Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
+10
சபீர்
அப்புகுட்டி
kalaimoon70
ப்ரியா
கலைவேந்தன்
மனோஜ்
srinihasan
சரவணன்
ரிபாஸ்
Aathira
14 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
First topic message reminder :
ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?
தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளை பாடிடவா?
இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?
கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?
வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?
வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?
முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?
சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?
சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பதனை
ஒளித்துகிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?
கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?
முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?
இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?
வட்டமுகத்துக் கழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?
திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைத்தான் கூறிடவா?
விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!
திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!
ஆதிரா...
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதின்று!!!!

Last edited by Aathira on Thu May 06, 2010 12:59 am; edited 2 times in total
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
இக்கவிதையின் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டி உள்ளீர்கள் !
இதுநாள் வரை தாங்கள் ஆத்திக கவிஞர் என்று நினைத்து இருந்தோம். பகுத்தறிவு பகலவனையும் பாடியதால் தாங்கள்
ஒரு விடிவெள்ளி யே !
இதுநாள் வரை தாங்கள் ஆத்திக கவிஞர் என்று நினைத்து இருந்தோம். பகுத்தறிவு பகலவனையும் பாடியதால் தாங்கள்
ஒரு விடிவெள்ளி யே !
எல்லாம் நன்மைக்கே
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
manoj_23 wrote:இக்கவிதையின் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டி உள்ளீர்கள் !
இதுநாள் வரை தாங்கள் ஆத்திக கவிஞர் என்று நினைத்து இருந்தோம். பகுத்தறிவு பகலவனையும் பாடியதால் தாங்கள்
ஒரு விடிவெள்ளி யே !
ஏன் என்னை ஆத்திகக் கவிஞர் என்று நினைத்தீர்கள் என்று தெரியவில்லை மனோஜ்.. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..தாங்கள்
http://www.eegarai.net/-f32/-t24471.htm
இந்தத் திரியில் உள்ள கவிதையைப் படித்துக் கருத்துக் கூறவேண்டும். நன்றி...
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
தாடிக்காரன் செய்த புரட்சி மழுங்கிவரும் நேரம்...
பேடிகளின் மெத்தனத்தால் பேய்கள் ஆடிவரும் கோரம்...
வேதத்தைப் படித்து வேறுலகம் காட்டவந்த வேதியரே எங்களுக்கு
சாதத்தைக் காட்டிடவே ஏதாச்சும் ஓர் வழி பகர்வீரோ...
என்றெல்லாம் கூக்குரலில் பசி ஓலம் காதடைக்க்க
பரிதவித்த
சாதித் தீயினில் போராடிய மாந்தருக்கெல்லாம்
தன் வெண் தாடியால் வெண்சாமரம் வீசிய வேந்தனுக்கு
உன் புகழ்மாலை பெருமைப் படுத்துதடி என் தோழி...!
பாராட்ட நாவில்லை.. கடன் கேட்டேன் கலைமகளை
சீராட்ட வலுவில்லை நாமகளை வேண்டிநின்றேன்...
ஏதோ இருக்கும் எச்சம் மிச்சம் வார்த்தைகளால்
சூதோ வாதோ ஏதுமின்றி வாழ்த்தி நின்றேன்...
என்றும் அன்புடன்
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
கலை wrote:தாடிக்காரன் செய்த புரட்சி மழுங்கிவரும் நேரம்...
பேடிகளின் மெத்தனத்தால் பேய்கள் ஆடிவரும் கோரம்...
வேதத்தைப் படித்து வேறுலகம் காட்டவந்த வேதியரே எங்களுக்கு
சாதத்தைக் காட்டிடவே ஏதாச்சும் ஓர் வழி பகர்வீரோ...
என்றெல்லாம் கூக்குரலில் பசி ஓலம் காதடைக்க்க
பரிதவித்த
சாதித் தீயினில் போராடிய மாந்தருக்கெல்லாம்
தன் வெண் தாடியால் வெண்சாமரம் வீசிய வேந்தனுக்கு
உன் புகழ்மாலை பெருமைப் படுத்துதடி என் தோழி...!
பாராட்ட நாவில்லை.. கடன் கேட்டேன் கலைமகளை
சீராட்ட வலுவில்லை நாமகளை வேண்டிநின்றேன்...
ஏதோ இருக்கும் எச்சம் மிச்சம் வார்த்தைகளால்
சூதோ வாதோ ஏதுமின்றி வாழ்த்தி நின்றேன்...
என்றும் அன்புடன்
கலை
இப்படியெல்லாம் பாராட்டினால் எனக்கு நன்றி சொல்ல கூடத் தெரியாது கலை.. மிக்க நன்றி.. மிக்க நன்றி.. மிச்ச சொச்ச வார்த்தைகளால் வாழ்த்தியமைக்கு மீண்டும் நன்றி..
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
நிலவை காட்டி ஊட்டிய சோறு,
நித்தம் மறக்காத நினைவு.
என்பதைப் போல
பெரியாரை யார் என்று
கேட்க்கும் நாள் இது!
இவர் தான் அவர் பெரியார் ,
புரியாதவருக்கும் ,பெரிய ஐயா,
ஈரோடு தந்த உண்மையா ,
என்று சொல்லி கவிதை படித்து,
சாலைகளில் சிலையாய் போனவரை,
சாக்கடை அரசியவாதியாய் போகாதவரை,
காரம் கொண்ட வெங்காயம் போன்ற,
கருத்துகள் வெங்காயமா போனாலும்,
இன்னும் அவர் நினைவுகள் என்றும் வாடாத மலர்
மறையாத நிலவு என்று .கவிதைப் பாடியா ,தோழியே!
உன் தமிழுக்கு வாழ்த்துக்கள்.எழுதிய விரலுக்கு வாழ்த்துக்கள்!
பெரியாரை நினைவு படுத்திய தேவியே!என்றும் எங்கள் மனதில்
நீ தமிழ் மலையாய்,மழையாய்,அசையாது ,மறையாது தூறி இதமளிப்பாய்.
வாழ்த்துக்கிறேன்,உன் தமிழுக்கும் உனக்கும் புகழ் பரவ வேண்டுகிறேன்.
நட்புடன்.
கலைநிலா .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
ஆடிடவா?
பாடிடவா?
ஆடிடவா?
செய்திடவா?
வீசிடவா?
பேசிடவா?
சுற்றிடவா?
சாற்றிடவா?
ஆடிடவா?
புகழ்ந்திடவா?
உருட்டிடவா?
ஏற்றிடவா?
ஆடிடவா?
கூறிடவா?
இவ்வாறு
கேள்வி வரிகளுடன்
அசத்தியுள்ளீர்கள்
மேடம் அருமை
வாழ்த்துக்கள்
மேடம்.
பாடிடவா?
ஆடிடவா?
செய்திடவா?
வீசிடவா?
பேசிடவா?
சுற்றிடவா?
சாற்றிடவா?
ஆடிடவா?
புகழ்ந்திடவா?
உருட்டிடவா?
ஏற்றிடவா?
ஆடிடவா?
கூறிடவா?
இவ்வாறு
கேள்வி வரிகளுடன்
அசத்தியுள்ளீர்கள்
மேடம் அருமை
வாழ்த்துக்கள்
மேடம்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
மிக மிக நன்றி அப்பு தங்கள் ஆய்வுக்கும் வாழ்த்துக்கும்... இப்படி அதாவது கடைசி எழுத்தோ சொல்லோ ஒன்று போல் அமைத்து எழுதுவதை தமிழில் இயைபுத் தொடை என்று கூறுவார்கள்.. இது பாடலின் அழகைக் கூட்டும்...மீண்டும் நன்றி அப்பு..அப்புகுட்டி wrote:ஆடிடவா?
பாடிடவா?
ஆடிடவா?
செய்திடவா?
வீசிடவா?
பேசிடவா?
சுற்றிடவா?
சாற்றிடவா?
ஆடிடவா?
புகழ்ந்திடவா?
உருட்டிடவா?
ஏற்றிடவா?
ஆடிடவா?
கூறிடவா?
இவ்வாறு
கேள்வி வரிகளுடன்
அசத்தியுள்ளீர்கள்
மேடம் அருமை
வாழ்த்துக்கள்
மேடம்.
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
என்றும் போல் தங்களின் அன்பான வாழ்த்து என் மனதை இதமாகக் குளிரச்செய்தது தோழரே...என்றும் இதே போல உங்கள் மனதில் மலையாய், மழையாய் அசையாது மறையாது குளிரச்செய்யவே விரும்புகிற மனதுடன் என் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்... கலைநிலா..kalaimoon70 wrote:நிலவை காட்டி ஊட்டிய சோறு,
நித்தம் மறக்காத நினைவு.
என்பதைப் போல
பெரியாரை யார் என்று
கேட்க்கும் நாள் இது!
இவர் தான் அவர் பெரியார் ,
புரியாதவருக்கும் ,பெரிய ஐயா,
ஈரோடு தந்த உண்மையா ,
என்று சொல்லி கவிதை படித்து,
சாலைகளில் சிலையாய் போனவரை,
சாக்கடை அரசியவாதியாய் போகாதவரை,
காரம் கொண்ட வெங்காயம் போன்ற,
கருத்துகள் வெங்காயமா போனாலும்,
இன்னும் அவர் நினைவுகள் என்றும் வாடாத மலர்
மறையாத நிலவு என்று .கவிதைப் பாடியா ,தோழியே!
உன் தமிழுக்கு வாழ்த்துக்கள்.எழுதிய விரலுக்கு வாழ்த்துக்கள்!
பெரியாரை நினைவு படுத்திய தேவியே!என்றும் எங்கள் மனதில்
நீ தமிழ் மலையாய்,மழையாய்,அசையாது ,மறையாது தூறி இதமளிப்பாய்.
வாழ்த்துக்கிறேன்,உன் தமிழுக்கும் உனக்கும் புகழ் பரவ வேண்டுகிறேன்.
நட்புடன்.
கலைநிலா .
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum