ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரக வேட்டை!

3 posters

Go down

கிரக வேட்டை! Empty கிரக வேட்டை!

Post by arularjuna Tue Apr 27, 2010 12:08 pm

அமெரிக்காவின், 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் லேட்டஸ்ட் வேட்டை எது தெரியுமா? 'கிரக வேட்டை!'
ஆம், விண்வெளிப் பாதையில் பூமி போல கிரகம் உள்ளதா, அங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா என்று பல ஆண்டாக நடத்தி வரும் ஆராய்ச்சி தான் என்றாலும், இப்போது தான், இந்த கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது; அந்த கிரகத்தில் தடங்கள் பதிவு இருக்கிறது என்றெல்லாம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
விண்வெளியில், பூமி போல ஒரு கிரகம் இருக்கிறதா, பல கிரகங்கள் இருக்கின்றனவா, அங்கு வசிப்பிட இயற்கை சூழல் இருக்கிறதா என்பதை முக்கிய குறிக்கோளாக எடுத்துக்கொண்டு, 'நாசா' விஞ்ஞானிகள் அனுப்பியது தான், 'கெப்லர்' விண்வெளி ஆய்வு டெலஸ்கோப்.
இந்த டெலஸ்கோப், சமீபத்தில் மெகா கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது. 'நாசா' தரைக்கட்டுப்பாட்டு மையத்தில், இது அனுப்பிய தகவல்கள், விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
சூரிய மண்டலத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கில் பெயரில்லா கிரகங்கள் சுற்றிய படி உள்ளன; இதில், புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட புதிய ஐந்து கிரகங்கள், வியாழன் (ஜூபிடர்) கிரகத்தை விட, பல மடங்கு பெரியது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பல நூறு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் சில நட்சத்திரங்களை சுற்றியபடி தான் கிரகங்கள் உள்ளன. எரிமலைகளை விட தகிப்பவை; தங்கத்தையும் கூழாக்கி விடும் அளவுக்கு வெப்பம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கெப்லர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ள ஐந்து புதிய கிரகங்கள் பெயர்கள்... 'கெப்லர் 4பி, கெப்லர் 5பி, கெப்லர் 6பி, கெப்லர் 7பி, கெப்லர் 8பி, என்று பெயரிடப்பட்டுள்ளன. இவற்றில், ஒவ்வொன்றிலும் மூவாயிரம் பாரன்ஹீட் (1650 செல்சியஸ்) வெப்பம் உள்ளது.
இவற்றில், 'கெப்லர் 7பி' கிரகம், பூமிக்கு அருகே, மிகவும் இயற்கை வளம் மிக்கதாக கருதப்படுகிறது. 'மனித வாழ்வுக்கு இடமிருக் கிறதா என்று தெரியவில்லை என்றாலும், எதிர்காலத்தில் தெரிய வரலாம்!' என்பதே விஞ்ஞானிகள் நம்பிக்கை.
கெப்லர் டெலஸ்கோப்பின் குறிக்கோள், விண்வெளியில் பாறை மிகுந்த, தண்ணீர் உள்ள கிரகத்தை கண்டுபிடிப்பது தான். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனுப்பப்பட்ட இந்த டெலஸ்கோப், முதல் ஆறு வார ஆய்வில் பல புதிய கிரகங்கள் பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளது.
வெப்பக்கதிர்களை வைத்துத்தான் கிரகங்கள் பற்றிய தகவல்களை உறுதி செய்ய முடிகிறது. அதனால், எதிர்காலத்தில், வெப்பக் கதிர்களை அளக்கும் சக்தி வாய்ந்த நவீன டிஜிட்டல் அளவைகளை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம் என்று அமெரிக்க நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
கெப்லர் டெலஸ்கோப், இன்னும் மூன்றரை ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருக்கும். அதற்குள், முடிந்தவரை புதிய உலகங்களை கண்டுபிடித்து விட வேண்டும் என்பது தான், 'நாசா' விஞ்ஞானிகளின் கனவு.
சூரிய மண்டலத்தை சுற்றிய நட்சத்திரப் பாதையில் இதுவரை சமீப காலமாக 32 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து கிரகங்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டுகிறது.
இந்த கிரகங்களின் அளவு பூமியை விட, ஐந்து மடங்கு அதிகம் என்றாலும், அங்கு தண்ணீர், பாறைகள் உள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.
பல வகை நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. அவற்றை சுற்றியபடி இந்த கிரகங்கள் உள்ளன. இவற்றில், 60 சதவீத கிரகங்கள், பூமியை போல இருப்பதற்கான அறிவியல் சார்ந்த அறிகுறிகள் உள்ளன. அதனால், வேற்று கிரக மனிதர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

கிரக வேட்டை! Empty Re: கிரக வேட்டை!

Post by ரிபாஸ் Tue Apr 27, 2010 12:43 pm

சூப்பர் மாப்புள நல்ல தகவல்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கிரக வேட்டை! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கிரக வேட்டை! Empty Re: கிரக வேட்டை!

Post by arularjuna Tue Apr 27, 2010 2:02 pm

ரிபாஸ் wrote:சூப்பர் மாப்புள நல்ல தகவல்

நன்றி மாமு
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

கிரக வேட்டை! Empty Re: கிரக வேட்டை!

Post by மனோஜ் Tue Apr 27, 2010 6:59 pm

தகவல் அருமை வாழ்த்துக்கள்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

கிரக வேட்டை! Empty Re: கிரக வேட்டை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum