ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசியப்படுத்துவது எப்படி?

+6
dxb88
ராஜா
parakaalan
Manik
paarthaa077
சிவா
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty வசியப்படுத்துவது எப்படி?

Post by சிவா Sat Jul 04, 2009 9:32 am

ஒரு குடும்பத்தில் பிரச்சினை ஏன்றால் இன்றும்கூட கிராமத்திலும், ஏன் நகரத் திலும்கூட பல பெண்கள் சாமியாடி களிடம் குறிகேட்கச் செல்வதும், வசிய மருந்துகளைப் பயன்படுத்துவதும், ஜோதி டர்களைத் தேடி ஓடுவதும், முழந்தா ளிட்டு மணிக்கணக்கில் பிரார்த்தனை செய்வதும் பல வீடுகளில் சர்வ சாதாரண மாக நடக்கிறது.

அதேபோல வீட்டில் மனைவியோடு பிரச்சினை ஏற்பட்டால் அல்லது நெருக்கம் குறைந்து போனால் மது மற்றும் பிற மங்கையரை நாடுதல் போன்றவற்றில் ஆண்கள் ஈடுபடுவதையும் காணலாம். பிரச்சினை இதையும் தாண்டினால்தான் விவாகரத்து போன்றவை நடக்கின்றன.
நீங்கள் கணவனாக, அல்லது மனைவியாக... யாராக இருந்தாலும் உங்கள் இருவரில் யார் பிரச்சினைக்கு காரணமாக இருந்தாலும் அதனால் நீங்கள் இருவருமே பாதிக்கப்படுவீர்கள்.

அவ்வாறே, பிரச்சினையைத் தீர்க்க இருவரில் யார் ஒருவர் முன் வந்தாலும்... விட்டுக்கொடுத்தாலும் அதனால் வரும் இன்பம் இருவருக்குமே கிடைக்கும்.

இப்படியொரு இன்பம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ரொம்ப சிம்பிள்...

நீங்கள் உங்களவரை வசியப் படுத்தவேண்டும்.

வசியப் படுத்துதல் என்றால் உடனே ஏதோ மந்திர மையை தலையில் தடவு வது அல்லது ஏதோ மருந்தை இட்லியில் வைத்துக் கொடுப்பது என நினைத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவரோ, மனோ தத்துவ நிபுணரோ செய்யும் மெஸ்மெரி சத்தையும், ஹிப்னாடிசத்தையும் கற்பனை செய்து பார்க்கிறார்கள்.

மாறாக, பேச்சால், செயலால், அன்பால் கவர்வதுதான் வசியப்படுத்துவது.
நீங்கள் அவரை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளச்செய்ய வேண்டும்.
மற்றவர்களை விட உங்களவர்தான் விசேஷமானவர் என நீங்கள் நினைத் திருப்பதாக அவருக்கு உணர்த்த வேண்டும், நீங்கள் எதைச் செய்தாலும் அதில் அவரது பங்களிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்கள் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

அதாவது அவரை சந்தித்த போது நீங்கள் காட்டிய ரொமான்ஸ் உணர்வை மறுபடி புதுப்பிக்க வேண்டும். அப்போது பிரச்சினைகள் மறைந்து போகும்.

ரொமான்சை உருவாக்குதல்

கணவன் மனைவியிடையே காதல் உணர்வுகளை உண்டாக்குவதற்கு எது தடையாக இருக்கிறதோ அதை முதலில் தூக்கியெறியுங்கள். திருமணமான புதிதில் அவர் கோபித்துக் கொண்டிருந்தால் நீங்கள் வலியச் சென்று கோபத்தைத் தணித்திருப்பீர்களே.. அவர் உங்களை சத்தம்போட்டு திட்டி யிருந்தால் பதிலுக்கு எதிர்த்துப் பேசாமல் தணிந்து போயிருப்பீர்களே.. இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்.

இது எப்படி உடனே சாத்தியமாகும்?

இதற்கெல்லாம் ஏதாவது ஓரிடத்தைத் தயார் செய்ய வேண்டாமா? நேரத்தை ஒதுக்க வேண்டாமா? நிறைய பணத்தை செலவழிக்க வேண்டாமா? எதுவுமே வேண்டாம். எந்த இடத்திலும், எந்த சூழலிலும், எந்த நேரத்திலும் இதை நீங்கள் சாதிக்கலாம்.

எப்படியெனில், காதல் உணர்வுகள் எல்லாருக்குமே இயல்பாக உண்டு, அதிலும் யாரிடம் சாதுர்யம் அதிகமிருக்கிறதோ அவர்களிடம் எப்படிப்பட்டவர்களும் விழுந்து விடுகிறார்கள்.
இந்த சாதுர்யமான காதல் உணர்வுகள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. உங்க ளிடமும் இருந்தது. அதை நீங்கள் உங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் புதைத்து வைத்துவிட்டீர்கள். அதை தோண்டி எடுக்க வேண்டும். அதெல்லாம் மறந்துபோய் பல வருடங்கள் ஆகிவிட்டனவே என்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். அதற்கான வழி முறைகளை சுருக்கமாகச் சொல்கிறேன்.

அக்கறை செலுத்துங்கள்

சின்னச்சின்ன விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறைதான் உங்களவரின் சிந்தையை எப்போதும் நிறைத்துக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கூட்டுக்குடும்பத்தில் இருப்பவராக இருந்தால் தனியாக மனம் விட்டுப் பேசவோ, சின்னச் சின்ன சேட்டைகள் செய்யவோ வாய்ப்புகளோ, பணிச் சுமைகளால் நேரமும் கிடைக்காது. இந்த நேரத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல் லாம் அவர் எதிர்பார்க்காத நிலையில் சின்னச்சின்ன முத்தங்கள், ஸ்பரிசங்கள் என அவரை சீண்டிக்கொண்டே இருக்க லாம். இல்லாவிட்டால், இதுவே அவரது மனதில் என்னை யாரும் கவனிப்பதே கிடையாது என்ற நெருடலையும், தனிமை உணர்வையும் உண்டாக்கிவிடும். இதைத் தவிர்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அவருக்கு உதவி செய்யுங்கள்.

மனைவி குடும்பப்பொறுப்புகள் போன்ற சுமைகளால் நெருக்கப்பட்டு இருக்கும் நிலையில், மாமியாராக இருந்து மருமகள் பிரச்சினையில் மாட்டிக்கொள் ளும் சூழலில் கண்ணீர் வடிக்க நேரிடும். இந்த நிலையில் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. என அப்படியே உருகிக் காட்டவேண்டும். எதுக்கு இங்கேயே கிடந்து அல்லல் படுகிறாய்.. வா வெளியில் போகலாம் என வீட்டில் சொல்லிவிட்டு அவரை வெளியில் அழைத்துச் செல்லலாம். அவருக்குப் பிடித்தமானதை வாங்கித் தரலாம்.

அவர் வெளியில் செல்லும்போது வழியனுப்பிவைப்பது, இடையில் போனில் கூப்பிட்டுப் பேசுவது, சாப்பிட்டாயிற்றா? அதிகமாக வேலையை இழுத்துப் போட்டுக்கொள்ளாதே என்பது மாதிரி கரிசணம் காட்டுவது இப்படி.. எப்போதும் அவருடைய நினைவிலேயே நீங்கள் இருப்பதாகக் காட்டுங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by சிவா Sat Jul 04, 2009 9:32 am

கவனம் செலுத்துங்கள்

மனைவி ஏதோ நினைவில் இருக்கும் போது அவரைக் கூப்பிட்டு, உன் இடுப்பு அழகு,
உன் மூக்குதான் ரொம்ப அழகு.. என உங்களவரின் உடல் அழகைப் பற்றியோ அல்லது
அவரது உடையைப் பற்றியோ நீங்கள் மேம்போக்காக சொல்லி வையுங்களேன்.. தனது
மூக்கைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவு தான் அவருக்கு வரும். அந்த
உடையைப் பார்க்கும்போதெல்லாம் இது அவருக்கு நீங்கள் சொன்னதைத்தான் அவர்
நினைத்துப் பார்ப்பார்.
அவரிடம் எதை கவனிக்கிறீர்களோ, எது உங்கள் சிந்தனையைக் கவர்கிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துங்கள். இது நல்ல பலன் கொடுக்கும்.

மனம் விட்டுப் பேசுங்கள்

இன்ப துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள மனம் விட்டுப் பேசுங்கள், அது மட்டு
மல்ல, அவருக்குப் பிடித்தமானதையே பேசுங்கள், உங்களவர் ஒரு கருத்தைச்
சொன்னால் உடனே அதற்கு எதிர்த்துப் பேசுவதையோ, மறுத்துப் பேசுவதையோ
செய்யாதீர்கள். இப்படியெல்லாம் நடந்து கொள்ளும்போது உங்களின் மீதுள்ள
அன்பு அதிகரிக்கும்.

பிடித்ததை செய்யுங்கள்


உங்களவருக்குப் பிடித்தமானதை அவர் எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்து
அசத்திவிட்டால் அவர் மயங்கி விடுவார். தினமும் மனைவி எழுந்துதான் காபி
போட்டுக் கொடுக்கவேண்டும் என்ற எழுதாத நியதியை வைத்துக் கொண்டிருக்கிறோம்.
இதை மாற்றி நீங்கள் அவளுக்கு காபி போட்டுக் கொடுக்கலாம். சமையல் வேலைகளில்
உதவி செய்யலாம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் விஷயங்களில் மனைவியோடு
ஒத்துழைக்கலாம்.

அவருக்குப் பிடிக்காது என்பதை நீங்கள் ஒருமுறை தெரிந்துகொண்டால் மறுமுறை அதை தவிர்த்துவிடலாம்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் மனைவியுடன் ஒரு நெருக்கத்தை
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறே, கணவனுக்கு எது பிடிக்கும் என்பதைப்
பார்த்துப் பார்த்து செய்யும்போது கணவன் அதில் திருப்தி யடைந்துபோவதோடு
உங்களையும் திருப்திபடுத்த முயல்வான்.

குற்றங்குறை இல்லாமல் முழுமையாக இருப்பவர்கள் யாருமில்லை என்பதை உணர்ந்து,
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மீண்டும் நேசிக்க ஆரம்பிக்கும் போது
பிரச்சினைகள் மறைந்துபோகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by Guest Sat Jul 04, 2009 9:37 am

சிவாசார் உண்மையிலேயே நாடி பிடித்து பார்ப்பதில் வல்லவர்தான்.

சராசரி மனிதனுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை நன்கு அறிந்து

வைத்தி௫க்கிறார் மகிழ்ச்சி அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by Guest Sat Jul 04, 2009 9:39 am

.................அதேபோல வீட்டில் மனைவியோடு பிரச்சினை ஏற்பட்டால் அல்லது நெருக்கம் குறைந்து போனால் மது மற்றும் பிற மங்கையரை நாடுதல் போன்றவற்றில் ஆண்கள் ஈடுபடுவதையும் காணலாம்..........................

மகிழ்ச்சி


மது=drinks

மங்கை=others :P

நல்ல பாய்ண்ட் ஆழ்ந்த க௫த்துக்கள் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by Guest Sat Jul 04, 2009 9:46 am

இந்த டாபிக்க படிக்கும்போது ஜில்லுனு இ௫க்கு பாடகன்

ஆனா இது குடும்பஸ்தர்களுக்கு மட்டும் போல சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by paarthaa077 Sat Jul 04, 2009 10:21 am

மு௫கனடிமை wrote:இந்த டாபிக்க படிக்கும்போது ஜில்லுனு இ௫க்கு பாடகன்

ஆனா இது குடும்பஸ்தர்களுக்கு மட்டும் போல சோகம்

இல்லை சார், நம்மை போன்ற bachelorsம் தெரிந்து வைத்துகொண்டால் பின்னாடி உபயோகப்படும்....
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by Manik Sat Jul 04, 2009 1:02 pm

நல்லா இருக்கே.................
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by Guest Sat Jul 04, 2009 2:41 pm

manekan2000 wrote:நல்லா இருக்கே.................

சூப்பர்.. மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by parakaalan Sat Jul 04, 2009 3:47 pm

சிவா சார். இதைக் கணவன்மார்கள் படித்து விட்டு உண்மையாகவே கரிசனம் காட்டும் மனைவியரிடத்தில் என்ன ஈகரை படித்துவிட்டுக் கதைக்கிறாயா? சரிதா போ போ உன்னைத் தெரியும் என்று குதறி விடுவார்,
avatar
parakaalan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 15/06/2009

Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by ராஜா Sat Jul 04, 2009 4:05 pm

தல, அருமையான கட்டுரை , சொந்த அனுபவமா???? இல்ல .......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வசியப்படுத்துவது எப்படி? Empty Re: வசியப்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» வசியப்படுத்துவது தவறல்ல !
» ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?
» சிறுநீரகக் கல் உண்டாவது எப்படி? தடுப்பது மற்றும் கரைப்பது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum