புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
435 Posts - 47%
heezulia
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
30 Posts - 3%
prajai
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_m10நவரத்தினங்கள் கொட்டும்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவரத்தினங்கள் கொட்டும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 10:21 pm

நவரத்தினங்கள் கொட்டும்! Smalarnews_6878298522


முன்னொரு காலத்தில் வேப்பம்பட்டியில் சுனந்தா, கனகா என்ற இரு சகோதரிகள் வாழ்ந்தனர். சுனந்தா மூத்த தாரத்தின் பெண். எனவே, சித்தி மூத்தாள் பெண்ணையே வேலை வாங்கினாள். தன் புதல்வியைச் சொகுசாக நடத்தினாள்.

தினமும் சாப்பாடு முடிந்ததும் சுனந்தா தெருக்கோடியிலுள்ள கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருவாள். அன்றும் அப்படி வந்தபோது ஒரு கிழவி, ''குழந்தாய்! தாகமாக இருக்கிறது. குடிக்க நீர் தருகிறாயா?'' என்று கேட்டாள்.

நீர் இறைத்துப் பக்குவமாக வார்த்தாள். கிழவி தாகம் தீர்ந்த திருப்தியுடன், ''பெண்ணே! என் கையில் நீர் ஊற்றிய பாங்கே நீ பொறுமைசாலி என்று சொல்கிறது. உன் கிழிந்த ஆடை நீ ஏழை என்கிறது. களைத்திருக்கும் முகம் உழைப்பாளி என்கிறது. நல்லவர்கள் மதிக்கப்பட்டால்தான் எல்லாருக்கும் நல்லவர்களாயிருக்க வேண்டும் என்று ஆசை வரும்.

''உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ சிரித்தால் முத்துக்கள் உதிரும். நீ பேசினால் நவரத்தினங்கள் கொட்டும். நான் வானத்தில் சஞ்சாரம் செய்யும் வனதேவதை,'' எனக்கூறி மறைந்தாள்.

சுனந்தா சிந்தித்தபடி குடத்து நீரோடு வீட்டுக்குள் நுழைந்தாள். ''அடியே! ஒரு குடம் நீரெடுக்க இத்தனை நேரமோ? எவகிட்ட அக்கப்போர் பண்ணிட்டு வரே?'' என்று கூப்பாடு போட்டாள்.

மவுனமாயிருக்கவே, அவள் முகத்திலிடித்தாள். ''வாயிலே என்ன கொழுக்கட்டையா வெச்சுட்டிருக்கே! பதில் சொல்ல மாட்டாம அப்படியென்ன கவுரதை,'' என்று கத்தினாள்.

''இல்ல சித்தி! அது வந்து...'' என்று ஆரம்பிக்க, வாயிலிருந்து நவரத்தினங்கள் சிதறித் தரையில் மினுக்கின.

''இரு, இரு! இதென்ன ஆச்சரியம்! இது எப்படி ஆச்சு?'' என்று சித்தி கேட்க நடந்ததை விவரித்தாள் சுனந்தா.

''ஐயோ! இந்த பாக்கியம் என் பொண்ணுக்கில்லே வந்திருக்கணும்! கனகா, நீ போயிட்டு வா,'' என்று மகளிடம் ஒரு குடத்தையும் கயிறு, வாளியையும் கொடுத்தனுப்பினாள்.

''சுனந்தா! நீ ஏன் சும்மா இருக்கிறே! எதையாவது பேசி இந்தப் பாத்திரத்தையெல்லாம் நிரப்பு,'' என்று உத்தரவிட்டாள். ஒருநாள் மறுபடியும் வனதேவதை வந்தாள். இந்த முறை பிச்சைக்காரியாக.

கனகாவோ தினமும் அவள் தாயாரால் தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு அனுப்பப்பட்டாள்.

''பெண்ணே! கொஞ்சம் தாகமாயிருக்கிறது,'' என்று ஆரம்பித்தாள்.

''ஆமாம்! போகிற, வருகிற பீடைக்கெல்லாம் தண்ணி இறைச்சு ஊத்தத்தான் இங்கே உட்கார்ந்திருக்கிறேனா! எங்கம்மா ஒரு பேராசை பிடிச்சவ! அதான் அக்கா வாயிலே நவரத்தினமாக் கொட்டுதே! போதாதா? பேச வெச்சு, சிரிக்கவெச்சு அண்டா குண்டானெல்லாம் ரொப்பிக்கக் கூடாதா? என் வாயிலேயும் முத்து வரணுமாம்! அதான் தேவதையைத் தேடிட்டிருக்கேன்! சீ... நாத்தம் புடிச்சவளே, எட்டிப் போ,'' என்று திட்டினாள்.

அவளுக்கு வேலை செய்து பழக்கமில்லை. வெயில் வேறு. ''கர்வம் பிடித்தவளே! நான்தான் நீ தேடிக் கொண்டிருக்கும் தேவதை! கடும்சொல் பேசும் உன் நாக்கிலிருந்து நவரத்தினம் எப்படிக் கொட்டும்? கொட்டும் தேளும், நட்டுவாக்களியும், நண்டும் பூரானும், பாம்பும் அரணையும்தான் கொட்டும்,'' என்று சபித்துவிட்டுப் போய்விட்டாள்.

சோகத்தோடு வீட்டுக்கு வந்தாள் கனகா. அழகாகப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அழகான நடத்தை வேண்டாமா?

தாயார் ஓடிவந்தாள். ''இன்றைக்காவது வனதேவதை வந்தாளா? நீ பார்த்தாயா?'' என்று ஆர்வமாகக் கேட்டாள்.

''ஆம்!'' என தலையசைத்தாள் கனகா.

''பேசு, பேசு!'' என்று ஊக்கினாள் சித்தி. தேளும் நட்டுவாக்களியும் உதிர்ந்தால் எங்கே தங்குவது என்ற பயத்தில் மவுனமாயிருந்தாள் கனகா. அவளின் பொறுமை பறந்தது. மகளென்றும் பாராமல் ஓங்கி தலையில் குட்டினாள். ''முத்து உதிர்ந்துவிடுமே என்று யோசிக்கிறாயா? வாயைத் திறந்து பேசாவிட்டால் அடித்தே கொன்றுவிடுவேன்,'' என்று கர்ஜித்தாள்.

''அம்மா!'' என்று கனகா ஆரம்பிக்க ஒரு தேள், ஒரு பூரான், ஒரு நட்டுவாக்களி உதிர்ந்தது.

''ஐயோ! பேசாதே! எழுதிக் காட்டு,'' என்று கத்தியவள் அவற்றை அடிக்க துடைப்பத்தை எடுத்து வந்தாள்.

மகள் எழுதியதைப் படித்தவளுக்குத் துக்கம் பொங்கியது.

மறுநாள் சுனந்தாவே கிணற்றங்கரைக்கு நீர் எடுக்கச் சென்றாள். அந்த தேசத்து ராஜகுமாரன் மாறுவேடத்தில் உலா வந்தவன் சுனந்தாவிடம் தாகத்துக்கு நீர் கேட்டான். தண்ணீர் குடித்ததும் அவளைப் பற்றி விசாரித்தான். அவள் வாயிலிருந்து நவரத்தினங்கள் உதிர்வது அவனுக்கு வியப்பைத் தந்தது. அதைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டான். அவளைத் தான் மணக்க விரும்புவதாகத் தெரிவித்தான். அவளது விலாசத்தைத் தெரிந்து கொண்டு தேர் அனுப்புவதாகச் சொல்லிச் சென்றான்.

சித்தியிடம் எல்லாவற்றையும் சொன்னாள் சுனந்தா. சித்தி கனகாவுக்கு சிறப்பாக அலங்காரம் செய்து தேரில் ஏற்றினாள். தாலி கட்டும் வரை யாரோடும் பேசக்கூடாது என்று கனகாவிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள்.

சுனந்தாவை விட்டுவிட்டுப் போனால் குட்டு உடைந்துவிடும் என்று பரட்டைத்தலையும் அழுக்கு உடையுமாக கூடவே அழைத்துச் சென்று அரண்மனையில் ஒரு அறையில் தள்ளித் தாளிட்டாள்.

''எங்கள் இளவரசனை மயக்கிய பேரழகியே! நீ பேசினால் முத்து உதிருமாமே! ஒரு பாட்டுப் பாடேன்,'' என்று வந்தவர்களிடமெல்லாம் காய்ச்சல் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாள். இதை அறிந்து ராஜகுமாரனே பதறிக் கொண்டு வந்துவிட்டான்.

''இளவரசர் மன்னிக்க வேண்டும். தாலி கட்டிய பின்தான் மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்கலாம். இது எங்கள் குல வழக்கம். மீறினால் கெடுதல் ஏற்படும்,'' என்று பயமுறுத்தினாள்.

திருமண மேடை. பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே திரை விடப்பட்டிருக்கிறது. எல்லாம் கனகாவின் தாயார் ஏற்பாடு. நல்லபடி தாலி கட்ட வேண்டுமே என்ற பதைபதைப்புடன் நின்றாள் சித்தி.

சாஸ்திரிகள், ''அம்மா! இந்த மந்திரங்களை நீங்களும் திருப்பிச் சொல்ல வேண்டும்,'' என்று கனகாவிடம் கூறினார். சித்தி இதைக் கவனிக்கவில்லை! குரு சொன்ன மந்திரங்களை கனகா கூற, 'ஆ... பாம்பு! ஐயோ, தேள்! இங்கே பார் நட்டுவாக்களி! உன்மேலே அரணை ஊர்கிறது... தட்டிவிடு. பூரானை மிதிக்காமல் வா,'' என்ற கூக்குரல் திருமண மண்டபமெங்கும் கேட்டது. ஜனங்கள் நாலாபுறமும் ஓடினர். இளவரசனும் ஓடினான். எப்படி இப்படி நேர்ந்தது என்று மனம் குழம்பியது.

''ஆ... இந்த அறை வெளியில் தாளிட்டிருக்கிறது! இதற்குள் விஷ ஜந்துக்கள் நுழைய வாய்ப்பில்லை,'' என்றபடி சடாரெனத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தான்.

அங்கே சுனந்தாவைப் பார்த்ததும் திகைத்தான். நடந்ததை அவள் சொல்லி முடிக்குமுன் அங்கே ரத்தினக்குவியல். முகூர்த்த நேரம் தவறிவிடக் கூடாதென்று இடுப்பிலிருந்த தாலிக்கயிற்றை அவள் கழுத்தில் கட்டினான்.

களேபரம் அடங்கியதும் கனகாவையும் அவள் தாயாரையும் காட்டில் போய் வசிக்கும்படி கட்டளையிட்டான். மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமே!

சுனந்தா மகிழ்ச்சியோடு அரசியாக வாழ்ந்தாள். கெடுதல் நினைத்தவர்களுக்குக் கெடுதிதான் கிடைக்கும்.நல்ல குணம் கொண்டவர்கள் எப்போதும் உயர்ந்திருப்பர்.

***
சிறுவர் மலர்




நவரத்தினங்கள் கொட்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 11:17 pm

நவரத்தினங்கள் கொட்டும்! 677196 நவரத்தினங்கள் கொட்டும்! 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா நவரத்தினங்கள் கொட்டும்! 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 22, 2010 12:11 am

அருமையான கதை... பகிர்வுக்கு நன்றி சிவா... நவரத்தினங்கள் கொட்டும்! 678642 நவரத்தினங்கள் கொட்டும்! 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக