ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:10

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும்.

2 posters

Go down

வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும். Empty வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும்.

Post by ரமீஸ் Tue 27 Apr 2010 - 13:03

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், எதோ ஆராய்ச்சிக் கட்டுரை என்று முடிவுக்கு வர வேண்டாம்.வாசிப்பு ஒரு ‎சுகமான அனுபவம் மட்டுமில்லை, அது ஒரு புதிய உலகத்தின் சாளரமும் கூட,நான் சொல்லும் வாசிப்பு நல்ல ‎புத்தகங்களுக்கானது மட்டும்தான் நண்பர்களே.‎
இந்த மனித இனம் பல்வேறு காலகட்டங்களில் வாசிப்பினால் தான் முழுமை அடைந்து இருக்கிறது, புரட்சிகளை ‎நோக்கி சென்றிருக்கிறது. இன்னும் புதிய புதிய கோணங்களை, வாழ்க்கையின் புரியாத புதிர்களை, ‎விடுவித்திருக்கிறது. வாசிப்பு என்று வரும்போது எழுதும் மனிதரைப் பொருத்தும், அவர் கூறும் கருத்துக்களைக் ‎கொண்டும் அது புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு அரசியல் கட்டுரை எழுதும் எழுத்தாளரின் காதல் கவிதை ‎என்னவோ எவ்வளவு அழகாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை அல்லது வெற்றியடைவதில்லை. ஒரு ‎வெற்றியடைந்த ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாளோ இல்லையோ, பல புத்தகங்கள் இருக்கும் என்பது ‎மட்டும் உண்மை.இந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டதன் காரணமே, இன்று தொலைக்காட்சியின் வரவுக்குப் ‎பின்னால், பொருள் சார்ந்த வாழ்க்கை ஓட்டத்தில் நமது இளைஞர்கள் வாசிப்பு அனுபவத்தை இழந்து ‎கொண்டிருக்கிறார்களோ என்ற ஒரு பயம் எனக்கு வந்ததன் விளைவு.‎
அனேகமாக வெற்றியடைந்த மனிதர்கள் அனைவருமே நல்ல வாசிப்பு அனுபவம் நிறைந்தவர்களாகவும், வாசிப்பதை ஒரு ‎தவிர்க்க முடியாத தங்கள் வாழ்வியல் முறையாகவும் பின்பற்றி இருக்கிறார்கள், இருந்து கொண்டிருக்கிறார்கள். ‎நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளரராகவோ, கவிஞராகவோ இருக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு சிறந்த வாசிப்பு ‎அனுபவம் மிக்கவராகவே இருக்க வேண்டும்.‎


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும். Empty Re: வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும்.

Post by ரமீஸ் Tue 27 Apr 2010 - 13:04

வாசிப்பின் வகைகள்.‎
வாசிப்பில் இரண்டு வகை இருக்கிறது, ஒன்று மேல்போக்கான வாசிப்பு, இரண்டு ஆழ்ந்த அறிவு சார்ந்த வாசிப்பு. ‎எடுத்துக்காட்டாக ஒரு பயணத்தின் போது நீங்கள் வாரப் பத்திரிக்கை வாசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், ‎அது மேல்போக்கான வாசிப்பு, அந்தத் தருணத்தில் உங்கள் சிந்தனையில் இருக்கும் சில தற்கால நடப்புகள் குறித்த ‎ஒரு குறுகிய வாசிப்பு. (சில நேரங்களில் இப்படியான வாசிப்புகளில் கூட ஆழ்ந்த அறிவு சார்ந்த வாசிப்புகளுக்கான ‎அடித்தளம் அமையக் கூடும்).இரண்டாவது நிலை, இது தான் பல்வேறு தனி மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, ‎பல்வேறு சமூகங்களின் வாழ்க்கை நிலையையும் மாற்றிப் போட்ட வாசிப்பு நிலை, இலக்கியங்கள், வாழ்க்கை ‎வரலாறுகள், அரசியல் சார்ந்த கட்டுரைகள், மதங்களைத் தழுவிய பதிப்புகள், இன்னும் ஆய்வுக் கட்டுரைகள், பயணக் ‎கட்டுரைகள், கவிதைத் தொகுப்புகள். இவற்றை நாம் வாசிக்கும் போது ஏற்படுகின்ற ஒரு மனவெளியின் கற்பனைப் ‎பயணமும், அதன் பயனும் மிக அழகானது.‎
ஆகவே, வாசிப்பு என்கின்ற ஒரு அழகான, பயன்கள் மிகுந்த பழக்கத்தை நாமும், நம் இளைய தலைமுறைக்கு ‎எடுத்துச் செல்ல வேண்டும். தொடர்ந்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அப்போது தொலைக்காட்சி ‎என்னும் கலாச்சார அரக்கனின் முன்னால் நம் பிள்ளைகள் மன அடிமைகளாய், மொழி இன உணர்வின்றிக் கவிழ்ந்து ‎கிடக்கும் இழிநிலை மாறும்.‎


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும். Empty Re: வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும்.

Post by ரமீஸ் Tue 27 Apr 2010 - 13:04

அடுத்து எழுத்தாளர்களின் கடமை, இது ஏதோ கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாய் இருந்தாலும், அவர்களின் ‎கடமைகளை, சமூகப் பங்களிப்பைச் சுட்டிக் காட்டும் கடமை நமக்கும் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். ‎இன்றைய எழுத்தாளர்கள் அனைவருக்குமே இது பொருந்தும்.‎
எழுத்தாளர்களே, கவிஞர்களே நீங்கள் உங்கள் பேனாவை எடுப்பதற்கு முன்னால், உங்கள் கண் முன்னால், ‎ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையின் சிந்தனையும், அந்தத் சிந்தனையின் ஆழத்தில் உங்கள் எழுத்து ‎ஏற்படுத்தும் தாக்கத்தையும், உணர்ந்து தொடங்க வேண்டும்.‎
எழுத்து எனக்குக் கைகூடுகிறது என்பதற்காக நான் என் மனதில் பட்டதை எழுதுவேன், சுய லாபம் அடைவேன் என்று ‎எழுதுவது ஒரு வகை, உள்ளார்ந்த தனி மனிதக் கருத்துக்களை என் எழுத்துக்கள் மூலம் திரித்துப் பரப்புவேன் என்பது ‎ஒரு வகை, நான் சார்ந்து இருக்கும் அமைப்பை, இயக்கத்தை முன்னிறுத்தி அதன் கருத்துக்களை பரப்பும் ஒரு ‎ஒளிபரப்பு சேவையாக எழுதுவது மற்றும் மனித உணர்ச்சிகளை கிளறிவிட்டு அதன் மெல்லிய ஓசைகளில் தாவி ‎அமர்ந்து கோலோச்சுவது இன்னொரு வகை.‎
இவை எல்லாவற்றையும் தாண்டி எழுத்தை, ஒரு மொழியின், இனத்தின் முகவரியாக ஏற்றுக்கொண்டு அதன் சாயலில் ‎பொங்கி வரும் இயற்கை அருவி போல எழுதுவது என்பதும். எழுத்தை ஒரு தவம் போல செய்வது என்பதும் ஒரு ‎முழுமை பெற்ற எழுத்தாளனின் அடையாளங்கள் என்று நான் கருதுகிறேன். தான் எழுதுகின்ற எழுத்துக்களில், தான் ‎கடைப்பிடிக்கும் சமூக அக்கறை என்பது ஒரு எழுத்தாளனின் அடிப்படைக் கடமை. அதற்கு மாறாக, ஆதாரமற்ற திரிபு ‎வாதங்கள், அடையாளம் தேடுகின்ற தற்குறிகள், மொழிக்கு எதிரான கருப்பு ஆடுகள் ( இப்படியே எழுதலாமே என்று ‎மொழியைச் சிதைப்பது) இவை எல்லாவற்றையும் கடந்து நாம் எழுத்தாளனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ‎அதற்கான வாசிப்புத் தேடல் நிறையத் தேவைப்படும். வாழும் காலகட்டத்தில் வாசிப்பில் தேடப்பட்டு, இந்தத் ‎தடைகளை எல்லாம் தாண்டி உங்கள் எழுத்து வரும்போது தான், நீங்கள் காலம் கடந்த எழுத்தாளனாய் கரை ‎கடக்கிறீர்கள்.‎
தமிழும், தமிழினமும் உங்களால் தழைக்க வேண்டுமே ஒழிய, ஒருபோதும் தடம் மாறக் கூடாது.‎


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும். Empty Re: வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும்.

Post by நிலாசகி Tue 27 Apr 2010 - 13:09

வாசிப்புத் தேடல் நிறையத் தேவைப்படும். வாழும் காலகட்டத்தில் வாசிப்பில்
தேடப்பட்டு, இந்தத் ‎தடைகளை எல்லாம் தாண்டி உங்கள் எழுத்து வரும்போது தான்,
நீங்கள் காலம் கடந்த எழுத்தாளனாய் கரை ‎கடக்கிறீர்கள்.‎
பயனுள்ள கட்டுரை
நன்றி ரமீஸ்


தீதும் நன்றும் பிறர் தர வாரா வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும். 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும். Empty Re: வாசிப்பின் வகைகளும், எழுத்தாளர்களின் கடமையும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum