ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்

+35
ச. சந்திரசேகரன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
யினியவன்
DERAR BABU
Ahanya
அச்சலா
ராஜா
ஹர்ஷித்
இரா.பகவதி
மகா பிரபு
ரா.ரா3275
dhilipdsp
ஜாஹீதாபானு
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
முரளிராஜா
Manik
bhuvi19
அருண்
Ganesh1
nandhtiha
Thanjaavooraan
V.Annasamy
சிவா
அன்பு தளபதி
T.N.Balasubramanian
சாந்தன்
சரவணன்
ரபீக்
மஞ்சுபாஷிணி
நியாஸ் அஷ்ரஃப்
கலைவேந்தன்
Aathira
balakarthik
39 posters

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 5:53 pm

அருமையான சிலேடை ... பழையதுக்கும் நாராயணனுக்கும் ..

நன்றி பாலா..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by முரளிராஜா Sun Jun 05, 2011 9:21 am

சிரி சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sun Jul 24, 2011 6:56 pm

மூதறிஞரின் சிலேடை
நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டு மூதறிஞர் ராஜாஜி ‘சுதந்திரா’ கட்சியை உருவாக்கினார். அக்கட்சியின் முதல் மாநாடு தஞ்சை யாகப்பா திரையரங்குத் திடலில் விமரிசையாக நடந்தது.

மாநாடு முடிந்து 9.15 மணி (இரவு) தஞ்சை ரயிலடிக்கு வந்து விட்டார் ராஜாஜி. பயணிகள் ஓய்வறையில் உட்காராமல் கைத்தடியை ஊன்றியபடி நடைமேடையில் நின்றிருந்தார் தஞ்சை நகர சுதந்திரா கட்சி பிரமுகர் சாமிநாதனும் பக்கத்தில் இருந்தார்.

கட்சித் தொண்டர்களில் சிலர் புகைவண்டி நிலைய கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று இரும்பு மடக்கு நாற்காலி வேண்டும் எனக்கேட்டனர்.

அவர் யாருக்கு என அவர்களைத் திருப்பிக் கேட்டாராம். தொண்டர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களை உட்கார வைக்கத்தான் என்றனர். அவருக்கென்றால் நான் தரமாட்டேன். ஏனெனில் என் வேலை போய்விடும் என தொண்டர்களிடம் சொன்னாராம்.

பின் தொண்டர்கள் ரயில் நிலையம் அருகிலுள்ள மருந்து கடையின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து பெற்றனராம். தொண்டர்கள் அங்கும் இங்கும் அலைவதை கவனித்த ராஜாஜி சாமிநாதனைப் பார்த்து என்ன நடக்கிறது இங்கே எனக் கேட்டாராம்.

தங்களை உட்கார வைப்பதற்குத் தான் தொண்டர்கள் நாற்காலியைத் தேடி அலைகிறார்கள். என்றாராம் சாமிநாதன்.

அப்போது ராஜாஜி “சாமிநாதன்... நம் கட்சிப் பிரமுகர்களோ... தொண்டர்களோ எப்போதும் நாற்காலியைத் தேடி அலைய வேண்டாம்’’ என்றாராம்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Mon Sep 05, 2011 1:31 pm

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!!
:- காலமேக புலவர்

பூசணிக்காயானது :

அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக !!


சிவபெருமான் :

அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 18, 2011 9:07 am

மிகவும் அருமையாகவுள்ளது. பகிர்வுக்கு நன்றி.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Tue Sep 20, 2011 7:04 pm

Sundararaj Thayalan wrote:மிகவும் அருமையாகவுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

நன்றி ஐயா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by krishnaamma Tue Sep 20, 2011 7:29 pm

balakarthik wrote:முக்கூர் லக்ஷ்மி நரசிமாச்சாரியாரின் “குறைவொன்றும் இல்லை" முதல் பாகம்
படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பழையதுக்கும்(பழைய சோறு) ஸ்ரீமன்
நாராயணனுக்கும் ஒரு கவிஞர் சிலேடை புனைந்திருப்பதாக எழுதியிருக்கிறார் , அது கீழ்வருமாறு

நீரில் கிடந்தவண்ணம் நிர்மலமாய்க் காட்சிதரும்
தாரணி வாழ்விக்கும் அன்னமாம்-சாரப்
பொருள்தேறும் போற்றும் பழமையால் சோறும்
எருதேழ் அடர்த்த இறை


நாராயணன்:
நீரில் கிடந்த வண்ணம்- நீரில் பள்ளி கொண்டிருப்பான்; அல்லது நாரங்களையே தனது இருப்பிடமாகக் கொண்டவன்; அதாவது நாராயணன்
நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றவனாய் இருப்பவன்
தாரணி வாழ்விக்கும்- காத்தலாகிய தொழிலைச் செய்பவன்
சாரப்பொருள்தேறும் அன்னமாம்-ஹம்ஸாவதாரத்தில் வேதத்தின் சாரப்பொருளாகிய வேதத்தை உபதேசம் செய்தவன்
போற்றும் பழமையால்- வேதங்கள், உபநிடதங்களால் 'புராண புருடோத்தமன்' என்று போற்றப்படுபவன்
எருதேழ் அடர்த்த இறை; ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியின் கைத்தலம் பற்றிய கண்ணனாகிய எம்பெருமான் நாராயணன்.

பழைய சோறு:
நீரில் கிடந்த வண்ணம்- இரவெல்லாம் நீரில் கிடக்கும்
நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றதுபோல் வெண்மையாய்க் காட்சி தரும்
தாரணி வாழ்விக்கும் அன்னமாம்- உலகத்தாரின் பசியைப் போக்கி வாழ்வுக்கு ஆதாரமாய் இருக்கும் உணவாகும்
சாரப்பொருள்தேறும்-மக்கள் உணவில் முக்கிய பங்கு வகிக்கும்
போற்றும் பழமையால்-பழமையான காரணத்தால் உண்பவர்கள் ''ஆஹா" என்று விரும்பி உண்பர்

ரொம்ப நல்லா இருக்கு பாலா, அந்த புத்தகம் PDF கிடைக்குமா ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Wed Dec 07, 2011 1:44 pm

நண்பர் ஒருவர்,“சிலப்பதிகாரத்துக்கு உரை போட்டிருக்கிறேன், பாருங்கள்” என்று புத்தகத்தை நீட்டினார்.

அடேடே, இப்படிப்பட்ட தமிழ்ப் பண்டிதர் அருகிலேயே இருப்பது தெரியாமல் போய் விட்டதே என்று பிரித்துப் படித்தேன். வெறும் செய்யுள்தான் இருந்தது. உரை இல்லை.

“உரை இல்லையே?” என்றதற்கு,

“புத்தகத்துக்கு காக்கி கலரில் உறை போட்டிருக்கிறேனே, அதைச் சொன்னேன்” என்றார்.

நல்ல வேளையாக கி.வா.ஜ. உயிரோடு இல்லை!


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 1:46 pm

balakarthik wrote:நண்பர் ஒருவர்,“சிலப்பதிகாரத்துக்கு உரை போட்டிருக்கிறேன், பாருங்கள்” என்று புத்தகத்தை நீட்டினார்.

அடேடே, இப்படிப்பட்ட தமிழ்ப் பண்டிதர் அருகிலேயே இருப்பது தெரியாமல் போய் விட்டதே என்று பிரித்துப் படித்தேன். வெறும் செய்யுள்தான் இருந்தது. உரை இல்லை.

“உரை இல்லையே?” என்றதற்கு,

“புத்தகத்துக்கு காக்கி கலரில் உறை போட்டிருக்கிறேனே, அதைச் சொன்னேன்” என்றார்.

நல்ல வேளையாக கி.வா.ஜ. உயிரோடு இல்லை!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 1:46 pm

balakarthik wrote:நண்பர் ஒருவர்,“சிலப்பதிகாரத்துக்கு உரை போட்டிருக்கிறேன், பாருங்கள்” என்று புத்தகத்தை நீட்டினார்.

அடேடே, இப்படிப்பட்ட தமிழ்ப் பண்டிதர் அருகிலேயே இருப்பது தெரியாமல் போய் விட்டதே என்று பிரித்துப் படித்தேன். வெறும் செய்யுள்தான் இருந்தது. உரை இல்லை.

“உரை இல்லையே?” என்றதற்கு,

“புத்தகத்துக்கு காக்கி கலரில் உறை போட்டிருக்கிறேனே, அதைச் சொன்னேன்” என்றார்.

நல்ல வேளையாக கி.வா.ஜ. உயிரோடு இல்லை!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 10 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum