ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

2 posters

Go down

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) Empty முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

Post by சபீர் Thu May 27, 2010 10:53 am


முதுகில் வளைவை ஏற்படுத்தும்
முள்ளந்தண்டின் அழற்சி (
Ankylosing spondylitis)



இது உடலில் நாரி மற்றும் இடுப்பு பகுதிகளையும் முள்ளந்தண்டையும்
பாதிக்கின்ற நீண்ட காலத்திற்குரிய
அழற்சியால் ஏற்படும் மூட்டுவாதமாகும்.
இதன்போது உடலின் அச்சின் கட்டமைப்பை
ஏற்படுத்துகின்ற வன்கூட்டுத் தொகுதியானது
கடினத்தன்மையடைந்து என்புகளும் ஒன்றுடன்
ஒன்று இணையும்.



இந்நோயானது 20-30 வயதுள்ளோரில்
அதிகளவு ஏற்படுவதுடன் ஆண்களில் பெண்களை
விட 3 மடங்கு அதிகளவில்
இந்நோயானது

ஏற்படுகிறது. ஐரோப்பாவில் 90%க்கும் மேலான இந்நோயாளிகளில் HLA 27 எனப்படும் மரபணுவானது காணப்படுகிறது.



இந்நோயானது ஏற்படுவதற்கான காரணமானது அறியப்படாத போதிலும் இவர்களில்
கிளெப்சியலா எனப்படும் பக்டீரியாவனது
மலத்தில் அதிகளவில் காணப்படுவதுடன் இது
இந்நோயின் மூட்டு மற்றும் கண் பாதிப்புகள்
அதிகரிக்கும்
சந்தர்ப்பங்களுக்குரிய காரணமாக இருக்கலாம்.




இந்நோயின் குணங்குறிகள்



இந்நோயானது மிக மெதுவாகவே ஆரம்பிக்கிறது. இதன் அறிகுறிகள் பல மாதங்கள்
அல்லது வருடங்களில் சிறிது சிறிதாக
ஏற்படலாம்.



இவர்களில் அடிக்கடி முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் வலியானது ஏற்படும்.
அத்துடன் முதுகுத்தண்டானது
விறைப்பான நிலையை அடையும். இந்தவலியானது
தொடைகளின் பின்புறத்திற்கும் பரவிச்
செல்லவாம். இந்த அறிகுறிகள் பொதுவாக சமச்சீராக
ஏற்படுவதுடன் உடலின் இரு
புறங்களையும் பாதிக்கும். அறிகுறிகள் காலைவேளையில்
மிகஅதிகளவில் உள்ளதுடன் ஓய்வின்
பின்பும் அதிகம் காணப்படும். சிறிதளவு
உடற்செயற்பாட்டின் பின்னர் வலியானது குறையும்
சிலரில் நெஞ்சு
மற்றும் கழுத்துப்பகுதிகளில் அதிகளவு வலியானது காணப்படும். நோயான
முள்ளந்தண்டானது
விறைப்புத்தன்மை அடைவதனால் காலப்போக்கில் என்புத்தேய்வு என்பு
முறிவு
ஆகியன ஏற்படும். சிலவேளைகளில் முள்ளந்தண்டு முறிவால் முண்ணாலும்
பாதிப்பிற்குட்படலாம்.



நெஞ்சிலுள்ள விலாவென்புகளிலும் அழற்சி ஏற்படுவதால் வலி ஏற்பட்டு
சுவாசிப்பதிலும் சிரமம்
ஏற்படலாம். உடற்களைப்பானது அழற்சித் தாக்கங்கள் மற்றும்
வலியால் தூக்கமின்மை
போன்றவற்றால் ஏற்படலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) Empty Re: முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

Post by சபீர் Thu May 27, 2010 10:56 am


முதுகில் வளைவை ஏற்படுத்தும்
முள்ளந்தண்டின் அழற்சி (
Ankylosing
spondylitis)
குணங்குறிகள்



இவர்களில் என்புகளின் மேற்புறத்தில் வலியானது காணப்படுவதுடன்
என்பும் இணையல்களும். இணையும் இடங்களிலும்
அழற்சியானது
ஏற்படும்.

40%. நோயாளிகளில்
மூட்டுகளை தவிர்ந்த ஏனைய உடற்பாகங்களும்
பாதிக்கப்படும் இவை பொதுவாக சமச்சீரற்ற
முறையில் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டும்
பாதிக்கலாம். பொதுவாக கணுக்கால் இடுப்பு
முழங்கால் தோள்கள் ஆகியன பாதிக்கப்படும்.




கண்களின் கதிராளி போன்ற பாகங்கள் சடுதியான அழற்சிக்கு உட்படலாம்.
இது
25% நோயாளிகளில் ஏற்படும். சிலவேளை இது மூட்டுப்பாதிப்பிற்கு
முன்னரும் ஆரம்பிக்கலாம். இவ்வாறே இதயத்தின் தொகுதிப்
பெருநாடி வால்வுப்
பாதிப்பு இருகூர் வாழ்வுப் பாதிப்பு இதயத்தின் கணத்தாக்க கடத்தல்
பாதிப்பு
இதய சுற்றுச்சுவர் அழற்சி நுரையீரல்களின் உச்சிப்பகுதி நார்த்தன்மை அடைதல்
ஆகியன
ஏற்படலாம்.





பரிசோதனைகள்



இவர்களில் செங்குழியப் படிவு வீதம் (ESR) - விளைவுப் புரதம் (CRP) ஆகியவற்றின் அளவுகள்
அதிகரித்துக் காணப்படும். அவ்வாறே ருமற்றொயிட் காரணியானது மிகவும்
குறைந்தளவிலேயே
காணப்படும்.





இந்நோய்க்கான உறுதியான சான்றானது என்புகளின் எக்ஸ் கதிர்ப்படங்கள்
மூலம் பெறப்பட்டாலும் இந்த என்பு
மாற்றங்கள் ஏற்பட பல வருடங்கள் செல்லலாம்.
இடுப்புபகுதியின் என்புகளில் ஏற்படும்
அழற்சியே எக்ஸ்கதிர்ப்படங்களில் முதலாவதாகத்
தென்படும் மாற்றமாகும்.
முள்ளந்தண்டானது பல்வேறு என்பு மாற்றங்களை காட்டுவதுடன்
முன்னந்தண்டின் உள்வளைவுகள்
அகற்றப்பட்டு முள்ளந்தண்டானது மூங்கில்
போன்று தென்படும்.




சிகிச்சை

வலி மற்றும் விளைப்புத்தன்மை ஆகியன குறைதலும் வன்கூட்டுத் தொகுதி இயலுமான
அளவிற்கு அசையக்கூடியதாக இருத்தலுமே
சிகிச்சையின் நோக்கங்களாகும். இதன்பொருட்டு
நோயாளிக்கு நோய் தொடர்பாக
அறிவூட்டல் உடற்பயிற்சிகள் போன்றன பழக்கப்படலாம். அத்துடன் வலி
நிவாரணிகளும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து வழங்கப்படலாம்.
கண்களின்
அழற்சியானது ஸ்பீரொய்ட் மருந்துகள் மூலம் குறைக்கப்படலாம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) Empty Re: முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

Post by சபீர் Thu May 27, 2010 10:56 am

குருதியில்யூரிக்அமிலம்அதிகரித்தல் (GOUT)
இதன் போது குருதியில் நைதரசன் கழிவுகளுள் ஒன்றான யூரிக் அமிலமானது அதிகரித்துக் காணப்படும். இதன் போது யூரிக் அமிலத்தின் சேதனச் சேர்வைகள் பளிங்குகளாக மாறி மூட்டுக்கள், கசியிழையங்கள், இணையம், மற்றும் இழையங்களைச் சுற்றிப் படியும்.
இதன் போது சடுதியான மூட்டுவாதமானது உருவாகிறது. இது நீண்டகால மூட்டுவாத நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

இந் நோயானது எதிர்பாராத விதமாக திடீரென எரியும் வலி,
வீக்கம், சிவத்தல், வெப்பம், இறுக்கமான தன்மை என்பவற்றைப் பாதங்களில் ஏற்படுத்தும். இது பொதுவாக ஆண்களில் பாதங்களில் ஏற்படும். எனினும் பெண்களும் பாதிக்கப்படலாம். காய்ச்சலும் ஏற்படலாம். அத்துடன் நோயாளியின் மூட்டுகளில் பளிங்குகள் படிவதனால் ஏற்படும் தீவிரமான வேதனையுடன் மூட்டைச் சுற்றி ஏற்படும் அழற்சியால் வீக்கம் உற்ற பகுதிகளும் மிகவும் வேதனையை உருவாக்கும். உதாரணமாக சிறிய தொடுகையும் பெருமளவு வலியை உருவாக்கும்.
GOUT
கௌட் நோயானது 75% ஆன சந்தர்ப்பங்களில் காலின் பெருவிரலைத் தாக்கும். அத்துடன் இது ஏனைய மூட்டுக்களையும் பாதிக்கும். உதாரணமாக கணுக்கால், பாதம், முழங்கால், முழங்கை, விரல்கள், முதுகுத் தண்டு ஆகியன பாதிக்கப்படலாம். சில வேளைகளில் முன்பு காயங்களால் பாதிக்கப்பட்ட விரல் மூட்டுக்கள் இதனால் பாதிக்கப்படலாம்.

நீண்டகாலமாக குருதியில் அதிகரித்தளவு யூரிக் அமிலம் ஆனது காணப்படும் நபர்களில் காது மடல்களில் இவை பளிங்காகப் படியலாம். அத்துடன் சிறுநீரில் காணப்படும் அதிகளவு யூரிக் அமிலப் பளிங்குகள் சிறுநீரகக் கற்கள்,
சிறுநீர்ப்பை கற்கள் என்பவற்றையும் ஏற்படுத்தலாம்.

எனினும் அதிகளவு யூரிக் அமிலத்தை குருதியில் கொண்ட அனைவருக்கும் இந்த வாதமானது ஏற்படுவதில்லை. இந்த மூட்டுவாதமானது யூரிக் அமில மட்டமானது சாதாரண அளவில் அல்லது குறைந்து காணப்படும் வேளையிலும் ஏற்படலாம்.

சிறுநீரானது அதிக அளவில் அமிலத்தன்மையாக காணப்படலானது யூரிக் அமிலத்தாலான கற்கள் உருவாக வழிவகுக்கும்.


Last edited by சபீர் on Thu May 27, 2010 10:59 am; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) Empty Re: முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

Post by சபீர் Thu May 27, 2010 10:57 am

கௌட்நோயின்வகைகள்
முதல்நிலைகௌட்

குருதியில் யூரிக் அமிலத்தின் அளவானது பியூரின் வகையான சேதனப் பதார்த்தங்களைக் கொண்ட உணவுகளை அதிகளவில் உண்பதால் ஏற்படுகிறது. அத்துடன் உடலானது சில வேளை அதிக அளவில் யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்வதுடன் சில வேளைகளில் சிறுநீரகங்களால் இந்த கழிவுப் பொருளை விரைவாக உடலில் இருந்து அகற்ற முடியாமல் போகலாம். சிலரில் குடும்பத்தில் யூரிக் அமிலம் அதிக அளவில் காணப்படுபவர்கள் இருப்பின் இந் நோயானது அனுசேப வழிப் பாதைகளின் குறைபாடு காரணமாக சந்ததிகளுக்கு கடத்தப்படலாம்.

கௌட் நோயானது பொதுவாக அதிக அளவு உணவு உண்பவர்களைத் தாக்கும். இது செல்வந்தர்களின் நோயென அழைக்கப்படும். அதிக அளவில் மதுபானம் அருந்தி, கடல் உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு இந் நோய் ஏற்படலாம். எனினும் எல்ல பொருளாதார மட்டங்களில் உள்ளவர்களிலும் இந் நோய் ஏற்படும் சாத்தியம் உள்ளது. உற்சாகமற்ற வாழ்க்கை முறையும் இந்நோய் ஏற்பட வழி வகுக்கும். சில வேளைகளில் சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களிலும் இந் நோயானது ஏற்படலாம்.

தையேசைட்டுக்கள் எனப்படும் வகைக்குரிய மருந்துகள் இந் நோய் ஏற்படுத்துவதை துரிதப்படுத்தலாம்.

வேறுகாரணங்களால்ஏற்படும்கௌட்


இது ஏனைய மருத்துவ ரீதியான நோய் நிலைகளின் சிக்கலால் ஏற்படும்.

இவை உயர் குருதி அமுக்கம், சலரோகம், குருதியில் அதிகளவு இரத்தக் கொழுப்புக் காணப்படல், உடற் பருமன் அதிகரிப்பு, இதய நோய்கள் ஆகியன இதற்கு வழிவகுக்கும்.
அத்துடன் இரத்தப் புற்றுநோய், குருதியில் உள்ள கலவகைகளின் அதிகரிப்பு, புற்றுநோய்க்கான மருந்துகள், அதிக உடல் எடை,
சலரோகம், சிறுநீரக நோய்கள்,
செங்குழிய அழிவு போன்றனவும் இதற்கு இட்டுச் செல்லும்.

அங்க மாற்றுச் சிகிச்சைக்கு உட்படும் நோயாளரிலும் இது
அதிக அளவு
ஏற்படும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) Empty Re: முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

Post by சபீர் Thu May 27, 2010 10:58 am

குருதியில் யூரிக் அமிலம் அதிகரித்தல் / கௌட் நோய்க்குரிய பரிசோதனைகள்





கௌட் நோயானது நோயின் குணங்குறிகள் மூலம் மாத்திரம் ஏனைய மூட்டுவாத நோய்களில் இருந்து பிரித்து அறியப்பட முடியாது. எனவே இதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதிலும் குறிப்பாக மேட்டுக்களில் கல்சியம் பைரோபொஸ்பேற் ஆனது படிவடைதல் யூரிக் அமிலப் படிவை ஒத்த குணங்குறிகளைக் காட்டலாம்.





மிகவும் பிரயோசமான குணங்குறிகளாவன காற்பெருவிரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் காது மடல் பாதிப்பு என்பனவாகும். இவற்றுடன் குருதியில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவானது அளவிடப்படலாம். இதன் போது
420
mmol / lக்கு அதிகமாகக் காணப்படின் (பெண்களில் >mol/ lm380 ) இந் நோயானது சந்தேகிக்கப்படலாம்.


அத்துடன் இந்தக் கல எண்ணிக்கை, கனியுப்புக்களின் மட்டங்கள், சிறுநீரக தொழிற்பாடு, தைரொயிட் சுரப்பியின் தொழிற்பாடு, செங்குழியப் படிவு வீதம் ஆகியன அளவிடப்படலாம். இந்தப் பரிசோதனை முடிவுகள் மூலம் ஏனைய மூட்டுவாதமானது இல்லை என உறுதிப்படுத்தப்படலாம்.


கழியொலி ஸ்கான் பரிசோதனை மூலம் மூட்டுக்களின் கசியிழையம், மற்றும் மூட்டுக்களின் அகவணி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகள் அறியப்படலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) Empty Re: முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

Post by சபீர் Thu May 27, 2010 11:00 am

நோய்க்கானசிகிச்சை
இது
3
முக்கிய விடயங்களை உள்ளடக்கிறது. இவை

திடீர் மூட்டு வாதத்தை கட்டுப்படுத்தல்,
மேலும் இத்தகையவை ஏற்படுவதை தடுத்தல்,

மற்றும் குருதியில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைத்தல்
என்பனவாகும்.

நோயாளிகளுக்கு பெரும்பாலும் அலோபியூரினோல் போன்ற மருந்துகள் வழங்கப்படும். இவை பியூரின்களில் இருந்து யூரிக் அமிலமானது உருவாவதைத் தடுக்கும். இதன் மூலம் பியூரின்கள் பாதகமற்ற விதத்தில் மலம் மற்றும் சிறுநீருடன் கழிக்கப்படும்.
இவற்றுடன் ப்ரொபனசிட் போன்ற மருந்துகள் யூரிக் அமிலமானது சிறுநீருடன் வெளியேறும் அளவை அதிகரிப்பதற்காக வழங்கப்படும். எனினும் இம் மருந்தின் பக்க விளைவுகள் காரணமாக இது பொதுவாக கௌட் நோய்க்கான சிகிச்சைக்கு இரண்டாம் தர மருந்தாகவே வழங்கப்படும். அலோபியூரினோல் மருந்தானது குணங்குறிகளைக் குறைக்காத பட்சத்தில் ப்ரொபெனசிட்
மருந்தானது
வழங்கப்படும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) Empty Re: முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

Post by மஞ்சுபாஷிணி Thu May 27, 2010 11:15 am

முதுகுத்தண்டு எலும்பு தேய்மானம் இன்றும் நிறைய பெண்களுக்கு நான் காண்பதுண்டு சபீர்...

உண்மையே ஆண்களை விட இந்நோய் அதிகம் பெண்களை தாக்குகிறது அதுவும் 30 வயசு ஆகிவிட்டாலே எலும்பு தேய்மானம் தொடங்கி விடுகிறது...

அருமையான விஷயங்கள் எல்லோருக்கும் பயன் தரும் கட்டுரை இது சபீர்...

அன்புநன்றிகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) Empty Re: முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

Post by சபீர் Tue Jun 01, 2010 8:36 pm

மஞ்சுபாஷிணி wrote:முதுகுத்தண்டு எலும்பு தேய்மானம் இன்றும் நிறைய பெண்களுக்கு நான் காண்பதுண்டு சபீர்...

உண்மையே ஆண்களை விட இந்நோய் அதிகம் பெண்களை தாக்குகிறது அதுவும் 30 வயசு ஆகிவிட்டாலே எலும்பு தேய்மானம் தொடங்கி விடுகிறது...

அருமையான விஷயங்கள் எல்லோருக்கும் பயன் தரும் கட்டுரை இது சபீர்...

அன்புநன்றிகள்...

உங்கள் அருமையான அழகான பின்னுாட்டம் எனக்கு இன்னும் ஊக்கத்தைகொடுத்துள்ளது மகிழ்ச்சி அக்கா முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) 154550 முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) 678642 முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) 154550 முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) 678642 முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis) Empty Re: முதுகில் வளைவை ஏற்படுத்தும் முள்ளந்தண்டின் அழற்சி (Ankylosing spondylitis)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum