புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
24 Posts - 53%
heezulia
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
14 Posts - 31%
Barushree
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
nahoor
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
prajai
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
78 Posts - 73%
heezulia
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
4 Posts - 4%
prajai
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
nahoor
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_m10திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவிளையாடற் புராணம் - சில குறிப்புகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:00 pm

சங்ககால இலக்கியத்தின் அடிப்படையிற் பார்க்கும்போது, பண்டைக்காலத் தமிழர் யதார்த்தப் பண்பு மிக்கவர்களாகத் திகழ்ந்தனரெனக் கூறலாம். உலக வாழ்க்கையைச் சீர்செய்து, அறநீதி முறையில் வாழ முயன்ற சமுதாய இலட்சியங்களைப் பெரும்பாலும் எடுத்துக் கூறுவனவான சங்கமருவிய கால இலக்கியங்களும் யதார்த்தப் பண்பிலிருந்து விலகவில்லை. பல்லவர் கால இலக்கியத்தில் ஒருவகை மாற்றம் காணப்படுகிறது. தோத்திரப் பாடல்களில் அற்புத சம்பவங்களைப் பற்றிக் குறிப்புகள் நிறையக் காணப்படுகின்றன. சிவபெருமானும் திருமாலும் சம்பந்தப்பட்ட இந்த அற்புதச் சம்பவங்கள் வடமொழிப் புராண இதிகாசக் கதைகளைத் தழுவியன. தமிழ் மக்கள் இந்த அற்புத சம்பவங்களிலே காட்டிய ஈடுபாடு, தமிழிலே அற்புத சம்பவங்களைக் கூறும் நூல்கள் தோன்ற வழி வகுக்கின்றது.

இன்று கிடைக்கும் மிகப் பழைய, தமிழ் மொழியிலான புராணம் திருத்தொண்டர் புராணமெனப்படும் பெரியபுராணமாகும். இது வடமொழியிலிருந்து தழுவலாகவோ மொழிபெயர்ப்பாகவோ அமையாமல் தமிழ்மொழியிலேயே மூலநூலாகத் தோன்றியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்தவர்களான சைவசமய நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதே இந்தப் புராணத்தின் நோக்கமாகும். நாயன்மார்களின் பெருமைக்கு அளவுகோலாக அற்புத சம்பவங்கள் அமைந்திருந்தமையால், பெரியபுராணத்தில் அற்புத சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. அற்புத சம்பவங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், பெரியபுராணத்திலே யதார்த்தப் பண்பு குறிப்பிடத்தக்க அளவுக்குக் காணப்படுகிறது. சோழப்பேரரசின் அமைச்சராகக் கடமையாற்றிய சேக்கிழார் தமிழ்நாடெங்கும் பல ஆராய்ச்சிகள் நடத்தியே பெரியபுராணத்தை எழுதியிருக்க வேண்டுமென டாக்டர் இராசமாணிக்கனார் எடுத்துக்காட்டுவர். பெரியபுராணம் தமிழ்நாட்டின் தேசிய இலக்கியமென அ.ச.ஞானசம்பந்தன் போற்றுவர். பெரிய புராணம் ஒரு வகையிலே தமிழ்நாடு முழுவதுக்குமுரியதாயினும் இன்னொரு வகையிலே சோழநாட்டுக்கே சிறப்பாக உரியது. நாட்டுப்படலம் நகரப்படலம் என்பன சோழநாட்டையே போற்றுகின்றன. நாயன்மார்களில் மிகப்பெரும்பாலோரும் சோழநாட்டினரே. நாயன்மார் பூசித்த தலங்களிலும் மிகப்பெரும்பாலன சோழநாட்டவையே.

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு பிற்பகுதியிலே, பெரியபுராணம் தோன்றியது. சோழப்பேரரசர் இந்த நூலைப் போற்றினர். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலே, தமிழ்நாட்டு அரசியல் வரலாறு மாற்றமடைகிறது. சோழப்பேரரசு வீழ்ச்சியடையப் பாண்டியப் பேரரசு தலையெடுக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றிலே சோழநாடு போலப் பாண்டியநாடு முக்கியமானது. பாண்டியநாட்டை மையமாக வைத்து ஒரு பெரிய புராணம் தோன்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது. புராண இலக்கிய மரபு நன்கு கைவந்த வடமொழி அறிஞர்கள் நூலாக்கத்துக்கு கைகொடுத்து உதவுகின்றனர். உத்தரமகாபுராணம் என்ற வடமொழிப் புராணத்தின் மொழிபெயர்ப்பே வேம்பத்தூர்ச் செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பி கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இயற்றிய திருவாலவாயார் திருவிளையாடற் புராணமெனப்படுகிறது. உத்தரமகாபுராணம் இன்று கிடைக்குமாறில்லாமையால், இதைப்பற்றி எதுவும் கூறமுடியாதுள்ளது.

வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம் ஒருவகையிலே மதுரைச் சொக்கநாதர் கோயிலையே சிறப்பித்துச் செல்கிறது. இந்த நூலுக்குச் சைவர்களிடையே இருந்த வரவேற்பு கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலே, உமாபதி சிவாசாரியாரைக் கோயிற்புராணம் பாடத் தூண்டியது. சைவர்களின் தனிப்பெருங் கோயிலான சிதம்பரத்தைப் பொருளாகக் கொண்டு இந்நூல் செய்யப்பட்டது. இதுவே, தமிழில் எழுந்த முதல் தலபுராணமாகக் கொள்ளப்படுகிறது. இந்த நூலை அடியொற்றி, தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் எழுந்த தலபுராணங்கள் நூற்றுக்கணக்கானவை. திருவிளையாடற்புராணம் என்ற பெயரில் புதிய ஓர் ஆக்கமும் தோன்றுகிறது. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமும் வடமொழி நூலாகிய ஹாலாஸ்ய மகாத்மியத்தின் மொழிபெயர்ப்பெனப்படுகிறது. பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற்புராணம் வேம்பத்தூரார் திருவிளையாடற்புராணத்தை விட, ஏறத்தாழ இரண்டு மடங்கு விரிவானது.

இரண்டு திருவிளையாடற் புராணங்களும் அறுபத்திநான்கு திருவிளையாடல்களைப் பாடுகின்றன. வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணத்திலுள்ள மூர்த்தியார்க்கரசளித்த திருவிளையாடல் முதலிய மூன்று கதைகள் பரஞ்சோதி திருவிளையாடற் புராணத்தில் இல்லை. வேம்பத்தூரார் நூலிலுள்ள நான்மாடக்கூடலான திருவிளையாடலில் பரஞ்சோதி நூலிலுள்ள வருணன் விட்ட கடலை வற்றச் செய்த திருவிளையாடலும் முந்தியதிலுள்ள மதுரையான திருவிளையாடலில் பிந்தியதிலுள்ள நாகமெய்த திருவிளையாடல், மாயப்பசுவை வதைத்த திருவிளையாடல் என்பனவும் அடங்கியுள்ளன. பரஞ்சோதி நூலிலுள்ள திருநகரங்கண்ட திருவிளையாடற்கதை முந்தியதிலிலுள்ள புலிமுலை புல்வாய்க் கருத்திய திருவிளையாடலிலும் அடங்கியுள்ளன. திருவிளையாடல்கள் அமைந்துள்ள முறையும் இரண்டு நூல்களிலும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. திருத்தொண்டர் புராணத்திலே அறுபத்துமூன்று தனியடியார் கதைகளும் தொகையடியார் கதைகளும் இடம் பெறுவதை நோக்கிப்போலும் திருவிளையாடல்களின் மொத்த எண்ணிக்கை அறுபத்து நான்கு என்று இருநூல்களும் வரையறை செய்துள்ளன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:01 pm

இரண்டு திருவிளையாடற் புராணங்களுக்கும் குறிப்பிடக்கூடிய சில வேறுபாடுகள் உள. மதுரைச் சிவனுக்குச் சொக்கனென்ற பெயர் இந்திரனாற் சாத்தப்பட்டது, மலயத்துவசனுக்கு மலைக்கொடி மன்னனென்றும் பெயர்;; தடாதகைப்பிராட்டிக்குப் பச்சைத்தேவி என்றும் பெயர்; சுந்தரமாறருக்கு முதுகுடுமிப்பெருவழுதி என்றும் பெயர்; நான்குமேக வேந்தர்கள், வருணன் கட்டளைப்படி பெய்த பெருமழையை நான்கு மாடங்களாகித் தடுத்து மதுரையைக் காப்பாற்றியதனால் மதுரைக்கு நான்மாடக் குளக்கீழ் மதுரை என்ற பெயர், மாணிக்கம் பிறக்குமிடம் இலங்கையிலுள்ள சமனொளி மலையைச் சூழ்ந்துள்ள வலவை, மாவலிகங்கை, கம்பளை, கல்லணை முதலியன என்பது போன்ற பல செய்திகள் முந்திய திருவிளையாடற் புராணத்தில் மட்டுமே இடம்பெறுகின்றன. இன்ன பாண்டியன் காலத்தில் இன்ன திருவிளையாடல் நடந்தது, இன்ன பாண்டியன் மகன் இன்னான் என்று பாண்டிய பரம்பரையை இடைவிடாமற் சொல்லிக் கொண்டு போதல் என்பன பிந்திய திருவிளையாடற் புராணத்தின் சிறப்பு.

பரஞ்சோதி திருவிளையாடற் புராணம் பிற்காலத்திலே பிரசித்தி பெற்றுள்ளமையினால் இன்று அடைமொழியில்லாமல் திருவிளையாடற் புராணமெனக் குறிப்பிட்டால், அது இப்புராணத்தையே குறிக்குமென்ற நிலை காணப்படுகின்றது. திருவிளையாடற் புராண வசனம் எழுதிய ஆறுமுகநாவலர் பரஞ்சோதி நூலையே அடிப்படையாகக் கொண்டார். புராணவரலாறுகள் பொதுவாக, நைமிசாரண வனத்தில், சனகாதி முனிவர்கள் வினாவ, சூதமுனிவர் மேல் வருமாறு கூறத்தொடங்கினார் என்ற ரீதியிலே கதையைக் கூறத் தொடங்கும். பரஞ்சோதி நூலிலே, நைமிசாரணிய வனத்துக்குப் பதிலாகக் கைலாசமலை இடம்பெறுகிறது. சூதமுனிவரிடம் பிற முனிவர்கள் கேட்டவுடன் முத்தி தரும் தலத்தைப் பற்றி விசாரித்தபோது அவர் தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய மூவகையாலும் சிறந்த மதுரை ஆலவாயைக் குறிப்பிட்டு அவர்களை நாரத முனிவரிடம் நெறிப்படுத்த, நாரதர் அம்முனிவர்களை முருகனிடம் வேதோபதேசம் பெற்ற அகத்தியரிடமிருந்து விடயத்தை அறிந்து கொள்ளச் செய்தார் என்று இப்புராண வரலாறு தொடங்குகிறது. பக்தர்களுடைய மனதைப் பிணிப்பதற்காகக் கைலாயமலை என்ற பெரிய இடப்பெயரும் சூதமுனிவர் முதலிய பெரியவர்கள் பெயரும் பயன்படுத்தப்படுகின்றன எனலாம். இங்கு இன்னொரு விசேடம் கவனிக்கத் தக்கது. சைவசித்தாந்த நெறி வீட்டின்பத்தையே ஒரே இலட்சியமாக வற்புறுத்துகிறது. சுhதாரண பொதுமக்கள் வீட்டின்பத்தை மட்டும் நாடிக் கோவில் வழிபாடு செய்வதில்லை என்பது பலரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. போகங்களோடு கூடிய உலகவாழ்க்கையை விரும்புபவர் பலர். ஆலவாய் போகத்தையும் மோட்சத்தையும் கொடுக்குமென்று இப்புராணம் கூறும்.

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தின் அடிப்படையிலே சில குறிப்புகளைக் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். இப்புராணத்திலுள்ள திருவிளையாடல்கள் அறுபத்துநான்குள், முதலாவதாகிய இந்திரன் பழிதீர்த்த படலம் இரண்டாவதான வெள்ளையானை சாபந்தீர்த்த படலம், பதினாறாவதான வேதத்துக்குப் பொருளருளிச்செய்த படலம் முதலியன கிருதயுகத்திலே நிகழ்ந்தனவெனப்படுகிறது. தற்காலத்தைக் கலியுகம் என்று கொள்ளும் இந்து மதம் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் என்பன ஒன்றன்பின் ஒன்றாக பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நிலவி முடிந்துவிட்ட யுகங்களென விளம்பும். பொற்கால மெனத்தகும் கிருதயுகம் ஒன்றிருந்து அதன்பின் வீழ்ச்சி ஏற்பட்டு ஏற்பட்டு இன்றைய கலியுகம் வந்ததெனப்படுகிறது. மிகமிகத் தொன்மையான காலத்திலே நிகழ்ந்தது எனச் சுட்டுவதற்காகக் கிருதயுகம் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால், தொடர்ந்து வந்த திரேதாயுகம், துவாபர யுகங்களில் நிகழ்ந்ததாக எந்தத் திருவிளையாடலும் குறிக்கப்படவில்லை.

கிருதயுகத்திலே நடந்த திருவிளையாடல்கள் எத்தனை என்று திருவிளையாடற் புராணம் வரையறுத்துக் கூறாவிடினும் அவை இருபத்தொன்று என முடிவு செய்யலாம். சிவன், உமை, முருகன் ஆகியோர் மானிடராக வந்து மதுரையிலே அரசாட்சி செய்த காலம் கிருதயுகத்திலேயே நிகழ்ந்திருக்கக் கூடியது. நான்காவதான தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலத்திலிருந்து பதினைந்தாவதான மேருவைச் செண்டாலடித்த படலம் வரை மேற்படி சிவன் முதலிய மூவர் ஆட்சிக்கால நிகழ்ச்சியே பாடப்படுகிறது. இந்திரனும் வருணனும் வேதகாலத்து முக்கிய தெய்வங்களாவர். இந்திரன் சம்பந்தப்பட்ட திருவிளையாடல்கள் கிருதயுகத்தன என்று கொள்ளப்படுவதனால், வருணன் தொடர்பான திருவிளையாடல்களும் கிருதயுகத்தன எனறே கொள்ளவேண்டும். பதினெட்டாவது வருணன் கடலை வற்றச் செய்த படலமும் பத்தொன்பதாவது நான்மாடக் கூடலான படலமும் வருணன் சம்பந்தப்பட்ட சிவபெருமானுடைய லீலைகளாகும். இந்தத் திருவிளையாடல்கள் இரண்டும் நடந்த காலத்திலிருந்த பாண்டிய மன்னன் அபிடேகபாண்டியன். அவனே இருபதாவது எல்லாம் வல்ல சித்தர் திருவிளையாடற் படலத்திலும் இருபத்தோராவது கல்லானைக்குக் கரும்பருத்திய படலத்திலும் இடம் பெறுவதால் இந்தத் திருவிளையாடல் வரையிலாவது கிருதயுகத்தன என்றே கொள்ளவேண்டும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:01 pm

பாண்டியர்களின் அயலவர்கள், போட்டியாளர்கள், எதிரிகள் என்ற வகையிலே அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சோழர்கள் திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறுமாற்றை நோக்குவது சுவையானது. சோழர்கள் பற்றிய குறிப்புகள் 22, 28, 29 ஆகிய திருவிளையாடல்களிலே சமணர்களோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளன. பாண்டியர்களின் எதிரிகளான சோழர்களும் சைவர்களின் எதிரியான சமணர்களும் ஒன்றிணைக்கப்படுகின்றனர். சோழமன்னர்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்களெனப்படுகிறது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரென்பதும் பல்லவர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை பாண்டியர்களின் முக்கியமான எதிரிகளாக விளங்கினார்களென்பதும் ஹாலாஸ்ய மகாத்மியம் எழுதியவருக்கும் பரஞ்சோதி முனிவருக்கும் தெரிந்திருக்கவில்லை. மேலும் சமணர்கள் அபிசாரவோமம் செய்ததுபற்றியும் வேள்விச்சாலை, ஓமகுண்டம் முதலியவற்றை அவர்கள் பயன்படுத்தியது பற்றியும் இத்திருவிளையாடல்கள் குறிகின்றன. சைவர்களின் பரமவைரிகளாகச் சமணர்கள் எண்ணாயிரவர் ஒரு காலத்தில் விளங்கினார்கள் என்ற உண்மையின் அடிப்படையிலே இந்தத் திருவிளையாடற் குறிப்புகள் கற்பிக்கப்பட்டிருக்கவேண்டும். சமணருக்கு வேள்விகள் ஒரு சிறிது கூட உடன்பாடில்லை என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது.

சோழமன்னர்களைச் சமணர்களாகக் காட்டிய திருவிளையாடற் புராணம் அவர்களைச் சைவர்களாகவும் காட்டுகிறது. சோழர்குலம் எப்போதும் சைவத்தையே ஆதரித்து நின்றிருக்கிறது. சோழமன்னர் எவரும் புறச்சமயியாக இருந்ததற்கு இதுவரையில் வரலாற்றுச் சான்றெதுவும் கிடைக்கவில்லை. ஆனால், பல்லவ மன்னர்கள் ஒருகாலத்திலே சமணர்களாக இருந்து சைவர்களாக மாறினார்கள். பல்லவர்களையும் சோழர்களையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியாத நூலாசிரியர் முப்பத்து நாலாவது விடையிலச்சினையிட்ட படலத்திலும் முப்பத்தைந்தாவது தண்ணீர்ப்பந்தல் வைத்த படலத்திலும் காடுவெட்டிய சோழன் என்ற பெயருடைய காஞ்சிபுரத்துச் சோழனைக் குறித்துள்ளார். காடுவெட்டி என்பது பல்லவருடைய குலப்பெயர்களுள் ஒன்று. இங்கும் பல்லவனே சோழனெனக் குறிப்பிடப்பட்டுள்ளானெனக் கொள்ள வேண்டும்.

குலோத்துங்க பாண்டியமன்னன் காலத்திலே பழியஞ்சின படலம், மாபாதகந் தீர்த்த படலம், அங்கம் வெட்டின படலம் முதலியன கூறும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. குலோத்துங்கன் என்ற பெயரிலே பிரபலமான பாண்டிய மன்னன் எவனும் இருந்ததில்லை. மூன்று பிரபலமான சோழப் பேரரசர்கள் இருந்தார்கள். பரஞ்சோதி முனிவருடைய நூலிலே பெருந்தொகையான பாண்டிய மன்னர் பெயர்கள் இடம்பெறுகின்றன. இவை எங்கிருந்து பெறப்பட்டன என்பது அறியக்கூடவில்லை. பழியஞ்சின படலக் கதை குலோத்துங்க பாண்டியனோடு ஓரளவுக்குத் தொடர்புடையது. ஏனையவை இரண்டும் அவ்வாறு தொடர்புறவும் இல்லை.

வரகுணபாண்டியன் - பாணபத்திர இசைக்கலைஞன் காலத்தில் வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம், விறகுவிற்ற படலம், திருமுகங்கொடுத்த படலம், பலகையிட்ட படலம், இசைவாது வென்ற படலம் என ஐந்து படலங்களுட் கூறப்படுகின்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றனவாகக் கூறப்படுகின்றன. வரகுணன் என்ற பெயரில் இரண்டு பாண்டிய அரசர்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்துள்ளனர். அவர்களுள் இரண்டாமவன் சிறந்த சிவபக்தனாகவுமிருந்துளன். சிவன் கோவில், முருகன் கோவில் ஆகியவற்றின் திருப்பணிகளுக்கும் பூசைகளுக்கும் அவன் கொடைகள் வழங்கியதைச் சாசனங்கள் எடுத்து மொழிகின்றன. இரண்டாவது வரகுணன் பல்லவனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதையே, இச்சாசனம் சோழனை வென்றதாகக் குறிக்கிறது. வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம், என்பதில் வரகுணனே கதாநாயகன். இசைவாதுவென்ற படலம் என்பதில் பாணபத்திரன் மனைவிக்காகச் சிவபெருமான் இராசராச பாண்டியனை நடுநிலையில் நிறுத்தி உதவுகிறார். புhணபத்திரன் சிவபெருமானுடைய ஓலை பெற்றுச் சென்று பொருள் பெற்றது சேரமானிடமாகும். இந்தச் சேரமான், சேரமான் பெருமாள் நாயனார் என்று பெரிய புராணத்திலே போற்றப்படுபவராக இருக்கவேண்டும். அவ்வாறு கொண்டால், இங்கு வரலாறு சம்பந்தமான பிரச்சினை ஒன்று எழுகிறது. இரண்டாவது வரகுணன் மாணிக்கவாசகர் காலத்து அரிமர்த்தன பாண்டியனாக இருக்கவேண்டும் என்று அறிஞர் சிலர் கொள்வர். சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி காலத்தவர். சுந்தரமூர்த்தி நாயனார் ஒன்பதாம் நூற்றாண்டு முற்பகுதியைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுகிறது. வரகுணன் என்ற பெயரில் இருவர் இருந்ததால், குழப்பம் ஏற்பட்டிருக்கவேண்டும்.

திருவிளையாடற் புராணத்திலே மானிடர் மட்டுமன்றி மிருகங்கள், பறவைகள் முதலியன சிவன் அருள் பெற்றதைக் குறிக்கும் கதைகளும் உண்டு. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம், பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் ஆகியன மிருகசாதி அருள் பெற்றதைக் குறிக்கின்றன. வேளாளப் பிள்ளைகள் துஷ்டர்களாக இருந்து பிருகஸ்பதியின் சாபம் பெற்றதனால், பன்றிக்குட்டிகளாகப் பிறந்து தாய்தந்தைகளையும் இழந்தனவெனப்படுகிறது. கரிக்குருவிக்கு உபதேசஞ்செய் படலம், நாரைக்கு முத்தி கொடுத்த படலம் என்பன சொக்கர் பறவைகளுக்கு அருளியதைக் கூறுகின்றன. முற்பிறப்பிலே மானிடனாகப் பிறந்து செய்த புண்ணியத்திலே குறைவேற்பட்டமையே கரிக்குருவியாகப் பிறந்த காரணமெனப்படுகிறது. நாரைக்கு முற்பிறவிபற்றிச் சொல்லாதது ஏன் என்று புலப்படவில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:01 pm

நாற்பத்தொன்பதாம் திருவிளையாடலான திருவாலவாயான படலம் இருபத்திரண்டு பாண்டிய மன்னர்கள் மகன் பின் மகனாக ஆண்டனரென அவர்களுடைய பெயர்களை அடுக்கிச் செல்கிறது. அதன் பின் பிரளயம் பற்றிப் பேசப்படுகிறது. பிரளயத்தின்பின் புதிய உலகம் படைக்கப்படுகிறது. இதனைக் கலியுகத்தின் தொடக்கமாகப் பரஞ்சோதி முனிவர் கொண்டிருக்க வேண்டும். அக்கினி, சூரியன், சந்திரன் என்போரின் அம்சங்களாகச் சேர சோழ பாண்டியர் படைக்கப்பட்டனரெனப்படுகிறது. முதலிலே தோன்றிய வம்மிசசேகர பாண்டியனுக்கும் விக்கிரம சோழனுக்கும் போர் மூண்டதாகவும் பாண்டியன் சார்பிலே சொக்கர் பாணம் தொடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்ததாகவும் சுந்தரப்பேரம்பெய்த படலத்திற் கூறப்பட்டுள்ளது.

மதுரையிலே சங்கம் இருந்து தமிழ் வளர்த்ததென்ற பண்டைக்கால மரபு ஆறு படலங்களாகத் திருவிளையாடற் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. சங்கப்பலகை தந்த படலம், தருமிக்குப் பொற்கிழியளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம், கீரனுக்கிலக்கணமுபதேசித்த படலம், சங்கத்தார் கலகந்தீர்த்த படலம், இடைக்காடன் பிணக்குத்தீர்த்த படலம் என்பனவே அவை. ஏட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்கள் தோன்றிய காலத்தை விளக்குவதற்காக இறையனாரகப் பொருளுரையில் முன்வைக்கப்பட்ட சங்ககாலம் பற்றிய கதையில் - நாற்பத்தொன்பது புலவர்கள் கடைச்சங்கம் இருந்து தமிழாராய்ந்தனரென்ற கதைப்பகுதியில் - திருவிளையாடல்கள் முதலிடம் பெற்றுக் கதையமைப்பு முற்றாகத் திரிக்கப்பட்டுள்ளது. வடமொழி எழுத்துக்களின் அம்சங்களாகப் பிறந்த நாற்பத்தெட்டுப் புலவர்கள் சங்கப்புலவர்களாகிச் சிவபெருமானுடன் கூடி நாற்பத்தொன்பது புலவராகினர்;. சங்கப்புலவர்களுக்கு மட்டும் இடமளிக்கும் சங்கப்பலகையைச் சிவனிடம் இரந்து பெற்றார்கள். குறுந்தொகையில் இடம்பெறும் கொங்குதேர் வாழ்க்கை என்று தொடங்கும் பாடல் இறையனார் என்ற புலவரால் பாடப்பட்டதால், இறையனார் என்பது சிவபெருமானுக்கு வழங்கிய பெயராகக் கொள்ளப்பட்டு, அப்பர் சுவாமிகளுடைய தேவாரத்தில் இடம்பெறும் தருமிக்குப் பொற்கிழியளித்த கதையுடன் இணைக்கப்படுகிறது. சங்கப்புலவர்களுள் முக்கியமானவர்களுள்ளே ஒருவரான நக்கீரர் பெயரும் இடைக்காலத்தில் வாழ்ந்திருந்து கைலைபாதி காளத்திபாதி யந்தாதி, கோபப்பிரசாதம் முதலிய பக்திநூல்களைப் பாடிய நக்கீரர் பெயரும் ஒன்றாக இருந்ததனால் ஒரே புலவரைக் குறிப்பனவாக மாற்றப்படு;கின்றன.

சங்ககாலப் புலவர்களுள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கிய கபிலர், பரணர், நக்கீரர் என்போர் சங்கத்தார் கலகந்தீர்த்த படலத்திலே குறிப்பிடப் படுகின்றனர் நக்கீரருக்கு இலக்கணம் படிப்பிக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.உமாதேவியாரின் ஆலோசனைப்படி, இலக்கண ஆசிரியர் பதவி அகத்திய முனிவருக்கு வழங்கப்படுகிறது. கைலைமலையிலிருந்து பொதியமலைக்கு அகத்தியர் வந்தபோது, சிவபெருமான் அகத்தியருக்கு உபதேசித்த தமிழிலக்கணம், இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது. சிறந்த பாடல் எவருடையது என்பது பற்றி நாற்பத்தெண்மருள்ளே எழுந்த கலகம், சிவன் ஆலோசனைப்படி, ஊமைப்பிள்ளையாகிய உருத்திர சர்மனால் முடிவு செய்யப்பட்டு, நக்கீரர், கபிலர், பரணர் என்போரின் உயர்வு உறுதி செய்யப்படுகிறது. கபிலரின் நண்பரான இடைக்காடர் பாண்டியனுடன் மனஸ்தாபப்பட்டு வடதிசை ஏக, சொக்கரும் புலவருக்காக மதுரையை விட்டு வடதிசையேகியதாகக் கூறப்படுகிறது. இச்செயல் பாண்டியனுக்கு அறிவு கொளுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

திருவாதவூரடிகளுக்குபதேசித்த படலம், நரி பரியாக்கிய படலம், பரி நரியாக்கிய படலம், மண் சுமந்த படலம் என்பன மாணிக்கவாசக சுவாமிகளோடு தொடர்புடைய திருவிளையாடல்களாம். மதுரைக்கு அண்மையிலுள்ளதும் சமணர் செல்வாக்குப் பிரதேசமாக ஒருகாலத்திலே விளங்கியமைக்குக் கல்வெட்டுச் சான்று உள்ளதுமான திருவாதவூரிற் பிறந்து பாண்டியனுடைய முதலமைச்சராக மதுரையிலே பணியாற்றிய மாணிக்கவாசகர் திருவாலவாய் தொடர்பாகவோ சொக்கநாதர் தொடர்பாகவோ எதுவும் பாடாதமை வியப்பைத் தருகிறது. திருவாதவூரடிகளுக்குபதேசித்த படலத்திலே சைவ சித்தாந்தக் கருத்துகள் செறிவாகக் காணப்படுகின்றன. திருப்பெருந்துறையிலே குருவடிவிலே தோன்றிய சிவன் கையிலே சிவஞானபோதம் விளங்கியதாகக் கூறப்படுகிறது. சிவஞானபோதம் நானூறு ஆண்டுகள் பிந்தித் தோன்றியதென்பது பரஞ்சோதிக்குத் தெரிந்திருக்கவில்லை. மண்சுமந்த படலத்தின் இறுதிப்பகுதி, மாணிக்கவாசகரின் எஞ்சிய வரலாற்றைச் சுருக்கமாகக் கூறி முடிவெய்துகிறது.

கடைசி மூன்று படலங்களான பாண்டியன் சுரந்தீர்த்த படலம், சமணரைக் கழுவேற்றிய படலம், வன்னியுங் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் என்பன திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தொடர்புடைய திருவிளையாடல்கள். மாணிக்கவாசக சுவாமிகள் சம்பந்தமான திருவிளையாடல்கள் முதலிலும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சம்பந்தமான திருவிளையாடல்கள் பிறகும் கூறப்படுவதால், மாணிக்கவாசகர் காலத்தால் முந்தியவராகவேண்டும் என்று வாதிப்பாருளர். ஆனால், திருவிளையாடற் புராணம் வரலாற்றுணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது என்று கூற இயலாது.

சிவபெருமான் திருவிளையாடல்கள் நடத்தியபோது, எவருக்காக நடத்தினார் என்று நோக்குவது அன்றைய சமுகத்தில் பல்வேறு பிரிவினர் பெற்றிருந்த முக்கியத்துவத்தை ஓரளவுக்கு உணர்த்தும். இக்காலச் சூழலிலே அரசனே சமுகத்தின் தலைவனாக விளங்கினான். அரசனுக்காக நடத்தப்பட்ட திருவிளையாடல்கள் இப்புராணத்திலே இருபத்தெட்டாகும். அவற்றின் இலக்கங்களாவன:- 3, 4-15, 17, 20-21, 22, 24, 28, 29, 34, 35, 37, 40, 49, 50,. பிராமணருக்காகச் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் ஒன்பதுடன் பிராமணரின் குலமுதல்வராகக் கொள்ளப்படும் பிரமதேவருக்காக நடத்திய ஐந்தையும் சேர்த்தால் பதினான்கு ஆகும், அவையாவன:- 26, 31, 58-61, 62-63, 51-56. மதுரைமாநகரில் வணிகர் மிக உயர்ந்த அந்தஸ்துடன் விளங்கியிருப்பார்களாதலாற் போலும், அவர்களுக்காக 32, 39, 61, 64 என்னும் இலக்கங்களுள்ள நான்கு திருவிளையாடல்கள் நடந்திருக்கின்றன. பாணர் என்னும் இசைக்கலைஞர்களுள் ஒரு குடும்பத்தினர் மட்டுமே குறிப்பிடப்படுகிறபோதிலும், அக்குடும்பத்தினர் சார்பாக 41-44 என்னும் இலக்கங்களுள்ள நான்கு திருவிளையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. அஃறிணைப்பொருள்களுள் மிருகங்கள் சார்பாக இரண்டு திருவிளையாடல்களும் பறவைகள் சார்பாக இரண்டு திருவிளையாடல்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. பன்றிக்குட்டிகள் சார்பாக 45, 46 இலக்கங்களுள்ள இரண்டு திருவிளையாடல்கள் நிகழ, கரிக்குருவி சார்பாக 47ஆம் திருவிளையாடலும் நாரை சார்பாக 48ஆம் திருவிளையாடலும் நிகழ்ந்துள்ளன. இந்திரன் சார்பாக நடந்த முதலிரு திருவிளையாடல்களையும் வருணன் சார்பாக நடந்த 17, 18 ஆகிய இரு திருவிளையாடல்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், எஞ்சியவற்றுள் ஒவ்வொரு சாராருக்காக ஒவ்வொரு திருவிளையாடல் நிகழ்ந்ததைக் காணலாம்:- வேடருக்காக 25- ஆவது, வேளாளருக்காக 38- ஆவது, தேவரடியாருக்காக 36- ஆவது, இயக்கர்ப் பெண்களுக்காக 33- ஆவது, சேனாபதிக்காக 25- ஆவது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:02 pm

திருவிளையாடலை நிகழ்த்திய சிவபிரான் எவ்வௌ; வடிவங்களிலே தோன்றினார் என்பதை நோக்குவதினாலும் அக்காலச் சமுதாய அமைப்பிலே பல்வேறு பிரிவினர் பெற்றிருந்த முக்கியத்துவத்தை ஓரளவு உணரலாம். அசரீரியாக இறைவன் தம்முடைய கருத்தை உணர்த்துதல் சொப்பனத்திலே தோன்றி உணர்த்துதல் என்ற உத்திகள் சில இடங்களிற் கையாளப்பட்டுள்ளன. குறிப்பிடக்கூடிய ஓரமிசம் சிவபிரான் பிராமண வடிவத்திலே தோன்றினார் என்ற குறிப்பைக் காணக்கூடவில்லை. திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்திலே, சிவபிரான் கிழப்பிராமண வடிவத்திலே தோன்றினார் என்ற கதைக் குறிப்பு பல இடங்களிலே காணப்படுகிறது. சொக்கர் அரசராகத் தோன்றினார் என்று நேரே கூறப்படாவிடினும் சொக்கரும் அங்கயற்கண்ணியும், முருகனும் பாண்டியர்களாக மதுரையிலே வந்திருந்து அரசாட்சி செய்த மகாத்மியத்தைத் தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப்படலம், திருமணப்படலம், வெள்ளியம்பலத்திற் கூத்தாடிய படலம், குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம், அன்னக்குழியும் வைகையுமழைத்த படலம், மலயத்துவசனையழைத்த படலம், உக்கிர பாண்டியன் திருவவதாரப் படலம், உக்கிரகுமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம், கடல் சுவற வேல் விட்ட படலம், இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம், மேருவைச் செண்டாலடித்த படலம் என்னும் நான்கிலிருந்து பதினைந்து வரையிலான திருவிளையாடல்கள் பாடியுள்ளன.

தமிழ்ப்பொதுமக்கள் சித்துகள்பல வல்ல சித்தர்களை மதித்துப் போற்றுபவர்களாக வந்ததனாற் போலும், சிவபிரான் சித்தராகத் தோன்றியதை எல்லாம் வல்ல சித்தர் திருவிளையாடற் படலம், கல்லானைக்குக் கரும்பருத்திய படலம், இரசவாதஞ் செய்த படலம், திருவாலவாயான படலம் என்பன சித்திரிக்கின்றன. மதுரை நகரிலே சிறப்புற்றிருந்த வணி;கர் உருவிலே சொக்கர் தோன்றியதை மாணிக்கம் விற்ற படலம், வளையல் விற்ற படலம், மாமனாக வந்து வழக்குரைத்த படலம் என்பன பாடுகின்றன. மனிதர்கள் வேடுவர்களாக வாழ்ந்த காலத்திலேயே சிவவணக்கம் தோன்றிவிட்டதென்பதை உறுதிப்படுத்தவோ அன்றி மதுரைக்கு அருகில் வேடுவர்கள் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டவோ, சிவபிரான் வேடவடிவம் கொண்டது பற்றி மாபாதகந்தீர்த்த படலம், சோழனை மடுவில் வீட்டிய படலம், சுந்தரப் பேரம்பெய்த படலம் என்பன கூறுகின்றன. சிவபிரான் வேடவடிவங் கொள்ளவேண்டிய தேவை இக்கதைகளில் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

சொக்கர் புலவராக வந்து சங்கத்துக்குத் தலைமை தாங்கிய கதை சங்கம் பற்றிய நான்கு திருவிளையாடல்களில் இடம்பெறுகிறது. மேலும், சொக்கர் சிவனடியாராகத் தோன்றியதை விருத்த குமாரபாலரான படலத்திலும் வில்வீரராகத் தோன்றியதை யானை எய்த படலத்திலும், வாள் வித்தை ஆசிரியராகத் தோன்றுவதை அங்கம் வெட்டின படலத்திலும், பரதவராகத் தோன்றியதை வலைவீசின படலத்திலும், கூலியாளாகத் தோன்றியதை மண்சுமந்த படலத்திலும் காணலாம்.

தமிழ் இலக்கியப் பரப்பிலே புராணங்கள் ஒரு கணிசமான பகுதியாகும். வடநாட்டிலே தோன்றிய வடமொழிப் புராணங்கள் தமிழிலே மொழிபெயர்ப்புகளாகவும் தழுவல்களாகவும் வந்துள்ளன. அவை ஒரு வகை. தமிழ்நாட்டிலேயே தோன்றிய தமிழ்ப்புராணங்களும் தமிழ்நாட்டிலே வடமொழியிலே தோன்றிப் பின்பு தமிழாக்கம் பெற்ற புராணங்களும் மற்ற வகை. இந்த இரண்டாவது வகைப் புராணங்களை ஆராய வேண்டியது தமிழ் அறிஞர் கடன். பெரியபுராணம் தமிழ் அறிஞர் கருத்தை ஓரளவு கவர்ந்துள்ளது. தமிழ்மொழிக்குச் சிறப்பாக உரிய புராண வகையான தலபுராணம் பற்றி தமிழில் தலபுராண இலக்கியம் என்ற தலைப்பில் கேரளப்பல்கலைக்கழகத்திலே முதுமாணிப்பட்ட ஆயவுக் கட்டுரை வரைந்த வே.கிருஷ்ணசாமி 1974இல் வெளியிட்ட நூல் இன்னும் திசைகாட்டியாகவே இருக்கிறது. திருத்தொண்டர் புராணத்துக்கும் தலபுராணத்துக்குமிடையே திருப்புமையமாக அமைந்துள்ள திருவிளையாடற் புராணத்துக்கு ஓர் அறிமுகமாகச் சில குறிப்புரைகளை இக்கட்டுரை தருகின்றது. புராணங்களின் பக்கம் அறிஞர்களின் கருத்தைத் திருப்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 9:42 pm

பதிவுக்கு மிக்க நன்றி சிவா.. புராணக்கூறுகள் என் ஆய்வுக்குத் தேவையான தகவல் .. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 11:35 pm

இதில் நிறைய விஷயங்கள் நான் இதுவரை அறியாதது....

அரிய தகவல்கள் அருமையாய் தந்த அன்பு சிவாவுக்கு அன்பு நன்றிகள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக