ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? --

3 posters

Go down

திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Empty திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? --

Post by தமிழ் Thu 29 Apr 2010 - 23:42

குறளில் கோயில் இல்லை


இன்று
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள். தந்தை
பெரியார் அவர்களின் உரையைக் கவிதைத் தேனில் தந்த தேர்ந்த புலவன்
பாரதிதாசன்.

ஒரு கட்டத்தில் மயிலம் ஸ்ரீ
ஷண்முகன் வண்ணப்பாட்டு பாடிக் கொண்டிருந்த இந்தக் கவிஞர் புரட்சிக்கவிஞன்
ஆனது மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்ட
மாத்திரத்திலேயே ஆகும்.

இது தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே உள்ள ஆளுமை! கருத்தின் வலிமை சேர்ந்த வளமை!!

தந்தை
பெரியாரின் ஓர் உரை ஒரு புரட்சிக்கவிஞரைத் தமிழ்நாட்டுக்குத் தந்தது. ஒரு
தொண்டரைத் திராவிடர் கழகத்துக்குத் தந்தது எனின் தந்தை பெரியார் அவர்களின்
ஒப்புவமையில்லா சிந்தனைப் பெருக்கை எண்ணிப் பார்க்கவேண்டும் எவரும்!

தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தந்தை
பெரியார் கருத்துகளை, கொள்கை முழங்கும் எழுத்துகளைக் கொண்டு
சேர்ப்பதுவரைதான் நமது கடமையும், பணியும் ஆகும். அது கொண்டு போய்
சேர்க்கப்பட்டால் அதன் வேலையைக் கண்டிப்பாய் செய்து முடித்தே தீரும்
என்பதில் எவ்வித அய்யமும் கிடையவே கிடையாது! புரட்சிக்கவிஞரே இதற்கொரு
ஈடில்லா எடுத்துக்காட்டாகும்.


இந்து
சமய கலை விழா என்று கூறி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி
சென்னையில் 1983 இல் விழா ஒன்றை நடத்துவதாக அறிவித்தார். இந்துத்துவாவைத்
திணிக்க, பரப்பிட சங்கராச்சாரியார் புது அவதாரம் எடுக்கிறார் என்பதைப்
புரிந்துகொண்ட அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி
அவர்கள் அந்த ஆண்டுமுதல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவை தமிழர்
கலை,பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திட முடிவு செய்தார்.

சங்கராச்சாரியார்
அந்த ஆண்டோடு அதனை மூட்டைக் கட்டிக் கொண்டாலும் திராவிடர் கழகம் தொடர்ந்து
புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக
நடத்திக்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு விழாவில்,
அவர் கூறிய கருத்து ஒன்றுக்கு வலிமை சேர்கிறது. குடும்ப விளக்கு நான்காம்
பகுதியில் திருக்குறள் குறித்து புரட்சிக்கவிஞர் கூறும் வரிகள் மிகவும்
முக்கியமானவை நயமானவை.

நாடி முத்து வேடப்பனிடம்


இன்றியமையா ஒன்றுக்காகக்

கடன் பத்து ரூபாய் கொடுவென்று கேட்டான்


வேடன் கொடுப்பதாய் விளம்பினான் அதற்குள்

அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்

தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்


கோவிலுக் காட்டுப்பா என்று கூறினாள்

குறளில் கோயிலே இல்லையம்மா


என்றான் வேடன். இதனைக் கேட்ட

நாடிமுத்து நவிலுகின்றான்;


தில்லைக் கோவிலுக்குச் செல்ல எண்ணியே

பத்து ரூபாய் பணம் உன்னைக் கேட்டேன்

கோவில் இல்லையா குறளில்?


ஆயில் என் பணத்துக்கில்லை அழிவே!

இதன்மூலம் திருக்குறளில் கோயில் என்ற சொல்லே இல்லை என்பதை மிக அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார் புரட்சிக்கவிஞர்.

இப்பொழுது
தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான கருத்துத் தலைதூக்கி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டு அரசின் சின்னம் இந்து மதக்கோயில் கோபுரமாக உள்ளது.

மதச்சார்பற்ற
ஓர் அரசின் சின்னம் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக இருக்கலாமா என்ற
அர்த்தமுள்ள வினா சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. கோபுரத்திற்குப் பதில்
திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் என்பதுதான் அந்த அறிவார்ந்த
யோசனையாகும்.

திருக்குறளிலேயே
கோவில் இல்லை என்கிறபோது, அரசு சின்னத்தில் கோயில் ஏன்? கோயிலையோ, கடவுள்
என்ற சொல்லையோ எந்த இடத்திலும் குறிப்பிடாத மிகமிகச் சிறந்த மதச் சார்பற்ற
புலவரான திருவள்ளுவர் உருவத்தை கோயிலுக்குப்பதில் பொறிப்பது என்பதுதானே
பொருத்தமானதும், அறிவார்ந்ததுமாக இருக்க முடியும்?

இந்தக்
கருத்தை சட்டப்பேரவையில் தோழர் ரவிக்குமார் தெரிவித்தாலும், இதற்கு
அடியெடுத்துக் கொடுத்தவர் புரட்சிக்கவிஞர்தான் என்பதை, கவிஞரின் பிறந்த
நாளில் நினைவு கூர்வோம்.

அடுத்த கட்டத்திற்கு இந்தக் கருத்தை நகர்த்த சூளுரைப்போம்! ----------------------- “விடுதலை” தலையங்கம் 29-4-2010


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Empty Re: திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? --

Post by அன்பு தளபதி Thu 29 Apr 2010 - 23:48

நல்லாத்தான் இருக்கு ஆனால் வள்ளுவர் இந்து என்பதை மறக்கவேண்டாம் கடவுள் மறுப்பாளர்கள் உள்ளார்கள் என அத்தனை கோவிலையும் கொளுத்த முடியுமா
நான் ஒன்றே ஒன்று கேட்க்கிறேன் நீங்கள் கடவுள் இல்லை என்கிறீர் இல்லாத கடவுள் மேல் உங்களுக்கு எனையா இவ்வளவு கோபம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Empty Re: திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? --

Post by தமிழ் Thu 29 Apr 2010 - 23:59

maniajith007 wrote:நல்லாத்தான் இருக்கு ஆனால் வள்ளுவர் இந்து என்பதை மறக்கவேண்டாம் கடவுள் மறுப்பாளர்கள் உள்ளார்கள் என அத்தனை கோவிலையும் கொளுத்த முடியுமா
நான் ஒன்றே ஒன்று கேட்க்கிறேன் நீங்கள் கடவுள் இல்லை என்கிறீர் இல்லாத கடவுள் மேல் உங்களுக்கு எனையா இவ்வளவு கோபம்

நண்பரே இது என் கருத்து :
இல்லாத ஒன்றை பற்றி நினைத்து , நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பம் இல்லை


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Empty Re: திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? --

Post by கலைவேந்தன் Fri 30 Apr 2010 - 0:08

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வையடா - என்பார்கள்...

வயிற்றுப்பிரச்சினைக்கு வழிகிடைக்காமல் வருந்திநிற்கும் தமிழன் நிலை எவன் கண்ணுக்கும் தெரியவில்லை...

கோபுரத்தைத் தரையிறக்குவதில் திடீரென்ற கரிசனம் ஏனோ...?

போங்கப்பா... எங்களை பொழைக்க விடுங்கடா...

- ஏழைப் பாமரன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Empty Re: திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? --

Post by தமிழ் Fri 30 Apr 2010 - 0:21

கலை wrote:கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வையடா - என்பார்கள்...

வயிற்றுப்பிரச்சினைக்கு வழிகிடைக்காமல் வருந்திநிற்கும் தமிழன் நிலை எவன் கண்ணுக்கும் தெரியவில்லை...

கோபுரத்தைத் தரையிறக்குவதில் திடீரென்ற கரிசனம் ஏனோ...?

போங்கப்பா... எங்களை பொழைக்க விடுங்கடா...

- ஏழைப் பாமரன்

உண்மைதான் தோழர் .

உப்புக்கல்லை வைரமுன்னு சொன்னா - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னாள் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா
ரொம்ப நாளா

- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Empty Re: திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? --

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum