ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Poll_c10காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Poll_m10காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Poll_c10 
heezulia
காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Poll_c10காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Poll_m10காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Poll_c10 
mohamed nizamudeen
காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Poll_c10காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Poll_m10காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..

Go down

காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Empty காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..

Post by அலட்டல் அம்பலத்தார் Sat May 29, 2010 8:08 am

காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது
.

ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோவிலாகத் திகழ்கிறது காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில்.

இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். முக்கிய அரசியல் தலைவர்களும் இங்கு அடிக்கடி சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இக்கோவிலின் 133 அடி உயர ராஜகோபுரத்தை ஸ்ரீகிருஷ்ண தேவராயர் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டினார். இக்கோபுரத்தில் திடீரென பிளவு ஏற்பட்டது. இதனால் அது இடிந்து விழும் அபாயம் உள்ளது என்று கூறப்பட்டது. இன்று (26-05-10) இரவு 8.10 மணியளவில் இந்த ராஜ கோபுரம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது .

முன்று நாளைக்கு முன்பு, முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னெச்சரிக்கை ஏற்பாடாக யாரும் கோபுரத்தின் அருகே செல்லாதவாறு தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்ததனால் உயிர்சேதம் எதுவும் நிகழவில்லை.

.
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Empty Re: காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..

Post by அலட்டல் அம்பலத்தார் Sat May 29, 2010 8:15 am

இரண்டாக பிளந்து அபாயகரமான நிலையில் இருந்த ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் 27 /05 /2010 இரவு 8.05 மணியளவில் அடியோடு இடிந்து தரைமட்டமானது. ராஜகோபுரத்தின் அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகளும் இடிந்து விழுந்தன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பிரசித்தி பெற்ற ஞானபிரசுனாம்பிகை உடனுறை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் இக்கோவில் வாயு தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் ராகு-கேது பூஜை சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த கோவிலின் ராஜகோபுரம் 122 அடி உயரமாகும். இந்த கோவில் கடந்த 1516-ம் ஆண்டு கிருஷ்ணதேவராய மன்னரால் கட்டப்பட்டது. 7 அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் கடந்த 1988-ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால், கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. விரிசல் ஏற்பட்ட ராஜகோபுரம் தேவஸ்தானம் சார்பில் சீரமைக்கப்பட்டது.

அண்மையில் மீண்டும் அதேபோல் ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டது. சிற்பங்கள் உடைந்து கீழே விழுந்தன. ராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. ராஜகோபுரத்தை சீர்செய்ய வேண்டி பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் தேவஸ்தானம் சார்பில் ராஜகோபுரத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவஸ்தான என்ஜினீயர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து ராஜகோபுரத்தை பார்வையிட்டனர். உடனடியாக கோபுரத்தை சுற்றி 500 அடி தூரத்திற்கு ஆபத்து பகுதியாக (ரெட் ஜோன்) அறிவித்து, கடைகள், நிறுவனங்களை காலி செய்ய உத்தரவிட்டனர். அந்த பகுதிக்கு பொதுமக்கள், பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கட்டிட வல்லுனர்கள் ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்து, ராஜகோபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் இரண்டாக பிளந்து இருந்த ராஜகோபுரம் நேற்று இரவு 8.05 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடியோடு இடிந்து விழுந்தது. கோவில் இடிந்து விழுந்த சத்தம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. கோவில் இடிந்து விழுந்த அதிர்வால் அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதில் ராஜ கோபுரத்தின் அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகள் தரைமட்டமாயின. அருகில் இருந்த ஓட்டல், வங்கி கட்டிடம், மின்கம்பங்கள் ஆகியவற்றின் மீதும் கோபுர கற்கள் சிதறி விழுந்தன. ஓட்டலில் வேலை செய்தவர்கள் யாராவது உள்ளே சிக்கியிருக்கிறார்களா? என்ற விவரம் தெரியவில்லை.

கோபுரத்தின் இடிபாடுகள் விழுந்ததால் அருகில் இருந்த மின் கம்பங்கள் ஒடிந்தன. மின்சார இணைப்பு அடியோடு துண்டிக்கப்பட்டு, ஸ்ரீகாளஹஸ்தி நகரமே இருளில் மூழ்கியது.

பொதுமக்கள், பக்தர்கள் என்னவோ ஏதோ என்று பதற்றத்துடன் கோவிலுக்கு ஓடிவந்தனர். இதனால் ஸ்ரீகாளஹஸ்தி நகரமே பரபரப்பாக காணப்பட்டது.

ராஜகோபுரம் இடிந்து விழுந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

எனினும் இடிந்து விழுந்த கோபுர கற்களில் பொதுமக்கள், பக்தர்கள் யாராவது சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, மருத்துவ குழுவினர், தீயணைப்பு படைவீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தயார் நிலையில் மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Empty Re: காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..

Post by அலட்டல் அம்பலத்தார் Sat May 29, 2010 8:16 am

காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. 71686717
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. Empty Re: காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum