புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சுவிடுதல் - Respiration Poll_c10மூச்சுவிடுதல் - Respiration Poll_m10மூச்சுவிடுதல் - Respiration Poll_c10 
30 Posts - 50%
heezulia
மூச்சுவிடுதல் - Respiration Poll_c10மூச்சுவிடுதல் - Respiration Poll_m10மூச்சுவிடுதல் - Respiration Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மூச்சுவிடுதல் - Respiration Poll_c10மூச்சுவிடுதல் - Respiration Poll_m10மூச்சுவிடுதல் - Respiration Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சுவிடுதல் - Respiration Poll_c10மூச்சுவிடுதல் - Respiration Poll_m10மூச்சுவிடுதல் - Respiration Poll_c10 
72 Posts - 57%
heezulia
மூச்சுவிடுதல் - Respiration Poll_c10மூச்சுவிடுதல் - Respiration Poll_m10மூச்சுவிடுதல் - Respiration Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மூச்சுவிடுதல் - Respiration Poll_c10மூச்சுவிடுதல் - Respiration Poll_m10மூச்சுவிடுதல் - Respiration Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மூச்சுவிடுதல் - Respiration Poll_c10மூச்சுவிடுதல் - Respiration Poll_m10மூச்சுவிடுதல் - Respiration Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சுவிடுதல் - Respiration


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 12:13 am

முதலில், மூச்சு என்றால் என்ன?

காற்றில் உள்ள ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு அல்லது உயிர் வளியை, நமது உடலின் இரு நுரையீரல்களின் வழியாக இரத்தத்தில் கலக்கவும், இரத்தத்தில் மிகுந்துள்ள கார்பன்_டை_ஆக்சைடு எனப்படும் கரியமில வாயுவை வெளியேற்றித் தூய்மைப்படுத்தவும் (Ventilation perfusion), இயற்கை இப்பூவிலகில் வாழ நமக்களித்த வரப்பிரசாதமே மூச்சு அல்லது உயிர் மூச்சு. மூச்சுவிடுதல் (Respiration) அல்லது சுவாசித்தல் என்பது லயத்துடன் மீண்டும் மீண்டும் நடைபெறும் ஒரு தொடர் செயற்பாடாகும். மூச்சை உள்ளிழுப்பது ‘‘உள்மூச்சு’’ (Inspiration) என்றும், வெளிவிடுவது ‘‘வெளிமூச்சு’’ (Expiration) என்றும் அழைக்கப்படுகிறது.

நாம் மூச்சை அடக்க அல்லது கட்டுப்படுத்த முடியுமா?

மூச்சு விடுதலை அல்லது சுவாசித்தலைத் தற்காலிகமாகச் சிறிது நேரத்திற்கு நிறுத்திக் கொள்ளவோ அதன் விகிதம், ஆழம் போன்றவற்றை மாற்றவோ நம்மால் முடியும். மூச்சுப் பயிற்சிகள் மூலம் இதை நன்கு உணரலாம். ஆழ்ந்து விரைவாகவோ, அல்லது மெல்லவோ மூச்சை இழுப்பதால் உள்மூச்சை அடக்கலாம். பேசுவதால், பாடுவதால், சீழ்க்கை அடிப்பதால் (Whistling) வெளி மூச்சை இடைமறிக்கலாம். நாம் ஏதேனும் சிறிது கடினமான வேலை செய்யும்போது மூச்சானது மிக ஆழ்ந்தும், மிக வேகமாகவும் இருக்கும்.

மூச்சுமண்டலப் பாதுகாப்பு அனிச்சைச் செயல்களான இருமல், தும்மல் போன்றவற்றின் போதும் மூச்சுவிடல் நிகழ்கிறது. தும்பு தூசிகளோ, புகையோ, உறுத்தும் வாயுவோ மூச்சைத் தானாக உள்ளிழுக்கும் செயலைத் தற்காலிகமாக நிறுத்துகிறது. பிறகு மூச்சை வெளிவிடுகையில் இருமலோ, தும்மலோ ஏற்படுகின்றன. இத்தகைய மூச்சுச் செயற்பாட்டால்தான் நான் முன்பு சொன்ன இருமல், தும்மல் மட்டுமின்றி, நுகர்தல், பேசுதல், கத்துதல், பாடுதல், மிமிக்ரி செய்தல் போன்றவற்றையும் நம்மால் செய்ய முடிகின்றது.

சுவாசித்தலைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்?

சகஜமாக நாம் நம்மையும் அறியாமல் இருவகைகளில் சுவாசிக்கிறோம். அவை, வயிற்று வகை மற்றும் விலா எலும்புவகை. ஆண்களில் காணப்படும் வயிற்றுவகை மூச்சு, உதரவிதானச் சுருக்கத்தால் மார்புக்கூட்டின் அளவு செங்குத்தான நிலையில் அதிகரித்து இயங்குவது. பெண்களில் காணப்படும் விலாவகை மூச்சு மற்ற மூச்சுத் தசைகளின் சுருக்கத்தால் மார்புக்கூட்டின் முன்புற, பின்புற பக்கவாட்டு அளவு அதிகரித்து இயங்குவது. சாதாரணமாக வயது வந்தவர்கள் அல்லது பெரியவர்களைப் பொறுத்தவரை எந்த உடல் உழைப்பும் இன்றி ஓய்வாக இருக்கும்போது 16_20 தடவை ஒரு நிமிடத்திற்கு மூச்சை வெளிவிட்டு உள்இழுப்பார்கள். குழந்தைகள் ஒருவயது வரை ஒரு நிமிடத்திற்கு 35 தடவையும், இரண்டாம் ஆண்டுவரை நிமிடத்திற்கு 25 தடவையும், சிறார்கள் நிமிடத்திற்கு 20 தடவையும், இளைஞர்கள் நிமிடத்திற்கு 18 தடவையும் மூச்சுவிடுவார்கள்.



மூச்சுவிடுதல் - Respiration Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 12:13 am


நாம் சுவாசிக்கும் காற்றின் அளவைப் பற்றியும் சிறிது கூறுங்களேன்…?


பொதுவாக ஓய்வாக உள்ளபோது, ஒரு சாதாரண உள் மூச்சின்போதும் சகஜமான வெளிமூச்சின் போதும் இரு நுரையீரல்களுக்குள் உட்சென்று வெளிவரும் காற்றின் அளவு ஒவ்வொரு முறையும் 500 கன செ.மீ. ஆகும். இது ‘‘அலைக்காற்று’’ எனப்படுகிறது. சகஜமான வெளிமூச்சிற்குப் பின்பு, முழுமையான ஆழ்ந்த உள்மூச்சினால் உட்செல்லும் காற்று, சாதாரண உள்மூச்சு அளவை விட 1500 க.செ.மீ. அதிகமாக இருக்கும். இது ‘‘நிரப்புக் காற்ற’’£கும். சாதாரண உள்மூச்சின் பின், முழுமையான பலத்த வெளிமூச்சின் மூலம் வெளியேறும் காற்றின் அளவு சகஜ வெளிமூச்சை விட 1500 க.செ.மீ. அதிகமாகும். இது ‘‘சேமிப்பு’’ அல்லது ‘‘பூர்த்தி’’ செய்யும் காற்றாகும். மேற்கூறிய மூன்று அளவுகளும் ‘‘டைடல், நிரப்பு, சேமிப்பு’’ சேர்ந்து மூச்சுத்திறன் எனப்படுகிறது. இதன் அளவு சராசரி 500+1500+1500=3500 க.செ.மீ. காற்றாகும். பொதுவாக இது மூச்சுப் பயிற்சி, வயது, பால் ஆகியவற்றைப் பொறுத்து 4500 முதல் அதிகபட்ச 7000 க.செ.மீ. வரை கூட இருக்கும். முழுமையான பலத்த வெளிமூச்சின் பின்பு கூட நுரையீரல்களில் சுமார் 1000 க.செ.மீ. காற்று தேங்கி இருக்கும். இதை ‘‘எஞ்சிய காற்று’’ என்கிறோம்.

இரு நுரையீரல்களின் மொத்த காற்றுக் கொள்ளளவு ஆண்களுக்குச் சுமார் 6 லிட்டரும் பெண்களுக்குச் சுமார் 4 லிட்டரும் ஆகும். வயது வந்த ஒருவர் ஒரு நிமிடத்திற்குச் சுமார் 4_6 லிட்டர் காற்றைப் பெறுகிறார். முயற்சி அதிகளவு செய்யும்போது இந்தக் காற்றுக் கொள்ளளவு அதிகரிக்கும்.

மூச்சுச் செயற்பாடு எவ்வாறு நிகழ்கிறது?

மூச்சை உள்ளிழுக்கும்போது மார்புக் கூட்டின் எல்லாப் பக்கக்குறுக்களவுகளும், தசைச்சுருக்கத்தால் அதிகரிக்கிறது. முக்கியமான உதரவிதானம் சுருங்கிக் கீழிறங்குகிறது. செங்குத்தான அளவை அதிகரிக்கச் செய்கிறது. விலா எலும்புகளுக்கிடையிலுள்ள வெளிப்புறத்தசைகள் அனைத்தும் சுருங்குவதால் விலா எலும்புகளை உயர்த்தி முன்னோக்கி இருக்கச்செய்கின்றன. இதனால் மார்புக் கூட்டின் முன் பின் குறுக்களவுகள் அதிகரிக்கின்றன.

இத்துடன் கீழுள்ள விலா எலும்புகளும் வெளிப்புறமாக உயருகின்றன. மார்புக்கூடு அளவு அதிகரிப்பதால் நுரையீரல்களில் உள்ள அழுத்தம் குறைகிறது. அதனாலும் காற்று மண்டல அழுத்தத்தாலும் நுரையீரல்களுக்குள் காற்று உள்சென்று நுண்ணிய காற்றுப்பைகளை விரிவடையச் செய்கிறது. இப்படியாக நம்மையும் அறியாமல் நாம் உள்மூச்சை இழுக்கின்றோம். இந்த Active process நிகழ சக்தி (Energy) தேவைப்படுகிறது.

மூச்சு உள்ளிழுத்தலைத் தொடர்ந்து மூச்சு வெளிவிடும் செயல் நிகழ்கிறது. அப்போது உதரவிதானமும் மார்புக் கூட்டின் கனபரிமாணமும் உள்மூச்சுத் தொடர்புள்ள, முக்கியமாக வயிற்றுத் தசைகளும் தளர்கின்றன. உட்புறத்திலுள்ள விலா எலும்புகளுக்கிடையேயுள்ள தசைகளும் பிற தசைகளும் சுருங்குவதால் விலா எலும்புகள் கீழிறங்குகின்றன. எனவே நுரையீரல்களும் சுருங்கி, அதிலுள்ள காற்றின் அழுத்தம் அதிகரித்து மூச்சுப் பாதைகள் வழியாக, தானாக எந்தச் சக்தி விரயமுமின்றி வெளியேறுகிறது. இதுதான் வெளி மூச்சு எனப்படுகிறது.



மூச்சுவிடுதல் - Respiration Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 12:14 am


மூச்சில் பல வகைகள் உண்டென்கிறார்களே, அது உண்மைதானா?


ஆம். சுவாசித்தலின் அளவு வேகம், ஆழம், விகிதம், முறை மற்றும் எளிதாகச் சுவாசித்தல், கஷ்டப்பட்டுச் சுவாசித்தல் ஆகியவற்றைக் கொண்டு மூச்சைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். அமைதியாக உள்ளபோது உள்ள மூச்சுக்கு ‘‘இயல்பான மூச்சு’’ என்றும், மூச்சுச் செயற்பாட்டில், இயல்பான மூச்சே அதிகமாவதற்கு ‘‘ஆழ்ந்த அதிகரிப்பு மூச்சு’’ என்றும், மூச்சுச் செயற்பாட்டில், ஆழ்ந்த மூச்சு அதிகமாகி வெளிவிடும் மூச்சு, விசையுடன் உள்ளதற்குக் ‘‘கடின மூச்சு’’ அல்லது ‘‘மூச்சிரைப்பு’’ அல்லது மூச்சு வாங்குதல் என்றும், மூச்சுச் செயற்பாட்டில், விரைவு மட்டும் அதிகமுள்ளதைப் ‘‘பலமூச்சு’’ என்றும், அளவுக்கு மீறி மூச்சுச் செயற்பாடு நிகழ்கையில் அடிக்கடி உண்டாகும் மூச்சிரைப்பை ‘‘அசாதாரண மூச்சு’’ என்றும் மூச்சுச் செயற்பாடு தற்காலிகமாகச் சிறிது நேரம் அதிகமாதல், குறைதலுமுள்ள மூச்சைச் ‘‘தடையுள்ள மூச்சு’’ என்றும் மல்லாந்து படுக்கும் போது ஏற்படும் மூச்சிரைப்பைக் ‘‘கடின மூச்சு’’ அல்லது ‘‘மூச்சுத்திணறல்’’ என்றும், நின்று கொண்டு அல்லது செங்குத்தாக உட்கார்ந்திருக்கும்போது ஏற்படும் கடின மூச்சை ‘‘மூச்சுத்திணறல்’’, என்றும் இரவு, படுக்கையில் திடீரென்று ஏற்படும் மூச்சிரைப்பைப் ‘‘படுக்கை மூச்சிரைப்பு’’ என்றும், பலவகையான உடல் உபாதைகள் அல்லது நோய்களில் இதுபோன்று உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சு அல்லது மூச்சிரைப்பு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

மேலும் மூச்சுச் செயற்பாடானது தற்காலிகமாக பல இரசாயன மற்றும் நரம்புக் காரணங்களால் மூளையிலுள்ள மூச்சு மையம் தூண்டப்பட்டு அதிகமாதலை Hyperventilation என்றும், நாட்பட நீடித்த அதிகமான மூச்சுச் செயற்பாட்டை Chronic hyperventilation syndrome அல்லது Effort syndrome என்றும் சொல்கின்றோம்.

சிலவகையான உடற்கோளாறுகளில் மாறுபட்ட இத்தனை வகை மூச்சுச் செயற்பாடுகள் தனித்தோ, ஒன்றுடன் ஒன்று கலந்தும் காணப்படலாம். இதைப் பகுத்துணர்ந்து, தற்காலிகச் சிகிச்சை மட்டும் செய்யாமல் நோய்க்கான காரணத்தை அறிந்து முழுசிகிச்சை முறைகளை மேற்கொள்ளவேண்டியது ஒரு சிறந்த நல்ல மருத்துவரின் தலையாய கடமையாகும்.

இப்போது நீங்கள் குறிப்பிட்ட பல மூச்சுவகைகளில் கடின மூச்சு என்னென்ன நோய்களில் வரும்?

பொதுவாக, நமக்கு உடலுழைப்பு அதிகமாகும் போது ஆக்சிஜன் தேவையும், கார்பன்_டை_ஆக்சைடு வெளியேற்ற வேண்டிய கட்டாயமும் அதிகமாகின்றன. ஆழ்ந்தும், விரைந்தும் மூச்சுவிடுவதன் மூலம் இது ஈடு செய்யப்படுகின்றது. இவ்வாறு ஆழ்ந்தும், விரைந்தும் கடினப்பட்டும் மூச்சுவிட அனைத்து மூச்சுத் தசைகளும் மிகுதியாகச் செயல்பட வேண்டியுள்ளன. இவ்வாறு இத்தசைகள் மிகுதியாகச் செயல்பட்டு, சுவாசித்தலின் வேகம் கூடுவதையே பொதுவாக நாம் மூச்சு வாங்குகிறது என்கிறோம்.

உடலுழைப்பு இல்லா சமயத்திலும் இவ்வாறு மூச்சு வாங்கத் தொடங்குவதே நோயின் அறிகுறியாகும். இதற்கு முக்கியமான மூன்று பெரும் காரணங்களைச் சொல்லலாம்.

அ). மூச்சுப் பாதையினுள் ஏற்படும் தடைகளால், உடலுழைப்பு அதிகமாகி, அதிக மூச்சு வாங்குதல் மற்றும் நுரையீரல்களின் சுருங்கி விரியும் மீள்தன்மை குறைவதுடன் மார்புக்கூடு விரிவதும் தடைபடுவதால் உண்டாகும் மூச்சுத் திணறல் நோய்கள்.

உதாரணமாக ஆஸ்துமா, நாட்பட்ட மூச்சுக்குழல் அழற்சி நோய், நுரையீரல் விரிவுநோய், மூச்சுக்குழல் அயல் பொருட்களால் அடைத்துக் கொள்ளுதல் போன்ற மூச்சுப்பாதை தடை நோய்கள்.

நுரையீரல் நீர்வீக்க நோய், நுரையீரல் திசுசுருக்கு நோய் காற்றுநுண் அறை அலர்ஜி நோய் போன்ற நுரையீரல் மீள்தன்மை குறைநோய்கள், முதுகுத்தண்டு வளைவு அழற்சிநோய், மூச்சுமண்டலத் தசைச் செயலிழப்பை உண்டாக்கும் நோய்கள் மற்றும் முதுகுத் தண்டுமுன்பக்க வளைவு நோய் Pectus excavatum போன்ற குழிந்த மார்புக் கூடாலும், மார்பு விரிவுத் தடைகளாலும் மூச்சுவாங்குதல் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படும்.

ஆ) மூச்சுச் செயற்பாடு அதிகமாகவதால் உண்டாகும் மூச்சிரைப்பு நோய்கள் அல்லது மூச்சுத்திணறல் நோய்கள்.

இவ்வகையான மூச்சுத்திணறல், மூச்சைஉள் இழுத்து, வெளிவிடும் விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தினால் மூச்சிரைப்பு அதிகமாகி தொல்லை தரும். உதாரணமாக நிமோனியா, நுரையீரல் சுருங்குநோய், அதிகப்பருமன் (ளிதீமீச்வீட்ஹ்) நுரையீரல் உறை அழற்சி நோய் மற்றும் நுரையீரல் இரத்தநாள அடைப்பு நோய் மற்றும் இதயச் செயலிழப்பிலும் இவ்வகையான மூச்சிரைப்பு ஏற்படும்.

முன்பே நான் சொன்னது போல் மூச்சுமையம் பல்வேறு இரசாயன மற்றும் நரம்புக்காரணிகளால் தூண்டப்படும்போது பெருமூச்சு உண்டாகிறது. இது அடிக்கடி அதிகளவில் உணர்ச்சி வசப்படுபவர்கள், பரபரப்புக்குள்ளாவோர், சமூக உறவுப் பிரச்னைகளால் உருவாகும் தாங்க முடியாத சீற்றம், பகைமை உணர்வு, வெறுப்பு, பாலுணர்வு போன்றவைகளை அடக்கி வைப்போர்கள் ஆகியோருக்கு இப்பெருமூச்சு, நாட்பட்ட பெருமூச்சு நோயாக உருவெடுக்கிறது.

பயம், பதற்றநோய், அச்சநோய், கெட்ட கனவுகளைப் பெறுவோர் போன்ற நரம்புத் தளர்ச்சி நோய்களுக்கு ஆட்படும் பண்பியல் தொகுப்பு உடையவர்களும் குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள், தாய்மார்கள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே மூச்சுத்திணறலைப் பற்றி இன்னும் நாம் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.


http://eegarai.wordpress.com/2006/06/15/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-respiration/



மூச்சுவிடுதல் - Respiration Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 3:03 am

மிக மிக மிகப் பயனுள்ள சமுதாயத் தொண்டு இது போன்ற மருத்துவச் செய்திகளைத் தருவதுதான் இன்றையச் சூழலுக்கு... பகிர்வுக்கு நன்றி சிவா... மூச்சுவிடுதல் - Respiration 678642 மூச்சுவிடுதல் - Respiration 154550



மூச்சுவிடுதல் - Respiration Aமூச்சுவிடுதல் - Respiration Aமூச்சுவிடுதல் - Respiration Tமூச்சுவிடுதல் - Respiration Hமூச்சுவிடுதல் - Respiration Iமூச்சுவிடுதல் - Respiration Rமூச்சுவிடுதல் - Respiration Aமூச்சுவிடுதல் - Respiration Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 06, 2010 3:14 am

Aathira wrote:மிக மிக மிகப் பயனுள்ள சமுதாயத் தொண்டு இது போன்ற மருத்துவச் செய்திகளைத் தருவதுதான் இன்றையச் சூழலுக்கு... பகிர்வுக்கு நன்றி சிவா... மூச்சுவிடுதல் - Respiration 678642 மூச்சுவிடுதல் - Respiration 154550


எனது தோழியின் மறுமொழியை ,நானும் முன்மொழிகிறேன்.
நன்றி தல. நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக