புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
91 Posts - 61%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
1 Post - 1%
viyasan
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
283 Posts - 45%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
19 Posts - 3%
prajai
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 25 of 44 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 34 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Sep 14, 2011 8:43 pm

krishnaamma wrote:வணக்கம் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி புன்னகை நலமா? நான் நலம் தான் .

சரி விஷயத்துக்கு வருவோம், மோர் ஊற்றி செய்யும் முறை எனக்கு தெரியாது, ஆனால் பருப்பு சாம்பாரில் கோவக்காய் தான் போடலாம். செய்முறை பருப்பு சாம்பார் போன்றது தான், தாளிக்கும் போதுகொஞ்சம் கனமாக கோவக்காய்யை நறுக்கி சேர்க்கணும். இது ஓகே வா பாருங்கோ புன்னகை

மிக்க நன்றிகள் அம்மா

மோர் ஊற்றி செய்யும் முறை ஒரு முறை ஜெயா டீவீயில்
திரு . தாமோதரன் அவர்கள் செய்து காட்டினார்
என்று நினைக்கிறேன் . இணையத்தில் தேடி பார்க்கிறேன்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 14, 2011 9:12 pm

கோவைக்காய்ப் பொடி

தேவையானவை

கோவைக்காய் - கால் கிலோ
மஞ்சள் பொடி - 3 ஸ்பூன்
உப்புத் தூள் - தேவையான அளவு
புளித்த மோர் - காய்கள் ஊறும் அளவு,
மிளகுத் தூள் - 15 கிராம்
சீரகம் - 15 கிராம்
முழு பூண்டு - 2 (அ) 3
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
எலுமிச்சைப் பழம் - 4

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோவைக்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். புளித்த மோரை ஊற்றவும். உப்பைத் தூள் செய்து போடவும். மஞ்சள் பொடியைப் போடவும். இரண்டு நாள் ஊற வேண்டும். எலுமிச்சைப் பழத்தை பிழிந்து ஊற்றவும். இரண்டு இரவு ஊற விட்டு மறுநாள் காயப் போடவும். தினம் காயப்போட்டு மறுபடி, மறுபடி இரவில் கலந்துள்ள மோரில் ஊறவிட வேண்டும். இது போல் தினம் ஊறப் போட்டு, காய வைத்து எடுக்கவும். இவ்வாறு காய வைத்த காய்களுடன், மிளகு, சீரகம் இவற்றை வெய்யிலில் இரண்டு நாள் காய வைத்து அதைத் தூள் செய்து காய்ந்த கோவைக்காய்களையும், மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். இவ்வாறு பொடி செய்த பொடியுடன் ஒரு ஸ்பூன் (அ) இரண்டு மூன்று ஸ்பூன் சூடான சாதத்தில் போட்டு நெய் இரண்டு ஸ்பூன் விட்டு பிசைந்து சாப்பிடவும். இப்பொடியை பாட்டிலில் வைத்து பத்திரப்படுத்தவும்.

கோவைக்காய் எரிசேரி

தேவையானவை

கோவைக்காய் பொடியாக நறுக்கியது - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்புத் தூள் - தேவையான அளவு
புளி (அ) எலுமிச்சை பழம் - 2
பசு நெய் - 200 கிராம்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கோவைக்காயை போடவும். புளியை கரைத்து ஊற்றவும் (அ) எலுமிச்சைப்பழத்தை பிழிந்து ஊற்றவும். உப்பைப் போடவும். மஞ்சள் பொடியைப் போடவும். மிளகு, சீரகம் இவற்றைப் பொடி செய்து போடவும். தண்ணீர் இல்லாமல் பகல் (அ) இரவு முழுவதும் பிசிறி ஊற விடவும். மறுநாள் சமைக்கும் முன் 10 மணியிலிருந்து 11 (அ) 12 மணி வரை வெய்யிலில் தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி வைத்து காய வைக்கவும். அரை மணி நேரம் கழித்து மறுபடி காய்களை புரட்டி வைத்து காய்ந்ததும், எடுத்து வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் காய வைத்த கோவைக்காய்களை நெய்யில் பொரித்து எடுக்கவும். இதுவே கோவைக்காய் எரிசேரி.

கோவைக்காய் பால் கறி

தேவையானவை

கோவைக்காய் - கால் கிலோ
முற்றிய தேங்காய் துருவல் - 2 மூடி
சோம்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 4 (அ) 5
கறிவேப்பிலை - 3 இணுக்கு
மல்லித் தழை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பூண்டு பல் - 4
இஞ்சி - 1 துண்டு
பசுநெய் - 10 மில்லி
கசகசா - 2 ஸ்பூன்
மல்லித் தூள் - 2 ஸ்பூன்

செய்முறை

கோவைக்காயை அலசி விட்டு, உப்பு போட்டு, மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். காய் வெந்ததும், வாணலியில் பட்டை, சோம்பு இவற்றை தூள் செய்து போட்டு, நெய் விட்டு, கிராம்பை தட்டிப் போட்டு, கசகசாவை தூள் செய்து போட்டு வறுத்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மல்லித்தழை இவற்றைப் போட்டு வதக்கி தாளிக்கவும். தேங்காயில், சோம்பு வைத்து தாளித்த காயில் அரைத்து ஊற்றவும். மற்றொரு மூடி தேங்காய்த் துருவலை திக்கான பாலெடுத்து வெந்த காயை இறக்கி வைத்து பாலை ஊற்றவும். இந்தக் கோவைப்பால் கறியை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

கோவைக்காய் பொரிச்ச குழம்பு

தேவையானவை

தேவையான (அதாவது) குழம்பு வைக்க போதுமான அளவு
மல்லித் தூள் - 4 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
பூண்டு பல் - 10
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
தேங்காய் துருவல் - 11/2 மூடி
சின்ன வெங்காயம் - பொடியாக நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி - ஐந்து
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
கசகசா - 2 ஸ்பூன்
சோம்பு - 11/2 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - 3 இணுக்கு
மல்லி இலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
கடலைபருப்பு - 5 ஸ்பூன்
பசுநெய் - 4 ஸ்பூன்

செய்முறை

அரிசி களைந்த நீரில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் இவற்றை போட்டு நன்கு கலக்கி விடவும். கோவைக்காயை அலசி சிறு துண்டுகளாக கொஞ்சம் நீளவாக்கில் நறுக்கி போட்டு வேகவிடவும். காய் வெந்ததும், சோம்பு ஒரு ஸ்பூன், தேங்காய் துருவலை அரைத்து ஊற்ற வேண்டும். நன்கு கொதித்ததும் உப்பைப் போட வேண்டும். வாணலியில் நெய் விட்டு சோம்பு, பட்டை, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மல்லித் தழை இவற்றைப் போட்டு வதக்கி தாளிக்கவும். தாளிக்கும் போது பூண்டு இஞ்சியை தோல் சீவி கரகரப்பாக அரைத்து போட்டு வதக்கி தாளிக்கவும்.

கோவைக்காய் மோர் குழம்பு

தேவையானவை

கெட்டித் தயிர் - 2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 துண்டு
பச்சை மிளகாய் - 4
பச்சரிசி - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 இணுக்கு
மல்லிக் கொத்து - 2
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
காய்ந்த மல்லி விதை - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கோவைக்காய் - 200 கிராம் (அ) கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
கடலை பருப்பு - 5 ஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - நீளவாக்கில் நைசாக நறுக்கியது 2 கைப்பிடி
தக்காளி - 3

செய்முறை

காய்ந்த மல்லியை தனியாக ஊறவைக்கவும். துவரம் பருப்பை தனியாக ஊற வைக்கவும். பச்சரிசியையும் தனியாக ஊற வைக்கவும். கோவைக்காய்களை நீரில் அலசி தண்ணீரை வடிய விட்டு மெல்லியதாக, வட்டமாக நறுக்கிக் கொண்டு தயிரில் போடவும். உப்பைத் தூள் செய்து போடவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெயை விட்டு, பெருங்காயம் போட்டு, மிளகாய் காய்ந்ததை கிள்ளிப் போட்டு வறுபட்டதும், கடுகைப் போட்டு பொரிந்ததும், வெங்காயம் போட்டு, தக்காளியைப் போட்டு (நறுக்கி போடவும்) வதக்கி, மல்லித் தழையை பொடியாக நறுக்கி போட்டு, கறிவேப்பிலையை உருவிப் போட்டு வதக்கி, மிளகாய், பெருங்காயம் போடும் போதே கடலைபருப்பைப் போட்டு சிவந்ததும் கடுகைப் போடணும். கறிவேப்பிலை, மல்லித் தழை போட்டு, காய்ந்த மல்லி, பச்சை மிளகாய் இவற்றை அரைத்து இத்துடன் சீரகம் வைத்து அரைத்துப் போட்டு, மஞ்சள் பொடி ஒரு கொதி வந்ததும் – கொதி அடங்கியதும் தயிரில் கலக்கவும். பச்சரிசி, துவரம் பருப்பு அரைத்து தயிரில் போடவும். இந்த கோவைக்காய் மோர்க்குழம்பு வைக்கும் முன், காலையிலேயே (அ) முதல் நாள் இரவே கெட்டித் தயிரில் உப்புத் தூள் போட்டு கோவைக்காயைப் பொடியாக நறுக்கி போட்டு, தேவையானால் மிளகுப் பொடி ஒரு ஸ்பூன் போட்டு ஊற விட்டு அதன் பிறகே மதியம் கோவைக்காயில் மோர்க்குழம்பு வைக்கவும்.

கோவைக்காய் வற்றல்

தேவையானவை

கோவைக்காய் - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு தூள் - தேவையான அளவு
புளித்த மோர் வற்றல் - மூழ்கி ஊறும் அளவு
மிளகு பொடி - தேவையான அளவு

செய்முறை

கோவைக்காயை பறித்து அலசி மெலிதாக வட்டமாக அரியவும். ஒரு நாள் வெய்யிலில் காய போடவும். அன்று இரவு மோரில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகுதூள் போட்டு நன்கு கலக்கி, காயை ஊறப் போடவும். இரண்டு நாள் ஊறியதும் வெய்யிலில் பாலிதீன் கவரில் காயப் போடவும். காய் தினம் காய வைத்து எடுத்து இரவில் உப்பு, மஞ்சள், மிளகு பொடி கலந்துள்ள மோரில் போட்டு கிளறிவிடவும். இது போன்று மோர் சுண்டும் வரை போட்டு காய வைக்கவும். நன்கு ஈரமின்றி காய் காய்ந்ததும் எடுத்து இரண்டு நான்கு மாதங்கள் கழித்து வறுத்து தொட்டுக் கொள்ளவும். இந்த வற்றலை குழம்பு சாதம், மோர் சாதம் எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

-- நன்றி உணவு நலம்

(சுமதிக்கா மனிச்சிடுங்கோ... உங்கள் அனுமதியின்றி இங்கே இதை பதிந்ததுக்கு)

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 9:50 pm

கூடாது கூடாது கூடாது சுதா, அப்படி சொல்லக்கூடாது, நான் பல முறை சொல்லி இருக்கேன் , உங்க குறிப்புகளையும் பகிருங்கள் என்று. நீங்க செய்தது சூப்பர் வேலைபுன்னகை
இந்த கோவைக்காய் மோர்க்குழம்பைத்தான் ஆத்மா கேட்டாங்களோ என்னவோபுன்னகை நன்றி சுதா நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 9:54 pm

aathma wrote:

மிக்க நன்றிகள் அம்மா

மோர் ஊற்றி செய்யும் முறை ஒரு முறை ஜெயா டீவீயில்
திரு . தாமோதரன் அவர்கள் செய்து காட்டினார்
என்று நினைக்கிறேன் . இணையத்தில் தேடி பார்க்கிறேன்

ஆத்மா, சுதா நிறைய குறிப்புகள் கொடுத்திருக்கார் பாருங்கோ. ஆதி நீங்க கேட்ட மோர்க்குழம்பும் இருக்கு, அது தானா பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Sep 15, 2011 2:11 pm

மிகவும் நன்றிகள் சுதானந்தன்

நீங்கள் கொடுத்த குறிப்புகளை பயன்படுத்தி
சமையல் செய்து பார்க்கிறேன் .

அநேகமாக நான் கேட்டது ,
நீங்கள் கொடுத்த மோர்க்குழம்பு ரெஸீபியாகத்தான்
இருக்கும் என்று நினைக்கிறேன்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Sep 15, 2011 2:13 pm

krishnaamma wrote:
ஆத்மா, சுதா நிறைய குறிப்புகள் கொடுத்திருக்கார் பாருங்கோ. ஆதி நீங்க கேட்ட மோர்க்குழம்பும் இருக்கு, அது தானா பாருங்கோ புன்னகை

சரி அம்மா , மோர்க்குழம்பை செய்து ருசி பார்த்தால்தான் , அது நான் கேட்டதா என்று தெரியும் .

அதனால் சமையல் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Thu Sep 15, 2011 6:05 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 3:54 pm

நன்றி ஆத்மா, நன்றி sino புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 17, 2011 4:07 pm

அம்மா எனக்கு ஒரு சந்தேகம் !!

எங்கள் பகுதியில் இன்னுமும் கூட ஆண்கள் வீட்டு வேலை செய்வது . கொஞ்சம் மாதிரியாய்தான் பார்க்கபடுகிறது. ஆனால் நான் அதை தூக்கி எரிந்து நாளாகி ..........

நீங்கள் பாலா கார்த்திக்கை பார்த்து சமைத்து பழக கூறியதிலிருந்து நானும் அங்கு தலை காட்ட அரமித்துவிட்டேன். எனக்கு முதலில் என்ன என்ன மாளிகை பொருட்கள் இருக்கிறது என கூறுங்கள். சிலவைதான் தெரியும். நன்றி !!!

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 25 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 4:18 pm

அய்யம் பெருமாள் .நா wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம் !!

எங்கள் பகுதியில் இன்னுமும் கூட ஆண்கள் வீட்டு வேலை செய்வது . கொஞ்சம் மாதிரியாய்தான் பார்க்கபடுகிறது. ஆனால் நான் அதை தூக்கி எரிந்து நாளாகி ..........
நீங்கள் பாலா கார்த்திக்கை பார்த்து சமைத்து பழக கூறியதிலிருந்து நானும் அங்கு தலை காட்ட அரமித்துவிட்டேன். எனக்கு முதலில் என்ன என்ன மாளிகை பொருட்கள் இருக்கிறது என கூறுங்கள். சிலவைதான் தெரியும். நன்றி !!!

இதை வெட்கப்படவோ , அவமானப்படவோ ஏதும் இல்லை பெருமாள். எங்க வீட்டில் அனைவருமே சமைப்போம் . நம் உயணவி நாம் செய்து கொள்வதில் என்ன அவமானம்., மரியாதை குறைவு? இதை ஆண்களுக்கு புரிய வைத்தால் போறும் புன்னகை

நான் முன்பே சொன்னபடி, எங்க கிருஷ்ணா அப்பா நல்லா சமைப்பார், கிருஷ்ணா தனியா தான் லண்டனில் சமைத்து சாப்பிடுகிறான், எந்தம்பிகள், என் பெரியமாமா 63 வயதாகிறது
அவரும் இன்றும் மாமி ஊரில் இல்லாத போது சமைப்பார்.

உங்க்ளுக்கு, எல்லா மாளிகை சாமான்களையும் அறிமுகப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. இன்னும்கொஞ்ச நாட்களிலேயே நீங்க சூப்பராக சமைக்கலாம் , உங்க அம்மாவை (முதலில் அம்மாவை புன்னகை ) அசத்தலாம் பெருமாள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 25 of 44 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 34 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக