ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பியன்களின் சாம்பியன்!

3 posters

Go down

சாம்பியன்களின் சாம்பியன்! Empty சாம்பியன்களின் சாம்பியன்!

Post by ரபீக் Mon May 24, 2010 11:27 am

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.​ ​
​ ​ பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ,​​ தன்னை எதிர்த்து விளையாடிய பல்கேரியாவின் வெஸ்லின் டொபலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.​ ​
​ ​ மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 6.5,​ 5.5 என்ற புள்ளிக்கணக்கில் டொபலோவை வென்றார்.​ 11-வது ​ சுற்றின் முடிவில் இரு வீரர்களும் தலா 5.5 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தனர்.​ கடைசி சுற்று ஆட்டம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.​ ​ ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.​ ஆனால்,​​ 31 மற்றும் 32 வது நகர்த்தலில் டொபலோவ் செய்த தவறுகள் மற்றும் ஆனந்தின் தற்காப்பு ஆட்டம்,​​ 56}வது நகர்த்தலின்போது அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
​ ​ ""இதுவரை நான் விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகவும் பரபரப்பாக இருந்தது.​ போட்டியின் கடைசிநாளன்று நான் காலையில் எழுந்தபோது,​​ இன்று நமக்கு வெற்றி கிடைக்குமா?​ அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பதைபதைப்பு என் நெஞ்சில் இருந்தது.​ இருந்தபோதிலும் துணிவுடன் கடைசி சுற்று ஆட்டத்தை எதிர்கொண்டேன்.​ ​
​ ​ பொதுவாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முடிவு எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.​ சரி நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு ஆடினேன்.​ ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு எனக்கு வெற்றி கிடைத்தது.​ எனவே கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்'' என்று ஆனந்த் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.​ ​
​ ​ விளையாட்டில் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல;​ கடுமையான பயிற்சி மேற்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது போல சவால் நிறைந்தது ஆகும்.​ அந்த சாதனையை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
​ ​ ஏறக்குறையை 25 ஆண்டுகளுக்கு மேலாக செஸ் விளையாட்டில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் ஆனந்த்.​ பல்கேரியாவின் டொபலோவை வென்றதன் மூலம் ஆனந்த் இதுவரை நான்குமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.​ 5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.​ 1987}ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
​ ​ செஸ் விளையாட்டில் அவரது திறமையைப் பாராட்டி இந்திய அரசு 1985-ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.​ 1987-ல் பத்மஸ்ரீ விருது இவரைத் தேடி வந்தது.
1992-ல் ​ ராஜீவ் கேல்ரத்னா விருது வழங்கி ​ இந்திய அரசு கௌரவித்தது.​ செஸ் விளையாட்டு தொடர்பான இவர் எழுதிய புத்தகத்தை பிரிட்டிஷ் செஸ் கூட்டமைப்பு பாராட்டி விருது வழங்கியது.​ ​ 2000-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் பட்டம் கிடைத்தது.​ ​ இதைத் தொடர்ந்து 2007-ல் அவருக்கு பத்மவிபூஷன் பட்டம் வழங்கப்பட்டது.​ செஸ் ஆட்டத்தில் நாக் அவுட்,​​ டோர்னமென்ட்,​​ மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
​ ​ மனதை அலைபாயவிடாமல்,​​ ஒருநிலைப்படுத்தி,​​ மன உறுதியுடன் ஆடி,​​ தடைகளைக் கடந்து ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.​ போட்டிக்கு நாள் குறித்தவுடன்,​​ 6 மாதங்களுக்கு முன்னதாகவே எதிரியை வீழ்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.​ எதிரி எப்படி காயை நகர்த்துவார்.​ அவரை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றித்தான் என் சிந்தனை செல்லும்.​ எனது உழைப்பு வீண் போகவில்லை.
​ ​ உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக பல்கேரிய தலைநகர் சோபியாவுக்குச் சென்ற போது போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்னை முறையாக வரவேற்கவில்லை.​ எனக்கு இது வருத்தமாக இருந்தாலும்,​​ நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எனது காரியத்திலேயே கண்ணாக இருந்தேன்.​ ​
​ ​ முதல் ஆட்டத்திலேயே எனக்குத் தோல்வி ஏற்பட்ட போதிலும் நான் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து போட்டியைத் தீவிரமாக எதிர்கொண்டேன்.​ ஒரு கட்டத்தில் நானும்,​​ டொபலோவும் தலா 5.5 புள்ளிகள் எடுத்திருந்தோம்.​ அப்போது பலரும் இந்த முறை உள்ளூர் ஹீரோவான டொபலோவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு;​ அவர் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது உறுதி எனப் பேசி வந்தனர்.
​ ​ மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 12}வது சுற்று ஆட்டம் நடந்தது.​ நான் எதிர்பார்த்தபடியே டொபலோவ் தனது 31}வது நகர்த்தலில் தவறு செய்தார்.​ அது எனக்குச் சாதகமானது.​ மேலும் 40}வது நகர்த்தலின்போது நான் சிறிய தவறு செய்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு ஆட்டதைப் பின்பற்றினேன்.​ இது எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஆனந்த்.​ ​
​ ​ இன்று நம்நாட்டில் ​ பலரும் அதிகமாகப் பேசுவது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றித்தான்.​ கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் ​ ரசிகர்கள்​ அதிகம். ​ இந்திய அணியில் யாராவது சதம் அடித்துவிட்டால் அதை பெரிய சாதனையாக விளம்பரப்படுத்துவார்கள்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் தோற்றதன் மூலம் இந்திய அணி தகுதியை இழந்துவிட்டது.ஆனால்,​​ ஓசைப்படாமல் இந்தியரான விஸ்வநாதன் உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்று பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஆனந்தின் சாதனை பல இளைஞர்களுக்கு செஸ் போட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.​ உலக அரங்கில் ராணுவ வல்லமையில் இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ செஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து வல்லரசாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
​ ​ இதுவரை இந்தியாவில் செஸ் விளையாட்டில் பிடே ரேட்டிங் பட்டியலில் 5 ஆயிரம் பேரும்,​​ 64 சர்வதேச மாஸ்டர்களும்,​​ 21 கிராண்ட் மாஸ்டர்களும் உள்ளனர்.​ இவர்களெல்லாம் இந்த வெற்றியைப் பெற முன்னோடியாக இருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த்.​ அவரை சாம்பியன்களின் சாம்பியன் என்றால் அது மிகையாகாது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாம்பியன்களின் சாம்பியன்! Empty Re: சாம்பியன்களின் சாம்பியன்!

Post by சிவா Mon May 24, 2010 11:31 am

மதுரைத் தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!


சாம்பியன்களின் சாம்பியன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாம்பியன்களின் சாம்பியன்! Empty Re: சாம்பியன்களின் சாம்பியன்!

Post by பயணி Mon May 24, 2010 11:54 am

தமிழன் புத்தியிலும் சிறந்தவன் என மீண்டும் ஒரு முறை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் நிரூபித்துள்ளார். நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகின்றேன்.
பயணி
பயணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Back to top Go down

சாம்பியன்களின் சாம்பியன்! Empty Re: சாம்பியன்களின் சாம்பியன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum