ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:43 pm

இவன யாராச்சும் உழுகக் கூப்பிட்டா "மாட்டுத் தீவனம் வாங்கணும்"னு மொத நாளே காச வாங்கிக் கறி வாங்கித் தின்னுருவான். இவன் காட்டுக்கு யாராச்சும் உழுகப் போறாகன்னு வச்சுக்குங்க... "வெளஞ்சா வீடு வந்து சேரும் ஒழவு காசு"ன்னு கடன் சொல்லி அனுப்பிருவான்.

ஊர்ல பன்னியடிக் கணும்னா கட்டையனத்தான் கூப்பிடுவாக. மூணு ஆளுக வேணும் ஒரு பன்னியடிக்க. பன்னிய நின்ட மேனிக்கு நிறுத்தி, முன்னங்கால் ரெண்டையும் ஒரு ஆளு, பின்னங்கால் ரெண்டையும் ஒரு ஆளு ஆக ரெண்டாளு இறுக்கிப் புடிக்க, ஒலக்கையோ கடப்பாரையோ எடுத்து இன்னோர் ஆளு அது கழுத்துல ஓங்கி அடிக்க அந்த அடியிலயே அர உசுரு போயிரும் பன்னிக்கு. பன்னியப் பெரட்டிப் போடணும் பெறகு. அதே மாதிரி நாலு காலையும் ரெண்டு பேரும் புடிச்சுக்கிடணும். அதே கடப்பாரை இல்லாட்டி ஒலக்கைய எடுத்து அது சங்குல ஒரு போடு போடணும். அடுத்த அடி விழுகணும் நெஞ்சுல. மொறு மொறு மொறுன்னு நெஞ்செலும்பு நொறுங்குற சத்தம் கேக்கும். செத்தவிடத்துல உசுரு போயிரும்.

தலைய அட்டத்துல தொங்கப்போட்டு அதுபாட்டுக்குக் கெடக்கும். இதுதான் பன்னியடிக்க ஊர் நாட்ல ஏற்பட்டது.

ஆனா, மூணு ஆளு சேந்து கொல்ல வேண்டிய பன்னிய ஒத்த ஆளாக் கொல்லுவான்யா கட்டையன்!

'கட்டையன் பன்னியடிக்கப் போறான்'னு தெரிஞ்சா, பொண்டு பொடுசு நண்டான் சுண்டான்னு ஊரே கூடி நிக்கும் வேடிக்கை பாக்க. முதல்ல பன்னியக் கட்டிக்கிருவான் கல்லுக்கால்ல, பூண் போட்ட ஒலக்கைய வாங்கிச் செலம்பு சுத்துற மாதிரி ஒரு சுத்து வருவான். பீடியப் பத்தவச்சுக் கிட்டுப் பார்த்துக்கிட்டேயிருப்பான்

பன்னிய. கொல்லப்போறதுக்கு முன்னால குலதெய்வத்துக்கிட்ட அருளுகிருளு கேப்பானோ என்னமோ!

இவன் வசதிக்குத் தக்கன பன்னி எப்பத் திரும்பிக் குடுக்குமோ அப்பப் போடுவானய்யா கழுத்துல ஒரு போடு; ஒரே போடுதான் போடுவான். எத்தம் பெரிய பன்னியாயிருந்தாலும் மூள கலங்கித் தலசுத்தி விழுந்திரும். அதுக்குப் பெறகுதான் நடக்கும் கட்டையன் கண்காட்சி. அடிவாங்குன பன்னி சித்தம் தெளிஞ்சு சுதாரிக்கிறதுக்குள்ள மளார்னு அது மேல பாய்வான். பாஞ்ச வேகத்துல பொரட்டியும் போட்டுருவான் பன்னிய. தன் ரெண்டு கால் கட்ட வெரலுக்கும் மறு வெரலுக்கும் மத்தியில பன்னியோட பின்னங்கால் ரெண்டையும் பின்னிக் கிருவான். பன்னி மேல விழுந்து இடது கைய சங்குல போட்டு ஆனமட்டும் அழுத்திக்கிருவான். கத்தவும் முடியாம மிசுங்கவும் முடியாம, பண்றதப் பண்ணிக்கன்னு

கெடக்கும் பன்னி. இடுப்புல வச்சிருக்கிற சூரிய எடுப்பான் இப்ப. அள்ளையில குத்துவான் அங்கிட்டும் இங்கிட்டும். பிள்ள அழுகிற மாதிரி பெருங்கொண்ட குரலெடுத்துப் பன்னி கத்தும்; சத்தம் ஈரக்கொலைய அறுக்கும். ரத்தமா ஒழுகும். ரத்தம் வெளியேற வெளியேற உசிரும் வெளியேறும்; செத்துப் போயிரும்.

சூரிய உருவி, அதுல மண்ண அள்ளிப் போட்டு ரத்தம் போகத் துடைச்சு எறிஞ்சிட்டு, இடுப்புல அதச் சொருகிக்கிட்டு "விலாக்கறி வீடு வந்து சேரணும்'னு சொல்லிட்டு, உருமால அவுத்து ஒடம்பத் தொடச்சுக்கிட்டே போயிருவான் கட்டையன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:43 pm

இப்படியாப்பட்ட கட்டையனுக்கும் கருவாச்சிக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா? சொந்தம் வேணும்; ஆனா கல்யாணம் வேணாம்னு சொல்லுது ஒரு புத்தி. கல்யாணம் பண்ணாம சொந்தம் கூடுமான்னு கேக்குது இன்னொரு புத்தி. "ஒண்ணுக்கு ரெண்டா யோசன பண்ணிக்க தாயி"ன்னு கோளாறு சொல்லுது ஒரு கூட்டம். "கட்டையன் மாதிரி ஒரு ஆம்பள எட்டு ஊர்லயும் உண்டுமா? கருவாச்சி போற நல்ல நேரம் கட்டையன் கொணத்தையே மாத்தலாமா இல்லையா"ங்குது இன்னொரு கூட்டம்.

இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சு மண்ட காஞ்சுபோன பெரியமூக்கி, எதுக்கும் பூ கட்டிப் போட்டுப் பாத்துடறதுன்னு முடிவெடுத்தா. சூடம் சாம்பிராணி கொளுத்தி, சாமிகளயெல்லாம் கும்புட்டுக் கூப்பிட்டு "நான் பெத்த மக நல்ல கதிக்கு வரணும்னா மஞ்சப் பூவக் குடு"ன்னு வெள்ளப் பூவு, மஞ்சப் பூவு ரெண்டு பூவையும் கட்டிப் போட்டா. கருவாச்சியக் கூப்பிட்டு "ரெண்டுல ஒண்ண எடுடீ"ன்னா. அவ காலுக்கு விழுகிறேன் சாமின்னு கதவுல ஒரு முட்டு முட்டித் தட்டுத் தடுமாறி ஒரு பூவ எடுத்தா.

பிரிச்சுப் பார்த்தா மஞ்சப் பூவு சாமி வழி விட்ருச்சு. கல்யாணமும் முடிஞ்சுபோச்சு.

பஞ்சாயத்து முடிஞ்சன்னைக்கு ராத்திரி! சாணி மொழுகுன தரையில இத்த பாய விரிச்சு, வாங்குன காலத்துல இருந்து வண்ணாரு வீடு காணாத அழுக்குச் சமக்காளத்தப் பொத்தி, அனத்திக்கிட்டே படுத்துக்கெடக்கா கருவாச்சி. தவுடு வறுத்து, ஒத்தத் துணி யில குடுத்தா சூடு தாங்க மாட்டான்னு ரெட்டத் துணியில போட்டுப் புடிச்சு அவ நெத்தியில வேது குடுத்துக் கிட்டேயிருக்கா பெரியமூக்கி.

"மஞ்சப்பூவக் காமிச்சு சாமிகூட நம்ம பொழப்புல சாம்பலடிச்சிருச்சே மகளே!"& பெரியமூக்கி அழுது கண்ணத் தொடைக்க, கருவாச்சி லேசாப் பெரண்டு படுக்க, சீல வெலகுன எடத்துல முதுகுத்தோலு சிவீர்ன்னு வெந்துகெடக்க "யாத்தே! இது என்னாடி?"ன்னு கத்திட்டா ஆத்தா. அங்க கூட்டாளிககிட்ட கட்டையன் சொல்லிக்கிட்டிருக்கான், கருவாச்சி முதுக வேகவச்ச கதைய. தலைக்கறியில கெடந்த ஒரு பட்டமொளகாய நச்சுன்னு கடிச்சு "நறநற"ன்னு மென்னு முழுங்கி அந்த ஒறப்பு மூளையில வேல செய்யிறபோதே பட்டச் சாராயத்த இன்னொரு மண்டு மண்டிட்டுப் பழி வாங்குன சேதிய சொல்றான் பாவி.

"கல்யாணமான ரெண்டாம் நாளு... 'கம்பங்காட்ல வேலையிருக்கு வாடீ'ன்னேன். குட்டியாடு மாதிரி கூடவே வந்தா. நல்ல ஏறு வெயிலு. போய்ச் சேர மத்தியானமாகிப்போச்சு. காடுகரையெல்லாம் சுத்திக் காட்டிட்டு கரிச்சாம் பாறைக்குக் கூட்டி வந்திட்டேன். உச்சி வெயிலு. சும்மா கொதிக்குது பாறை. அரிசியை எறிஞ்சாப் பொரியாப் போயிரும்...


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:44 pm

[You must be registered and logged in to see this image.]


அம்புட்டுச் சூடு. "படுடீ"ன்னேன். "வெந்துபோற வெயில்லயா மாமா"ன்னு கேட்டா. "எல்லாம் ஒரு சாஸ்திரம் தாண்டி"ன் னேன்;

"சரி"ன்னு முந்தானைய விரிச்சுப் படுத்தா. அதையும் உருவி எறிஞ்சேன். "முடிஞ்சு" பாத்தா வெந்துகெடக்கு அவ முதுகுத் தோலு."

"மகன்டா... என் மகன்டா"ன்னு மெச்சுப்போனாரு சடையத்தேவரு.

பல்லில்லாத வாயில வேகாத கறிய மெல்லத் தெரியாம மென்டுக்கிட்டு. "அடிப் பாதகத்தி மகளே! கையில என்னாடி காயம்? ரம்பத்தைக் கொண்டு அறுத்த மாதிரி." "ஒண்ணுங் கேக்காதே"ன்னு "ஓ"ன்னு அழுகுறா கருவாச்சி. ஓடத் தண்ணியா ஓடுது கண்ணீரு.

கண்ணத் தொடைக்கப்போனா, கண்ணீர் விழுந்து எரியுது காயம்.

சுதியில கூடி, கட்டையன் கத சொல்றான் அங்க. "மூணாம் நாளு... 'கஞ்சி காச்சிக் கொண்டாடி'ன்னு சொல்லிட்டு ஒத்த ஏரா உழுகப் போயிட்டேன் தெக்குத் தோட்டத்துக்கு.

முதுகு வெந்துபோனவ முக்கிமுக்கி வர்றா கஞ்சி எடுத்துக்கிட்டு. 'எங்கிட்டும் போயி மேயிங்கடீ'ன்னு ஏர் மாட்டக் கழத்திவிட்டுட்டு நானா ஒக்காந்திருக்கேன் கெணத்துமேட்ல. அவ கிட்ட வரவும் நான் ஒரே தவ்வாத் தவ்வி தூக்குவாளியப் புடுங்கித் தூர எறிஞ்சுட்டு, அவள அச்சுனாப்புல தூக்கி இடுப்புல இடுக்கிக்கிட்டு கமலை யில் தொங்கிக்கிட்டிருந்த வால்கயித்தப் புடிச்சுக்கிட்டே சரசரன்னு கெணத்துக் குள்ள எறங்கி சால்ல நிக்கிறேன். பயந்து கத்துன சிறுக்கி என்னையும் விடல: வால் கயித்தயும் விடல. வால் கயிறு புதுக் கயிறு... பிரி ஒண்ணும் தேயல. முள்ளுமுள்ளாருக்கு. அவ கையி வேற பிஞ்சுக் கையா... அறுத்துவிட்ருச்சு... அறுத்து.

தண்ணிக்குள்ளே "அது இதெல்"லாம் முடிச்சுக் கடைசியில அவ கையப் பாத்தா உள்ளங்கை ரெண்டும் மருதாணி வச்ச மாதிரி கொதகொதன்னு கெடக்கு. அன்னைக்கி அழுகவிட்ருக்கேன் பாரு... மேட்லயிருந்து எங்கப்பன் சடையத் தேவன் கேட்ருக்கணும்..."

"பரம்பரைக்குண்டான பழி தீத்தடா மகனே. இனிமே நான் நல்ல சாவு சாவேன்" ஒரு கையால நீவி, தொங்குற மீசையைத் தூக்கிவிட்டாரு சடையத்தேவரு. என் இடம் இதுதான்னு அது இருந்த எடத்துக்கே வந்து சேந்திருச்சு.

"முதுகு வெந்து கையுங் கிழிஞ்சு வந்து நிக்கிற பாதகத்தி. இம்புட்டுத்தான் நீ பட்ட காயமா? இல்ல வேறெங்கயும் தேகங் கிழிஞ்சு வந்திருக்கியாடீ? எங்க ஒந் துணிய வெலக்கு"ன்னு சொன்ன பெரியமூக்கி, கருவாச்சி கட்டியிருந்த சீலய "இழுஇழு"ன்னு இழுக்கிறா.

"யாத்தே விட்ரு! யாத்தே விட்ரு"ன்னு ரெண்டு தொடைக்கும் மத்தியில சீலயச் சுத்திச் சிக்கவச்சுக்கிட்டு உருவ விடாம மொரண்டு புடிக்கிறா கருவாச்சி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:44 pm

"பெத்தவ பாக்காத பிறந்த மேனியா?"ன்னு கத்திக் கதறிக்கிட்டே ஒரே உருவா உருவி எறியிறா சீலய.

"யாத்தே! யாத்தே"ன்னு கெஞ்சிக் கூத்தாடி தன் ரெண்டு கையும் எடுத்துப் பிஞ்சு மார்பு பொத்தி, ஒண்ணு சேத்து மடிச்ச முழங்கால் ரெண்டையும் தூக்கி வயித்துல குத்தி, ஒரு பொம்பளப் பொட்டணமாச் சுருண்டு முண்டமா கெடந்தவள தீபத்த எடுத்துத் திரியத் தூண்டிவிட்டுப் பாத்தா அவ தேகத்துல முள்ளு. அடித் தொடையில, கெண்டக்கால் சதையில... இடுப்புல... பின்பக்கம் பிருஷ்டபாகத்துல... ஒடிஞ்ச முள்ளு, சின்ன முள்ளு, சில்லி முள்ளு. அவ கருத்தத் தோலு பொட்டுப்பொட்டா ரத்தங் கட்டிக்கெடக்கு. "இந்தக் கொடுமையும் உண்டுமா?"ன்னு கத்திக் குமுச்சு நெஞ்சுக்கூடு வத்திப்போன பெரியமூக்கி, பொட்டுத்துணிகூட இல்லாமக் கெடந்த மகள மடியில தூக்கிப்போட்டு "நாம் பெத்த செல்லம் ஓம் பொழப்பு இப்பிடியா ஆகணும்"னு மதில்ல மண்டைய முட்டி 'அய்யோ அய்யோ'ன்னு அழுகிறா.

அப்பவும் ஒரு பேச்சும் பேசல கருவாச்சி.

முள்ளுத் தச்ச கதைய கட்டையன் சொல்லிப் பூரிச்சுப்போறான் பூரிச்சு. "முந்தா நாளு... அதாண்டா பஞ்சாயத்துக்கு மொத நாளு "ஒடம்பெல்லாம் புண்ணாக் கெடக்கு...

வலிக்குது மாமா"ன்னு கெணத்துக்குள்ள விழுந்த குருவிக்குஞ்சு மாதிரி குறுக்கிக் கெடந்தா. "வாடி பிள்ளா வைக்கப் படப்புல ஒரு வைத்தியம் இருக்கு"ன்னு கூட்டிட்டுப் போயிட்டேன்.

அங்கதான் அவள வேலி முள்ளுக்குள்ள தள்ளி "வெவகார"த்த முடிச்சேன். விடியவும் தரதரன்னு இழுத்துக்கிட்டே போயி அவ வீட்டு வாசல்ல விட்டுட்டு, "ஒத்துவராதுடீ... ஓஞ்சதடீ ஆத்தா ஒனக்கும் எனக்கும் உள்ள ஒறவு"ன்னு அவ மேலய ஒரு துப்புத் துப்பிட்டுத் திரும்பிப் பாக் காமத் திரும்பிட்டேன். கத்துறா; கதர்றா. காது கேக்காத மாதிரி வந்துட்டேன்."

மகன் சொல்லி முடிச்சதும் சாமியாடிக்கு அருள் வந்தது மாதிரி சத்தம் விட்டாரு சடையத்தேவரு. "நாப்பது வருசத்துக்கு முன்ன எங்க வீட்டுப் பொண்ணு கத்துனாளே... எப்படி இருந்திருக்கும்? எங்க வம்ச விளக்கு கையெடுத்துக் கும்பிட்டு விட்ருன்னு கதறினாளே... அது எப்படி இருந்திருக்கும்? மகனே! நான் எதுக்கு உசுரக் கையில பிடிச்சு ஒக்காந்திருந்தேனோ அது நடந்து போச்சுடா. இன்னிக்குத்தாண்டா நான் குடிக்கிறது கஞ்சி."

பஞ்சாயத்து முடிஞ்சு எட்டு நாளாச்சு. சிறுகச் சிறுக வைத்தியம் பாத்து பிள்ளையத் தேத்தி வாரா பெரியமூக்கி.

அவ ஒடம்புல ஒவ்வொரு முள்ளா எடுத்து, முதுகுக்கு வேது வச்சு, உள்ளங்கையில மஞ்சப் பத்துப் போட்டு, வெந்நீர்ல முக்குன துணியப் புழிஞ்சு ஒடம்பு தொடச்சு, தலை சீவிப் பொட்டுவச்சு அவளுக்கு என்னென்ன செய்யணுமோ எல்லாம் செய்றா. ஆனா கருவாச்சி அன்னந்தண்ணி தொடுறால்ல; வெறிச்சே பாத்துக்கிட்டிருக்கா. அவளாப் பொலம்புறா.

'இப்படியாகிப்போச்சே இவ பொழப்பு'ன்னு சாதிசனங்க யாரும் விசாரிக்க வந்தா, அவ கண்ணு தொறந்திருக்கு; பார்வையில "உசுர்" இல்ல. "புத்திமாறாட்டமாகிப் போச்சப்பா கருவாச்சிக்கு"ன்னு வந்தவளுக பொலம்பிக்கிட்டே போறாளுக. அவளாப் பேசிக்கிர்றா; பல்லக் கடிக்கிறா; திடீர்னு பாட்டுப் படிக்கிறா; "கம்பங்காடு கம்பங்காடு"ன்னு கெனாக் கண்டவ மாதிரி பெனாத்துறா. திடீர்னு ஒரு நாள் தட்டத் தூக்கி அடிச்சா; வெளக்கமாத்த எடுத்து வீசினா; சொளகு பறக்குது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:44 pm

ஒரே எத்தா எத்திவிட்டா ஒலக்கைய; மாராப்பப் பிச்செறிஞ்சா. முடிஞ்ச தலைய அவுத்து சாட்ட மாதிரி ஒரு சுத்துச் சுத்தவிட்டு "என்னிய சாக்குல கட்டாத... என்னிய சாக்குல கட்டாத"ன்னு தெருவெல்லாம் கேக்குற மாதிரி கத்துறா.

"இவ கொணம் இது இல்லையே, செய்வினையா... இல்ல காத்துக் கருப்பு வேலையக் காமிக்குதா?" பலவிதமா ஊகம் பண்ணி கடைசியாக் கண்டுபுடிச்சு ஊரே பேசுது:

'"கருவாச்சிக்குப் பேய் புடிச்சிருச்சாம்... கருவாச்சிக்குப் பேய் புடிச்சிருச்சாம்!"

பேயின்னு ஒண்ணு துண்டாவா இருக்கு? இல்ல... நம்ம மாதிரி கண்ணு, காது, மூக்கு வச்சு அங்கங்க காடு மேடு தேடி அலையுதா?

அதெல்லாம் ஒண்ணுங் கெடையாது. கடவுள் மாதிரியே பேயும் மனுசனால உண்டாக்கப்பட்டது. மனசுல நல்ல மனசுதான் கடவுள்; கெட்டது பேய். கடவுளுக்கு மாதிரியே பேய்க்கும் உருவம் குடுக்கிறது அவனவன் சொந்தச் சரக்கு. வயித்துக்கு ஒரு செரிமான சக்தி இருக்கிற மாதிரி மனசுக்கும் ஒரு செரிமான சக்தி இருக்கு. வயிறு செரிக்க முடியலன்னா அது வாந்தியா வந்து தொலைக்குது. மனசால செரிக்க முடியாத கவலையோ அழுத்தமோ வருத்தமோ பேயா... சாமியா... பிரமையா புத்தி மாறாட்டமா வெளியேறுது.

கிராமத்துல ரெண்டுக்கும் பண்டுதமிருக்கு.

மேலு காலுக்குப் பண்டுதம் பாக்கிறவகளுக்கு வைத்தியர்னு பேரு. மனசுக்குப் பண்டுதம் பாக்கிறவருக்குப் பேரு கோடாங்கி.

"ஏலே கொண்ணவாயா! புத்திமாறிப் பேய் புடிச்சுக் கெடக்காடா ஒன் சின்னத்தா. ஓடுறா ஓடு. கோடாங்கி எங்கிருந்தாலும் கூட்டியா... போ" பெரியமூக்கி பதறவும், பசுமாட்டுக்குக் கன்டு அவுத்து விட்டுக்கிட்டிருந்த கொண்ணவாயன், கையிலிருந்த சாட்டக்கம்போட "தத்தக்கா பித்தக்கா"ன்னு ஒரே ஓட்டமா ஓடினான்.

நாலு வருசத்துக்கு முன்ன பத்துப் பதினோரு வயசில அந்த வீட்டுக்குப் பண்ணைக்கிருக்க வந்தவன் கொண்ணவாயன். ஆடு மாடு மேய்க்க காடு கரையப் பாத்துக்க கடை கண்ணிக்குப் போய்வரன்னு வந்தவன், வீட்ல ஒரு ஆளாகிப் போனான். வீட்ல உண்டான கஞ்சி... நல்ல நா பொல்ல நாளைக்குத் துணிமணி... வருசத்துக்குச் சம்பளம் ரூவா அறுவது...

இது பேச்சு. அந்த ரூவா அறுவதையும் பதினோராவது மாசமே வந்து பலியாக்கெடந்து, வாய்வலி, வகுத்தவலின்னு வாங்கிட்டுப் போயிருவான் அவுக அப்பன்.

"கோ... கோ... கோ... கோடாங்கி... எங்க சீ... சீ... சீ... சின்னத்தாவுக்குப் பேய் புடிச்சிருச்சாம். கையோட கூட்டியாரச் சொல்லுச்சு பே... பே... பே... பெரியத்தா."

இருளப்பக் கோடாங்கிக்கு அந்த சில்லாவிலயே நல்ல பேரு. வருச நாட்லயிருந்து வாலாந்தூர் வரைக்கும் இருளப்பன்னாத் தெரியும் எல்லாருக்கும். அந்தாளு உடுக்குச் சத்தம் கேட்டா முனியோ, பேயோ ஊர் எல்ல வரைக்கும் திரும்பிப் பார்க்காம ஓடிப்போகும் ஓடி. கோடாங்கி சுத்தபத்தமா இருக்கிற ஆளு; பக்தியோட தொழில் செய்ற கோடாங்கிக்கு உடுக்குன்னா உசுரு. சொவத்துல சாமி படத்துக்கு மேலதான் அதத் தொங்கவிடறது. அத அவர்தான் தொடணும். வேற யாரும் தொடக் கூடாது. அப்படித் தப்பித்தவறி யாராச்சும் தொட்டுட்டா, பழந்தேங்கா வச்சுக் கற்பூரம் காட்டித் தீட்டுக் கழிக்காமத் தீண்டமாட்டாரு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:45 pm

[You must be registered and logged in to see this image.]

உடுக்குங்கிறது அவுக குடும்பத்துக்கே சாமி. "சிவன்கிட்ட இருந்ததடா மகனே... அடுத்து இவன்கிட்ட இருக்கு"ன்னு அடிக்கொருக்க சொல்லு வாரு அவுகப்பன் தங்கவேல் கோடாங்கி. இருளப்பன் மனசுக் குள்ள ஒரு ஐதீகம். உடுக்க எடுத்து ஒரு பக்கம் அடிச்சா கடவுளும், மறுபக்கம் அடிச்சா செத்துப்போன அவுக அப்பனும் கூடவே பேசுறதா ஒரு நெனப்பு.

இருளப்பன் உடுக்கய உசுரா நெனக்கிறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த உடுக்க அவுக அப்பனே செஞ்சது. இவரு பத்து வயசுப் பயலா இருக்கிறப்பக் கூடவேயிருந்து பாத்தது. மரங்கள்ல வேங்கு, வெள்ளெருக்கு, மஞ்சணத்தி, பலா நால்ல ஒண்ணுதான் நல்லது உடுக்குச் செய்ய. வெண்கலத் துலயும் செய்வாக. அதுல சத்தம்கூட நல்லாத்தான் இருக்கும். ஆனா, நாதம் அள்ளி எறியறதுல வெள்ளெருக்கங் கட்ட மாதிரி வேறொண்ணும் வராது.

வெள்ளெருக்கங்கட்டைய ஒரே கட்டையா வாங்கி, ஒரே கடைசலாக் கடைஞ்செடுத்தாரு கோடாங்கி. ஒரு பக்கம் சந்திர வளையமாம்; மறு பக்கம் சூரிய வளையமாம். வளையங்கள மூட இப்ப சவ்வு வேணும். மாடு உரிக்கிற மந்தைக்குப் பொழுது விடியப் போயிட்டாரு தங்கவேல் கோடாங்கி. மாட்டுப் பெருங்குடல வாங்குனாரு. அதுல ஒட்டியிருந்த கறியமட்டும் சுரண்டி எறிஞ்சிட்டு, வெறும் சவ்வா வாங்கிட்டு வந்தாரு. வெது வெதுங்கிற வெந்நியில முக்கி ஊறவச்சு அதுல ஒட்டியிருந்த பிசுற எடுத்துத் துண்டாத் தூர எறியவும், கண்ணாடி மாதிரி பளபள பளன்னு மின்னுது சவ்வு.

ஊறப்போட்ட புளியங் கொட்டைய ஆட்டொரல்ல போட்டு, "ஆட்றா மகனே"ன் னாரு. இருளப்பனுக்கு ஆட்டத் தெரியல. பள்ளிக் கூடம் பிடிக்காத பய ஓடி ஓடி வந்திர்ற மாதிரி குழியவிட்டு எந்திரிச்சு எந்திரிச்சு வந்துருது கொழவி.

"எந்திர்றா"ன்னு அவன ஒரே எத்தா எத்தித் தள்ளிட்டு அவரே ஒக்கார்றாரு. சும்மா மழு மழு மழுன்னு புளியவெதைய அரைச்சு, மண்சட்டியில வழிச்சுப் போட்டு, அத அடுப்புல சுடவச்சு, களி பதத்துல எறக்கிட்டுச் சொல்றாரு: "இதுக்குக் கீக் கொண்டது தாண்டா மகனே எந்தப் பசையும். திருமலநாயக்கன் தூணு ரெண்டா ஒடஞ்சு துண்டாக் கெடந்தாலும் இதைத் தடவுனா ஓடிவந்து ஒட்டிக்கிரும்டா."

உடுக்குல பசையத் தடவி சந்திர வளை யத்தையும் சூரிய வளையத்தையும் சவ்வெடுத்து மூட்டி, ரெண்டு வளையத்தையும் நூல் கயித்துல எணைச்சு எணைச்சுக் கச்சைகட்டி, ஒரு பக்க உடுக்கையில குதிரைவால் ரோமங்களக் கம்பி மாதிரி இழுத்து வெறப்பாக் கண்ணிகட்டி, சுங்கம் வச்ச கடிவாளமும் சேத்து, செத்தவடம் காயவச்சு அடிச்சாரய்யா பெரிய கோடாங்கி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:46 pm

சும்மா நரம்பச் சுண்டுது நாதம்; காது வழியாக் கள்ளு குடிச்ச மாதிரி இருக்கு. உடுக்கு சாமி அப்பன் மூணும் ஒண்ணு தான்இருளப்பக் கோடாங்கிக்கு.

தலை நெறைய உருமாக்கட்டி, நெத்திதேயப் பட்டையடிச்சு, கொழகொழன்னு சந்தனம் பூசி, அதுல ஒரு குழியும் வெட்டிக் குங்குமம் அப்பி, உத்திராட்சமால நெஞ்சுல பொரள காவி வேட்டியும் அதுக்குமேல சரிகைத்துண்டும் கட்டி "எங்க பொண்டு புள்ளைகளுக்கு நல்ல சொகம் குடு சாமி"ன்னு உடுக்கையைத் தொட்டுக் கும்பிட்டெடுத்து "வாரேன் இருளப்பன் வழி விடுங்கப்பா"ன்னு நடந்து வாராரு கோடாங்கி.

"கருவாச்சிக்குப் பேய் ஓட்டப் போறா களாம்; கருவாச்சிக்குப் பேய் ஓட்டப் போறாகளாம்". கோடாங்கி பின்னாலயே ஒரு அறுப்பாளு வருது.

இந்தக் கல்யாண வீடு, காதுகுத்து வீடு, சடங்கு வீடு இங்கயெல்லாம் கண்காட்சியோட சின்னதா ஒரு பொழுதுபோக்கும் இருக்கு சனங்களுக்கு. ஒரு பொம்பளையவோ ஆம்பளையவோ இதுவரைக்கும் பாக்காத கோலத்துல பாக்கிறதுல யாருக்கும் ஒரு ஆவலாதி இருக்கத்தான் செய்யுது.

கோழிச்சண்டைக்கே கூட்டம் கூடுற ஊர்ல பேயோட்டுற வீட்ல இருக்காதா? அதுலயும் இவ சின்னவ; இப்பத்தான் கல்யாணமாகி அத்துவிடச்சொல்லிப் பஞ்சாயத்துல நின்ன பிள்ள. கூட்டத்துக்குக் கேக்கணுமா? தெருவுல, திண்ணயில, வாசல்ல வீட்டுக்குள்ள, தொழுவுல ஒரல்ல, சாலுமேல... முந்துனவுகளுக்கு மொத எடங்கிற கணக்குல கூடிக் குமுஞ்சு போச்சு ஆணும் பொண்ணும்.

வீட்டுக்குள்ள இருக்கிற தெறந்த வாசல்ல சாணி தொளிச்சு மொழுகி, சாக்கு, பழைய துணியெல்லாம் பரப்பி அதுக்குமேல ஒரு சமுக்காளம் விரிச்சு, சூடம் கொளுத்தி, பத்தி பொருத்தி, சாம்பிராணிபோட்டு, குங்குமம், சந்தனம், மல்லிகப்பூ வாங்கித் தரையில படைச்சு, தேங்கா பழத்தோட தனக்கு அஞ்சேகால் ரூவா தட்சணையும் வாங்கிக்கிட்டு "பிள்ளையக் கூட்டிட்டு வாங்காத்தா"ன்னு சொல்லிட்டு, பேயாடப்போற பொண்ணுக்குத் துண்டாப் பாய்போடச் சொன்னாரு கோடாங்கி.

ஊர்ப் பொம்பளைக கருவாச்சிய கூட்டிட்டு வாராக கைத்தாங்கலா. அவளுக்கு நட, கூடி வரல. வில்லா வெறைச்சு வர்றா. பல்லுவேற கிட்டிச்சுக்கிருச்சு. தொண்டக்குழியிலருந்து என்னமோ வார்த்த வருது வர்ற வார்த்தைய நாக்கு தட்டி விட்டுருது; கொழர்றா. "வாழத்தண்ட அடுப்புல வச்சமாதிரி பச்ச மண்ணுக்கு இப்படி ஒரு பழிபாவம் வந்திருச்சே"ன்னு பொலம்புதுக கெழடுகட்டைக.

நாடகம் போடப்போறாகங்கிற மாதிரியேகண்ணுல மனசத் தேக்கிச் சம்மணங்கால் போட்டு ஒக்காந்திருக்குதுக சின்னஞ்சிறுசுக.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:47 pm

[You must be registered and logged in to see this image.]


செவக்கி ஒக்கார முடியாம சாஞ்சு சாஞ்சு விழுந்த கருவாச்சிக்குக் கால் ரெண்டை யும் மடிச்சு விட்டு முட்டிக்கால் போட்டுவிடவும், அவ "மளார்"ன்னு கவுந்து தலையத் தரையில போட, பாயே தெரியாமப் பரவிக் கெடக்கு அவ குடுமிக்காடு.

கோடாங்கி வலக்கையில உடுக்க எடுத்து எடக்கைக்கு மாத்தி, கடிவாளச் சுங்கம் தொங்க ஒசத்திப்புடிச்சு, ஆகாயத்துக் கொரு கும்புடும் பூமிக்கொரு கும்புடும் போட்டு, உடுக்கைய ஓங்கித்தட்டிக் கச்சைய ஒரு இறுக்கு இறுக்கிப் புடிச்சுச் சத்தம் கூட்டவும் "தம்தணத்தோம் தம்தணத்தோம் தம் தணத்தோம்"ங்கிற ஓச சும்மா சொக்கத்தேவன் பட்டியையே பெரட்டிப்போடுது.

உடுக்குல ஆரம்பிச்சுப் பாட்டுல கூட்டிட்டாரு கோடாங்கி.

"மந்தை நிறைந்திட
மனம் நெறைய வா! வா! வா!
ஆணாக இருந்தாலும்
பெண்ணாக இருந்தாலும் நீ
காத்தாக இருந்தாலும்
கறுப்பாக இருந்தாலும்
மானிடஜீவன்
மனித நிலையானாலும்...
இந்த மங்கையைச் சீதைபோல் சிறையெடுக்க வந்திருக்கிற நீ யாரு?"

உடுக்கும் தமிழும் மாறி மாறி சலாம் வரிசை பாடியும் கீழ கெடந்த பிள்ள எந்திரிக்கல. தலைய விரிச்சுப் போட்டுத் தரையிலயே கெடக்கா.

உடுக்கய இன்னும் ஓங்கியடிச்சுஅடித் தொண்டையில பாட ஆரம்பிக்கிறாரு கோடாங்கி, பிசிறடிக்கிற கொரல்ல "பிர்கா" போட்டு சங்கீத உலகத்துக்கு அவராலான சவாலும் விட்டுக் கிர்றாரு.

"ஒங்களோட தங்கக் கைய
எஞ்சாமி முன்ன போடு...
எஞ்சாமி முன்ன போடு...
ஒங்க தல முடிய
எஞ்சாமி சொழட்டிப் போடு...
எஞ்சாமி சொழட்டிப் போடு..."

உடுக்கு சுதியேறி ஓங்காரநாதம் சுத்தியிருக்கிறவுக இருதயக்கூட்ட அறுக்க ஆரம்பிக்க, மண்ணுக் குத்துன சல்லிக்கட்டுக் காள மளார்னு தலையத் தூக்கின மாதிரி, "ஏலே"ன்னு பெருங்கொண்ட குரலெடுத்து ஒரு கத்துக் கத்தி, கருவாச்சி தலைய ஒரு சுத்துச் சுத்துனா பாருங்க... சும்மா ஆயிரம் சாட்டைய எடுத்து வீசுற மாதிரி அவ குடுமி நாலா பக்கமும் தெறிச்சு வீசவும், தாங்கிப் புடிக்க வந்த பொம்பளைக ஓடிப் போனாக ஓடி. ஆடிஆடித் தலசுத்திக் கெறங்கிக் கிறுகிறுத்துத் தலையக் கீழபோட்டு அவளா மூச்சுவாங்கி ஓயறவரைக்கும் உடுக்கடிய நிறுத்தல கோடாங்கி. அவ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கறது அவ பொடனி ஏறி எந்திரிக்குதே அதுல தெரியுது.

அவ ஆசுவாசம் பண்ணிக்கிற அந்த இடைவெளியில லேசு லேசாப் பேச்சுக் குடுக்கிறாரு கோடாங்கி.

"யாரு நீ வந்திருக்கறது? இந்த ஒண்ணுந் தெரியாத புள்ளையத் தொட்டுத் தொடந்து வந்திருக்கிற நீ யாரு?"

"சொல்ல மாட்டேன்..." கருவாச்சி கொரல் மட்டும் கேக்குது குடுமிக்குள்ளருந்து.

"சும்மா சொல்லு... எங்க பிள்ளையத் தொட்ருக்கிற நீ ஆணோ பெண்ணோ... ஒன்னிய ஒரு குத்தமும் சொல்லமாட்டோம்... உண்மையச் சொல்லு..."

"சொல்லமாட்டேண்டா"

"என்னது மரியாதை கொறையுது? ஏதோ வந்தது வந்துட்ட. வேணுங்கிறதக் கேட்டு வாங்கிட்டு எங்க பிள்ளைய எங்க கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிரு."

"பழிவாங்க வந்திருக்கேன். வெரட்டவா பாக்குற?"

"பச்சமண்ண எதுக்குப் பழிவாங்கிக்கிட்டு? ஏதோ எங்க பிள்ளைக்கு
அங்கம் பதறாம
அனல்காத்து வீசாம
முள்ளு முறியாம
முடிச்சுப் பூ வாடாம
நல்ல கதி குடுத்து
நடையக்கட்டு..."

"வந்த வேல முடியாம இந்த எடத்தவிட்டுப் போகமாட்டேன்."


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:47 pm

"வேண்டாத வேல செய்ய விடுவனா ஒன்னிய? ஓடிப்போ ஒங்காட்டுக்கு... இல்லாட்டி..."

"இல்லாட்டி?"

"தொறக்காத வித்துக்குள்ள ஒன்னப்போட்டுப் பூட்டிப் பாதாள கங்கையில எறிஞ்சுருவேன்."

"கோடாங்கி! வித்தத் தொளச்சு வெளியேறி ஒன் வீட்டுக் கன்னிகளையும் புடிக்காம விடமாட்டேன்."

"சும்மா உடுக்க தொங்கற வீட்டுல படுக்க வந்திருவியாக்கும்? அதெல்லாம் யாராச்சும் ஏப்பசாப்பகிட்ட வச்சுக்க. ஏங்கிட்ட வச்சுக்கிராத... ஒன்னிய ஓட்டாம விடமாட்டேன்."

"நான் முனியா, பேயான்னே தெரியாம என்னிய எப்பிடி ஓட்டுவ?"

"சண்டிமுனி, சடாமுனி, மண்டி முனி, மகாமுனி, பாண்டிமுனி, பரவைமுனி, நல்லமுனி, கெட்டமுனி, இப்படி எல்லா முனிகளையும் வரவழைச்சு முத்துப்போட்டுப் பாத்ததுல வந்திருக்கிறது முனி இல்லைன்னு தெரிஞ்சுபோச்சு. நீ பேய்தான். ஆணா, பெண்ணா அதச்சொல்லு மொதல்ல."

"வீல்"ன்னு ஒரு கத்துக்கத்தி கருவாச்சி திரும்பவும் பேயாட... அவ வேகத்துக்குத் தக்கன அடிக்கிறாரு கோடாங்கி உடுக்கய.

அந்தத் "தம்த ததம் தம்த ததம்"ங்கிற கனசத்தம் உசுப்பேத்தவும் ஆடிக்கிட்டே கருவாச்சியும் பாட்ல கூடிட்டா.

"யண்ணே யண்ணே! எஞ்சாமி
கோடாங்கி யண்ணே! நான்
பெறந்த கதை ஒங்களுக்குச்
சொல்லட்டுமா இல்ல
முடிஞ்ச கதை ஒங்களுக்குச்
சொல்லட்டுமா எஞ்சாமி
சொல்லட்டுமா?"

"வந்திருச்சு. பேய் வழிக்கு வந்திருச்சு. இந்தா இப்பச் சொல்லப்போகுது... ஊரையும் பேரையும்." ஊரே நிமிந்து உட்காருது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:48 pm

[You must be registered and logged in to see this image.]

சும்மா கோயில் மணிச்சத்தம் மாதிரி சுத்தமான குரல் கருவாச்சிக்கு. பாடுது மனப்பேயி கருவாச்சி குரலைக் கடன்வாங்கி.

"எனக்கு இட்டதொரு
எழுத்திருக்க எஞ்சாமி
எழுத்திருக்க நான்
கம்பங்காடு போகையிலே
ஈசன் கொஞ்சம்
கடையெழுத்த மாத்திட்டாரு
கடையெழுத்த மாத்திட்டாரு"

உடுக்குச் சத்தம் கூடக் கூட சக்கரமாச் சுத்துது அவ தல.

இந்த ஈருவல்லிக்குச்சி ஒடம்புக்குள்ள இத்தன சக்தியான்னு மூக்குமேல வெரலவச்சுக் கவலக்குறியோட பாத்து நிக்கிது சாதிசனம் எல்லாம்.

தரையில மண்டி போட்டுப் பேயாடின பொம்பள, பூமியிலருந்து சூறாவளி சுத்தி எந்திருச்ச மாதிரி "குபீர்"னு எந்திரிச்சு, மொழங்கால் போட்டு முழு வேகத்துல பேயாடவும், இழுத்து இடுப்புல சொருகியிருந்த சீல "பட்டீர்"ன்னு அவுந்திருச்சு.

சீல உருவ, மாராப்பு வெடிச்சு வெலக, லவுக்கையில்லாத தேகத்துல ஓரஞ்சாரம் தெரியவும் கருவாச்சி மேல ஓடிவந்து விழுந்து அவள ஒரே அமுக்கா அமுக்கிக்கிட்டா பவளம்.

பெரியமூக்கி உள்ள ஓடிப்போயி கம்புமூட கட்டிவச்சிருந்த சரடுகள உருவிட்டு வந்தா. கருவாச்சியத் தூக்கி நிமித்தி, சீலய இறுக்கிச் சரி செஞ்சு, இந்தப் பக்கம் ஒரு சரடும் அந்தப் பக்கம் ஒரு சரடுமாக் கட்டி, ஒருவாஞ்சுருக்குப் போட்டா அவுந்தாலும் அவுந்திருமின்னு கல்லுமுடிபோட்டு "ஆடுடீ ஆத்தா ஆடு"ன்னு சொல்லித் தள்ளிவிட்டு அழுது ஒதுங்கிட்டா. உடுக்கு இப்பத் தீப்புடிக்குது.

"வந்திருக்கறது யாரு? வா வெளிய! ஒனக்குண்டான சாங்கியத்த வாங்கிக் கிட்டு ஒன் வழியத் தேடி நீ போயிரு. எங்க வீட்டுப் பிள்ளைக்குப் பட்டி பெருகணும்; பால் பான பொங்கணும்.

அல்லியும் தாமரையும் பூத்துக் குலுங்கணும். சொல்லு. நீ ஆம்பளையா? பொம்பளையா?" கோடாங்கி குரல்ல கோபக்குறி ஏறவும் வந்திருந்த பேய்க்கும் ரோசம் பொத்துக்கிருச்சு.

"வந்திருக்கிறது பொம்பளடா; பொம்பள."

"ஊரு?"

"இதே ஊருதாண்டா... சொக்கத்தேவன்பட்டி."

"பேரு?"

"சொர்ணக்கிளிடா; சொர்ணக்கிளி; சடையத் தேவர் அண்ணன் மாறு கண்ணுத்தேவர் மக."

"சொர்ணக்கிளியா? கருவாச்சியப் பேயா வந்து புடிச்சிருக்கறது என்னைக்கோ செத்துப்போன சொர்ணக்கிளியா? யாத்தே"ன்னு நெஞ்சுலடிக்கிறாக கெழவிக.

"வெளியூர்ப் பேயா இருக்குமோன்னு ஊகம் பண்ணுனா கடைசியில கருப்பு காலுக்குள்ளயே இருந்திருக்கேப்பா" நாப்பது வருசம் முன்னுக்கு நடந்த சம்பவத்த நெனச்சுப் பெருமூச்சு விடுதுக பெருசுக.

பாவம்! சொர்ணக்கிளி கத பெருங்கத.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 2 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum