புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_lcapதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_voting_barதத்துவ மேதை அரிஸ்டாட்டில் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவ மேதை அரிஸ்டாட்டில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 5:00 pm

தத்துவ மேதை அரிஸ்டாட்டில் 250px-Aristotle



பண்டைய உலகில் தலைசிறந்த தத்துவஞானியாகவும், விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் அரிஸ்டாட்டில். இவர் முறையான தருக்கவியல் ஆராய்ச்சியைத் தோற்றுவித்தார். தத்துவத்தின் அனைத்துத் துறைகளையும் வளப்படுத்தினார்; அறிவியலுக்கு அளவிறந்த அருந்தொண்டுகள் புரிந்தார்.

அரிஸ்டாட்டிலின் கொள்கையில் பல இன்று காலங்கடந்தனவாகி விட்டன. எனினும், இவருடைய தனிக் கோட்பாடுகளை விடப் பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது இவருடைய பகுத்தறிவு அணுகு முறையாகும். மனித வாழ்க்கையின் மற்றும் சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சமும், சிந்தனைக்கும், பகுப்பாய்வுக்கும் உரிய நுதல் பொருளாக அமையும் என்ற கோட்பாடு இந்த அண்டம், முறையற்ற தற்செயல் நிகழ்வுகளினாலோ மந்திர தந்திரத்தினாலோ, மனம் போல நடக்கிற தெய்வங்களின் விருப்பு வெறுப்புகளினாலோ கட்டுப்படுத்தப் படவில்லை. மாறாக, பகுத்தறிவு சார்ந்த விதிகளுக்கு உட்பட்டு அண்டம் இயங்குகிறது என்னும் கொள்கை; இயற்கை உலகின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் மனிதர்களை முறையான ஆராய்ச்சிகள் செய்வது பயனுடையதாக இருக்கும் என்ற நம்பிக்கை; நமது முடிவுகளைச் செய்வதில் அனுபவ நோக்கறிவினையும், தருக்க முறைப் பகுத்தறிவினையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆழ்ந்த பற்றுறுதி; இவை அனைத்தும் அரிஸ்டாட்டிலின் எழுத்துகளில் அழுத்தமாக இழையோடக் காணலாம்.அரிஸ்டாட்டில், மாசிடோனியாவிலிருந்து ஸ்டாகிரா என்ற நகரில் கி.மு. 384 இல் பிறந்தார். அரிஸ்டாட்டில் தம்முடைய 17 ஆம் வயதில் ஏதென்ஸ் நகருக்குச் சென்று, பிளேட்டோவின் மாணவரானார். அங்கு அவர் பிளாட்டோ இறந்த சில ஆண்டுகளுக்குப் பின்பு வரை 22 ஆண்டுகள் இருந்தார். இவருடைய தந்தை, புகழ் பெற்ற அலெக்சாந்தரின் தந்தையான பிலிப்பின் அரண்மனையில் வைத்தியராக இருந்தவர். எனவே, இவருடைய தந்தையை அடியொற்றி ஆர்வம் தோன்றியிருக்கலாம்.

பிளேட்டோவிடம் பயின்ற காரணத்தால் தத்துவமுறை அனுமானங்களிலும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.அரிஸ்டாட்டில் கி.மு. 342 இல் மாசிடோனியா திரும்பினார். பிலிப் மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க அம்மன்னனின் 13 வயது மகனுக்கு ஆசிரியரானார். இந்த இளவரசன் தான் பிற்காலத்தில் உலக வரலாற்று மகா அலெக்சாந்தர் எனப் புகழ் பெற்றவர் ஆவார். இளம் அலெக்சாந்தருக்கு அரிஸ்டாட்டில் பல ஆண்டுகள் கல்வி கற்பித்தார். கி.மு. 335 இல் அலெக்சாந்தர் அரியணை ஏறினார். அரிஸ்டாட்டில் ஏதென்சுக்குத் திரும்பி, அங்கு சொந்தமாக ஒரு பள்ளியை நிறுவினார். லைசியம் என்பது இந்தப் பள்ளியின் பெயர். தம் மாணவர்க்கு மெய் விளக்கியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்ஸ் நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிஸ்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர்.

இங்கு 12 ஆண்டுகள் இவர் கழித்தார். இந்தக் கால அளவின்போது தான் அலெக்சாந்தர் தம் ஆட்சிப் பரப்பினை விரிவுப் படுத்துவதற்காக நாடுகளைக் கைப்பற்றும் படையெடுப்புகளை மேற்கொண்டிருந்தார். அலெக்சாந்தர் தம்முடைய முன்னாள் ஆசிரியரிடம் அரசியல் தொடர்பான ஆலோசனைகளைக் கேட்கவில்லை. எனினும், அவரது ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கி வந்தார். ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் நிகழ்ச்சி எனலாம். இதன் பின்பு பல நூற்றாண்டுகள் வரை எந்த விஞ்ஞானிக்கும் அரசு நிதியுதவி கிடைத்ததில்லை.அலெக்சாந்தருடன் அரிஸ்டாட்டில் கொண்டிருந்த தொடர்பு சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாந்தரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிஸ்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசு துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிஸ்டாட்டிலின் மருமகனை அலெக்சாந்தர் தூக்கிலிட்டபோது, அரிஸ்டாட்டிலையும் தூக்கிலிடுவதற்கு அவர் எண்ணியிருக்க வேண்டும். அரிஸ்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாந்தர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாந்தருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்ஸ் மக்கள் அவரை நம்பவில்லை. கி.மு. 323 இல் அலெக்சாந்தர் இறந்த பின்பு அரசியல் நிலைமை மாறியது.

மாசிடோனியாவை எதிர்க்கும் குழுவினர் ஏதென்சில் ஆட்சிக்கு வந்தனர். ஆட்சியாளர்கள், சமயத்தை அவமதித்ததாக ஏதென்சில் 76 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீசுக்கு நேர்ந்த கதியை நினைவு கூர்ந்த அரிஸ்டாட்டில், தத்துவத்திற்கு எதிரான இரண்டாவது பாவத்தைச் செய்ய ஏதென்சுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை. என்று கூறி அந்த நகரிலிருந்து தப்பி ஓடினார். வேற்று நாட்டிலேயே அவர் தம் 62 ஆம் வயதில் கி.மு. 322 இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.அரிஸ்டாட்டில் எழுதிக்குவித்த நூல்களின் எண்ணிக்கை மலைப்பூட்டுவதாகும். அவர் 170 நூல்கள் இயற்றியதாக ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைப் போலவே, அவர் புலமை பெற்றிருந்த பல்வேறு துறைகளின் எண்ணிக்கையுங்கூட நமக்கு வியப்பூட்டுகின்றன. அவருடைய நூல்கள், அவரது காலத்திய அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றன. வானியல், விலங்கியல், கருவியல், புவியியல், நில உட்கூறியல், இயற்பியல், உடல் உட்கூறியல், உடலியல் ஆகியவை குறித்தும், பண்டையக் கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத் துறைகள் அனைத்தைப் பற்றியும் அரிஸ்டாட்டில் எழுதினார்.

அவருடைய அறிவியல் நூல்கள், ஒரு பகுதி அவருக்காக அமர்த்தப் பட்டவர்கள் சேகரித்துக் கொடுத்தத் தகவல்களைத் தொகுத்துக் கூறுகின்றன. மற்றொரு பகுதி, அவரே சொந்தமாக ஆராய்ச்சிகள் நடத்திக் கண்டறிந்த முடிவுகளைக் கூறுகின்றன.அறிவியலின் ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த வல்லுநராக விளங்குவது என்பது வியப்புக்குரிய சாதனையாகும். ஆனால், அரிஸ்டாட்டில் அத்தகைய வியத்தரு சாதனையை விடவும் அதிகமாகவே சாதனைகள் புரிந்துள்ளார். அவர் தற்சிந்தனை வாய்ந்த ஒரு தத்துவஞானியாகவும் விளங்கினார். ஊகமுறைத் தத்துவத்தின் (Speculative Philosophy) ஒவ்வொரு பிரிவுக்கும் அவர் அருந்தொண்டு ஆற்றியுள்ளார். அறவியல், மெய் விளக்கவியல், உளவியல், பொருளியல், இறைமையியல், அரசியல், சொல்லாட்சிக் கலை, அழகியல் ஆகிய துறைகள் பற்றி அவர் எழுதினார். கல்வி, கவிதை, காட்டுமிராண்டி மரபுகள், ஏதெனியர்கள் அரசமைப்பு ஆகியவை குறித்தும் அவர் எழுதிக் குவித்தார். பல்வேறு நாடுகளின் வெவ்வேறு வகை அரசமைப்புகளையும் அவர் திரட்டி வைத்திருந்தார். அவற்றை ஒப்பாராய்ச்சி திரட்டி வைத்திருந்தார். அவற்றை ஒப்பாராய்ச்சி செய்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.அவருடைய படைப்புகள் அனைத்திலுமே முக்கியமானது, தருக்கவியல் கோட்பாடு பற்றிய அவரது நூலே ஆகும். வேறெந்த துறையையும் விட இத்துறையில் தான் அரிஸ்டாட்டிலின் செல்வாக்கு பரந்து நிலை பெற்றது எனலாம்.

தத்துவத்தின் இந்த முக்கியமான பிரிவினை வகுத்தமைத்த பெருமை அரிஸ்டாட்டிலுக்கு உண்டு. உண்மையைக் கூறின், இவருடைய தருக்க முறைச் சிந்தனைப் போக்கு தான் இத்துணை துறைகளில் பெருந்தொண்டாற்றுவதற்குத் துணை புரிந்தது. சிந்தனையை ஒழுங்கமைத்துக் கொடுப்பதில் இவர் தனித் திறமையுடையவராக இருந்தார். இவர் கூறிய இலக்கணங்களும், இவர் பகுத்தமைத்த வகை பிரிவுகளும் பல்வேறு துறைகளில் பிற்காலச் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்தன. இவர் ஒரு போதும் தீவிரவாதியாகவும் இருந்ததில்லை; நடைமுறைப் பொது அறிவின் குரலாகவே அவர் எப்போதும் விளங்கினார். அவர் தவறுகள் செய்திருக்கிறார். ஆயினும், அவருடைய விரிவான சிந்தனைக் கலைக் களஞ்சியத்தில் அவர் அறியாமையால் செய்துள்ள பிழைகள் மிகக்குறைவாக இருப்பது மிகுந்த வியப்பளிக்கிறது.பிற்காலத்தில் மேலைநாட்டு சிந்தனைகள் அனைத்திலும் அரிஸ்டாட்டிலின் செல்வாக்கினைப் பேரளவுக்குக் காணலாம். பண்டைக் காலத்திலும், மத்தியக் காலத்திலும் அவரது நூல்கள் லத்தீன், சிரியாக், அராபிக், இத்தாலியன், ஃபிரெஞ்ச், ஹ“ப்ரு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன. பிற்காலக் கிரேக்க எழுத்தாளர்களும், பைசாண்டியத் தத்துவஞானிகளும், இஸ்லாமியத் தத்துவத்திலும் அவருடைய செல்வாக்கு மிகுதியாகக் காணப்படுகிறது. பல நூற்றாண்டுகள் வரை ஐரோப்பியச் சிந்தனைகளில் அவருடைய எழுத்துகளே ஆதிக்கம் பெற்றிருந்தன.

அராபியத் தத்துவஞானிகளில் தலைசிறந்தவர் எனப் புகழ்பெற்ற ஆவரோஸ், இஸ்லாமிய இறைமையியலுக்கும் அரிஸ்டாட்டிலின் பகுத்தறிவு வாதத்திற்குமிடையே ஒருவகை ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயன்றார். மத்தியக் காலத்தில் மிகுந்த செல்வாக்கு வாய்ந்த யூத சிந்தனையாளராக விளங்கிய மைமோனிடஸ் அதே போன்று யூதர்களின் சமயக் கோட்பாடுகளுடன் அரிஸ்டாட்டிலின் பகுத்தறிவுக் கோட்பாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார். புனித தாமஸ் அக்குவினாஸ் என்ற கிறிஸ்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் பற்றி இறைமையியல் சுருக்கம் என்னும் புகழ் பெற்ற நூலை எழுதினார். அரிஸ்டாட்டிலின் செல்வாக்குக்கு ஆட்பட்ட மத்திய கால அறிஞர்கள் மிகப் பலர், அவர்கள் அனைவரையும் கூறுவது இயலாத காரியம்.அரிஸ்டாட்டிலை வியந்து பாராட்டுவது நாளுக்கு நாள் பெருகி மத்தியக் காலத்தின் இறுதியில் அவரைத் தெய்வமாகவே போற்றும் அளவுக்கு ஆர்வம் வளர்ந்தது. இவருடைய நூல்களே மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்துவதற்கு வழிகாட்டும் விளக்காகக் கருதாமல், அவரது நூல்களைக் கற்றாலே போதும், வேறு ஆராய்ச்சிகள் தேவையில்லை என்று கண்மூடித்தனமாகக் கருதும் அளவுக்கு அவருடைய நூல்களின் மீது அறிஞர்கள் பக்தி கொண்டனர். ஒவ்வொரு மனிதனும் தானே கூர்ந்து நோக்க வேண்டும்; தானே சிந்திக்க வேண்டும். என்று தமது எழுத்துகளில் எல்லாம் வலியுறுத்தியவர் அரிஸ்டாட்டில். அவர் தம் நூல்களின் மீது இத்தகைய கண்மூடித்தனமாக பக்தியைப் பிந்திய தலைமுறையினர் கொள்வதை விரும்பியிருக்க மாட்டார் என்பதில் ஐயமில்லை.

இன்றைய அளவுகோலின் படி நோக்கும் போது அரிஸ்டாட்டிலின் சில கொள்கைகள் மிகவும் பிற்போக்கானவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அடிமை முறையை அவர் ஆதரித்தார். அடிமை முறை இயற்கை விதிக்கு உட்பட்டது என்றார். பெண்கள் இயற்கையாகவே ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்று அவர் நம்பினார். (இவ்விரு கொள்கைகளும் அவர் காலத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தவையாகும்.) எனினும், அரிஸ்டாட்டிலின் வேறு பல கொள்கைகள் இன்றையச் சிந்தனைகளை விடவும் மிகவும் புரட்சிகரமானவையாக உள்ளன. உதாரணமாக, புரட்சியையும் குற்றத்தையும் பிறப்பிக்கும் தாய் வறுமை, பேரரசுகளின் தலைவிதி இளைஞர்கள் கல்வியறிவு பெறுவதைப் பொறுத்திருக்கிறது. என்னும் கருத்துகளை கூறலாம். (அரிஸ்டாட்டில் வாழ்ந்த காலத்தில் பொதுக் கல்வி முறை எதுவும் செயற் படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

கடந்த சில நூற்றாண்டுகளாக அரிஸ்டாட்டிலின் செல்வாக்கும் புகழும் கணிசமாகக் குறைந்துவிட்டன. ஆயினும், அவருடைய செல்வாக்கு மிகப் பரந்து பட்டதாகவும், நெடுங்காலம் நீடித்ததாக இருந்தமையால், இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கு முற்றிலும் தகுதியுடையவரேயாவார். இப்பட்டியலில் அவர் பெற்றுள்ள படிநிலையை அவர் பெற்றிருப்பதற்குக் காரணம், அவருக்கு முந்தி இடம் பெற்றுள்ள பதின்மூன்று பேரும் அவரை விட முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள் என்பது ஒன்றேயாகும்.



தத்துவ மேதை அரிஸ்டாட்டில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 27, 2010 5:18 pm

தத்துவ மேதை அரிஸ்டாட்டில் Icon_smile தத்துவ மேதை அரிஸ்டாட்டில் Icon_smile தத்துவ மேதை அரிஸ்டாட்டில் Icon_smile




தத்துவ மேதை அரிஸ்டாட்டில் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக