ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்

+35
ச. சந்திரசேகரன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
யினியவன்
DERAR BABU
Ahanya
அச்சலா
ராஜா
ஹர்ஷித்
இரா.பகவதி
மகா பிரபு
ரா.ரா3275
dhilipdsp
ஜாஹீதாபானு
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
முரளிராஜா
Manik
bhuvi19
அருண்
Ganesh1
nandhtiha
Thanjaavooraan
V.Annasamy
சிவா
அன்பு தளபதி
T.N.Balasubramanian
சாந்தன்
சரவணன்
ரபீக்
மஞ்சுபாஷிணி
நியாஸ் அஷ்ரஃப்
கலைவேந்தன்
Aathira
balakarthik
39 posters

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by Thanjaavooraan Sat Dec 11, 2010 2:07 pm

இங்கு பகிரப்பட்ட அனைத்து விகடங்களும் மிக அருமையாக, அற்புதமாக உள்ளது. அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சிலேடை சிரிப்புகள் - Page 7 677196 சிலேடை சிரிப்புகள் - Page 7 154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 3:07 pm

balakarthik wrote:அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான் - கம்பர்.
பால காண்டம் . ஆற்றுப் படலம் 10 வது பாடல்

இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வௌ;வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
இப்பேற்பட்ட ராமபக்தனான அனுமன் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பான் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.

நிலம் நீர் வாயு தீ ஆகாயம் என ஐந்து பூதங்களையும் ஒரே பாடலில் ஒரே சொல்லின் மூலம் கொணர்ந்த கம்பர் அதனால் தான் கவிச்சக்கரவர்த்தி என்று புகழப்படுகிறார்...! நன்றி பாலா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by nandhtiha Sat Dec 11, 2010 3:52 pm

வணக்கம்


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலேஒன்று ஆறு ஆக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலேஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலேஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்


என்ற பாடலை சென்னைக் கம்பன் கழக வெளியீட்டில் மிகைப் பாடலாக தொகுத்திருக்கிறது. அதே போன்று

கோவை கம்பன் அற நிலை வெளியீடும் மிகைப் பாடலாகவே தெரிவிக்கிறது. ஆனால் பாடலை கீழ் வரும் விதமாக இரண்டு பதிப்புக்களுமே வெளியிட்டிருக்கின்றன
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்


என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 11, 2010 5:00 pm

nandhtiha wrote:வணக்கம்


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலேஒன்று ஆறு ஆக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலேஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலேஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்


என்ற பாடலை சென்னைக் கம்பன் கழக வெளியீட்டில் மிகைப் பாடலாக தொகுத்திருக்கிறது. அதே போன்று

கோவை கம்பன் அற நிலை வெளியீடும் மிகைப் பாடலாகவே தெரிவிக்கிறது. ஆனால் பாடலை கீழ் வரும் விதமாக இரண்டு பதிப்புக்களுமே வெளியிட்டிருக்கின்றன
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்


என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நன்றி அக்கா நான் இந்த பாடல தப்பா படிச்சுட்டேன் இப்போ பாருங்க சரி பண்ணிட்டேன் தவறை திருத்தியமைக்கு நன்றி அக்கா

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்
- கம்பராமாயணம்

விளக்கம்:
உலகம் ஐந்து பொருட்களால் ஆனது. மண், தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே.

அனுமன் ஐந்திலே ஒன்றாகிய காற்றின் மகன். ஐந்தில் ஒன்றாகிய மண் (பூமி தேவி) பெற்ற மகள் சீதை. அவளைக் காண்பதற்காக அனுமன் ஐந்தில் ஒன்றாகிய தண்ணீரைத் (கடல்) தாவுகின்றான். ஐந்தில் ஒன்றாகிய ஆகாயத்தை வழியாகக் (ஆறு - வழி) கொண்டு இராமனின்
உயிராகிய சீதையைக் காப்பாற்றச் செல்கிறான். அங்கு சென்று ஐந்தில் ஒன்றாகிய தீயை வைத்து அரக்கரை வென்ற அனுமான் நம்மைக் காப்பான் என்று கூறும் கம்பனின் பாடலே இது.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 11, 2010 5:01 pm

Thanjaavooraan wrote:இங்கு பகிரப்பட்ட அனைத்து விகடங்களும் மிக அருமையாக, அற்புதமாக உள்ளது. அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சிலேடை சிரிப்புகள் - Page 7 677196 சிலேடை சிரிப்புகள் - Page 7 154550
நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 11, 2010 5:02 pm

கலை wrote:நிலம் நீர் வாயு தீ ஆகாயம் என ஐந்து பூதங்களையும் ஒரே பாடலில் ஒரே சொல்லின் மூலம் கொணர்ந்த கம்பர் அதனால் தான் கவிச்சக்கரவர்த்தி என்று புகழப்படுகிறார்...! நன்றி பாலா...!

நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 11, 2010 5:13 pm

புகழ்மிகு எழுத்தாளர், பேச்சாளர், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் ‘சிலேடைச் செல்வம் ‘ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அருமையாகப் பேசினார். ஏராளமான இலக்கிய, வரலாற்று, சமூகக் குறிப்புகள் அவர் உரையில் கிடைத்தன.


“வாமன அவதாரத்தில் இருந்தவர், விஸ்வரூபம் எடுத்த போது, அவர் போட்டிருந்த ஆடைகளும் வளர்ந்தனவா என ஒருவர் கேட்டார். தெரியவில்லையே என அடுத்தவர் கூற, ஆடைகள் வளரவில்லை; உடல்மட்டும்தான் வளர்ந்தது; இதற்கு இலக்கியச் சான்று உள்ளது என்றாராம். என்ன அந்தச் சான்று எனக் கேட்க, ‘ஓங்கி உலகளந்து உத்தமன் பேர்பாடி’ என்ற பாடலே இதற்குச் சான்று. பேர்பாடி (Bare body) என்பது, வெற்றுடம்பைத்தானே காட்டுகிறது என்றாராம்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 11, 2010 5:23 pm

திருப்பூர் கிருஷ்ணன், தம் மனைவி ஜானகி, மகன் அரவிந்த் ஆகியோருடன் வந்திருந்தார். என் பேச்சை என் மனைவி கேட்டார் என நான் சொல்லிக்கொள்ளலாம் இல்லையா? அதற்காகத்தான் அழைத்து வந்தேன் என அதிலும் ஒரு சிலேடையை எடுத்து விட்டார். அவர் மனைவி, கேந்திரிய வித்தியாலயா என்ற பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றுகிறார்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 11, 2010 5:37 pm

உப்புமா குத்துகிறதா''

*குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ.
'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி. கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார்.
பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.
ஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது' என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 11, 2010 6:25 pm

தொண்டை கட்டு
* தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன் மாணவராக இருந்த நேரம்.. ஒருமுறை கி.வா.ஜ.வை ஒரு பாட்டுப் பாடு என்றார் உ.வே.சா.

அப்போது கி.வா.ஜ.வுக்குத் தொண்டை கட்டியிருந்தது. கி.வா.ஜ. செய்த தமிழ்த்தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை.

'என் தொண்டை கம்மலாக இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று தயங்கினார் கி.வா.ஜ. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே கேட்கப்போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு' என்றார் உ.வே.சா!


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 7 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum