Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
+10
சபீர்
அப்புகுட்டி
kalaimoon70
ப்ரியா
கலைவேந்தன்
மனோஜ்
srinihasan
சரவணன்
ரிபாஸ்
Aathira
14 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதின்று!!!!
ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?
தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளை பாடிடவா?
இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?
கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?
வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?
வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?
முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?
சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?
சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பதனை
ஒளித்துகிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?
கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?
முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?
இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?
வட்டமுகத்துக் கழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?
திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைத்தான் கூறிடவா?
விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!
திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!
ஆதிரா...
Last edited by Aathira on Thu May 06, 2010 12:59 am; edited 2 times in total
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
திராவிட விருட்சத்தினை அழகாக வடிவமைத்து உள்ளீர்கள். .
பூமியில் எத்தனையோ மாந்தர்கள் பிறந்தாலும் ஒரு சிலரே சிலையாக வாழ்கின்றனர்.
பூமியில் எத்தனையோ மாந்தர்கள் பிறந்தாலும் ஒரு சிலரே சிலையாக வாழ்கின்றனர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
பிச்ச wrote:திராவிட விருட்சத்தினை அழகாக வடிவமைத்து உள்ளீர்கள். .
பூமியில் எத்தனையோ மாந்தர்கள் பிறந்தாலும் ஒரு சிலரே சிலையாக வாழ்கின்றனர்.
ஆனால் அதன் விழுதுகள் பாதை மாறி பயணிக்கின்றனவே.... நெடிய கவிதையைப் படித்துக் க்ருத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சரண்..
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் காதில் விழுந்து தங்களுக்கும் அதன் வடிவில் சேரும்...
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
என்ன வாசன் சொல்றீங்க? எனக்கும் சிலை வைப்பார்களா?srinihasan wrote:பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் காதில் விழுந்து தங்களுக்கும் அதன் வடிவில் சேரும்...
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
Aathira wrote:என்ன வாசன் சொல்றீங்க? எனக்கும் சிலை வைப்பார்களா?srinihasan wrote:பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் காதில் விழுந்து தங்களுக்கும் அதன் வடிவில் சேரும்...
ஏதோ தப்பா எழுதிட்டேன் நினைக்கின்றேன் அவசரத்துல... நான் எழுதியது சரியோ தவறோ என்றும் தெரியவில்லை... தவறாகிருந்தால் என்னை மன்னிக்கவும்...
பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் பெருமையின் கவியினால் தங்களுக்கும் பெருமை சேர்க்கும் என்றும்... (ஈகரையின் உறுப்பினரால்).
அவன் காதில் விழுந்து(தால்)... அவனே உங்களை வாழ்த்தும் பெருமையும் சேரும் எனவும் கூற வந்தேன்...
சிலை பற்றிய என் கருத்தை நான் இப்போ இங்கே குறிப்பிட விரும்பவில்லை
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
- Spoiler:
தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்று
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
Aathira wrote:
- Spoiler:
தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்றுவாசன்.பெரியார் அவர்களே.. நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்க்ளை
இது வயதுக்கு ஏற்ற தாடியாக இருக்கலாம்... காலத்தின் போக்கில் அந்த கோலம்(அவன் போல்) பூண்டிட நேரிட்டாலும்... நேரிடலாம்...
நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்களையும் தங்களையும்
Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
srinihasan wrote:Aathira wrote:
- Spoiler:
தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்றுவாசன்.பெரியார் அவர்களே.. நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்க்ளை
இது வயதுக்கு ஏற்ற தாடியாக இருக்கலாம்... காலத்தின் போக்கில் அந்த கோலம்(அவன் போல்) பூண்டிட நேரிட்டாலும்... நேரிடலாம்...
நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்களையும் தங்களையும்
இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?
அப்ப இந்த வரிக்குப் பொருந்த மாறிடுவீங்கன்னு சொல்றீங்க..
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum