புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நம்பிக் கெட்ட சன்யாசி I_vote_lcapநம்பிக் கெட்ட சன்யாசி I_voting_barநம்பிக் கெட்ட சன்யாசி I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக் கெட்ட சன்யாசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:28 pm

ஓர் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் ஒரு சன்யாசி வசித்து வந்தான்.

சன்யாசி தொடக்கத்தில் உத்தமனாகத்தான் இருந்தான்.

அடிக்கடி வேள்விகள் செய்வான். பக்திநெறி தவமும் ஆன்மீக உபதேசங்களை மக்களுக்குச் செய்வான். நோய் நொடி என்று வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்து நோயை குணப்படுத்துவான்.

இந்தக் காரணத்தால் சன்யாசிக்கு ஊர் மக்களிடம் நல்ல மதிப்பும் செல்வாக்கும் இருந்தது.

மக்கள் சன்யாசியை சந்திக்க வரும்போதெல்லாம் நல்ல விலை மதிப்புடைய பல பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்துச் செல்வது வழக்கம்.

சன்யாசி தனக்குப் பரிசுப் பொருளாக வந்தவற்றை யெல்லாம் விற்று தங்கமாக மாற்றிக் கொண்டான்.

சன்யாசி தங்கத்தை ஒரு துணிப்பைக்குள் வைத்து அந்தப் பையை எப்போதுமே தன் கட்கத்தில் வைத்து, பாதுகாக்க முற்பட்டான்.

தங்கம் சேர்ந்த உடனே சன்யாசி வழக்கமான ஒழுக்க நெறிகளைக் கை விட்டுவிட்டான், மன நிம்மதி அவனை விட்டுப் பறந்துவிட்டது. மேலும் மேலும் தங்கத்தைச் சேரக்க வேண்டும் என்ற வெறி கொண்டு அலையத் தொடங்கிவிட்டான்.

ஒரளவுக்கு மேல் போனால் பணத்தால் நன்மைக்குப் பதில் தீமைகள்தான் அதிகமாக விளையத் தொடங்கிவிடும்.

தேவைக்கு மேல் பணம் சேரும்போது மனிதன் அறிவை இழந்து விடுகின்றான். ஆண்மையை இழந்து விடுகின்றான். மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் இழந்து விடுகின்றான்.

சேர்த்த செல்வம் எப்போது கை நழுவிப் போய் விடுமோ - ஏமாந்தால் கள்வர்கள் அபகரித்துக் கொள்வார்களோ என்று எப்போதும் திகில் பிடித்த அலைந்துக் கொண்டிருப்பான்.

எதிர்பாராத விதமாகப் பணம் பறி போய் விட்டாலோ அவன் தன் உயிரையே இழந்துவிட்டவன் போல பித்துப் பிடித்துத் திரியத் தொடங்கி விடுகிறான்.

உலக நீதி கூறும் அவ்வளவு உண்மைகளும் சன்யாசிக்குப் பொருத்தமாக அமைந்திருந்தன.

அவனுக்கு யாரைக் கண்டாலும் அச்சம் - அவநம்பிக்கை. தனக்க உதவி செய்ய முன்வருபவர்களைக்கூட தங்கத்தைப் பறிக்க வருகிறார்களோ என எண்ணி நடுங்குவான். . .

அவன் உண்ணும் போதும், உறங்கம்போதும், மலஜலம் கழிக்கும்போதுங்கூட தங்கம் அடங்கிய பை அவன் கட்கத்திலேயே இருக்கும்.

சன்யாசியிடம் தங்கம் இருப்பதும், அதை சன்யாசி தனது அக்குளிலேயே எப்போதும் வைத்திருப்பதையும் ஆஷாடபூதி என்ற வஞ்சகன் ஒருவன் விளங்கிக் கொண்டான்.

அந்தத் தங்கததை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்று தீர்மானம் செய்துக் கொண்டான்.

சன்யாசி, தங்கம் அடங்கிய பையை எங்காவது தனியிடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தால் அதை எளிதாக களவாடிட முடியும். பை எப்போதும் சன்யாசியின் அக்குளில் இருப்பதால் எளிதாக அதனைக் களவாடமுடியும் என்று ஆஷாடபூதிக்குத் தோன்றவில்லை.

ஆகவே எப்படியாவது சன்யாசியின் உடன் இருந்து சந்தர்ப்பம் வாய்க்கும்போது தங்கததை அபகரித்துச் சென்றுவிட ஆஷாடபூதி திட்டமிட்டான்.

ஒருநாள் அதிகாலையில் ஆஷாடபூதி குளித்து முழுகி கடல் முழுவதும் விபூதிப்பட்டை அடித்துக் கொண்டு சன்யாசியிடம் வந்து காலில் வீழந்து வணங்கினான்.

"நீ யாரப்பா?" என சன்யாசி வினவினார்.

"சுவாமி, சம்சார பந்தத்தில் மூழ்கிக் கெட்டழிந்து கடைத்தேற வழி காணாது திகைக்கும் எனக்கு நல்வழி காண்பித்து அருள வேண்டும். என்னைத் தங்கள் சிஷ்யனாக ஏற்று என் ஊனக் கண்ணை மாற்றி ஞானக்கண் பெற அருள வேண்டும்" என வேண்டிக் கொண்டான்.

சன்யாசி ஆஷாடபூதியை ஆசீர்வதித்து, "குழந்தாய், உன்னுடைய இந்த இளம் வயதில் மனத்தை கட்டுபடுத்தி துறவி நெறியில் நடப்பது கடினம் தவிரவும் ஒரு சீடனை வைத்து நிர்வகிக்கும் சூழலிலும் நான் இல்லை. நீ தக்க ஓர் ஆசானை அடைந்து கடைத்தேறுவாயாக" என்று புத்தி கூறினார்.

"சுவாமி நான் போக்கிடமற்ற அனாதை. தங்களைப் போன்ற பெரியோர்களுக்குக் குற்றேவல் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும். நான் ஒரு சுமையாக தங்களக்கு இருக்கமாட்டேன். நன்றியுள்ள ஒரு நாயைப் போல தங்கள் பின்னால் திரிய அனுமதியளித்தால் போதும்" என்று ஆஷாடபூதி விடாப்பிடியாக வேண்டிக் கொண்டான்.

சன்யாசி அவனைக் கை கழுவிவிட எவ்வளவோ முயற்சி செய்தும் பயன் கிட்டவில்லை.

வேறு வழியில்லாமல் ஆஷாடபூதியைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் சன்யாசி.

நன்றியுள்ள ஒருநாய் போல அவன் முகமறிந்து மனமறிந்து படாத பாடுபட்டு உழைத்து சன்யாசியின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்று விட்டான்.

என்றாலும் தங்கப்பை விஷயத்தில் மட்டும் சன்யாசி மிகவும் விழிப்புடன் இருந்தார்.

ஒருநாள் அயலூரில் முக்கியமான அலுவல் இருந்த காரணத்தால் சன்யாசி புறப்பட்டார்.

ஆஷாடபூதியை மடத்திலேயே இருக்குமாறு கூறினார்.

"சுவாமி, தங்களைவிட்டுப் பிரிந்திருக்க என் மனம் இடங் கொடுக்கவில்லை. செல்லும் வழியில் தங்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்தால் பாதுகாப்புக்கு ஓர் ஆள் வேண்டாமா? நானும் உடன் வருகின்றேன்" என்றான் ஆஷாடபூதி.

சன்யாசி யோசித்தார். கையில் தங்கம் இருக்கிறது. நடு வழியில் கள்ளர் பயமும் உண்டு. ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் துணைக்கு ஓர் ஆள் இருப்பதும் நல்லதுதான் என எண்ணி ஆஷாடபூதியையும் உடன் வர அனுமதித்தார்.

செல்லும் வழியில் ஒரு ஆற்றங்கரை ஓரமாக இருவரும் நடந்து செல்லும்போது சன்யாசிக்கு வயிற்றில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு மலங்கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

இத்தனைக் காலமாக யார்மீதும் நம்பிக்கை ஏற்படாதிருந்த சன்யாசிக்கு அன்று ஏனோ ஆஷாடபூதிமீது நம்பிக்கை ஏற்பட்டது.

தங்கம் இருந்த பையை தனது மேல் வஸ்திரத்தில் சுற்றி அதை ஆஷாடபீதியிடம் கொடுத்து, "குழந்தாய் நான் மலங்கழித்துத் திரும்பும்வரை இந்தச் சிறு மூட்டையை பத்திரமாக வைத்திரு. விரைவில் வந்து வாங்கி கொள்கிறேன்" எனக் கூறினார்.

ஆஷாடபூதி அந்த துணி மூட்டையை மிகவும் பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான்.

சன்யாசி புறப்பட்டார்.

அவர் தலைமறையும் வரை அந்த இடத்தில் அசையாமல் நின்றிருந்த ஆஷாடபூதி அவர் தலை மறைந்ததும், தங்கம் அடங்கிய மூட்டையை எடுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டான்.

தங்கத்தைத் தூக்கிக் கொண்டு அவன் ஓடிவிட்டான் என்பது தெரிந்ததும் சன்யாசி தலையில் விழுந்து கைகால்களை உதைத்துக் கொண்டு. "ஐயோ, என் தங்கம் போய் விட்டதே! படுபாவி நம்பிக்கைத் துரோகம் செய்து தங்கத்தை அபகரித்துச் சென்று விட்டானே" என்று அரற்றினார் - கதறினார் - கூவியழுதார்.

பிறகு ஒருவாறு மனத்தைத் தேற்றிக் கொண்டு, அந்த நம்பிக்கைத் துரோகியை எவ்விதமாவது கண்டு பிடித்து தங்கத்தைத் மீட்டு அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று பிதற்றியவாறு நடக்கத் தொடங்கினார்.

சன்யாசி தொடர்ந்து நடந்து சென்ற கொண்டிருந்த போது அந்தி நேரம் வந்துவிட்டது.

மதிய உணவு கொள்ளாததாலும், நீண்ட தூரம் நடந்ததாலும் அவருக்கு மிகவும் களைப்பாகவும் பசியாகவும் இருந்தது.

உறவினர் வீடு ஒன்றில் நடைபெற இருக்கும் குடும்ப விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஒரு நெசவாளியிம் அவன் மனைவியும் சென்ற கொண்டிருந்தனர்.

சனயாசி நெசவாளியை நோக்கி, "ஐயா, நான் மிகுந்த பசியுடனும் களைப்புடனும் இருக்கின்றேன். இந்த ஊரில் எனக்கு அறிமுகமானவர்கள் யாருமில்லை. இன்று இரவு மட்டும் என்னை அதிதியாக ஏற்று உபசரிக்க வேண்டும்."

அந்தி நேரத்தில் அதிதிகளை வரவேற்று உபசரிப்பது கடவுளையே உபசரிப்பது போன்று பெருமையுடைய தாகும் என்று நீதி நூல்கள் கூறுகின்றன. என்னைப் போன்ற அதிதியை உபசரித்து பசியகற்றி உதவுபவர்களுக்கு கடவுள் சகல பாக்கியங்களை அருளுவான். என கேட்டுக் கொண்டார்.

நெசவாளி தனது மனைவியை நோக்கி, "ஒரு துறவியை அந்தி நேரத்தில் உபசரிக்கும் வாய்ப்பு பெற்றது பெரிய பேறாகும் நான் மட்டும் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விரைவாகத் திரும்பி விடுகின்றேன். நீ இந்தப் பெரியவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு சமைத்தளித்து உபசரித்து சிரமம் தீர உதவு" என்று கூறினான்.

நெசவாளி மனைவி சன்யாசியை அழைத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தாள்.

அந்த நெசவாளியின் மனைவி ஒழுக்கங் கெட்டவள். பதித்துரோகி. தனது கள்ளக் காதலனை சந்திக்க நல்லதோர் சந்தர்ப்பம் கிடைத்தது என எண்ணி மகிழ்ந்து விரைவாக வீட்டை அடைந்தாள்.

சன்யாசியை ஒரு பழைய கட்டிலில் படுத்து சிரம பரிகாரம் செய்துக் கொள்ளச் சொன்னாள்.

"சுவாமி, கொஞ்ச நேரம் களைப்பாருங்கள். நான் அருகாமையிலிருக்கும் கடைக்குச் சென்று சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சடுதியில் திரும்பி வந்துவிடுகிறேன்" எனக் கூறிவிட்டு தன்னைப் பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டாள்.

பாதி தூரம் அவள் போவதற்குள் எதிரிலே தன்னுடைய கணவன் நன்றாகக் குடித்துவிட்டுக் குடிவெறியுடன் தள்ளாடியவாறு நடந்து வருவதை நெசவாளி மனைவி பார்த்துவிட்டாள்.

கணவன் பார்த்து விட்டானோ என்னவோ என அஞ்சியவளாக விழுந்தடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.

தனது அலங்காரத்தையெல்லாம் கலைத்துவிட்டு பழைய புடவை ஒன்றை உடுத்திக்கொண்டு சமையல் செய்வதுபோல பாவனை செய்தாள்.

நெசவாளி தன் மனைவி கண் முன்னே வந்ததையும், திரும்ப வீடு நோக்கி ஒடியதையும் பார்த்து விட்டிருந்தான்.

வீட்டுக்குள் பிரவேசித்ததும் மனைவியை விளித்து, "ஒழுக்கங் கெட்டவளே எங்கேடி போய் விட்டுத் திரும்பி வருகிறாய் உன்னைப் பற்றி - உன்னுடைய மோசமான நடவடிக்கைகளைப் பற்றி ஊரார் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்குமென நினைத்தேன். இப்போது கண் முன்னாலேயே பார்த்து விட்டேன்" எனக் கூறி நையப்புடைத்தான்



நம்பிக் கெட்ட சன்யாசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:29 pm

"குடிவெறியில் உளறகிறாயே! நான் வீட்டைவிட்டு எங்கும் போகவே இல்லையே. இந்தப் பெரியவரைக் கேட்டுப் பார். குடித்துவிட்டால் உனக்கு அறிவு மழுங்கி விடுகிறது வாயில் வந்தபடியெல்லாம் பிதற்றுகிறாய்.. " என்று நெசவாளி மனைவி எதிர்வாதம் செய்தாள்.

"உன் மாய்மாலம் எல்லாம் இனி நடக்காது காலையில் உன்னை சரியானபடி பலி வாங்குகிறேன்" என்று கூறியவாறு நெசவாளி அவளை ஒரு தூணில் வைத்துக் கட்டிப் போட்டான்.

பிறகு குடிபோதை காரணமாக கீழே படுத்து உறங்கி விட்டான்.

அப்போது அடுத்த வீட்டுக்காரியான ஒரு முடிதிருத்தும் தொழிலாளியின் மனைவி வீட்டுக்குள் வந்தாள்.

அவளும் ஒழுக்கம் கெட்டவளே அத்துடன் பணத்துக்காக ஒழுக்கம் கெட்ட பெண்களுக்கெல்லாம் துணையாக இருந்து உதவுபவள்.

அவள் நெசவாளியின் மனைவியை நோக்கி, "உன்னுடைய கள்ளக் காதலன் உன்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றான். நீ எவ்விதமாவது வர வேண்டுமென விரும்புகின்றான்" என்றாள்.

"என்னுடைய நிலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றாயே, நான் எவ்வாறு செல்லமுடியும்" என்று வருத்தத்துடன் கூறினாள் நெசவாளியின் மனைவி.

முடிதிருத்தும் தொழிலாளியின் மனைவி யோசித்தாள்.

பிறகு, "ஒன்று செய்யலாம். உன் கணவன் குடி வெறியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றான். இவன் உடனடியாக எழுந்திருக்க மாட்டான். உன் கட்டை அவிழ்த்து விடுகின்றேன். நீ என்னை கம்பத்தில் கட்டிவிட்டு உ;ன கள்ள நாயகனைச் சென்று சந்தித்து விட்டு வா. நீ வந்தபிறகு நான் இருக்கும் இடத்தில் உன்னைக் கட்டி வைத்து விடுகின்றேன். காலையில் உன் கணவன் எழுந்தால் சந்தேகப்பட மாட்டான்" என்று கூறினாள்.

பிறகு அவள் நெசவாளி மனைவியைக் கட்டவிழ்த்து விட்டாள்.

நெசவாளி மனைவி முடிதிருத்தும் தொழிலாளி மனைவியைத்தான் இருந்த இடத்தில் கட்டிப்போட்டாள், பிறகு தன் கள்ள நாயகனைத் தேடிக் கொண்டு புறப்பட்டாள்.

அவள் சென்றதும் இங்கே சற்றும் எதிர்பாராத நிலையில் ஒரு விபரீதம் நடந்தது.

தற்செயலாக நெசவாளி உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான். குடிபோதை இன்னும் தெளீயாத நிலை. தூணில் கட்டப்பட்டிருப்பது தனது மனைவிதான் என்று எண்ணியவாறு ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு அவள் மீது பாய்ந்தான்.

"குடிகேடி, ஒழுக்கம் கெட்டவளே, காலையில் உன்னை பலி வாங்குகிறேன். அதற்கு முன்னதாக ஒரு அடையாளம் செய்து வைக்கிறேன்" என்று கூறியவாறு கத்தியால் முடி திருத்தும் தொழிலாளி மனைவியின் மூக்கை அறுத்து விட்டான்.

உடனே குடிபோதையும், தூக்க மயக்கமும் அவனை அழுத்தவே சட்டெனக் கீழே படுத்து உறங்கிவிட்டான்.

சற்று நேரத்திற்குப் பிறகு நெசவாளியின் மனைவி திரும்பி வந்தாள்.

முடித்திருத்துவோனின் மனைவி தனது மூக்கை பறி கொடுத்த கதையைப் பரிதாபமாகக் கூறி அழுதாள்.

பிறகு நெசவாளியின் மனைவியைப் பழையபடி தூணில் கட்டிப் போட்டு விட்டுத் தன் வீட்டுக்குப் போய் விட்டாள்.

அதிகாலையில் நெசவாளி எழுந்தான்.

பழைய ஆவேசம் திரும்பப் பெற்றவனாக தன் மனைவி கட்டப்பட்டிருந்த இடத்திற்கு வந்தான்.

மனைவியின் முகத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தவனாக பிரமித்து நின்று விட்டான்.

நேற்று இரவு தன் மனைவியின் மூக்கை அரிந்தது அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது.

இப்போது அவள் மூக்கு கொஞ்சம் கூட பழுது படாமல் நன்றாகவே இருக்கிறதே!

"என்ன யோசனை? இரவு மூக்கை அரிந்து போட்டோமே! இப்போது மூக்குகொஞ்சங்கூட பாதிக்கப் படாமல் இருக்கிறதே என்று குழப்பமாக இரக்கிறதா? கள்ளங் கபடமற்ற பத்தினிப் பத்தினிப் பெண்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார். நீ என் மூக்கை அரிந்த உடனே நான் கடவுளை மனத்தால் துதித்தேன்."

"என் கணவன் சந்தேகப்படுகிறதாமாதிரி நான் ஒழுக்கம் கெட்ட விபசாரியாக இரந்தால் என் உடலைத் தீப்பற்றி எரியச் செ;யது அழித்த விடுக - நான் பரிசுத்தமான பதிவிரதா சிரோன்மணி என்பது உண்மையானால் என் கணவனால் அறுத்தெறியப்பட்ட மூக்கு பழையபடி வளர்ந்து என் புனிதத் தன்மையை நிரூபிக்க உதவுக என இறைவளை மன்றாடி வேண்டிக் கொண்டேன்."

"கருணைக் கடலான கடவுள் என் மூக்கைப் பழையபடி வளரச் செய்து என் பதிவிரதத்தன்மையை நிரூபித்துக் காட்டி விட்டார்."

வேறு நிலையில் அவள் மேற்கண்டவாறெல்லாம் கூறியிருந்தால் நெசவாளி நம்பியிருக்க மாட்டான்.

இரவு தன்னால் அறுக்கப்பட்ட அவன் மூக்கு பொழுது விடிவதற்குள் வளர்ந்து விட்டிருப்பதைக் கண்ணாரக் கண்டபிறகு அவள் பேச்சை எவ்வாறு நம்பாமல் இருக்க முடியும்?

உடனே மனைவியைக் கட்டவிழ்த்துவிழ்த்து தன்செயல்களுக்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

இனி அவளுடைய ஒழுக்கத்தைப் பற்றி சந்தேகப்படும் விதத்தில் எதுவுமே பேசப் போவதில்லை என்று வாக்குறுதியும் அளித்தான்.

இந்தக் காட்சிகள் அனைத்தையும் கட்டிலில் படுத்தவாறே கவனித்து வந்த சன்யாசி அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.

சன்யாசி தனக்குத்தானே பின் வருமாறு நினைத்துக் கொண்டார்.

பெண்களுடைய சாகசத்துக்கு எல்லையே கிடையாது அவர்களுக்கு இருக்கும் தந்திரத்துக்கும் சாதுரியத்துக்கும பேய்களைத்தான் உவமையாக கூறி முடியுமா.

எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்தாலும் அவர்களுடைய சூழ்ச்சிகளை - சதிகளை யாராலுமே கண்டு கொள்ள முடியாது.

பொய்யை மெய் என்று சாதிப்பார்கள். மெய் என்ற நிரூபிக்கப்பட்டதை பொய் என்று மாற்றிக் காட்டுவார்கள்

தங்களை வெறுத்து யார் அலட்சியம் செய்கிறார்களோ அவர்களைப் பின் தொடர்ந்த சென்று வலை வீசி வசியப்படுத்த படாதபாடு படுவார்கள் தங்கள் மீது எவன் ஒருவன் முழு அன்பும், பாசடும் வைத்திருக்கிறானோ அவனைக் குப்பையென ஒதுக்கி அலட்சியப்படுத்துவார்கள்.



நம்பிக் கெட்ட சன்யாசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:29 pm

பெண்களின் வாயில் எப்பொழுதும் தேனொழுகும் ஆனால் நெஞ்சமோ கடும் நஞ்சாக அமைந்திருக்கும்.

ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பெண் மற்றயாரும் சிந்திக்க அஞ்சும் நடவடிக்கைகளையும் மேற் கொள்த் தயங்க மாட்டார்கள். சிரிப்பார்கள், அழுவார்கள், சூழ்ச்சி செய்வார்கள். கூசாமல் ஒரு நிரபராதியின் மீது குற்றம் சுமத்துவார்கள், ஈவிரக்கமின்றி பழி வாங்குவார்கள் - அவசியம். என்று பட்டால் கொலை கூடச் செய்யப் பின் வாங்க மாட்டார்கள். வீராவேசத்தோடு போர் புரியக்கூடிய ஒரு மாவீரனம் அழகாக பெண்ணின் முன்னிலையில் கோழையாகி விடுகிறான்.

பார்வைக்கு மிகவும் அழகாகவும், உள்ளே கொடிய நஞ்சை அடக்கியும் வைத்திருக்கும் காஞ்சிபுரம் பழத்தைப் போன்ற பெண்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் பேரழிவுக்க உள்ளாவது நிச்சயம்.

இவ்வாறெல்லாம் எண்ணியவாறு சன்யாசி இரவுப் பொழுதை ஒருவாறாகக் கழித்தார்.

மூக்கு அறுப்பட்ட நிலையில் வீட்டுக்குச் சென்ற முடி திருத்தும் தொழிலாளியின் மனைவிக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது.

அவள் கணவன் இரவு வீட்டில் இல்லை. ஏதோ வேலையாக அரண்மனைக்குச் சென்றிருந்தான்.

அதிகாலையில் அவன் வந்து விடுவான். மூக்கு மூளியாகி விட்டதற்கு அவனிடம் காரணம் சொல்லியாக வேண்டும். அடுத்து அக்கம் பக்கத்து வீட்டு பெண்களக்கும் காரணம் சொல்லியாக வேண்டும்.

என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது வீட்டு வாசலில் அவள் கணவனின் குரல் கேட்டது.

அன்பே, அதிகாலையிலேயே மன்னருக்கு முடி திருத்தும் பணி செய்தாக வேண்டியிருக்கின்றது. உடனே போயாக வேண்டும். என்னுடைய அடைப்பான் பெட்டியை எடுத்துவா என்று வெளியே இருந்தவாளே குரல் கொடுத்தான் கணவன்.

மனைவி அடைப்பான் பெட்டியிலிருந்த முகம் மழிக்கும் கத்தியை ம்டும் வெளியே வீசியெறிந்தான்.

அவளுடைய செயல் கணவனுக்கு ஆத்திரத்தை மூட்டியது.

அறிவுகெட்ட முண்டம். உனக்கு காது செவிடாகி விட்டதா? அடைப்பான் பெட்டியை எடுத்து வா என்றால் கத்தியை மட்டும் வீசியெறிகிறாயே, அடைப்பான் பெட்டியை எடுத்து வா என்ற அவள் வீசியெறிந்த கத்தியை எடுத்து வீட்டுக்குள் வீசியடித்தாள்.

உடனே மனைவி வீட்டுக்குள்ளிருந்து குய்யோ முறையோ எனக் கூச்சலிடத் தொடங்கினாள்.

படுபாவி, என் மூக்கை அரிந்துவிட்டாயே! என்ன நினைத்துக் கொண்டு இவ்வாறு செய்தாய் என்னை என்ன கேடு கெட்டவள் என்ற நினைத்தக் கொண்டாயா? சோரம் போனவள் என்று எண்ணிக் கொண்டாயா? எதற்காக என் மூக்கை அரிந்தாய் என்று கூவியவாறே மூக்கைப் பிடித்து கொண்டு நடுத் தெருவுக்கு வந்து விட்டாள்.

அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்தவர்கள் எல்லாம் வந்த கூடிவிட்டனர். என்ன நடந்தது என மனைவியிடம் விசாரித்தனர்.

என் கணவன் இரவு அரண்மனைக்கச் சென்று விட்டுக் காலையில் வீட்டுக்கு வந்தான். வந்த உடனேயே ஏண்டி ஒழுக்கங் கெட்டவளே இரவு உன் கள்ள நாயகனுடன் கூடிக் கொண்டு கும்மாளமிட்டுக் கிடந்தது எனக்குத் தெரிந்த போயிற்று. உன்னைப் பழிவாங்குகிறேன் பார் என்று முகம் மழிக்கும் கத்தியினால் என் மூக்கை அரிந்து விட்டான். இதோபாருங்கள் என் மூக்கை என்ற மூக்கை அனைவரிடமும் காண்பித்தாள் மனைவி.

கூட்டத்தில் இருந்தவர்கள் கணவனை விசாரித்தாரர்கள்.

சற்றும் எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சி காரணமாக அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்திருந்த கணவன் ஏதும் சொல்ல இயலாமல் திருதிருவென விழித்தான்.

அவன் வேண்டுமென்றே மனைவி மூக்கை அரிந்து கொடுமைப்படுத்தியிருக்கின்றான்; என்று தீர்மானித்த ஊர் மக்கள் அவனை நீதிமன்றத்துக்குக்கொண்டு சென்று நீதிபதியின் முன் நிறுத்தினர்.

வாயடைத்து மனங்குழப்பிக் கிடந்த கணவன் நீதியதி கேள்விக்குச் சரியானபடி பதிலளிக்கவில்லை.

ஆகவே மனைவியைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதித்தார்.

எல்லா நிகழ்ச்சிகளையும் ஒன்றுவிடாமல் கவனித்த வந்த சன்யாசி நீதிபதியின் முன்னால் சென்று தாழ்ந்து வணங்கினார்.

நீதிபதி அவர்களே, இந்த முடிதிருத்தும் தொழிலாளி உண்மையில் ஒரு குற்றமும் செய்யவில்லை. இவனைக் கொல்வது பாவம். ஆஷாடபூத்யை நம்பி நான் மோசம் போனேன். பேராசை காரணமாக ஆடுகளக்கு இடையே சிக்கி நரி உயிரை இழந்தது. பிறருடைய காரியத்தில் தலையிட்டு இந்த முடிதிருத்தும் தொழிலளியின் மனைவி மூக்கை இழந்தாள். மனைவியை ஒழுக்கசாலி, தர்மபத்தினி என நெசவுத் தொழிலாளியும் முடிதிருத்தும் தொழிலாளியும் நம்பி தொல்லைகளுக்கு இலக்காகினர்.

இவ்வாறு நீதிபதியிடம் கூறினார்.

பிறகு நடைபெற்ற நிகழ்ச்சி முழுவதையும் சன்யாசி ஒன்றுவிடாமல் விளக்கிச் சொன்னார்.

தக்கவாறு விசாரணை செய்த நீதிபதி சன்யாசி கூறிய அனைத்தும் உண்மை என்று கண்டு முடிதிருத்தும் தொழிலாளியின் மனைவியின் காதுகளை அறுக்குமாறு தண்டனை விதித்து முடிதிருத்தும் தொழிலாளியை விடுதலை செய்தார்.

பிறர் விஷயத்தில் அளவுக்கு அதிகமாக தலையிட கூடாது. பிறரை நம்பவும் கூடாது.



நம்பிக் கெட்ட சன்யாசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 5:21 pm

நல்லாதொரு படிப்பினை தரக்கூடிய கதை நன்றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 5:33 pm

சபீர் wrote:நல்லாதொரு படிப்பினை தரக்கூடிய கதை நன்றி சகோதரா

நம்பிக் கெட்ட சன்யாசி 678642 நம்பிக் கெட்ட சன்யாசி 678642



நம்பிக் கெட்ட சன்யாசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 6:27 pm

அருமையான படிப்பின தரும் கதை சிவா...
ஆசையே அழிவுக்கு காரணம்...
பேராசையால் தான் எல்லாம் இழந்தார் இந்த சந்நியாசி...
சந்நியாசின்னா முற்றும் துறந்தவர் என்றும் பற்றருத்தவர் என்றும் பொருள் இவர் என்னடான்னா தங்கம் சேர்க்கிறார்..
தங்கம் சேர்த்து வைத்து என்ன செய்வாராம்?
இஷ்டப்பட்டதை சாப்பிடுவாரா?
பட்டாடை உடுத்த போறாரா?
மாளிகை கோபுரங்கள் கட்ட போகிறாரா?

சந்நியாசிக்கு ஏன் இதெல்லாம்..
இவர் தான் இப்படின்னா....
குடிகாரர் நெசவாளி...

கள்ளக்காதல் புரியும் மனைவி....
அவருக்கு இணையான ஒரு அருமையான அதே குணத்துடன் கூடிய ஒரு நட்பு....
இப்படி கொடுமைகள் நடந்தால் உலகம் தாங்குமா?
அருமையான பகிர்வுக்கு நன்றிகள் சிவா....

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Thu May 13, 2010 4:30 pm

THANK YOU

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 13, 2010 5:48 pm

சிவா wrote:பெண்களுடைய சாகசத்துக்கு எல்லையே கிடையாது அவர்களுக்கு இருக்கும் தந்திரத்துக்கும் சாதுரியத்துக்கும பேய்களைத்தான் உவமையாக கூறி முடியுமா.

எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்தாலும் அவர்களுடைய சூழ்ச்சிகளை - சதிகளை யாராலுமே கண்டு கொள்ள முடியாது.

பொய்யை மெய் என்று சாதிப்பார்கள். மெய் என்ற நிரூபிக்கப்பட்டதை பொய் என்று மாற்றிக் காட்டுவார்கள்

தங்களை வெறுத்து யார் அலட்சியம் செய்கிறார்களோ அவர்களைப் பின் தொடர்ந்த சென்று வலை வீசி வசியப்படுத்த படாதபாடு படுவார்கள் தங்கள் மீது எவன் ஒருவன் முழு அன்பும், பாசடும் வைத்திருக்கிறானோ அவனைக் குப்பையென ஒதுக்கி அலட்சியப்படுத்துவார்கள்பெண்களின் வாயில் எப்பொழுதும் தேனொழுகும் ஆனால் நெஞ்சமோ கடும் நஞ்சாக அமைந்திருக்கும்.

ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பெண் மற்றயாரும் சிந்திக்க அஞ்சும் நடவடிக்கைகளையும் மேற் கொள்த் தயங்க மாட்டார்கள். சிரிப்பார்கள், அழுவார்கள், சூழ்ச்சி செய்வார்கள். கூசாமல் ஒரு நிரபராதியின் மீது குற்றம் சுமத்துவார்கள், ஈவிரக்கமின்றி பழி வாங்குவார்கள் - அவசியம். என்று பட்டால் கொலை கூடச் செய்யப் பின் வாங்க மாட்டார்கள். வீராவேசத்தோடு போர் புரியக்கூடிய ஒரு மாவீரனம் அழகாக பெண்ணின் முன்னிலையில் கோழையாகி விடுகிறான்.

பார்வைக்கு மிகவும் அழகாகவும், உள்ளே கொடிய நஞ்சை அடக்கியும் வைத்திருக்கும் காஞ்சிபுரம் பழத்தைப் போன்ற பெண்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் பேரழிவுக்க உள்ளாவது நிச்சயம்.


நம்பிக் கெட்ட சன்யாசி 677196 நம்பிக் கெட்ட சன்யாசி 677196 நம்பிக் கெட்ட சன்யாசி 678642 நம்பிக் கெட்ட சன்யாசி 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 8:47 pm

நம்பிக் கெட்ட சன்யாசி 678642





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
kkpcdm
kkpcdm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 30/03/2011
http://kkpcdm@gmail.com

Postkkpcdm Tue Apr 26, 2011 12:59 pm

காஞ்சீபுரம் பழம் அப்படி ஒரு பழம் இருக்கிறதா சிவா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக