புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
34 Posts - 76%
heezulia
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
10 Posts - 22%
mohamed nizamudeen
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
370 Posts - 78%
heezulia
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_lcapஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_voting_barஅதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:27 pm

உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது . அதில் உயிரில்லா
வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும்
உண்டு . இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே
மிகவும் வியப்பயும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடிய திமிங்கிலங்கள்
ப்பற்றிய சில வினோத தகவல்களை நாமும் தெரிந்துக்கொள்வோம் .
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Whale-shark-with-fish1
திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு
வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது.
திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும்.திமிங்கிலதில் 75-க்கு
மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஓவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப்
பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும்
24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு
நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா
கடல்களிலும் மற்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான
யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும்
காணப்படுகின்றன. 10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை
உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில்
நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஓன்று யானை
மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது
உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு.
திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம்
இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.




நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:28 pm

அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Fff
திமிங்கிலம் என்றுச் சொன்னவுடன் நாம் எல்லோரும் உணரக்கூடிய ஒன்று மிகப் பெரிய மீனாகத்தான் இருக்கும் என்பதாகும் .
இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைத் சாராத
பாலூட்டி ஆகும். பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின்
அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இருப் பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இருப் புறங்களிலும்
வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது
baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில்
Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற
வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற
மூன்று வகைகளும் இருக்கின்றன .பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக்
கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற
உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது.
இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை
கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை
ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல
மீன்கள் விளங்குகின்றன





நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:29 pm

அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Wffhale

லகிலேயேஅதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு
உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில்
எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும்
மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக்
காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000
கிலோ மீட்டருக்கும் மேலாகும் . இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு
செய்திருக்கிறார்கள். "சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில்
பாடும்,'' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் .இவை தங்கள் தலையின்
மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர்
உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு
மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன்
ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன் படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப்
படுகின்றது. ஏனென்றுச் சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்கு பதில்
அளிக்கும் விதமாக தொலை தூர கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.




நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:30 pm

அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Right_whale
நா
ம் எல்லோருக்கும் இதுநாள் வரை மீன்கள் என்றால் நீரில் மட்டும்தான் வாழும்
என்று தெரியும். அதிலும் இந்த திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய மீன்கள்
என்றாலே கடலைத் தவிர வேறு எங்கும் வாழாது என்பது மட்டுமே நாம் அனைவரின்
ஒட்டுமொத்த கருத்தாகும் . ஆனால் இந்த மீன்கள் ஒரு காலத்தில் தரைகளிலும்
வாழ்ந்திருக்கின்றன . என்றால் நம்புவீர்களா ?




நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:34 pm

ஆனால் இந்தமீன்கள் ஒரு காலத்தில் தரைகளிலும் வாழ்ந்திருக்கின்றன . என்றால்
நம்புவீர்களா ?
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Whale%2520Shark%2520in%2520Aquarium
லகத்திலையே
எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றான்றன்
திமிங்கலங்கள் . இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவில்கள் மூலம் ஆக்ஸிஜனை
கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த
பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனை போன்றே 37 டிகிரி
செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுறையீரல் அமைப்பை
பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின்
மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும் .திமிங்கிலம் மிக
வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ் நாள்
முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான்.
மேலும் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல்
அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே
உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் விதிவிலக்கான அம்சமாகும்.
மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக்
குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதாலும் மற்ற
பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு
இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும்
இயலுகின்றது.




நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:35 pm

அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) 2a2+%281%29
துவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து
நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும்
அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம் மிகவும் குறைவான சுவாசம் தாங்கும்
திறமை உடையவர்கள் . ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை
சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரிணத்தை பார்த்து பார்த்து இருக்கிறீர்களா
? திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம் ! .
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Niki__whaleshark+%289%29
இவை ஒரு முறை சுவாசித்தன் பின்னர் 80நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில்
இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கறிய கடல்
நீரின் அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள்
இறையைத் தேடி கடலின் ஆழத்திற்கு செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளிளாலும்
அடைய முடியாத ஒரு இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000
மீட்டர்(இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது.
ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையை பிடிக்க பயன்
படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை
துல்லியமாக அறிந்துக் கொள்ளும் முறையாகும். இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு
1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகினன்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர்
நீளமுள்ள Gaint squid பிடித்து உண்ணும் போது சில சமயம் இவைகளுக்கிடையே
சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி
விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவைத்
தவறுவதில்லை. இவை தங்களின் உணவை பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின்
மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து
ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கின்றன.




நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:35 pm

அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Tiburon%2520ballena%25201b
பா
லூட்டிகளின் சாம்ராஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்க் கொள்ளக் கூடிய உயிரினம்
என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50
கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள்
தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை
ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை
மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளை
பெற்றெடுக்க அலாஸ்காவிற்க்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை
கடந்து வரக் கூடியத் தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின்
பயணம் சிறிய அல்லது பெரியக் கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள்
மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.




நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:36 pm

அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Spermwhale1
மொ
த்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்க்கும் அதிகமான இறுதி ஆய்வுக்ளின்
முடிவில் சயின்ஸ்' இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக
தனது முடிவினைக் கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய
மூளை.திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும்
தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) KillerWhalePod1
1970ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்கள் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல்
முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே
கருதுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் மூளையின் முன் புறமாக அமைந்த
cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற
புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட
அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை
நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமான சிந்தித்து
சமத்யோகமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.




நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:37 pm

அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Whale-parts+%2814%29
"பாகிஸீட்டஸ் ஆய்வுத்தாள் கூறுவதாவது: "படிப்படியான பரிணாம மாற்றம் அடைந்து
நிலத்திலிருந்து நீருக்கு வந்த திமிங்கில பரிணாம வளர்ச்சியில்
பாகிஸீட்டஸ¤ம் தொடக்க ஈயோஸீன் காலத்தினைச் சார்ந்த இதர திமிங்கிலங்களும்
நீர்-நிலம் இரண்டும் சார்ந்த வாழ்க்கையினை வாழ்ந்த நிலையை
பிரதிநிதித்துவப்படுத்துவதாக சான்றுகள் கூறுகின்றன." அடுத்த முக்கியமான
தொல்லெச்சம் ஆம்புலோஸீட்டஸ் நடன்ஸ் (Ambulocetus natans) என்பதாகும்.
நடமாடும் நீந்தும் திமிங்கிலம் என்பது இந்த தொல்லெச்சத்திற்கு
அளிக்கப்பட்டுள்ள பெயரின் பொருளாகும். 'பரிணாமவாதிகளின் பாதிப்பான
பார்வைக்கு அப்பால் இது நீந்தியது என்பதற்கு எவ்வித ஆதாரமும்
இல்லை'(Darwinism Refuted' பக்.125) என்பது யாகியாவின் வாதம். ஆனால்
பரிணாம அறிவியலாளர்கள் முன்வைக்கும் வாதங்களை அவர் ஏறெடுத்தும்
பார்க்காமல் அம்புலோஸீட்டஸ் நிலத்தில் வாழும் பிராணி என்பதற்கான ஆதாரங்களை
அடுக்குகிறார். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் இதனை மறுக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அம்புலோஸீட்டஸ் நிலத்திலும் நீரிலுமாக வாழ்ந்த
பிராணி என்பது பரிணாம அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்ளும் ஒரு வினோத சான்றிதழ்
ஆகும் .




நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 1:38 pm

அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) 116577_18955+%282%29
லகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை
இவற்றிலிருந்துக் கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின்
பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப் படுகின்றது. இவற்றின்
எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்
படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய்
கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால்
திமிங்கில எண்ணெய் பயன் படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற
காலங்களில் வேட்டையாடப் பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை
வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த இனங்களை அழிவிலிருந்து
காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட I W C (INTERNATIONAL WHALING
COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை
விதித்துள்ளது.சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக
திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது.
அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே .ஏன் இவ்வாறு
திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து
வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள் .




நேசமுடன் ஹாசிம்
அதிசயத்தின் உச்சம் - திமிங்கிலம் (தகவல்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக