர்கள் சன்னங்களின் துளைகளினால் சல்லடை போடப்பட்டிருந்தது. பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலிம் பார்த்த அனர்த்தங்கள் இன்று நேற்று நடந்ததை நேரடியாகப் பார்க்கும்போது மனம் கனத்தது. ஏதோ ஒரு விரக்தியில் மனம் மரத்துப் போனது.

எம்மை இட்டுவந்தவர்கள் பிரதான பஸ்நிலையமருகில் இருந்த மரத்தருகேவிட இன்னும் பல ஆமிக்காரர் எம்மைவந்து சூழ்ந்து கொண்டார்கள் வந்தவர்களில் சிலர் தமிழராக இருந்தனர் திரும்பவும் எமது உடல்கள் சோதனை செய்யப்பட்டது. பின்னர் புலிகள் எங்கே என்று கேட்க எமக்கு புலியென்றால் என்னவென்பதே தெரியாத பாவனையில் தெரியாது என்றோம். ரெளண்டு கட்டி அடிப்பது என்பது கேள்விப்பட்டிருக்கிறேன். சினீமாக்களிலும் பார்த்திருக்கின்றேன் ஆனால் அது அப்போது எமக்கு நிகழ்ந்தது. அடிபடாத இடமே இல்லை எனலாம் அப்போது வலிக்கவில்லை.எனது மூழை நோவை உணரும் தன்மையை மறந்திருந்ததோ என்னமோ..?? இறுதியாக துப்பாக்கியை லோட் செய்து முனையை எனது வாய்க்குள் வைத்த ஒருவர் ''சொல்லு புலிகள் எங்கு இருக்கின்றார்கள் அவர்கள் அனுப்பிய ஆக்கள்தானே நீங்கள்..? சொல்லாவிட்டால் சுட்டுவிடுவேன்'' என்றார். நான் கண்களை இறுகமூடிக்கொண்டேன். அம்மா, அப்பா, சகோதரர், மற்றும் உறவினர் நண்பர்களது முகம் சிலைட்ஷோ வாக மனக்கண்முன் ஓடிக் கொண்டிருந்தது. ''அம்மா இனி எப்போது உன்னைக் காணப் போகின்றேன் என்னேரமும் எனதுயிர் பிரியப் போகின்றது'' என்று நினைக்க அப்போது அங்கு வந்த உயரதிகாரியாக இருக்க வேண்டும் ஹிந்தியில் மற்றைய ஆமிக்காரருடன் ஏதோ கதைத்தார்... பின்னர் எமது கைகள் இரண்டும் பின்னுக்கு இரண்டு கைப் பெருவிரல்களையும் ஒன்றாக இணைத்து கயிற்றினால் நன்றாக வரிந்து கட்டப்பட்டது. ஏற்கனவே உடைக்கப்பட்ட அருகில் இருந்த கடைக்குள் எம்மை உள்ளே தள்ளிவிட்டு ''இன்னமும் அரை மணித்தியாலத்தினுள் புலிகள் எங்கே இருக்கின்றார்கள் என்பதனைச் சொல்லாது விட்டால் கடையுடன் சேர்த்து குண்டு வைத்து விடுவோம்'' என்றுவர்கள் கடைக்கு வெளியில் மூவர் எமக்கு காவலுக்கு நின்றனர்.

கடையினுள்ளே எம்மைப்போல் இன்னும் நான்குபேர் இருந்தது அப்போதுதான் தெரிந்தது. அவர்களும் எம்மைப்போல் புதினம் பார்க்க வந்து மாட்டுப்பட்டவர்கள் தான். அவர்களைக் கண்டது மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது... அந்த ஆறுதல் நாம் மட்டுமல்ல எம்முடன் சேர்ந்து இன்னும் பலரும் சாவதற்கு இருக்கின்றார்கள் என்பதனால் அல்ல. இரவில் ஒன்றுக்குப் போவதற்கே தனியாய் போகப் பயத்தில் யாரையும் துணைக்கு கூப்பிடுவது போல் பக்கத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இன்னும் பலர் எம்முடன் இருந்தது கொஞ்சம் மன ஆறுதல் தந்தது.

சில மணித்தியாலங்களின் பின்னர் எங்கள் ஆறு பேரையும் வெளியில் கூட்டிவந்து கைகளின் கட்டுக்களை அவிழ்த்தார்கள். எங்களை விடுதலை செய்யப் போகின்றார்கள் என நினைத்தேன். ஆனால் நடந்தது.... நான் பார்த்தது ..... இதைவிட இறந்திருக்கலாமோ..? என்று தோன்றியது.!

பிரதான வீதியின் ஓரத்தில் பாடசாலைக்கு அருகாமையாக ஒரு வெள்ளை வான் நின்றுகொண்டிருந்தது அதனை நோக்கி எம்மை வருமாறு அழைத்தார்கள். ''என்னவாக இருக்கும் இதில் ஏற்றி எம்மை எங்காவது கொண்டு போகப் போகின்றார்களோ''..? அருகில் சென்றபோதுதான் தெரிந்தது வான் முழுவதும் துப்பாக்கி துளைத்த ஓட்டைகளாக இருந்தது சில்லும் காற்றுப்போய் இருந்தது.

எம்மைச் சுற்றி ஒன்பது ஆமிக்காரர்கள் மட்டிலிருந்தார்கள் அதில் ஒருவர் தமிழன் இன்னும் ஒருவர் தமிழ் தெரிந்தவர். தமிழ் ஆமிக்காரர் சொன்னார் ''தம்பிகளா ஓடிடாதீங்க ஓடினால் சுடும்படி உத்தரவு நம்ம ஆக்கள் எல்லா இடமும் நிக்கிறாங்க நினைச்சுக்கூட பார்க்காதீங்க. பஸ்சுக்குள் இருப்பவற்றை அப்புறப் படுத்தியதும் உங்களை வீட்டுக்கு போக விடுவாங்க'' என்றார்!

வானினுள் இதுவரைக்கும் என்ன இருக்கின்றது என்று தெரியாமல் இருந்தேன் உள்ளுக்குள் ஏறிப்பார்த்தால் அம்மாடியோவ்..... ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், என ஒரு நாற்பது பேர்மட்டில் இறந்தபடி இருந்தனர் நான் பார்த்த காட்சியை அப்படியே என்னால் எழுத முடியவில்லை.... ....அவளவு கோரம்

அந்த நேரம் எனது மனம் கல்லாகிவிட்டது கதறவும் இல்லை கண்ணீரும் வரவில்லை அங்கிருந்த அனைவருமே அப்படித்தான் நின்றார்கள். எமக்கு முன்னர் பிடிபட்டிருந்த அண்ணா கொஞ்சம் கூடுதலாக உணர்ச்சி வசப் பட்டவராய் ''ஏன் இப்படி...???? இந்த பிஞ்சுகளைப்பார்த்தால் உங்களுக்கு போராளி மாதிரியா கிடக்கு'' என தமிழ் ஆமிக்காரரிடம் கேட்டார். அவரது மனமும் கொஞ்சம் சோர்ந்திருந்தது இருந்தாலும் அதை வெளிக் காட்டாதவர்போல் ''இரவு இந்தவழியால் வந்த வாகனம் மறிக்கும் போது நிறுத்தவில்லை அதனால்தான் இப்படியாகிவிட்டது. உள்ளே இருப்பது யாரென்று எப்படித் தெரியும்...? ..... நம்ம ஆக்களையும் உயிருடன் பிடித்து ரயரை மாலையாப் போட்டு கொழுத்தினாங்கதானே...?'' என்று தமிழ் ஆமிக்காரர் சொல்லி முடிக்க அந்த அண்ணா வாதாடுவதற்குரிய இடமில்லை இவர்களுக்கு என்ன தெரியும் சுடு என்றால் சுடுவது இவர்கள் கடமை. இவற்றை எல்லாம் இயக்குபவன் எங்கோ இருக்கான் இனி எதைப்பற்றிக் கதைப்பதும் பிரயோசனமில்லை என்பதுபோல் மெளனமானார்.

எமக்கும் இனி இதுதான் நடந்துவிடப் போகின்றதோ எனும் எண்ணம் எம் முன் விரிந்து நின்று பயமுறுத்தியது.!

ஏற்கனவே உடல்களைப் புதைப்பதற்கான குழிகள் மீன் சந்தைக்கு அருகில் உள்ள தண்டவாளத்திற்கு அடுத்த பக்கமாக ஒரு வெளிப் பிரதேசத்தில் மற்றைய ஆமிக்காரரினால் வெட்டப் பட்டுவிட்டன . உடுப்புக்கடை ஒன்று உடைக்கப் பட்டு அதில் இருந்த துணிகளை எடுத்துத் தந்தார்கள் இறந்தவர்களின் உடல்களை அத்துணிகளினால் சுற்றி புதைக்க வேண்டும். நானும் மற்றையவர்களும் ஒவ்வொரு உடலங்களாக வானில் இருந்து எடுத்து துணியால் மூடிக்கொண்டிருந்தோம். ஆனால் எனது நண்பன் மோகன் வானினுள் உடலங்களில் அணியப் பட்டிருந்த நகைகளை களற்றிக் கொண்டிருந்தான். இவனது இந்தச்செயல் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது ''டேய் என்னசெய்கிறாய்.... ?? இதெல்லாம் ஏன் இப்ப களட்டுறாய்...?'' எனக் கோபமாகக் கேட்டேன். அதற்கு அவன் சொன்னான் ''வீணாய் ஏன் இதையும் சேர்த்துப் புதைக்க வேணும்.... நீயும் வேணுமென்றால் களட்டிப் போட்டு புதைடா'' என்றான். ... ''சீ போடா நாமளே உயிருடன் போறமோ தெரியாது. எப்படியும் இந்தக் குழி ஒன்றுக்கை இவர்களுடன் நாமளும் சேரப் போறம். அதற்குள் நீ வேறு இந்த வேலை செய்யுறாய்! என்னவாவது செய் '' என்றேன் வெறுப்புடன். இதுவரைக்கும் பிண நாற்றம் வீசவில்லை எனக்கு ஆனால் இப்போதுதான் மோகனில் இருந்து அந்த நாற்றம் வீசுவதாக உணர்ந்தேன்.

சில மணித்தியாலங்களில் வானில் இருந்த அனைத்து உடலங்களும் புதைக்கப் பட்டு விட்டன அதில் இருந்தவர்களில் ஒருவரையும் எனக்குத் தெரிந்தவராக இல்லை இருந்தாலும் பலரது முகங்கள் இப்போதும் மனக்கண் முன் வந்து மறைவதுண்டு. பல ஆண்கள் பூனூல் அணிந்திருந்தனர் அவர்களையும் மற்றவர்களுடனேயே சேர்த்து ஒன்றாகப் புதைத்தோம். இங்கு சமயம், சாதீயம், எல்லாம் இறந்தபின் அனாதரவான உடல்களிற்கு ஏது ...? புதைப்பதா..? எரிப்பதா என்பதனைக்கூட எங்களால் முடிவு செய்யமுடியாது.! இப்போது நாங்கள் கைதியாக இருக்கின்றோம் அதனால்தான் இந்திய ராணுவத்தின் கட்டாயத்தின் பேரில் அவர்களால் கொல்லப்பட்டவர்களை புதைக்கின்றோம் என்றில்லாமல் எமது கடமை எனும் உணர்வுடன் காரியத்தை செய்து முடித்தோம். மனது அவர்களது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்துக் கொண்டது. !

இனி நாம் விடுதலையாகப் போகின்றோம் எனும் நினைவுடன் இருக்கும் போது அந்தத் தமிழ் ஆமிக்காரர் வந்து சொன்னார் இன்று இரவு அடுத்த நகருக்குரிய குறுக்கு வழிப்பாதையால் தம்மைக் கூட்டிப் போனதன் பின்னர் விடுதலை செய்வதாக. என்ன செய்யமுடியும் வாதாட முடியுமா..? சரி என்பது போல் தலையசைத்தோம் ...

மாலை ஆறு மணி இருக்கும் சரமாரியாக ஷெல் அடித்தார்கள். மனம் பதை பதைத்தது .... எனது உறவுகள், ஊர்மக்கள், என்னவானார்களோ..? எனும் ஏக்கம் மனதைப் பிடுங்க அந்தத் தமிழ் ஆமியிடமே கேட்டோம். ''ஊருக்குள் அப்பாவிப் பொது மக்கள்தான் இருக்கின்றார்கள் ஷெல் அடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கோ'' மன்றாடினோம். '' அது வெறும் பிளாஸ்ரிக் ஷெல். பாதிப்பொன்றும் வராது. இன்னும் கொஞ்சநேரத்தில் அடுத்த நகருக்கு போவதற்கு ஏதாவது எதிர்ப்பு வருகின்றதா எனப் பார்ப்பதற்குத்தான் பிளாஸ்ரிக் ஷெல் அடிக்கிறார்கள்''என்றார் அவர்.


சிறிது நேரத்தின் பின்னர் எமது கைகள் மீண்டும் பிணைக்கப்பட்டு அதன் மறுமுனையை ஒவ்வொரு ஆமிக்காரரும் பிடித்திருந்தனர் . ( மாட்டுக்கு கயிறு கட்டி அதன் மறு முணையை மாட்டு வண்டிக்காரன் பிடிப்பது போல) எம்மை முன்னே போகவிட்டு பின்னே நிரையாக கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஆமிக்காரர் எம்மைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் அந்தத்தமிழ் ஆமிக்காரர் இப்போது எம்முடன் வரவில்லை, ரவி எனும் பெயருடைய ஒரு ஹிந்திக்காரர்தான் அந்தப் படை நகர்வுக்கு பொறுப்பாக இருந்தார். எமது கயிற்றினை பிடித்திருந்த ஆமிக்காரர் இருவர் தமிழராகவும். மற்றைய வர்கள் தமிழ் தெரிந்தவர்களாகவும் இருந்தனர்.

சண்டை தொடங்கினால் முதலில் பலியாவது நாங்கள்தான். அதனால் அப்படி ஏதாவதென்றால் என்னநடந்தாலும் சரி ஓடிவிடவேண்டும் எனும் முடிவை மனம் எடுத்திருந்தது. அதுமட்டும் இவர்களின் வழிகாட்டிகளாகப் போவேன்.(வழிகாட்டியா மனிதக் கேடையமா என்பதுபற்றி தெரிந்திருக்கவில்லை) உள்வீதிகள், குச்சொழுங்கைகள், சில இடங்களில் வேலிகளை வெட்டி காணிகளினூடாகவும், பலரது முற்றத்திலும் கால் பதித்து நாம் நகர்ந்து கொண்டிருந்தோம். ஒருவர் வீட்டிலும் யாரையும் காணவில்லை அடித்த ஷெல்லுக்கு எல்லோரும் எங்கோ ஓடி ஒதுங்கியிருக்க வேண்டும், ஆடு, மாடுகள் மட்டும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். சிறிது நேரத்தின் பின்னர் ''சோ'' வென்று நல்ல மழை பெய்தது உடலில், உடையில் உள்ள ரத்தக் கறையை கழுவி விடவேண்டும் என்றே வந்தது போலிருந்தது.

இரவு பதினொரு மணியளவில் நகரினை அடைந்து விட்டோம். எம்மை ஒரு கட்டிடத்தினுள் இருத்தி ஐந்து பேரை காவலுக்கு விட்டு விட்டு மிகுதி ஆமிக்காரர் தமது நிலைகளைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். நடந்து வந்த களையும், காலையில் அடிவாங்கிய நோவும், பிணங்களைப் பார்த்ததால் மனதில் ஏற்பட்ட தாக்கமும் அசதியில் ஈர உடையுடனும் என்னை அறியாமலே தூங்கிவிட்டேன்.

விழித்துப் பார்க்கும்போது விடிந்திருந்தது. மற்றையவர்களும் அப்போதுதான் ஒவ்வொருவராக கண்விழித்தார்கள். எமக்கு இன்று விடுதலை கிடைத்துவிடும்! எங்கே முன்னர் எம்முடன் நின்ற அந்த தமிழ் ஆமிக்காரர் என்று சுற்றும் முற்றும் பார்த்தோம். அவரை எங்கேயும் காண வில்லை. இங்கிருக்கும் தமிழ் ஆமிக்காரரிடம் கேட்டோம் ''எப்போது வீட்டுக்கு போகலாம்'' என்று ''தமது தலைமை அதிகாரி எப்போது உத்தரவு தருகின்றாரோ அப்போது போகலாம்'' என்றார்.

அப்பா என்னைக் காணாமல் ஊரெல்லாம் தேடினார். கடைசியாக நானும் மோகனும் நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததினை பார்த்த யாரோ சொன்ன தகவலை வைத்து நான் ஆமியில் பிடிபட்டு விட்டேன் என்பதனை ஊகித்துக் கொண்டுள்ளார். ஆனால் உயிருடன் இருக்கின்றேனோ அல்லது எனக்கு என்ன நடந்து விட்டதென்ற செய்தி ஏதும் தெரியாமல் தவித்து. அம்மாவிடம் பாலன் சித்தப்பா வீட்டினருடன் எங்கேயோ நிற்கின்றான் எனும் பொய்யைச் சொல்லி வைத்திருந்தார்.


கையை பின்னுக்கு கட்டியது பெரும் இடைஞ்சலாக இருந்தது. மூக்கில் கடிக்கும். சொறிந்துவிடும்படி ஆமியையா கேட்கமுடியுமா...? எங்கிருந்தோ இலையான் வந்து முகத்தில் மொய்க்கும் கையைக் கட்டி வைத்தால் இலையான் கூட எம்முடன் தன் வீரம் காட்டும்.

பொறுக்க முடியாமல் ஆமிக்காரரைக் கேட்டேன் ''உங்கள் மேலதிகாரியிடம் கேட்டுச் சொல்லுங்கோ எங்களை எப்ப விடுவினம்'' என அவரும் எங்களில் இரக்கம் வந்தவராக ”இருங்கள் வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு பக்கத்தில் நின்ற ஹிந்திக்காரனிடம் ஏதோ சொல்லிவிட்டு தனது மேலதிகாரி இருக்கும் இடம் நோக்கி போனார்.

சிறிது நேரத்தின் பின்னர் எமது கைகளின் கட்டுக்கள் அவிழ்த்து விடப்பட்டன எமது விடுதலைக்காக அனுமதி பெற்றுவந்த ஆமிக்காரர் எம்மை இருவர் இருவராக பாதுகாப்பு முன்னரங்கம் வரை அழைத்துச் சென்று “பிரதான வீதியைப் பாவிக்காமல் உள்பக்கமாக உங்கள், உங்கள் வீடுகளுக்கு போங்கோ. வேறு பிரிவு ஆமிக்காரரிடம் இனி பிடிபட்டால் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது... கவனமா போங்க” என்றார் மோகன் ஏற்கனவே போய் விட்டான் நானும் மற்றைய அண்ணாவும்தான். எமது வீடு பிரதான வீதியின் எதிர் எதிர்த்திசைகளில் என்பதால் நாமும் பிரிந்து தனித்தனியாக பயனித்தோம்...!

விடுதலையாகிவிட்ட மகிழ்ச்சி கொஞ்சம் இருந்தாலும் நேற்றிரவு அடித்த ஷெல்லினால் எனது ஊரில் என்ன நடந்திருக்குமோ என்ற ஏக்கம் மனதினை வாட்டியது. அரைமணித்தியாலத்தில் ஊருக்குள் வந்துவிட்டேன் இது வரைக்கும் ஒரு மனித முகத்தையும் காண முடியவில்லை. விக்கிரமாதித்தன் கதைகளில் படித்த ஏதோ ஓர் முனிவரால் சபிக்கப்பட்ட ஊர்போல காட்சிதந்தது நம்மூர். கால்கள் என் இருப்பிடம் எங்கே என்று தடுமாறியது. எங்கே போவது...? வீட்டுக்குப் போவதா..? அல்லது புகலிடமாய் போன கோவிலுக்கு போவதா...? முதலில் கோவிலுக்கு போவோம் என முடிவு பண்ணி கால்கள் கோவில் நோக்கி நடந்தன..... மனதில் நேற்றுப் புதைத்த இறந்த உடல்களின் முகங்கள் வந்து வந்து போயின. எங்கிருந்தோ பறந்த குருவி ஒன்று எவ்வளவு இடம் இருந்தும் என் தலையில் எச்சமிட்டுப் போனது. கண்களில் நீர்கசிய கால்கள் நடைபிணமாய் புகலிடம் தேடியது!!!




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 2:44 pm

ஒவ்வொரு வரியையும் நிதானமாக கண்ணீருடன் மனம் பதைக்க படித்து முடித்தேன் பாலா... அப்பாவின் அன்பும் அம்மாவின் அன்பும் சந்தையில் ஹெலி போட்டு குண்டினால் காயப்பட்டவரை அப்பா காப்பாற்ற போனதால் வீட்டுக்கு வர தாமதமாக ஒவ்வொரு வீட்டிலும் பல குடும்பங்கள் இது போல் இருந்து பின் அதுவும் ஆபத்து என்று தெரிந்து பிள்ளையார் கோவிலுக்கு போய் ஒரு மூட்டை அரிசி கொண்டு வந்தால் அதிகம் பேர் அதிகம் நாள் சாப்பிடலாம் என்ற நல்லெண்ணத்தில் நண்பனை கூட்டிட்டு போய் போகும் வழியில் ஆமிக்காரங்க கிட்ட மாட்டியப்பின் நெஞ்சு துடித்தது பாலா... படிக்கமுடியாதபடி நெஞ்சு அடைத்தது..... ஒவ்வொரு நொடியும் நீ கடந்த அந்த நிமிடங்களை இதோ படிக்கும் ஒவ்வொரு நொடியும் நானும் அதை உணர்ந்தேன்.... மரணத்தின் வாசல் வரை சென்று மீண்டு வந்ததுக்கு இறைவனுக்கு கோடி நன்றிகள் பாலா... உன் உயிரின் மதிப்பு என்னால் உணரமுடிகிறது.... இத்தனை நடந்தபின் அந்த வான்ல இருந்து குவியல் குவியலாக பிணங்களை உயிர்போகும்போது என்னென்ன நினைத்தனரோ சோகம் இறைவா இப்படி ஒரு கொடுமை நடக்கும்னு தெரிந்திருந்தால் இங்கே எங்களுக்கு பிறவியே கொடுத்திருக்க வேண்டாமேன்னு அழுதிருப்பாங்களோ... என்னால நினைக்கவே முடியலை பாலா.... அந்த நேரத்திலும் உன் நண்பன் நகைகளை கழட்டும்போது நீ மனித நேயமுள்ளவனா சொன்ன வார்த்தைகள் எல்லோருக்குமே படிப்பினை அது.... உயிர் பிழைத்து வந்தது எத்தனை பெரிய விஷயம்... அம்மாவின் எத்தனை பூஜை எத்தனை தர்மத்தின் பயனோ என்னவோ நீ மீண்டது.. ஏன்னா ஆமிக்காரங்க கைல மாட்டினால் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை சோகம் என்று படித்திருக்கேன்.... இறைவன் உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் என்றும் நீண்ட ஆயுளும் சந்தோஷமும் அம்மா அப்பாவுக்கு என்றும் உடல்நலத்தையும் கொடுக்கனும்னு வேண்டிக்கிறேன் பாலா.... இறைவனின் ஆசி என்றும் உனக்கு உண்டு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 2:55 pm

மஞ்சு அக்காவின் துக்க நிலை கவலை அழித்தது பகிர்ந்தமைக்கு நன்றி மரணம் என்ற ஒன்றை அனைத்து உயிர்களும் அனுபவிச்சாக வேண்டும் என்ற அடிப்படையில் மரணம் தழுவிய அண்ணனுக்கு ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்
மறக்கும் வரைதான் அனைத்தும் கவலையாக இருக்கும் மீட்டிப்பார்க்கும் போது அது ஜீரணிக்க முடியாத துக்கமாக மாறும் மறந்து சந்தோசவாழ்கை வாழ வேண்டுகிறேன் நன்றி அகக்ா



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Jun 22, 2010 3:13 pm

பாலா படிக்கும்போதே எனக்கு கண்ணில் நீர் கொட்டி விட்டது ...
மனம் படபட வென்று இதயத்துடிப்பை கூட்டி விட்டது ....
படிக்கும் எங்களுக்கே இப்படி என்றல் அதை அனுபவித்த உங்களுக்கு யப்பப்பா நினைக்கவே முடியவில்லை ....
உங்களை எல்லாம் நினைத்தால் எப்பேர்ப்பட்ட துன்பங்களும் வேதனைகளும் அடைந்திருப்பீர்கள் என்று உங்கள் வரிகள் கூறுகின்றன பாலா....
கடவுள் உங்கள் அனைவரின் நலம் காக்க என் பிரார்த்தனைகள் பாலா ...
இதற்க்கு மேல் சொல்ல வார்த்தைகள் வரவில்லை .....

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Tue Jun 22, 2010 4:08 pm

பாலன் எவ்வளவு ஒரு சோகமான நிகழ்வு.. படிக்கும் பொழுதே மனம் படபடக்கிறது... அதை அனுபவித்த உங்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது... எத்தனை எத்தனை மக்கள் இப்படி கஷ்டப் பட்டிருப்பாங்க... நினைக்கவே மிகவும் வருத்தமா இருக்கு....



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 22, 2010 9:56 pm

என்னைப் பழைய நினைவுக்கு இட்டுச்சென்றே ஆக வேண்டும் என்ற கொள்கையுடன் கேள்வி கேட்டுள்ள சபீருக்கு மிக்க நன்றி.

வழிப்போக்கன் (பாலன்) என்னை மன்னிப்பாராக. அவர் அன்போடு என்னைக் கேள்வி கேட்க அனுமதி கேட்ட போது வேண்டாமே வழிப்போக்கன் என்று மறுத்தமைக்கு.

இப்போதும் பதிவு வெளியாகிவிட்ட நிலையில் (வினாக்கள்) இனி செய்ய வேறு ஒன்றுமில்லை என்ற நிலையில் என் மனதை, என் மனதில் பதிந்த அந்த அழகிய புத்தம்புது மலர் போன்ற மழலையின் மறக்கமுடியாத போன்ற மறைவை என் உறவுகளிடம் பகிர்வதில், அந்தப் பிஞ்சுக்காக என் ஈகரை உறவுகளின் அஞ்சலியைப் பெறுவதில், அந்த சின்னஞ்சிறு ஏக்க மலருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாக இருக்கட்டும் என்று எண்ணியே....

நான் பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். ஆண்டு 1978. பிப்ரவரி மாதம். ஒரு வெள்ளிக்கிழமை. தேர்வுக்ளுக்கு ஒரு வாரம் முன்பு பள்ளி இறுதி நாள் எங்க்ளுக்கு. அன்று அரை நாள் பள்ளி. மதியம் பார்ட்டி(ஃபேர்வெல்) எங்களுக்கு. பார்ட்டி நன்றாக முடிந்தது. இறுதியில் ஆசிரியர்களுக்கெல்லாம் பீடா கொடுத்து முடித்தோம். மாணவ்ர்க்ள் பீடா சாப்பிடக் கூடாது. ஆனால் மீதம் இருந்ததை நானும் என் தோழிகள் மூவர் போட்டுக்கொண்டோம். (ஆசிரியர்கள் முன்புதான்) அன்று நீண்ட நேரம் அளவளாவி செல்லத் திட்டமிட்டிருந்தோம். அதற்குள் வந்தது அழைப்பு எனக்கு.
என் பெயர் சொல்லி அழைத்து அட்டெண்டர் வந்தார். என் வீட்டில் இருந்து தொலை பேசி அழைப்பு வந்தது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று.

என் தந்தை கிராம அலுவலர். அது ஒரு குக்கிராமம். ஐந்தாம் வகுப்புக்கு மேல் பள்ளி வசதி இல்லை. நான் என் அத்தை வீட்டில் இருந்து படித்தேன். என் அத்தைக்கு 5 ஆண்மக்கள் (அதில் 4 வது பிள்ளையே என் அன்பான கணவர்) 2 பெண்மக்கள். இரண்டு பெண்களுக்கும் மூதத பையனுக்கும் திருமணம் ஆகி இருந்தது. மூத்த பையனுக்கு பையனுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் இரண்டு பையன் என் மூன்று முத்துக்கள் அவருக்கு. மூன்றாவது முத்துக்கு அப்போது ஒரு வயது மூன்று மாதங்கள். அவன் பெயர் குருபிரசாத். இறவன் அளித்த அழகிய பிரசாதம் அவன். இந்தக் குழந்தைகளிம் மாலை நேரப் பாதுகாவலர் நான் தான். மாலை மட்டும் அல்ல நான் பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம். நான் இல்லாமல் ஒரு நாளும் அவை உண்ணா. உறங்கா.

செய்தி கேட்டு ஒன்றும் இருக்காது. அவர்கள் மருத்துவ மனை செல்ல, வீட்டைப் பார்த்துக்கொள்ள என்னை அழைத்து இருப்பார்கள் என்று நினைத்து சற்றுத் தாமதமாக சென்றேன். வீட்டில் ஒரே அமைதியே நிலவியது. குழந்தையின் கதறல் மட்டும்.. வீட்டின் முன்பு கார் நின்றது. உள்ளே சென்று பார்த்தால் அந்தக் குழ்ந்தையின் வலக்கையில் முழங்கை வரை வெந்து இருந்தது செக்கச் சேவேர் என.(குழந்தை ஏற்கன்வே நல்ல ரோஸ் நிறம்) . என் அண்ணியின் முகத்தில் பெரிய தவறு செய்து விட்ட குற்ற உணர்வு.

வீட்டில் அக்குழந்தையும் அண்ணியும் மட்டுமே இருக்க, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டக் கருதி சோறு பிசையச் சென்ற எஙகள் அண்ணி முதுகுப்புறமாக தோளைப் பிடித்து நின்றிருந்த அக்குழந்தையை கீழே விட்டு நெய் எடுக்க எழுந்திருக்க, குழந்தை அருகில் இருந்த அப்போது பத்து நிமிடத்திற்கு முன்பு சமைத்து இறக்கி வைக்கப்பட்ட புளிக்காய்ச்சல் நிறைந்த பாத்திரத்தை இழுக்க, அது கையில் ஊற்றி விட்டது. உடனே எண்ணி அரை மணி நேரம் நான், என் அண்ணி, எங்க மூத்தார், என் அத்தை நால்வரும் குழந்தையுடன் அருகில் கொடுமுடி (எங்கள் ஊரில் நல்ல மருத்துவர் இல்லை) சென்று (மருத்துவர் பெயர் இன்னும் நினைவில் உள்ளது. டாக்டர். இராமலிஙகம், கொலை கார பாவி, என் பிசிக்ஸ் டீச்சரின் தந்தை வேறு) மருத்துவம் பார்த்தால் உடனடியாக சிகிச்சை அளித்தார். உடனே ஒரு இஞ்சக்‌ஷன் போட்டார். குழந்தை நன்கு உறங்கும் என்று ஏதேதோ மருந்துகள் எழுதிக்கொடுத்தார். எல்லாம் வாங்கி வந்தோம்..எண்ணி ஒரு மணி நேரத்திற்குள் வீடு வந்து சேர்ந்தோம். வரும்போதே லேசாக அழுகை குறைந்தது இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் குழந்தை உறங்கத் தொடங்கியது. அரை மணி நேரம் கூட இல்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மருந்து கொடுக்க குழந்தையைப் பார்த்தால் அது கண்களை மூடி இருந்தது. இறுதி உறக்கமாக உறங்கி விட்டிருந்த்து.

பின்னர் டாக்டர என்ன ஊசி மருந்து போட்டார் என்று பார்க்கும் போது அவர் பென்சிலின் மருந்து போட்டு இருந்தது தெரியவந்தது. சோதிக்காமல் ஒருவருக்கு பென்சிலின் கொடுப்பதே தவறு சிறு குழந்தைக்கு பென்சிலின் கொடுக்கலாமா என்று கூடத் தெரியாத மடையன் என்றே எனக்கு அவனைத் திட்டத் தோன்றுகிறது.
அதுவரை ஆளாய் பறந்த குழந்தை பார்ப்பவர்களிடம் எல்லாம் கையை நீட்டி நீட்டி
அது தாவி தாவி எல்லோரிடமும் சென்றதும், கண்ணீர் வழிந்த அவன் கண்களில்
இவரிடம் போனால் கை எரிச்சல் நிற்காதா? இவரிடம் போனால் எரிச்சல் நிற்காதா?
என்று தெரிந்த ஏக்கம் எல்லாம் அடங்கி விட்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அந்தக் குழந்தை பட்ட அவஸ்தை, அது கதறிய கதறல் என் கண்களை விட்டு இன்னும் நீங்காது உள்ளது.
அன்று என் மூத்தார் குழந்தையின் தந்தை கதறி அழுதது இன்னும் என் மனதில் ஆழமாக். அழுகையில் எல்லோரும் கூறிய் சொற்கள் தினம் தினம் மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷன் வந்து அவற்றி விளையாட விட்டு வருவாயே... என்று. இனி யாரை அழைத்து செல்வாய பானு....என்று.. (ஊஞ்சலூர், மிகவும் அழகான சின்ன ஊர். எங்கள் அத்தையின் வீட்டைச்சுற்றி நான்கு புறமும் கோவில், என்றும் நீர் வற்றாத ஆழமான காவிரி ஆறு, ஒரு சிறிய புகைவண்டி நிலையம், அதன் எதிரில் பசுமையான கரும்புத்தோட்டம்)
இளமையில் நான் கண்களால் கண்ட.. மனம் விட்டு அகலாது இன்னும் எண்ணும் போதெல்லாம் கண்களில் அருவியை ஏற்படுத்தும் அந்தக் கோரக் காட்சி... இன்றும் என் கண்களில் உப்பு நீர்... அருவியாய்
அந்தக் குழந்தையின் அண்ணன் சுரேஷும், அக்கா புவனாவும் இன்னும் அதே பாசத்துடன்...சித்தி, சித்தி என்று...


2. இரண்டு மற்க்க முடியாத சம்பவம் என்று கூறியுள்ளமையால் ஒன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லையே.. இதுவும் அதே போல என் மனதில் இன்றும் அழுத்திக் கொண்டிருக்கிற சம்பவம்...
1995 ல் நானும் என் கணவரும் நாகர் கோவிலில் இருந்தோம். (அங்கு ஒரு 6 ஆண்டுகள் இருக்க வேண்டிய சூழல்). என் பக்கத்து வீட்டு குழந்தைகள் எல்லாம் அப்போது எங்கள் வீட்டில்தான் இருப்பார்கள். ஒரே மழலைப் பட்டாளம் இரவும் பகலும் எங்கள் வீட்டில். அந்த நாட்கள் இன்று நினைத்தாலும் இனிமையாக் இனிக்கும் மனதில். ஒரு குடும்பத்தில் இருந்து சுரேஷ் பனிரெண்டாம் வகுப்பு (இப்போது எம்.சி.ஏ. முடித்து எச்.சி.எல். சென்னையில் பணி), ராஜன் ஏழாம் வகுப்பு, இப்போது எம்.பி.ஏ. சென்னையில் பணி, அதே குறும்பு மாறாமல்) லக்‌ஷ்மி (பத்தாம் வகுப்பு, இப்போது அமெரிக்காவில் துணவன் ஒரு மகனுடன்). ராஜன் தெருவில் திரிந்த குட்டி நாய்கள் 4 கொண்டு வந்து வீட்டில் வைக்க அவன் தாய் ஒத்துக்கொள்ளாமல் விட்டு விட்டு வந்தால் தான் உனக்கு வீட்டில் இடம் என்று கண்டிப்பாகக் கூறி விட்டார்.
அவன் என்னிடம் ஆண்டி ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சினான். நானே எல்லாம் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் இடம் மட்டும் கொடுங்கள் என்று.. நானோ டேய் 4 நாய்கள் எதற்குடா என்றால், அவன் இந்த நான்கில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை வைத்துக்கொண்டு மீதி மூன்றை விட்டு விடலாம் என்றான். எங்க வீடு ரொம்பப் பெரியது. முன்புறம், பின்புறம் இரண்டு பக்கமும் வெற்றிடம் இருக்கும். நானும் சரி என்று சொல்லி விட்டேன். நாய்களைக் கொண்டு வந்தான். அதில் ஒன்று மிக மிக சுறு சுறுப்பு என்று எப்போதும் ராஜனும் நாயும் என்று கதை எழுதலாம். அப்படி அதன் செயல்களை கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டு இருப்பான். எனக்கும் அது பிடித்துப் போய் விட்டது.

அப்பரம் என்ன? பெயர் சூட்டு விழா.. சிபி என்று நாமகரணம்.. அது சிபிக்கு மாறாக இருந்தது. சிபி தன் தசையைக் கொடுத்தார். இது விட்டிருந்தால் யார் தசையையாவது எடுத்திருக்கும்..நாஙகள் வெளியில் விட மாட்டோம்..

சில நாட்கள் சென்றன். பார்த்த நானும் அதனுடன் பாசமாகப் பழக ஆரம்பித்தேன். என் கணவரும் அப்படியே.. பிஸ்கட் இல்லாமல் வர மாட்டார் வீட்டுக்கு... அதுவும் வளர்ந்தது அன்றாடம் பிஸ்கட், அரைக்கிலோ வெண்ணெய், செல்லமாக கொஞ்சல்ஸ் என்று.. ஆமாம் வெண்ணெய் எதற்கு என்று நினைக்காதீரகள்.
ஒரு நாள் அரைக்கிலோ வெண்ணெய் வாங்கி கிச்சனில் மறந்து த்ரையில் வைத்து விட்டேன். அதை வாங்கிய நினைவும் இல்லை. மறந்து விட்டேன். இரவு பின்புறம் பார்த்தால் பெரிய பெரிய தோசை அள்வில் வட்ட வட்டமாக நுரை நுரையாய்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தொட்டுப் பார்த்தால் ஒரே வழவழப்பு... அப்போதும் ஒன்றும் புரியவில்லை.. சரி என்னவோ தெரியவில்லையே என்று நினைத்து காலையில் பார்க்கலாம் என்று விட்டு விட்டேன். இந்தச் செல்லக்குட்டி என் மடியில் படுத்திருந்தது மிகவும் நல்ல பிள்ளை மாதிரி.. முகத்தில் ம்ட்டும் ஏதோ திருட்டு வேலை செய்த திருட்டுப் பார்வை இருந்தது. அடுத்த வெண்ணெய் வாந்தி என் மடியில்.. அப்புரம் ஓடிப் போய் வெண்ணெய் பாக்கெட்டைப் பார்த்தால் எல்லாம் காலியாகி இருந்தது.. என்ன செய்வது.. உடனே அழை ராஜனை.. அவன் வந்தான்.. டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போய்... அதற்கு ராஜனின் தந்தை அவன் தான் சின்ன பிள்ளை.. நீங்களும் அப்படியே இருக்கிறீர்களே என்று ஒரு கமெண்ட்....ஒரு நாள் காலையில் சற்று கதவைத் திறக்க., எப்படா என்று காத்திருந்த இந்தக் கள்ளன் (அவன் பெயர் சிபி) ஓடிப் போய் தூங்கிக் கொண்டிருந்த கீழ்வீட்டு செல்லமணி சாரின் ப்டுக்கையில் குதித்து..அவர் அவரும் அவர் மகளும் அலறியதும்... நான் போய் மன்னிப்பு கேட்க அவர் அதனால் என்ன? பரவாயில்லை என்று கூற,(அவரும் அடிக்கடி சிபியைக் கொஞ்சுவார் அதனால்) இப்படி நாளொரு கலாட்டா.. இவையெல்லாம் இன்றும் மறக்க முடியாது .
ஒரு வருடம் போனது. நான் என் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று சென்னைக்கு வரவேண்டியிருந்ததால் என் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் வரும்வரைப் பார்த்துக்கொள்ளச்சொல்லி அடைக்கலமாக சிபியையும் செலவுக்கு ரூபாயையும் கொடுத்து விட்டு வந்தேன்.,
2 மாதம் சென்னை வாச்ம..அவ்வப்போது ராஜன் தொலைபேசியில்.... சிபி பய்ங்கரமாக வளர்ந்துள்ளான் என்று செய்தி.
.மீண்டும் வந்த போது சிபிக்கு உடல்நிலை சரியில்லை என்றார் அப்பெண்மணி. என்ன என்று கேட்டதற்கு அது ரொம்ப சுறு சுறுப்பு.. போகிற வருகிறவர்களையெல்லாம் பார்த்து ரொம்ப குரைக்கிறது என்று யாரோ வாயைக் கட்டி விட்டர்ர்கள், அதனால் சாப்பிடவே மாட்டேன் என்கிறது என்றார். சரி டாகடரிடம் அழைத்துப்போங்கள் என்று பணம் கொடுத்து அனுப்பினேன்..ஆனால் அதற்கு முன் இங்கு அழைத்து வாருங்கள் என்றேன். சிபி வந்தான்.. ஏக்கம் நிறைந்த பார்வை மட்டும் அசைந்தது.. உடலில் அசைவுகள் மிகவும் குறைந்திருந்தது. சிபி என்று நான அழைத்தால் ம்ட்டும் வாலை ஆட்டினான். அந்த பெண்மணிக்கு தெரிந்து விட்டது போல. அம்மா அதுக்கு கொஞ்சம் பால் ஊத்துங்க என்றார். இறுக்கிய பற்களை அசைக்க முடியவில்லை..கஷ்டப்பட்டு வாயைத்திறந்து நானும் பாலை வாயில் ஊற்றினேன். ஒரு மடக்கு குடித்த்து.. அதிலும் பாதி வெளியே வந்து விட்டது.. டாகடரிடம் அழைத்துப் போகக் கிளம்பினோம்...அந்த அம்மா அதெல்லாம் வேண்டாம் அம்மா ...எலலாம் முடிந்து விட்டது என்று கூறி விட்டார்..

அன்று நான் அழ ராஜன் குடும்பம், இன்னும் அந்தத் தெருவில் உள்ளோர் எல்லாம் வந்து வந்து ஆறுதல் சொன்னது கூட பரவாயில்லை. என் கணவர் அழுதது இன்னும் என் கண்களில்..

அந்தக் குறுப்புக்கார மகனின் நினைவுக்கும் என் அஞ்சலியை செலுத்துகிறேன்.. எத்தனையோ இழப்புகளை , இறப்புகளை நான் வாழ்வில் சந்தித்து இருந்தாலும் இந்த இரண்டு ஏக்கப்பார்வைகள் அந்த இறுதிப்பார்வைகள்....இன்னும் என் கண்களில்....
[You must be registered and logged in to see this image.]
நீண்ட பதிவை இட்டு கண்களுக்கு அயர்வைக் கொடுத்தமைக்கு என் உறவுகள் என்னை மன்னிப்பீர்களா? மன்னிப்பீர்கள் என்ற ஆழ்மான நம்பிக்கையில்....
அன்புடன்
ஆதிரா...



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக