புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
18 Posts - 3%
prajai
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உங்களால் முடியும்! Poll_c10உங்களால் முடியும்! Poll_m10உங்களால் முடியும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களால் முடியும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 15, 2010 10:24 am

"என்னடா சுந்தர், தீபாவளிக்கு இன்னும் ஓரிரு நாள்தான் இருக்கு. நம்ம நண்பர்கள் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க. நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே?''

"ஒண்ணும் இல்லடா மணி...''

சுந்தரும் மணி என்றழைக்கப்படும் மணிவண்ணனும் டாக்டர் அம்பேத்கர் ஆங்கிலப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள். தனியார் பள்ளியில்தான் சிறந்த கல்வி வழங்கப்படுகிறது எனும் நம்பிக்கையில் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள் அவர்களின் பெற்றோர்கள். ஆனால் மணி மற்றும் சுந்தரின் பெற்றோர்கள் வசதியானவர்கள் அல்ல. எதிர்காலத்தில் பிள்ளைகளின் வேலை வாய்ப்பை மட்டுமே கருத்தில்கொண்டு கடன் வாங்கி, பொருள்களை அடகு வைத்து சிறந்த கல்வியை பிள்ளைகளுக்கு வழங்குவதாகப் பெருமைப்பட்டுக் கொள்பவர்கள்.

டாக்டர் அம்பேத்கர் பள்ளியில் படிக்கும் சிறுவர்களில் வசதி படைத்தவர்கள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் சுந்தர்தான் முதல் இடத்தில் இருப்பான். இரு சக்கர வாகனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலையின் உரிமையாளர்தான் சுந்தர் அப்பா. தொழிற்சாலைக்குத் தந்தையார் காரில் புறப்படும்போது சுந்தரும் ஏறிக்கொள்வான். பள்ளி செல்லும் வழியில் நண்பர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே காரை நிறுத்தி அவர்களையும் ஏற்றிக்கொள்வான். பணக்கார வீட்டுப் பிள்ளை என்ற எண்ணம் அவனுக்கு எப்பொழுதும் வந்ததே இல்லை. எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுப்பான். எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவன்.

மாதக் கட்டணம், தேர்வுக் கட்டணம் கட்ட சக மாணவர்கள் யாரேனும் சிரமப்பட்டால் அந்த விஷயத்தை சுந்தர் தாயிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனுடைய அப்பா மாணவர்களுக்குத் தேவையான தொகையைக் கொடுத்து கட்டச் சொல்லுவார். பள்ளியில் கல்விச் சுற்றுலா செல்லும்போது அதற்கான தொகையை செலுத்தமுடியாத மாணவர்களுக்கு அப்பாவிடம் கேட்டுப் பெற்று உடன் படிக்கும் மாணவர்களையும் கல்விச் சுற்றுலாவில் பங்கெடுக்க வைப்பான் சுந்தர். சுந்தரின் நியாயமான ஆசையை அவனுடைய தாய், தந்தை என்றுமே தடுத்ததில்லை. சுந்தருக்கு இது எப்போதும் மகிழ்ச்சியைத் தரும் விஷயமாக இருந்தது.

எப்பொழுதும் மகிழ்ச்சியாகக் காணப்படும் சுந்தரின் முகம் அன்றைக்கு வாடியிருப்பது மணிக்கு வித்தியாசமாகப்பட்டது.

"ஒண்ணுமில்லேடா மணி...' என்ற சுந்தரின் பதில் மணிக்கு திருப்தி அளிக்கவில்லை.

"டேய் சுந்தர், நண்பர்களுக்கு ஏதேனும் குறை என்றால் உடனே தீர்த்து வைப்பவன் நீ. அப்படியிருக்க நீ ஏன் கவலையுடன் இருக்கிறாய்? உடல் நலன் ஏதேனும் சரியில்லையா?'' அக்கறையுடன் விசாரித்தான் நண்பன் மணிவண்ணன்.

"வேறு ஒன்றும் இல்லை மணி. நேற்று நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு விளம்பரம் பார்த்தேன். அது முதல் என் மனம் முன்பு போல் இல்லை.''

"உன் மனம் கவலையடையும் வண்ணம் அப்படி என்னதான் இருந்தது அந்த விளம்பரத்தில்?''

- சுந்தரின் மனநிலையை அறிந்துகொள்ள ஆர்வப்பட்டான் மணி.

தான் பார்த்த விளம்பரத்தை தன் கண் முன் கொண்டு வந்தான் சுந்தர். அந்த விளம்பரம் நாளிதழின் மூன்றாம் பக்கத்தில் வலது புறம் கீழே கால் பக்கம் இருந்தது. அந்தக் கால்பகுதியின் மேல்புறம் ஒரு நிழற்படம் இருந்தது. அதில் சிறுவர், சிறுமியர்,பெரியவர்கள் என சுமார் 60 பேர் இருப்பார்கள். சிரித்த முகத்துடன் காட்சி தந்தார்கள். நிழற்படத்திற்குக் கீழ் ஆதரவற்ற இவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு நான்காயிரம், உங்கள் மகிழ்ச்சியை இவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாருங்கள் என்று இருந்ததை அப்படியே நண்பனிடம் விவரித்தான்.

"ஒவ்வொரு வருடமும் புத்தாடை, இனிப்பு, வெடி என மகிழ்ச்சியாக தீபாவளித் திருநாளை கொண்டாடி வருகிறோம். அப்பா, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் பார்த்த முகத்தையே பார்த்துக் கொண்டு யாராவது உதவி செய்ய வரமாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்ப்புடன் வாழ வேண்டி உள்ளது'' என்றான் சுந்தர்.

தன்னுடைய நண்பன் இந்த அளவுக்கு மனித நேயம் உடையவனாக இருப்பதை அறிந்து உளப்பூர்வமாக மகிழ்ந்தான் மணிவண்ணன்.

"சுந்தர், உன்னை என் நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உன் எண்ணம் போலவே உன் பெற்றோரும் இருக்கிறார்கள். உன் எண்ணத்தை உடனே நிறைவேற்றும் பெற்றோர் கிடைத்திருப்பது உனக்கும் இந்த ஊருக்கும் கிடைத்த பாக்கியம். உன் உதவும் எண்ணம் இப்போது ஊர்விட்டு சென்று விட்டது. அதை நினைக்கும்போது எல்லையில்லா இன்பமே. சரி, உன் எண்ணத்தைச் சொல்லவில்லையே.''

"இந்தத் தீபாவளி திருநாளை அவர்களோடு கொண்டாட வேண்டும். எல்லோருக்கும் புத்தாடை, இனிப்பு, சிறுவர்கள் வெடித்து மகிழ வெடி, சுவைத்து மகிழ உணவு எல்லாமும் அவர்களுக்குத் தரவேண்டும்'' என்று சுந்தர் சொன்னதும், தன்னையறியாமல் கைத்தட்டிவிட்டான் மணி.

"வெரிகுட் சுந்தர். உன் சிந்தனையும் செயல்பாடும் என்னை மென்மேலும் வியக்க வைக்கிறப். இதை உன் பெற்றோரிடம் தெரிவிக்கலாமே.''

"வழக்கம்போல் அம்மாவிடம் சொல்லிவிட்டேன். அப்பா ஊரில் இல்லை. அவரது தொழில் விஷயமாக வெளியூர் சென்றுள்ளார். வந்ததும் சொல்லலாம் என்றுள்ளேன்''

"சுந்தர், உறுதியாய் நீ நினைத்ததை உன் தந்தை செய்வார். சிலர் அவரது பெயருக்கும் சம்மந்தமில்லாமல் இருப்பார்கள். ஆனால் தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப தயாளகுணம் படைத்தவராய் உள்ளார் உன் தந்தை. ஊரிலிருந்து வந்ததும் உன் விருப்பத்தைச் சொல். உடனே நிறைவேற்றுவார்'' என்று நண்பனின் சிந்தனைக்கு உரமிட்டான் மணிவண்ணன்.

இருவரும் பேசிக் கொண்டிருந்ததில் வெளிச்சத்தை இருள் கவ்விக் கொண்டதை உணரவே இல்லை. இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.

வெளியூருக்குச் சென்றிருந்த சுந்தரின் அப்பா தயாநிதி தீபாவளிக்கு முதல் நாள்தான் வந்தார். ஊரில் இல்லாததால் வேலைப்பளு காரணமாக தொழிற்சாலையிலேயே தங்கியிருந்து வேலைகளை முடித்துவந்தார். அதனால் சுந்தர் தன் எண்ணத்தை அப்பாவிடம் தெரிவிக்க இயலவில்லை. விடிந்தால் தீபாவளி. தனக்கு புத்தாடை, வெடிவகைகள் எல்லாம் அப்பா வாங்கி வந்திருப்பதைப் பார்த்தான். இனிப்பு வகைகளை வேலைக்காரர்கள் உதவியுடன் அம்மா செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான். ஆங்காங்கே வெடி வெடிக்கும் சப்தம் அவன் காதில் விழுந்த வண்ணம் இருந்தது. சுந்தரின் சிந்தனை முழுதும் அவன் இரண்டு நாளைக்கு முன் பார்த்த விளம்பரத்தில் இருந்தது. அந்த நிழற்படம் அவன் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. நாம் நினைத்தபடி இந்த வருடம் தீபாவளியை ஆதரவற்றவர்களுடன் கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தில் அன்று இரவு உறங்கிவிட்டான்.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வீடு பரபரப்பானது. வழக்கம்போல் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து,பலகாரங்களைச் சுவைத்து வெடி வெடித்து நாளை ஓட்ட மனமில்லாமல் படுக்கையிலிருந்து எழாமல் படுத்திருந்தான்.

"சுந்தர் எழுந்து குளித்துவிட்டு புறப்படு. நாம் இந்தத் தீபாவளியை ஒரு மாற்றத்துடன் கொண்டாடப் போகிறோம்'' என்றார் தந்தை.

தந்தை சொல்லுக்கு மதிப்பு கொடுப்பவன் சுந்தர். அதனால் அப்பா சொன்னபடி புறப்பட்டு வந்தான். புத்தாடை அணிந்து புதுப்பொலிவுடன் காணப்பட்டான். அப்போதுதான் அவனுக்கு கேட்க மறந்தது நினைவுக்கு வந்தது.

"நாம் எங்கே போகிறோம் அப்பா?''

"சஸ்பென்ஸ் சுந்தர். காரில் உட்கார். இன்னும் இரண்டு மணிநேரத்தில் வித்தியாசமான சூழ்நிலையில் இருக்கப்போகிறோம்.''

அம்மாவிடம் கேட்டால், தனக்குத் தெரியாது என கை விரித்தார். கார் பெருந்துறைப்பட்டை விட்டு சென்னையை நோக்கி விரைந்தது.

அதிகாலையில் எழுந்ததால் சுந்தர் கார் பயணத்தில் தூங்கிவிட்டான். தாம்பரத்தை நெருங்கும் வேளையில் கண் விழித்தான். சற்று நேரத்தில் "ஆதரவற்றோர் ஆஸ்ரமம்'' எனும் பெயர் தாங்கிய வளைவு பெயர்ப்பலகைக்குக் கீழ் கார் உள்ளே நுழைவதைக் கண்டான்.

"அம்மா, இது நான் அன்று சொன்ன ஆஸ்ரமம்தானே'' என்றான்.

"ஆமாம் சுந்தர், அதே ஆஸ்ரமம்தான்''

"இங்கு எதற்காக வந்துள்ளோம்?''

"நீ தானே ஆதரவற்றவர்களுடன் இந்தத் தீபாவளியை கொண்டாட விரும்பினாய்?'' என்றார் தந்தை.

"அம்மாவிடம் நான் சொன்னபோது நீங்கள் வெளியூர் சென்றிருந்தீர்கள். உங்களிடம் இத்திட்டம் பற்றி பேசவில்லையே!''

"அம்மா தொலைபேசி செய்து உன் விருப்பத்தைச் சொன்னார்கள். நான் என் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு ஆஸ்ரமம் வந்து நிர்வாகியைப் பார்த்துப் பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டுத்தான் ஊர் வந்தேன்'' என்றார் அப்பா.

அம்மாவையும் அப்பாவையும் மாறிமாறிப் பார்த்தான் சுந்தர்.

அவனையறியாமல் ஆனந்தக்கண்ணீர் அவனது கண்களைக் குளமாக்கின.


பாரதிவாணர் சிவா




உங்களால் முடியும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 15, 2010 10:56 am

அருமையான கதை. எல்லா மாணவர்களும் இப்படி இருந்தால் சுபிட்சம் வரும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக