புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
29 Posts - 60%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
194 Posts - 73%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
8 Posts - 3%
prajai
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்


   
   

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 6:33 pm

balakarthik wrote:தொண்டை கட்டு
* தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன் மாணவராக இருந்த நேரம்.. ஒருமுறை கி.வா.ஜ.வை ஒரு பாட்டுப் பாடு என்றார் உ.வே.சா.

அப்போது கி.வா.ஜ.வுக்குத் தொண்டை கட்டியிருந்தது. கி.வா.ஜ. செய்த தமிழ்த்தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை.

'என் தொண்டை கம்மலாக இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று தயங்கினார் கி.வா.ஜ. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே கேட்கப்போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு' என்றார் உ.வே.சா!

ஹ...ஹா...ஹா...ஹா.... அருமை நண்பா..!
தொடர்ந்து சிரிக்க வையுங்கள்.!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 6:35 pm

சிலேடை நயங்கள் அருமை பாலா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 14, 2010 9:26 am

balakarthik wrote:
V.Annasamy wrote:நாணென்றால் இடப்புறத்தாள் நாணியதைக் கண்டு
பாணம் தொடுக்க மறந்த வீணரை,
நஞ்சை அமுதென உண்டவன், எப்புரமும்
மிஞ்சினான் வெற்றி கண்டு.

அருமை நவீன காளமேக புலவரே சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196 சிலேடை சிரிப்புகள் - Page 8 677196

சிலேடை சிரிப்புகள் - Page 8 359383 சிலேடை சிரிப்புகள் - Page 8 359383

சிலேடையாக உள்ளது செய்யுள். சிலேடை சிரிப்புகள் - Page 8 678642 சிலேடை சிரிப்புகள் - Page 8 678642 சிலேடை சிரிப்புகள் - Page 8 154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 14, 2010 11:02 am

ரசித்த அனைவருக்கும் நன்றி , இதுபோல தங்களுக்கு தெரிந்த தங்கள் வாழ்கையில் நடந்த சிலேடை சம்பவங்களையும் அன்பர்கள் இங்கே பகிர்ந்துகொள்ளலாம் நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 1:56 pm

தண்ணீருக்குக் கவலையில்லை

சேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு உயர்நிலைப் பள்ளியாக இருந்தது அது.ஊருக்கு வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே அந்தப் பள்ளிக்கட்டிடம்.

கி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது நிர்வாகத்தார் விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார். பள்ளியைச் சுற்றிக் காட்டினார்கள். கிணற்றையும் காட்டினார்கள்.
'கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து வந்தோம். ஆனால்இப்போது பம்ப்செட் போட்டுவிட்டோம். பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது' என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா! அப்படியானால் இனிமேல் தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்'' என்றார்!



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:10 pm

அங்கங்கே தமிழ்தேடி மேயும்போது நான் மேய்ந்து பெற்ற சில சுவையான தமிழ் செய்யுள்களை உங்களுக்கு தருகின்றன்.

மரமது மரத்தில் ஏறி
மரமதைத் தோளிற் சாய்த்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாந்தர்
மரமொடு மரம் எடுத்தார் . . .

இந்தப்பாடலின் விளக்கம்

மரமது மரத்தில் ஏறி (அரசன்,குதிரை)
மரமதைத் தோளிற் சாய்த்து(வேல்)
மரமது மரத்தைக் கண்டு (அரசன் வேங்கை)
மரத்தினால் மரத்தைக் குத்தி(வேல், வேங்கை)
மரமது வழியே சென்று(அரசன்)
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாந்தர்(அரசன்)
மரமொடு மரம் எடுத்தார் . . .(ஆல், அத்தி)

பொருள் - ஒரு அரசனானவன் மரம் ஒன்றில் ஏறி, மரத்தில் நிலையெடுத்து நின்று, தனது ஆயுதமான வேலை தோளில் சார்த்தி, அந்தப்பகுதியால் வரும் புலியை கண்ணுற்று, அந்தப்புலியின் மேல் தனது வேலினால் குற்றி புலியை வீழ்த்தி, பின்னர் அந்த மரத்தை விட்டு இறங்கினான். இதை பார்த்த மக்கள், அவனுக்கு (அரசனுக்கு) ஆரத்தி எடுத்தனர்.

அதாவது குறிப்பிட்ட ஊர் ஒன்றில் காட்டில் வாழும்புலி ஒன்று கிராமத்தினுள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இந்ததை அந்த ஊர் மக்கள் முறையிட்டதையடுத்து அங்கு வந்து அரசன் மேற்படி புலியை வதைத்தான் என்பதை நாம் விளங்கிக்கொளலாம்.
(இதைவேறுபலவிதமான கருத்துக்களில் கூறுபவர்களும் உண்டு)



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 23, 2011 12:08 pm

கோவை வானொலிக்காக நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்.பெ.இராமையா அவர்கள் பங்கேற்றபோது, அவரிடம் ஒரு புலவர், ”மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் சிலேடையாக ஒரு வெண்பாவைப் பாடவேண்டும்” என்றார்.

”ப்ளிச்...” என்று ஆரம்பித்த சிலேடைப் பாடலின் முதல் வரி, அனைவரையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது.


’சமயத்தில் ஒத்துழையா
’ஷாக்’ அடிக்கும் தொட்டால்
இமைசிமிட்டும் இன்பமதை
ஊட்டும்-நமை உயர்த்தும்
தன்சாரம் குன்றாத
தன்மையால் எஞ்ஞான்றும்
மின்சாரம் சம்சாரமே!’

’சமயத்தில் ஒத்துழையா...’ என்பதில் ‘மின்சாரம்,சம்சாரம் இரண்டுமே எந்த நேரத்தில் காலை வாரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாரத நேரத்தில் தகராறு செய்து நமக்கு அதிர்ச்சியை (tension) உண்டாக்கும்.

ஷாக் அடிக்கும் தொட்டால்...’ என்பது அடுத்த வரி, தகராறு செய்யும் சமயத்தில் இரண்டின் மீதும் கையை வைக்காதே. பட்...டென்று அடித்து விடும்.

இமைசிமிட்டும்...’ அதிக அழுத்தம் (ஹீவோல்ட்), குறை அழுத்தம் காரணமாக மின்சார விளக்குகள் ‘ப்ளிச்..’ என எரிவதும், மங்கலாக ஒளிர்வதும் இயற்கை.
அதுபோல் வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பொறுத்து சுறுசுறுப்பாய் இயங்குவதும், மந்தமாய் இருப்பதும் சம்சாரத்தின் இயற்கை.
அதாவது பிறந்த வீட்டுச் சொந்தங்களாகிய அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என்று வந்தால் சுறுசுறுப்பாய்ப் ‘ப்ளிச்’சென்று மின்னும். புகுந்த வீட்டுச் சொந்தங்களாகிய மாமியார்,நாத்தனார் என்று வந்துவிட்டால் மந்தமாகி விடும்’.

’இன்பமதை ஊட்டும்..’ வீட்டில் மின்விசிறி சுழல, மின் அடுப்பு எரிய,குளிர்பெட்டி குளிர, விளக்குகள் ஒளிர, மின்சாதனப் பொருட்கள் இயங்க என எல்லாவற்றிற்கும் மின்சார ஓட்டம் சீராக இருந்தால் நமக்கு இன்பமான மனநிலை தரும். அதேபோல் ஒரு குடும்பத்தின் அத்தனை இன்பங்களுக்கும் காரணமாய் இருந்து நமக்கு இன்பத்தை தருவது சம்சாரமே.

’நமை உயர்த்தும்...’ ஒரு வீட்டின் உயர்வுக்கும் நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் மின்சக்தி ஓர் அடிப்படைத் தேவை. அதேபோல் ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு சம்சாரம் ஓர் அடிப்படைத் தேவை

’தன்சாரம் குன்றாத தன்மையால்’ நேரம் கருதியோ, ஆளைக் கருதியோ மின்சாரம் தன் ஆற்ற்லைக் குறைத்துக் கொள்வது கிடையாது.240 வோல்ட் மின்சக்தி என்றால் யார், எப்போது தொட்டாலும் ஒரே மாதிரிதான் மின் அதிர்ச்சி இருக்கும். அதேபோல் இல்லத்தில் எப்போதும் தன் மதிப்புக் குறையாமல் பார்த்துக் கொள்வது சம்சாரத்தின் இயல்பாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மின்சாரமும் சம்சாரமும் ஒரே இயல்புடையவை என பாடலை முடித்தார்.பதின்கவனகர் திரு.இராமையா பிள்ளை.




ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 23, 2011 12:23 pm

தமிழறிஞர், அவதானக் கலைஞர், செய்குத் தம்பி பாவலர் அவர்களின் சுவையான சிலேடைகள் மிக ரசிக்கத்தக்கவை. அவற்றில் சில...

1. ஒருமுறை நண்பர் ஒருவரது இல்லத்தில் நடந்த திருமணத்துக்குப் பாவலரால் செல்ல இயலவில்லை. மறுமுறை அந்த நண்பரைச் சந்திக்க நேர்ந்த போது திருமணத்துக்கு வரஇயலாமைக்கு வருத்தம் தெரிவித்த பாவலர்,

'முகப்பருவரலால் மிகப்பருவரலுற்றேன். வர இயலவில்லை" என்றார்.

'முகத்தில் பரு வந்த காரணத்தால், மிகத் துன்பமுற்றேன்' என்று பருவரல் (துன்பம்) என்னும் சொல்லை சிலேடையாக க் கூறி அனைவரையும் ரசிக்க வைத்தார்.

2. ஒரு சமயம் பாவலர் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது 'கொல்லாமை' என்னும் சொல் கையாளப்பட்டது.

அச்சொல்லை, கொல்+ஆ+மை எனப்பிரித்து, ஆ=பசு, மை=செம்மறி ஆடு என்று பொருள் கூறி, கொல்லாமை என்றால் பசுவையும், செம்மறி ஆட்டையும் 'கொல்' என்று பொருள் வருவதாகக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

3. எப்போதும் பெருமை நாயகம் புகையிலைச் சுருட்டையே விரும்பிப் புகைக்கும் பழக்கமுடையவர் பாவலர். ஒரு சமயம் அவர் அதைப் பற்றவைக்கும்போது அணைந்து கொண்டேயிருந்த து. அப்போது அவர் கூறினார் :
'பெருமை நாயகம் புகையிலை, பெருந்தீ வைத்தும் புகையிலை!'

அவரது சிலேடையை ரசித்து அனைவரும் சிரித்தனர்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 23, 2011 12:27 pm

சமயத்தில் ஒத்துழையா...’ என்பதில் ‘மின்சாரம்,சம்சாரம் இரண்டுமே எந்த நேரத்தில் காலை வாரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாரத நேரத்தில் தகராறு செய்து நமக்கு அதிர்ச்சியை (tension) உண்டாக்கும்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நண்பா பகிர்விற்கு!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 23, 2011 1:37 pm

பண்டைய புலவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது அதிக சிலேடை நயம் ததும்ப பேசிக்கொள்ளுவது உண்டு .அதனைக் கேட்போருக்கு முதலில் புரியவில்லை என்றாலும் ,அதன் பொருள் தெரிந்த பின்பு அப்பொருளினைச் சுவைத்து மகிழ்வர்.

ஒருமுறை யாழ்பாணத்துப் புலவரும் உரைநடையின் தந்தை என்று சிறப்பிக்கப்படுபவருமான ஆறுமுக நாவலர் அவர்கள் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை(உ.வே.சா வின் ஆசிரியர்)
அவர்களை மதுரையில் சந்தித்தார்.அப்போது இருவரும் அளாவி மகிழ்ந்தனர்.மறுநாள் காலை அவர்கள் இருவரும் தம் மாணக்கருடன் ஆற்றுக்கு நீராடச் சென்றனர்.அது பனிக்காலம்.பனிக்கொடுமையால் மிகுதியாக வாடிய ஆறுமுக நாவலர் அவர்கள் பிள்ளையை நோக்கி ஐயா பனிக்காலம் மிகக் கொடிது என்றார்.

உடனே பிள்ளை அவர்கள் ஆம் என்று கூறாமல்.நான் பனிக் காலம் நல்லது என்பேன் என்றார்.

மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆறுமுக நாவலரோ பனிக் காலம் கொடுமை என்று கூற பிள்ளை அவர்களோ பனிக்காலம் நல்லது என்று கூறுகிறார்களே ஏதேனும் உட்பொருள் இருக்குமோ என்று எண்ணி மாணவர்கள் அவரை நோக்க பிள்ளை அவர்க்ள நான் ஆறுமுக நாவலர் அவர்கள் கூறியதை மறுக்கவில்லையே ,அவர் பனிக்காலம் மிகக் கொடிது என்றார்.
பனிக்கு ஆலம் மிகவும் நல்லது என்றேன் நான்.ஆலம் என்றால் விடம் ( சுக்கு நீர்) தானே!இப்பனிக் கொடுமைக்கு விடம் நல்லது என்பது தானே என் உரை என்றார்.

ஒரு எளிய உரையாடலுக்குள் இத்தனைப் பொருள் பொதிந்துள்ளதா என்று மாணவர்கள் வியந்தார்களாம்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக