ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:06 pm

காடு நனையுது; கல்லு நனையுது. பூமிக்குள் வேர் நனையுது; புத்துக்குள்ள பாம்பு நனையுது.

காட்டுப் புதருக்குள்ள காட முட்டை நனையுது. பறவை ஒண்ணு எப்பவோ இட்டுப் போன எச்சத்துல பாற இடுக்குல போயி விழுந்த வெத நனையுது. நனையாம வாரது மேயப்போயி வீடு வார பசுமாட்டுக்காம்பு தான்.

தறிகெட்டு ஆடுதுக தன்னால மொளச்ச காட்டு மரங்க. எல்லாம் தலைவழியாத் தண்ணி குடிச்ச சந்தோசம்தான்.

பெருங்கொண்ட மழை: ஓடைக் காடெல்லாம் ஒடப்பு எடுத்திருச்சு. மாடு நடந்தா தடத்துல தண்ணி ஊறுதுன்னாப் பாருங்களேன். சொக்கத்தேவன்பட்டியும் சுத்துப்பட்டு ஊர்களும் குளுந்துபோச்சு குளுந்து.

விடிய... ஊரே ஏர்மாடு பூட்டி ஓடுது ஒழவுக்காடு தேடி.

காணி வெதைக்கணும்... கையில துட்டில்ல.

ஆடிக்காத்துல அரசஞ்சருகு மாதிரி அங்கிட்டும் இங்கிட்டுமா அலையிறா பெரியமூக்கி.

பஞ்சாயத்துக்கு வந்த ஆளுகளுக்குக் கஞ்சி காச்சி ஊத்தியே கரஞ்சுபோச்சு கையில இருந்த காசு. வெதத்தானியம் வாங்கணும்... உழுகணும்... முப்பது நாளைக்குள்ள களையெடுக்கணும்.

எங்க போவா துட்டுக்கு?

சீதனம் போயித் திரும்பி வந்த அண்டாவ அடகு வச்சா முத்துக் கருப்பு வீட்ல. பத்து ரூவா கேட்டதுக்கு அந்தப் பாவிப்பய ஏழுக்கு மேல ஏறி வரல.

அம்மைநாயக்கர் வீட்டுக்கு ஓடிப் போயி வெதத்தானியம் வாங்கிக்கிட்டா. மூணு குறுக்கம் காட்டுக்கு மூணுபடி சோளம் போதும். ஊடு வெத வேணுமே! எள்ளு முக்காப்படி மொச்சப்பயறு கல்லுப் பயறு பாசிப்பயறு தட்டாம்பயறு காணம் தொவர இதெல்லாம் வகைக்குக் காலரைக்காப்படி வாங்கித் துண்டு துண்டாத் துணியில முடிஞ்சு மொத்தமாத் தோள்ல சொமந்து வீடு வீடா அலையிறா ஏர்மாடு தேடி.

வெதப்புக்கு மட்டும் ஒத்த ஏர் ஆகாது; ரெட்ட ஏர் வேணும். எவனக் கேட்டாலும், "எங்க காடு உழுதுட்டு ஒங்க காடு வாரேங்"கிறான்.

நாலு நாளாச்சு... அஞ்சு நாளாச்சு.. ஏர் கெடைக் கல: ஈரம் போயிக் கிட்டிருக்கு இவ காட்ல.

நாளைக்குப் பாப்போம்,நாளன்னிக்குப் பாப்போம்னு சொல்றாங்களே தவிர, உறுதி சொல்றானில்ல ஒருத்தனும். எப்பிடியும் ரெண்டு நாள்ல ஏர் கெடைச்சிரும்ங்கற நம்பிக்கையில இருக்காக பெரியமூக்கியும் கருவாச்சியும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:06 pm

அவுக நம்பிக்கையில நஞ்சு ஊத்தற மாதிரி, காதோட காதா ஊருக்குள்ள கண்ணுக்குத் தெரியாத ஒரு கலவரத்த உண்டு பண்ணிக் கிட்டிருக்கான் கட்டையன்: "என்னிய மீறிக் கருவாச்சி காட்டுக்கு எவன் உழுகப் போனாலும் உழுதமாடு திரும்பி வரும்; உழுதவன் திரும்ப மாட்டான்!"

பந்தயம் காவியம் நிகழும் காலம் இந்திய சுதந்திரத்துக்கு முன்னென்று கொள்க.

பொதுவா மனுசக் கூட்டத்துக்குள்ள குணமே, கெட்டதுக்குப் பயப்படறதுதான். தெம்பு சொல்லிப் பாருங்க... அவ்வளவு சீக்கிரம் தேற மாட்டான் மனுசன். பயமுறுத்திப் பாருங்க... உடனே மெரண்டு உசுர் கொறஞ்சுபோவான்.

"போற வழியில புங்க மரத்துல ஒரு கிளியிருக்கு, பாத்துட்டுப் போப்பா"ன்னு சொல்லிப் பாருங்க. "கிளியா..? இருக்கா..? நான் போறவரைக்கும் இருக்குமா..? பச்சக் கிளியா... பஞ்சவர்ணக் கிளியா..?"ன்னு ஆயிரங் கேள்வி கேப்பான்.

"போற வழியில ஒரு புலி இருக்கு, பாத்துப் போப்பா"ன்னு சொல்லி விட்ருங்க. ஒரு கேள்வியும் கேக்காம "எங்க ஊரு அதுக்கு எதிர்த் தெசை யில"ன்னு ஓடியே போவான். கெட்டது எப்பவுமே கேள்வி கேக்கவிடாம ஒட்டிக்கிரும். கட்டையனுக்கும் அப்படித்தான் பயந்துபோச்சு சொக்கத்தேவன் பட்டி.

"பெரியமூக்கி பாவம் கெழண்டுபோனவ; அத்துவிட்ட கருவாச்சி வேற அத்துவானக்காட்ல நிக்கிறா. வீட்டுக்கு ஒரு ஏரு போயி உழுது குடுங்கப்பா"ன்னு சொல்லியிருந்தா ஒரு பய உழுகப் போயிருக்க மாட்டான் ஊர்ல.

"உழுகப் போனவன் வீடு திரும்ப மாட்டான்; கருவாச்சி காடு உழுக எவனும் போகாத!"ன்னு கட்டையன் கமுக்கமாப் பரப்பவும், "எதுக்குடா பொல்லாப்பு"ன்னு அவனவன் இஞ்சி இறுகிட்டான். பெரியமூக்கி மேல வெறுப்பில்ல; கட்டையன் மேல பயம்.

பொண்டாட்டி தப்பான வழியில போறாங்கிற சங்கதி ஊரு தெரிஞ்சு, நாடு தெரிஞ்சு கடை....சியாத்தான் புருசனுக்குத் தெரியுங்கிற மாதிரி, ஏர்மாடு தடுத்து வச்சிருக்கிறது கட்டையன் வேலதான்ங்கிறது அஞ்சாம் நாளுதான் தெரியவருது பெரிய மூக்கிக்கு.

"அடப்பாவிப் பயலே"ன்னு நெஞ்சப் புடிச்சு ஒக்காந்துபோனாக தாயும் மகளும். காடுகர பூரா ஒழவாயிருச்சு. இந்தா இந்தான்னு ஈரம் போயிக்கிருக்கு. இன்னம் ரெண்டு நாள்விட்டா ஒழவு எறங்காது; விழுந்த வெத மொளைக்காது.

'நான் என்ன பண்ணுவேன், ஏது பண்ணுவேன்?'னு ஆளில்லாத ஊருக்குள்ள அவ அலைய, அரசமரத்து அம்பலக்கல்லுல படுத்துக்கெடக்கான் கேப்பக்களியான். கட்ன வேட்டியோட வெறும் ஒடம்போட தலைக்கு வச்சாக் களவு போயிரும்னு துண்டச் சுருட்டித் தொடையிடுக்குல வச்சுப் படுத் திருக்கான்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:07 pm

பாவம்... பெறவியிலயே வாயும் பேசாது; காதும் கேக்காது அவனுக்கு. குடும்பம் இல்ல; ஒத்த ஆளு. ரெண்டு மாடுகளும் மூணு செம்பிலியாடுகளும் தான் சொந்தபந்தங்க. இவன் கஞ்சிக்கு அதுக பொறுப்பு; அதுக தீனிக்கு இவன் பொறுப்பு. ஒரு கெட்ட பழக்கமில்ல அவனுக்கு; ஒழச்சுப் பொழைக்கிற சந்நியாசி. ஒரு பெறவி முடிஞ்சாத்தான் இன்னொரு பெறவின்னு சாமியாருக சொல்ற மாதிரி, ஒரு வேட்டி கிழிஞ்சாத்தான் இன்னொரு வேட்டிங்கிறது அவன் பொருளாதார ஐதீகம்.

அவனுக்கின்னு உள்ளதெல்லாம் ஒரே ஒரு ஆசதான்... நெல்லுக்கஞ்சி!

நெல்லுக்கஞ்சின்னா உசுரு கேப்பக்களியானுக்கு. தைப்பொங்க தீவாளிக்குத்தான் நெல்லுக்கஞ்சிங்கற ஆடம்பரமெல்லாம் அப்ப. கல்யாண வீடு, கருமாதி வீடுகள்ல ரெண்டு எல வாங்கி ஒண்ணு மேல ஒண்ணு போட்டு ஒக்காந்திருவான். மேல் எலையில மொதப் பந்திச் சோத்த வாங்கித் தின்னுப்புட்டு, அந்த எலைய எடுத்தெறிஞ்சிட்டு வேட்டியில கையத் தொடச்சு ரெண்டாம் எலைய விரிச்சு, ரெண்டாம் பந்திக்கு வந்த மொத ஆளு மாதிரி அங்கேயே ஒக்காந் திருவான்.

இப்ப... மூச்சுவிடற பொணம் மாதிரி ஒறங்குறான்.

கத்திக் கத்திப் பாத்தா பெரியமூக்கி. அவன் எந்திரிக்கல. காத்து சத்தம் போட்டா கல்லு எந்திரிக்கும்? ஒரு குச்சி எடுத்து அடிச்சு எழுப்புனா. கனாக் கண்டு எந்திரிச்சவன் மாதிரி மேலயும் கீழயும் முழிச்சவன், கொறட்டைய நிறுத்திட்டுக் கொட்டாவிய விடுறான்.

எந்த மொழியில பேசுனாலும் காசுல பேசுற மாதிரி வருமா? அதுலயும் இவன் வாய் பேசாதவன். அண்டா அடகுவச்ச ஏழு ரூவாயில விதைத் தானியத்துக்கு ரெண்டே முக்கா ரூவா போக முடிஞ்சுவச்சிருந்த நாலே கால்ல ஒரு ஒண்ணே கால் எடுத்துக் குடுத்து "உழுக வாப்பா"ன்னு சாடையில சொல்லவும், அவன் தலையச் சொரண்டி "கர்று புர்று"ன்னு மொனகுறான்.

சாமியக் கும்பிட்டு அவன் மேல பிரம்மாஸ்திரத்த எடுத்து எறிஞ்சா பெரியமூக்கி. "பச்ச நெல்லுக் குத்தி மத்தியானம் நெல்லுக்கஞ்சி உருண்ட புடிச்சுத் தாரேன்"னு சாடையில சொல்லவும், அதுவரைக்கும் கண்ல ஒட்டியிருந்த ஒறக்கம் ஓடியேபோச்சு கேப்பக் களியானுக்கு. சரின்னு தலையாட்டிட்டான்.

பாதிக் கெணறு தாண்டிட்டா பெரியமூக்கி. இன்னொரு ஏருக்கு என்னா பண்றது?

முக்குறுணி வீட்டுக்கு ஆடிக்கு விருந்தாடி வந்திருக்கான் அவ மருமகன் சவட்டையன்; பின்னத்தேவன்பட்டிப் பெறப்பு. நல்ல எளந்தாரி. மாடு மாதிரி வேல செய்வான். ஆனா சாராயமும் கஞ்சாவும் குடுத்தா வேட்டியக் கழத்திக் குடுத்திட்டு வெறும் ஆளா வீட்டுக்கு வந்திருவான். சுத்தி வளைச்சுப் பாத்தா, பெரியமூக்கிக்கு முக்குறுணி நாத்துனா மொறையில வந்து சேருவா. உழுதுமுடிச்ச அவ மாடுக ரெண்டும் தொழுவுல இருக்கு.

"யப்பா முக்குறுணி மருமகனே! சாமியாப் பாத்து ஒன்னிய அனுப்பிருக்கு ராசா. காடு உழுதுகுடுத்துட்டுப் போ"ன்னு அவ காச எடுத்து நீட்ட விருந்தாடியா வந்திருக்கவன் வேலைக்குப் போனா மதிப்புக் கம்மின்னு அவன் மரியாதி பாக்க முந்தானையில ஒளிச்சுக்கொண்டாந்திருந்த சாராய சீசாவ எடுத்து நீட்டி ஓங்கி அடிச்சு ஒடைச்சா அவன் மரியாதைய.

சீசாவா... லேசா? அவனும் தலையாட்டிட்டான்.

சரின்னு சொன்ன சவட்டையன் இன்னொரு குண்டத் தூக்கி எறியிறான்.

"நான் வந்திருவேன் நல்லத்தா. நேத்து உழுகப்போன மயிலக்காள, பின்னங்கால்ல கொழு எடறி எந்திரிக்க மாட்டாமக் கெடக்கு. கடப்பாரைக் கவுண்டரு விடிய வந்து ஏர்க்கலப்ப வேணும்னு எரவல் வாங்கிட்டுப் போயிருக் காரு. என்னிய என்ன பண்ணச் சொல்றே?"ங்கறான் காசப் பையில போட்டுக்கிட்டு சீசாவையும் இறுக்கிப் புடிச்சுக்கிட்டு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:10 pm

"எம் பூமியில மழ விழுக வழி காமிச்ச சாமி, வெத விழுக வழி காமிக்கலையே"ன்னு மருகி நின்ன பெரியமூக்கி மூஞ்சியில திடீர்னு ஒரு தெளிச்சி. "யப்பா... சாமியா வந்த சவட்டையா.

எங்க வீட்ல ஒரு ஏர்க்கலப்ப இருக்கப்பா... பூர்வீகக் கலப்ப. அத எடுத்துக்க. ஒத்த மாடு நீ வச்சிருக்க. ஒத்தப் பசு நான் வச்சிருக்கேன். அத ஏர்ல பூட்டி ஓட்டிக்க. கணக்கு சரியாப் போச்சா. காடு வந்து சேரப்பா விடிய. மனுசன் அடைக்கிற கதவ சாமி தொறக்குமடா...

வாடா."

விடி....ய்யக் காடு வந்து சேந்துருச்சு ரெண்டு ஏரும். இல்லாதவன் முழுசாக் கழிக்க முடியாத கடன்கப்பி மாதிரியே இன்னம் மிச்சமிருக்கு இருட்டு. கத்தாழம் புதருக்குள்ள காடைகளும் கதுவாலிகளும், வேப்பமரத்துல காக்காயும், ஒடசாலி மரத்துல மைனாக்களும் "இன்னும் எந்திரிக் கலையா சூரியபகவானே"ன்னு கெழக்கக் கிண்டலடிச்சுக் கத்துதுக.

பாறையில் துண்ட ஒதறித் தூசுதட்டி வேட்டிய அவுத்துச் சுருட்டி அதுலவச்சு, காத்துல பறந்துரும்னு ஒரு கல்லையும் தூக்கிவைக்கிறானுங்க கேப்பக்களியானும் சவட்டையனும். என்னமோ அழுக்குப்பட்ருமாம்... அதுக்கு மேல அழுக்குச் சேர எந்த மூலையிலயும் எடமில்லாத வேட்டியில.

வேட்டியில தூக்கிவச்ச கல்லுக புண்ணியம் பண்ணினதுக... அதுகளுக்கு மூக்கு இல்ல பாருங்க. கிழக்கு முகமா நின்டு பூமியக் கும்பிட்டு, வெதப்பொட்டி எடுத்துட்டா பெரியமூக்கி. ரெண்டு படி புடிக்கும் அந்த வெதப்பொட்டி. ஒரு குறுக் கத்துக்கு இன்ன அளவு தானியம்னு கணக்கு இருக்கு அவளுக்கு.

[You must be registered and logged in to see this image.]



ஒரு படி சோளம், காப்படி எள்ளு, கல்லுப்பயிறு, காணப்பயிறு, தட்டாம் பயிறு, மொச்ச, தொவர எல்லாம் வகைக்கு அரைக் காப்படின்னு கலந்து வெதைச்சா ஒரு குறுக்கம் வெதைச்சு முடிக்க ஒரு கை வெத மிச்சம் இருக்கணும். ரெண்டு கையிலயும் வெதப் பொட்டிய எடுத்து, அத எடது மார்புல இருதயத்தோடு வச்சு எணச்சு அணச்சு, குலதெய்வத்த நெனச்சு, வலது கையில வெதய அள்ளி வெதப்பொட்டியில ஓங்கி அடிச்சு வெதச்சுக்கிட்டே நடந்துபோறா பெரியமூக்கி. ரெண்டு பாக தூரத்துக்குச் செதறி ஓடி விழுகுதுக வெதைக.

கோயில் மணிச் சத்தமெல்லாம் சத்தமில்ல ஒரு வெவசாயிக்கு. வெதைக்கையில தானியங்க வெதப் பொட்டிய முட்டி மோதித் தெறிச்சு விழுகிற சத்தமிருக்கே... அந்தச் சத்தத்துக்குக் கீக்கொண்டதுதான் சகல சத்தமும்.

பெரியமூக்கி ஒரு குறுக்கம் வெதச்சு முடிக்க முன்னித்தி ஏரு கேப்பக் களியானும் பின்னித்தி ஏரு சவட்டையனுமா ஒழவுல கூடிட் டாங்க. சும்மா சரபுர சரபுரன்னு சரளக்கல்லுககூட சண்டபுடிச்சுக் கிட்டே செம்மண்ணப் பொளந்து செந்துருக்கம் பூசிக்கிட்டே வெதப்பு ஒழவு போட்டுப் போகுதுக கலப்பைக. கஞ்சிப் பொழுதுக்குள்ள ஒரு குறுக்கம் உழுது முடிச்சு, பெரியமூக்கி கரகரகரன்னு கரச்சு ஊத்துன கம்பங்கூழ, கழுவாத ரெண்டு கையிலயும் வாங்கி, சுட்ட மொளகா வத்தலச் சுரீர்னு கடிச்சு மடமடன்னு குடிச்சுப்புட்டு, ஆவாரங்கொழைய உருவிக் கை தொடச்சு, இடுக்குல இருக்கிற கூழ கோவணத்துல தடவிக்கிட்டு அடுத்த குறுக்கம் பாத்து மேழியழுத்துனாக ரெண்டு பேரும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:11 pm

இங்க இது இப்படியிருக்க... அங்க, பச்ச நெல்ல ஒரல்ல போட்டுக் குத்தியெடுத்தா கருவாச்சி. அதச் சோறாக்கிக் கொழஞ்சும் கொழையாம எறக்கி, உருண்ட புடிச்சுப் புளிச்ச தண்ணியில போட்டு ஆறாளுக் குண்டான கஞ்சிய எடுத்துக் குத்துச் சட்டியில போடுறா. ஒழவுக்காட்டுல நாலு ஆளு; இவளச் சேத்து அஞ்சாளு. கஞ்சிக் கணக்குல கேப்பக்களியான் ரெண்டாளு. ஆக மொத்தம் ஆறாளு.

மறுமாத்தம் இல்ல. குத்துச் சட்டியத் தலையில வச்சு, தூக்குவாளியக் கையில புடிச்சு, முத்துக்கருப்பு கடையில மறுமாத்தத்துக்கு வெங்காயம் வாங்கி அவ முந்தானையில முடிய... "பெரியமூக்கி காட்ல ஒழவு நடக்குதுடா"ங்கற ஒளவு போயிருச்சு கட்டையனுக்கு.

"நெல்லுக்கஞ்சி வருது... நெல்லுக்கஞ்சி வருது"ங்கிற நெனப்புலயே ரெண்டு குறுக்கத்த நெருக்கி முடிக்க... கருவாச்சி வாரது தெரியுது கரட்டுமேட்டுல.

நெல்லுக்கஞ்சியக் கண்டதும் கேப்பக்களியான் மலந்துபோனான் மலந்து. ஒரு உருண்டைக்கு ரெண்டு வெங்காயம்னு வாங்கிக் கருவேலங்காயத் திங்கிற வெள்ளாடு மாதிரி "கறுச் கறுச்"சுன்னு மெல்லுறான் பாவம்.

இவுகளயெல்லாம் கஞ்சி குடிக்கவிட்டுட்டு மூணாவது குறுக்கம் வெதச்சு முடிச்சு, மூஞ்சி தொடச்சு வந்த பெரியமூக்கி, கடைசி உருண்ட தின்டு கைதொடைக்கறதுக்குள்ள "எந்திரிங்கப்பா எந்திரிங்க... பொழுதிருக்க ஒழுவு முடியணும்"னு எல்லார் கால்லயும் வெந்நிய ஊத்துறா.

பெரியமூக்கி முள்ளு வெட்ட, கருவாச்சியும் கொண்ணவாயனும் கல்லுப் பெறக்கிப்போட, மூணாங் குறுக்கத்துல ரெண்டு சால் ஓட்டி மூணாஞ் சாலுக்குள்ள முன்னித்தி ஏரு நொழைய "நிறுத்துங்கடா ஏர!"ன்னு சத்தங் கேக்குது.

யாரு... என்னான்னு திரும்பிப் பாக்கிறதுக்குள்ள ஏர் உழுகிற ஆளுக மேல சரசரசரன்னு கல்லெறி விழுகுது. மாட்டுத் திமில் மேல விழுந்து ஒடஞ்சு செதறுதுக மண்கட்டிக. "விர்று விர்று"ன்னு காத்தக் கிழிச்சு வந்த கைக் கம்பு ஒண்ணு கேப்பக்களியான் மாட்டுக் கொம்புல மாட்டி நிக்கிது.

என்னா நடக்குது... ஏது நடக்குதுன்னு கண்ணு பாத்தது புத்திக்கு எட்றதுக் குள்ள ஏர வந்து மறிச்சுட்டானுங்க கட்டையன் ஆளுங்க.

ஒலக்கையனும், சலம்பல்பாண்டியும், பன்னியாம்பேரனும், கறிக் கஞ்சிக்கு அலையிற நாலஞ்சு காலிப்பயல்களும் ரெண்டு ஏர் மாட்டையும் சுத்தி வளையங் கட்டி நிக்கிறாங்க.

கெட்ட வார்த்த சொல்லி வஞ்சுக்கிட்டே ஒருத்தன் கேப்பக் களியான் உருமால அவுக்கிறான். அவன் "தஸ்ஸு புஸ்ஸு"ன்னு உருமாலக் காப்பாத்தக் கைய மேல தூக்கவும் கோவணத்த உருவி எறியப் பாக்குறான் ஒருத்தன்.

"ஏய்! யாரக் கேட்றா ஏரப் பூட்னீங்க? அவுத்துவிடுங்கடா."

பெரியமூக்கியும் கருவாச்சியும் பதறி நெஞ்சுலடிச்சு ஓடி வாராங்க.

ஒலக்கையனப் பாத்துக் கேப்பக்களியான் பயந்துபோனாலும் சவட்டையன் சண்ட புடிக்கிறான்.

"இந்தாப்பா! காட்டுக்காரி அவ... காசு வாங்குனவன் நானு. எடையில மறிக்க நீ யாரு?"


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:11 pm

"நான் யாருன்னு கையில சொல்லவா... வாயில சொல்லவாடா? ஏய்! நீ எந்தூர்டா?"

"பின்னத்தேவன்பட்டி."

"சொக்கத்தேவன்பட்டி சும்மா இருக்க பின்னத்தேவன்பட்டிக்கு என்னடா பெரியதனம்?".

இப்பக் குறுக்க வந்து விழுகுறா பெரியமூக்கி.

"ஏலே ஒலக்கையா. இது நல்லால்ல. பொம்பள பாவம் வந்தா நீ புழுத்துச் சாவடா." "நாங்க புழுத்துச் செத்தா, நீ செத்துப் புழுக்கப் போற... போடி கெழவி, போடி!" சலம்பல்பாண்டி புடிச்சு ஒரு தள்ளுத் தள்ளவும், மாட்டுக் கால்களுக்கு மத்தியில ஓடி விழுந்து போனா பெரியமூக்கி.

"யாத்தே"ன்னு கத்தி, கருவாச்சி ஆத்தாளத் தூக்கப் போக, "எலே பொண்டுகப் பயல்களா! கெழவியையும் மகளையும் ஏண்டா இந்தப்பாடு படுத்திறீக?"ன்னு சவட்டையன் சத்தம் போட, நேக்கா இடுக்குல மளார்னு உள்ள புகுந்து, சவட்டையன் சங்கப் புடிச்சுப் புட்டான் பன்னியாம்பேரன்.

"நீ யார்றா அதக் கேக்க? கருவாச்சிய நீ வச்சிருக்கியா?".

"ஏய்... ஏய்... இது நல்லால்ல."

"அப்ப, அவ ஆத்தாள வச்சிருக்கியா?".

"ஏய்! அவ எனக்கு நல்லத்தாடா. கருவாச்சி எனக்கு அக்கா தங்கச்சிடா."

"ஒறவுமொறை தெரியுதுல்ல... ஊருமொறை தெரியுதா ஒனக்கு? எங்கள மீறி எவனும் இந்தக் காடு உழுகப்படாது. ஒன் மாட்ட அவுத்துட்டு ஓடிப்போயிரு."

ஒழவுமாடுகளத் தும்பு திரிச்சுவிட்டு அதுக வாலுகள ஆளுக்கொருத்தனாக் கடிக்க, "விட்டாப் போதுமடா சாமி"ன்னு ஓடுதுக ரெண்டும். ஒழவு காட்டு வழியே மாடுக பின்னாலேயே வெரட்டிப்போறான் கேப்பக் களியான்.

"இது என்னடா இது... கேணப்பயக ஊர்ல கிறுக்குப் பய நாட்டாமையா இருக்கு?"ன்னு உழுதவரைக்கும் போதும்னு ஒத்தமாட்ட அவுத்துட்டு வெளியேறிட்டான் சவட்டையனும். வந்த சோலி முடிஞ்சுதுடா சாமின்னு தவ்வாளம்போட்டு ஓடிப்போயிட் டானுக காலிப்பயலுக.

ஆகாயத்துக்குக் கீழ அந்த அத்துவானக் காட்ல ரெண்டு பொம்பளையும் ஒரு பசுமாடும் அனாதையா நிக்கிறதப் பாத்து விக்கி விக்கி அழுகுறான் ஒண்ணும் பண்ண முடியாத கொண்ணவாயன்.

மகளக் கட்டிப்புடிச்சு ஆத்தா அழுக... ஆத்தாளத் தேத்தி மக அழுக... "பொட்டைகள இப்படி அழுகவைக்கிற பழக்கமெல்லாம் எங்க மாட்டு சாதியில கெடையாது"ன்னு பசுமாடு பாத்தழுக...

எழவு வீடாகிப் போச்சு ஒழவு காடு!

மூணாம் குறுக்கம் மூணு சாலு இன்னும் உழுகல. வெதச்ச வெத பூமியில கெடக்கு. இன்னைக்குள்ள உழுகாட்டி, சோளத்தப் புறா தின்னுட்டுப் போயிரும். மொச்சை, கல்லுப்பயிரு, தட்டாம்பயிரக் காடை கதுவாலிக முழுங்கிட்டுப் போயிரும். எள்ளு, காணப்பயிர எறும்பு இழுத்திட்டுப் போயிரும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:13 pm

[You must be registered and logged in to see this image.]


படக்குன்னு எந்திரிச்சா கருவாச்சி.

"அழுகாத ஆத்தா"ன்னு கண்ணத் தொடச்சா; வெட்டருவாள எடுத்து நட்டுவச்சா வரப்புல. ஏர்க்கால்ல ஒரு பக்க நேக்கால்ல ஒத்தப்பசு நிக்க, மறுபக்க நேக்காலத் தூக்குனா. பசு ஒயரத்துக்கும் தன் நெஞ்சுக்கும் நேக்கால நேர் பண்ணினா.

"அது ஒத்தமாடு; நான்தாண்டி ஆத்தா ஒன் தொத்த மாடு. ஓட்டு ஏர"ன்னா.

மூக்கச் சிந்தி எறிஞ்சு எந்திரிச்சு, ஒரே ஏர்க்கலப்பையில ஒரு பக்கம் பசுவையும் மறு பக்கம் மகளையும் பூட்டி உழுது வாராய்யா பெரியமூக்கி. தலைக்கு மேல பறந்துபோற சாயங்காலப் பறவைக இந்த பூமியில இப்படி ஒரு கூத்தும் உண்டுமான்னு வானத்துல கொஞ்சம் நேரம் நின்னுபாத்து நிதானமாப் பறக்குதுக. அவ உழுக உழுக செம்மண்ணா ரத்தம் கசியுது பூமி. உழுதுமுடிச்சு, மகளக் கட்டிப்புடிச்சு அவ அழுக, "நானும் ஒம் மகதான; என்னியக் கட்டிப்புடிச்சு அழுக மாட்டியா?"ன்னு பசுமாடு ஒரு பார்வ பாக்க, ரெண்டு மகள்களயும் கட்டிப்புடிச்சு, '"நான் பெறந்த நேரந்தான் நல்லால்ல; நீ பெறந்த நேரமும் நிம்மதியில்லையே"' ன்னு காடு தீப்புடிக்கக் கத்தி அழுகிறா பெரியமூக்கி.

இந்த வேதனையக் காணப் பொறுக்காம நெஞ்சப்புடிச்சுக்கிட்டே மலைக்குப் பின்னால போயி விழுகுது சூரியன்! குங்குமம் திட்டிக்கொண்டே

ஊருக்கே தெரியுது, கட்டையன் ஆளுக பெரியமூக்கி ஒழவு காட்டுல ஏர்மாடுகள மறிச்சுத் தும்பு திரிச்சுவிட்டதும்; ஆத்தாளும் மகளுமா உழுது அழுது வந்ததும். பாவிப்பய இன்னும் என்னென்ன வேசங் கட்டி வெளியேறப் போறானோன்னு ஊரு பதறுது.

"இத விடப்படாது; உருமாப் பெருமாத்தேவருகிட்டயும் சுப்பஞ்செட்டிகிட்டயும் ஒப்பிக்க வேண்டியதுதான்" கூழ்ச் சட்டியில் புடிச்ச அடிக்கறுப்ப, காக்காச் சிப்பியவச்சு "சொர்று சொர்று"ன்னு சொரண்டிக்கிட்டே அவ யோசிக் கறப்ப, நேத்து வெதச்ச ஒழவுக் காடு பாக்கப் போயிருந்த கொண்ணவாயன், ஒரு மாதிரி கலவரத்தோட ஓடி வர்றான். தவிப்படங்காமப் பேசறான் மூச்சு வாங்கிக்கிட்டே.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:20 pm

[You must be registered and logged in to see this image.]



"பே... பே... பே... பெரியாத்தா, ஊ... ஊ... ஊ... ஊர்க் காடுக எல்லாம் நெ... நெ... நெருக்கி மொளைச்சிருக்கு. நம்ம காடு மட்டும் அ... அ... அ... அங்கொண்ணும்... இ... இ... இ... இங்கொண்ணுமா மொளச்சிருக்கு..."' விட்டா அழுதிருவான் போலருக்கு.

"கெக்கக் கெக்கக் கெக்கே"ன்னு சிரிக்கிறா பெரியமூக்கி.

ரொம்ப நாளைக்கப்புறம் ஆத்தா சிரிக்கிறாளேன்னு அண்ணாந்து பாக்குறா கொட்டத்துல வெளக்கமாற வச்சு சாணியோட சண்ட புடிச்சுக் கிட்டிருக்கிற கருவாச்சி, தண்ணி குடிச்ச பசுவும் பாக்குது தலையத் தூக்கி.

பெரியமூக்கி சொல்றா: '"வெதைச்சு வீடு வந்தா விடிய்ய மொளைச்சிருமா ஒழவுகாடு? அதுக்கு ஒரு கணக்கு இருக்குடா மகனே! ஏழு நாளு ஆகும் மொச்சையும் தட்டாம்பயிறும் மொளைக்க. கல்லுப்பயிறும் சோளமும் மொளைக்க நாலு நாள் ஆகும். மூணு நாள் ஆகும் எள்ளு மொளைக்க. காணப்பயிறு ஒண்ணுதாண்டா ஒரே ராத்திரியில மண்ணுக்குள்ள மலந்து விடிய்ய மொளைச்சிருக்கும். நீ காணப்பயிறு மொளச்சத மட்டும் பாத்துட்டு வந்திருக்கடா கேணப்பயலே. போடா! போயி வேலயப் பாரு... இந்தாத்தா கருவாச்சி! கும்பாவுல கூழு ஊத்திவச்சிருக்கேன் கொண்ண வாயனுக்கு. பாவம்... ஒரு பட்டமொளகா இருந்தா சுட்டுக் குடு.

பெருமாத்தேவர் வீடு வரைக்கும் ஒரு எட்டுப் போயிட்டு வந்திடுறேன்".

உருமாப்பெருமாத்தேவரும் சுப்பஞ்செட்டியாரும் பொடிநடையாப் பொழுதுசாயப் போனப்ப மேல் குளிச்சுக்கிட்டிருந்தாரு சடையத் தேவர்.

வெதுவெதுங்குற வெந்நி வெளாவி, கைக்கு வாட்டமா அண்டாவ ஒரல்ல தூக்கிவச்சு ஒசரம் பண்ணி, குளிக்கை யில ஒரு அலுப்பு வந்ததுன்னா ஒக்காந்து அழுக்குத் தேய்க்க ஒரு தலைப்பலகையும் வாசல்ல போட்டு, முன் அண்ணாக்கயித்துல சொருகுன கோவணத்த இழுத்துப் பின் அண்ணாக்கயித்துல சொருகிக்கிட்டே "வாங்கப்பா"ன்னாரு.

அவரு சொருகறதுல தப்புக்கிப்பு வந்திரக் கூடாதேன்னு சாமியக் கும்புட்டுக்கிட்டு "வாரோம்"ன்னாங்க ரெண்டு பேரும்.

வயசான காலத்துல முக்கிமுக்கி வர்ற மூத்திரம் மாதிரி சன்னமா கால்வழியா வெந்நி ஊத்திப் பதம் பாத்து நிக்கிற சடையத்தேவரக் கோவணத்தோட பாத்தா, பெரியாளுக செத்துப்போனா அரைக் கம்பத்துல பறக்குமா இல்லையா கொடி... அப்படியிருக்கு.

"என்னாப்பா தெக்கும் வடக்கும் சேந்து வந்தது மாதிரி ஊர்ப் பெருசுக ரெண்டும் ஒண்ணா வந்திருக்கீக?"

திண்ணையில கெடந்த கோழிப் பீய வைக்கோல் எடுத்து வழிச்செறிஞ்சிட்டு ஒக்காந்தாக பெரிசுக ரெண்டு பேரும். சடையத்தேவரு குளிக்கிற கண்காட்சியக் கண்டுக்கிட்டே.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:22 pm

[You must be registered and logged in to see this image.]



"வேறொண்ணுமில்லப்பா... இந்த வருசம் நல்ல மழ. காடுகரையெல்லாம் வெதப்பாகிப்போச்சு."

"இதச் சொல்லத்தான் வந்தீகளாக்கும். நான் வெளியூருக்காரன்; இன்னைக்குத் தான் புதுசா இந்த ஊருக்குக் குடி வந்துருக்கேன் பாரு..."

"அதுக்கில்லப்பா... மழ எல்லாருக்கும் பொதுவாப் பெய்ற மாதிரி நீதி நேர்மையும் எல்லாருக்கும் பொதுவாயிருக்கணும்ல..."

"நூத்துல ஒரு பேச்சு. அதுக்கு என்ன இப்ப?"

"வேறொண்ணுமில்லப்பா... அத்துவிட்ட கழுதையப் பொழச்சுப் போடீன்னு சொல்றத விட்டுப்புட்டு, அவுக குடிக்கிற கூழ்ல ஏன் மண்ணள்ளிப் போடணும்?" தொடை வழியா வெந்நி ஊத்தி சொகத்தக் கால்ல இருந்து தரை வரைக்கும் விஸ்தாரமாப் பரவவிட்டு, "தீரப்போகுதுடா அந்த சொகம்"ங் கிறப்ப இன்னொரு கால்ல ஊத்திக் கிட்டே, "யாரு கூழு..? யாரு மண்ணு..? பிடிபடலையேப்பா"ன்னு பிடிகுடுக் காமப் பேசுறாரு சடையத்தேவரு.

"இது என்னாப்பா கதையாயிருக்கு... பழந் தின்ட கொரங்கு கொட்டையறியாதா? ஒழவுகாட்ல போயி ஏர மறிக்கிறதும் பொட்டச்சி களப் புடிச்சுத் தள்ளறதும் நல்லாவா இருக்கு?"

"சாமி சத்தியமா நான் பாக்கலப்பா..."

"நீ பக்கத்துல இருந்து பாத்தேன்னா சொல்றோம். நாளப்பின்ன இது நடக்கப்படாதப்பா.

கட்டையனுக்கும் சொல்லிவை."

"தலைக்கு மேல வளந்த பய... தகப்பன் பேச்சக் கேக்குறானா? கேக்குறேன்."

ஒடம்பு நனையத் தண்ணி ஊத்தி, ஒக்காந்து கால் நீட்டி, எட்டிய பாகத்தக் கையாலயும் எட்டாத பாகத்தச் சொம்பாலயும் அழுக்குத் தேச்சு, பித்த வெடிப்புல வரிவரியாப் பொளந்து நிக்கிற குதிகால அண்டா வச்சிருந்த ஒரல் அடிவாரத்துல கரகரன்னு தேய்க்கவும், விறுவிறு விறுன்னு வெளியேறுதுக உள்ளயிருந்த சீவராசிக.

பெருமாத்தேவரும் சுப்பஞ்செட்டியாரும் வெளியேறிட்டாக.

மூணு வாரமாச்சு. பாக்கப் பாக்க ஆசையா இருக்கு பயிர் மொளைச்ச காடு. சும்மா பச்சைத் தீப்புடிச்சு எரியிற மாதிரியிருக்கு பூமி. ஒரு சாண் உயரத்துக்கு வளந்து தோகையைச் சொழட்டி சிலம்பாடி நிக்கிற சோளப்பயிரும், மொளைச்சு எந்திரிச்சுக் கொடியோடப் பாக்கிற பயத்தஞ் செடிகளும் ஒனக்கு நான் மெதமானு ஒண்ண ஒண்ணு பாத்துச் சிரிச்சுக்கிட்டே காத்தோட பலிஞ்சடுகுடு ஆடிப் பழகுதுக.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 11:22 pm

ஒரு சின்னத் தூத்த விழுந்தாப் போதும்; பதம் கெடைக்கும்; ஒரு வாரத்துல களையெடுத்திரலாம். என்னமோ கடனுக்கு வட்டி மாதிரி காடெல்லாம் மண்டிக்கெடக்கு களை.

அறுகு மகிழி தொகிழி ஊசிக்கோரை குப்பமணி குமிட்டிக்கீரை தும்பை நெருஞ்சி ஆடுதின்னாப்பாலை நாயுருவி எல்லாம், எங்களுக்கும்தான் இந்த பூமி சொந்தம்னு ஏகத்துக்கும் மொளைச்சுக் கெடக்க, சாரணத்தி அடச்சுக்கெடக்கு சரஞ்சரமாக் கொடியோடி.

ஒரு கையில் பசுமாட்டப் புடிச்சு மேய விட்டுக்கிட்டே குத்துக்கல்லு மேல ஒக்காந்து யோசிக்கிறா கருவாச்சி.

"ஆத்தா வெத மட்டுந்தான வெதச்சா... எங்கிட்டிருந்து வந்துச்சு கள? களைக்கு ஏது வெத? பூமியும் பொழப்பும் ஒண்ணுதான் போலருக்கு. நன்மையத்தான் வெதைக்கிறோம். கூடவே தீமையும் மொளைக்குது. தென வெதச்சவன் தெனைய மட்டுமே அறுக்குறதில்லை; களையையும் சேத்துத்தான். வெதச்சு மொளைக்கிறது மதி. வெதைக்காம மொளைக்கிறது விதி. களையக் கொத்தெடுத்துச் சுரண்டி எறியிற மாதிரி விதிய மதியால வெல்லலாமா இல்லையா? பாப்போம்.

செயிச்சா சந்தோசம்... தோத்தா அனுபவம். பாத்திருவோம்."

'கார்த்திகை மாசம் ஏச்சாலும் களையெடுப்பு மழை ஏய்க்காதப்பா!" ஊர்ல சொல்லி அலையுங்க பெருசுங்க. எழுவது எம்பது வருசமா ஆகாயத்தை யும் பூமியையும் பாத்துப் பாத்துப் பழகுன கண்ணுக பொய் சொல்லுமா?

பூவாளி மாதிரி சிந்திச் செதறி விழுந்திருச்சு புரட்டாசி மழை; தூர் நனைய இல்லாட்டியும் வேர் நனைய.

தோள்ல கொத்துவச்சு தூக்குச்சட்டி கையில புடிச்சு, தலையில முண்டு போட்டு, ஊறவச்ச கம்பரிசியோ சாம அரிசியோ வாயில அள்ளிப் போட்டுக்கிட்டு ஊர மென்டுக்கிட்டு, தெசைக்கு அம்பது அறுவது ஆளாப் போறாக பொம்பளை ஆளுக.

அப்ப...

ஊருக்குள்ள காடு கரைகள்ல ஊடுருவி வாரானுங்க கட்டையன் ஆளுக.

"ஏ மாயக்கா! களையெடுக்க ஒனக்குச் சம்பளம் எம்புட்டு?"

"அர ரூவா."

"களையெடுக்காம இருக்கச் சம்பளம் முக்கா ரூவா. போகாத கருவாச்சி காட்டுக்கு; ஒன் ஆளுகளை யும் போகவிடாத."

மாயக்கா வெல போயிட்டா.

"இந்தா பாரு மொண்டியம்மா, கருவாச்சி காட்டுக்குக் களையெடுக்கப் போறதாயிருந்தாப் போ... அப்பறம் எங்க காட்டுக்கோ, எங்க பங்காளிக காட்டுக்கோ ஆயுசு பரியந்தம் வேலைக்குக் கூப்பிட மாட்டோம். யோசிச்சுக்கம்மா. மூணு குறுக்கம் முக்கியமா... முப்பது குறுக்கம் முக்கியமா?"

மொண்டியம்மா மெரண்டு போனா.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 5 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum