புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
79 Posts - 68%
heezulia
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
3 Posts - 3%
prajai
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
2 Posts - 2%
nahoor
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
133 Posts - 75%
heezulia
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
8 Posts - 4%
prajai
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
3 Posts - 2%
Barushree
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
1 Post - 1%
nahoor
இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_m10இயந்திர'மாணவர்கள்'....!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயந்திர'மாணவர்கள்'....!!!


   
   
sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Sat May 22, 2010 6:22 pm

னியார் மருத்துவமனை ஒன்றின் அவசரப்பிரிவில் மயக்கமாய் படுத்திருந்த மாலதியைப் பார்க்கப் பார்க்க....பரத்துக்கு கோபம்தான் வந்தது. நல்லா இருக்கிற உடம்பை இப்படித் தேவையில்லாம டென்ஷன் பட்டுக் கெடுத்துக்கிட்டாளே என்ற ஆத்திரமிருந்தாலும், அருகில் அமர்ந்து ஆதரவாய் தலைக் கோதிக்கொண்டிருந்தார்.

டாக்டர் வருவதைப் பார்த்ததும், படுக்கையைவிட்டு மெள்ள எழுந்தார்.

"இட்ஸ் ஓக்கே பரத் உக்காந்துக்குங்க. இன்னொரு ட்டூ அவர்ஸ்தான்...நார்மலாயிடுவாங்க. வீட்டுக்குப் போயிடலாம். டேப்லெட்ஸ் எழுதித் தரேன் த்ரீ டேஸ்க்கு சாப்பிடச் சொல்லுங்க...முக்கியமா...அனாவசியமா டென்ஷன் ஆக வேண்டான்னு சொல்லுங்க. இந்தமாதிரி இன்னொரு முறை பிபி ஹை ஆச்சுன்னா....டேஞ்சராக்கூட ஆகலாம். பீ கேர்ஃபுல். அது சரி, ஆஸ் எ ஃபேமிலி டாக்டர்...எனக்குத் தெரிஞ்சு உங்க வைஃபுக்கு ஹைப்பர் டென்ஷன் ஹிஸ்டரி இல்லையே...இப்ப ஏன் திடீர்ன்னு இந்த மாதிரி ஆச்சு...?

லேசாக சிரித்துக்கொண்டே,

"பத்தாவது படிக்கிற குழந்தைங்க இருக்கிற எல்லா அம்மாக்களுக்கும் இருக்கிற வியாதிதான் டாக்டர்"

"ஓ...ஐ அன்டர்ஸ்டேன்ட்...தேவையில்லாம ஏன் இப்படி டென்ஷனாக்கிக்கறாங்களோ..."

அவரும் சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார். மாலதியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பரத்துக்கு...சசி ஒன்பதாவது படிக்கும்போதிலிருந்தே மாலதிக்கு ஆரம்பித்த அந்த கவலையை நினைத்துப் பார்த்தார்.

சசி ஒன்பதாவது படிக்கும்போதே அவர்கள் பள்ளியில் பாதி வருடத்துக்குள் 9 ஆம் வகுப்பு பாடங்களை முடித்துவிட்டு, 10 ஆம் வகுப்புப் பாடங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வருடத்து கோடை விடுமுறையைக் கூட 15 நாட்களாகக் குறைத்துவிட்டு சிறப்பு வகுப்புக்கு வரவழைத்தார்கள். 10 ஆம் வகுப்புத் தொடங்கியதிலிருந்தே நாள் தவறாமல், ஏழு மணிவரை வகுப்பு எடுத்து, வாரத்துக்கு மூன்று முறை சைக்கிளிக் டெஸ்ட், வீட்டுப்பாடம், அஸைன்மென்ட்ஸ் எனப் படுத்தி எடுத்தார்கள்.
பரத்துக்கு சரியான கோபம். எதற்காகப் பிள்ளைகளை இப்படி போட்டுக் கசக்கிப் பிழிகிறார்களென்று. சசி படிக்கும் பள்ளிக்குக் கூடப் போய் அவர்களிடம் சண்டை போட்டார். அவர்களும்...

"எங்க ஸ்கூலோட ரிசல்ட்டுக்கு மாத்திரம் இல்லைங்க...பேரண்ட்ஸும் இதைத்தான் எதிர்பாக்கறாங்க. நீங்கதான் இப்படி சொல்றீங்க. வேணுன்னா...உங்கப் பொண்ணை மட்டும் ஸ்கூல் விட்டதும் நாலு மணிக்கெல்லாம் கூட்டிட்டுப் போயிடுங்க. ஆனா ரிசல்ட், மார்க்ஸ் எப்படியிருந்தாலும் நாங்கதான் பொறுப்புன்னு எழுதிக் குடுத்துடுங்க"

என்று சொன்னார்கள். யோசித்துச் சொல்வதாய் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து மாலதியிடம் சொன்னார்.

"உங்களை யார் அங்க போய் சண்டை போடச் சொன்னது. இதை மனசுல வெச்சிக்கிட்டு அவங்க சசியை டல் ஸ்டூடண்ட் கிளாஸுக்கு மாத்திட்டாங்கன்னா...எனக்குத்தான் அவமானம்...இப்பவே லாஸ்ட் மூணு சைக்ளிக் டெஸ்ட்ல கம்மியா மார்க் வாங்கியிருக்கா...நானே மேத்ஸுக்கு தனியா ட்யூஷன் வெக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்...இப்பப்போய் அவளை சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொல்லி சொல்றீங்களே.....உங்களுக்கென்ன...கொஞ்சம் உக்காந்து சொல்லிக் குடுங்கன்னா...இவ்ளோ கஷ்டப்படறதே போதும்...நான் வேறக் கஷ்டப்படுத்தனுமான்னு சொல்றீங்க. எல்லாத்தையும் நானே பாக்க வேண்டியிருக்கு..."

புலம்பத்தொடங்கிவிட்டாள்...

அடுத்த வாரத்து கணக்குத் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டாளென்று, அதே நகரத்தின் மற்றொரு தனியார்ப் பள்ளியின் கணக்கு ஆசிரியை ஒருவரிடம் சசியை ட்யூஷனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டாள். மாலை ஏழரையிலிருந்து ஒன்பதுவரை. சசி திரும்பி வரும்போதே தூக்கத்தைக் கண்கள் நிறைய சுமந்துவருவாள். அப்படியும் மாலதி விட மாட்டாள். அவசர அவசரமாய் அவளைச் சாப்பிடச் சொல்லிவிட்டு மீண்டும் பதினொரு மணிவரை படிக்க வைப்பாள்.

இடையிடையே கேள்விக் கேட்டு, ஒப்பிக்கச் சொல்லுவாள். தூங்கிவிழுந்தால் கையிலுள்ள ஸ்கேலால் பட்டென்று அடிப்பாள். காலை நாலரைக்கே அலாரம் வைத்து...சசியை எழுப்பிவிடுவாள். 'இன்னும் ஃபைவ் மினிட்ஸும்மா...ப்ளீஸ்.....' சசியின் கெஞ்சலுக்கு காது கொடுக்கவே மாட்டாள். ஆனால் அதே சமயம், அவளும் சசியுடனே எழுந்து, அவளுக்கு காஃபி வைத்துக் கொடுத்துவிட்டு அருகிலேயே இருப்பாள். சமையலறையில் வேலையிலிருந்தாலும், கவனம் மொத்தமும், சசியின் மீதே இருக்கும்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் பரத், மாலதியைக் கடுமையாய்க் கண்டித்துவிட்டார்.

"இங்க பாரு மாலதி...திஸ் ஈஸ் ட்டூ மச். சின்னப்பொண்ணு பாவம்...அவளைப் போட்டு ஏன் இப்படி பிழிஞ்சி எடுக்கிற.. அவ போக்குல விட்டுடு...எவ்ளோ மார்க் வாங்கறாளோ வாங்கட்டும்...."

"உங்களுக்கென்ன சாதாரணமாச் சொல்லிட்டீங்க. வசுந்தரா அவங்கப் பொண்ணு 89 பர்சென்ட் வாங்கியும், வித்யா மந்திர்ல இடம் கிடைக்கறதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டிருக்காங்க. இப்ப பாருங்க..ப்ளஸ் ட்டூல டிஸ்ட்ரிக் ஃபர்ஸ்ட் வாங்கியிருக்கா....அவ்ளோ இல்லன்னாலும்...ஒரு 85 பர்சென்ட்டாவது எடுத்தாத்தானே இவளுக்கும் ப்ளஸ் ட்டூல நல்ல ஸ்கூல்ல அட்மிஷன் கிடைக்கும்...இவளை விட நாலைஞ்சு ரேங்க் கம்மியா வாங்கிட்டிருந்தா அந்த டயானாப் பொண்ணு...இப்ப ஃபர்ஸ்ட் த்ரீக் குள்ள எடுக்குறா... இவ நைன்த் ரேங்க்...இப்பப் போய் இவ போக்குல விட்டா...அவ்ளோதான்...60 கூட தாண்ட மாட்டா..."

"மாலதி நீ சொல்றதப் பாத்து சிரிக்கறதா அழறதான்னுத் தெரியல...அவங்கப் பொண்ணு இவ்ளோ வாங்கினா...இவங்கப் பொண்ணு அவ்ளோ வாங்கினான்னு கம்பேர் பண்றதையும், அவங்கள மாதிரியே இவளும் மார்க் வாங்கனுன்னு எதிர்பாக்கறதையும் மொதல்ல விடு. நம்மப் பொண்ணு வாங்கற மார்க்குக்கு என்ன படிப்பு படிக்க முடியுதோ படிக்கட்டும்."

"என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சிதான் பேசறீங்களா?..இப்ப இருக்கிற காம்ப்படெடிவ் உலகத்துல...எவ்ளோ மார்க் வாங்கறாளோ வாங்கட்டுன்னு சர்வ சாதாரணமா சொல்றீங்க....இப்ப நல்லா படிச்சாத்தான்...ப்ளஸ் ட்டூக்கு நல்ல ஸ்கூல் கிடைக்கும், அதுல நல்லா ஸ்கோர் பண்னாத்தான்...எஞ்சினியரிங்கோ, மெடிக்கல்லோ கிடைக்கும்...இல்லன்னா...வெறும் பி.ஏ வோ..பி.காமோ தான் பண்ணனும்"

"கடவுளேக் கடவுளே....ஏன் இப்படி எல்லாரும் எஞ்சினியரிங், மெடிக்கல்ன்னு அலையறீங்க...? அது மட்டும்தான் படிப்பா...மத்ததெல்லாம் படிப்பில்லையா...சரி...அது இருக்கட்டும்....இப்ப நீ சொல்ற மாதிரி, பத்தாவதுல, ப்ளஸ் ட்டூல எல்லாம் ஒவ்வொரு வருஷமும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கறாங்களே....அவங்கள்லாம் இப்ப என்ன செய்யறாங்கன்னு தெரியுமா..? வெறும் பணம் சம்பாதிக்கிற மெஷினாத்தான் இருக்காங்க. அன்னைக்கு பத்திரிக்கையில முதல் பக்கத்துல செய்தியா வந்தவங்க...இன்னைக்கு வரிவிளம்பர அளவுக்குக் கூட மீடியாவுல இல்ல...ஆனா...படிக்கறப்போ யார்ன்னு தெரியாதவங்கள்லாம்...இன்னைக்கு சாதனையாளர்கள்ன்னு...உலகம் பூரா இருக்கிற பத்திரிக்கையில முதல் பக்கத்துல வராங்க...அப்ப என்ன அர்த்தம்? மார்க் வாங்கறதுக்கும், நாலேட்ஜுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு....அமீர்கானோட த்ரீ இடியட்ஸ் பாத்தல்ல....எவ்ளோ அற்புதமான மெஸேஜ் கொடுத்திருக்காங்க....இருந்தும் எதுக்குத்தான் இப்படி மார்க்...மார்க்குன்னு அலைஞ்சி...அவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு, குழந்தைங்களையும் கஷ்டப்படுத்தி..ஏன்..இப்படி?"

அவனது ஆவேசத்தைப் பார்த்துக் கொஞ்சம்கூட மாலதி அசரவில்லை.

"உங்க வியாக்கியானமெல்லாம் ஒதவாதுங்க. என் கிட்ட பேசினதை சசிக் கிட்ட பேசாதீங்க. அதை அவ அட்வான்டேஜா எடுத்துக்குவா....நீங்க சொல்லித் தரலைன்னாலும் பரவால்ல....சும்மா இருந்தாலே போதும்?

அடுத்த வாரத்தில் ஒரு வகுப்புத் தேர்வில் சசி...மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கியதைப் பார்த்ததும், டென்ஷன் அதிகமாகி, அதை ஊதிப் பெருசாக்க பக்கத்து வீட்டு சுகந்தி தன் பங்குக்கு...ஏன் இவ்ளோக் கம்மியா மார்க் வாங்கியிருக்கான்னு சொல்ல, இன்னும் கடுமையாய் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டாள். அதன் விளைவுதான்...இதோ...இங்கு அவசரப் பிரிவில் மயக்கமாய் கிடக்கிறாள். கனிவாக அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே...மெள்ளக் கண் விழித்தாள் மாலதி.

"இப்ப எப்படிம்மா இருக்கு...?"

"பரவாயில்லீங்க. திடீர்ன்னு தலை சுத்திடிச்சி...சசி எங்கங்க.."

அவ நீ மயக்கம் போட்டதைப் பாத்ததும் ரொம்ப பயந்துட்டா....அழ ஆரம்பிச்சிட்டா...வீட்லயே இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்..."

சொல்லிக் கொண்டிருக்கும்போதே சசி தயக்கமாய் உள்ளே நுழைந்தாள்...அவளைப் பார்த்ததும்,

"வாடி இங்க....அம்மா மயக்கமானதும் பயந்திட்டியா?...எல்லாம் உன்னாலத்தான்..."

"மாலதி...மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா....இப்ப எதுவும் பேசாத...வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்..."

டாக்டர் சொன்ன மருந்துகளை வாங்கிக்கொண்டு, டாக்டரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள்.

வீட்டுக்கு வந்ததும், மாலதியை....சோபாவில் அமர வைத்துவிட்டு,

"சசி...அம்மாவுக்கு...ஒரு காஃபி கலந்து எடுத்து வாடாக் குட்டி.."

பரத் சொன்னதும், சசி எழுந்து போனாள்.

"மாலதி..உனக்கு சசி மேல இருக்கிற அக்கறை புரியுதும்மா....ஆனா எனக்கென்னவோ அக்கறையைவிட...அடுத்தவங்க என்ன சொல்வாங்களோங்கற பயம் அதிகமா இருக்கிற மாதிரி தோணுது. என்ன சசிம்மா...ஏன் இவ்ளோ கம்மியா மார்க் வாங்கியிருக்கான்னு அந்த சுகந்திக் கேட்டதும்தானே நீ...பயங்கர டென்ஷனாயிட்டே...எதுக்கு டென்ஷன்...இன்னொருமுறை யாராவதுக் கேட்டா...என் பொண்ணு மார்க் வாங்கற மெஷின் இல்லன்னு பட்டுன்னு சொல்லிடு."

"அதுக்கில்லீங்க....பொட்டப்புள்ளதான அதனாலத்தான்...அவப் படிப்பைப் பத்திக் கவலைப் படமாட்டேங்கறாங்கன்னு சொல்லிடுவாங்களேன்னு பயமா இருக்குங்க"

"அடி பைத்தியம்....அடுத்தவங்களைப் பத்தி நமக்கென்னக் கவலை....ஊரார் பேச்சைக் கேட்டுக்கிட்டு அப்பனும், மகனும் கழுதையைச் சுமந்த மாதிரி..நீ கவலையை சுமக்கப் போறியா? அவளுக்கு எதுல இன்ட்ரெஸ்ட் இருக்கோ அதை செய்யட்டும்...எதையும் கட்டாயப்படுத்தித் திணிச்சா...அது சரிவராது."

"நம்மப் பசங்கக்கிட்டக் கட்டாயப்படுத்தறதுல என்னங்க பிரச்சனை?"

"ஏன் நம்மப் பசங்கன்னாலும் அவங்களுக்குன்னு சுயம்ங்கறது எதுவுமில்லையா.......அம்மாக்கிட்டக் குடு....சசி இங்க வாடா....உனக்கு என்ன ஆகனுன்னு விருப்பமிருக்கோ அதுக்காக நீ உன்னைத் தயார் படுத்திக்கோ போதும். கஷ்டப்பட்டு படிக்க வேணாம்...இஷ்டப்பட்டுப் படி. அம்மா இனிமே உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..."

"என்னங்க நீங்க...."

"மாலதி....வெதைப் போட்டு, தண்ணி ஊத்தி, உரம்வெச்சு, பாத்துப் பாத்து வளக்கற பூச்செடி...பூ விடறதைப் பாக்க......தோட்டக்காரன் இருக்க வேணாமா...எங்களுக்கு ஒன்னோட ஹெல்த்தைத் தவிர எதுவும் பெருசில்ல.....வீணா டென்ஷன் படாம...அவக் கிட்ட விட்டுடு. உன் பொண்ணு உன்னை ஏமாத்தமாட்டா."

"ஆமாம்மா.....இனிமே நல்லாப் படிக்கிறேம்மா....நீ டென்ஷனாகதம்மா....எனக்குப் பயமா இருக்கு...எனக்கு நீ வேணும்மா...."

கண்களில் கண்ணீர் மல்க...சசியை இழுத்து அணைத்துக்கொண்ட மாலதி...

"நம்மப் பொண்ணுங்க இவ.....நிச்சயமா ஏமாத்தமாட்டா..."

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக