ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
heezulia
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
mohamed nizamudeen
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா?

3 posters

Go down

வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Empty வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா?

Post by ரபீக் Mon May 24, 2010 11:24 am

பிரிட்​ட​னைச் சேர்ந்த ஸ்டீ​பன் ஹாக்​கின்ஸ் உல​கப் பிர​சித்தி பெற்ற இயற்​பி​யல் நிபு​ணர்.​ 69 வய​தான அவ​ருக்கு அபூர்வ நோய்.​ அவ​ரால் நட​மாட இய​லாது.​ பேச இய​லாது.​ செயற்​கைக் குரல் மூலம் பேசு​கி​றார்.​ இப்​ப​டிப்​பட்ட நிலை​யி​லும் அவர் பல மாநா​டு​க​ளில் கலந்து கொண்டு உரை​யாற்​று​கி​றார்.​ அண்​மை​யில் ​ அமெ​ரிக்​கா​வில் நடந்த ஒரு மாநாட்​டில் அவர் கூறிய கருத்து பெரிய சர்ச்​சை​யாக உரு​வெ​டுத்​துள்​ளது.​
​ ​ ""நமது பூமி​யைப் போல அண்​ட​வெ​ளி​யில் வேறு கிர​கங்​கள் உள்​ளன.​ அவற்​றில் நம்​மைப் போலவே மனி​தர்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது.​ அந்த வேற்​றுக் கிரக மனி​தர்​க​ளு​டன் நாம் தொடர்பு கொள்​ளா​மல் இருக்க வேண்​டும்.​ அவர்​க​ளால் பூமிக்கு-​மனித குலத்​துக்கு ஆபத்து ஏற்​ப​ட​லாம்'' என்று அவர் கூறி​னார்.​ பல நிபு​ணர்​கள் இதை ஆட்​சே​பித்​துள்​ள​னர்.​ ஹாக்​கின்ஸ் பேச்சு குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரு​கி​றது.​
​ ​ சூரிய மண்​ட​லத்​துக்கு அப்​பால் எங்கோ இருக்​கக்​கூ​டிய கிர​கங்​க​ளில் நம்​மைப் போன்ற மனி​தர்​கள் இருக்க நிறை​யவே வாய்ப்பு உள்​ளது.​ ஆனால்,​​ நமது ​ சூரிய மண்​ட​லத்​தில் உள்ள புதன்,​​ வெள்ளி,​​ செவ்​வாய்,​​ வியா​ழன்,​​ சனி ஆகிய கிர​கங்​க​ளில் நிச்​ச​யம் எந்த உயி​ரி​ன​மும் ​ இல்லை.​ அவற்​றில் மனி​தன் போன்று யாரும் கிடை​யாது.​ உயி​ரி​னம் இருக்க வேண்​டு​மா​னால் அதற்கு வாய்ப்​பான நிலை​மை​கள் இருக்க வேண்​டும்.​ சூரிய மண்​ட​லத்​தில் பூமி தவிர,​​ வேறு எந்​தக் கிர​கத்​தி​லும் அப்​ப​டிப்​பட்ட வாய்ப்​பான சூழ்​நி​லை​கள் கிடை​யாது.​ அது ஏன்?​
​ ​ சூரி​ய​னுக்கு ​ மிக அரு​கில் இருப்​ப​தால் ​ புதன் கிர​கத்​தில் பக​லாக உள்ள இடங்​க​ளில் பயங்​கர வெப்​பம்.​ இர​வாக உள்ள இடங்​க​ளில் பயங்​க​ரக் குளிர்.​ தவிர,​​ காற்று மண்​ட​லமோ தண்​ணீரோ கிடை​யாது.​ குறிப்​பிட்ட சில கார​ணங்​க​ளால் வெள்ளி ​(சுக்​கி​ரன்)​ ​ கிர​கத்​தி​லும் பயங்​கர வெப்​பம்.​ வியா​ழன்,​​ சனி,​​ யுரே​னஸ்,​​ நெப்​டி​யூன் ஆகிய கிர​கங்​கள் ​ ​ சூரி​யனி​லி​ருந்து மிக அப்​பால் இருப்​ப​தால் எல்​லாமே உறைந்து கிடக்​கின்​றன.​ அதா​வது,​​ இவை அனைத்​தும் பனிக்​கட்டி உருண்​டை​கள்.​ செவ்​வாய் கிர​கம் பூமியை விட சற்றே தள்ளி இருக்​கி​றது.​ ஆனால்,​​ பல விண்​க​லங்​களை அனுப்பி ஆராய்ந்​த​தில் ​ செவ்​வா​யில் இது​வரை ​ புழு பூச்சி கூட இருப்​ப​தா​கக் கண்​டு​பி​டிக்​கப்​ப​ட​வில்லை.​
​ ​ சூரிய மண்​ட​லத்​துக்கு அப்​பால் பூமி போல வேறு கிர​கம் இருக்​க​லாம் என்​ப​தில் ஐய​மில்லை.​ சூரி​யன் ஒரு நட்​சத்​தி​ரம் என்​பதை நாம் அறி​வோம்.​ அண்​ட​வெ​ளி​யில் சூரி​யன் போல கோடானு கோடி நட்​சத்​தி​ரங்​கள் உள்​ளன.​ இரவு வானைப் பார்த்​தால் நிறைய நட்​சத்​தி​ரங்​கள் தெரி​கின்​றன.​ ஆனால் ​ இந்த ​ நட்​சத்​தி​ரங்​கள் பெரும்​பா​லும் -​ சினிமா உலக நட்​சத்​தி​ரங்​க​ளைப் போல -​ ஜோடி ஜோடி​யாக உள்​ளன.​ இரட்டை நட்​சத்​தி​ரங்​க​ளு​டன் ஒப்​பிட்​டால் சூரி​யன் ஒண்​டிக்​கட்டை நட்​சத்​தி​ரம்.​ ஒண்​டிக்​கட்டை நட்​சத்​தி​ரம்​தான் நிலை​யான கிர​கங்​க​ளைப் பெற்​றி​ருக்​கும்.​
​ ஒண்​டிக்​கட்டை நட்​சத்​தி​ர​மாக இருந்​தால் மட்​டும் போதாது.​ அந்த நட்​சத்​தி​ரத்​தைச் சுற்​று​கிற கிர​கங்​க​ளில் ஒன்று பூமி அள​வில் இருக்க வேண்​டும்.​ பூமி போலவே அது அந்த நட்​சத்​தி​ரத்தி​லி​ருந்து சற்றே தொலை​வில் இருக்க வேண்​டும்.​ தவிர,​​ ​ அக் கிர​கம் தனது அச்​சில் ​ மிக மெது​வா​கச் சுழல்​வ​தாக இருத்​தல் கூடாது.​ ​(சந்​தி​ர​னில் 14 நாள் பகல்.​ 14 நாள் இரவு.​ அப்​ப​டி​யாக இருக்​கக் கூடாது.​ அப்​படி இருந்​தால் எல்​லாமே பொசுங்கி விடும்)​.​ தவிர,​​ அக் கிர​கத்​தில் பூமி​யில் உள்​ள​தைப்​போல காற்று மண்​ட​லம் இருக்க வேண்​டும்.​ தண்​ணீர் இருக்க வேண்​டும்.​ இப்​ப​டி​யான நிலை​மை​கள் இருந்​தால்​தான் உயி​ரி​னம் தோன்ற வழி ஏற்​ப​டும்.​
​ ​ இப்​ப​டி​யான சாதக நிலை​மை​கள் உள்ள ​ கிர​கம் ஒன்று சூரிய மண்​ட​லத்​துக்கு அப்​பால் அண்​ட​வெ​ளி​யில் ​ எங்கோ இருக்​க​லாம்.​ விஞ்​ஞா​னி​கள் ஆராய்ந்​த​தில் இப்​ப​டி​யான கிர​கங்​கள் சுமார் 400 இருக்​க​லாம் என்று கரு​து​கின்​ற​னர்.​ எனி​னும்,​​ இவ்​வித கிர​கங்​க​ளில் உள்ள நிலை​மை​கள் பற்றி நம்​மால் அறிய இய​ல​வில்லை.​ ஏனெ​னில்,​​ பூமியி​லி​ருந்து சக்தி மிக்க டெலஸ்​கோப் மூலம் பார்த்​தா​லும் ​ இப்​ப​டி​யான கிர​கங்​கள் தெரி​யாது.​ அதற்​குக் கார​ணம் உண்டு.​
​ ​ ​ கிர​கங்​க​ளுக்கு சுய ஒளி கிடை​யாது.​ அருகே உள்ள நட்​சத்​தி​ரத்​தின் ஒளி அக் கிர​கத்​தின் மீது பட்டு பிர​திப​லித்​தால் உண்டு.​ சூரிய மண்​ட​லத்​துக்​குள்​ளாக இருக்​கின்ற யுரே​னஸ்,​​ நெப்​டி​யூன் ஆகிய கிர​கங்​கள் டெலஸ்​கோப்​பி​லும் மங்​க​லா​கத்​தான் தெரி​கின்​றன.​ இவற்​றைப்​போல பல ஆயி​ரம் மடங்கு தொலை​வில் உள்ள கிர​கங்​கள் டெலஸ்​கோப்​பி​லும் புலப்​ப​டா​மல் இருப்​ப​தில் வியப்​பில்லை.​ கும்​மி​ருட்​டில திறந்​த​வெ​ளி​யில் இருக்​கி​றீர்​கள்.​ தொலை​வில் எங்கோ பெட்​ரோ​மாக்ஸ் லைட் தெரி​ய​லாம்.​ இந்த லைட்டி​லி​ருந்து சற்று தொலை​வில் உட்​கார்ந்​தி​ருக்​கி​ற​வர்​களை உங்​க​ளால் பார்க்க முடி​யாது.​ இது அது போலத்​தான்.​ ​
​ இருந்​த​போ​தி​லும் விஞ்​ஞா​னி​கள் நீண்ட கால​மா​கவே கிர​கங்​க​ளைத் தேடு​வ​தில் ஈடு​பட்​டுள்​ள​னர்.​ நமக்கு மிக அரு​கில் உள்​ளது என்று சொல்​லத்​தக்க ​(நான்கு ஒளி​யாண்டு தொலைவு)​ நட்​சத்​தி​ரத் தொகுப்பு செண்​டாரி நட்​சத்​தி​ரத் தொகுப்​பா​கும்.​ இது பூமியி​லி​ருந்து 37 லட்​சம் கோடி கிலோ மீட்​டர் தொலை​வில் உள்​ளது.​ அங்கு அரு​க​ருகே மூன்று நட்​சத்​தி​ரங்​கள் உள்​ளன.​ ஆனால் இந்த மூன்​றில் எந்த நட்​சத்​தி​ரத்​துக்​கும் கிர​கங்​கள் இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை.​ ​
​ ​ விண்​வெ​ளி​யில் ​ தொலை​வில் ​(சுமார் 20 ஒளி​யாண்டு தொலைவு)​உள்ள எப்ங்ண்ள்ங்​ 581 என்ற நட்​சத்​தி​ரத்​தைச் சுற்​று​கிற கிர​கங்​க​ளில் ஐந்​தா​வது கிர​கம் பூமியை ஒத்​த​தாக உள்​ளது.​ ஆனால்,​​ அதில் மனி​தர்​களை ஒத்​த​வர்​கள் உள்​ள​னரா என்​பது தெரி​யாது.​ ​ அந்​தக் கிர​கம் ​ சுமார் 2,00,00,000 கோடி கிலோ மீட்​டர் தொலை​வில் உள்​ளது.​ நம்​மி​ட​முள்ள அதி வேக விண்​க​லத்​தில் செல்​வ​தா​னா​லும் அந்​தக் கிர​கத்​துக்​குப் போய்ச் சேர பல கோடி ஆண்​டு​கள் ஆகும்.​ ஆகவே,​​ சூரிய மண்​ட​லத்​துக்கு அப்​பால் இருக்​கக்​கூ​டிய எந்த ஒரு கிர​கத்​துக்​கும் நம்​மால் போக இய​லாது.​ மனி​தன் மிக நவீன விண்​க​லம் மூலம் எங்​கெங்கோ இருக்​கின்ற கிர​கங்​க​ளில் இறங்​கு​வது போன்று ஹாலி​வுட் ஆங்​கி​லப் படங்​க​ளி​லும் மற்​றும் ஆங்​கில சீரி​யல்​க​ளி​லும் காட்​டப்​ப​ட​லாம்.​ அவை​யெல்​லாம் பொய்.​
​ வேற்​று​ல​க​வா​சி​கள் ​ நம்​மைப்​போல கெட்​டிக்​கா​ரர்​க​ளாக இருந்​தால் வயர்​லஸ் மூலம் செய்தி அனுப்​பிக் கொண்​டி​ருக்​க​லாம்.​ அவ்​வி​தம் செய்தி அனுப்​பி​னால நமக்கு நிச்​ச​யம் அது கிடைக்​கும்.​ இப்​படி ஏதே​னும் செய்தி வரு​கி​றதா என்று அறிய கடந்த பல ஆண்​டு​க​ளாக ஆராய்ச்சி நடந்து வரு​கி​றது.​ இதற்​கென்றே நஉ​பஐ ​ என்ற அமைப்பு உள்​ளது.​ இந்த அமைப்​பின் நிபு​ணர்​கள் இரவு,​​ பக​லாக விண்​வெ​ளியி​லி​ருந்து வரும் சிக்​னல்​களை ஆராய்ந்து கொண்​டி​ருக்​கின்​ற​னர்.​ நாமும் சிக்​னல்​களை அனுப்​பிக் கொண்​டி​ருக்​கி​றோம்.​ ஆனால் வேற்​று​லக மனி​தர்​க​ளி​ட​மி​ருந்து சிக்​னல் எது​வும் இல்லை.​
​ இது ஒரு​பு​றம் இருக்க ​ 1972-ம் ஆண்​டி​லும் அதற்கு மறு ஆண்​டி​லும் அமெ​ரிக்கா செலுத்​திய பய​னீர்-​10 ​ பய​னீர்-​11 விண்​க​லங்​க​ளின் இந்​தி​யா​வின் ""விசிட்​டிங் கார்ட்'' ​ வைத்து அனுப்​பப்​பட்​டது.​ அதா​வது,​​ தங்க முலாம் பூசப்​பட்ட உலோ​கத் தகட்​டில் ஆண்,​​ பெண் உரு​வம்,​​ சூரிய மண்​ட​லம்,​​ அதில் பூமி இருக்​கிற இடம் முத​லிய தக​வல்​கள் பொறிக்​கப்​பட்​டுள்​ளன.​ இந்த இரு விண்​க​லங்​க​ளும் சூரிய மண்​ட​லத்தை விட்டு வெளி​யே​றி​விட்​டன.​ இவற்​றில் பய​னீர் 10 விண்​க​லம்,​​ ரோகிணி நட்​சத்​தி​ரத்தை நோக்​கிச் சென்று கொண்​டி​ருக்​கி​றது.​ அந்த விண்​க​லம் ரோகிணி நட்​சத்​தி​ரத்தை நெருங்க இரண்டு லட்​சம் ஆண்​டு​கள் ஆக​லாம்.​ என்​றா​வது ஒரு நாள் வேற்​று​ல​க​வா​சி​கள் இந்த இரு விண்​க​லங்​க​ளை​யும் கைப்​பற்ற நேர்ந்​தால் பூமி எங்கே உள்​ளது என்ற தக​வல் அவர்​க​ளுக்​குக் கிட்​டும்.​ பின்​னர் அனுப்​பப்​பட்ட இரு வாயே​ஜர் விண்​க​லங்​க​ளில் இதே​போன்று பூமி​யைப் பற்​றிய தக​வல்​கள் அடங்​கிய ஒலித் தட்​டு​கள் வைத்து அனுப்​பப்​பட்​டன.
இந்த விண்​க​லங்​க​ளும் சூரிய மண்​ட​லத்தை விட்டு வெளி​யேறி விட்​டன.​ ஆகவே,​​ நாம் இருக்​கிற இடம் தெரி​யா​த​படி வேற்​று​ல​க​வா​சி​க​ளி​ட​மி​ருந்து நாம் ஒளிந்து கொள்ள முடி​யாது.​ தவிர,​​ பூமியி​லி​ருந்து எண்​ணற்ற சக்​தி​மிக்க வானொலி நிலை​யங்​கள் சிக்​னல்​கள் வடி​வில் ஒலி​ப​ரப்​பு​க​ளைச் செய்து கொண்​டி​ருக்​கின்​றன.​ வேற்​று​ல​க​வா​சி​க​ளி​டம் சக்​தி​மிக்க கரு​வி​கள் இருந்​தால் அவர்​க​ளால் இந்த சிக்​னல்​க​ளைப் பெற முடி​யும்.​ அதன் மூலம் அவர்​கள் பூமி எங்கே உள்​ளது என்று கண்​டு​பி​டித்து விட​லாம்.​
​ ​ மனி​தன் சந்​தி​ர​னுக்​குச் சென்று விட்டு வந்​தி​ருக்​கி​றான்.​ இது ஒரு சாத​னையே.​ ஆனால்,​​ இதை வைத்து நம்​மால் அண்​ட​வெ​ளி​யில் உள்ள எந்​தக் கிர​கத்​துக்​கும் செல்ல முடி​யும் என்று நினைத்​தால் தவறு.​ நம்​மி​டம் இருக்​கின்ற ராக்​கெட்​டு​க​ளை​யும் விண்​க​லங்​க​ளை​யும் பயன்​ப​டுத்தி இவ்​வி​தம் செல்ல ​ முடி​யாது.​ சில கோடி கிலோ மீட்​டர் தொலை​வில் உள்ள செவ்​வாய் கிர​கத்​துக்​குப் போய்​விட்டு வரு​வ​தற்கே குறைந்​தது இரண்​டரை ஆண்​டு​கள் ஆகும்.​ செவ்​வாய் கிர​கத்​துக்​குப் பத்​தி​ர​மா​கப் போய்​விட்டு வரு​வ​தற்​கான விண்​க​லங்​களை இனி​மேல் தான் நாம் தயா​ரிக்க வேண்​டும்.​ சந்​தி​ர​னுக்​குச் செல்​வ​தற்​குப் பயன்​ப​டுத்​தப்​பட்ட விண்​க​லங்​கள் செவ்​வாய் கிர​கப் பய​ணத்​துக்கு ஏற்​றவை அல்ல.​ ​
​ வேற்​று​ல​க​வாசி இருக்​கின்ற எந்​தக் கிர​கத்​துக்​கும் நம்​மால் போக வாய்ப்பே இல்லை என்​றா​லும் அவர்​க​ளு​டன் தொடர்பு கொண்டு பேசி அவர்​க​ளைப் பற்றி அறிய வாய்ப்பு உள்​ள​தா​கச் சொல்​ல​லாம்.​ ஆனால் இது​வரை விஞ்​ஞா​னி​கள் கண்​டு​பி​டித்​துள்ள பூமி போன்ற கிர​கங்​க​ளில் பெரும்​பா​லா​னவை 300 ஒளி​யாண்​டுக்கு அப்​பால் உள்​ளன.​
ஆகவே,​​ அவ்​வித கிர​கங்​க​ளு​டன் ஏதே​னும் ஒன்​று​டன் தொடர்பு கொள்ள நாம் அனுப்​பும் சிக்​னல்​கள் போய்ச் சேர 300 ஆண்​டு​க​ளுக்கு மேல் ஆக​லாம்.​ உதா​ர​ண​மாக,​​ அமெ​ரிக்க நாஸô விஞ்​ஞானி ஒரு​வர் "ஹலோ' என்று சொல்லி 600 அல்​லது 700 ஆண்​டு​க​ளுக்​குப் பின்​னர் தான் பதில் "ஹலோ' வந்து சேரும்.​ ​
÷நம்​மால் வேற்​று​லகு எதற்​கும் செல்ல முடி​யாது என்​பது போலவே வேற்​று​ல​க​வா​சி​க​ளா​லும் பூமிக்கு வரு​வது என்​பது சாத்​தி​ய​மற்​றதே.​
÷இ​வற்​றை​யெல்​லாம் ​ வைத்​துப் பார்க்​கும் போது ​ எந்த ஒரு வேற்​று​லகி​லி​ருந்​தும் ​ ""எந்த ஒரு பய​லும்'' பூமியை நெருங்க முடி​யாது என்றே தோன்​று​கி​றது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Empty Re: வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா?

Post by சரவணன் Mon May 24, 2010 11:44 am

Very Interesting. வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196 வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196 வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Empty Re: வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா?

Post by balakarthik Mon May 24, 2010 11:45 am

பிச்ச wrote:Very Interesting. வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196 வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196 வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196

தல ஏன் இந்த வெறி


ஈகரை தமிழ் களஞ்சியம் வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Empty Re: வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum