ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்த் தெழுகை

+8
ஹாசிம்
பிளேடு பக்கிரி
asksulthan
சபீர்
உதயசுதா
சிவா
மஞ்சுபாஷிணி
இரா.எட்வின்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty உயிர்த் தெழுகை

Post by இரா.எட்வின் Thu May 27, 2010 11:15 am

First topic message reminder :

உயிர்த்தெழுகை



எவ்வளவுதான் இனிமையாக ஒலித்தாலும் இப்போதெல்லாம் அலை பேசியின் அழைப்பொலியினை ரசிக்க முடிவதில்லை . எந்தக் கடன்காரனோ, எப்படித் திட்டப் போகிறானோ, என்ன சொல்லி சமாளிக்கப் போகிறோமோ என்று மனதுகிடந்து பதை பதைக்கிறது.

அழைப்பொலி கேட்டவுடன் எண்ணைப் பார்க்காமல் அலை பேசியை எடுத்து யாராவது பேசினால் ஒன்று அவன் கடனற்றவனாக இருக்க வேண்டும் அல்லது எதற்கும் பயப்படாதவனாக இருக்க வேண்டும்.

"அப்பா குளிக்கிறாங்க", "அப்பா செல்ல வச்சிட்டுப் போய்ட்டாங்க" இப்படி ஏதாவது சொல்லி கடன் காரர்களை சமாளிக்கப் பழக்கியிருக்கிறேன் பிள்ளைகளை.

"அம்மா, கடங்காரங்களுக்கு பயந்துகிட்டு அப்பா இருபத்தி நாலு மணி நேரமும் குளிச்சுகிட்டே இருக்கப் போறார், வேணாப் பாரேன்" பையனின் எள்ளல் இப்போதெல்லாம் எல்லையைத் தாண்டினாலும் இனிக்கவே செய்கிறது. ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கடன் ரசனையை மெருகு செய்திருக்கிறது.

பேப்பர்காரனுக்கு நான்கு மாத பாக்கி. காலையில் அவன் வரும் நேரம் பார்த்து டாய்லெட்டில் நுழைந்து கொள்வேன். இன்னும் மூன்று தெருக்களாவது போக வேண்டும் அவன். எனவே எனக்காக அவனால் காத்திருக்கஇயலாது. " சாரக் கொஞ்சம் கவனிக்க சொல்லுங்க" என்றபடி ஓடி விடுவான். இன்றுகாலை வரை இதுதான் வாடிக்கை.

சனிக் கிழமைகளில் நான் வீட்டில்தான் இருப்பேன் என்பதை தெரிந்துகொண்டு அன்று மதியம் வீட்டிற்கு வந்து விட்டான். ஏறத்தாழ விடாக் கண்டனாய்மாறியிருந்தான். என்ன சொல்லியும் நகர மறுத்தான். " அக்காட்ட இருக்கும் கொஞ்சம் வாங்கிக் கொடுங்க சார். இல்லாட்டி மேல் வீட்டிலாச்சும் கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொடுங்க சார்." என்று நச்சிக் கொண்டே நகர மறுத்தான்.

இந்த நேரம் பார்த்து உதவுகிறோம் என்று தெரியாமலேயே சரியாய் உதவிக்கு வந்தான் பையன். " அப்பா அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுன்னு "ப்ளாஷ்" ஓடுது, வந்து பாரேன்.

"அடுத்த புதன் வந்து வாங்கிக்கப்பா" பட படவென்று சொல்லிட்டு "ப்ளாஷ்"பார்க்கிற சாக்கில் உள்ளே ஓடினேன். போனானோ இல்லை அங்கேயே நின்றுமுனகிக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.

அக விலைப்படி எட்டு சதவிதம் உயர்த்தப் பட்டிருப்பதாய் "ப்ளாஷ்"ஷில்ஓடிக் கொண்டிருந்தது.



"டிஏ போட்டாச்சு. வந்து பாரேன் "விட்டு" உற்சாகத்தில் கத்தினேன்.

"என்ன வந்து என்னத்துக்கு ஆகப் போகுது. வானத்தையே வளச்சுக் கொடுத்தாலும் அடகு வச்ச தாலிக் கொடிய மட்டும் திருப்பித் தரப் போறதில்ல. கட்டைல போர வரைக்கும் இந்தக் கவரிங் செயினதான் கட்டிக்கிட்டு மாரடிக்கணும்னு ஆயிடுச்சு. பாசிப் படர்ந்த மாதிரி செயின்பட்ட இடமெல்லாம் பச்சப் பச்சையா , வெயில் நாளைல ஒரே எரிச்சலும் அரிப்பும்தான்... எல்லாம் என் தலை எழுத்து"

கூப்பிடக் கூடாத நேரத்தில் "விட்டு" வைக் கூப்பிட்டால் இப்படிவாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் இது ஒன்றும் புதிதல்ல என்பதோடு இது மாதிரி வாங்கி கட்டிக் கொள்ளாத மத்திய தர புருஷன்மார்கள் இருப்பார்கள் எனில் ஒன்று அவர்களுக்கு வேறு வருமானம் இருக்கும் அல்லது "தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு" என்று சுறுங்கி போன ரகமாக இருக்க வேண்டும். விடுங்கள், என்ன சொல்லி என்ன,வாங்க வேண்டியதை வாங்கியாகி விட்டது.

அப்பொது பார்த்துதான் அலை பேசியில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த மகள் "செல்வ பாண்டியன் மாமா லைன்ல இருக்காங்க. எங்க போயிருக்கீங்கன்னு சொல்லட்டும்?" என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள் .

" வர வர குட்டிப் பிசாசுக்கு குசும்பு ஜாஸ்தியாயிடுச்சு" மகளின் நக்கலை ரசித்த படியே அவளிடமிருந்து அலை பேசியை பிடுங்கினேன்.

அவரது அழைப்புக்காகத்தான் காத்திருந்தேன். அப்பாவை ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஒரு மாத காலமாகவே கொஞ்சம் கூடுதலான மன அழுத்தத்தோடு இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப் போன எனது அம்மா உயிரோடு வந்திருப்பதாகவும் அப்பாவை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவரை ஒரு ஜோசியக் கும்பல் அவரை உசுப்பி விட்டு அவரது ஓய்வூதியத்தில் பெரும் பகுதியை காலி செய்திருந்தனர்.

தம்பிதான் இதை முதலில் கண்டு பிடித்தான். அந்தக் கும்பலை விரட்டி விட்டு அப்பாவை மீட்டெடுத்து வருவதற்குள் அப்பாவின் மன நிலை மருத்துவர் தேவைப் படுமளவிற்கு பழுது பட்டிருந்தது.

அம்மா படத்திலிருந்த மாலையை கழற்றினார். ஏனென்று கேட்டால் " அவ உயிரோட வந்துட்டாடா" என்றார். சரியாகி விடும் என்றெண்ணி கவனிக்காமல் விட்டதன் விளைவை அனுபவிக்கத் தொடங்கியிருந்தோம்.



சாலையில் ஏதேனும் ஆட்டோ சத்தம் கேட்டுவிட்டால்கூட போதும் அம்மாவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்போடு எட்டிப் பார்க்க ஆரம் பித்தவர், நாளாக நாளாக பேரனை அழைத்து "தம்பி, அப்பாயிதானான்னு பாரு. அவளாயிருந்தா பையக் கொஞ்சம் தூக்கிட்டு வாடா பாவம்" என்று பிதற்றவே ஆரம்பித்து விட்டார்.

"அப்பாயி எங்க தாத்தா வெளிய போச்சு ஆட்டோல வரதுக்கு. அது பாட்டுக்குதோசை சுட்டுட்டு இருக்கு. பொலம்பாம தூங்கு தாத்தா" சலித்துக் கொள்கிறான் பையன்.

"இவள சொல்லலடா. ஒங்க பெரிய அப்பாயிய சொன்னேன்"

"அப்பாயி தாத்தாவ வந்து என்னன்னு கேளு. செத்துப் போன அப்பாயி கல்லறையிலிருந்து எழுந்து வருதாம். நீ கட்டிக்கிட்டதும் லூசு பெத்துப் போட்டதும் லூசு அப்பாயி"

" எம் மவன இன்னொருதரம் லூசுன்னு சொன்ன அப்படியே கொமட்லயே குத்தி தங்கண்டா ஏம் புள்ள"

"மகன சொன்னதும் அப்படியே பொத்துக்கிட்டு வருது பார்டா ஒங்க அப்பாயிக்கு. தங்கமாமே, அப்படி கிப்படி தங்கமா இருந்தாதான் பரவாயில்லையே அப்படியே தூக்கிட்டுப் போய் அந்த அறுபது கிலோவையும் அடகு வச்சுட்டு அந்த அருமத் தங்கம் வாங்கிவச்சிருக்க கடனையெல்லாம் அடச்சிருக்கலாமே"

"ஏம்மா அடகெல்லாம் வச்சுகிட்டு. பேசாம வித்துட்டே செட்டிலாயிருக்கலாமே."பையன் முடிக்கவும் அம்மா உட்பட எல்லோரும் சத்தமாய் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இப்படித்தான் அப்பாவை வார ஆரம்பித்து என்னில் வந்து முடியும் ஒவ்வொரு முறையும்.

செல்வ பாண்டியன் மருத்துவத் துறையில் இருப்பதால் அவரிடம் ஆலோசனை கேட்டிருந்தேன். அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நேரம் வாங்கிக் கொண்டு தெரிவிப்பதாக சொல்லியிருந்தார். அநேகமாக அதற்காகத்தானிருக்கும்.

அதற்கேதான்.

தான் மருத்துவர்.முருகன் கிளினிக்கில் இருப்பதாகவும், கிளினிக்கில் தற்போது கூட்டமே இல்லை என்றும் , ஆகவே இயலுமெனில் அப்பாவை உடனே அழைத்து வரும்படியும் சொன்னார்.

பி.பி செக் அப்பிற்கு என்று பொய் சொல்லி அப்பாவை அழைத்துக் கொண்டு கிளினிக்கிற்கு போனேன்.

கூட்டமில்லாத காரணத்தால் காத்திருக்கத் தேவையில்லாமல் போனது. மருத்துவரிடம் ஏற்கனவே செல்வபாண்டியன் எல்லாவற்றையும் சொல்லியிருந்த காரணத்தால் மருத்துவரிடம் பேசவும் தேவையற்றுப் போனது.

ஒரு சன்னமான புன்னகையோடு அப்பாவை வரவேற்றார் மருத்துவர்.



"உங்க பிறந்த நாள் என்னங்க சார்?" என்ற எளிய கேள்வியோடுதான் மருத்துவர் தொடங்கினார். அப்பாவின் தெளிவும் தமிழ்த் தேசிய அரசியலும் மருத்துவரோடு ஒத்திசைந்து போகவே இருவரும் நண்பர்களாய் மாறி நிறைய பேசினார்கள். நானும் செல்வபாண்டியனும் பார்வையாளர்களாய் மாறிப் போனோம்.

இறுதியாய் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

"மரித்தவர்கள் உயிரோடு வர இயலும் என நம்புகிறீர்களா?"

"நிச்சயமாய் இல்லை" என்ற அப்பா "ஆனா என்னோட வொய்ப்பை மீண்டும் உயிரோடு பார்த்ததாய் சொல்கிறார்கள்" என்றார்.

மருத்துவர் எதுவுமே பேசவில்லை. " பண்டியன், சாரை பக்கத்து ரூமுக்கு கூட்டிட்டு போய் பி.பி செக் பண்னுங்க" என்றவர் ஒரு புன்னகையோடு அப்பாவைவழி அனுப்பி வைத்தார்.

எழுந்த என்னை அமரச் செய்தார்.

" ஒன்னும் பயப்பட வேண்டாம். ஆறு மாசத்துல எல்லாம் சரி ஆகிவிடும். தொடர்ந்து மாத்திரைகளை கொடுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கூட்டிட்டு வாங்க. அதிகமா தூங்கினாலோ, அல்லது சரியா தூங்கலைன்னாலோ உடனே கூட்டிட்டு வந்திடுங்க."

ஒரு புன்னகையோடும் ஏராளமான நம்பிக்கையோடும் அப்பாவை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன்

அம்மாவிடமும் விட்டுவிடமும் விவரங்களை சொல்லி விட்டு வாங்கி வந்த வண்ண வண்ண மாத்திரைகளை டப்பாக்களில் கொட்டிக் கொண்டிருந்தேன். ஓடி வந்த மகள் கேட்டாள :

"இந்த மாத்திரை எதுக்குப்பா?"

"இது தாத்தாவுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்?"

"இது?" அடுத்த மாத்திரையைக் காட்டினாள்.

"இது தாத்தாவுக்கு மன அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும்"

" அப்படின்னா நீயும் சித்தப்பாவும் தாத்தாவுக்கு என்னத்ததான் கொடுப்பீங்க?":



......................................................................................






இந்தக் கதை "கல்கி" வார இதழில் வந்தது






..................................................................................................
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down


உயிர்த் தெழுகை - Page 2 Empty உயிர்த்தெழுகை

Post by இரா.எட்வின் Sat Jul 10, 2010 10:41 am

உதயசுதா wrote:அருமையான் கதை எட்வின். பகிர்வுக்கு நன்றி



நன்றி சுதா
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty Re: உயிர்த் தெழுகை

Post by சபீர் Sat Jul 10, 2010 11:05 am

மிகவும் அருமையன் பகிர்வு நன்றி அன்பு மலர்







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty Re: உயிர்த் தெழுகை

Post by asksulthan Sat Jul 10, 2010 11:20 am

அருமையான கதை,பகிர்வுக்கு நன்றி.


காதர் சுல்தான்
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty Re: உயிர்த் தெழுகை

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 11:59 am

உயிர்த் தெழுகை - Page 2 678642 உயிர்த் தெழுகை - Page 2 677196 உயிர்த் தெழுகை - Page 2 678642



உயிர்த் தெழுகை - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty Re: உயிர்த் தெழுகை

Post by ஹாசிம் Sat Jul 10, 2010 12:03 pm

அருமையான பகிர்வு


நேசமுடன் ஹாசிம்
உயிர்த் தெழுகை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty உயிர்த்தெழுகை

Post by இரா.எட்வின் Sat Jul 10, 2010 1:27 pm

சபீர் wrote:மிகவும் அருமையன் பகிர்வு நன்றி உயிர்த் தெழுகை - Page 2 154550




மிக்க நன்றி சபீர்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty உயிர்த்தெழுகை

Post by இரா.எட்வின் Sat Jul 10, 2010 1:28 pm

asksulthan wrote:அருமையான கதை,பகிர்வுக்கு நன்றி.

அன்ப்ற்கு நன்றி சுல்தான்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty உயிர்த்தெழுகை

Post by இரா.எட்வின் Sat Jul 10, 2010 1:29 pm

பிளேடு பக்கிரி wrote:உயிர்த் தெழுகை - Page 2 678642 உயிர்த் தெழுகை - Page 2 677196 உயிர்த் தெழுகை - Page 2 678642

நன்றி தோழர்.
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty உயிர்த்தெழுகை

Post by இரா.எட்வின் Sat Jul 10, 2010 1:31 pm

ஹாசிம் wrote:அருமையான பகிர்வு

நன்றி ஹாசிம்,

முழுமையான கறாரான விமர்சனம் வந்தால் மகிழ்வேன்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty Re: உயிர்த் தெழுகை

Post by tdrajeswaran Mon Aug 09, 2010 4:27 pm

நண்பரே, இப்போதுதான் படித்தேன். ஒவ்வொரு கட்டுரையிலும்/கதையிலும் ஒரு மனித நேயத்தை/உணர்வை வெளிப்படுத்தி அழகாக சொல்கிறீர்கள். மனதை தொட்டது. வாழ்த்துக்கள்.
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

உயிர்த் தெழுகை - Page 2 Empty Re: உயிர்த் தெழுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum