ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 14 Empty கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 14 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Jan 31, 2023 2:49 am



"யாத்தா பேயம்மா! கருவேலமரத்துல கட்டையச் சாச்சு நிக்கிறவளே! இதெல்லாம் இந்த ஊர்ல எனக்கு மட்டும்தான் தெரியும். என்னிய வரிவரியா வகுந்தாலும் ஒரு ஆளுக்கும் இந்த உண்ம சொல்ல மாட்டேன் பயப்படாத. பொழைக்க வந்தவ. பொழைச்சுட்டுப் போ. ஆனா, ஒன்னியக் கையெடுத்துக் கும்பிடறேன் தாயி... பொழைக்க விடு. கெழவனக் கட்டிலோட சேத்துக் கட்டிப்புட்ட. புருசன முந்தானையில முடிஞ்சு மூலையில வச்சுக்கிட்ட. சடையத்தேவன் வீட்டுத் தானியத்த விட்டெறிஞ்சு உள்ளூருக் கோழிகள எல்லாம் உன் வீட்டு வாசல்ல குமிச்சிட்ட. போ பொழச்சுப் போ. ஆனா எம் பிள்ளய மட்டும் எங்கிட்டயிருந்து பிரிச்சிராத."

கையெடுத்துக் கும்பிட்டா கருவாச்சி. கலங்கி ஒழுகுது கண்ணு அவளுக்கு. முந்தானைய எடுத்துக் கண்ணத் தொடைக்கப்போனா.. அதுல ஒட்டியிருந்த இண்டம் முள்ளு ஒண்ணு கிழிச்சிருச்சு இடது கண்ணுக்குக் கீழ.

ஒரு பேச்சும் பேசாம வெறிச்ச பார்வை வெறிச்ச மேனிக்கு நிக்கிறா திம்சுங்கிற பேயம்மா. கத தெரிஞ்சுபோச்சு இவளுக்கு. என்னைக்கிருந் தாலும் காட்டிக் குடுத்திருவா. கருவறுக்க வேண்டிய கணக்குல இவளையும் சேத்துக்கிர வேண்டியது தான். தீர யோசிச்சு முடிவுபண்ணிட்டா திம்சு.

"என் கத எல்லாமே தெரியுமா உனக்கு?" உடம்பு அசையாம ஒதடு மட்டும் அசையுது அவளுக்கு.

"தெரியும்" கண்ணத் தொடச்சுக்கிட்டே சொல்றா கருவாச்சி.

"ஒனக்குத் தெரியாத ஒரு கதையும் சொல்லட்டுமா?"

பதறிப்போன கருவாச்சி, "என்னா கதையடி ஆத்தா?"ன்னு கேட்டா வெறகுக்கட்டத் தாங்கிக்கிட்டே.

"அழகுசிங்கம் பொண்டாட்டி இப்ப முழுகாம இருக்கா."

வெறகுக் கட்ட விட்டுட்டு ரெண்டு கையையும் நெஞ்சிலடிச்சு "யாத்தே"ன்னு அலறினா கருவாச்சி.

ஓடி உருண்டு, ஊருணியில விழுந்துபோச்சு வெறகுக்கட்டு.

சத்தம் கேட்டுக் கர்ர புர்ர கர்ர புர்ரன்னு கத்திக்கிட்டே பறக்குதுக கரையோரத்து நாரைக. பயத்துல தவ்வி ஓடி ஒரு தண்ணிப்பாம்பு வாயில விழுந்துபோச்சு தவக்கா.

காட்டாறு மாதிரி கட்டுக்கடங்காமத் திரிஞ்ச அழகுசிங்கம், திம்சு வெட்டுன பள்ளத்துல போய் விழுந்ததுல ஆச்சரியமில்ல.

அனாதி காலந்தொட்டுப் பள்ளத்துக்கும் வெள்ளத்துக்குமான ஒப்பந்தம் இயற்கையாப் பாத்து ஏற்படுத்துனதா இல்லையா?

ஒரு கிராமத்துல வெள்ளிந்தியா அலஞ்சு திரியிற வெடலப்பயலுக்கு லட்சியம்னு என்ன பெரிசா இருந்திரப் போகுது?

வெள்ளிக் காசு நெல்லுச் சோறு மல்லிகப் பூவு இந்த மூணும் பத்தாதா?

அழகுசிங்கத்துக்கு இந்த மூணுக்கும் பஞ்ச மில்லாதபடிக்கு ஒரு ஏற்பாடு பண்ணிப் புட்டா திம்சு.

சித்தெறும்பக் கொண்டு போயிச் சீனிப் பொட்டிக்குள்ள ஒளிச்ச மாதிரி அவனுக்கு வசதி உண்டாக்கி வளச்சுப் போட்டுட்டா.

கடந்த ரெண்டு மூணு மாச மாவே அந்தி மசங்க ஆடு மாடு தொழுவடைய சலவைக்காரி வீட்ல சந்திச்சுக்கிட்டாக நல்லத்தாளும் மகனும்.

வெல்லம் போட்டு இடிச்ச எள்ளுத் தொக்குன்னா வீட்ட அடகுவச்சிருவான் பய. அது தெரியும் அவளுக்கு. இடிச்சுக் கொண்டாந்த எள்ளுத் தொக்க உருட்டி உருட்டி உருண்ட புடிச்சு ஊட்டிவிட்டுக்கிட்டே ஒரு நாள் சொன்னா...

"அய்யா அழகுசிங்கம்! எம் புருசன் மகனே! நல்ல கோளாறு நாலு சொல்றேன் கேளப்பா. கருவாச்சி ஒன்னியப் பெத்தெடுத்த வப்பா. நான் ஒன்னியத் தத்தெடுத்தவப்பா. கோட்டையில கொடி கட்டி ஆளப் பெறந்த மகராசன் நீயி குண்டித் துணிக்கு அலையலாமா..? அப்படி ஒன்னிய அனாதிக் காட்ல விட்ருவனா..? விட்டுர மாட்டேன். நீ இருக்க வேண்டிய ஊரு சுண்டெலிக்குக் கூட சோளக்கருது இல்லாத இந்தச் சொக்கத்தேவன்பட்டியா? கெழக்குச் சீமைக்குப் போ.

குப்பணம்பட்டியில ஒம் மாமன் வீட்டுல அதான்டா மகனே என் அண்ணன் வீட்ல போயி இரு. அப்பறம் பாரு ஒம் பொழப்ப. பருத்தி வேட்டியாக் காய்க்கும். பாறாங்கல்லு பூவாப் பூக்கும்."

எள்ளுருண்டைய ஊட்டிவிட்டுக் கிட்டேயிருந்தவ செத்தவடம்...

அவன் வாயில வச்ச வெரல வெளிய எடுக்கல. அவ வச்ச காரியம் பலிச்சிருச்சு கறிச்சுன்னு கடிச்சுப்பிட்டான் பய.

அவ விசுக்குன்னு வெரல எடுத்து ஒதற... யாத்தேன்னு அவன் பதறிப் போனான்.

"ஒண்ணும் ஆகாதுடா மகனே, நீ கடிச்சாலும் வலிக்காது அடிச்சாலும் ஒறைக்காது ஆத்தாளுக்கு. நான் போகச் சொல்ற எடத்துக்குப் போவியா?"

"எங்க போகச் சொன்னாலும் போவேன்"னான் இன்னொரு உருண்டைய முழுங்கிக்கிட்டே. அவனுக்கு ஊட்டிவிட்டே உசுர வாங்குறா எள்ளுருண்டைக்குள்ளயே பொதைக்கிறா.

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 14 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Jan 31, 2023 2:52 am


"கை கால் வெளங்காமக் கட்டில்லயே கெடக்குறான் எங்க அண்ணன் அதான் ஒன் மாமன். எங்க மதினி பாவம் ஒரு அரைக் கிறுக்கி. கஞ்சி காச்சி ஊத்தவே பெறந்தவ. nஅடுப்பாங்கரையில சமைஞ்சு கரிச்சட்டிக்கு வாக்கப்பட்டவ. அவளுக்கு ஒரே ஒரு மக இருக்கா மகனே. பேரு பட்டுக்குஞ்சம். அவ வயசுல நானு அவ மாதிரி இருந்தேன். என் வயசுல அவ என்ன மாதிரி இருப்பா. செந்துருக்கம் வச்ச செவ்வந்திப் பூவு அவ. மொறைன்னு பாத்தா ஒனக்கு மொறப்பொண்ணு மாதிரிதான். ஒத்த மாட்டு வண்டி ஒண்ணு வச்சிருக்கான் ஒம் மாமன். பட்டிதொட்டியெல்லாம் போ. பருத்தி, கடல, தக்காளி, கெழங்கு வாங்கு. சந்தை பெருத்த தேசமடா மகனே கெழக்குச் சீமை. திங்கக் கிழமை தும்மக்குண்டுச் சந்தை செவ்வாக் கிழமை பெருங்காம நல்லூர்ச் சந்தை புதங் கிழமை உசிலம்பட்டிச் சந்தை வியாழக் கிழமை வாலாந்தூர்ச் சந்தை &வெள்ளிக் கிழமை விக்கிரமங்கலம் சந்தை அஞ்சு நாள் சந்தையிலயே அள்ளிக் குமிச்சுப்புடு காசை. வாலாந்தூர்ச் சீமைக்கு வலது கால எடுத்து எட்டு வையி. இந்தா!

என் காணிக்கையா இந்தத் துட்ட வையி."

நூறு வெள்ளிக் காசை அவுத்து அவன் கையில கலகலகலன்னு கொட்டவும் பொலபொலபொலன்னு அழுது பூரிச்சுப்போனான் பய.

போனான் பட்டுக்குஞ்சத்தப் பாத்ததும் சித்தப்பிரமையாகி வாய் பௌந்து நின்னான். வாய் வழியா ஈ போகுது. அவன் கண்ணு வழியா உயிர் போகுது. ஆத்தா மாதிரி பொண்ணு வேணும்னு வினாயகன் தேடினான் கெடைக்கல ஆத்தோரமா உக்காந்து போனான். சின்னத்தா மாதிரி பொண்ணு வேணும்னு இவன் நெனச்சான் சிக்கிருச்சு.

மூணே மாசத்துல ஆனையூர் மீனாட்சியம்மன் கோயில்ல மேளதாளமில்லாமத் தாலி கட்டிப்புட்டான். வீட்டோட மருமகனாயிருந்து சா... விதியெழுதிருச்சு அவன் தலையில.

கல்யாணமாகி பட்டுக்குஞ்சத்துக்கு மொதத் தீட்டே வரல முழுகாமப் போனா.

எல்லா ஆம்பளைகளையும் செலவு கணக்குல எழுதிட்டு அழகுசிங்கத்த மட்டும் வரவு கணக்குல எழுதணுங்கிற திம்சு கணக்கு தப்பல. ஒரு நாய் திங்கிற சோத்தத் தின்னுட்டு நாலாளு வேல செய்யிற சீவாத்தி இவனப் போல வாய்க்குமா? ஒரே அமுக்கா அமுக்கிப்புட்டா.

அழுதே வத்திப்போனா கருவாச்சி. அன்னந்தண்ணி செல்லல அழுத கண்ணு மூடல. இவள நெனச்சே கொலபட்டினியா கெடக்கான் கொண்ணவாயன். கனகமும் பவளமும் அவ தலமாட்ல வச்சுட்டுப் போன கஞ்சியில பூன நக்கித் தின்டது போக மிச்சத்தக் கோழி கொத்தித் தின்டுக்கிட்டிருக்கு.

"ஏண்டா ராசா இப்படிப் பண்ணின? என்னடா கொற வச்சேன் ஒனக்கு? ஒம் மேல என் சுண்டு வெரல் பட்டிருக்குமா? ஒரு சுடு சொல் சொல்லியிருப்பனா? புழுக்கச் சோளம் வாங்கி நான் கஞ்சி காய்ச்சிக்கிட்டு ஒனக்கு அரிசி வாங்கி ஆக்கிப்போடலையா? களையெடுக்கப் போயி செம்புழுதியில பெரண்ட சீலய நான் கட்டிக்கிட்டு ஒந் துணிய வெள்ளாவிக்குப் போட்டு வெளுத்து வாங்கிவைக்கலையா?

கூலிக்கு வந்த கேப்பையில அரை மரக்கா வித்து ஒனக்கு அதிரசம் வாங்கித் தரலையா? நான் இத்த சிறுக்கிதான் எலும்பு தேஞ்சுபோனவதான். பிச்சைக்காரியா இருந்தாலும் ஒன்ன ராசா மாதிரி வளத்த னடா. களையெடுக்கப் போனாலும் ஒங்கிட்டச் சொல்லிட்டுப் போவேனடா... நீ கல்யாணம் முடிச்சதையே சொல்லாமப் போயிட்டி யேடா."

மகனையும் மருமகளயும் போயிப் பாருன்னு பெத்த மனசு கழுத்தப் புடிச்சுத் தள்ளுது. அவன் வந்தாலும் சேக்காதடின்னு வைராக்கியம் காலப் புடிச்சு இழுக்குது. நெனச்சு நெனச்சு அழுதா நெத்தியச் சுவர்ல தேச்சுத் தேச்சு அழுதா.

கஞ்சிதண்ணி குடிக்காம, காயப்போட்ட மூங்கி மாதிரி ஒட்டி ஒலந்துபோனா.

அவ கழுத்தாங்குழியில இருந்த நெஞ்செலும்பு ரெண்டும் துருத்தி நிக்கிதுக தோலு சுருங்கி சதை எறங்கி. ஒறங்குன்னு சொல்லுது ஒடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது கண்ணு.

ஒறக்கம் வராம உருண்டு பெரண்டு கெடந்தவ நடுச்சாமத்துல எந்திரிச்சு உக்காந்துட்டா இத்த போர்வைய எறிஞ்சுட்டு.

உள் வீட்டுக்குள்ள போனா. அடுக்குப் பானைய ஒவ்வொண்ணா எறக்கி மூணாம் பானையத் தெறந்தா. அதுலயிருந்து ஒரு பொருள் எடுத்தா. எடுத்த கை நடுங்க அதைத் தொட்டுத் தொட்டுப் பாத்தா. பெறகு மூக்குக்கிட்ட வச்சு மோந்து மோந்து பாத்தா. அவ நெனச்ச வாசன அடிச்சிருச்சு. எடுத்த எடத்துல அந்தப் பொருள வச்சுட்டு ஆனந்தமா அழுதிட்டு வந்து படுத்துக்கிட்டா.

அது வேறொண்ணுமில்ல. அனாதிக் குடிசையில அழகுசிங்கத்த பெத்துப் போட்ட அன்னைக்கு அவன் தொப்பூழ்க் கொடிய அறுத்திட்டு அவ பத்திரமா வச்சி ருக்காளே... அந்தப் பண்ணருவா.

விடிய்ய எந்திரிச்சா. சாணி கரைச்சு வாசத் தெளிச்சா. வெளக்கமார எடுத்தா. சல்லுச் சல்லுன்னு கூட்டிப் பெருக்கிக் குப்பை தள்ளுனா. காடி ஒழுங்கு பண்ணிக் கட்டுத் தொறை கழுவுனா. கொடமெடுத்துக் கழுவிக்குடுத்துக் கொண்ணவாயனத் தண்ணிக் கனுப்புனா.

பால் பீச்ச உக்காந்துட்டா. சட்டுச்சட்டுன்னு காம்புல தண்ணியடிச்சு, தண்ணியடி தாங்காம வெளியேறுன ஒரு உண்ணிய நசுக்கி, வெண்ணெ தடவி நாலு காம்ப உருவிவிட்டு, மொதப் பால் பாத்திரத் தூர்ல விழுகிற சொர் சொர் சத்தத்துல அவ சொக்கி நிக்க, "அழகுசிங்கம் வீடு இதானே"ன்னு கேக்குது அதிகாரமான ஒரு ஆம்பளக் குரல்.

பீச்சுன ஒரு கைப் பால அப்படியே ஒரு ஓரமா வச்சுட்டு தெரச்சுவிட்ட சீலய எறக்கி விட்டு மாராப்ப ஒழுங்குபண்ணி, முந்தானைய எடுத்து மூஞ்சி துடைச்சுக்கிட்டே வாசப் பக்கம் வந்து பாத்தா.

ஊர்ப் பெருசுகளோட ஆணும் பெண்ணுமா இருபது முப்பது தலைக கூடி நிக்கிதுக. அதுல ரெண்டே ரெண்டு பேர்தான் அசலூர் ஆளுக.

ஒருத்தன் அன்னஞ்சித் தலையாரி அமாவாசி. இன்னொருத்தன் ஆளு அடையாளம் புடிபடல.

அவ "வாங்க"ன்னு வீட்டுக்குள்ள கூப்பிட்டும் வராம வாசல்லயே நிக்கிது வந்த சனம்.

"விடிய்ய என் னாப்பா இத்தன பேரு... வெவரம் சொல்லுங்க"கருவாச்சி பதறி நிக்கிறா. மருகிமருகி அன்னஞ்சித் தலை யாரி ஆரம்பிச் சான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 14 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Jan 31, 2023 2:55 am


"யாத்தா! வந்திருக் கறவரு வாலாந்தூர்த் தலையாரி மொக்கச்சாமி. ஒரு * தாவா விசயமா நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு."

"என்னாப்பா தாவா? சொன்னாத் தானே தெரியும்"அடித் தொண்டை யில கேக்குறாரு இருளப்பக் கோடாங்கி.

"இது சொக்கத்தேவன்பட்டி தான?"வாலாந்தூர்த் தலையாரி வெறைப்பாக் கேக்குறாரு.

"சொல்லியா தெரியணும்... சொக்கத்தேவன்பட்டிதான்."

"காளியம்மன் கோவில் தெருவு... கதவு எண் பன்னண்டு இதானே?"

"ஆமா... அதுக்கென்ன..?"

"இந்த வீடு குப்பணம்பட்டி சோலமலைத் தேவருக்குக் கிரயமாயிருக்கு. உரியவுக வீட்டக் காலி பண்ணிக் குடுக்கணும். அனுப்ப வேண்டிய ஆளுக அனுப்பி அதிகாரத்தோட வந்திருக்கேன்."

கருவாச்சி நெஞ்சுல கை வச்சு நிக்க முடியாமக் கதவுல சாஞ்சு சரிஞ்சுபோனா.

ஊருக்கே ஒண்ணும் புரியல. கசமுசகசமுசன்னு சாதிசனத்துக் குள்ளயே சலம்ப லாகிப் போச்சு.

"இதென்னாப்பா இது. மொட்டைத் தலைக்கும் மொழங் காலுக்கும் முடிச்சுப் போட்ட கதையா வுல்ல இருக்கு சொக்கத்தேவன்பட்டி எங்க இருக்கு? குப்பணம்பட்டி எங்க இருக்கு? எவ வீட்ட எவன் எழுதி வாங்கறது?"

வந்த தலையாரி மேல வள்ளுன்னு விழுந்தாரு காவக்காரச் சக்கணன்.

தலையாரி ஒரு பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சல.

"அய்யா கோவிக்காதீக. அழகுசிங்கம்கிறது யாரு?"

"ஆமா! எங்கூருப் பயதான். கருவாச்சி மகன்தான்."

"கட்டையன் மகன்னு சொன்னாகளே..."

"ஆமா! அப்படியும் சொல்லலாம்"எரிச்சலா வந்துச்சு ஒரு சத்தம்.

"சிறுகச்சிறுக அப்பப்ப அழகுசிங்கம் வாங்குன கடனுக்காக இந்த வீட்ட, சோலமலைத் தேவருக்கு அவரு கிரயம் பண்ணிக் குடுத்திட்டாரு."

"மீனாட்சியம்மன் கோவில்கூட எம் பேர்ல இருக்குன்னு எந்தப் பிச்சைக்காரனும் சொல்லிக்கிரலாம். ஆதாரமிருக்காப்பா?"

"சிந்துவம்பட்டியில பதிஞ்ச பத்திரத் தோட வந்திருக்கேன் படிக்கிறேன். கேளுங்க.

"பிரமதூத வருசம் புரட்டாசி மாசம் 17-ந் தேதி பெரியகுளம் தாலுகா அன்னஞ்சி கிராமம் சொக்கத்தேவன் பட்டி காளியம்மன் கோவில் தெருவில் கதவு எண் பன்னிரண்டில் குடியிருக்கும் கட்டையத் தேவர் மகன் அழகு சிங்கமாகிய நான், மதுரை ஜில்லா உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் கிராமம் குப்பணம்பட்டியில் குடியிருக்கும் பெரிய மாயத்தேவர் மகன் சோலமலைத் தேவருக்கு எழுதிக் கொடுத்த கிரயப் பத்திரம்.

என் வியாபாரத்துக்காகவும் சொந்தச் சிலவுகள் மற்றும் சில்லறைக் கடன் தீர்ப்பதற்காகவும் தங்களிடம் நான் வாங்கிய மொத்தப் பணம் ரூ.240 (இருநூற்றி நாற்பது)க்காக எனக்குப் பூர்வீகப் பாத்தியப்பட்ட நான் அனுபவித்து வரும் அடியிற் கண்ட வீட்டை நான் தங்கள் பெயருக் குக் கிரயம் செய்து கொடுத்துவிட்டேன். இது முதல் அடியிற்கண்ட வீட்டை தாங்களே சர்வ சுதந்திரமாய் ஆண்டனுபவித்துக்கொள்வீர் களாகவும்."

தலையாரி படிச்சு முடிச்சதும் ஒண்ணும் பேசல ஒருத்தரும்.

தரையோட சரிஞ்சு உரலக் கட்டிப் புடிச்சுத் தம்பாயமில்லாமக் கெடந்தவள ஓடி வந்து தூக்குறாக கனகமும் பவளமும்.

"நாளைக்கே காலி பண்ணுங்கன்னு நாங்க சொல்லல. கெடு கேட்டாக் குடுக்கச் சொல்லிக் கிரயதாரர் உத்தரவு."

பத்திரத்த வாங்கி உத்து உத்துப் பாத்து உண்மைதானான்னு சோதிச்சாக ஊர்ப் பெருசுக.

அது அழகுசிங்கம் கையெழுத்து தான்னு உறுதி செஞ்சான் கூடப் படிச்ச ஒருத்தன்.

"வீட்ட விட்டு ஓடிப் போயிக் கல்யாணம் முடிச்ச பய வீட்டையும் வித்துப்புட்டானேப்பா."

"கடைசிக் காலத்துல ஆத்தாளுக்குக் கஞ்சி ஊத்தலேன்னாலும் நெஞ்சுல ஏறி மிதிக்காம இருந்திருக்கலா மில்ல."

"அதெல்லாம் காலி பண்ண முடியாது. வாங்குனவனயும் வித்தவன யும் வரச் சொல்லுங்கப்பா."

"பத்து ரூவாப் பத்திரத்துல பதிஞ்சதுக்கப்பறம் விட மாட்டேன் வீட்டன்னா விடுமா சட்டம்?"

சிதறிக்கிடந்த ஊரு சேந்து குமிஞ்சு போச்சு கருவாச்சி வீட்டு வாசல்ல.

கருவாச்சி வீட்டவிட்டு வெளி யேறப்படாதுன்னு ஒரு கூட்டமும், வேற வழியில்லப்பா வெளியேறித்தான் ஆக ணும்னு ஒரு கூட்டமும் முட்டிமோதி நிக்க டங்குடங்குடங் குன்னு எட்டு வச்சுக் கூட்டத்த வெலக்கி வாரா திம்சு.

அதுவரைக்கும் மொசப் புடிக்கிற நாய்க் காது மாதிரி வெடச்சு நின்ன வாலாந்தூர்த் தலையாரி அவளக் கண்டதும் தண்ணிக்கு அலையிற நாய் நாக்கு மாதிரி தொங்கிப் போனான்.

"யப்பா! வாலாந் தூர்த் தலையாரி... எந்த ஊர்க்காரன் எழுதி வாங்கறது எங்கக்கா வீட்ட? எம் மகன் வாங்குன கடன நான் அடைச் சுடுறேன். ஒங்க சோல மலைத் தேவங்கிட்ட சொல்லி, எம் பேருக்கு எழுதிக் குடுக்கச் சொல்லு. காலம் போற கடைசி வரைக்கும் என் வீட்லயே இருந்துட்டுப் போறா எங்க அக்கா."

கருவாச்சிய ஒரு கீழ்ப் பார்வ பாத்து உதடு கடிச்சு உசுப்பேத்துறா திம்சு. கொழுப்பெடுத்து நிக்கிறவளக் குறுகுறுன்னு பாத்தா கருவாச்சி. நீ குடியிருக்கிற வீடே ஒனக்கு நான் போட்ட மடிப்பிச்சைதானடி கண்ணுல வந்து சொல்லுது திம்சு திமிரு. சுடுகாட்ல போயிக் குடியிருப்பாளே தவிர, நீ போட்ட பிச்சையில எச்சிப் பொழப்புப் பொழைக்க மாட்டாடி கருவாச்சிஅவ நெனைக்கிறது வரிவரியா ஓடுது அவ கண்ணுமுழியில.

கொடத்துல தண்ணி சொமந்து வந்த கொண்ணவாயன் என்னமோ ஏதோன்னு பதறிக் கூட்டத்த வெலக்கி வீட்டுக்குள்ள வந்தான்.


[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 14 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum