ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்து சக்தியின் மகிமை

+6
அன்பு தளபதி
கோவை ராம்
சபீர்
பிளேடு பக்கிரி
சாந்தன்
seethamani
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வித்து சக்தியின் மகிமை Empty வித்து சக்தியின் மகிமை

Post by seethamani Tue May 04, 2010 3:00 pm

நாம் உண்ணும் உணவுதான் இரசமாகி இரத்தம், கொழுப்பு, தசை, எலும்பு மஜ்ஜையாகி, இறுதியாக 7-வது தாதுவான விந்து நாதமாக மாறுகிறது.

விந்து நாதம் மூளையில் உற்பத்தியானாலும் உடல் முழுவதும் பரவியுள்ளது. வித்து கழிவினால் மட்டுமே பிறப்பு, இறப்பு உண்டாகிறது.

சீவ வித்துக் குழம்பில்தான் உயிர்த்துகள்கள் உற்பத்தியாகின்றன. இதிலிருந்துதான் Ectoplasm என்கிற தூய சக்தி உண்டாகிறது. நல்ல குழந்தை உருவாக வேண்டும் என்கிற காரணத்திற்காக மட்டும் வித்து வெளியேற்றம் வேண்டும். மற்ற இன்பத்திற்காக வெளியேறுமாயின் அது நோய் உண்டாக்கும். அதை வெளியேற்றாமல் பாதுகாப்பது நமது தலையாயக் கடமையாகும்.

அவசியமற்ற முறையில் செலவாகாமல் போதிய அளவில் வித்துவை சேமித்து வைத்துக் கொண்டால், 120 வருடங்கள் கண்டிப்பாக வாழலாம்.

வித்துவை அடக்கி வைப்பதோ, அல்லது அதிகம் செலவழிப்பதோ கூடாது.

ஒரு முறை விந்து வெளியேறும்போது அதன் அளவு சுமார் 2.5 ml ஆக இருக்கும். இது 10 முட்டைகள், 6 ஆரஞ்சுப் பழம், 2 எலுமிச்சைப் பழம் 100 gm. மாமிசம் இவற்றிற்கு ஈடான புரதச் சத்து, விட்டமின்கள், தாது உப்புக்கள் இவற்றிற்கு ஈடாகும்.

2.5 ml விந்துவில் 250 முதல் 350 மில்லியன் உயிரணுக்கள் (Sperms), 3cm/minute என்ற வேகத்தில் நீந்திச் செல்லும் தன்மையுடையது.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இரத்த வகைகள் உள்ளதுபோல், சீவவித்துக் குழம்பில் வெவ்வேறு இரசாயனத் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முறை தவறி இனச் சேர்க்கை செய்தால், வெவேறு இரசாயன மாற்றம் உள்ள விந்து கர்ப்பப் பையில் சேர்ந்தால், கர்ப்பப்பை புண்ணாகி அதில் புற்றுநோய் உண்டாகி அதை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலும் இந்த நோய் உள்ள பெண்ணோடு தொடர்பு கொண்டால் AIDS என்னும் கொடிய நோய் வேரும்.

சீவ வித்துக் குழம்பின் தரத்தையும், தன்மையையும் திணிவையும் பொறுத்துத்தான் உடலின் தன்மை அமையும்.

விந்து நாத விரயம் இன்பம் அல்ல. துன்பம்தான். அதை காயகல்பப் பயிற்சியின் மூலம் மேலே கொணடு சென்றால் தேகம் விழாது. கீழே இருந்தால் அடிக்கடி வெளியேற்ற வேண்டும் எனத் தூண்டும். அதனால் தேகம் கீழே விழுந்து விடும்.

இப்பேர்ப்பட்ட உன்னதமான வித்துவை வித்து சுழற்சி மூலம், உடல் முழுவதும் பரவ விட்டுத் தொடர்ந்து செய்தால் நீள் ஆயுள், நிறை செல்வத்துடன் வாழலாம்.
seethamani
seethamani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by சாந்தன் Tue May 04, 2010 3:20 pm

நீங்கள் இதை பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை கொடுங்களேன் நண்பரே உதாரனமாக காயகல்ப பயிற்சி பற்றி ...

நன்றி நண்பரே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty எளியமுறை காயகல்பப் பயிற்சி

Post by seethamani Tue May 04, 2010 3:47 pm

இளமைகாத்து நீண்ட காலம் இந்த நிலவுலகில் வாழ்வது என்பது மனிதனது சாதனைக்கு உட்பட்டதே. இதற்கான வழி வகைகளை நம் நாட்டுச் சித்தர்கள் எழுத்து வடிவில் விட்டுச் சென்றிருந்தாலும், அவர்கள் கையாண்ட பரிபாஷைச் சொற்றொடர்களின் முழுப்பொருளும் விளங்காதிருந்த காரணத்தாலே "காயகல்பப் பயிற்சி'யானது பல நூற்றாண்டுகளாக மூடுமந்திரமாகவே இருந்தது. தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் 40 ஆண்டு காலம் தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாகக் "காயகல்பப் பயிற்சி' அனைத்து மக்களுக்கும் கைகூடி வருகின்ற அளவுக்குத் தெளிவாக்கி உள்ளார்கள். இது குண்டலினி யோகத்தின் உச்சக்கட்டப்பேறாகும். இந்த அருமையான பயிற்சியைக் கற்றுக் கொள்ளும் முன் அதற்கு ஆதாரமான தத்துவத்தினையும் விஞ்ஞான ரீதியாக நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

உடல், உயிர்ச் சக்தி, விந்துநாதம், சீவகாந்தம், மனம் இவை ஐந்தும் ஒரு சேர இயங்கும் அமைப்பே மனிதன் என்கிற வடிவமாகும்.

கோடிக்கணக்கான சிற்றறைகள் (Cells) சேர்ந்து அடுக்கடுக்காக இயங்குவது இந்த உடல். ஒவ்வொரு சிற்றறைக்கும் இருபுறமும் காந்தக் கவர்ச்சி உண்டு. உடல் நிலைத்திருக்க வேண்டுமானால் அதில் அமைந்துள்ள சிற்றறைகளின் எண்ணிக்கைக்கும், பளுவுக்கும் ஏற்ற ஜீவகாந்த அழுத்தம் தேவை. "ஜீவகாந்தம்' என்பது உயிர்ச்சக்தி இயங்குவதால் எழும் அலையாகும். ஒவ்வொரு உயிர்த்துகளும் தன்னைத்தானே மிக விரைவாகச் சுற்றிக் கொண்டு இருப்பதால், அதிலிருந்து விரிந்து கொண்டே இருக்கும் அலை தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருக்கிறது. ஓர் உடலில் உள்ள உயிர்த்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஜீவகாந்த அழுத்தம் நிலைபெறும். போதிய ஜீவகாந்தம் இருக்கும் வரையில்தான், உடலில் உள்ள சிற்றறைகளின் அடுக்குக் குலையாமல் நிலைத்து இருக்கும்.

இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், இம்மூன்றும் சிதறாது ஒழுங்காக ஓடி, உயிருக்கும் உடலுக்கும் இடையே உள்ள உறவை நிலைக்கச் செய்யும். எனவே உடலைத்தாங்க ஜீவகாந்தம் போதிய அளவு தேவை.

ஜீவகாந்தத்தைப்பெருக்க வேண்டுமெனில், அதற்கு வேண்டிய எண்ணிக்கையுள்ள உயிர்த் துகள்கள் தேவை.

உயிர்த்துகள்களோ விந்துநாத திரவத்தின் அளவையும், தன்மையையும் பொறுத்திருக்கும். போதிய அளவு விந்து (ஆண் வித்து) அல்லது நாதம் (பெண் வித்து) இருந்தால்தான் உடலை நடத்தப் போதுமான ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு உடலில் உயிர்ச் சக்தித்துகள்கள் நிலைத்திருக்கும். ஜீவகாந்த அளவு சரியாக இருந்தால்தான் பரு உடலானது சிற்றறைகளின் ஒழுங்கான இயக்கத்தால் சீராக இயங்கிக் கொண்டிருக்கும்; மனமும் நல்ல முறையில் இயங்கும். ஜீவ காந்தத்தின் ஒரு பகுதி உடல் சிற்றறைகளின் மூலம் உடலியக்கமாகவும், (Metabolic routine) , மற்றொரு பகுதி மூளையின் சிற்றறைகள் மூலமாக மன அலைகளாகவும் இயங்கிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடல், விந்து, உயிர்ச் சக்தி, ஜீவகாந்தம், உடல் மன இயக்கம் என்ற தொடரினை நன்றாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். இந்த ஐந்தில் ஒன்று குறைந்தாலும், இயக்க ஒழுங்கு குலைந்தாலும் அது மற்றவற்றையும் ஒவ்வொன்றாகப் பாதிக்கும். அப்படி ஒன்றுக்கு ஒன்று ஏற்படும் இயக்க முரண்பாட்டிற்கு ஏற்ப வலி, வியாதி, மரணம் இவை சம்பவிக்கும்.

தனது செயல்கள் மூலமாகவோ, வெளிப்புற மோதுதல் அல்லது கோள்களின் காந்த அலைவீச்சு மூலமாகவோ உடலுடைய ஜீவகாந்தம் அல்லது உடலியக்கம் பாதிக்கப்படலாம். உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் இந்த ஐந்து வகையில் அலட்சியம், மிதமிஞ்சிய உபயோகம், முரண்பட்ட உபயோகம் இவற்றால் உடல் இயக்கம் பாதிக்கப் படலாம். இது தன்னுடைய செயல் மூலமாக வரும் விளைவு. இது தவிர தட்ப வெப்ப ஏற்றத் தாழ்வு மற்றும் தற்செயல் விபத்துக்களால் (Accident) ஏற்படும் குழப்பங்கள், கோள்கள் சஞ்சாரத்தில் அண்மை சேய்மை, ஒன்றோடு ஒன்று நேர்படுதல், ராசி மாற்றம் ஆகிய காரணங்கள், ஒவ்வொருவரின் பிறந்த நாள் கோள்கள் நிலைகளுக்கு ஏற்ப ஜீவகாந்தம் ஏற்றத் தாழ்வடைதல், இப்படி அநேக அம்சங்களால் குழப்பம் வரலாம்.

எந்த விதத்தில் உடல் நலம் குழப்பமடைந்தாலும், தானே அதனைச் சரிப்படுத்தி உடலை நலமாக்கிக் கொள்கின்ற இயற்கை நியதி உடலிலேயே ஒவ்வொருவருக்கும் ஓரளவு அமைந்திருக்கிறது; இதனை ""குழப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் இயற்கை நியதி'' (Immunity against disturbance) என்று கூறு வார்கள். இந்த இயற்கை நியதி அமைந்த அளவுக்கு மேலாக குழப்பம் மீறினால்தான் அது உடலியக்கத்தைப் பாதிக்கும். அவ்வாறு பாதிப்பு ஏற்படும் பொழுது, மனிதன் தன்னுடைய முயற்சியினால் உடற்பயிற்சி, உளப்பயிற்சி, உணவு முறை உடல் நலத்தைக் காத்துக் கொள்ளலாம்.

முதுமை வரும் காரணம் :

மனிதன் நிலவுலகத்தின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். 25,000 மைல் சுற்றளவு கொண்டு, மண், உலோகங்கள், ரசாயனங்கள் இவை அடங்கிய ஒரு பெரிய கோளம் நிலவுலகம். அது, ஒரு மணிக்குச் சுமார் 1,000 மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. சூரியனை மணிக்குச் சுமார் 66,000 மைல் வேகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தன்னைத் தானே சுற்றும் வேகத்தால், எந்தக் கெட்டிப் பொருளையும் மையத்தை நோக்கி இழுக்கும் இயற்கை நியதி அதற்கு அமைந் திருக்கிறது. அதனால் மனிதனின் பரு உடலிலுள்ள சிற்றறைகள் (Cells) எல்லாம் பூமியின் மையம் நோக்கி இழுக்கப்படவும், அதே உடலில் உள்ள உயிர் அணுக்கள் உடலைவிட்டு மேலே தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கவும், பூமியின் தற்சுழற்சி காரணமாக இருக்கிறது. பூமியின் கவர்ச்சிச் சக்தியால் உடலை விட்டு உயிர் பிரியாதிருக்க, ஒவ்வொரு உயிருக்கும் ஒரு காலம் அமைந்து உள்ளது. அந்தக் காலம் வரையில், ஒவ்வொரு நாளும் உயிர்ச் சக்தியின் விலகல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கடைசியில் பிரிந்துவிடும். இந்த நியதியின் விளை வாகவே, மனிதனுக்கு 40 வயது வரையிலே வளர்ச்சியும், 80 வயதிற்கு மேலாகத் தளர்ச்சியும் உடலில் ஏற்படுகின்றன.

ஆறாவது அறிவிற்கு இயற்கையின் நியதிகளை உணர்ந்து, அதை ஓரளவு வெல்லும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் உடலில் இருந்து பிரியும் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால் மரணத்தை நீண்ட நாட்கள் தள்ளிப் போடலாம்.

உயிர் தாங்கியான வித்தைப் போதிய அளவு கெட்டிப் படச் செய்துவிட்டால், உயிர் பிரியாமலே அதனை உடலிலேயே நிலைக்க வைத்து விடவும் செய்யலாம். வாழ்ந்தது போதுமென்ற நிறைவு ஏற்படும் போது மன இயக்கத்தை மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். மன இயக்கம், உடல் இயக்கம் இரண்டும் நின்று விட்ட பின், உடலிலேயே உயிர் அடக்கம் பெற்று இருக்குமானால், அதனை ஜீவசமாதி என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையை அடைய வேண்டுமானால் வித்தின் நீர்ப்புத் தன்மையைக் குறைத்து, உடலை விட்டு பல வகையிலே வெளியேறும் தன்மையையும் குறைத்து விட்டால், மூலாதாரத்திலேயே தேக்கமுறும். வித்திலிருந்து சுத்த சக்தியான, ஓஜஸை பதங்கமாகப் பிரித்து முதுகுத் தண்டு வழியாக மேலேற்றி, மூளையில் உற்பத்தியாகும் வித்துச் சக்தியோடு இணையச் செய்ய முடியும். இதனை ஆங்கிலத்தில் Recycling of Sexual Vital Fluid என்று கூறலாம்.
இதற்கு முறையான பயிற்சியினைப் பின்பற்ற வேண்டும். முதுமையைத் தடுக்க, ஒவ்வொரு நாளும், தளர்ச்சியுறும் நரம்புகளைப் பயிற்சியினால் முறுக்கேற்றிக் கொண்டிருக்க வேண்டும். மரணத்தைத் தடுக்க, வித்துச் சக்தியைப் பதங்கமாக்கி, அதன் உற்பத்தி நிலையத்தோடு இணைக்க வேண்டும். இந்த இரண்டு பயிற்சிகளும் ஒன்றிணைந்ததே காயகல்பப் பயிற்சியாகும்.
அரியதோர் சித்தர் கலையாகிய இந்தக் காயகல்பப் பயிற்சி காலை, மாலை மற்றும் உணவுக்கு பிறகும், இரவு படுக்கும் முன்பும் அததற்கேற்ற இருப்பு நிலையில் செய்து வாருங்கள்.

முதல் வாரம், நரம்பூக்கம் என்ற பயிற்சியினை ஒவ்வொரு நிலையிலும் பத்துத் தடவைகள் செய்து, ஓஜஸ்மூச்சு ஒன்று வீதம் போட்டு வாருங்கள். உங்கள் உடலுக்கு பொருந்திவிட்ட பிறகு, நரம்பூக்கப் பயிற்சி இருபதும், ஓஜஸ் மூச்சுப் பயிற்சி இரண்டும் ஒவ்வொரு நிலையிலும் போடலாம். முதலிலேயே அதிகமாக ஓஜஸ் மூச்சுப் போட்டால் உடலில் சூடு அதிகமா கலாம். உள் சதைகளில் சிறிது பொருந்தா உணர்வு ஏற்படலாம். உடல் சூடானாலும், உள்சதைகளில் சிறிது வலி தெரிந்தாலும் ஓரிரு நாளைக்கு அல்லது சில வேளைகளுக்கு ஓஜஸ் மூச்சுப் பயிற்சியை நிறுத்தி வைக்கவும்.

காயகல்பப் பயிற்சியின் பயன்கள் :

காயகல்பப் பயிற்சி மிகவும் மதிப்புடையது. மனிதனின் வாழ்வில் உடல் நலம், மனவளம், பொருள் செழிப்பு, தொழில் திறம், உயர் நட்பு ஆகிய அனைத்தும் அளித்துச் சிறப்பிக்க வல்லது. அதன் முழுப் பயனையும் அடைய வேண்டுமானால், தொடக்கத்தில் ஒரு வாரம் உடல் உறவுகொள்ளாமலிருப்பது மிக்க நலம் தரும்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் முதல் மூன்று நாட்கள் இப்பயிற்சியைச் செய்யக் கூடாது. இரண்டு மாத கர்ப்பத்திற்கு (pregnancy) மேல் ஓஜஸ் மூச்சுப் பயிற்சியை நிறுத்தி விடவும். நரம்பூக்கப் பயிற்சி மட்டிலும் காலை, பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் செய்து வரலாம். எளிய, இயற்கையான பிள்ளைப்பேறு (child delivery) உண்டாகும்.

காயகல்பப் பயிற்சியினால் உடல் நலமும், மனவளமும் நன்றாக இருப்பதோடு, ஆண்மை ஓங்கும், உடல் உறவு விருப்பம் எப்பொழுதும் மனதுக்குக் கட்டுப்பட்டிருக்கும். இளமையிலேயே துறவு கொள்வோர் மற்றும் பொதுத் தொண்டில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோர் தங்கள் கற்பு மற்றும் உடல் நலத்தைக் காத்துக் கொள்ள இந்தப் பயிற்சி ஒரு வரப் பிரசாதமாகும். நாளுக்கு நாள் அறிவு மேலோங்கி, மெய்ப் பொருள் விளக்கம் ஏற்படும். நீண்ட காலமாக இருந்து வரும் நோய்கள் படிப்படியாகக் குணமடைந்து உடல் நலமுறும். திருமணத்திற்குப் பின் உடல் நலமும், அறிவு வளமும் உடைய குழந்தைகள் உண்டாவார்கள். தானே விரும்பும்வாறு குழந்தை பெற்றுக் கொள்வதோ, தடுத்துக் கொள்வதோ இயல்பாக முடியும்.

சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களும் நீங்கி, அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
seethamani
seethamani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by சாந்தன் Tue May 04, 2010 3:51 pm

மிக்க நன்றி நண்பரே ...
நாங்கள் இந்த பயிற்சியை கொஞ்ச நாள் செய்துவிட்டு இப்போது விட்டு விட்டோம் மீண்டும் செய்யலாமா ? அல்லது எதாவது அதற்க்கு வழிமுறைகள் இருக்கா ?

பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் பல நண்பரே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by பிளேடு பக்கிரி Tue May 04, 2010 4:03 pm

உபயோகமான தகவல் நண்பா..............
வித்து சக்தியின் மகிமை 677196 வித்து சக்தியின் மகிமை 677196



வித்து சக்தியின் மகிமை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by சபீர் Tue May 04, 2010 6:04 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் பல நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by கோவை ராம் Tue May 04, 2010 6:07 pm

தற்கால மருதுவர் சொல்வதர்கும் நீங்கள் சொல்வதர்கும் நிறைய வித்யாசம் உள்ளது போல் தெரிகிறது நன்பரே.குறிப்பாக விந்து தவறான வழிகளில் வீனாவது போன்ற கருத்துகள்.ஏனென்றால் விஜய் மற்றும் ராஜ் தொலைகாட்சிகளில் இது போன்ற கருத்துகளை கூரி பலர் பணம் பார்கின்றனர் (மருதுவர் போர்வையில்)பாவம் இளைஞர்கள் பயந்து பயந்து தெளிவிள்ளாமல் இருக்கின்றனர்.சிரிது தெளிவுபடுத்தவும்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty காயகல்பப் பயிற்சியாளர்களுக்குச் சில அறிவுரைகள்

Post by seethamani Wed May 05, 2010 2:12 pm

காயகல்பப் பயிற்சியை மனவளக்கலை மன்றங்களில் கற்றுக் கொள்ளலாம்.

பொது விதிகள்

1. ஆணோ, பெண்ணோ பருவம் அடைந்த பின் அதாவது 14 வயதுக்குப் பின் காயகல்பக் கலையைக் கற்றுப் பழகிப் பயன் பெறலாம்.

2. தொடக்க காலத்தில் ஒரு வாரம் உடல் உறவைத் தவிர்த்தால் பயன் அதிகமாகக் கிட்டும்.

3. உணவு அருந்திய உடனே இந்தக் காயகல்பப் பயிற்சியைச் செய்யக் கூடாது. உணவுக்கு முன்னமே செய்வது தான் நல்லது. உண்டபின் மூன்று மணி நேரத்திற்குப் பின்பு இப்பயிற்சியைச் செய்யலாம்.

4. ஆணோ, பெண்ணோ குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் இப்பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

5. இருதய நோய் உடையவர்களும், இரத்த அழுத்த நோய் (Blood Pressure) உடையவர்களும் காயகல்பப் பயிற்சியோடு குண்டலினி யோகம் (மனவளக்கலை) கற்றுக் கொண்டு தவம் செய்து வந்தால் ஆச்சரியப்படத்தக்கபடி அமைதியும் நலமும் உண்டாகும்.

பெண்கள் பின்பற்ற வேண்டிய முறைகள்

1. பெண்கள் மாதவிடாய் காலத்தில் 3 முதல் 5 நாட்களுக்குக் காயகல்பப் பயிற்சியைச் செய்யக் கூடாது.

2. அவர்கள் ஓஜஸ் மூச்சு போடும்போது ஆண்கள் போடுவது போல் அழுத்தமாக சீறிப் போடாமல் மெதுவாகவும், இலேசாகவும் போட வேண்டும்.

3. கர்ப்பம் தரித்து இரண்டு மாதங்கள் நிறைந்து விட்டால், ஓஜஸ் மூச்சு போடாமலே எல்லா நிலைகளிலும் நரம்பூக்கம் மாத்திரமே செய்ய வேண்டும். குழந்தைப்பேறு அதிகச் சிரமமில்லாமல் இருப்பதோடு தாயும், குழந்தையும் உடல்கட்டு மற்றும் மனத்தெம்பு உடையவர்களாக இருப்பார்கள். பிள்ளைப் பேற்றுக்கு ஒரு மாதத்திற்குப் பின் நரம்பூக்கம் தொடங்கி, பிறகு லேசாக ஓஜஸ் மூச்சும் போட்டுக் கொள்ளலாம்.

காயகல்பப் பயிற்சியினால் விளையும் நன்மைகள்

1. உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள் வலும்பெற்று உடல் கட்டு உண்டாகும். ஆணுக்கு விந்தும், பெண்ணுக்கு நாதமும் கெட்டிப்பட்டு - இருப்பும், அளவும் அதிகரிக்கும். இதனால் உடல் நலமும், மனவளமும் உண்டாகும். ஆஸ்துமா, நீரிழிவு, மூக்கில் நீர் வடிதல், மூலநோய், தோல் வியாதிகள் இவைகள் கட்டுப்பாட்டிற்கு வரும். நீண்ட நாட்கள் பயிற்சி செய்துவர, பூரண குணமும் கிட்டும். இதை முறையாகச் செய்து வந்தீர்களேயானால், வாழ்வில் நீங்கள் நலம்பெற முடியும்.

2. உணவு, உழைப்பு, உறக்கம், எண்ணம் இவற்றை அலட்சியப்படுத்தாமலும், அளவுக்கு அதிகமாக அனுபவிக்காமலும், முரண்பாடாக அனுபவிக்காமலும், சமநிலை காப்பதும், உள்ளத்தில் நல்ல எண்ணங்களே உருவாகும் விதமாக வைத்துப் பழகுவதும் பொதுவாக வாழ்வுக்கு நலம் தரும். காயகல்பமும் அதிகமாக, சீக்கிரமாக நன்மை அளிக்கும்.

3. விந்து, நாத சக்திகள் பலமும், தூய்மையும் பெறுவதால் இப்பயிற்சி செய்யும் அன்பர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் உடல் வலுவும், அறிவுக்கூர்மையும் உள்ளவர்களாக இருப்பார்கள். நமது நாட்டில் நல்ல குழந்தைகளைப் பற்றிக் கூறும்போது கருவில் திருவுடையார் என்று கூறுவது வழக்கம். அத்தகைய குழந்தைப் பேற்றினை நீங்கள் அடைந்து மகிழலாம்.

4. இளமைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு இரவில் விந்து (தூக்கத்தில்) கழிந்து போதலும், சுய இன்பப் (Masturbation) பழக்கமும் இருந்தால், அதுவும் நின்று விடும். படிப்பில் விருப்பம் ஓங்கும். அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் வெற்றி பெறலாம்.

மேலும், இப்பயிற்சியினால் இன்னும் பல நன்மைகளை வாழ்வில் அடையலாம். நீங்கள் காயகல்பத்தில் ஆசிரியப் பயிற்சி எடுக்கும் வரையில் இதை யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது. இதைச் சித்தர்களுடைய சாபமாகக் கருத வேண்டும். உங்கள் ஞானாசிரியர் தக்கக் காலத்தில் இந்தச் சாபத்திலிருந்து உங்களை விடுவித்து, பிறருக்குக் கற்பிக்க உங்களுக்கு அருள்புரிவார்.

மேலும், இப்பயிற்சியைப் பற்றி ஏதேனம் சந்தேகம் ஏற்பட்டால் அருகிலுள்ள மனவளக்கலை மன்றத்திற்குச் சென்று, பயிற்சியைச் செய்து காட்டிச் சரியாக உள்ளதா என்று மன்ற ஆசிரியர் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது நலம்.

உங்கள் அருகிலுள்ள மனவளக்கலை மன்றத்தின் முகவரி அறிந்துக்கொள்ள கீழ்க்காணும் இணையதளத்தில் காணவும்.
http://vethathiri.org/ContactUs/
seethamani
seethamani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by அன்பு தளபதி Wed May 05, 2010 2:13 pm

சீதாமணி உங்களிடம் சந்தேகம் கேட்டிருந்தேனே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by raghuindian Sun Aug 30, 2015 4:51 pm

எப்படி செய்வது நரம்பூக்கம் மற்றும் ஓஜஸ்மூச்சு பயிற்சி.
raghuindian
raghuindian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 30/08/2015

http://raghuindian07@gmail.com

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum