ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

4 posters

Go down

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by சிவா Fri May 28, 2010 2:33 pm

பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால், சில ராசிக்காரர்களுக்கும், குறிப்பாக, ராகு, கேது திசை மற்றும் புத்தி நடப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என, ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அரசியல் தலைவர்களுக்கு ஆகாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்வர். ராகு, கேது தோஷத்திற்குரிய பரிகார தலமாக கருதப்படும் காளஹஸ்தி சிவன் கோவிலின் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால், தற்போது ராகு திசை அல்லது வேறு திசையில் ராகு புத்தி நடப்பவர்கள், கேது திசை அல்லது வேறு திசைகளில் கேது புத்தி நடப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அவர்கள் இந்த இரு கிரகங்களுக்கும் உரிய பரிகாரங்களை செய்து கொள்வது நன்மை தரும். அதாவது, விநாயகருக்கோ அல்லது துர்கைக்கோ பூஜைகள் செய்வது சிறப்பு தரும். மேலும், இந்தக் கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளதால், அந்த மாநிலத்தில் இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் பாதிப்பு ஏற்படலாம். பெரிய அளவிலான விபத்துகள், கோர சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பு உண்டு. மேலும், தற்போது கோச்சார ரீதியாக, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராகு, கேது கிரகங்கள் பாதகமான நிலையில் உள்ளதோ, அவர்களும் மேற்கண்ட கிரகங்களுக்கு உரிய பரிகார பூஜைகளை மேற்கொள்ளலாம். வீடுகளிலும், கோவில்களிலும் நெய் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும்.

ஜோதிடர் சிவஓம்குருரவி: பஞ்ச பூத தலங்களில் ஒன்றான காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது, அரசியல் தலைவர்களுக்கு ஆகாது. கேது ஸ்தலமாக காளஹஸ்தி இருப்பதால், இது நிச்சயம் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, தமிழகத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு தர்ம பரிபாலனம் செய்வதே சிறந்த பரிகாரம்.

ஜோதிடர் பூவை நாராயணன்: பொதுவாக கோவில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்க தகாத, வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனை பாதிக்கும். இதற்கு வைகானச கல்ப சூத்திரத்தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களை படித்து, "அற்புத சாந்தி ஹோமம்' செய்ய வேண்டும். இதை வைகானச ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் இத்தகைய ஹோமங்கள் செய்யப்படும். மேலும், தெய்வீக விருட்சங்களை பொது இடத்தில் நட வேண்டும். அதிலும், வாயு ஸ்தலமான காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்தது வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

ஜோதிடர் முத்துகுமார்: காளஹஸ்தி ஆந்திராவில் இருந்தாலும், அங்கு பூஜை நடைமுறைகள் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை பின்பற்றியே நடந்து வருகிறது. அங்கு பூஜை செய்பவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். காளஹஸ்தி ராஜகோபுரம் பழமையானதாக இருந்தாலும், அது இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளதால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரம் அந்த கோவிலிலேயே செய்யப்படும். பொதுவாக இது போன்ற சம்பவங்களின் போது 90 நாட்களுக்குள் விளைவுகள் தெரிந்து விடும். அதற்குள் தெரியாவிட்டால் பாதிப்பு ஏதும் இல்லை என்று அர்த்தம். வெகு விரைவில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது தமிழகத்தில் தெரியாவிட்டாலும், அது அரசு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதற்குள் பரிகார பூஜையை செய்ய வேண்டும்.

தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா: காளஹஸ்தி கோவில் கோபுரத்தில், கடந்த 88ம் ஆண்டே விரிசல் ஏற்பட்டு விட்டது. இதை அப்போது சரியான முறையில் சரிசெய்யவில்லை. ஆற்றை ஒட்டி கோவில் அமைந்திருப்பதால், மண்ணில் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு, மணல் சரிந்து, கோபுர சுவர்களுக்குள் சுண்ணக் கலவை விடுபட்டு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். பூமி தளத்தில் ஏற்பட்ட மாற்றங் களால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்த காலத்தில் கோபுரங்கள் எல்லாம் ஒரு கல்லின் மீது மற்ற கல்லை அடுக்கி மலைகளை அடுக்குவது போல் தான் உருவாக்கப்படும். அப்படி இருக்கும் போது ஆரம்பத்திலேயே கோபுர விரிசலை சரியான முறையில் சரி செய்திருக்க வேண்டும். ஐநூறு ஆண்டுகள் ஆன இந்த கோபுரத்தில், முதலில் விரிசல் ஏற்பட்ட போதே கோபுர அஸ்திவாரத்தை, "ரேப்ட்' போட்டு வலுப் படுத்தியிருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததில் தெய்வக் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.

ஜோதிடர் சிவஅண்ணாமலைதேசிகன்: காளஹஸ்தி ராகு, கேது பரிகார தலம். இந்தியாவின் லக்னம் ரிஷபம், அமெரிக்காவின் லக்னம் தனசு. இந்த இரு லக்னங்களுக்கும் தற்போது ராகு, கேது நிலை சரியில்லை. ரிஷிப லக்னத்திற்கு எட்டாம் இடமான தனுசு லக்னத்திலும் தற்போது ராகு உள்ளது. மிதுனத்தில் கேது உள்ளது. இந்நிலையில், ராகு, கேது பரிகார தலமான காளஹஸ்தி கோவிலின் கோபுரம் இடிந்து விழுந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும். போர் கூட வரலாம். பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இரு கிரகங்களும் இதே நிலையில் இருந்த போது தான் ராஜிவ் படுகொலை நடந்தது. அதன் விளைவாக தற்போது இலங் கையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததற்கு வேறு பரிகாரம் கிடையாது. மக்கள், தலைவர்கள் மத்தியில் தர்ம சிந்தனை வளர்ந்தால் மட்டுமே, ராகு, கேது கிரகங்களின் பாதகமான சூழலை மாற்ற முடியும்.


காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by கலைவேந்தன் Fri May 28, 2010 2:51 pm

பயனுள்ள தகவல்... நன்றி சிவா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by நிலாசகி Fri May 28, 2010 2:56 pm

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? 440806


தீதும் நன்றும் பிறர் தர வாரா காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by krishnaamma Fri May 28, 2010 10:55 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து!
» எல் நினோவுக்கு 90% வாய்ப்பு: வரலாறு காணாத வெப்பம் ஏற்படுமா? இந்தியாவிற்கு வரப்போகும் பாதிப்பு
» கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum