ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில்

2 posters

Go down

திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Empty திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில்

Post by சிவா Wed 5 May 2010 - 22:19

திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Thiruv11

அகிலத்துக்கெல்லாம் ஈஸ்வரியானதால் அவளுக்கு அகிலாண்டேஸ்வரி என்று பெயர். இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். ஜம்பு என்றால் நாகப்பழம். நாகப்பழத்திற்கு கீழே இறைவன் தோன்றியதால் அவருக்கு ஜம்புகேஸ்வரர் என்று பெயர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் இது நீரால் ஆன ஸ்தலம். இறைவனை வழிபட்ட ஸ்தலம். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறபோது அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் முழுவதும் ஊற்றுகள் வழியாக நீர் பெருகி இறைவனுடைய சன்னிதி முழுவதும் நீர் படிந்திருக்கிறது. காவிரிநதிக்கும் கருவறைக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். இந்தக் கோவில் தொடர்பாக ஒரு அழகிய புராணக் கதை உண்டு.

சிலந்தி ஒன்று ஜம்புகேஸ்வரர் மீது வலை பின்னியது. வலை பின்னிக் கொண்டிருக்கும்போதே நான் இறைவனுக்காக கோவில் கட்டுகிறேன் என்று நினைத்துக் கொண்டது. எனவே மிக அழகாக மிக அருமையாக அது தன்னுடைய வலையை நெய்யத் துவங்கியது. சிலந்திக்கு வலைதானே கற்கோவில். எனவே தன்னால் இயன்றதைத் தன்னுடைய பணியாக சிவனுக்கு சிலந்தி செய்து கொண்டிருந்தது.

ஆனால் சிலந்தியின் இந்த செய்கை அங்கு வந்த யானைக்குப் பிடிக்கவில்லை. ஒரு சிலந்தி தன்னுடைய எச்சிலால் அந்த இடத்தை அசுத்தம் செய்கிறது, ஆபாசமாக நடந்து கொள்கிறது, ஆச்சாரமற்று விளங்குகிறது என்று சொல்லி காவிரியிலிருந்து நீர் கொண்டு வந்து பீச்சி அடித்து வலையை அகற்றி அந்த இடத்தை அலம்பி சுத்தம் செய்து சிலந்தியை விரட்டி விட்டது. தான் அந்த இடத்தை நீரால் கழுவி இலைகளாலும், மலர்களாலும் அலங்கரித்து வழிபட்டுப் போயிற்று. யானை போனதும் சிலந்தி யானையைச் சபித்தவாறே மீண்டும் தன்னுடைய நெசவைத் தொடங்கி நான் கோவில் எழுப்புகிறேன் என்று வலை பின்னியது.

ச்சே .. என்ன இது... திரும்பத் திரும்ப சிலந்தி இவ்விதம் செய்கிறதே என்று மறுபடியும் யானை நீர் எடுத்து வந்து இறைவனை சுத்தம் செய்து விட்டு மலர்களால் அலங்கரித்து விட்டு போயிற்று.

சிலந்தியின் எண்ணப்படி தன்னுடைய வலை இறைவனுக்கு அலங்காரம். யானையினுடைய எண்ணப்படி காவிரி நீர் அபிஷேகமும், மாவிலைத் தோரணங்களும், மலர்களும்தான் அலங்காரம்.

ஆனால் தன்னுடைய அலங்காரம் சரியென்றும், எதிராளியின் அலங்காரம் அசிங்கம் என்றும் இரண்டும் மாறி மாறி சொல்லி வந்தன.

யானை பலமுறை தன்னுடைய வலையை கலைக்கவே, தன்னுடைய இறை பணியை யானை தடை செய்கிறது என்று கோபம் கொண்டு சிலந்தி யானையின் துதிக்கைக்குள் போய் தன் விஷத்தைக் கக்கி அதனை மரணமடையச் செய்தது.

தன் துதிக்கைக்குள் நுழைந்த சிலந்தியை முறுக்கி, மடித்து நசுக்கி யானை கொன்று விட்டது. யானையும் சிலந்தியும் உடலைத் துறந்து சூட்சும உருவமாக இறைவனை நோக்கிப் போய் அழுதார்கள்.

தன் தொண்டை யானை இப்படி செய்துவிட்டது என்று சிலந்தியும், சிலந்தி இப்படி அசிங்கம் செய்து விட்டது என்றும் என்னைக் கொன்று விட்டது என்றும் யானையும் இறைவனிடம் போய் அழுதன.

இறைவன் இரண்டு பேரையும் சமாதானப் படுத்தினார்.

உடம்பாக இருக்கும்போது வெவ்வெறாக இருந்தீர்கள். உயிராக இருக்கும்போது இன்னும் நெருக்கமாக வரவில்லையா. யார் எது செய்தாலும் எனக்கு பணிவிடைதான். எனக்கு பணிவிடை செய்கிறேன் என்று எண்ணினால் போதும். நீங்கள் செய்கிற செய்கை எனக்கு பணிவிடையாகிறது. உங்களின் முயற்சி எனக்கு அலங்காரமாகிறது. என்னுடைய அலங்காரம்தான் சிறந்தது என்று யாரும் இறுமாப்பு கொள்ள அவசியமில்லை. எல்லோரும் அவரவர் சக்திக்கு ஏற்ப அவரவர் புத்திக்கு ஏற்ப என்னை வணங்குவார்கள். அதில் எது சரி, எது தவறு என்று சொல்ல இயலாது. எல்லாமும் சரி என்று ஒரு அற்புதமான தத்துவத்தை இறைவன் அவர்களுக்குக் காட்டினான்.

தன்னுடைய மதம்தான் உயர்ந்தது. தன்னுடைய கொள்கைகள்தான் சிறந்தது. தன்னுடைய வழிபாடுதான் உசத்தி என்று சொல்கின்ற மக்களுக்கு இது ஒரு பாடமாக அமைகிறது.

இன்னும் வேறுவிதமாகவும் கொள்ளலாம். சிலந்தி என்பது புத்தி. புத்தி இடைவிடாது நெசவு செய்து கொண்டிருக்கும். புத்தி, தான்தான் பெரியது என்று நினைத்துக் கொண்டிருக்கும்.

புத்தி உருவத்தில் சிறியது. உடம்போ மிகப் பெரியது. ஆனால் புத்தி உடம்பைக் காட்டிலும் பலமடங்கு திடமானது. உடம்பு யானையைப் போல் வலிவுள்ளது. வலுவின் உச்சகட்டம் யானை. புத்தியின் உச்சகட்டம் சிலந்தி அதாவது நெசவு.

எது உசத்தி?

இரண்டுமே உசத்திதான்.

புத்தி தனி அல்ல. உடம்பு தனியல்ல. இவை இரண்டும் ஒன்று சேர்கின்றபோது ஏற்படுகின்ற சந்தோஷம் அலாதியானது. அப்போது ஏற்படுகின்ற விளைவுகள் அற்புதமானவை.

இதைச் சொல்லவும் இந்தத் தல வரலாறு உபயோகமாகிறது.

கோவிலுக்குள் நுழைந்தால் மிக பிரம்மாண்டமான மண்டபங்கள் காணலாம். உள்ளுக்குள் சிறிய மூர்த்தியாக இருக்கின்ற ஜம்புகேஸ்வரர், ஒரு முதிர்கன்னி வடிவத்தில் அழகாக நிற்கின்ற அகிலாண்டேஸ்வரி தாயார் இருவரையும் தரிசித்துவிட்டு வரலாம்.

ஒரு பகல் பொழுதில் அதிகம் கூட்டம் இல்லாத நாட்களில் மிக எளிமையான அலங்காரங்களோடு இருக்கும் அகிலாண்டேஸ்வரியை நீங்கள் தரிசிக்க வேண்டும். காதுகளில் நட்சத்திரம் வரைந்த அழகிய தடாகம் செய்து சமீபத்தில் மாட்டியிருக்கிறார்கள். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரி தாய் குடும்பங்களை ரட்ஷிக்கிறவள். குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைப்பவள். இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் அகிலாண்டேஸ்வரி தாயின் தரிசனத்தால் ஒளி பெற்று விளங்குகின்றன. கோவிலைச் சுற்றி வருகிறபோது மிக அழகான சிலைகள் கொண்ட ஒரு நாட்டிய மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தையும் பார்த்து ரசித்து விட்டு வாருங்கள். இந்தக் கோயில் மிகப் புராதனமானது. மிக வலிமையான அதிர்வுகளை கொண்டது.


திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Empty Re: திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில்

Post by அன்பு தளபதி Wed 5 May 2010 - 22:22

அற்புதமான தலவரலாறு சொன்ன விதம் இன்னும் அருமை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
»  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum