ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!

4 posters

Go down

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Empty கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!

Post by sathyan Mon May 03, 2010 10:58 pm

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!
- பரமசிவன்

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Paripoorani


பஞ்ச பூதங்களின் காரணனும் திரிபுரங் களை எரித்தவனுமான சிவபெருமான் சுயம்புவாய் முகிழ்த்துக் கோவில் கொண்ட ருளும் அற்புதத் தலங்களுள் ஒன்று தென் மலை திரிபுரநாதர் ஆலயம். அதிலும் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் மிகச் சில ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்வதும் கூடுதல் சிறப்பு.

கருவறையில் ஈசன் திரிபுரநாதர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்புரிகிறார். காற்று நுழையாத சிவன் கருவறைக்குள் பஞ்சமுக தீபங்கள் எரிந்து கொண்டிருக் கின்றன. அதில் நான்கு தீபங்கள் அசைந்து கொண்டிருக்க, சிவனை நோக்கியிருக்கும் ஒருமுக தீபம் மட்டும் அசையாமல் இருப்பது அதிசயம்.

பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் அம்மன் தெற்கு நோக்கி அருள் புரிவதைக் காணலாம். ஆனால் இங்குள்ள சிவபரிபூரணி அம்மன் தனிச் சந்நிதியில் மேற்கு நோக்கி இருப்பதும் சிறப்பு.

பொதுவாக மேற்கு பார்த்த ஆலயங்கள் அமைந்திருப்பதற்கு இரண்டு காரணங்களைக் கூறுவர். மக்களுக்கும் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் கொடுமைகள் புரிந்த வலிமை வாய்ந்த அசுரர்களை அழிக்கும் பொருட்டு ஈசன் திருவருள் புரிந்த தலங்களில் அமைந்த ஆலயங்கள் மேற்கு நோக்கி இருக்கும் என்பது புராண காரணம்.

மாற்றார்மீது போர் தொடுத்து வென்ற அரசர்கள் தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஆலயங்களை அமைப்பது மரபு. போர் புரியும்போது பலரைக் கொல்ல வேண்டிய கட்டாயம் மன்னர்களுக்கு அமையும். அதனால் ஏற்படும் பாவத்தைப் போக்கிக் கொள்வதற் காக மன்னர்கள் மேற்கு நோக்கிய ஆலயங் களை அமைத்து வழி பட்டார்கள் என்பது வரலாற்றுக் காரணம். இவ்வாலயத்தைச் சுற்றி வரும்போது அங்குள்ள கல் வெட்டுகளில் இருந்து இந்த விவரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Paripoorani1கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதி பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டி ருந்தது. அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த சுந்தரபாண்டிய மன்னன் போரில் தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடவும் போர்க் களத்தில் எதிரிகளைக் கொன்ற பாவம் நீங்கவும் இவ் வாலயத்தை எழுப்பி குடமுழுக்கு செய்வித்தான் என்பதை அறிய முடிகிறது.

இவையன்றி, கடும் தவம் செய்து தன்னை வழிபட்ட முனிவர்களுக்காகவும் ஈசன் மேற்கு நோக்கி அருள்புரிந்தார் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாலயத்தின்முன் மிகப் பெரிய குளம் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நெல் வயல்களுக்கு செழிப்பு தரும் நீர்வளம் கொண்டது இந்தத் திருக்குளம்.

இவ்வாலயத்தில் ராமரும் அனுமனும் சிவனை வழிபடுவது போன்ற புடைப்புச் சிற்பம் அற்புத மாக அமைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் களின் சின்னமான இரட்டை மீன்களும் விதானத்தில் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.

சிவாலயங்களில் காணப்படும் பரிவார தேவதைகள் அனைத்தும் இங்கேயும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் குறிப்பிட வேண்டிய ஒன்று.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த ஆலயம் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு தென்மலை ஜமீன்தார்களின் பொறுப்பில் இருந்து வந்தது. தற்போது சிவகிரி ஜமீன் வாரிசுகளின் பொறுப்பில் இருக்கிறது.

""முற்காலத்தில் பல்வேறு அற்புதங்களை பக்தர்களுக்கு உணர்த்திக் காட்டியதைப்போல தற்போதைய தலைமுறைகளுக்கும் தன்னுடைய அருளாற்றலை உணர்த்தி வருகிறார்'' என்று மெய்யுருகச் சொல்கிறார்- இவ்வாலயத்தில் இருபது ஆண்டுகளாக சிவத் தொண்டு புரிந்து வரும் பால்சாமி சுவாமிகள்.

""இங்கே சிவன் சந்நிதிக்குத் தெற்கில்- ஈசனுக்கு இடப்புறம் மேற்கு நோக்கிய வண்ணம் அம்மன் அருள்வதால் கிரியா சக்தியாகப் போற்றப் படுகிறாள்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்குமுன் இவ்வாலயம் சரியான பராமரிப்பின்றி- பூஜையுமின்றி இருந் தது. கோவிலுக்கு இரண்டு காவலர்கள் மட்டும் இருந்தனர். அதில் ஒருவர் கிறிஸ்துவர். அப்போது ஒரு நாள் அதிகாலை நேரத்தில் ஒரு ஐந்து வயது சிறுமி அங்கு வந்து கிறிஸ்துவ காவலாளியைத் தட்டி எழுப்பியது. தூக்கக் கலக்கத்தோடு கண் விழித்த காவலாளியிடம், "ஐயா, எனக்கு ரொம்ப பசியா இருக்கு. சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது. நாளைக்கு நீங்க வரும்போது எனக்கு கொஞ்சம் சாப்பாடு கொண்டு வாங்களேன்' என்றது.

சிறுமியைப் பரிதாபத்தோடு பார்த்த காவலாளி, "கலங்காதேம்மா. நாளைக்கு நான் நிச்சயம் சாப்பாடு கொண்டு வாரேன்' என்றார். காவ லாளியின் பதிலில் மகிழ்ந்த சிறுமி அங்கிருந்து கோவிலுக்குள் போவதை அவர் பார்த்தார். உள்ளே ஏன் போகிறது என்று அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே அம்மன் கருவறைக்குள் சென்ற அச்சிறுமி மாயமாய் மறைந்து விட்டாள். அதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார் அந்தக் காவலாளி. "ஆகா! நம்மிடம் வந்து பசிக்கு உணவு வேண்டும் என்று கேட்டது அம்மன் அல்லவா!' என்று உணர்ச்சிவசப்பட்டவர் உடனே ஊருக்குள் ஓடோடிச் சென்று நடந்த அதிசயத்தைச் சொன்னார்.

"நான் மதத்தால் கிறிஸ்துவன்தான். ஆனாலும் அந்த அதிசயத்தைக் கண்கூடாகப் பார்த்தேன். இத்தனை நாட்கள் அம்மனுக்குப் பூஜையில்லா மல் பட்டினி போட்டுவிட்டீர்களே! இனி அது கூடாது. இந்த ஊருக்கு அம்மனே காவலாக இருக்கும்போது தனியாக நான் எதற்கு கோவிலைக் காவல் காக்க வேண்டும்?' என்றார். அன்று முதல் இன்று வரை மக்களே பொறுப்பேற்றுக் கொண்டு மிகச் சிறப்பாக பூஜைகளைச் செய்து வருகிறார்கள். காவலாளி கள் தேவையில்லாத ஆலயத்திற்கு அம்மனே காவலாக நிற்கிறாள்.

இந்தக் கோவிலில் கிரிவலமும் நடைபெறுகிறது. தேய்பிறை அஷ்டமி யில் கிரிவலப் பூஜை செய்து வேண்டிக் கொண்டார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சிவானந்தன் என்னும் அன்பர். குழந்தை பாக்கியம் கிட்டாது என்று மருத்துவர்களே கைவிரித்து விட்ட நிலையில், அந்த அன்பரின் வேண்டுதல் இத்தல இறைவன் அருளால் நிறைவேறியது.

விவாகரத்துக்காக நீதிமன்றத் துக்குப் போய்விட்டார் ஒரு கணவன். மனைவியோ இந்த அம்மனிடம் வந்து கண்ணீர் சிந்தி, "தாயே எங்களைச் சேர்த்து வை' என்று முறையிட்டாள். சிவபரிபூரணி அம்மையின் அருளால் அத்தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்து இணைபிரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பூஜைகளையும் அன்னதானத் தையும் செய்கின்றனர். ஒவ்வொரு கிரிவல நாளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபடுகிறார்கள்'' என்றார்.

""நான் பணமில்லாதவன்தான். ஆனால் நிறைய பணக்கார நண்பர்களின் ஆதரவைப் பெற்றவன். இந்தக் கோவிலைப் பற்றி அந்த நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் தங்களாலான திருப்பணிகளை மனமுவந்து செய்கிறார்கள். பௌர்ணமி நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் எனக்கு இரவில் படுத்தால் நிம்மதியான தூக்கம் வருகிறது. அதுவே போதும்!'' என்கிறார் புத்தூர் உலகநாதன்.

இவ்வாறு தங்களை நாடி வரும் பக்தர்களுக்கு நிறைவையும் நிம்மதி யையும் தருகிறார்கள் திரிபுரநாதரும் சிவபரிபூரணி அம்மனும்!
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Empty Re: கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!

Post by சரவணன் Mon May 03, 2010 11:13 pm

புதுமையான தகவல்கள், நன்றி!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Empty Re: கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!

Post by sathyan Mon May 03, 2010 11:15 pm

பிச்ச wrote:புதுமையான தகவல்கள், நன்றி!!!


நன்றி நண்பா கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! 678642 கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! 678642
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Empty Re: கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!

Post by கலைவேந்தன் Tue May 04, 2010 12:24 am

அருமையான தகவல் ... கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Empty Re: கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!

Post by சிவா Tue May 04, 2010 9:10 am

அறியாத தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சத்யன்!


கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Empty Re: கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum