புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
37 Posts - 37%
heezulia
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
1 Post - 1%
mruthun
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
106 Posts - 44%
ayyasamy ram
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_m10தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 5:50 pm

மனிதனின் ஆசைக்கோ அளவில்லை. அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணைசெய்ய ஆசை. அது படிப்படியாக முன்னேறி வானிலும் மனிதனால் ஆணைசெய்ய முடிந்தது மட்டுமல்லாமல் இன்று சந்திர மண்டலத்திலும் செவ்வாய்மண்டலத்திலும் நான் முந்தி நீ முந்தி என வல்லரசுகள் ஆணை செய்ய முற்படும் காலம் வந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் அடுத்தவன் நாட்டுக்குள் அத்து மீறிப் புகுந்து ஏவகணை வீசி அந்நாட்டு மக்களையும் வளங்களையும் அழிக்கும் காலம் இதுவாகி விட்டது. ஆனாலும் அன்று தொட்டு இன்று வரை ஆசையென்பதை அறவே துறந்து தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து வாழுகின்ற பெருந்தகையோர் பலருண்டு. அத்தகைய பெருந்தகைகள் பல்லாயிரவர் இருப்பினும் நானறிந்தது ஆயிரத்தில் ஒருவர் என்ற கணக்கிலேயே, மலையளவிருப்பினும் தெரிந்தது கடுகளவே. தெரிந்ததையும் இடம் கருதிக் கூடியளவு சுருக்கமாகவே தர உள்ளேன்.

தம்நாட்டின், தம் இனத்தின் விடுதலைக்காய்த் தம்மை அர்ப்பணித்தவர்கள் பலர். தம்மொழிக்காக சமூக நலன்களுக்காக எனப் பல்வேறு விதங்களில் துறைகளில் தம்மை அர்ப்பணித்தவர்கள் எல்லா நாடுகளிலும் எல்லாக்காலங்களிலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்தச் சுகபோகங்களைத் துறந்தும் பல தியாகங்களைச் செய்தும் அரும் பெரும் பணி ஆற்றியிருக்கிறார்கள். இந்தியாவின் விடுதலைக்காய் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய மகாத்மாகாந்தி, யவகர்லால் நேரு, ராஜாஜி, வ.உ.சிதம்பரப்பிள்ளை போன்றவர்கள் தங்கள் உயர்ந்த பதவிகளைத் துறந்தே போராடினார்கள். அடி உதை பட்டு வருடக்கணக்கில் சிறையில் அடைபட்டிருந்தார்கள். கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். மனைவி மக்களைப் பிரிந்து வாழ்ந்து வேதனைப்பட்டார்கள். வீரபாண்டிய கட்ட பொம்மன் பகத் சிங் யான்சிராணி லக்சுமிபாய் போன்ற பல்லாயிரம் தேசத் தொண்டர்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்தார்கள். பிரெஞ்சு நாட்டின் விடுதலைக்காய் ஆங்கிலேயருடன் போர் செய்த யோன் ஒவ் ஆர்க் (Joan-of-Arch) கொடூரமுறையில் எரித்துக்கொல்லப்பட்டார். ஆமெரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைக்காய் உழைத்த மாட்டின் லூதர்கிங், அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கப்பாடுபட்ட ஜனாதிபதி ஏபிரகாம்லிங்கன், மகாத்மாகாந்தி, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி எனப் பலரும் இன மத வெறியாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தென்னாபிரிக்க மக்களின் இன விடுதலைக்காய்ப் போரிட்ட நெல்சன் மண்டேலா 27 வருடங்களைச் சிறையிலும், கிழக்குத்தீமோர் விடுதலைக்காய்ப் பாடுபட்ட எச்சானோ குஸ்மோ 7 வருடங்கள் இந்தோனேசிய சிறையிலும் வாடி வருந்தியே தங்கள் நாட்டின் விடுதலையைப் பெற்றார்கள். மக்களின் பெரும் ஆதரவையும் பெற்றுத் தங்கள் நாட்டுத் தலைமைப் பதவியையும் இவர்கள பெற்றார்கள்.

மக்களின் ஆத்மீக நலனுக்காக அறிவுரை புகட்டிய யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டார். ஆனாலும் அவர் போதித்த நல்லுரைகள் மக்களால் ஏற்கப்பட்டு கிறித்தவமதம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. சித்தார்த்தர் தன் அரசபதவியைத் துறந்து இளம் மனைவியையும் பச்சிளம் பாலகனையும் பிரிந்து பனியிலும் மழையிலும் காடுமேடெல்லாம் பல்லாண்டுகள் அலைந்து திரிந்த பின்பே ஞானம் பெற்றார். புத்தசமயத்தைப் பரப்பினார். அப்பர், சுந்தரர் என்று 63 நாயன்மார்களும், குலசேகராழ்வார் போன்ற 12 ஆழ்வார்களும், இராமகிருஸ்ணரும் சைவசமயமும், இந்துமதமும் தழைத்தோங்கப் பெரும்பணி புரிந்த பெரியார்கள். சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சிக்காகோ நகரிலே இந்துசமயப் பிரசங்கம் செய்து பல மதத்தவரின், இனத்தவரின் பெருமதிப்பைப் பெற்ற இளம்துறவியாவார். உலகின் பல பாகங்களிலும் இராமகிருஸ்ண மிசன் என்னும

நிறுவனம் தொண்டர்களால் நிர்வகிக்கப்பட்டு மக்களுக்கு அரும்பெரும் சேவையை ஆற்றிக் கொண்டிருப்பது பலராலும் மிகவும் போற்றப்படுகிறது. ஆண்கள் மட்டுமல்லாது அநேக பெண்களும் பல துறைகளிலும் தங்களை அரப்;பணித்துள்ளார்கள். அன்னை திரேசா, அன்னை கச்தூரிபாய், அன்னை சாரதாமணிதேவி, திருமதி ஆ. சுப்புலட்சுமி, புலொறன்ச் நைற்றிங்கேல் போன்ற இன்னும் பலர் நோயாளிகளைப் பராமரிப்பதிலும் அனாதைகள், வறியவர், முதியவர், சமூகத்தினால் ஒதுக்கப்பட்டோர் எனப் பல்லாயிரக்கணக்கானோருக்கு உள்ளத்தால், உடலால், நிதியால், அன்பால் ஆதரவு கொடுத்து அரவணைத்து அவர்களுக்காகத் தங்கள் பெரும் பொழுதை அரப்பணித்துள்ளனர்.

இலங்கையில் சிங்கள அரசின் ஆக்கிரமிப்பை, இராணுவ வன்முறைகளை எதிர்த்து நடத்திய ஈழப்போரில். ஆண் பெண் போராளிகள், தேசப்பற்றாளர்கள் எனப் பல்லாயிரம்பேர் மண்ணுக்கு வித்தாகி விட்டார்கள். அன்னை பூபதி தியாகி திலீபன் ஆகியோர் வன்முறையை எதிர்த்து உண்ணாவிரதமிருந்து சாத்வீகமுறையில் போராடித் தங்கள் இன்னுயிரை நீத்த தீயாகிகள். இன்னும் ஈழமண்ணின் விடுதலைக்காய் ஆயிரக்கணக்கான போராளிகள் தங்கள் சுகபோகங்களைத் துறந்து பெரும்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 5:50 pm

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். பலவித நோய்களுக்கான மருந்துகளையும் தடுப்பு முறைகளையும் நவீன சாதனங்களையும் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் சேவை போற்றப்பட வேண்டியது. வணங்குதற்குரியவர்கள் அவர்கள். எட்வேட் ஜென்னர், லூயி பாஸ்டர,; மேரி கிய+ரி அம்மையார,; வில்ஹெம் கோன்ரெட், அலெக்சாண்டர் பிளெமிங் போன்ற விஞ்ஞானிகள் மனிதரில் தெய்வமாக மதிக்கப்படவேண்டியவர்கள். பல வித நோய்களையும் முறிவுகள் போன்றவற்றையும் கண்டறிய உதவும். ஒ-றேயை ஐசாண்டன் கண்டுபிடித்ததாலும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் ரேடியத்தை மேரிகுயிரி அம்மை கண்டுபிடித்ததாலும் எத்தனை கோடி மக்களின் வாழ்வு நலமுறுகிறது! புவிஈர்ப்;பைக் கண்டு பிடித்த சேர். ஐசாக் நியூற்றனின் பணியும், பரிணாமவியல் விஞ்ஞானி டார்வினின் பணியும், யேம்ஸ் வாட் கண்டுபிடித்த நீராவி இயந்திரம், கிரகம்பெல்லின் தொலைபேசி, மார்க்கோனியின் வானொலியும் இன்னும் இதே போன்ற அனேக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களும் ஆத்மார்த்த பணிகளும் மனிதகுல மேம்பாட்டுக்கும் அன்றாட வாழ்வின் வசதிக்கும் மனச்சந்தோசத்துக்கும் வழிவகுத்துள்ளது. மேலைத்தேயங்களில் மட்டுமல்லாது இந்தியாவில் சேர். வி இராமன், கணிதவியல் மேதை ராமானுசம் போன்ற பலரும் பல அரும்பணிகள் ஆற்றியுள்ளார்கள். இந்தியாவின் பாதுகாப்புக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பலதிறமையான விஞ்ஞானிகளின் ஒத்துழைப்போடு இன்றைய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் உருவாக்கிய ‘திரிசூல்’ ‘பிருத்வி’ ‘அக்னி’ ஏவுகணைகள் மேற்குலக நாடுகளை வியப்புக்கும் பெரும் அதிர்சிக்கும் உள்ளாக்கியுள்ளதோடு ஆரம்பத்தில் ஆத்திரமடையவும் வைத்தது. தொழில் நுட்பத்தடை திணிக்கப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடுகள் கதிகலங்கின. இதை அவரே தனது சுயசரிதையில் கூறியுள்ளார். இன்றும் அவர் விஞ்ஞானத்துறை முன்னேற்றுத்திற்காகப் பணிபுரிகிறார். எம் தாய்மொழியாம் தமிழை வளர்க்கத் தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ஒளவைமூதாட்டியாரும் ஆற்றியபணி அனைவரும் அறிந்ததே. மக்கள் பண்புடன் நீதி நெறியுடன் சீரான வாழ்வு வாழ வழிவகை கூறியதோடு அரசர்கள் எவ்விதம் நீதி வழுவாமல் ஆட்சி புரிய வேண்டுமென்பதைச் சுருங்கச் சொல்லி மிகவும் தெளிவுடன் விளக்கியுள்ளார்.

திருவள்ளுவரின திருக்குறள் அனைத்துலக மக்களுக்கும் பொதுவான ஒரு நீதி நூல் என்பதால் அது பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வியாசர,; கம்பர,; இளங்கோ போன்ற பலர் சிறந்த காப்பியநூல்களை உலகுக்குத் தந்துள்ளார்கள். ஈழத்தில் ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர,; தாவூத் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்;சி மாநாட்டுக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளார் எனப் பலர் தமிழ் வளர்க்கப் பெரும்பணி புரிந்தவர்கள். திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ் வளரப் பெரும்பணி புரிந்த ஜி.யூ.போப் ஒரு ஐரோப்பியர். தமிழ் மீது கொண்ட அளவிலாப் பற்றுதலால் தனது பெயரையே வீரமாமுனிவர் என மாற்றித் தமிழ் மொழி வளர்சிக்காகப் பாடுபட்ட உத்தமர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்- பெயர் யோசப்பெஸ்கி. இப்படி இன்னும் பலவேற்று இனத்தவர் தமிழ்மொழியைக் கற்றது மட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைக் கற்று அதில் பாண்டித்தியம் பெற்றுத் தமிழ்மொழி வளர உதவியுள்ளனர். ரவீந்திரநாத்தாகூர், சுப்பிரமணியபாரதியார,; பாரதிதாசன் போன்றவர்களும் ஈழத்தில் குமாரசுவாமிப்புலவர,; சோமசுந்தரப்புலவர் இலங்கைத்தேசியகீதம் இயற்றிய ஆனந்தக்குமாரசுவாமி, காசி-ஆனந்தன், புதுவை-ரத்தினதுரை போன்றவர்களும் தங்கள் கருத்துச் செறிந்த நயம்மிகுந்த இனிய கவிதைகளால் நாட்டுப்பற்றை, சுதந்திரஉணர்வை, தீண்டாமை ஒழிப்பை மக்களுக்கு ஊட்டி எழுச்சியையும் மகிழ்சியையும் அள்ளிச் சொரிந்திருக்கிறார்கள். சேக்ச்பியர் டிக்கின்ச், ரோல்ச்;ரோய் போன்ற பல எழுத்தாளர்கள் அருமையான நாடகங்கள் நாவல்களை எழுதி அவர்களது நாட்டின் வளங்களை, வாழ்க்கை நெறிகளை, பண்பாடுகளை, சோகம் காதல்வீர உணர்வுகளின் தீவிரங்களைப் படம்போல் மனதில் பதியக்கூடிய முறையில் அழகிய நடையில் வர்ணித்துள்ளார்கள். பிளாட்டோ, அறிஸ்ரோட்டல், சோக்கிரட்டீஸ், கொன்பூசியஸ் போன்ற பல தத்துவமேதைகளின் போதனைகளால் உலக அரசியல் இலக்கியங்கள் மேம்பட்டுள்ளன. நவீனவசதிகள் ஏதுமில்லாத மரக்கலங்களில், மழையிலும் கடும்புயலிலும் காலவரையின்றித் திக்குத் தெரியாதகடலில் பசியும்பிணியும் வாட்டி எடுக்க, கூடப் பிரயாணம் செய்த மாலுமிகளின் கோபத்தையும் சகித்துக் கொண்டு பிரயாணம் செய்தே வாஸ்கொடகாமா, கொலம்பஸ், மார்க்கோ போலோ, மகலென,; யேம்ஸ் குக் போன்ற சிறந்த துணிவுமிக்க மாலுமிகள் வேற்றுநாடுகளுக்கான புதிய பயணவழிகளையும் அவுச்;திரேலியா அமெரிக்கா போன்ற கண்டங்களையும் கண்டறிந்தார்கள். இவர்களின் வேதனை மிகுந்த சாதனைகள் யாராலும் என்றுமே மெச்சப்படவேண்டியவை.

தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 5:51 pm

கண்ணைக்கவர்வதும், அழகு மிக்கதும் சாத்திர சமய விதிகளுக்கமைந்ததுமான ஓவியங்களைத் தீட்டிய ரவிவர்மாவும், இறுதிவிருந்து, மோனாலிசா போன்ற ஓவியங்களைப் படைத்த லியனார்டோ-டா-வின்சியும், சமாதானத்தின் சின்னமாக அமைதிப்புறாவை உருவாக்கிய பெருமையைப் பெற்ற 20ஆம் நூற்றாண்டின் ஓவிய மேதை நவீன ஓவியமேதை எனப் புழப்படுபவருமான பிக்காசோவும் ஓவியக்கலை மூலம் மக்களுக்குப் புத்துணர்சியையும் கலை ஆர்வத்தையும் அளித்து மகிழ்வித்திருக்கிறார்கள். இயற்கை அன்னையின் பலவித சீற்றங்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சமயங்களிலும் தீவிபத்து, சாலை விபத்து போன்ற அபாயங்கள் ஏற்படும்போதும் உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைய ஓடிவரும் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் பணியும் அவசரமருத்துவாகனப் (யுஅடிரடயnஉந) பணியும் அனைவராலும் போற்றப்படவேண்டிய உயிர்காக்கும் உன்னதபணி. தம் உயிரையே பணயம் வைத்தும் இரவுபகல் மழை பனி பாராதும் தியாக சிந்தனையுடன் செய்யும் பணி இவர்கள் பணி. இச்சேவையை ஆரம்பித்து வைத்த கென்றி டுனான்ற் என்ற சுவிற்சர்லாந்து நாட்டவரும் இப்போதும் எப்போதும் பணியில் ஈடுபடுவோரும் மிகவும் நன்றிக்குரிய சீலர்கள். மகத்தான சாதனைகளைப் படைக்கும் எல்லோரது தாரக மந்திரமும் மனித இனத்துக்கும் பிற உயிரினங்களுக்கும் ஏதோ ஒருவழியில் தங்கள் பணி உதவ வேண்டுமென்பதே. அவர்கள் தோல்விகளை எதிர்கொள்ளும் போது துவண்டு விடுவதும் இல்லை. வெற்றிகிட்டியபோது ஆரவாரிப்பதும் இல்லை. இவர்களின் வாழ்க்;கை என்றுமே பஞ்சணை மேல் படுத்துறங்குவது போல் இருப்பதுமில்லை. அனைத்துலக நாடுகளிலும் அன்று தொட்டு இன்று வரை பற்பல துறைகளிலும் அரும்பெரும் பணிகளை ஆற்றியவர் பலருண்டு.

அப்பெருந்தகைகளின் பணிகள் மக்கள் வாழ்வு சீரிய பண்புள்ள வாழ்வாக மகிழ்வான சுகமான வாழ்வாக அமைய உதவியது. சுதந்திரமாக சுயகௌரவத்துடன் வாழ வழிவகுத்தது. இவ்விதம் பணிபுரிந்து பிறரை வாழவைத்தவர்கள் பலரின் வாழ்வு, தான் உருகிப் பிறர்கு ஒளிகொடுக்கும் மெழுகுவரத்;தி போன்றதே ஆகும். ஆனால் அவர்கள் அதற்காக என்றுமே வருந்தியதுமில்லை. பணியைத் தொடரத் தயங்கியதுமில்லை. எல்லோராலும் பெரும் பணிகளைச் செய்ய முடியாது எல்லோரும் மகாத்மாகாந்தியாகவோ அன்னை தெரேசாவாகவோ தியாகி திலீபனாகவோ முடியாது. அவர்களின் பணி எங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. காலத்தால் அழியாதது. ஆனாலும் நாங்களும் இருந்தோம் இறந்தோம் என்றில்லாமல் எம்மால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்ய முன்வரவேண்டும். புலம் பெயர்ந்து வாழும் எம்மில் பலருக்கும் பலவிதப் பிரச்சினைகள் இருப்பது தெரிந்ததே. இருந்தும் எமது அடிப்படைத் தேவைகள் யாவும் கிடைக்கின்றது. ஆனால் எங்கள் தாய் மண்ணிலோ மக்கள் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் தனனும் கிடைக்காமல் தினம் தினம் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் போராடுகிறார்கள். அல்ல்கள் துன்பங்களே அவர்களின் வாழ்கையாகிவிட்டது. இருக்க வீடில்லை, தொழில் செய்ய வசதி இல்லை!! தொடர்ந்து நடந்த போரின் அனர்த்தங்களால் அனாதையான பிள்ளைகள், அனாதரவான முதியோர்கள், விதவைகள் அங்கவீPனர்கள் எனச் சீர்கெட்ட நிலை. இந்நிலவரத்தை நாம் உணர்ந்து எம் உறவுகளின் வாழ்வு மலர எம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும். இங்கு நாம் செய்யும் சிறு உதவிதானும் அங்கே பெரிதாய் உதவுமல்லவா.

அன்புள்ளங்களே சிந்திப்போமா? செயல் படுவோமா?

வானம் மழையை வழாது தருகுது
ஆவினம் பாலைப் பொழிந்து தருகுது
மரங்கள் மலரைக் கனியைத் தருகுது
மண் நெல்லை மணியைத் தருகுது
கடல் முத்தை உப்பைத் தருகுது
காற்றோ நாம்வாழ மூச்சைத் தருகுது.
வானும் மண்ணும் கடலும் காற்றும்
எல்லாம் தருவது யாருக்கு?

எல்லாம் எமக்கு மனிதர்க்கு!
எனவே மனிதர் நாங்கள்
இன்றே தருவோம் எம் உறவுக்கு
தேனைக் குடித்த வண்டு பறந்தது
மகிழ்வாய்த் தன்பசி மாறியதாலே - ஆனால்
தேனைக் கொடுத்தமலரோ மகிழ்ந்தது
மிகவாய் தான் சூல் கொண்டதாலே
நாங்களும் கொடுத்து மகிழ்வோம்.

தி. இந்திராணி

தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 27, 2010 5:58 pm

தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் 678642 தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெருந்தகைகள் 154550

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக