Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 2:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரப்படாதே!
Page 1 of 1
அவசரப்படாதே!
முன்னொரு காலத்தில் லாங்சூ என்ற கிராமத்தில் விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் ஏழை. ஒரு நாள் நண்பகலில் அவன் தன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு கொக்கு பறந்து வந்து அவன் காலடியில் விழுந்தது.
அந்த விவசாயி நேர்மையானவன்; இரக்கம் நிரம்பியவன்; நல்லவன்; அவன் அந்தக் கொக்கின் நிலை கண்டு வருந்தினான். அது பறக்க முடியாமல் கீழே விழுந்து கிடந்தது. அவன் பரிதாபத்துடன் அதைக் கையில் எடுத்தான். அது மின்னலடிக்கும் வெண்மை நிறத்தில் இருந்தது. அதன் இறகுகள் வெல்வெட்டைப் போல மிருதுவாக இருந்தன. அந்தக் கொக்கின் இறக்கைக்குள் உட்பகுதியில் ஓர் அம்பு தைத்திருந்தது. அதைக் கண்டவுடன் அதை மெல்லப் பிடுங்கி எடுத்தான். அருகில் உள்ள நீரில் அந்தக் காயத்தைக் கழுவினான். பக்கத்தில் உள்ள செடியின் இலைகளைக் கசக்கிக் காயத்தில் பிழிந்தான். அது கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உணர்வை அடைந்தது.
விவசாயியின் பணிவிடையை அது புரிந்து கொண்டது. இப்போது அதன் வலி முழுவதும் நின்று விட்டது. மூலிகைச் சாற்றின் உதவியினால் காயம் சட்டென ஆறிப் போய்விட்டது. இப்போது கொக்கு புத்துணர்ச்சி அடைந்தது.
''போ, போய் விடு. திரும்பவும் எந்த வேட்டைக்காரன் கண்ணிலும் பட்டு விடாதே!'' என்று வானத்தில் அதைப் பறக்க விட்டான்.
கொக்கு நன்றியைத் தெரிவிப்பது போல அவன் தலையைச் சுற்றி மூன்று முறை வட்டமடித்தது. பின்னர் பறந்து சென்றது. விவசாயி திருப்தி அடைந்தான்.
'இன்றையத் தினம் நல்ல காரியம் ஒன்றைச் செய்தேன்!' என்று மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்தான். அன்றிரவு அவன் வீட்டுக்குத் திரும்பியபோது அவனுக்காகப் பேரழகியான ஒரு பெண் காத்திருந்தாள்.அவனைக் கண்டவுடன், ''நன்றாக உழைத்துக் களைத்து வந்திருக்கிறீர்கள். கை கால், முகம் கழுவி விட்டு வாருங்கள். சாப்பாடு தயார்!'' என்றாள் அவள்.
அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
''நான் தப்பான வீட்டுக்கு இருட்டில் அடையாளம் தெரியாமல் வந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்,'' என்றான் அவன்.
''இல்லை. சரியான வீட்டுக்குத்தான் வந்து இருக்கிறீர்கள். இது உங்கள் வீடுதான்!''
''சரி, நீ யார்?'' என்றான் விவசாயி.
''உங்கள் மனைவியாகப் போகிறவள்!''
''இருக்க முடியாது. நான் பரம ஏழை. என்னைக் கல்யாணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணுமே சம்மதிக்க மாட்டாள்!''
''நான் சம்மதிக்கிறேன், நீங்கள் ஏழையாக இருந்தாலும்!''
''என் வருமானம் இருவருக்கும் போதாது!''
''அதனால் என்ன? நான் அரிசி கொண்டு வந்திருக்கிறேன். அது போதும்!'' அவள் ஒரு சின்ன பையைக் காட்டினாள்.
விவசாயி சிரித்தான். ''இந்தப் பையில் உள்ள அரிசி வாழ்நாள் முழுவதும் நமக்குப் போதுமா?''
''போதும்!'' என்ற அவள், அந்தப் பையைத் தலைகீழாகக் கொட்டினாள். அதிலிருந்து நிற்காமல் அரிசி கொட்டிக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் அந்த இடத்தில் ஒரு மலை போல அரிசி குவிந்துவிட்டது.
அவள் பையை அதன் எதார்த்த நிலைக்குக் கொண்டு வந்தாள். அரிசி வருவது நின்றது. அதன் பின் அவளுடைய வற்புறுத்தலுக்கு இணங்கிய அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான்.
சில நாட்களாயின. அடுத்த அறையில் துணி நெய்யும் தறி ஒன்றை அவள் அமைத்துத் தரச் சொன்னாள். அவன் தங்களிடம் இருந்த அரிசியை விற்று அவள் விரும்பியபடியே தறி ஒன்றை அமைத்துக் கொடுத்தான்.
''இன்னும் ஏழு நாட்கள் வரை இந்த அறையினுள் எட்டிக் கூடப் பார்க்கக் கூடாது!'' என்று நிபந்தனை விதித்த அவள் உள்ளே சென்று கதவுகளை மூடிக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தாள்.
விவசாயி நிபந்தனையை மீறவில்லை. ஏழாவது நாள் அவள் வெளியில் வந்தாள். அவள் கையில் மிக அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பட்டுத் துணி ஒன்று இருந்தது. அதில் தங்க ஜரிகையும், வெள்ளி ஜரிகையும் அங்கங்கே இழைக்கப்பட்டிருந்தன.
அவன் அதைக் கண்டு பேரதிசயம் அடைந்தான்.
''இதை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போங்கள். குறைந்தபட்ச விலை நூறு பணம்; அதிக பட்ச விலை ஆயிரம் பணம். உங்கள் சாமர்த்தியத்துக்கு ஏற்ப விற்று விட்டு வாருங்கள்,'' என்றாள்.
அவன் மறுநாள் சந்தைக்குப் போனான். அங்கே வந்த இளவரசன் ஒருவன் அதை மிக அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றான். இது அவன் எதிர்பாராதது.
பெருமகிழ்ச்சி அடைந்தான். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அவசரம் அவசரமாக வீடு திரும்பினான். அவன் வீட்டுக்குள் வந்தபோது அவள் வீட்டின் கூடத்தில் காணப்படவில்லை.
தறி உள்ள அறையிலிருந்து தறி இயங்கிக் கொண்டிருப்பது மட்டும் காதில் விழுந்தது. அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. ஏழு நாட்களாக இரவும், பகலும் அடக்கி வைத்திருந்த ஆர்வம், அவனை அவசரப்பட வைத்தது.
இவள் நூலும், ஜரிகையும் இல்லாமல் எப்படி இவ்வளவு நேர்த்தியான துணியை நெய்கிறாள்? பார்க்கத் துடித்தது மனது. எனவே எதிர்பாராவிதமாக அவள் இருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
அவனுக்குள் பயங்கர அதிர்ச்சி. உள்ளே அவனுடைய மனைவியைக் காணவில்லை. ஒரு வெண்மையான கொக்கு தான் அந்தத் தறியைப் படுவேகமாக இயக்கிக் கொண்டிருந்தது. நூலுக்குப் பதிலாக தன்னுடைய இறகுகளை அது பயன்படுத்திக் கொண்டு இருப்பதை அவன் பார்த்தான்.
அவனைக் கண்ட கொக்கு பிரமித்துப் போனது. தன்னுடைய வேலையை நிறுத்தியது. அது இப்போது பேசியது.
''இந்த அவசரம் ஏன்? இப்போது நீங்கள் நான் ஒரு கொக்கு என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். வேட்டைக்காரனின் அம்பிலிருந்து காப்பாற்றப்பட்ட கொக்கு நான் என்பதை மட்டும் இப்போது உங்களுக்குச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
''உங்கள் உதவிக்காக நன்றி செலுத்த வந்தேன். ஆனால், நீங்கள் என் சொல்லை மீறி இந்த அறைக்குள் என் அனுமதியின்றி வந்து விட்டீர்கள். என் ரகசியம் தெரிந்த ஒருவருடன் என்னால் தொடர்ந்து வாழ முடியாது!''
கொக்கு உயரக் கிளம்பியது.
''இல்லை. நான் எதுவும் யாரிடமும் சொல்ல மாட்டேன்!'' பரிதாபமாகக் கத்தினான் விவசாயி. கொக்கு அதன் பின் ஒரு கணம் கூட அங்கே நிற்கவில்லை. விண்ணில் உயரக் கிளம்பி எங்கோ சென்று மறைந்தது.
தன் அழகிய கொக்கு மனைவி தன்னை விட்டுப் பறந்து போனதை எண்ணியே ஏங்கிப் போனான் விவசாயி. திடீர் என்று வந்த மனைவி, திடீரென்று பறந்து போனதால் 'அவள் பறந்து போனாளே... என்னை மறந்து போனாளே...' என்று பாடிக் கொண்டே திரிகிறான் விவசாயி.
அந்த கொக்கு இந்தியா பக்கம் பறந்து வந்தா கொஞ்சம் பிடிச்சி கொடுங்களேன் விவசாயியிடம்.

***
சிறுவர் மலர்
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum