ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி

2 posters

Go down

தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Empty தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி

Post by ரபீக் Tue May 18, 2010 12:23 pm

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் மீண்டும் நக்ஸல்கள் பயங்கர தாக்குதலை நடத்தினர்.​ குண்டை வெடிக்கச் செய்து பஸ்ûஸ தகர்த்ததில் போலீஸôர் உள்பட 50 பேர் பரிதாபமாக பலியாயினர்.

கடந்த 40 நாட்களில் தந்தேவாடாவில் நக்ஸல்கள் நடத்தும் 2-வது பெரிய தாக்குதலாகும் இது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியிலிருந்து தந்தேவாடா பகுதிக்கு ஒரு பயணிகள் பஸ் திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது.​ ​ காதிராஸ் -​ புசாரஸ் பகுதிக்கு இடையே மாலை 4.45 மணியளவில் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது.​ இதில் பயணிகள் பஸ் தகர்க்கப்பட்டது.​ பல அடி உயரம் பஸ் மேலே பறந்து கிழே விழுந்து சிதறியது.​ இந்த தாக்குதலில் பஸ்ஸில் பயணம் செய்த 50 பேர் பலியாயினர்.​ இதில் நக்ஸல்களுக்கு எதிராக போலீஸôருக்கு உதவி செய்துவந்த சிறப்பு போலீஸ் அதிகாரிகளும் ​(எஸ்பிஓ)​ அடங்குவர்.​ இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸôர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

சாலையில் புதைக்கப்பட்டிருந்த ஐஇடி வகையிலான வெடிகுண்டை பஸ் வரும்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் நக்ஸல்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.

சாலை முழுவதும் இறந்து கிடந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன.​ பெரும்பாலானோரின் சடலங்கள் வெடிகுண்டு தாக்குதலில் சிதறிவிட்டன.

வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கிய பஸ் முழுவதும் உருக்குலைந்துவிட்டது.​ பஸ்ஸின் முன்பகுதி தாக்குதலில் உருகி இரும்புப் பந்து போல ஆகிவிட்டது.​ பஸ்ஸின் உடலில் சிக்கியுள்ள உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது.​ பஸ்ஸிலிருந்த பொதுமக்கள்,​​ போலீஸôரின் உடமைகள்,​​ செருப்புகள்,​​ ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

இந்தத் தாக்குதலால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.​ கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தந்தேவாடாவில் மத்திய ஆயுதப் படை போலீஸ் ​(சிஆர்பிஎஃப்)​ வீரர்கள் மீது நக்ஸல்கள் தாக்கியதில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பயங்கரத் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.

சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை முதல் நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர்.​ முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே தாக்குதலை மாவோயிஸ்டுகள் தொடங்கியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்:​​ தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.​ நக்ஸல்கள் வேட்டையில் போலீஸôருக்கும்,​​ சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் உதவி வந்த பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றார் அவர்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தந்தேவாடா முக்ரானா வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தினர்.​ இதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 8-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர்.​ இதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் 6 பேரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர்.​ பின்னர் அவர்களின் சடலங்களை கிராமத்துக்கு வெளியே வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் பலமுறை நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.​ கடந்த ஆண்டு ஜூலையில் போலீஸ் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் எஸ்.பி.​ வினோத் குமார் செüபி உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தைக் குறிவைத்த நக்ஸல்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை செயலர் ஜி.கே.​ பிள்ளை:​​ சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை செயலர் ஜி.கே.​ பிள்ளை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:​ அப்பாவி பொதுமக்களைக் கொல்வதை சமீப காலமாக நக்ஸல்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 50 பேர் இறந்துள்ளனர்.​ மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.

சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம்:​​ தந்தேவாடாவில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.​ இதுகுறித்து அவர் கூறியதாவது:

நக்ஸல்களின் குரூர முகத்தை இந்த சம்பவத்தின் மூலம் காண முடிகிறது.​ ஆதரவை இழந்து வருவதால் ஏமாற்றமடைந்துள்ள நக்ஸல்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.​ நக்ஸல்களை வேரோடு அழிக்க அனைவரும் ஒன்று திரளவேண்டும் என்றார் அவர்.

சையத் ஷாநவாஸ் ஹுசைன்:​​ இந்த நிலையில் தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் நிருபர்களிடம் கூறியதாவது:

நக்ஸல்களின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது.​ பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறது.​ நக்ஸல்களை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் அவர்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Empty Re: தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி

Post by அலட்டல் அம்பலத்தார் Tue May 18, 2010 2:16 pm

இதுகளுக்கு என்னிக்குத் தான் முடிவுகாலம் வரப் போகுதோ தெரியல ,,,
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum