புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_m10இத்தா பற்றிய விளக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தா பற்றிய விளக்கம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 6:49 pm

First topic message reminder :

இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் இத்தாஇருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் இத்தாகுறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.


இத்தா” – பொருள்:


அத்தஎன்றால் எண்ணினான் என்பது அர்த்தமாகும். நோயாளி-பயணிகளின் நோன்பு பற்றி அல்லாஹ் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்;
எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கின்றாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேணடும்.
(2:185)




இங்கே றமழானில் விடப்பட்ட நோன்புகளை ஏனைய மாதங்களில் கணக்கிட்டு நோற்பதற்குஇத்ததுன்என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் இத்தாஎன்பது விவாகரத்துப் பெற்ற பெண் அல்லது கணவனை இழந்த பெண் குறிப்பிட்ட காலம் திருமணஞ் செய்யாமல் காத்திருக்கும் காலத்தைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப் படுகின்றது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:15 pm

உஹதுப் போரில் ஷஹீதான நபித் தோழர்களின் மனைவியர்இத்தாஇருந்தனர். அவர்கள் நபியவர்களிடம் வந்து தாம் ஒன்றாக ஒருவர் வீட்டிற்தங்க அனுமதி கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் பகலில் ஒன்றுசேர்ந்து ஒருவர் வீட்டில் இருக்குமாறும், இரவில் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுமாறும் கூறினார்கள்.

(
கிதாபுல் உம்மு 5251, முஸன்னப் அப்துர்ரஷ்ஷாக்)
தலாக்விடப்பட்ட பெண்ணுக்கு கணவன் உணவும், இருப்பிடமும் அளிக்கவேண்டும். மூன்றாம் தலாக்சொல்லப்பட்ட பெண்ணுக்கு உணவு அளிக்க வேண்டியதில்லை. இந்த நிலையில் இருக்கும் பெண் உழைப்புக்காகப் பகலில் வெளியில் செல்லவும் நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

இது குறித்து ஜாபிர்(ரலி) அவர்கள் கூறும் போது;
எனது மாமி மூன்றாம் தலாக்கூறப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஈத்தமரத்தில் ஈத்தம் பழங்களைப் பரிப்பதற்காகச் சென்றார்கள். அவர்களைச் சந்தித்த ஒரு நபித்தோழர் அவர்களைத் தடுத்தார். எனவே, இது குறித்து எனது மாமி நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது நீ உனது தோட்டத்திற்குச் சென்று ஈத்தம்பழம் பறி! அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீ சிலபோது ஸதகாசெய்யலாம் அல்லது ஏதேனும் நல்லது செய்யலாம்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(
முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ, இப்னுமாஜா)

இப்னுகுதாமா(ரலி) போன்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை வைத்துக் கணவனின் மரணத்திற்காகஇத்தாஇருக்கும் பெண் கூடத் தனது வாழ்வாதாரத் தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியமிருந்தால் செல்லலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.

எனவே, “இத்தாஇருக்கும் பெண் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசியத் தேவைகளிருந்தால் தகுந்த முறையில் வெளியில் செல்வதில் தடையில்லை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:16 pm

(3) தலாக்கிற்கான இத்தா:

கணவன், மனைவியைத் தலாக்சொன்னால் அந்த மனைவியின் நிலையைப் பொருத்து இத்தாவின் சட்டம் 3 விதங்களாக அமையும்.

அ. உடலுறவுக்கு முன்னர் தலாக்:

திருமண ஒப்பந்தம் முடிந்து ஈஜாப்-கபூல்சொல்லப்பட்ட பின்னர் உடல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் கணவன், மனைவியைத் தலாக் கூறினால் அந்தப் பெண் இத்தாஇருக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுத்த நிமிடமே அவள் வேறொருவரை மணம் முடிக்கலாம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:16 pm

இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கையாளர் களான பெண்களை நீங்கள் மணம் முடித்து, அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால், நீங்கள் கணக்கிடக் கூடிய இத்தா” (எனும் காத்திருக்கும் காலம்) எதுவும் உங்களுக்காக அவர்கள் மீதில்லை. ஆகவே, அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை வழங்கி, அவர்களை அழகிய முறையில் விட்டு விடுங்கள்!” (33:49)
இவ்வாறு தலாக்கூறும் போது அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையாக அமையும் விதத்தில் போலிக் குற்றங்கள் சுமத்தக் கூடாது. சிலர் பெற்றோரின் நிர்ப்பந்தத்திற்காக மணம் முடித்து, அன்று இரவே வீட்டை விட்டும் ஓடி விடுகின்றனர். பின்னர் தனது செயலை நியாயப்படுத்தப் பெண்ணுக்கு அது சரியில்லை, இது சரியில்லையென குற்றம் சுமத்துகின்றனர். இது தவறாகும் என்பதை இந்த வசனத்தின் இறுதிப்பகுதி கூறுகின்றது.

அடுத்து, இவ்வாறு தலாக்கூறுவதால் அந்தப் பெண் பாதிக்கப்படுகின்றாள். எனவே மஹரின் அரைவாசியை அவளுக்குத் தலாக்விட்டவன் வழங்குவது கட்டாயமாகும். உதாரணமாக 1 இலட்சம் மஹர் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் 50 ஆயிரம் வழங்குவது கட்டாயம். 1 இலட்சத்தையும் வழங்குவது நல்லதாகும். இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரைவாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:17 pm

மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்து விட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.” (2:237)

நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். அந்தப் பெண் ஒரு இளவரசி ஒட்டகம் மேய்க்கும் இடையனுக்குத் தன்னை அர்ப்பணிப்பாளா?” எனக் கேட்டு, நபி(ஸல்) அவர்களுடன் வாழப் பிடிக்காததைக் கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளுக்குரிய சில அன்பளிப்புக்களை வழங்கி அவளை அவள் வழியிலேயே விட்டார்கள். (பார்க்க: புகாரி 5254, 5255, 5256, 5257)

அந்தப் பெண் நபி(ஸல்) அவர்களை அவமதித்தாள். அடுத்து, அவளாக விவாக பந்தத்தை முறித்தாய் இருந்தும் கூட நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பு வழங்கியது அவதானிக்கத்தக்கதாகும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:17 pm

ஆ. தலாக் விடப்பட்ட மாதத்தீட்டு ஏற்படக்கூடிய பெண்களின் இத்தா:

இவர்களைப் பொருத்தவரை 3 மாதத் தீட்டுக்கள் ஏற்படும் வரை அல்லது 3 மாதத் தீட்டுக்கள் ஏற்பட்டுச் சுத்தமாகும் வரை இத்தாஇருக்கவேண்டும்.

இது குறித்துப் பின்வருமாறு கூறுகின்றது;
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும்..” (2:228)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:18 pm

இ. மாதத்தீட்டு நின்ற அல்லது ஏற்படாத பெண்கள்:
இந்த நிலையில் இருக்கும் பெண்கள் பிறைக் கணக்கில் 3 மாதங்கள் இத்தாஇருக்க வேண்டும்.

இது குறித்துப் பின்வரும் வசனம் பேசுகின்றது;
உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயை விட்டும் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தா விடயத்தில்) நீங்கள் சந்தேகங்கொண்டால் அவர்களுக்கும் (இதுவரை) மாதவிடாய் ஏற்படாதவர்களுக்குமுரிய இத்தாக்காலம் மூன்று மாதங்களாகும்..” (65:4)

இந்த இத்தாவில் இருக்கும் பெண்களை வீட்டை விட்டும் வெளியேற்றவும் கூடாது. அவர்கள் தாமாக வெளியேறிச் சென்று விடவும் கூடாது.
நபியே! நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்தால் அவர்களின் இத்தாவைக் கணக்கிடக் கூடிய (மாதவிடாய் இல்லாத) காலத்தில் விவாகரத்துச் செய்யுங்கள். மேலும், “இத்தாவை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் இரட்சகனான அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அவர்கள் பகிரங்கமான ஏதேனும் மானக்கேடானதைச் செய்தாலேயன்றி, அவர்களை நீங்கள் அவர்களது வீடுகளை விட்டும் வெளியேற்ற வேண்டாம். அவர்கள் வெளியேறவும் வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவன் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றானோ, அவன் தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்டான். (சேர்ந்து வாழ) இதன் பின்னரும் அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர்.” (65:1)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:18 pm

இத்தாஇருக்கும் பெண்கள் தமது கருவில் சிசு இருந்தால் அதை மறைக்கலாகாது..

தலாக் ரஜ்பீக்கான இத்தாஇருக்கும் பெண்ணுக்கு கணவன் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும். அது அவனது பொருளாதார வசதிக்கு ஏற்ப இருக்க வேண்டும். அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பிரசவிக்கும் வரை அவளது செலவுகளை அவன் ஏற்றாக வேண்டும்.

நீங்கள் குடியிருக்கும் இடத்தில் உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களை குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் தமது சுமையைப் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவழியுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு நீங்கள் வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே (இது குறித்துப் பேசி) நல்ல முறையில் முடிவு செய்துகொள்ளுங்கள்! இதை நீங்கள் சிரமமாகக் கருதினால் அவளுக்காக மற்றொருத்தி (குழந்தைக்கு) பாலூட்டட்டும்.


வசதி உள்ளவர் தமது வசதிற்கு ஏற்பச் செலவிடட்டும். யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ, அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ், தான் வழங்கியதற்கு மேல் எந்தவோர் ஆத்மாவையும் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்தின் பின் இலகுவை விரைவில் ஏற்படுத்துவான்.” (65:6-7)


அவள் குழந்தையைப் பெற்று அந்தக் குழந்தைக்கு அவளே பாலூட்டுவதாகக் குழந்தையின் தந்தையும், தாயும் தீர்மானித்தால் பாலூட்டும் காலம் வரை அவன் அவளுக்கு வாழ்வாதாரமும், ஊதியமும் அளிக்க வேண்டும். அத்துடன் குழந்தைக்குரிய தேவைகளையும் கணவன் நிறைவேற்ற வேண்டும். குழந்தையின் தந்தை இறந்தால் கூட அவரின் வாரிசாக இருப்பவர் இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:18 pm

இது குறித்துப் பின்வரும் வசனம் விரிவாகப் பேசுகின்றது;

பால்குடியை நிறைவு செய்ய விரும்புகின்ற (கண)வருக்காகத் (தலாக் விடப்பட்ட) தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூரணமாகப் பாலூட்ட வேண்டும். (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு முறைப்படி உணவளிப்பதும், அவர்களுக்கு உடையளிப்பதும் பிள்ளையின் தந்தை மீது கடமையாகும். எந்தவொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமப்படுத்தப்பட மாட்டாது. தாய் தன் பிள்ளைக்காகவோ, தந்தை தன் பிள்ளைக்காகவோ சிரமத்துக்குள்ளாக்கப்பட மாட்டார்கள். (தந்தை மரணித்து விட்டால்) இது போன்ற கடமை அவரது வாரிசுக்கும் உண்டு. அவ்விருவரும் மனம் விரும்பியும் ஆலோசனை செய்தும் பால்குடியை நிறுத்தி விடக் கருதினால் அவ்விருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய் மூலம் பாலூட்ட விரும்பி (பெற்ற தாய்க்குக்) கொடுக்க வேண்டியதை உரிய முறைப்படி கொடுத்து விட்டால் (அதிலும்) உங்கள் மீது குற்றம் கிடையாது. நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன் என்றும் அறிந்து கொள்ளுங்கள்!” (2:233)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:19 pm

குல்உவுக்கான இத்தா:

கணவன், மனைவியை விவாகரத்துச் செய்ய உரிமை இருப்பது போலவே, வேண்டாத கணவனை விட்டும் விலகிக்கொள்ள மனைவிக்கும் உரிமை உண்டு. ஒரு பெண் தன்னைக் கணவனிடமிருந்து விடுவித்துக்கொள்வதற்கு குல்உஎன்று கூறப்படும். கணவனுடன் வாழப் பிடிக்காத மனைவி கணவரிடம் முறையிட்டு முறைப்படி திருமண ஒப்பந்தத்தை முறிப்பதற்கே குல்உஎன்று கூறப்படும். இவ்வாறு விவாகபந்தத்தை முறிக்கும் போது பெண் தனது கணவனிடமிருந்து பெற்ற மஹரைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலன்றிக் காழிமூலமோ, தலைவர் மூலமோ விவாகபந்தம் முறிக்கப்பட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சில பெண்கள் இவ்வாறு விவாகபந்தத்தை முறித்துள்ளனர். பரீரா என்ற அடிமைப் பெண்ணை ஆயிஷா(ரலி) அவர்கள் வாங்கி விடுதலை செய்த போது அவர் தனது கருப்பரான அடிமைக் கணவரை விட்டும் பிரிந்தார். நபி(ஸல்) அவர்கள் சேர்ந்துவாழ ஆலோசனை கூறிய போது அப்பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளின் கணவர் அழுது அழுது இப்பெண்ணின் பின்னால் வந்தும் கூட அவள் தனது முடிவில் உறுதியாக இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. (பார்க்க: புகாரி 5281, 5282, 5283)

இவ்வாறே, ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே! நான் தாபித்(ரலி) அவர்களின் மார்க்கப் பற்றையோ, குணத்தையோ குறை கூறவில்லை. ஆனால் அவருடன் வாழ என்னால் முடியவில்லை!என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(அவர் மஹராகத் தந்த) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுக்கின்றாயா?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொண்டாள். (பார்க்க: புகாரி 5274, 5275, 5276)
கணவன் மனைவியைத் தலாக்சொன்னால் அவன் கொடுத்த மஹரில் எதையும் பெறமுடியாது. ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் பெறமுடியாது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 8:19 pm

ஆனால், மனைவி கணவனைப் பிரிவதென்றால் அவனிடமிருந்து பெற்ற மஹரைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதேவேளை, “குல்உசெய்த பெண் ஒரு மாதவிடாய்க் காலம் இத்தாஇருந்தால் போதுமானதாகும். தாபித் பின் கைஸின் மனைவியிடம் நபி(ஸல்) அவர்கள் ஒரு ஹைழ்வரும் வரை இத்தாஇருக்குமாறு கூறினார்கள். (நஸாஈ)

இந்த ஹதீஸின் அடிப்படையில் குல்உசெய்த பெண் ஒருமாதத் தீட்டு ஏற்படும் வரை இத்தாஇருந்தால் போதுமானது. இதேவேளை, இவள் மீண்டும் அந்தக் கணவனுடன் சேர்ந்துவாழ முடியாது.
இதே கருத்தைத்தான் உஸ்மான்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), அர்ருபைப் பின்து முஅவ்வித்(ரலி) போன்றோர் கொண்டுள்ளனர்.

இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் இந்த 4 ஸஹாபாக்களின் கூற்றுக்கு ஏனைய நபித்தோழர்களிடம் மாற்றுக்கருத்து இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறுகின்றார்கள். இமாம்களில் அஹ்மத் இப்னு ஹம்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி, இப்னு தைமிய்யா போன்றோரும் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகின்றனர். எனவே, “குல்உசெய்த பெண் ஒரு ஹைல்ஏற்படும் வரை இத்தாஇருந்தால் போதுமானதாகும். (அல்லாஹு அஃலம்)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக