ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி இதயங்கள் ( 1 )

+2
மஞ்சுபாஷிணி
பாரதிப்பிரியன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by பாரதிப்பிரியன் Thu May 13, 2010 1:30 am

அத்தியாயம் ஒன்று: காதலின் நிறம் கறுப்பு

கருமையாகி விட்ட நீல வானம் உலகத்தின் அநீதிகளை எண்ணி எண்ணி அழுதது, ஓ ஓ என்று கதறிக் கதறி அழும்போது பக்கவாத்தியமாய் இடியும் கோபத்துடன் மின்னலும் தோன்றித் தோன்றி மறைந்தன. வீதிகளில் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. பகலில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் கடைகள், வாகனங்களின் நடமாட்டம் அப்பகுதி ஒரு நகரம் என்பதை உறுதிப்படுத்தியது..

உயர வளர்ந்து எம்மூரில் பார்த்ததெல்லாம் பனை மரத்தையும் தென்னை மரத்தையும் தான், இங்குதான் அவற்றை எல்லாம் விட பல மடங்கு உயரமான கட்டடங்களைப் பார்க்கின்றான் குணாளன். இங்கு வந்து ஒரு சில மாதங்களே ஆகியிருக்கும், இங்கு வருவதற்கு அவன் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கையில் இருந்த காசு எல்லாம் இழந்து நிறுவனப் பிரதிநிதி ஒருவனால் ஏமாற்றப் பட்டு....அவை எல்லாம் சாதாரணமாகவே இந்த உலகத்தில் நடப்பதென்பதை இப்போழுதுதான் தெரிந்து கொண்டான்.

பின்னர் நண்பன் ஒருவனின் உதவியுடன் உல்லாசப்பயணி போன்று ஒருமாத அவகாசத்தில் இங்கு ஷார்ஜா வந்து சேர்ந்துள்ளான். இன்னும் ஐந்து நாட்களே இங்கு இருக்கலாம், முந்தய நாட்களில் நாட்கள் அவன் அலையாத இடமே கிடையாது, உனது படிப்பிற்கு வேலை இலகுவாகக் கிடைத்துவிடும் என்று அவனைச் சார்ந்தோர் கூறியதால்தான் இருந்த பணம் எல்லாம் செலவழித்து, ஒரே ஒரு வீட்டை அடைமானம் வைத்து மேலும் பணம் போதாமல் இருக்கவே வட்டிக்கு வேண்டி இங்குவந்துள்ளான். நாளை கடைசி நேர்முகத் தேர்வு, ஊரில் படித்த கணினித் தொழில்நுட்ப வேலைக்கு இங்கு நல்லதொரு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் கடைசி நாள்.

ஷார்ஜா பெரிய தபால் நிலையம் அருகே இருந்த அவன் நண்பன் குடியிருக்கும் வாடகை வீடொன்றில் குணாளன் தங்கியிருந்தான்.

“குணா.... மச்சான்...ஒருக்கா..அல்-மதீனா சுப்பெர்மார்கேட்டுக்குப் போய் வாரீயா..? மீனும் கோழியும் வேண்டவேனும்..சமைக்க ஒன்றுமில்ல..”
“சரிடா மச்சி...நாளைக்கு கடைசி நாளடா...எனக்குப் பயமா இருக்கு..வேண்டின கடன் எல்லாம் சேர்த்து சுமார் பத்து லட்சம் ரூபா ஆகுது...என்ன செய்யப் போகிறேனோ தெரியலடா...உனக்கும் இப்ப நான் பாரமா...”
“சும்மா இர்டா..எனக்கு ஒன்றும் நீ பாரமில்லை...உங்கட அப்பா எங்கட குடும்பத்துக்கு அந்தக் காலத்தில செய்த உதவிய நாங்க ஒருபோதும் மறக்கமாட்டோம் தெரிஞ்சுதா...ஒரு காலத்தில எப்படி இருந்த குடும்பம் உங்கட..இப்ப....எல்லாத்துக்கும் ஒரு காலம் கட்டாயம் உண்டு..நீ கவலைப் படாதே..இன்னும் ஒரு மாதம் டூரிஸ்ட் விசாவ நீட்டலாம்..நான் உனக்கு உதவுறன்..ஆனா..என்னட்ட அதுக்கு பணம் இல்ல..எப்படியும் ஆயிரம் த்ராம்ஸ் தேவை...என்ட முதலாளிட்டத்தான் கேக்கவேண்டும் இன்றைக்கு வெள்ளிகிழமை...ஞாயிறு வேலைக்கு போகும்போது கேக்குறன்....கவலைப்படாதே...” ஒரு பெருமூச்சுடன் பேசி முடித்தான் அவன் நண்பன் நீலன்.
“நீலா...உன்னை நண்பனா அடஞ்சதுக்கு நான் கொடுத்தது வச்சிருக்கோணும்”

அந்தப் புழுதி மண்ணில் சங்கமித்த மழைத்துளிகளால் ஏற்பட்ட மண்ணின் வாசனையை முகர்ந்து கொண்டே அல்-மதீனா சந்தைக்கடைக்கு சென்றான். அங்கு அப்போதுதான் கவனித்தான் ஏதோ ஒரு தெரிந்த முகம், ஒரு பெண்..மிகவும் விலை உயர்ந்த உடைகளுடன் ஆடம்பரமாக உடுத்து, அழகு சாதனப் பொருள் உள்ள இடத்துக்கு அருகாமையில், அவன் அந்தப் பெண்ணையே நோக்குவதைக் கண்ணுற்றதாலோ என்னவோ அவள் அவனை நோக்கி வந்தாள்.
“என்ன யாரென்று யோசிக்கிறமாதிரி தெரியுது? என்னைத் தெரியவில்லையா...? கெஸ்...குணா...நீங்க இங்க ஷர்ஜாக்கு வந்த விடயம் முந்தாநாள்தான் எங்களுக்குத் தெரியும்...”
“நீங்க...முகம் பார்த்தமாதிரி இருக்கு, ஆனால்...ஞாபகமில்லை...”
“அட..போச்சுடா..நான்...அமுதினி....என் பெயராவது ஞாபகம் இருக்கா...?”
“ஐயோ....அமுதாவா...நீங்க அமுதாவா...? ஆளே வித்தியாசமா..கடைசியா உங்களை வேறு நிலையில சந்திச்சது இப்ப இப்படி....அதுதான்....உங்கட சொந்தப் பெயர் மல்லிகாதானே?”
“ம்ம்ம்...சத்தமாப் பேசாதீங்க...நான் அங்க இருந்தது...இங்குள்ள ஒருவருக்கும் தெரியாது.....”
“உண்மைய சொன்னா...நீங்க எல்லோரும் இறந்திட்டீங்க என்றுதான் ஊரில கதை...கடவுள் புண்ணியம்...எப்படியோ காப்பாத்திட்டார்....இந்தச் செய்திய சொன்னா நீலன் சந்தோசப்படுவான்...”
“இல்லை குணா...நீலனுக்குத் தெரியும் நான் இங்க இருக்கிறது...அதுமட்டுமல்ல எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டுது..தாயகத்தில இருந்தா பிரச்சனை என்று வேறு எங்காவது போகவேணும் என்று தீர்மானிச்ச போது எனக்குக் கை கொடுத்தார் ரமணன்..அவர் இங்க பெரிய கம்பியூட்டர் நிறுவனம் வச்சிருக்கார்...நீங்க எப்ப வந்தீங்க..”
அவன் தனது கதையை சுருக்கமாகச் சொன்னதும்,
“நீங்க இந்த வேலை கிடைக்காட்டி கவலைப் படவேண்டாம்..அவரிட்ட சொல்லி உங்களுக்கு வேலை ஒழுங்கு படுத்துறன்”
“தேங்க்ஸ் அமு..இல்லை இல்லை..மல்லிகா. உங்களுக்கு வானதி எங்க என்று தெரியுமா...?”
“குணா...இன்னும் அவள நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்களா...? அப்ப ஒரு குட் நியூஸ்...”
“என் நிலைமை இப்ப சரியில்ல...ஆனாலும் அவள என்னால மறக்கமுடியாது...என்ன குட் நியூஸ்?”
“வானதி வேறு யாருமில்ல..அவரின்ட தங்கச்சிதான்...அவளும் எங்களோடதான் இருக்காள்.” என்று சொல்லி குணாளனைப் பார்த்து மெல்லிதாக புன்னகை புரிந்தாள்.
மல்லிகா சிறு வயதில் இருந்தே நீலனுக்குத் தெரிந்த...நீலனின் பாடசாலைக்காலத்துக் காதலி, ஆனால் பின்னர் நாட்டின் மேல் கொண்ட பற்றினால் மல்லிகா போராடச் சென்றுவிட்டாள். மல்லிகாவுக்குத் தெரிந்த ஒரு அழகு முல்லைதான் வானதி. வானதி மல்லிகாபோல் போராட்டம் என்று செல்லவில்லை. குணாளன் வானதியைக் கண்டது மல்லிகா வீட்டில்தான், பின்னர் வானதி வீட்டை மோப்பம் பிடித்து பாடசாலைக் காதல் வைபவத்தில் கலந்துகொண்டான். திடீரென எழுந்த இடம்பெயர்வால் திசை மாற்றம் அடைந்த அவனது ஒரு பக்கக் காதல், காதலை வானதியிடம் கேட்காமலேயே முற்றுப் பெற்றது. இப்போது மீண்டுமந்த வானதி என்றதும் மனதில் ஒரு சில பட்டாம்பூச்சிகள் இறக்கை கட்டத் தொடங்கின.

“என்ன மச்சான்...இவ்வளவு நேரம்...நான் வெங்காயம் எல்லாம் நறுக்கிவிட்டு உன்ன பாத்துக் கொண்டிருக்கிறன்..”
“நீலா....நான் மல்லிகாவைப் பார்த்தன்...அதுதான்...”
“ஸ்டாப்...மேல பேசாத....” முகம் சிவக்க கோபத்துடன் சீறினான்.
“என்னடா..இது...அவளுக்கு பெரிய கஷ்டம் ஏற்பட்டு..இப்ப நல்லா இருக்காள்...அதப் போய் சந்தோசம் கொள்ளாம...நீ உண்மையிலேயே அவளை காதலிச்சு இருந்தா...அவள் செத்திட்டாள் என்ற நியூஸ் வந்த பின்னர் உண்மை எது என்று அலசிப் பார்த்திருப்பாய்...அவளும் உன்னைத் தேடி இருப்பாள் கிடைக்கேல..இப்ப வானதியின் அண்ணாவ..”
“அத நான் ஒத்துக்கொள்ள மாட்டன்...அவளுக்கு என் மேல காதல் இருந்தது உண்மையென்றால்....நானும் இஞ்சதான் அஞ்சு வருஷமா டிரைவர் வேல பார்த்துக்கொண்டிருக்கன்.அவளுக்கு தெரியும்....என்னாலயும் அவள கூப்பிட முடியும்...என்னட்ட ஒரு வார்த்தை கேட்டாளா...? இல்லடா...அவளுக்கு காசும் பகட்டு வாழ்க்கையும்தான் முக்கியமாப் போச்சுது...ஏதோ விடுதலைக்காக சில காலம் பாடுபட்டாள் என்பதால்....ம்ம்....வேண்டாம் அந்தக் கதை...”
“அவளுக்கு இப்பதான் தெரியும் நீ இங்க இருப்பது...”
“பொய்...நல்லா பொய் சொல்லுறாள்...முதல்ல படிக்கிற காலத்தில...என்னை காதலிச்ச மாதிரி நடிச்சிட்டு, பிறகு அங்க தேவையில்லாம போய்ச் சேர்ந்திட்டு...காதல் இருந்தா...என்ன அப்பயே விட்டு போயிருக்க மாட்டாளே..!”
“நீலன்...நீ எதையும் சொல்லு...ஆனா போராட்டத்தை மட்டும் கொச்சை படுத்தாதே...பிறகு....”
“என்னடா...பிறகு...நீயும் என்ன விட்டுப் போய்விடுவீயாக்கும்....ஓகோ....அந்தச் சிறுக்கி சொல்லியிருப்பாள்...வாங்கோ...குணா...உங்களுக்கு வேலை நாங்க தாறோம் என்று....அதுவும் உன்ட வானதியப் பற்றியும் சொல்லியிருப்பாளே..”
“அப்ப....வானதி இருக்கிறது தெரிஞ்சு கொண்டுதான் இத்தனை நாளும் நீ எனக்குச் சொல்லவில்ல...அதுவும்...அவங்களிட்ட சுலபமாக வேலை கிடைக்கும்...அதையும் சொல்லேல...நீயும்...”
“என்ன...வா...வா...சொல்லு..நீயும் ஒரு நண்பன் என்று சொல்லத்தானே ட்ரை பண்ணற....இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் ‘உன்னைப்போல நண்பன் கிடைக்க...என்று பிதற்றினாய்...” தொண்டை கிழியக் கத்திய நீலனின் கைகள் அருகிலிருந்த சிகரட் பெட்டியைத் தொட்டது.
“டேய்...நீலன்...கூல்...சரி இப்ப அந்தக் கதை வேண்டாம்...ஓகேயா..? இந்த சிகரட் குடிக்கிறத முதலில நிப்பாட்டு...”
“கதைய மாத்தாத....நீ வானதி என்று அவளிட்ட போனாய்...உனக்கும் இந்தக் கதிதான் தெரிஞ்சுகொள்...இந்தக் காலத்தில காதல் என்று ஒன்றுமில்ல...உனக்கு ஒண்டு தெரியுமா...காதலுக்கு நிறம் என்ன என்று ஆராவது கேட்டா...நான் சொல்றபதில்...கறுப்பு..”

(தொடரும்....)

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by மஞ்சுபாஷிணி Thu May 13, 2010 10:10 am

அருமையான தொடக்கம் பாரதி.....

காதல் எத்தனை உண்மையாய் இருந்தாலும் காலத்தின் கட்டாயம் விதிவசம் இழந்துவிடுகிறது...

உண்மைக்காதல் கண்டிப்பாய் மனதை புரிந்துக்கொண்டு ஆதரவு தரும்.... தவறாய் நினைக்காது....

நீலனின் மனம் கோபத்தில் இருக்கிறது... மல்லிகாவின் நிலை அப்போது இருந்தது எப்படின்னு நீலன் அறிய வாய்ப்பில்லை....

வானதியும் குணாவும் காதலில் சேர என் வாழ்த்துக்கள்...

தொடக்கமே மிக அருமை....

அன்பு பாராட்டுக்கள் பாரதி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணாடி இதயங்கள் ( 1 ) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by பாரதிப்பிரியன் Thu May 13, 2010 5:10 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான தொடக்கம் பாரதி.....

காதல் எத்தனை உண்மையாய் இருந்தாலும் காலத்தின் கட்டாயம் விதிவசம் இழந்துவிடுகிறது...

உண்மைக்காதல் கண்டிப்பாய் மனதை புரிந்துக்கொண்டு ஆதரவு தரும்.... தவறாய் நினைக்காது....

நீலனின் மனம் கோபத்தில் இருக்கிறது... மல்லிகாவின் நிலை அப்போது இருந்தது எப்படின்னு நீலன் அறிய வாய்ப்பில்லை....

வானதியும் குணாவும் காதலில் சேர என் வாழ்த்துக்கள்...

தொடக்கமே மிக அருமை....

அன்பு பாராட்டுக்கள் பாரதி....

உங்கள் பின்னூட்டலிற்கு நன்றிகள் அக்கா...உங்கள் பாரட்டுதலால் கதையை மேலும் தொடர ஒரு "பூஸ்ட்" கிடைத்துள்ளது! கண்ணாடி இதயங்கள் ( 1 ) 678642
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 9:06 pm

நன்றாக உள்ளது நன்றிகள்... தொடருங்கள் .... நண்பரே




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by ஹனி Thu May 13, 2010 11:29 pm

கதை மிகவும் அருமையாக உள்ளது. மீதி கதையையும் படிக்க ஆசையாக உள்ளது.


கண்ணாடி இதயங்கள் ( 1 ) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by இளமாறன் Thu May 13, 2010 11:35 pm

அருமை பிரியன் கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196 கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196

கதை படிக்க படிக்க வேண்டும் என்றே சொல்கிறது... எப்போ அடுத்த பாகம்??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்ணாடி இதயங்கள் ( 1 ) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by பாரதிப்பிரியன் Fri May 14, 2010 11:44 pm

எஸ்.எம். மபாஸ் wrote:நன்றாக உள்ளது நன்றிகள்... தொடருங்கள் .... நண்பரே
நன்றி சகோதரா....உங்கள் ஆதரவில் கதை தொடரும்...
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by பாரதிப்பிரியன் Fri May 14, 2010 11:46 pm

ஹனி wrote:கதை மிகவும் அருமையாக உள்ளது. மீதி கதையையும் படிக்க ஆசையாக உள்ளது.
நன்றி சகோதரி..மிக விரைவிலேயே மீதிக்கதையைத் தருகிறேன்.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by பாரதிப்பிரியன் Fri May 14, 2010 11:48 pm

இளமாறன் wrote:அருமை பிரியன் கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196 கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196

கதை படிக்க படிக்க வேண்டும் என்றே சொல்கிறது... எப்போ அடுத்த பாகம்??

நன்றி சகோதரா...விரைவிலேயே எழுதுகின்றேன்...
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by சம்சுதீன் Sat May 15, 2010 2:01 am

அருமை கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196 கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கண்ணாடி இதயங்கள் ( 1 ) Empty Re: கண்ணாடி இதயங்கள் ( 1 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum