ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

3 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 1:48 pm

First topic message reminder :

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம்இ பல ஆண்டுகள் ஆய்வு செய்துஇ பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்புஇ அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும்இ அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லைஇ இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.


வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போதுஇ குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாதுஇ மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம்இ குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 5:34 pm

முதல் மனிதனும்இ குர்ஆனும்


மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம்இ களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள் மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர்.


உண்மை அது அல்ல. மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப் பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.


மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும்இ மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.

هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ
அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.
அல் குர்ஆன் 6: 2

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ
இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
அல் குர்ஆன் 30: 20


குர்ஆனில் ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது “தீன்” (களிமண்) என்ற வார்த்தையை 6 முறையும்இ “துராப்” (சாதாரண மண்) என்ற வார்த்தையை 6 முறையும் பயன்படுத்தி அல்லாஹ் கூறியுள்ளான். இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும்இ சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல.


சில மாறுபட்ட பயன்களை தரக்கூடியது. இந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் சரிசம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும்இ சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 5:42 pm

“தீன்” என்ற வார்த்தையும்இ “துராப்” என்ற வார்த்தையும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதிப்பது தவறான போக்காகும். காரணம் அல்லாஹ் வெறுமனே ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து செய்திகளை சொல்வதில்லை. அவன் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரே செய்தியை சொன்னாலும்இ அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயமாக மறைந்திருக்கத்தான் செய்யும்.


மனிதனை களிமண்ணில்தான் படைத்தான் என்றால் “தீன்” என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அல்லது சாதாரண மண்ணில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் “துராப்” என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அவ்வாறிருந்தும் இரண்டு வார்த்தைகளையும் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மனிதன் இந்த இருவகை மண்ணிலிருந்தும் தான் படைக்கபட்டுள்ளான் என்ற தகவலைச் சொல்வதற்காகத்தான் அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


அதாவது முதலில் களிமண்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பின்வரும் 32வது அத்தியாத்தில் 7-வது வசனத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்துதான் ஆரம்பித்தான்” என்று இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு அந்த களிமண்ணில் சாதாரண மண்ணையும் சேர்த்து கலவையாக ஆக்கப்பட்டு அதிலிருந்து மூலக்கூறுகளை எடுத்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.


(களிமண் கொண்டு மட்டும் எந்த பொருளையும் உருவாக்க முடியாதுஇ களிமண் கொண்டு மட்டும் உருவாக்கப்படும் பொருள் காய்ந்துவிடும் போது விரிசல் ஏற்பட்டுஇ உறுதிவாய்ந்ததாக இருப்பதில்லைஇ பாத்திரங்கள்இ செங்கள் போன்ற பொருட்கள் செய்வதற்கு களிமண்ணுடன் மண்ணையும் சேர்க்கும் போதுதான் உறுதி கிடைக்கும்இ அதனால் தான் களிமண்ணில் பாத்திரம்இ செங்கள் செய்பவர்கள்இ வீடு கட்டுவர்கள் மண்ணையும் சேர்த்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல் சாதாரண மண் கொண்டு எந்தப் பொருளையும் தயாரிக்க முடியாது.


காரணம் ஒன்றோடு ஒன்று சேரும் பிசு பிசுப்பு தன்மை அதில் இருப்பதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு இரு வகை மண்ணும் அவசியப்படுகிறது என்பதை நாம் நடைமுறையில் அறிந்து வருகிறோம்.)


இந்த இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படை. இந்த இருவகை மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்துஇ அந்த உருவத்தில் உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லை. மாறாக இந்த இரு வகை மண்ணின் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்திஇ அந்த கலவையிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான “மூல” த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான் முதல் மனிதன் படைக்கப்பட்டான். இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லை.


மனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள்இ நாம் எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறது. மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப் பார்க்கும் இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ
(அவன்) எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான். மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். 32: 7



இந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.

களி மண்ணிலிருந்து நேரடியாக மனிதம் உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மனிதனின் படைப்பை களி மண்ணிருந்து ஆரம்பித்துஇ எந்தந்த நிலையை அடைந்துஇ அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கூறி வருகிறான்.

إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لازِبٍ
நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன்: 37:11




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 5:44 pm

இது மனித படைப்பின் இரண்டாவது நிலை



பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்? களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி விடுகிறது. இந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது.

(மனிதன் உடலமைப்பில் 75 சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.) களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது. (எவ்வளவு காலம் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விஷயம்.)


وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَأٍ مَسْنُونٍ
மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் கறுப்பு மண்ணிலிருந்து மாறியஇ தட்டினால் ஓசை வரும் களிமண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அல் குர்ஆன்: 15: 26

இந்த வசனத்தில் மனித படைப்பின்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 5:45 pm

மூன்றாவது மற்றும் நான்வாது நிலையினை அல்லாஹ் கூறி இருக்கிறான்.


“ஹமஉ” என்றால் கருப்பு மண் என்பது பொருளாகும். “மஸ்னூன்” என்றால் மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் மண் என்பது பொருளாகும். மண்இ களிமண்இ தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை அதே நிலையில் சில காலம் விட்டு வைக்கப்பட்டு விட்டது நீண்ட நாட்கள் (எவ்வளவு நாள் என்பதை அல்லாஹ் அறிவான்.)

இருந்த அந்த கலவை சாக்கடை மண்ணைப்போல கருப்பு நிறமாக மாறிஇ துர்வாடை ஏற்படும் நிலைக்கு மாறிவிட்டது. (சாக்கடையில் நீண்ட நாட்கள் கிடக்கும் மண் கருப்பு நிறமாக மாறிஇ துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும் என்பதை நாம் அறிவோம்.) இது மனிதப்படைப்பின் மூன்றாவது நிலை.
خَلَقَ الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ



சுட்டெடுத்த மண்பாண்டத்தைப் போல (தட்டினால்) ஓசை வரும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான். அல் குர்ஆன்: 55:1




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 5:46 pm

இது மனிதப்படைப்பின் நான்காவது நிலை


“ஸல்ஸால்” என்பது மண் கலந்து சுட்டெடுக்கப்பட்ட காய்ந்த களி மண்ணாகும். அதனை தட்டினால் “ஸல்இ ஸல் என ஓசை தரும் என்பதால் அதற்கு “ஸல்ஸால்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.



இந்த “ஸல்ஸால்” என்ற வார்த்தையின் மூலம்தான் முதல் மனிதனின் படைப்பில் களிமண்ணுடன் சாதாரன மண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நான் ஆரம்பித்தில் குறிப்பிட்ட தகவலை இது ஊர்ஜிதம் செய்கிறது.


وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ
நிச்சயமாக (முதல்) மனிதனை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 23:12
இது மனிதப்படைப்பின் ஐந்தாவது நிலையாகும். முதல் மனிதன் களிமண்ணுடைய மூலச்சத்திலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க முடியும் என்று இன்று கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 1429 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவியில் அறிவு அறவே இல்லாத காலத்து மக்களுக்கு முதல் மனித படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மிக எளிமையாக இந்த குர்ஆன் எடுத்து சொல்லியிருக்கிறது. அது குர்ஆனின் அதிசயங்களில் ஒன்றாகும்.


அல்லாஹ் ஒரு பொருளைப் படைப்பதற்கு எந்த காரணங்களும் அவசியமில்லை. “குன்” என்று சொன்னால் அந்தப் பொருள் உடனடியாக உண்டாகிவிடும்.

إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால்இ அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் “ஆகுக!” எனக் கூறுவதுதான் உடனே ஆகிவிடும்.
அல் குர்ஆன்: 36: 82


எனினும் உலகில் ஒரு நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வானத்தையும் பூமியையும் ஏழு நாட்களில் படைத்ததிருப்பதும் அந்த நியதிப்படிதான். (அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானதாகும்.) எந்த பொருளையும் திடீரென படைத்து விடுவதில்லை. முதல் மனிதனை படைப்பதற்கு எந்த பொருளின் துணையும்இ எந்த முன்மாதிரியும் இல்லாமால் இறைவனால் படைக்க முடியும் என்றாலும் மண்இ களிமண்இ தண்ணீர் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உருவாக்கிஇ அந்த மூலத்திலிருந்து முதல் மனிதனைப் படைத்துள்ளதும் இந்த நியதிப்படிதான்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 5:47 pm

மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர்?


கடந்த தொடரில் மண் கலவையிலிருந்து எடுக்கப்பட்ட மூலத்தில் முதல் மனிதர் படைக்கப்பட்டார் என்ற உண்மையைப் புரிந்து கொண்டோம். இந்த தொடரில் அவரது சந்ததிகளான மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் என்ற தகவல் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்று அறிந்து கொள்வோம்.


முதல் மனிதர் படைக்கப்பட்டது போல அவரது சந்ததிகளையும் மண்ணின் மூலத்திலிருந்து நேரடியாக படைக்கப்பட வில்லை என்பது தெளிவான உண்மை. தொடர்ந்து உற்பத்தியாகும் மரபணுக்கள் வழியாக இனப்பெருக்கம் நடை பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் முதல் மனிதரைப் போலவே அவரது சந்ததிகளும் மண்ணின் மூலத்திலிருந்து படைக்கப்படுகின்றனர் என்றால் ஒவ்வொரு மனிதனின் படைப்பிற்கும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அது நடை முறைக்கு சாத்தியமற்றது.


எனவே மனிதர்களின் மரபணுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டுஇ மனிதர்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மரப்பணுக்களை மனிதர்களிலிருந்தே உற்பத்தி செய்துஇ மனித சமுதாயத்தை படைத்திருக்க முடியும் என்பது நடைமுறையில் மட்டுமல்லாமல் அறிவியில் உலகிலும் ஒத்துக் கொள்ளப்படும் விஷயமாகும். அந்த மரப்பணுக்களால் மனித சந்ததிகள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் என்பதுதான் இந்த தொடரின் மையப் பொருளாகும்.


يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்.
அல் குர்ஆன்: 49:13

இந்த வசனத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண்இ பெண்ணிலிருந்துதான் படைக்கப் பட்டனர் என்ற செய்தியை அறிந்து கொள்கிறோம். அதாவது மனிதர்கள் தொடர்ச்சியாக படைக்கப்படுவதற்கு தேவையான மரப்பணுக்களை ஆண் மற்றும் பெண்ணிடம் உற்பத்தி செய்து அதன் மூலம் மனித சமுதாயம் படைக்கப்படுகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 5:49 pm

விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள்


களிமண்ணின் மூலச்சத்திலிருந்து முதல் மனிதரை படைத்த அல்லாஹ் அந்த முதல் மனிதரின் சந்ததிகளை அவரது விந்துவின் மூலத்திலிருந்து படைத்தான்.
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை உண்டாக்கினான். அல் குர்ஆன்: 32:8




மனித சந்ததிகளை விந்துவிலிருந்து படைத்த செய்தியை அல்லாஹ் சுமார் 15 இடங்களில் கூறுகிறான். 12 இடங்களில் நுத்ஃபா என்ற வார்த்தையையும்இ 3 இடங்களில் மாஉ என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறியுள்ளான்.
நுத்ஃபா என்பதற்கு சுத்தமான நீர் என்பது பொருளாகும். ஆணுடைய விந்துஇ எந்த வித மாசுகளும் சென்றடைந்திராத பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறுவதால் அதற்கு நுத்ஃபா என்ற பெயர் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆணுறுப்பிலிருந்து குதித்து வெளியாகும் வழுவழுப்பான திரவத்திற்கு விந்து எனப்படும்.


இந்த விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த வித்தையாகும். அற்பமான ஒரு துளி விந்துவில் பல அதிசயங்கள் நிகழ்த்தியிருப்பது அவனுடைய வியத்தகு அத்தாட்சிகளில் ஒன்றாகும்.
பல நூறு அறிவியல் அறிஞர்களின் கூட்டு முயற்சியால் முதன்முதலாக இயந்திர மனிதன் செய்யப்பட்ட போதுஇ உலகமே வியப்பில் ஆழ்ந்து அது பற்றிய செய்திகள்இ ஊடகங்களில் பல மாதங்களாக தலைப்பு செய்திகளாக வெளி வந்து கொண்டிருந்தன.

இயந்திர மனிதன் ஆற்றும் செயல்பாடுகள் குறித்து அதிசயங்களாக நாம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த இயந்திர மனிதனை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு தனிமங்களும்இ கனிமப் பொருட்களும்இ முன் மாதிரியும் தேவைப்பட்டன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 5:57 pm

ஆனால் அந்த இயந்திர மனிதனையும் உருவாக்கும் ஆற்றல்கள் உள்ள நிஜ மனிதனை எந்த முன் மாதிரியும் இல்லாமல் ஒரு துளி இந்திரியத்தில் படைத்திருப்பது பேசித்தீராத அதிசயமாக உள்ளது.

விந்துவிலிருந்துதான் மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும், அந்த விந்து எங்கிருந்து எவ்வாறு உற்பத்தியாகிறது, அதன் தன்மைகள் எவ்வாறு உள்ளது என்றும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு குர்ஆனில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பது அதிலும் பேரதிசயமாக உள்ளது. காரணம் மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் அதற்கான மூல விதை என்ன? என்பது பற்றிய அறிவு 18 ம் நூற்றாண்டு வரை அறிவியல் உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை. 18ம் நூற்றாண்டின் இறுதியிதில்தான் இந்த உண்மை அறிவியல் அறிஞர்களால் புரிந்து கொள்ளப்பட்டு, அறிவியல் உலகிற்கு விளக்கப்பட்டுள்ளது.


குழந்தை உருவாகுவதற்கு ஆண் மற்றும் பெண்ணின் விந்து அவசியமானதாகும் என்ற அறிவையும் அதன் வெவ்வேறு நிலைகள் பற்றிய விளக்கத்தையும் 1940 ஆண்டுவாக்கில்தான் அந்த அறிவியல் அறிஞர்களால் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் குர்ஆன் இந்த தகவலை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது. 49 வது அத்தியாத்தில் 13 வது வசனத்தில் மனிதர்களே! உங்களை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம் என்று கூறும் இறைவேதமான குர்ஆன், 76 வது அத்தியாயம் 2வது வசனத்தில் (ஆண், பெண் ஆகியோரின்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாம் படைத்தோம் என்றும் கூறுகிறது. இதன் மூலம் குழந்தையின் உற்பத்திக்கு ஆண், பெண் ஆகிய இருவருக்கும் பெரும் பங்கு உள்ளது என்ற உண்மையை தெளிவு படுத்தியுள்ளது.


இந்த உண்மையை ஒரு சாதாரண மனிதனால் நிச்சயமாக சொல்லியிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக அறிவியல் வாடையே இல்லாத 1400 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற செய்தியை ஒரு மனிதர் சொல்லியிருக்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. அனைத்தையும் அறிந்த அல்லாஹ் ஒருவனால்தான் சொல்லியிருக்க முடியும் என்பதை யாரும் மறுக்க இயலாது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 5:59 pm

விந்து எவ்வாறு வெளிப்படுகிறது

فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ – خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ – يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
ஆகவே மனிதன்இ (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. (அல் குர்ஆன்: 86:5-7)


இந்த வசனத்தின் மூலம் மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்ற தகவலை சிந்தனையோடு பார்க்க வேண்டும் என்று மனிதனை இறைவன் தூண்டுகிறான். அவ்வாறு சிந்திக்கும் போது அற்பமான ஒரு துளி விந்துவில் அல்லாஹ் நிகழ்த்திய அற்புத ஆற்றல்களை புரிந்து கொண்டுஇ அந்த அல்லாஹ்வை ஏற்றுஇ அவனை அஞ்சி வாழ்வதற்கு அது பெரிதும் துணை புரியும்.


மனிதன் மமதை கொண்டுஇ படைத்தவனை நம்ப மறுத்து கண்டதே காட்சிஇ கொண்டதே கோலம் என தான்தோன்றித்தனமாக நடந்துஇ அநியாயமும்இ அக்கிரமங்களும் செய்து கொண்டிருந்த போதுதான் இறைத்தூதர்களை அனுப்பி வைத்துஇ மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு தேவையான இது போன்ற தகவல்களை அவர்களுக்கு நினைவு படுத்திஇ அந்த மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு சிறந்த வழியினை ஏற்படுத்தி தந்துள்ளான். இது போன்ற தகவலை ஒருவன் சிந்திக்கும் போதுஇ தான் அற்பமானவன்இ தன்னை இந்த அழகிய தோற்றத்தில் வடிவமைத்து படைத்தவன் மிக சக்தி உள்ளவன் என்ற உண்மையை புரிந்துகொண்டுஇ தன்னைப்படைத்த அல்லாஹ்வை அஞ்சி வாழ்வான். அதுவே அல்லாஹ்வின் விருப்பமாகும்.


குதித்து வெளியாகும் நீர் என இறைவன் கூறியிருப்பது ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது ஆணிடமிருந்து வெளியாகும் திரவப் பொருளான விந்துவைத்தான் இங்கு குறிப்பிடுகிறான். சிலர் ஆண்இ பெண் இருவரிடமிருந்து வெளியாகும் நீர் என்று பொருள் கொள்கிறார்கள். அது தவறாகும். காரணம் பெண்ணினிடம் உற்பத்தியாகும் விந்துஇ குதித்து வெளியாகும் தன்மையுள்ளதல்லஇ அவளிடம் உற்பத்தியாகும் விந்து வெளிக்கு வருவதில்லை. குதித்துஇ உடலை விட்டும் வெளியாகும் தன்மை ஆணுடைய விந்துவிற்கு மட்டும் உள்ள பண்பாகும்.

எனவே இந்த வசனத்தில் குதித்து வெளியாகும் நீர் என்பதற்கு ஆணின் விந்து என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
அதிசயப்பிறவியான ஆறறிவு மனிதனைப் படைப்பதற்கு காரணமாக அமைந்துள்ள விந்தை உற்பத்தி செய்துஇ அதனை முறையாக வெளிப்படுத்திஇ உரிய இடத்தில் (கர்பப் பையில்) சேர்த்து வைப்பதில் இறைவன் காட்டும் அதிசயங்கள் தான் எத்தனை? எத்தனை?
சிறுநீர் வெளியாகும் வழியும்இ விந்து வெளியாகும் வழியும் ஒன்றாக இருந்தாலும் அந்த இரண்டும் கலந்து விடாமல் இருக்க அவன் ஏற்படுத்தியுள்ள தடைகள்தான் எத்தகையது? சிறுநீர் வெளியாகும் போது விந்து வெளிப்படாத படியும்இ விந்து வெளியாகும் போது சிறுநீர் வெளிப்படாத படியும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின் இரகசியத்தை அதனை படைத்த இறைவனே நன்கு அறிந்தவன்.


காரணம் மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டுஇ அமைக்கப்படும் பாதுகாப்பான குடிநீர் குழாய்இ சாக்கடையின் ஓரத்தில் இருக்கம் போது அந்த குழாயின் வழியாக கடத்தப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை மனித கச்திகளால் தடுக்க முடிவதில்லை. ஆனால் ஒரே உடலில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகும் திரவங்கள்இ ஒரே வழியாக வெளிப்பட்டாலும் எந்த காலத்திலும் அந்த இரண்டு திரவங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விடமுடியாத படி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது இறை சக்தியல்லவா?.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 6:01 pm

குதித்து வெளியாகும் நீர் என்று கூறப்பட்டிருப்பது சிறுநீரிலிருந்து விந்தை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே தெரிவு செய்து போடப்பட்ட வார்த்தை. சிறுநீருக்கு குதித்து வெளியாகும் தன்மையில்லை. விந்து மட்டுமே குதித்து வெளியாகும் தன்மையில் உள்ளதாகும். அந்த தன்மை ஏன் விந்திற்கு மட்டும் உள்ளது என்று சிந்தித்தால் அதிலும் அல்லாஹ் செய்துள்ள அறிவியலின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள முடிகிறது.


பெண்ணிடம் உள்ள கர்பப்பை மிக ஆழத்தில் இருப்பதால் அதனை நோக்கி செலுத்தப்படும் விந்துஇ சாதாரணமாக வேகமின்றி ஆண் உறுப்பிலிருந்து வெளியாகுமானால் அது கர்ப்பப் பையை சென்றடைவது சாத்தியக்கூறு குறைவு. குதித்த நிலையில் அழுத்தத்துடனும் வீரியத்துடனும் விரைவாக வெளியாகும் போதுதான் அந்த விந்து கர்ப்பப் பையில் சரியான இடத்தை நோக்கி சென்றடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.


மேலும்இ இந்த விந்தில் பல கோடி உயிரணுக்கள் உள்ளன. அவைகள் சுயமாக நகர்ந்து முன்னேறும் தன்மை உள்ளவை. எனினும் நகர்ந்து செல்லும் அதன் வேகம் மிகக் குறைவானதே. மேலும் சுமார் 15 நிமிடம் மட்டுமே உயிர் வாழும் தன்மையுடைது. மேலும் உற்பத்தியாகும் உயிரணுக்களில் 20-30 வீத உயிரணுக்கள் மட்டும்தான் முழு வளர்ச்சியடைந்ததாகவும்இ நகர்ந்து செல்லும் வீரியமும் உடையதாகும்.

இந்த குறுகிய கால அவகாசத்திற்குள் கர்பப்பை குழாயை (குயடடழியைn வுரடிந) சென்றடைய வில்லையானால் அந்த உயிரணுக்கள் செத்துப் போய்விடும். விந்து குதித்து வெளியாகுவதால் அது சுமந்து வரும் பெரிய அமானிதமான மனித உயிரணுக்களை விரைவாக உள்ளே தள்ளிஇ அந்த உயிரணுக்கள் செல்ல வேண்டிய இலக்கான கர்ப்பப்பை குழாயை (குயடடழியைn வுரடிந) விரைவில் சென்றடைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. வீரியமின்றிஇ சாதாரணமாக விந்து வெளியாகுமேயானால் உயிரணுக்கள் சேர வேண்டிய இலக்கை சென்றடையும் வாய்ப்புகள் குறைந்துஇ செல்லும் வழியிலேயே செத்து மடிந்து விடும்.


மேலும் ஓரு மனித உடலின் சராசரி வெட்ப நிலையில் 37 டிகிரியாகும். ஆணுறுப்பிற்கு கீழே இருக்கும் இனவிருத்தி உயிரணுக்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் விதையின் வெட்ப நிலைஇ உடலின் வெட்ப நிலையை விட சுமார் 3-4 டிகிரி குறைவாகவே இருக்கும். காரணம் விந்தில் இருக்கும் பல கோடி உயிரணுக்கள் (இது குறித்து பின்னர் விவரிக்கப்படும்.) 34 டிகிரி வெட்ப நிலையில் தான் உயிர் வாழ முடியும். வெட்ப நிலை அந்த அளவைவிட சற்று அதிகரிக்கும் போது அந்த உயிரணுக்களால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும்.



விந்து சிறுநீரைப் போல சாதாரணமாக வெளிப்படுமேயானால் ஆணுறுப்பில் உள்ள கூடுதல் வெப்ப நிலையாலும்இ சிறுநீரின் வேதிய பொருட்களாலும் அந்த விந்தில் உள்ள உயிரணுக்கள் வரும் வழியிலேயே செத்துபோய்விடும். அதனை கருத்தில் கொண்டுதான் பல கோடி உயிரணுக்களை சுமந்து வரும் விந்தை குதித்து விரைவாக வீரியத்துடன் தனித்து வெளியேறும் தன்மையில் படைத்துள்ளான் இறைவன்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum