ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Apr 27, 2010 12:01 am

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 5:28 am

ஒரு முள்ளா... ரெண்டு முள்ளா... காரா முள்ளு சூரா முள்ளு எலந்த முள்ளு இண்ட முள்ளு கருவேல முள்ளு வேலா முள்ளு மதுக்கார முள்ளு முக்குறுணி முள்ளு கிளுவ முள்ளு ஒடசாலி முள்ளு, நெருஞ்சி முள்ளு சில்லி முள்ளு கள்ளி முள்ளு எலக் கத்தாழை சிவனார் வேம்பு இந்த முள்ளுகளுக்கு மத்தியில ஒத்தையடிப் பாதை போற மாதிரி, கருமாயங்களுக்கு மத்தியில எம் பொழப்பு போகுதேன்னு பொலம்பிக்கிட்டே போறா கருவாச்சி.

ஆவாரஞ் செடியும் எருக்கிலையும் மட்டும்தான் இந்த வெப்பல்லயும் உசுர் புடிச்சுப் பச்சகட்டி நிக்கிதுக. பொறுக்கல சூடு பொசுங்குது உள்ளங்காலு. வழியில ஆவாரஞ் செடியப் பாத்தா அதுல அஞ்சாறு கெளைய ஒடிச்சா. அதத் தரையில போட்டா, அதுல ஏறி நின்டுக்கிட்டா. ஆவாரங் கொழையில இருந்த குளிச்சி அவ உள்ளங்கால்ல பட்டுப் பாதத்துப் பள்ளத்துல பரவி அதுலருந்து ஏறிக் கெண்டைக்கால் சதையக் கிளுகிளுப்புப் பண்ணித் தொடை வழியாத் தொடுத்து எலும்புகளுக்குள்ள எளங்காத்து வீசி, இருதயக் கூட்டுக்குள்ள எளந்தூரல் போட்டு மூளக்குள்ள போயி முணுமுணுன்னு மழை பெய்யுது. குனிஞ்சா கொழையை எடுத்துக் கக்கத்துல வச்சுக்கிட்டா நடந்தா. எங்கெங்க தவிப்பாறணுமோ அங்கங்க ஆவாரங் கொழையக் கீழபோட்டு அது மேல ஏறி நின்னுக்கிட வேண்டியது. ஆட்டுத்தோல் மாட்டுத் தோல்ல பண்றதெல்லாம் அசைவச் செருப்பு ஆவாரங் கொழையில பண்றது சைவச் செருப்பு. கண்டுபுடிச்சது யாரோ? கையெடுத்துக் கும்புடணும் அந்தக் கடவுள. எங்கயோ கத்துது ஒரு கதுவாலி சத்தம் சரியில்ல. அதுக்கோ தொணைக்கோ ஆபத்து போலருக்கு.

நரிக அப்பப்ப நாட்டாமை பண்ற காடு அது. அஞ்சாறு நரி சேந்தா ஒரு ஆள அடிச்சுப்புடுமாம். சங்கக் கடிச்சு ரத்தம் குடிச்சு வெலாவக் கீறி ஈரல மட்டும் எடுத்துக்கிட்டுப் போதும் போதும்னு போட்டுட்டுப் போயிருமாம். நரி முகத்துல முழிச்சா நல்லதாம்! முழிச்சவுகளுக்கா... நரிக்கான்னு முழு வெவரம் சொல்லாம விட்டுட்டாக.

மத்தியானக் கஞ்சி குடிக்க நிழல் தேடி அலையுதுக ஆடுமாடு மேய்க்கிற ஆணும் பொண்ணும். நாக்க நனைக்கத் தண்ணி தேடி அலையுதுக ஆடுமாடுக. மாடு நடக்க நடக்க அது கவுட்டு நெழல்லயே தவ்வித் தவ்விப் போகுது ஒரு கரிச்சான் குருவி. காத்தோட சேந்து காடு பூரா மெதந்து மெதந்து வருது கானல் அல. விசுக்கு விசுக்குன்னு எட்டுவச்சுப் போற கருவாச்சிக்கு வேர்வை ஊற ஊற, இதுக்கு மேல ஊற என்னால ஆகாதாத்தான்னு நின்னுபோச்சு எச்சி. மயக்கமாக் கெடக்கேன் தண்ணி தெளிச்சு எழுப்பிக்கன்னு ஒட்டிக்கிருச்சு உள்நாக்கு.

ஆவாரங் கொழையக் கீழ போட்டு நின்டுக்கிட்டு, வலது கையத் தூக்கி நெத்தியில சாரங்கட்டி தட்டுப்படுதா தண்ணின்னு பல பக்கமும் பாக்குறா. கண்ணுக்கெட்டினமட்டும் காஞ்ச பூமியாத்தான் தெரியுது. ஆவாரங் கொழையக் கக்கத்துல அணைச்சுக்கிட்டே நடையில கூடி வாரா. ஒத்த ஆலமரம் கடந்தா சுழியாம்பாறை, அது மேல ஒரு கல்லுக் குழி. கல்லுக்குழியில கரேர்ன்னு கெடக்கு எப்பவோ பேஞ்ச மழைத் தண்ணி. தண்ணியக் காணாதவரைக்கும் நாக்குல மட்டும்தான் தாகம் எடுக்கும் தண்ணியக் கண்டதும் திரேகமெல்லாம் தாகம் எடுக்கும். கக்கத்துல இருந்த கொழையத் தரையில போட்டுட்டு முக்காடெடுத்து மூஞ்சி தொடச்சுக்கிட்டே கல்லுக்குழிப் பாறையில உக்காந்து கை ரெண்டையுஞ் செலுத்தி அள்ளுனா தண்ணிய. அள்ளுன தண்ணியில வாய் வைக்கப் போக தஸ்ஸு புஸ்ஸு ன்னு கேக்குது ஒரு சத்தம். மோசமான சத்தமாயிருக்கேன்னு மூஞ்சி தூக்கிப் பாத்தா வாலத் தண்ணிக்குள்ள தொங்க விட்டு, தலையத் தரையில போட்டு வேலா மரத்து நெழல்ல பாறை மேல படுத்திருக்கய்யா ஆறடிக்குக் கொறையாத ஒரு பெரும் பாம்பு.

பயத்துல வெலவெலத்துப் பித்துப்பிடிச்சுப்போனவ, கைத் தண்ணியத் தண்ணியிலவிட்டா சத்தங் கேக்குமின்னு பாறையில பதறாம வடியவிட்டு அசங்காம எந்திருச்சு, நெஞ்சப் புடிச்சுக்கிட்டே பின்னெட்டு வச்சுப் போறா. நல்லவேள! பாக்கல பாம்பு அவள. தொவச்சுப் போட்ட துணி மாதிரி அசையாமக் கெடக்கே! இது என்னா கூத்துடியாத்தான்னு பம்மி நிக்கிறா சூராம் புதர் ஓரமா. புதருக்குப் பின்னால நின்னு தன்ன ஒளிச்சுக் கிட்டுக் கண்ண மட்டும் மேயவிடுறா.

அசையல பாம்பு அப்படியே கெடக்கு. செத்துக்கித்துப் போச்சா. தலைக்கு மேல ஒரு பெராந்து அங்கனக்குள்ளயே வட்டம் போட்டு அலையுது. செத்த பாம்பாயிருந்தா பெராந்து வந்து செந்தூக்காத் தூக்கிட்டுப் போயிருக்குமே! சாகல. இம்புட்டு நீளம் சாரப் பாம்புக்குத் தவிர வேற பாம்புக்கு இல்லையே! சாரைதானோ? சாரைக்கு அடிவகுறு மஞ்சப் பூத்து இருக்குமே! இது சாரையுமில்ல. புதருக்கு வெளிய இவ லேசாத் தலையத் தூக்கவும் பாம்பும் தலையத் தூக்குச்சு. சிமிட்டாமப் பாக்குறா. விரியம் பாம்போ? இல்லையே! விரியனுக்கும் சாரைக்கும் மொனையாத்தான இருக்கும் மூக்கு. இது சப்பட்டையா இருக்கே. இன்னுங் கொஞ்சம் உத்துப் பாத்தா. ரெண்டு சக்கரம் தெரியுது தலையில. நல்ல பாம்பேதான்!

நல்ல பாம்பேதான்!

என்னா பண்ணுது பாம்பு? ஏன் இப்பிடிக் கடப்பாரை மாதிரி நேராப் படுத்திருக்கு? எரையுண்ட மயக்கத்துல எளப்பாறிக் கெடக்கோ? இல்லையே! வயிறு எங்கயும் புடைக்கலையே! ஒரே சீரா இருக்கே. என்னதான் பண்ணுதுன்னு இருந்து பாத்திருவோம். என்னதான் தகிரியத்த ஏத்தி நெஞ்ச நிமித்திக்கிட்டாலும் நல்ல பாம்பு வெறியெடுத்துத் தன்ன வெரட்னா என்ன ஆகும்ன்னு நெனைக்கிறப்ப கர்ப்பப்பைக்குள்ள கலக்கமாகுது கருவாச்சிக்கு. "நல்ல பாம்பு வெரட்னா மட்டும் நேரா ஓடப்படாதுடி . வளஞ்சு வளஞ்சு ஓடுனாத்தான் தப்பிக்கலாம்." ஆத்தா பெரியமூக்கி எப்பவோ சொன்னது இப்ப நெஞ்சுக்குழியில வந்து நிக்கிது.

அவ பாத்துக்கிட்டேயிருக்க, தலைய லேசாத் தூக்கித் தரையில மூக்கத் தேய்க்குது பாம்பு. செத்தவடத்துல சிட் சிட்ன்னு சின்னதா ரெண்டு சத்தங் கேட்டுச்சு. தலப்பக்கம் வாய்ப் பூட்டு வெடிச்சு, பஞ்சுமாதிரி ஒரு பொருளு பட்டீர்ன்னு வெளிய வந்துச்சு. ஒடம்புலயிருந்து வெடிச்சு வந்த பஞ்சில தலையும் கண்ணும் படமும் அச்சடிச்ச மாதிரி அப்படியே இருக்கு.

யாத்தே! பாம்பு சட்டை உரிக்குது சாமி கருவாச்சி நெஞ்ச இறுக்கிப்புடிச்சு நின்னுபோனா. இருதயம் கூட்டுக்குள்ள அடிக்கிற சத்தமும் மூக்கு வழி காத்து போக்குவரத்து நடத்துற சத்தமும் மட்டும்தான் அவ காதுக்குக் கேக்குது இப்ப.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 5:29 am

பாம்பு சட்டை உரிக்கிறதப் பாக்கணும் பாம்பு சட்டை உரிக்கிறதப் பாக்கணும்ன்னு சின்ன வயசுலருந்து நான் சேத்துவச்ச ஆசை, எம்பிள்ளைய நான் தேடிப்போற இந்த அத்துவானக் காட்லதான் பலிக்கணுமா?

தலச் சட்ட கழத்துறவரைக்கும் தவிச்சுப்போய்க் கெடந்த பாம்பு அப்பறம் சுறுசுறுப்பாயிருச்சு. தலைய ஒரு ஆட்டு ஆட்டித் தலச்சட்டையக் கழுத்துக்குக் கீழ தள்ளிட்டு, தன் சக்தியெல்லாம் ஒண்ணு கூட்டித் தலைய முன்னுக்க நீட்டி முன்னேறுது. படுத்த எடத்துல படுத்த மேனிக்குப் பாறையோட சட்டை ஒட்டிக்கெடக்க, சட்டைய விட்டு வெளி யேறுது பாம்பு சரசரன்னு. பாம்பு மேல் பக்கம் அகலமாவும் கீழ்ப் பக்கம் குறுக லாகவும் இருப்பத னால கீழ்ச் சட்ட உரிக்கிறது லேசா இருக்கு பாம்புக்கு. காணக் கெடைக் காத இந்தக் கண் காட்சியக் கண்ட கருவாச்சி திகில் புடிச்சுத் திக்குமுக்காடிப் போனா. ஆறடி நீளச் சட்டையக் கீழ போட்டுட்டு அதுலயிருந்து பாம்பு விறுவிறுன்னு வெளியேறிப் போறதக் கண்ணால பாக்குறா. பயமாத்தான் கெடக்கு ஆனா பயத்துமேல சந்தோசம் நுரை கட்டியிருக்கு. குகைய இருந்த எடத்துல விட்டுட்டு, ரயிலு மட்டும் குகைய விட்டு வெளிய வார மாதிரி சட்டையக் கழட்டி அங்கேயே போட்டுட்டு முன்னுக்கப் போயிருச்சு பாம்பு.

தங்கச் சங்கிலி நெளிஞ்சு நெளிஞ்சு தரையில போகுதா இல்ல மின்னலு பாறையில விழுந்து மினுக்கி மறையுதா? சட்டை கழத்துன பாம்பு மேனி தகதகப்பு இருக்கே. காணக் கண்ணாயிரம் காணாது. கொஞ்ச தூரம் ஓடுன பாம்பு ஒரு ஓரமா ஒதுங்கித் தன்னச் சுருட்டிக் சும்மாடு ஆக்கிக்கிட்டுத் தம்பாயமில் லாமக் கெடந்துச்சு. சட்ட கழத்துன அலுப்போ? இல்ல இது எனக்கு இன்னொரு பெறவிங்கிற நெனப்போ? கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா அது இருந்த எடத்துல இல்ல கண்காணாமப் போயிருச்சு.

இப்பப் பயம் தெளிஞ்சு போச்சு. பொதரவிட்டுப் பொத்துனாப்புல வெளிய வந்தா கருவாச்சி. கல்லுக்குழி தாண்டிப் போயிப் பாம்புச் சட்டையத் தொட்டுப் பாத்தா சுட்டுச்சு. இப்பத்தான் கழட்டிப் போட்டுச்சு இது வெயில் தாக்குன சூடா இருக்காது. சட்டைக்கு உள்ளயிருந்த பாம்போட ஒடம்புச் சூடுதான் போலருக்கு. நுரை மாதிரி இருந்த சட்டைக்குள்ள வெரலவிட்டுத் தொட்டுப் பாத்தா என்னமோ ஒட்டுச்சு. உரிக்கிற சட்டை உரிஞ்சு வரத் தோதா பாம்பு ஒடம்பு லேருந்து ஊறிவார எண்ணெயோ பசையோ என்னமோ?

பாறையத் தொட்டுக் கும்புட்டுக் கிட்டா தண்ணி குடிச்சா ஆவாரங் கொழையக் கக்கத்துல வச்சுக்கிட்டா பாதையில கூடிட்டா. எங்கேயோ ஒரு மரங்கொத்தி பட்டுப் போன ஒரு மரத்த லொட்டு லொட்டுன்னு தட்டிக்கிட்டே இருந்துச்சு. காடுபூரா ஒரு நூறு பேரு கருங்கல்லுச் சல்லிகள வச்சு ஒரசிக்கிட்டேயிருக்கிற மாதிரி "கரிச்...கரிச்...கரிச்"ன்னு கத்திக்கிட்டே திரியுதுக கரிச்சான் குருவிக. அந்தா தெரியுது பாரு... உப்பம் பொட்டல். அதைத் தாண்டிப்போனா ஓணான் கரடு. ஓணான் கரடு எறங்க ஓடைவரும். ஓடை மேடேற அம்புலிப்புத்தூர் வந்திரும். அந்த ஊர்ப் பேரச் சொன்னாலே நையாண்டி பண்ணி நசுக்கி நசுக்கிச் சிரிக்குது ஒலகம். ஊரு என்ன பண்ணும் ஊரு? மனுசன் பண்ண கூத்துக்கு!

அந்தக் காலத்துல நெலம் வச்சிருந்தவுக ராசாக்கமாரும் சமீந்தாரும் மேல்சாதி ஆளுகளும்தான். கோயில்ல ஆட வார பொம்பளைக்குச் சொந்த நெலத்துல கொஞ்ச நெலம் குடுத்து, மண்ண நீ வச்சுக்க, ஒன்ன நான் வச்சுக்கிறேன்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டாக. கோயில் கதவு மூடுற நேரத்துல ஒங் கதவ எனக்குத் தொறக்கணும்னு உத்தரவும் போட்டுவிட்டாக. இது என்னடா மானங்கெட்ட பொழப்பாயிருக்குன்னு ஆட்டக்காரி களெல்லாம் ஒண்ணு கூடி "அய்யா எங்களுக்கு மண்ணும் வேணாம், பொன்னும் வேணாம். ஒரு மஞ்சக் கயிறு போதும்"ன்னு கேட்ருக்காக. கழுத்துல தாலி ஏறக் கால்ல சலங்கைய அவுத்துடறோம்ன்னும் சொல்லியிருக்காக.

"இதென்னடா இது... கொழுந்து வெத்தல ஒண்ணு குடுன்னா கொடிக்காலையே எழுதிக் கேக்குறாளுக" பதறிப்போனாக ராசாக்கமாரும் சமீந்தாரும். படிச்ச புத்தி வேல செய்யுமா இல்லையா? செஞ்சிருச்சு.

"அம்மணிகளா ஒங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம். ஆண்டவனக் கல்யாணம் பண்ணிக்குங்க நீங்க ஆண்டு அனுபவிச்சுக்கிர்றோம் நாங்க"ன்னு கடவுளுக்கு அவகளக் கல்யாணம் பண்ணிவச்சுப் பொட்டுக்கட்டி விட்டுட்டாக.

இதுதான் பாவம் எளிய பொம்பளைகள வலிய சாதி ஆளுக ஏச்சு எச்சி எல ஆக்குன கதை. காலம் மாறி, கருத்து மாறி, ஆட்சி மாறி, அரசாங்கம் மாறி, கோயிலும் வருமானமும் கொலஞ்சுபோகவும் அந்தப் பொம்பளைக தலைமொறை பொழப்பத்துப் போச்சு. வக்கத்த பயலுகளுக்கெல்லாம் வடிகாலாகிப் போச்சு. பத்துப் பதினஞ்சு தலமொறையாப் பலிகடாவாகிப் போனாக அந்தப்பாவி மக்க. அதுல எச்சமும் சொச்சமும்தான் அன்னைக் கிருந்தது அம்புலிப்புத்தூர்ல.

பொழுது மேற்க சாய, அம்புலிப்புத்தூர்ல நொழஞ்சிட்டா கருவாச்சி. அந்த ஊர்ல இருக்கிறதே ஏழெட்டுத் தெருவுதான். அதுல மூணு தெருவுதான் அந்தத் தெருங்கிறாக. "இதுல எந்தத் தெரு அந்தத் தெருன்னு பாப்பேன்? எந்த வீட்ல எம் மகன்னு கேப்பேன்?"

அரசமரத்துப் பிள்ளையார் கோயில்ல முந்தா னைய ஒதறி விரிச்சுக் கல் திட்டுல உக்காந் துட்டா.

வாடிவாசல் வழியாத்தான காள வரணும். எங்கிட்டி ருந்தாலும் எம்பிள்ள இங்கிட்டுத்தான வந்தாகணும்.

கண்ண முழிச்சு முழிச்சுப் பாத்து ஒக்காந்திருக்கா. புத்துப்பாம்பு மாதிரி அவ அங்கிட்டும் இங்கிட்டும் தலையத் தூக்கிப் பாத்ததுல மூணாம்தெரு மொனையில காட்டாமணக்கு வேலியில காயுது மகனுக்கு அவ வாங்கிக் கொடுத்த கட்டம்போட்ட சட்ட.

நேத்து இந்நேரம் அம்புலிப்புத்தூருக்குள்ள அழகுசிங்கம் நுழைய, நனைஞ்ச கருப் பட்டியில ஈய்க்கிற மாதிரி நாலஞ்சு தரகனுங்க மொய்ச்சிட்டாங்க மொய்ச்சு. வெத்தல பாக்கு வைக்கல மேளம் அடிக்கல. மத்தபடி புதுமாப்பிள்ளைய மச்சினங்க வரவேற்புப் பண்ற மாதிரி வா வா ன்னு பிச்சு எடுத்துட்டாங்க பிச்சு.

அம்புட்டுப் போட்டியிலயும் அழகுசிங்கத்த அணச்சு ஓரங்கட்டிட்டான் ஒரு ஒத்தக்காலன். ஒரு கால் வெளங்கல பாவம் அவனுக்கு. ஆனா, ஒத்தக் கால அழுத்திக்கிட்டு ஒத்தக் கால இழுத்துக்கிட்டு ரெண்டாளு நடை நடந்தான்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Dec 27, 2013 6:11 am

"கோழிதான வேணும். வாங்கித் தாரேன் வா. குஞ்சுக் கோழி இருக்கா பிஞ்சுக் கோழி ருக்கா வெடக் கோழி இருக்கா முழுக் கோழி இருக்கான்னு விசாரிச்சுக்கிட்டேயிருந்தாக் கதையாகுமா? கோழிப் பண்ணைக்கே ஒன்னக் கூட்டிட்டுப் போயிட்டா நெனச்ச கோழியப் பிடிச்சுக்கிடலாமா இல்லையா?"

மூணாந் தெரு மொன வீட்ல விட்டுட்டு இவங்கிட்ட எட்டணா, கதவு தொறந்த கெழவிகிட்ட எட்டணா வாங்கிக்கிட்டு நாலு கால் பாய்ச்சல்ல ஓடிப் போனான் ஒத்தக்காலன். வீட்டுக்குள்ள போன பய முழிக்கிறான். நான் வேட்டைக்கு வந்த நாயா? வெட்டுப்பட வந்த கெடாயா? பக்குப்பக்குன்னு அடிக்குது கண்ணு திக்குத்திக் குன்னு அடிக்குது நெஞ்சு. வந்த வாலிபப் பயல உத்துப் பாத்தா கெழவி. மொன வளைஞ்சாலும் நிமிந்து நிக்கிற அருவா மாதிரி கூனு விழுந்தாலும் குண்டாங் கல்லு மாதிரி கிண்ணுன்னு இருக்கா கெழவி. ஆயுசுல எத்தன ஆம்பளைகளப் பாத்த கெழவி. ஒரு அட்டப்பார்வ பாத்தாலே போதும் வந்தவன் வயசு என்ன, வகிசி என்ன, வெளிப் பையில காசு இம்புட்டி ருந்தா உள் பையில எம்புட்டி ருக்கும், அவன் ஆஸ்திபாஸ்தி என்ன? அகல நீளம் என்னன்னு குத்துமதிப்பாக் கணக்குப் போட்டாள்னா பத்துக்கு ஏழு பழுதாகாது.

பாத்தவுடனே அவ கணக்குப் போட்டுட்டா, கன்னுக்குட்டி புதுசு. இந்தப் பால் குடிக்க இப்பத்தான் வந்திருக்கு. உக்காரு ராசான்னா உள் வீட்டுத் திண்ணையக் காமிச்சு.

உக்காரல அவன், மேய விட்டான் கண்ண வீட்டுக்குள்ள. போதப்புல் போட்ட கூரை வீடு. சாணி மொழுகிக் குத்துமதிப் பாக் கோலம் போட்ட தரை. அவன் நிக்கிற எடம் நடுவீடு. ஆக்குப்பாரை இல்லாம மூணு அறையாத் தடுத்திருக்கு உள்வீடு. அதுல ரெண்டுக்குக் கதவா சாக்குக தொங்குது. ஒரு அறைக்குக் கதவு டண்டணக்கம் பலக. ஆக்குப்பாரைய ஒட்டியிருக்கிற கதவத் தொறந்தாக் கொல்லப்புறம். அது தொறந்தவெளி.

அதுக்குக் காட்டாமணக்கு உயிர்வேலிதான் இடுப்பளவு மறைப்பு. அதுல தண்ணி நெப்பிக் குளிக்க ஒரு அண்டா, குளிகல்லு மேல ஒரு பித்தளச் செம்பு. தெறிச்ச வெத்தல எச்சியா... நசுக்குன மூட்டைப் பூச்சியான்னு கண்டுபுடிக்க முடியாதபடிக்கு சுண்ணாம்புச் செவத்துல தாறுமாறாச் செவப்புக் கோடு. இங்கயும் நாங்க காவல் இருப்பமில்ல... சிரிக்குதுக சாமிக & சுவத்துல படத்துல. சாக்குக் கதவுக்குப் பின்னாலயிருந்து வளவி, கொலுசு, சிரிப்பு, செல்லச்சேட்டைன்னு விதவித மான சத்தங்க வந்து கலவரம் பண்ணுதுக காதுக்குள்ள.\

"அடியே பொண்டுகளா! ராசா வீட்டுக் கன்னுக் குட்டி ஒண்ணு வந்திருக்குடி. புடிக்குச் சிக்காத புதுக் கன்னுக்குட்டி. மேய்க்கிற யோகம் யாருக்குன்னு பாப்பம். போடி மூத்தவளே! போயி பாயெடுத்துப் போடு போ."

கோரம் பாயோட வந்தா மூத்தவ. கிளிப்பச்சை லவுக்கயும் கோவம்பழச் சீலையுமா கோடாலிக் கொண்ட போட்டு அதுல வலையடிச்சுப் பிரிமணை சுத்தின மரிக்கொழுந்துமா, கழுத்துல பொட்டுமணியும் கால்ல தண்டையுமா. ஒடம்பு எளசா, மூஞ்சி முத்தலுமா.

"உக்காருங்க"ன்னு சொல்லிட்டு விரிச்ச கோரம் பாய ஓரம் சரிசெய்ற மாதிரி ஒரசி நின்னுக்கிட்டுக் குதிகாலத் தரையில ஊனித் தன் கட்ட வெரலத் தூக்கி அவன் கட்ட வெரல மெதுவா மிதிச்சு எதமா நசுக்கி ஒரு இன்ப இம்சை பண்ணிட்டு ஓடியே போனா. இப்ப ஒத்தக்காலன் சொன்னது ஒலிக்குது காதுல. இந்த முத்தல்தான் முழுக் கோழி போலிருக்கு. முதல்ல தெரியல இப்ப வலிக்குது நசுக்குன கட்ட வெரலு.

"தாகமா வந்திருக்கும் தம்பி. அடியே அடுத்தவளே. நீர்மோரு குடுடி நீ போயி."

நீர்மோர் கொண்டு வந்தவ நெறம் கம்மி. ஆனா, பாத்ததும் நெஞ்சுல பச்ச குத்துற லட்சணமான மூஞ்சி. என்னியப் பிச்சித் தின்னுக்கன்னு சொல்லுது கன்னம். அதுக்குள்ள ஒன்னியத் தின்னுபுடுவேன்னு மெரட்டுது கண்ணு. வந்த ரெண்டு பேர்லயும் இவதான் பெருந்தனக்காரி. முழுப் பூசணிக்காயச் சோத்துலயும் மறைக்க முடியாது முந்தானையிலயும் மறைக்க முடியாது இல்லையா...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Dec 27, 2013 6:12 am


உக்காந்திருந்தவன் மூஞ்சிக்கு நேரா நெஞ்சக் கொண்டாந்து நிப்பாட்டி, "குடிங்க"ன்னா மோர. பித்துப்பிடிச்சுப் பேதலிச்சுப் போனவன் மோர அண்ணாக்காக் குடிச்சுட்டுச் சொம்ப அவகிட்ட நீட்ட, ஒழுகின வாய் தொடச்சுவிடுற சாக்குல முழுசா எடுத்துட்டா முந்தானைய. அவன் இறுக்க மூடிக்கிட்டான் கண்ண. மல்லியப்பூ வாசன நடந்து கடந்து போறவரைக்கும் தொறக்கல கண்ண. இதுதான் வெடக் கோழியோ? இருந்தாலும் இருக்கும்.

அடுத்து வருது பிஞ்சுக் கோழி அரிசிப்பொரி, வறுத்தகடல, அச்சுவெல்லம் எடுத்துக்கிட்டு. இது முக்காக் கை லவுக்க போட்டி ருக்கு. லவுக்க முடியிற எடத்துலருந்து வளவிய அள்ளி அப்பியிருக்கு. என்னைப் பார், என் கொலுசைப் பார்னு கொஞ்சம் ஏத்தியும் கட்டியிருக்கு சீலய. கழுத்துல பவளம் பாசி, காதுல சிமிக்கி, ஒரு முத்தம் குடுத்தாக் கரைஞ்சாலும் கரைஞ்சிருவேன்னு சொல்ற பிஞ்சு உதடு. என் எதிர்காலம் இன்னும் நல்லாயிருக்கும்னு சொல்லாமச் சொல்ற சோடி மாதுளங்கா. அப்பத்தான் குளிச்சு முடிச்சுத் தொவைச்சுத் தோள்ல காயப்போட்ட கனத்த முடி. ஆளு குட்டை ஆனாலும் அழகு. குள்ள மயிலு.

அரிசிப்பொரித் தட்டப் பாயில வச்சவ படக்குன்னு அஞ்சு வெரலயும் அவன் தலமுடிக்குள்ள செலுத்திக் கோதிவிட்டுக் கோலம் போட்டு நகத்துலயே கீறிக் கிண்டிக் கெழங்கெடுத்து அவன் கண்ணு சொக்கு துன்னு தெரிஞ்சு ஒரு சுத்து சுத்திவிட்டுச் சொல்லாமப் போயிட்டா.

பித்தம் தெளிய அவனுக்குச் செத்தவடமாச்சு. ஆசையில பயலுக்கு முதுகுத்தண்டுல மினுக்கிட்டான் பூச்சிகளாப் பறக்குது. ஆனா பயத்துல வயித்துல மின்னல் வெட்டி ஒடைஞ்சு ஒடைஞ்சு உள்ள விழுகுது. இனி குஞ்சுக் கோழி தான் பாக்கி. அதையும் பாத்துருவோம்னு பாத்தா, கெழட்டுக் கோழி வந்து நிக்குது எதுக்க.

"பாத்துக்கிட்டியா ராசா. மூணு கனிக(ள்) மாதிரி வச்சிருக்கேன் மூணு பொட்டை கள.

அத்தினி... சங்கிணி... சித்தினி... எவ வேணுமோ எடுத்துக்க."

பய நிதானம் தப்பிப் போனான். பூன பிறாண்டுது அவனுக்குப் புத்திக்குள்ள. ஆச நண்டு தோண்டுது அடிமனச. ஆனா, கண்ண மூடுனா அடிக்கடி வந்து போகுது ஆத்தா மூஞ்சி. ஒடம்பு இங்க இருக்கு மனசு அங்க கெடக்கு. கெழவிக்கு ஒண்ணும் புடிபடல. வில்லும் அம்புமா வந்த பய ஏன் தொவண்டு தொங்கிப்போனான். பயலுக்குத் துட்டுப் பத்தலையா தகிரியம் பத்தலையா?

கிட்ட வந்தா. ரெண்டு கையிலயும் அவன் ரெண்டு கன்னத்தையும் தொட்டு வழிச்சு, தன் நெத்திப் பொட்டுல வெரல்கள மடக்கி நெட்டி முறிச்சா. சடசடசடன்னு வெடிச்சுச் சத்தம்
போடுது வெரலு.

"யாத்தே! கண்ணு பட்ருக்கே என் கன்னுக் குட்டிக்கு."

அவன் நெளிய நெளியத் தடவிக் குடுத்தவ அவன் பைக்குள்ள கண்ணவிட்டுக் கணக்குப் பாத்துட்டா. கட்டம் போட்ட அவன் சட்டைப் பையில ஒண்ணுக்கு மேல ஒண்ணு ஏறி மூணு பச்ச நோட்டுக எட்டி எட்டிப் பாக்குதுக. பயல ராத்தங்கல் தங்கவச்சே அனுப்பலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Dec 27, 2013 6:12 am


முடிவெடுத்துட்டா கெழவி.

சீ! வராத எடத்துக்கு வந்துட்டமே. ஒண்ணும் சொல்லாம ஓடிப்போகலாமா?ன்னு அவன் நெனைக்க...

"ஏய்! தவிச்சுவந்த பிள்ளைக்குத் தலைக்குத் தண்ணி ஊத்துங்கடி..." சொல்லி முடிக்கு முன்ன மூத்தவ கடகடகடன்னு கழட்டிப்புட்டா அவன் சட்டைய. அள்ளையில குத்தி அவன அல்லாடவிட்டு உள்ள இழுத்த வயிறு வெளிய வாரதுக்குள்ள அவன் வேட்டிய உருவிப்புட்டா எளையவ. என்னா நடக்குது அங்கன்னு அவன் புத்திக்கு எட்டுறதுக்குள்ள எண்ணெ காய வச்சு எடுத்துட்டு வந்துட்டா அடுத்தவ.

எளஞ்சூட்டு எண்ணெய உள்ளங்கையில ஊத்தி அவன் உச்சந்தலையில வச்சு, சப்புச்சப்புச்சப்புன்னு நாலு அடி அடிச்சுக் கரகரகரன்னு கைய வச்சுத் தேச்சு அவனப் பித்து ஏத்துறா பெருந்தனக்காரி.

வீட்டத் தூக்கி வெளிய வைக்குதய்யா எண்ணெ வாசன. சித்தகத்திப் பூவும் பழுத்த பட்டமொளகாயும் சாதிக்காயும் போட்டுச் சிவீர்னு செவக்கக் காய்ச்சி எடுத்த செக்கெண்ணெயாச்சே.

எண்ணெ தேய்க்கிறபோதே வெந்நி கொதிக்குது அடுப்புல. தலயில வச்ச எண்ணெ கண்ல ஒழுகி விழுந்தப்பக் கண்ண மூடுனவன்தான் தெறக்கவேயில்ல. மூஞ்சில தேச்சு, நெஞ்சில தேச்சு, கை கால் உருவிவிட்டு, கோவணத்துல எண்ணெபட்ருச்சேன்னு சின்னவளும் மூத்தவளும் மாறிமாறிச் செல்லச்சேட்ட பண்ணி, கண்ணில்லாத கபோதியக் கைத்தாங்கலாக் கூட்டிட்டுப் போற மாதிரி கொண்டு போறாக குளிப் பாட்ட.

புண்ணாக்குத் திங்க வந்தவன் செக்குல தலயக் குடுத்த கதையாகிப்போச்சு அவன் கத. வளவிக்காரி ஆச தீரக் குளிப்பாட்டி விடுறா அழகு சிங்கத்த. தலைக்கொரு சொம்பு தண்ணி ஊத்தி அள்ளி எடுத்தா அரப்புப் பொடிய. சும்மா காத்துல கமகம் பாடுது அரப்புப் பொடி. நயம்பொடி அரப்புப் பொடி. உசிலைஎலை மஞ்சள் பூலாங்கெழங்கு வெந்தயம் & மருதாணி மருக்கொழுந்து எல்லாம் ஒண்ணாப்போட்டு எளங் குமரிகளாக் கூடி இடிச்சது.

ஓங் குடுமி எங் கையிலன்னு அவ இழுத்துப் புடிச்சு அழுத்தித் தேய்க்கத் தேய்க்க அங்க தேயி இங்க தேயின்னு அவளுக்கே உத்தரவு போட்டு உசுப்பிவிடுது அவ வளவி. தலைக்குத் தண்ணி ஊத்த அவ மொதச் சொம்ப மோந்தாளோ இல்லையோ "யாத்தே!

தீ"யின்னு அவ ஆத்தாகாரி ஆக்குப்பாரையில சத்தம்போட, என்னமோ ஏதோன்னு அங்க ஓடிப் போனாளுக எல்லாரும். ஒரு கரித்துணி தீப்புடிச்சதுக்கே கத்திக் குமிச்சுப்புட்டா ஆத்தாகாரி.

இங்க பாவம்... ஒத்தப் பிள்ளையார் மாதிரி உக்காந் திருக்கவனுக்குக் கண்ணுல அரப்புப் பொடி விழுந்து காந்துது. கண்ணத் தெறக்காம அவன் தடவித்தடவிச் சொம்பத் தேடுறான். இப்ப ஒரு கொலுசுச் சத்தம் வந்து அவன் முன்னுக்க நின்னு குளிப்பாட்டுதய்யா அவன.

அவன் உச்சந்தலையில தண்ணிவிட்டு அஞ்சு வெரல் நொழஞ்சு ஆஞ்சு அலசிவிட கண்ணு தெறக்காம இருக்கிற பயலுக்குக் கபாலத்துக்குள்ள பூப்பூக்குது. கண்ணத் தெறந்து பாக்கிறான். பாவாட தாவணி யோட தலைக்குத் தண்ணி ஊத்திக்கிட்டிருக்கிறா ஒரு தங்கச் செல. யாத்தே! இது கனாவா? செடி ஒயரத்துக்கு ஒரு செம்பருத்திப் பூவா? குத்தவச்சதும் குடிசு பிரிக்கு முன்ன ஓடிவந்த கொமரிப் புள்ளயா? முழிச்ச கண்ணு மூடாமப் பாக்கிறான்.

நனைஞ்சிரும்னு சுருட்டி நடுத் தொடையில வச்சிருக் கியே... அந்தப் பாவாடையாகக் கூடாதா நானு? தண்ணியில நனஞ்சு உன் கொலுசுமணிக் குள்ள மாட்டி நீட்டிக்கிட்டிருக்கே ஒரு குறுமுடி... அது செஞ்ச புண்ணியம் நான் பண்ணலையே பாவிமகளே!

தலைக்கு அவ தண்ணி ஊத்த ஊத்த முக்காலடி தூரத்துல முட்ட முட்ட வந்து முட்டாமப் போற மொசக் குட்டிக, தண்ணி ஊத்திக் குளிக்கிறவன் தலையில தணல வாரி எறியுதுக.

"ஓ! இவதான் இந்தக் கோழிப்பண்ணையில குஞ்சுக் கோழியோ?"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Dec 27, 2013 6:12 am


"ஏண்டி சின்னவளே! கொல்லப்புறத்துல என்ன வேல? கொமட்டுல குத்து அவள. ஓடிப் போடி உள்ள."

இவள ஏன் காமிக்கல? பிஞ்சுக் கோழிய இன்னம் சந்தையில எறக்கல. வீட்டுக்குள்ள போன கொலுசு தேஞ்சு ஓஞ்சுபோன எடத்தில இத்து விழுந்துபோச்சு இவன் உசுரு.

அன்னைக்கு ராத்திரி அக்கா தங்கச்சிக மூணு பேரும் மாத்தி மாத்தி உள்ள போயி வந்தாக ஒண்ணும் வேலைக்காகல.

என்னா வெவரம்னு விடிய விடியக் கெழவி விசாரிச்சும் பாத்தா. ரெண்டு தொடைகளையும் இறுக்கிப் பூட்டிக்கிட்டுப் பய படுத்துக்கிட்டானாம் முத்தம் குடுக்கப்போனா மூஞ்சியத் திருப்பிக் கவுந்துக்கிட்டானாம்.

"ஏண்டி! நம்ம சுத்தபத்தம் புடிக்கலையா சொறிப்பயலுக்கு. எங்க பாக்குறது சுத்தம்? எர புடிக்கிற வேட்டை நாய் வாயி பழங் கொத்துற பறவ வாயி பால் குடிக்கிற கன்னுக்குட்டி வாயி முத்தங் குடுக்குற பொம்பள வாயி இதுலயெல்லாம் சுத்தம் பாக்கப்பிடாதுன்னு சொல்லுவாகளே... எவ எடுத்துச் சொல்றது அந்த எடுபட்ட பயலுக்கு?"

ராவெல்லாம் கண்ணுறங்காத பயலுக்குக் கண்ணுக்கு முன்னுக்க வந்துபோறது ரெண்டே மூஞ்சிதான். அந்தக் குஞ்சுக் கோழி மூஞ்சி வந்து வந்து போகுது. ஆத்தா மூஞ்சி அப்பப்ப வருது லேசுல போக மாட்டேங்குது.

விடிய்ய வாசத் தெளிக்க ஒறங்கிப்போனவன் பகலெல்லாம் ஒறங்கிக் கண்ணு முழிக்கையில பொழுது மசங்கிப்போச்சு. போகணும் ஊருக்குன்னு புத்திக்குள்ள கவுளி கத்துது. கெழவி கணக்குப் பாத்தா. தேச்ச எண்ணெய்க்கு தின்ன சோத்துக்கு தொவைச்ச துணிக்கு இருந்த இருப்புக்கு அஞ்சரை எடுத்துக்கிட்டு ஒம்போதரையக் கையில குடுத்து போயிட்டு வா ராசா போன்னுட்டா கெழவி.

அவன் சுத்தியும் முத்தியும் பாத்துட்டு ஒரே தவ்வாத் தவ்வி உள்ள போயி சின்னவ கையில அஞ்சு ரூவாய வச்சு அமுக்கிட்டு, தும்பு திரிச்ச கன்னுக்குட்டி மாதிரி மடார்னு கதவத் தெறந்து சடார்னு தெருவுக்கு வந்துட்டான்.

வெளிய வந்து பாத்தா முக்காட்டுக்குள்ள மூஞ்சி பொத்தி, தெருத் திண்ணையில குத்தவச்சு, காவக் காக்கிறவ மாதிரி உக்காந்திருக்காய்யா கருவாச்சி.

பேயடிச்சவன் மாதிரி பேச்சுமூச்சில்லாமப் போச்சு பயலுக்கு. பிள்ளையப் பாத்ததும் அழுகையா ஊத்துது அவளுக்கு. அவன் அழுகல. அழுகை வார வழியப் பாறாங்கல்லு வச்சு அடைச் சுப் புடுச்சு வெக்கம். முன்ன அவ நடக்க பின்ன அவன் நடக்க ஒரு வார்த்தையும் பேசிக்கிரல தாயும் மகனும்.

மாப்பிள வீடு பாக்க ஆளுகள வரச்சொல்லிட்டுப் பொம்பள வீடு தேடிப் போயிட்டானே புத்திகெட்ட பய. அம்புலிப்புத்தூர் ஓடை தாண்டி ஆலமரம் கடக்க ஆத்தா அழுதுக்கிட்டே கேட்டா:

"ஏண்டா தங்கம்! ஏதுடா ஒனக்கு இம்புட்டுத் துட்டு?"

அங்கிட்டுப் பாத்துக் கிட்டே சொன்னான் அழகுசிங்கம்

"நல்லத்தா குடுத்துச்சு."

"நல்லத்தான்னா..?"

"அதான்... திம்சு."

புழுதியிலே கெடந்த ஒரு முள்ளு சுருக்குன்னு கால்ல குத்த, அவன் சொன்ன சொல்லு நறுக்குன்னு நெஞ்சுல குத்த, ரெண்டு வலியில எந்த வலி பெருங்கொண்ட வலின்னு தெரியாம நின்ட எடத்துல நின்டுபோனா கருவாச்சி, ஒத்தக்கால மட்டும் ஒசக்கத் தூக்கி.

சில பேரப் பாத்தாலே தெரிஞ்சு போயிரும் நல்லவுகன்னு. அவுகளுக்கு மறைக்கத் தெரியாது இருதயக் கூடு என்னா நெனைக்கு துன்னு கண்ணாடி மாதிரி காட்டிக் குடுத்திரும் கண்ணு. சில பேரப் பாத்தவுடன தெரிஞ்சுபோயிரும் சீ! சீர் கெட்ட ஆளு கோளாறா இல்லாட்டிக் குடி கெட்டுப்போயிரும்னு. வெசமும் வெனயமும் அவுக கண்ணுலயே திட்டுத்திட்டாத் தெரியும். ஒதுங்கிப் போயிரலாம் ஒரு தொந்தரவு இல்ல. ஆனா, இருதயம் நெனைக்கிறது என்னான்னு கண்ணுல துப்புக் காமிக்காத ஆளுக இருக்காகளே அவுகதான் ஆபத்தான ஆளுக. அவுகள ஆழங் காண முடியாது. அழுக்குத் தண்ணி ஆழங் காமிக்குமா? காமிக்காதில்ல.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Dec 27, 2013 6:14 am

திம்சு... அப்படியாப்பட்ட ஆளு. இன்னது நெனைக்கிறாங்கிறதக் கண்ல காமிக்க மாட்டா. அப்படியே காமிச்சாலும் பொய்ய நெசமாக் காமிப்பா நெசத்தப் பொய்யாக் காமிப்பா. அவளத்தான் மத்தவுக கண்டு புடிக்க முடியாதே தவிர, அவ எல்லாரையும் கண்டுபுடிச்சு வச்சிருப்பா.

இன்னாருக்கு இன்னது புடிக்கும்ங் கிறதக் கண்டறியவே ஒரு பெரும் புத்தி வேணுமா இல்லையா? அழுத புள்ளைக்குப் பாலும் புள்ளத்தாச்சிக்குப் புளியங்காயும் புடிக்கும்னு எல்லாருக்கும் தெரியும். குடிகாரனுக்குக் காரக் கறி புடிக்கும் கூலிக்காரனுக்கு எச்சாக் காசு குடுத்தாப் புடிக்கும் கொமரிப் புள்ளைக்கு நொறுக்குத் தீனி புடிக்கும் சாகப்போற கெழவனுக்குச் சொந்த பந்தம் வந்து நெத்தி தொட்டாப் புடிக்குங்கற தெல்லாம் திம்சுக்குத்தான் தெரியும்.

அத்தனையும் தெரிஞ்சுக்கிட்டு அவுகளுக்குப் புடிச்சத மடிப்பிச்சை போட்டுவிட்டுட்டு, தன் போக்குல போயித் தன் காரியம் முடிக்கிறவ திம்சு. கெழட்டு மாமனுக்கு என்ன கொறைங்கிறதத் துருவித்துருவித் துப்பறிஞ்சுக்கிட்டா. தனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லயிருந்து தன்ன யாரும் மதிக்கிறதில்லங்கறதுதான் கெழவனுக்கு இருக்கிற பெருங்கொண்ட கவலை பெறவிக் கவலைன்னு அன்னைக்கே கண்டுக்கிட்டா அதுக்குத் தக்கன காய் நகத்திட்டா.

வெள்ளி, செவ்வாயில தலைக்கு முழுகி சாம்பிராணி காமிச்சு மடார்ன்னு போயி விழுந்தா கெழவன் கால்ல. "எந்திரி தாயி எந்திரி"ன்னு பதறிப்போச்சு பெருசு. ஆனாலும் வறண்ட கெணத்துல திடீர்ன்னு ஊத்தடிச்ச மாதிரி ஊத்துது கண்ணீரு. அப்பறம்... எப்படா வரும் வெள்ளி, செவ்வாய்ன்னு ஏங்கி வீங்கிப்போச்சு பெரும் மனசு.

ரெண்டு மூணு வருசத்துலயே கெழவனக் கிறுக்குப் புடிக்கவச்சுப் பிட்டா. குழைய வடிச்ச சோறு வெந்து மலந்த ஈரலு மாறாத வெத்தல மங்காத வெள்ளை தலமாட்ல வெந்நி எச்சி துப்ப ஏனம் கம்பளி மேல கண்டாங்கிச் சீல அவிச்ச மொச்ச இடிச்ச தொக்கு (வேணுங்கிற வெல்லம் போட்டு).

இப்படியெல்லாம் உச்சி குளிர உபசாரம் பண்றதுமில்லாம, பேச்சுத் தொணைக்கு அப்பப்ப சில பெருசுகளையும் கூட்டிவிட்ருவா.

சடையத் தேவருக்கு அந்தச் சுத்துவட்டாரத்துலேயே தான்தான் மெத்தப் படிச்ச மேதாவின்னு நெனப்பு. ஆடு குட்டி போட்டாலும் ஆள் செத்துப்போனாலும் அது அதுக்குன்னு ஒரு சொலவம் சொல்லி அலையிற ஆளு. தானும் வெவரங்கெட்ட சிறுக்கி இல்ல... வெவரமான பொம்பளதான்னு தன் அறிவு மூட்டைய ஒரு ஓரமா ஒரு நாள் அவுத்துவுட்டா திம்சு.

"ஊருக்கெல்லாம் சொலவம் சொல்றீகளே... நான் ஒரு சொலவம் சொல்றேன். அதுக்கு அர்த்தம் சொல்றீகளா பெரிய மாமா?"

"சொல்லு தாயி சொல்லு."

"ஊரான் பிள்ளைய ஊட்டி வளத்தா, தம் பிள்ள தானே வளரும்னு சொலவம் சொல்லுதே... என்னா அர்த்தம்?"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Thu Sep 18, 2014 6:30 am


வர மாட்டேன்னு சொன்ன மீசை மேல வம்படியாக் கை போட்டு மேல தூக்கிவிட்டுத் தொண்டையச் செருமிக்கிட்டே சொல்றாரு சடையத் தேவரு.

"குடுத்து வாழ்றவனுக்குத்தான் கொலம் தழைக்கும். அதான் தாயி அர்த்தம்."

இழுத்து அம்மியரைச்சுக் கிட்டிருந்தவ அத நிறுத்திட்டு, "இல்லே"ன்னா. "ஊரான் பிள்ளைன்னா நானு. ஒங்க வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவ. என்னிய நீங்க ஊட்டி வளத்து உருப்படியா வச்சிருந்தா ஒங்க பிள்ளைய நான் ஒழுங்கு மரியாதையா வச்சுக்குவேன். அதான் அதுக்கு அர்த்தம்."

ஒடம்புல ஒரு பாதி மட்டும் ஓடுற கொஞ்சநஞ்ச நாடியும் ஒரேயடியா ஒடுங்கிப்போச்சு சடையத் தேவருக்கு.

"யாத்தே! அந்த சரஸ்வதியே வாக்கப்பட்டு வந்து சாணியள்ளி சமையல் பண்ணிப் போடுறா சடையத்தேவன் குடும்பத்துக்கு" மெரண்டு போனாரு கெழவன்.

வெளஞ்சு வளஞ்ச கட்டைகளுக்கெல்லாம் அப்பப்ப ஒரு சந்தேகம் வந்திரும்: ஏஞ் சொத்தும் அதிகாரமும் ஏங்கிட்டயேதான் இன்னும் இருக்கா? இல்ல விழுந்த பல்லு மாதிரியே அதுவும் கழண்டுபோயிருச்சா.? அப்படியெல்லாம் சந்தேகப்படாதீக. நீங்க நீங்கதான்னு கண்ணாடி புடிச்சுக் காமிச்சுக்கிட்டேயிருக்கணும் அப்பப்ப அவுக மூஞ்சிய.

திம்சு அதைச் செஞ்சா கெழவனுக்கு ஒரு கதையும் சொன்னா கால அமுக்கி விட்டுக்கிட்டே.

"ஒரு காட்ல சிங்கமும் நரியும் சிநேகமா இருந்திச்சுக மாமா. நரி சொல்லுச்சு காட்டு ராசா! காட்டு ராசா! நீங்க வேட்டைக்குப் போனா ஒங்களப் பாத்து மாடும் மானும் யானையும் புலியும் ஓடி ஒளிஞ்சுபோகுதுக பல நாள் பட்டினியும் கெடக்கீக. எங்க எது மேயுதுன்னு நான் உள் காடு போயி வந்து ஒளவு சொல்றேன். நீங்க அரவ மில்லாமப் போயி அடிச்சுத் தின்னுங்க. மிச்சம் மீதி எனக்கு."

"நல்லதுடா நரிப்பயலே அப்படியே செய்"ன்னு சொல்லிருச்சு சிங்கம். நரி ஒளவு பாக்க, சிங்கம் அடிக்க, சிங்கம் காட்ல ஒரே எலும்பு மழைதான். நாள் ஆக ஆக நரிக்கு மப்பு ஏறுது. ஒரு நாள் நரி சொல்லுது "காட்டு ராசா! நித்தம் நீ என்னால தான் எலும்பு கடிக்கிற. நான் இல்லாம நடக்குமா காரியம்? அதனால இன்னைக்கிருந்து என்னிய நரிப்பயலேன்னு கூப்பிடாத. கால் சிங்கம்ன்னு கூப்பிடு." போனாப் போகுதுன்னு சிங்கமும் நரியக் கால் சிங்கம்ன்னு கூப்புட ஆரம்பிச்சிருச்சு.

இப்படியே காலம் போகப் போக கால் சிங்கம் அரைச் சிங்கமாகிப் போச்சு அரைச் சிங்கம் முக்காச் சிங்கமாகிப் போச்சு. சிங்கத்துக்கு வயசாகவும் நரி நாட்டாம பண்ணப் பாக்குது. ஒரு நாள் "இனிமே என்னிய முழுச் சிங்கம்ன்னு கூப்பிட்டாத்தான் நான் ஒளவு பாக்கப் போவேன்"னு ஒக்காந்திருச்சு நரி. சரி! அறிவுகெட்ட நரி ஆசைப்படுது... "இன்னிக்கிருந்து நீ முழுச் சிங்கந்தானப்பா"சொல்லிருச்சு சிங்கம்.

கொஞ்ச நாள்ல சிங்கம் சீக்கு விழுந்து போச்சு. நான்தான் முழுச் சிங்கமாச்சேன்னு நரி கெளம்பிருச்சு வேட்டைக்கு. கூட ஒரு நொண்டி நரியத் தொணைக்குச் சேத்துக் கிருச்சு. யானக் கூட்டம் மேயற எடத்துக்குப் போயி சிங்கம் மாதிரியே பதி போடுது நரி. வம்படியாத் தரையில வால அடிக்குது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Thu Sep 18, 2014 6:32 am


"சிங்கம் மாதிரியே எனக்கும் கண்ணு செவக்குதா பார்றா. "கோவப்பழமா செவந்திருக்குது ராசா" பொய் சொல்லுது நொண்டி நரி. இப்ப நரி பாயுது யான மேல. சிங்கம் பாஞ்சா யான முதுகுல ஏறி உக்காந்து தலையில அடிச்சுத் தரையில போட்டுரும். இது சிங்கம்ன்னு பேரு வச்ச நரிதானே... இது யானத் துதிக்கையில போயி அடிக்கப்போச்சு. கடைசியில அது கொம்புல மாட்டிக் கொடல் அந்து செத்துப்போச்சு.

பெரிய மாமா! கால் சிங்கம் அரைச் சிங்கம்ன்னு பேரு வச்சுக்கிட்டாலும் சிங்கம் மாதிரி நாட்டாம பண்ண முடியுமா நரி? ஒங்க மகன் நரிதான். சீக்காக் கெடந்தாலும் நீங்க சிங்கம்தான்."

காலப் புடிச்சுவிட்டது சொகமா? இல்ல அவ கத சொன்னது சொகமா? சடையத் தேவரு கெறங்கிக் கிறுகிறுத்துக் கெடந்தப்ப அடிச்சு எறக்குறா இன்னொரு ஆப்ப.

"பெரிய மாமா! ஒங்க மகன் குடிகாரராப் போயிட்டாரு. போற எடம் வார எடம் சரியில்ல. எத வித்து எதத் திம்பாருன்னு தெரியாது சொத்து எம் பேர்லயிருந்தா என்னைக்கும் அழியாது. எழுதிவையுங்க எம் பேர்ல சொத்த"ன்னு சொன்னா. பெரியகுளத்துக்கு வைத்தியத்துக்குப் போற மாதிரி குதிரை வண்டியி லேயே கூட்டிட்டுப் போயி பத்திரமும் தன் பேர்ல பதிவு பண்ணிப்புட்டா. பத்திரத்துலதான் தெரியுது அவ பேரு பேயம்மா.

அடுத்து... புருசனயும் போட்டுத் தள்ளிப்புட்டா.

சிங்கத்தையே கழுதையா மாத்துனவளுக்கு நரிய நாயா மாத்த எம்புட்டு நேரமாகும்? மாத்திப்புட்டா தன் சவுரிமுடிங்கிற சாட்டை யில சும்மா பம்பரமாச் சுத்திச் சுழட்டிவிட்டுட்டா கட்டையன.

சாராயங் குடிச்சுக் குடிச்சுச் சிறுகச் சிறுகச் செத்துப்போன நாக்குக்கு ஒறப்பா உப்புக் கண்டம் வறுத்துக் குடுத்தா. பானையில ஒளிச்சுவச்சிருந்த கஞ்சாவ எடுத்து இந்தான்னு நீட்டுனா. ஒறக்கம் வராமப் பெரண்டு பெரண்டு படுக்கிற குடிகாரப் பயலுக்குக் காதுக்குள்ள கோழி எறக விட்டு எளம் குடைசல் கொடஞ்சு கொடஞ்சு ஒறக்கத்த உண்டு பண்ணினா. அவன் ஊர் மேஞ்சு ஒலகம் சுத்தி நடுச்சாமத்துல வந்து கதவத் தட்னாலும் சுடுசோறு போட்டு விசிறிவிட்டா.

அது என்ன எழவோ தெரியல... அவன் எப்பவும் கோழி கூப்பிடத்தான் காலத் தூக்கிப் போடறது அதுக்கும் எனக்காச்சு ஒனக்காச்சுன்னு எப்பவும் ஈடுகுடுத்தா. பல சகதி பெரண்ட பன்னி மாதிரி ராத்திரிக்கு அவன் வீட்டுக்கு வந்தாலும் விடிய்ய கொக்கு மாதிரி வெளியேற நித்தம் ஒரு வெள்ள வேட்டி வெளுத்துவச்சா. இதுலயெல்லாம் சொகங்கண்ட கட்டையன அவ உக்கிபோட்டு உக்காரவச்சுப்பிட்டா. அப்பன்கிட்டயிருந்து மகனப் பிரிச்சிட்டா அவளுக்கு ஆடு புலி ஆட்டம் லேசு.

அப்பனுக்கொரு கத சொன்ன மாதிரி மகனுக்கும் ஒரு கத சொன்னா. இது வேற கத அப்பன் மகனப் பிரிக்கிற கத. ஒரு காதுல கோழி எறகு வச்சுக் கொடஞ்சுக்கிட்டே மறு காதுல ஆணியடிக்கிறா.

"ஒரு ஊர்ல ஒரு கெழவன். மக்கமாரு மூணு பேரு. கெழவி செத்ததும் மூணு பேருமே கஞ்சி ஊத்தல. தெரிஞ்சதப் பாருன்னு தெருவுல விட்டுட்டாக. கெழவன் கஞ்சி குடிக்கணுமே...


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Thu Sep 18, 2014 6:33 am


என்னடா வழின்னு யோசிச்சாரு உள்ளூர் நாட்டாம. ஒரு பெரிய காரீய உருண்ட வாங்கினாரு. முடிஞ்சு கெழவன் பையில போட்டாரு. இந்தாப்பா... இத வச்சுக்க எக்காரணம் கொண்டும் தெறந்து காட்டிராத தெறக்கவிட்றாத. நான் செத்தா மூணு பேருமாப் பங்கு போட்டுக்கங்கன்னு சொல்லிப்புடுன்னு சொல்லிக் குடுத்தாரு.

கெழவன் என்னமோ பெரும்பொருள் வச்சிருக்கான்னு மகன்களும் மருமகள்களும் தாங்குதாங்குன்னு தாங்குறாக. திண்ணையில கெழவன் உக்காந்தாலும் எந்திரின்னு எழுப்பித் திண்ணையும் தொடைச்சுவிடுறாக வேட்டியையும் கட்டிவிடுறாக. தீவாளி பொங்கலுக்குக்கூடக் கெழவனுக்குக் கறித்தண்ணி காமிக்காத பொம்பளைக வெள்ளி செவ்வாயிலகூட ஆடு கோழின்னு அடிச்சுப் போடு றாளுக. என்னாப்பா உம் பிள்ளை களுக்குப் பாசம் பொத்துக்கிட்டுப் பொங்குதுன்னு கேக்குது ஊரு. எல்லாம் ஒரு காரியத்துக்குத் தான்கிறான் கெழவன்.

ஒறங்கினாலும் ஒக்காந்தாலும் நடந்தாலும் பையை விடுறதில்ல கெழவன். ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போனாலும் தொங்குது பை தோள்லயே. என்னாதான் இருக்கு பையிலன்னு கேட்டா, அதுல ஒரு காரியமிருக்கப்பான்னு கண்ணச் சிமிட்டுறான் கெழவன்.

இப்படி ஏகபோகமா இருக்கையில தான் சாகப்போறது தெரிஞ்சுபோச்சு கெழவனுக்கு. மக்கமாரு மருமக்கமாரக் கூப்பிட்டு நான் யார் வீட்ல சாகுறனோ அவுகளுக்குத்தான் பெரிய பங்குன்னுட்டான் கெழவன். உடனே மூணு பேரும் என் வீட்ல சா... என் வீட்ல சா...ன்னு இழுக்கிறாக கையப் புடிச்சு. நாஞ் செத்தா முப்பதாம் நாளு காரியம் முடியாம அவுத்திராதீகன்னு சொல்லிட்டு, நாட்டாமையக் கூப்பிட்டுக் குடுத்திட்டாரு பைய.

ஒரு நாள் தெருவுல சுருண்டு விழுந்து மண்டை யப் போட்டுட்டான் கெழவன். இப்ப மூணு தேரு கட்டுறானுங்க மூணு பேரும். எந் தேர்லதான் அப்பன் போகணும்... எந் தேர்லதான் அப்பன் போகணும்... அண்ணந் தம்பிகளுக்குள்ள அடிதடியாகிப் போகுது. கடைசியா மூணு தேர்லயும் மாத்தி மாத்திப் பொணத்தக் கொண்டு போயிப் பொதச்சிட்டு வந்தாங்க. முப்பது நாள் காரியமும் முடிஞ்சது. அண்ணந்தம்பிக கூடி அவுத்தாக பைய. பாத்தா, உள்ள பெரிய காரீயம் இருக்கு. எல்லார் மூஞ்சியிலயும் இருளடிச்சுப் போச்சு. காரியமிருக்கப்பா காரியமிருக்கப்பான்னு எல்லாரையும் ஏய்க்காம ஏய்ச்சுட்டுப் போயிட்டானப்பா. அப்பத்தான்

அது நெசமாவே எழவு வீடாப் போச்சு."

கத சொல்றதையும் காது குடையறதையும் ஒரே நேரத்துல நிறுத்துனா திம்சு.

"இந்தக் கதைய ஏன் எனக்குச் சொல்றவ?"


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 12 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum