ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

+2
ரமீஸ்
சிவா
6 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Sat Apr 24, 2010 12:58 pm

First topic message reminder :



மக்கா வாழ்க்கை


பரம்பரை

ஆசியாவிலுள்ள பல நாடுகளில், தென்வடலாக 1500 மைல் நீளமும் கிழமேலாக 800 மைல் அகலமுள்ள பாலைவனப் பிரதேசமான அரபு நாடும் ஒன்று. அந்த நாடு செழிப்பால் வறண்ட நாடு. ஆயினும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் ஒளிதில் தொடர்பு கொள்ளத்தக்க முக்கியமான ஓர் இடத்தில் அது அமைந்திருக்கிறது. எனவே தான் மக்கா பண்டைக்காலங்தொட்டு ஒரு முக்கிய வியாபார கேந்திரமாகத் திகழ்ந்து வந்துள்ளது.

இவ்வித நடு நாயகமான ஓர் இடத்தில் அரபு நாடு அமைந்திருந்த போதிலும், வளமில்லாத பாலைவனப் பிரதேசமாக இருக்கும் காரணத்தினால், சுற்றுப்புற நாடுகளை அரசாண்ட அரசர்கள் எவரும் அரபு நாட்டின் மீது ஆசையோ, அக்கறையோ கொண்டு ஆட்சி கொள்ளமுன் வரவில்லை. ஆனதால், அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரலாயினர். இங்கு வாழ்ந்த வழுகின்ற மக்களை, நூஹ் நபியவர்களின் புத்திரர் ஷாம் என்பவரின் வழித்தோன்றல்களான ஆதிப் பழங்குடி அரபியர்கள், பாலைவன அராபியர்கள், குடியேறிகளான அந்நியர்கள் என மூன்று பெரும் பிரவுக்குள் அடக்கலாம்.

அரபுநாட்டில் குடியேறி வசித்த அந்நியர்களில் ஆபிரஹாம் தீர்க்கதரிசி என்னும் இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயீல் நபியும் சேருகின்றனர். இப்ராஹீம் நபி இராக்கிலுள்ள கல்தூனியா என்ற இராச்சியத்தைச் சேர்ந்தவர். இவருடைய சிறிய தந்தை ஆஸர் என்பவர் கோயில்களுக்கு உருவ வழிபாடு செய்வோருக்கும் விக்கிரகங்கள் செய்து கொடுத்து வந்தார். இப்ராஹீம் நபி விக்கிரக வணக்கத்தை கண்டித்து ஏக இறைவனை வணக்குமாறு மக்களிடையேப் பிரச்சாரம் செய்தார். இதனால் அவரின் சிறிய தந்தையும் அந்நாட்டு அரசன் நம்ரூது என்பானும், உற்றார் உறவினரும் இவரை வெறுத்து அந்நாட்டை விட்டும் வெளியேற்றிவிட்டனர்.

எனவே, அவர் பாலஸ்தீனம் சென்று அங்கு கன்ஆன் என்னும் இடத்தில் தங்கினார். பின் அங்கிருந்து வெளியாகி சிரியாவுக்கு வந்து வசித்த போது தமது சிறிய தந்தையின் மகளான சாரா என்ற பெண்மணியை மணம் செய்து கொண்டார். சில காலஞ்சென்று மீண்டும் சொந்த நாட்டுக்கு வந்து இறைவனின் மகத்துவத்தைப் பற்றியும், விக்கிரக வணக்கத்தைக் கண்டித்தும் பிரச்சாரம் செய்யலானார். அதனால் அரசன் நம்ரூது அவரை நெருப்புக் குண்டத்துள் எறியச் செய்தான். இறைவனின் ஆணைப்படி அந்நெருப்பு அவருக்கு குளிர்ந்த புங்காவாக மாறி விட்டது. பின்னர் சொந்த நாட்டைத் துறந்து மனைவி சாராவுடன் எகிப்து நாட்டுக்குச் சென்றார். எகிப்து அரசன் ரக்கிய்யூன் என்பான் இப்ராஹீம் நபியைக் கண்ணியப்படுத்தி பல வெகுமதிகளுடன் அரசகுமாரி ஹாஜரா என்ற மங்கையையும் பரிசிலாகக் கொடுத்தனுப்பினான்.

இப்ராஹீம் நபியவர்களுக்கும் வயதாகி வந்தது. ஆயினும் சாராவைக் கொண்டு மகப்பேறு கிட்டாதிருந்தது. எனவே ஹாஜராவையும் அவர் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் ஹாஜராவுக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது. அவ்வன்புக் குழந்தைக்கு இஸ்மாயீல் என அழகுத் திருப்பெயர் சூட்டி மிக்கப் பற்றுப் பாசத்துடன் வளர்த்தார்கள். இப்ராஹீம் நபியவர்களுக்கு அது சமயம் 86 வயதாக இருந்தது. அதன்பின் மூத்த மனைவி சாராவுக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு இஸ்ஹாக் எனப் பெயரிட்டார். அது போழ்து இப்ராஹீம் நபி 99 வயதை அடைந்திருந்தார்கள்.


Last edited by சிவா on Mon May 24, 2010 7:40 pm; edited 2 times in total


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:20 pm

இக்கொடுமையைத் தாம் செல்லும் பாதையில் பல தடவை கண்டு மனந்தாளா அபுபக்கர் ஒருநாள் பிலாலின் எஜமானன் உமய்யாவிடம், “இவ்வேழை அடிமையை ஏன் இவ்வாறு துன்புறுத்துகிறாய்? இவைனின் அச்சம் உனக்கு ஏதும் இல்லையா? எனச் சினந்து கேட்டனர். அதற்கவன், “நீர் தானே இவனைக் கெடுத்து விட்டீர். உமக்கு இரக்கமாக இருந்தால் உமது பணப்பையைத் திறந்து இவனை வாங்கிக் காப்பாற்றுமே என ஏளனத்துடன் கூறினான். அதற்கு அபுபக்கர் (ரலி) “உன்னைப் போல் கல்லை வணங்கும் அடிமையொருவன் என்னிடமிருக்கிறான். நீ அவனை ஏற்றுக் கொண்டு பிலாலை என்னிடம் ஒப்படைத்து விடுகிறாயா?” எனக் கேட்டார். உமய்யா அதற்குச் சம்மதித்தான். உடனே தம் அடிமையைக் கொடுத்து, பிலாலைப் பெற்று அக்கணமே அவருக்கு விடுதலை அளித்து விட்டார் அபுபக்கர் (ரலி).

உமர் இப்னு கத்தாப் இஸ்லாத்தில் சேருமுன் முஸ்லிமாகி இருந்த தமது பெண் அடிமை லுபைனாவைத் தினமும் கை கடுக்கு மட்டும் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அபூஜஹல் தன் அடிமைப்பெண் சுமய்யாவை இஸ்லாத்தை தழுவியதற்காக மர்ம ஸ்தானத்தில் அம்பெய்து கொன்றான்.

யாஸிர் என்பவரை அவருடைய எஜமானன் அவரின் இரண்டு கால்களையும் இரண்டு ஒட்டகங்களின் பின்னங்கால்களில் இணைத்துக் கட்டி அவ்வொட்டகைகளை வலமும் இடமுமாக விரட்டிக் கவடு கிழித்து உயிர் துறக்கச் செய்தான். அக்கொடிய மாபாவி.

அபூபக்கர் (ரலி) இனிய சந்தமுடையவர். சாதாரணமாக அவர் தமது வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்து தினமும் குர்ஆன் திருவசனங்களை உருக்கமுடன், இனிய ராகத்தில் பரவசமுற்று ஓதுவது வழக்கம். அவ்வழியே செல்வோரும், அக்கம் பக்கத்துப் பெண்களும், சிறார்களும் அவர் ஓதுதலை லயித்து நின்று கேட்பர். அவர் ஓதுவதைக் காதால் கேட்ட அநேகர் அத்திருவசனங்களால் வசீகரிக்கப்பெற்று, இஸ்லாத்தைத் தழுவினர். இதைக்கண்ட குறைஷி களின் நெஞ்சம் புண்ணாகி நெடுமூச்செறிந்தன. அபூபக்கர் (ரலி)க்கு பல தொல்லைகளை அளித்தனர். அவர் மக்காவைத் துறந்து அபிஸீனியாவுக்குப் புறப்பட்டார். ஆனால் இடையில் இப்னு தக்னா என்ற தலைவர் ஒருவர் குர்ஆனின் திருவசனங்களை மற்றவர் காதில் விழா வண்ணம் மெல்லிய சத்தத்தில் ஓதிவருமாறு சமரசஞ்செய்து மக்காவிலேயே தங்க வைத்தார். எனினும், நீடித்து அவ்வாறு இருந்து வர அவரால் முடியவில்லை.

எதுவரினும் வரட்டு மெனத் துணிந்து மீண்டும் சப்தமிட்டே ஓதத்தலைப்பட்டு விட்டார். அதுவுமின்றி, அவர் இஸ்லாத்தை மக்களிடை நன்கு பரவச் செய்யும் ஆர்வத்தினால், உணர்ச்சியினாலும் கஃபாவுக்குச் சென்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்வதற்குப் பெருமானாரிடம் அனுமதி கேட்டார். அதற்குக் காலம் கனியவில்லை. எனக்கூறி அண்ணலார் அணைபோட்டு வந்தார்கள். எனினும், அபூபக்கர் (ரலி) கேட்பதாக இல்லை. பெருமானாரை வற்புறுத்தி அனுமதி வாங்கி ஒருநாள் கஃபாவுக்குச் சென்று தமது குத்பாவைத் துவக்கினார். உடனே அங்கிருந்த குறைஷிகள் ஆத்திரமுற்றவர்களாய், அபூபக்கரை உணர்வு இழக்குமளவுக்கு அடித்தும் தாடியைப் பிடித்தும் படுகாயப்படுத்தினர்.

கப்பாப் இப்னுல் இர்ஸ் தமீமி என்பவர் உம்மு நுமர் என்பவரின் அடிமையாக இருந்தார். இஸ்லாத்தை ஏற்றதற்காக குறைஷிகள் கனலும் கங்குளின் மீது அவரைக் கிடத்தித் துன்புறுத்தினர். அதனால் அவரது முதுகு வெந்து பெரியதொரு வெண் தழும்பு ஏற்பட்டிருந்தது. பின்னொரு நாளை அதனைக் காண நேர்ந்த அமீருல் மூமினீன் ஹலரத் உமர் (ரலி) அவர்கள் மிக்க அனுதாபமுற்றுக் கண்ணீர் சிந்தினார்கள்.

சில அடிமைகளை அவர்களின் கழுவிரக்கமற்ற எஜமானர்கள் ஓட்டகைகளின் பச்சைத் தோலில் சுற்றி மணலில் கிடத்திடுவர். சூரியன் கிழக்கிலிருந்து உதயமாகி மேலே ஏறிக் கொண்டு வரும்போது, அதன் சூடு அதிகமாகிக் கொண்டும் வரும் தோலால் சுற்றுப்பட்டுள்ள அவ்வடிமை சுருக்க இறுக்கத்தின் பிடியில் சிக்கி மரண வேதனையடைய நேரும். நஹ்தியா என்ற பெண்மணியும் அவர் மகளும் இஸ்லாத்தைத் தழுவி அப்துத்தார் என்பவரிடம் அடிமைகளாய் இருந்து வந்தனர். அபூபக்கர் (ரலி) அவ்விருவரையும் விலை கொடுத்து வாங்கி விடுதலை அளித்தார். அச்செய்தியை அவர் அப்பெண்மணிகளிடம் சொல்ல வந்தபோது, அவர்கள் தம் எஜமானருக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்தனர். விடுதலைச் செய்தியைக் கேட்ட நஹ்தியா அரைப்பதை நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிடவில்லை. மாறாக, அபூபக்கர் (ரலி)யிடம், “நாங்கள் இருவரும் வெகு நாட்களாக இந்த எஜமானரின் உணவை உண்டு வந்திருக்கிறோம். ஆனதால் குறை வேலைகளையும் சரிவர முடித்துக் கொடுத்துவிட்டு வருகிறோம்” என நன்றி விசுவாசத்துடன் நவின்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட அபூபக்கர் (ரலி) உள்ளம் பூரித்தார். அம்மாதரசியைப் போற்றிப் புகழ்ந்தார்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:21 pm

சாணக்கியம்

நாளுக்கு நாள் நபிகள் நாதரின் சன்மார்க்க அணியில் மக்கள் அதிகமாகச் சேர்ந்து கொண்டே வந்தனர். இதைக் கண்ட குறைஷிகள் கிலேசமுற்றனர். ஒரு நாள் கஃபாவில் குறைஷிப் பிரமுகர்கள் பலர் கூடியிருந்தனர். அவர்களில் உத்பா பின் ரபீஆ என்பவரும் இருந்தார். இவர் அபூகப்யானின் மாமனார் ஆவார். அங்கே அண்ணலாரும் தனியே ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். உத்பாவுக்கு ஓர் யோசனை பளிச்சிட்டது. “முஹம்மதை அணுகி நயமாக ஆசை காட்டிப் பேசிப் பார்ப்போம். ஒரு வேளை வழிக்கு வந்தாலும் வரக்கூடும்”. எனக் கருதியவராய் மற்றவர்களையும் கலந்தார். இது நல்ல யோசனைதான் என அனைவரும் உவந்தனர். உத்பா மெதுவாக எழுந்து நாயகம் அவர்கள் இருந்த இடத்தில் போய், அவர்களில் அருகில் அமர்ந்து பேச்சை நளினமாகத் துவங்கினார். “சகோதரர் மகனே! நீர் உயர் குடியில் பிறந்தவர், உம் மூதாதையர் பெருமைமிக்கவர்கள், மேலும் நீர் எங்களைச் சேர்ந்தவர், நமது தெய்வங்களையும் ஆச்சாரங்களையும் நீ கண்டித்துப் பிரச்சாரம் புரிவதால் நமக்குள் வீண் பூசல்கள் உண்டாகின்றன. இதைச் சரிப்படுத்துவற்குச் சில வழிவகைகளை உம்மிடம் சொல்லலாமென நினைக்கிறேன்” என்றார். “நல்லது தெரிவியுங்கள்” என்றனர் பெருமானார். உத்பா தம் பேச்சைத் தொடர்ந்தார். “உமக்குப் பொருள்மீது விருப்பமிருந்தால் எங்களின் செல்வங்களை எல்லாம் உமது காலடியில் கொண்டு வந்து குவித்து உம்மைச் சீமானாக்குகிறோம். அல்லது பதவியின் மீது ஆசை இருந்தால் உம்மை எங்கள் மன்னராக முடி சூட்டி மகிழ்கிறோம். அல்லது பெண்களின் மீது உமக்கு விருப்பமிருந்தால் இவ்வரபு நாட்டின் அழகு மிக்க ஆரணங்கை உமது கைப்பிடிக்கச் செய்கிறோம். இவை எதிலும் உமக்கு ஆசையில்லையெனில் ஏதோ ஒருவித மூளைக் கோளாறினால் நீர் அவதிப்படுதாகவே நாங்கள் எண்ணத் துணிவோம். எனினும், அதையும் நிவர்த்திக்க எவ்வளவு பொருள் தேவைப்படினும், தயங்காது செலவிட நாங்கள் சித்தமாகவே இருக்கிறோம்” என ஒருவாறு கூறி முடித்தார்.

உத்பா கூறியவை அனைத்தையும் பெருமானார் பொறுமையுடன் புன்முறுவல் பூக்கக் கேட்டறிந்தனர். பின் அவரை நோக்கி, “தாங்கள் கூறிய ஆசைகள் எதுவும் எனக்கில்லை. நான் மூளைக் கோளாறினாலும் அவதிப்படவில்லை. என்னைப் பேய், பிசாசு எதுவும் பிடிக்கவுமில்லை. கருணையங்கடலான இறைவன் என்னை அவனின் திருத்தூதனாக நியமித்து, அவனது வேதத்தை அரபு மொழியில் அருளிச் செய்து, உங்களை நேர்வழிப்படுத்துமாறு உத்திரவிட்டுள்ளான். ஆனால் நீங்களோ நான் கூறுவதைக் கேட்க மனமில்லாது வெறுப்புக் காட்டி விலகி நிற்கிறீர்கள். இறைவனின் திருவசனங்களைக் கேட்டு அவற்றின்படி, நீங்கள் நடக்க முற்பட்டால் இம்மை. மறுமைப் பேறுகளைப் பெற்றுய்வீர்கள். இல்லையேல், அவ்விறைவனே உங்களுக்கும் எனக்கும் இடையில் தீர்ப்பளிக்கப் போதுமானவன்” எனக் கூறியவர்களாய் குர்ஆனின் 41ம் “ஹாமீம்” அத்தியாயத்தின் 37 திருவசனங்களை உத்பாவுக்கு ஓதிக் காண்பித்தார்கள். இறுதியாக, “தெரிவிக்க வேண்டியதை உங்களிடம் தெரிவித்துவிட்டேன். மேற்கொண்டு நடந்து கொள்வது உங்கள் கையில் இருக்கிறது” என உத்தமத் திருநபி (ஸல்) உரைக்கலானார்கள்.

பெருமானாரின் பொன்மொழிகளனைத்தையும் செவி தாழ்த்திக் கேட்ட உத்பா, மனமாற்றமடைந்தவராக குறைஷிகளிடம் திரும்பி வந்து. “முஹம்மதுவின் வார்த்தைகளில் நான் எவ்வித மந்திர சூன்யத்தையும், செப்படி வித்தையுங் காணவில்லை. நான் சொல்கிறபடி நடந்தால் நமக்கு நன்மையுண்டு அவரை அவரது போக்கிலேயே விட்டுவிடுவோம். முஹம்மதுவின் போதனைகள் மற்ற இடங்களுக்கும் பரவத் தான் செய்யும். அதை நம்மால் தடுக்க முடியாது. முஹம்து வெற்றி பெற்றால் அது நமக்குப் பெருமையளிப்பதாகும். நாம் வளமுடன் வாழலாம். ஒருக்கால் அவர் தோல்வியுற நேர்ந்தால் அதில் அவர் மட்டுமே நசிந்து போவார். நம்மை ஒரு சிறிதும் பாதிக்காது என அறிவுரை பகர்ந்தார். இதனைச் செவிமடுத்த குறைஷிகள், “முஹம்மதுவின் பேச்சு வன்மை உத்பாவைக் கவர்ந்து ஆட்கொண்டுவிட்டது. அவர் அதில் மயங்கி மனம் மாறிவிட்டார் எனக் குத்தலாகக் கூறினார். அதற்கவர் “நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன்” என்று சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டும் அகன்றார். சிறிது காலம் சென்றது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:21 pm

இறுதி முயற்சியாகப் பெருமானார் நேரில் அழைத்துப் பேசிப் பார்த்து விடுவது எனக் குறைஷிகளும் ஏனையக் கோத்திரத்தாரும் தீர்மானித்தனர். அதன்படி ஒருநாள் மாலை, பிரமுகர்கள் உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, அபூசுப்யான் பின் ஹர்ப், நஸர் பின் ஹாரிஸ், கலதா, அபுல் பக்தரீ பின் ஹிஷாம், அப்துல்லா பன் அபீஉமையா, ஆஸ் பின்வைல் நபிய்யா, முனப்பஹ், உமையா பின் கலப் ஆகிய அனைவரும் கஃபாவின் முற்றத்தில் வந்து கூடினர். அண்ணலாருக்கு ஆள் அனுப்பி அழைத்தனர். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குறைஷிகளுடன் மனம்விட்டுப் பேசி அவர்களைத் தம் வழிக்குத் திருப்பிவிடலாம் என்ற ஆவலுடன் பெருமானார் அங்கு விரைந்தார்கள். குறைஷிகள், முன்பு உத்பா பேசிய பாணியில் மண், பொண், மங்கை எனப் பேச்சைத் துவங்கிப் பேசினர். நபிகள் கோமான் அவற்றையெல்லாம் தாம் நாடவில்லையெனவும் அவர்களுக்கு இறைவனின் தூதை அறிவித்து அவர்களிடத்துள்ள மூடக் கொள்கைகளையும் அனாச்சாரங்களையும் கைவிடச் செய்து இறைவனின் வழியில் நடக்கத் தூண்டுவது தாம் தமது பணி எனவும் எடுத்துரைத்தார்கள்.

திருத்தூதரவர்களைத் தங்களின் வழிக்குத் திருப்ப இயலாதெனக் கண்ட குறைஷிகள், குதர்க்க வாதத்தில் இறங்கினர். வரண்ட அரபுநாட்டை வளமானதாக்கிச் செல்வம் கொழிக்கச் செய்யுமாறும், இல்லாவிடில் தமக்காகிலும் செல்வத்தையும், சுகபோகத்தையும் தம் இறைவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுரை கூற ஆரம்பித்தனர். “அல்லது இறைவனுக்கு நாங்கள் மாறு செய்கிறோமென்றால், இப்பொழுதே அவனது சாபத்தை எங்கள் மீது இறக்கி எங்களையெல்லாம் அழித்து விடுவீர்” எனவும் கூறினர். அதற்கு எம்பெருமானாரவர்கள் “நீங்கள் கூறுபவற்றையெல்லாம் செய்து காண்பிப்பதற்காக நான் அனுப்பப்பட்டவில்லை. அது இறைவனின் நாட்டத்தைச் சார்ந்தது. அவனுடைய அறிவிப்புகளை உங்களுக்குத் தெரியப்படுத்தி, உங்களை நேர்வழியில் நடக்கச் செய்வதற்காகவே அவன் அடியானாகவும், தூதனாகவும் அனுப்பப்பட்டுள்ளேன். நான் சொல்வதை நம்பி நடந்தால் அதற்குரிய நற்பயனை அறுவடை செய்து கொள்வீர்கள். அல்லாவிடில், கசப்பான விளைவுகளை எதிர்நோக்குங்கள்” என அடக்கத்துடன் மறுமொழி பகர்ந்தார்கள். இப்போது, குறைஷிகள் சற்று ஆத்திரமடைந்தவர்களாய், “அவ்வாறாயின், நீர் கூறுவதை நாங்கள் ஏற்பதற்கில்லை. நீர் எங்களை அழித்தொழிக்கும் வரையிலோ அல்லது, நாங்கள் உம்மை இல்லாமலாக்கும் வரையிலோ போராட்டம் நடந்தே தீரும். உம்முடைய பேச்சில் நாங்கள் ஏமாற மாட்டோம் என முடிவாகக் கூறி விட்டனர். பெருமானார், பேச்சை மேலும் தொடர விரும்பாதவர்களாய் வருத்தத்துடன் அங்கிருந்து எழுந்து சென்றார்கள்.

குறைஷி நிராகரிப்போரின் குதர்க்கவாதம் எவ்வாறு இருந்தது என்பதனை இறைவன் தன் திருமறையில் பலவிடத்தும் எடுத்துக் காட்டி அவற்றிற்கு எம்பெருமானார் (ஸல்) யாது பதில் கூறிடல் வேண்டுமென்பதையும் விளக்கிக் காட்டுகிறான். அத்திருவசனங்களில் சிலவற்றைக் கீழே காண்போம்.

“பின்னும் அவர்கள் கூறுகின்றனர்: இந்த (அல்லாஹ்வின்) தூதரை வருத்துவது என்ன? அவர் (நம்மைப் போலவே) ஆகாரம் புசிக்கிறார். கடைத் தெருவுகளுக்கும் செல்கிறார் (இறைவன்) ஒரு மலக்கை இறக்கினால் இவருடன் இருந்து (அம்மலக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே”

“நபியே! நிச்சயமாக (உம்மைப்போல்) ஆகாரம் புசிப்பவர்களையும் கடைத்தெருக்களுக்குச் செல்பவர்களாயுமுள்ள தூதர்களையன்றி வேறு எவரையும் உமக்கு முன் நாம் அனுப்பியதில்லை.” – 25:20

மானிடருக்கு ஒரு நேரிய வழிபாட்டுதல் வந்தபொழுதெல்லாம் அவர்கள் “அல்லாஹ் ஒரு மனிதரையா தன்னுடைய தூதராக அனுப்பி வைத்தான்” என்று கூறுவதைத் தவிர, அவர்கள் விசுவாசங் கொள்வதற்குத் தடையாக வேறு எதுவும் இருந்ததில்லை.

“(அதற்கு) நீர் கூறும், பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) மலக்குகளே வசித்து அதில் அவர்கள் சாவதானமாக நடந்து திரிவதாயிருந்தால், நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அனுப்பியிருப்போம். (ஆகவே, மானிடப் பிறவிகளான அவர்களிடம் அவ்வினத்தைச் சார்ந்த உம்மை நம்முடைய தூதராக அனுப்பியதில் தவறேதுமில்லை” (17:94, 95)

(“அன்றி இவர் உண்மையான தூதர்தான்” என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு மலக்கு அனுப்பப்பட வேண்டாமா?” என்று அவர்கள் கூறுகின்றனர்.

(அவர்கள் விரும்புவது போன்றே) நாம் ஒரு மலக்கை அனுப்பி வைத்திருந்தால், (அவர்களின்) காரியம் முடிவு பெற்றே போயிருக்கும். பிறகு (அதில்) அவர்கள் சிந்திப்பதற்கு அவகாசமே கிடைத்திராது. (அவர்கள் அழிந்து போயிருப்பர்).


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:22 pm

“அல்லது, (நம்முடைய) தூதரை ஒரு மலக்காவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு மலக்குகளைக் காணும் சக்தி இல்லாததினால்) அவரையும் ஒரு (வசனிக்கும்) மனித வடிவில் தான் நாம் அனுப்ப நேர்ந்திருக்கும். (அது சமயத்திலும்) இப்போதிருக்கும் சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் உண்டு பண்ணியதாகும்”. (6:8:9)

“(இவர்கள் கூறுகின்றவாறு) இவ்வேதத்தை ஷைத்தான்கள் கொண்டு வரவில்லை. அஃது அவர்களின் தகுதிக்குடையதன்று! அதற்கான சக்தியும் அவர்களிடத்தில்லை. (26:210, 211)

“ஷைத்தான்கள் எவர்மீது இறங்கும் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.” (26:221, 222)

“(நபியே) இப்பூமியினின்றும் எங்களுக்காக ஊற்றுக் கண் ஒன்று பீறிட்டுக் கிளம்பினாலன்றி உம்மை விசுவாசிக்க மாட்டோம்”. “அல்லது, மத்தியில் சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய சோலை ஒன்றினை நீர் பெற்றாலன்றி. “அல்லது நீர் பயங்காட்டுவது போல் வானம் இடிந்து சிதறுண்டு எங்கள் மீது விழச் செய்தாலன்றி, அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம்முன் பிரத்தியட்சமாக வரச் செய்தாலன்றி.

“அல்லது, (அழகிய) தங்க மாளிகை ஒன்று உமக்கு இருந்தாலன்றி, அல்லது நீர் வானத்திற்கு ஏறிச் சென்றபோதினும், நாம் ஓதக்கூடிய ஒரு வேத நூலை (நேராக) நீர் கொண்டு வந்தாலன்றி, நீர் வானத்தில் ஏறியதையும் நம்பமாட்டோம்” என்றும் கூறுகின்றனர் (அதற்கு) நீர் கூறும் எனது இறைவன் மிக்க மாட்சியமையுடையவன்.

நான் அவனின் தூதன் என்பதைத் தவிர (உங்களைப் போன்ற) மனிதப் பிறவியேயல்லாது வேறென்ன?” (என்பதாக) (17:90 – 93)

“வானத்தில் இவர்களுக்கென நாம் ஒரு வாசலைத் திறந்து விட்டு அதன் வழியே இவர்கள் ஏறிச் சென்று கொண்டிருந்த போதிலும் அப்போதுங் கூறுவர், எங்களின் கண் பார்வை கோளாறானது. நாங்கள் சூனியத்திற்குள்ளாகி விட்டோம் (என்று)” (15:14, 15)

“நிராகரிப்போர் கூறுகின்றனர். (திருக்குர்ஆனாகிய) இது, அவர் பொய்யாகப் புனைந்ததேயன்றி வேறில்லை. இதில் மற்றவர்கள் அவருக்கு உதவி புரிந்துள்ளனர்” (என்று), ஆகவே, இவ்வாறு (நிராகரிப்போர் கூறுவதின் காரணமாக) அவர்கள் களங்கத்தையும் பொய்யையுமே உருவாக்கியுள்ளனர்” (25:4)

(“நபியே!) குர்ஆன் (ஷரீப் என்னும் இவ்வேதம்) சர்வ லோகங்களுக்கும் எஜமானனாகிய இறைவனால்தான் அருளப்பெற்றது. அதனை நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, ரூஹுல் அமீன் (என்னும் வானவர் ஜிப்ரீல்) தெளிவான அரபிமொழியில் உமது இருதயத்தில் இறக்கிவைத்தார்.

“இது பற்றிய முன்னறிவிப்பு நிச்சயமாக முன்னுள்ள வேதங்களில் இருக்கவே செய்கிறது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:22 pm

“இஸ்ராயீலின் சந்ததியிலுள்ள வேத பாராயணர்கள் இதனை அறிந்திருப்பதே அவர்களுக்குப் போதிய அத்தாட்சியல்லவா?”

“அரபிகளல்லாத (அஜமி) சமுதாயத்தினரைச் சார்ந்த ஒருவர் மீது (அவரது மொழியில்) இதனை நாம் இறக்கி வைத்து அவர் இவர்களுக்கு ஓதிக் காண்பித்திருந்தால, இவர்கள் அதில் நம்பிக்கைக் கொண்டிருக்கமாட்டார்கள்?” (26:192-199)

“வானங்களிலும் பூமியிலும் விசுவாசிகளுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகளிருக்கின்றன. உங்களைப் படைத்திருப்பதிலும் (பூமியில்) பல மிருகாதிகளை அவன் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும் (விசுவாசத்தில்) உறுதியுள்ள மக்களுக்குப் பல அத்தாட்சிகளுள்ளன.

“இரவு, பகல் மாற்றத்திலும், வானத்திலிருந்து அல்லாஹ் மழையை இறக்கி வைத்து அதனைக் கொண்டு (வறண்டு) இறந்து பட்டுக் கிடக்கும் தரையை விரைவில் உயிருண்டாவதிலும், காற்றுகளைப் (பல திசைகளில்) மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகளுண்டு. (45:3-5)

“அவனே இறந்தவைகளிலிருந்து உயிருள்ளவைகளை வெளிக் கொணர்கிறான். அவனே உயிருள்ளவைகளிலிருந்து மரித்தவைகளை வெளியாக்குகிறான். அவனே இறந்து கிடக்கும் தரையைச் செழிப்படையச் செய்கிறான். இவ்வாறே (மரித்த) நீங்கள் (மறுமையில்) வெளிப்படுத்தப்படுவீர்கள்”. (30:19)

“வானங்களும் பூமியும் அவனது கட்டளையின்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (நீங்கள் பூமியில் ஜீவித்து, மரித்து, அடக்கப்பட்டதின் பின்னரும்) அவன் உங்களை அழைக்கும்போது நிச்சயமாக நீங்கள் உடனே பூமியில் இருந்து வெளிப்படுவீர்கள்” (30:25)

“(மனிதர்களே! நீங்கள் அவனுடைய மகோன்னதத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு) உங்களைப் பற்றிய உபமானம் ஒன்றை அவன் எடுத்துக் கூறுகிறான். நாம் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்தையும், கண்ணியத்தையும், இன்னும் நீங்கள் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து நடந்து கொள்வது போன்றம், உங்கள் அடிமைகளில் எவருக்கேனும் பகிர்ந்தளித்து அவர்களையும் உங்களுடன் சம அந்தஸ்துள்ள பங்காளிகளாக ஆக்கி இருக்கின்றீர்களா? (இல்லையே! அவ்வாறிருக்க நமது படைப்பினங்களையே ஏன் நீங்கள் நமக்குச் சமமாக இணையாக்குகிறீர்கள்?) அறிவுடைய மக்களுக்கு நம்முடைய திருவசனங்களை இவ்வாறு நாம் விமர்சித்துக் காண்பிக்கின்றோம்.” (30:28)

இதனால் சீற்றங்கொண்ட அபூஜஹல் நபிகள் பிரான் கஃபாவுக்கு வரும்போது கல்லால் அடித்துக் கொல்வதெனக் கருத்தில் கொண்டான். மறுநாள் அவன் கல்லுடன் வந்து அங்கு காத்திருந்தான். பெருமானார் வழக்கம் போல் கஃபாவுக்கு வந்து தொழுகையில் ஈடுபட்டார்கள். அபூஜஹல் என்ன செய்வானோ எனக் குறைஷிகளான அவன் சகாக்கள் ஆவலுடன் நோக்கினர். கல்லை இரு கைகளாலும் தூக்கித் தலைக்கு மேல் பிடித்தவனாக அண்ணலாரை நெருங்கினான். சில அடிகள் தான் எடுத்து வைத்திருப்பான, சட்டெனப் பின்வாங்கி கல்லை எறிந்துவிட்டு உதறலும் நடுக்கமும் கொண்டவனாகக் குறைஷிகள் நின்ற இடத்தை நோக்கி ஓடிவந்தான்.

அனைவரும் என்ன நேர்ந்தது? என்ன காரணம்? எனப் பதற்றத்துடன் வினவினர். அதற்கு அபூஜஹல், “நான் கல்லைத் தூக்கிக் கொண்டு முஹம்மதை நெருக்கினேன். என்னை நோக்கிப் பயங்கர உருவத்துடனும் குரூரப் பார்வையுடனும் கூடிய ஆண் ஒட்டகை ஒன்று வருவதைக் கண்டு பயந்து போனேன்” என அவர்களிடம் கூறினான்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:23 pm

அபிஸீனியாவில் அடைக்கலம்

“இறைவனின் தூதே! குறைஷிகளின் கொடுமைகளின்றும் தற்காத்துக் கொள்ள எங்களை அனுமதிக்க மாட்டீர்களா!” என நபித்துவம் ஐந்தாம் ஆண்டு ஓர்நாள் முஸ்லிம்கள் பெருமானாரிடம் முறையிட்டனர். நபிகள் கோமான் மனங்கசிந்தவர்களாக இறைவனின் உத்தரவை எதிர்பார்த்து நின்றார்கள். அப்போது, “முன்னைய நபிமார்கள் இன்னல்களைச் சகித்துக் கொண்டதேபோல் நீங்களும் இருந்து வரக்கடவீர்” என்ற செய்திதான் கிடைத்தது. “இல்லாவிடில் மக்களைத் துறந்து வேறு எங்காவது செல்ல எங்களைப் பணியுங்கள்” என அடுத்துச் சிலர் கண்ணீர் சிந்தி வேண்டினர்.

அண்ணலாரும் தங்கள் கண்களில் நீர் மல்கியவர்களாக அபிஸீனியா நாட்டின் பக்கம் தங்கள் திருக்கரம் நீட்டிக் காண்பித்தவாறு, “இங்கு நிலைமை சரிப்பட்டு வரும் வரை அபீஸீனியா சென்று சிறிது காலம் தங்கியிருங்கள். அந்நாட்டு மன்னர் கிறிஸ்தவர், நற்குணமுடையவர் எனக் கேள்வியுற்றிருக்கிறேன். அவர் உங்களைக் கருணையுள்ளத்துடன் ஏற்றுக் கொள்வர்” என ஆறுதல்மொழி பகர்ந்தனர்.

அவ்வாறே, பதினொரு ஆண்களும் நான்கு பெண்களும் கொண்ட முஸ்லிம் கோஷ்டியொன்று நபித்துவம் ஐந்தாம் ஆண்டு ரஜப் மாதம் கி.பி. 615ல் அபிஸீனியாவுக்கு இரகசியமாகப் பயணமானது. இதில் பெருமானாரின் அருமை மகள் ருக்கையாவும் அவரது அன்புக் கணவர் செல்வந்தர் உதுமானும் இருந்தனர். அவர்கள் ஷுஐபா என்னும் துறைமுகத்திலிருந்து கட்டணமாகத் தலைக்கு ஐந்து திர்ஹம் - ஒன்றே கால் ரூபாய் - செலுத்திக் கப்பலேறிச் சென்றனர். அப்போது அபிஸீனியாவை நஜ்ஜாஷீ அஸ்மஹம் இப்னு அப்ஹர் என்னும் மன்னர் ஆட்சி புரிந்து வந்தார்.

முஸ்லிம்களின் கோஷ்டியொன்று அபிஸீனியாவுக்குப் புறப்பட்ட விஷயம் எவ்வாறோ குறைஷிகளுக்குத் தெரியவந்தது. உடனே குதிரை வீரர்கள் சிலரை அனுப்பித் தேடச் சொன்னதில், அக்கோஷ்டி, ஷுஐபாவிலிருந்து கப்பலேறிச் சென்று விட்டதாகத் தகவல் கொண்டு வந்தார்கள். எனவே, அபிஸீனிய மன்னருக்கு தூதனுப்பி முஸ்லிம்களைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோருவதென முடிவு செய்தனர். விலை மதிப்புள்ள சாமான்களைக் காணிக்கையாகவும், வெகுமதிப் பொருட்களையும் சேகரித்துக் கொண்டு அம்ரிப்னுல் ஆஸ், அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ ஆகிய இருவர் தலைமையில் குறைஷிகளின் தூதுக் கோஷ்டியொன்று அபிஸீனியாவுக்குக் கப்பலேறியது.

அம்ருவும், அப்துல்லாஹ்வும் அபிஸீனியாவின் தலைநகரான அக்சூம் போய்ச்ம் சேர்ந்து அங்குள்ள அரசவையின் முக்கிய மந்திரிகளையும், பாதிரிகளையும் கண்டு நளினமாகவும், நயவஞ்சகமாகவும் பொய்களைப் புனைந்து கூறி, தாங்கள் கொண்டு சென்ற மனங்கவர் வெகுமதிகளை இலஞ்சமாக அளித்து, “எங்கள் நாட்டிலிருந்து சிலர் ஓடி வந்து இங்கு தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் நாங்கள் பின்பற்றும் மார்க்கத்திற்கும் விரோதமான ஓர் புதிய மார்க்கத்தினைப் பின்பற்றுபவர்கள், அது உங்களுக்கும் எங்களுக்கும் கேடு பயப்பதாகவுள்ளது. நாளையத் தினம் அரசவையில் மன்னரிடம் இவ்விபரங்களை எடுத்துக் கூறி அத்துரோகிகளை எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரவிருக்கிறோம். அதற்கு நீங்கள் ஆதரவு நல்கிப் பரிந்துரை கூற வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர். அது போலவே, மறுநாள் அவ்விருவரும் அரசவை சென்று தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளை மன்னரின் முன் சமர்ப்பித்து, விவரங்களைக் கூறி, தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம்களைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரினர். அரசவையிலிருந்து மந்திரி, பிரதானி, பாதிரிகளும் அதற்கு “ஆம் பாடினர். மன்னர் நீதிவான் ஆனதால் எதிர் தரப்பாரது வாய்மொழி கேளாது எதுவும் செய்ய இயலாது. எனக்கூறி முஸ்லிம்களை அரசவைக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டார். முஸ்லிம்கள் கிலேசத்துடன் அரசவைக்கு வந்தனர். மன்னர் அவர்களை விளித்து “ உங்கள் நாட்டை விட்டு நீங்கள் இங்கு வந்த காரணம் யாது?” நீங்கள் பின்பற்றும் மார்க்கம் என்ன போதிக்கின்றது? விபரமாகக் கூறுவீர்” என ஆக்ஞாபித்தார்.

முஸ்லிம்களில் பேச்சுத்திறன் மிக்கவரான அபுத்தாலிபின் மகனும் அலீயின் மூத்த சகோதரருமான ஜஃபர் என்பவர் எழுந்து” பெருமதிப்பிற்குரிய அரசே! நாங்கள் நாகரிகமற்றவர்களாக வாழ்ந்தோம். விக்கிரகங்களை தெய்வமென வணங்கி வந்தோம். சூதாட்டத்திலும், குடியிலும் விபச்சாரத்திலும் மூழ்கிக் கிடந்தோம். அற்ப விஷயத்திற்கெல்லாம் நாங்கள் போரிலும், புசலிலும், கொலையிலும் பழிவாங்குவதிலும் ஈடுபட்டோம். இவ்வித சுபாவங்களே எங்களிடம் மிகைத்து நின்றன.

இந்நிலையில் எங்களிடையே முஹம்மது (ஸல்) என்னும் திருநாமம் புண்டு ஒருவர் தோன்றினார். அவர் ஒழுக்க சீலராகவும், காருண்யம் மிக்கவராகவும் நற்குணங்கள் அனைத்தும் ஒருவராய்த் திரண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். அவர் தம் நாற்பதாம் வயதில் இறைவன் அவரைத் தன் திருத்தூதராக நியமித்து அவர் மூலம் ஃபுர்கான் என்ற திருவேதத்தை அருளிச் செய்து வருகிறான். அவ்வேதத்தின் அறப்போதத்தின்படி அவர், நாங்கள் அனுஷ்டித்து வந்த அனாச்சாரங்களைக் கைவிடச் செய்து நல்வழிப்படுத்தி வருகிறார். விக்கிரகங்களை வணங்காது ஏக நாயனை வணங்குமாறு கற்பித்துத் தந்தார். இறைவனுக்கன்றி மற்றெவருக்கும் சிரம் தாழ்த்தக் கூடாதெனப் பணித்துள்ளார். ஒழுக்கப் பண்பாடுடையவர்களாக எங்களை மாற்றியமைத்து வருகிறார்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:23 pm

ஆனால், அத்திருநபியவர்களையும் அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களாகிய எங்களையும் மக்காவாசிகளான இந்த விக்கிரகத் தொழும்பர்கள் சென்ற ஐந்தாண்டு காலமாகப் படுத்தி வரும் இடுக்கணும் கொடுமையும் இயம்பவொண்ணாதன. எனவே தான், அம்மாநபி அவர்கள் எங்களைத் தங்களின் பாதுகாப்பில் அடைக்கலம் தேடிக் கொள்ளுமாறு இங்கு அனுப்பினார்கள். மன்னர் மகிபராகிய தங்களின் காருண்யத்தின் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். இந்த அரபிக் குறைஷியருக்கு நாங்கள் அடிமைப் பட்டவர்களல்ல! பணத்தாலோ அல்லது இரத்தத்தாலோ அவர்களுக்கு கடன்பட்டவர்களுமல்ல” என மிக உருக்கமுடன் எடுத்துச் சொன்னார்.

ஜஃபரின் சொல்லாற்றலும், விஷய விளக்கமும் மன்னர் நஜ்ஜாஷியின் உள்ளத்தை மிகவாகக் கவர்ந்து விட்டன. அப்போது அவர், “உங்களின் நபிக்கு இறங்கிய வேத வசனங்களில் சிலவற்றை ஓதிக் காண்பியும்” எனப் பணித்தார். உடனே ஜஃபர் தமது குயிலினுமினிய குரலில் “சூரா மர்யம்” என்ற திருக்குர்ஆன் 19ம் அத்தியாயத்திலிருந்து சில திருவசனங்களை ஓதிக் காண்பித்தார். மன்னரும் அவையில் திருவசனங்களை ஓதிக் காண்பித்தார். மன்னரும் அவையில் இருந்தோரும் திருவசனங்களின் தெய்வீக நாதத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய் மனம் உருகிப் புளகாங்கிதம் அடைந்து கண்ணீர் உகுத்து நின்றனர். ஜஃபர் ஓதி முடித்ததும் அரசர் குறைஷித் தூதுவர்களை விளித்து “அடைக்கலம் புகுந்தோரைத் திருப்பியனுப்ப முடியாது! நீங்கள் நாடு திரும்பலாம்” எனக்கூறிக் காணிக்கைகளையும் ஏற்க மறுத்து விட்டார்.

மறுநாள் அம்ருப்னுல் ஆஸ் மன்னரிடம் சென்று “முஸ்லிம்கள் இயேசுவை சாதாரண மனிதப் பிறவி என்கின்றனர்” என துர்ப்போதனை செய்தார். பின்னர், ஜஃபரை மறுபடியும் அழைத்து அது பற்றி விசாரித்த போது, அவர் “எங்கள் நபிகள் பெருமானாருக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டதின் படி, நாங்கள் இயேசுவை இறைவனின் அடியார் என்றும் அவனின் திருத்தூதர் எனவும் பரிசுத்த ஆவியாகவும், அவனது வார்த்தையாகவும் கன்னி மர்யம் அவர்களின் கர்ப்பத்தில் இறை ஆணைப்படி இடம் பெற்றார் எனவும் நாங்கள் விசுவாசிக்கின்றோம்” எனக்கூறினார். உடனே, மன்னர் அருகில் தரையில் கிடந்த ஒரு சிறு குச்சியை எடுத்துக் காண்பித்து, இறைவன் மீது ஆணையாக, மர்யமுடைய மகன் ஈஸா, நீர் சொன்னதை விட இந்தக் குச்சியின் அளவு கூட அதிக மேன்மையுற்றவராக இருக்கவில்லை” எனக்கூறி, “சொல்லுங்கள், யார் எதைக் கருதினாலும், நீங்கள் என் நாட்டில் பாதுகாப்பப் பெற்றவர்களாக இருந்து வருவீர்கள்” எனக்கூறியனுப்பினார். அம்ருவும், அப்துல்லாஹ்வும் தங்கள் தூதில் தோல்வியைக் கண்டவர்களாக மக்காவுக்குத் திரும்பிச் சென்றனர்.

நஜ்ஜாஷீ, பின்பு ஜஃபரை அடிக்கடி அரண்மனைக்கு அழைத்து உரையாடி, இஸ்லாத்தைப் பற்றியும், பெருமானார் அவர்களைப் பற்றியும் அதிகம் கேட்டறிந்தார். சிறிது காலத்திற்குப் பின்பு அவர் இஸ்லாத்தைத் தழுவி அரசபாரந் துறந்து அண்ணலாரை நேரில் தரிசித்து மரியாதை செலுத்தி வர ஹிஜ்ரி 9ம் ஆண்டு ரஜப் மாதம் மதீனாவுக்குப் பயணமானார். கப்பலில் வரும் போது புயலில் சிக்கி அவர்கடலில் மூழ்க நேர்ந்தது. இதனைத் தீர்க்க தரிசனத்தால் அறிந்த பெருமானார் (ஸல்) மறைவான பிரேத (காயிபு ஜனாஸா) தொழுகை நடத்தி அவரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின் முஸ்லிம்கள் பகிரங்கமாகக் கஃபாவில் தொழுது வர ஆரம்பித்ததை அபிஸீனியாவில் குடியேறிய முஸ்லிம்கள் கேள்வியுற்று, இனி மக்காவில் அமைதியுடன் வாழலாம் என்ற நம்பிக்கையில் பலர் தாயகம் திரும்பினர். ஆனால் அவர்கள் எண்ணியதற்கு மாறாகக் குறைஷிகளின் கொடுமை முன்னிலும் அதிகமாக இருந்ததேயன்றி குறையவில்லை. எனவே, நபித்துவம் ஏழாம் ஆண்டுத் துவக்கத்தில் மற்றும் பல முஸ்லிம் குடும்பங்கள் அபிஸீனியா சென்று குடியேறின. குழந்தைகளன்னியில் இவர்கள் ஆண்களில் எண்பத்தி மூன்று பேரும் பெண்களில் பதினெட்டுப் பேருமாவர். இதனை இரண்டாம் ஹிஜ்ரத் என்பர். எமன் நாட்டிலிருந்தும் சில முஸ்லிம்கள் அபிஸீனியா சென்று குடியேறினர். அபு மூஸா அஷ்அரியும் அவர்களில் ஒருவர். உதுமானும், ருக்கையாவும் சின்னாட்கள் கழித்து மக்கா திரும்பி விட்டனர். மற்றவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு வரை சுமார் 15 ஆண்டு காலம் அபிஸீனியா நாட்டிலேயே தங்கி வாழ்ந்த பின் அங்கிருந்து நேரே மதீனா திரும்பினார்கள்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:23 pm

அர்க்கம் மாளிகை

முதல் கோஷ்டியாக அபிஸீனியாவுக்குச் சென்று பதினைந்து பேர் நீங்கலாக, எஞ்சிய சுமார் இருபத்தி நாலு முஸ்லிம்கள் அன்று மக்காவில் தங்கி வசித்தனர். மக்காவுக்கு அருகேயுள்ள சபா குன்றின் மீது அழகிய மாளிகை யொன்றிருந்தது. இது அர்க்கம் என்பவருக்குச் சொந்தமானது இவர் கண்ணியமிக்க மக்ஜூம் கோத்திரத்தைச் சேர்ந்தவர். பெரும் செல்வந்தர், இவர் குடும்பத்தாருக்கு மக்காவில் நல்ல மதிப்பும் செல்வாக்கும் உண்டு. இவருடைய கோத்திரத்தார். அபூஜஹலும் இதைச் சேர்ந்தவனே நபிகள் பிரானின் தூதை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஆனால், பதினெட்டு வயதே நிரம்பியவரான அர்க்கம், இஸ்லாத்தைத் தழுவி அண்ணலாருக்கு உற்ற துணையாக உறுதியுடன் இருந்து வந்தார். முஸ்லிம்களுக்குத் தம்மாலான உதவிகளையும் செய்து வரலானார்.

குறைஷிகளின் தொல்லையும் கொடுமையும் அதிகரிக்கவே, இஸ்லாத்தைப் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்வது சற்று கஷ்டமாக இருந்தது. எனவே, அர்க்கம் தமது மாளிகையைப் பெருமானாரின் பிரச்சாரப் பணிக்கென ஒப்படைத்து அதில் முஸ்லிம்களின் தொழுகைகளை நடத்தி வருவதற்கு வசதி செய்து கொடுத்தார். கி.பி. 615 முதல் 617 வரை சுமார் இரண்டாண்டு காலம் இஸ்லாமியப் பிரச்சாரம் இவ்வாறே நடைபெற்று வந்தது. ஆகவேதான் இந்த மாளிகை, “தாருஸ்ஸலாம்” சாந்தி மாளிகை என இன்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:24 pm

உமருல் பாரூக் (ரலி)

இந்நிலையில் நபித்துவம் ஆறாம் ஆண்டு ஓர்நாள் காலை, நகர மன்றமான, “தாருல் நத்வா” மண்டபத்தில் கட்டிளங்காளையர் பலர் ஒன்று கூடுகின்றனர். அவர்களின் மத்தியில் அபூஜஹல் எழுந்து நின்று வெகு ஆக்ரோஷத்துடன் பேசுகிறான். அவன் தனது பேச்சின் இறுதியில், “யார் முஹம்மதின் தலையைக் கொய்து வருவாரோ அவருக்கு என் ஒட்டகைளில் நூறைச் சன்மானமாக அளித்து மகிழ்வேன்” என்றதொரு சவாலை எடுத்து வீடுகிறான். சிறிது நேரம் நிசப்தம் நிலவுகிறது. சட்டென ஒரு வாலிபர் எழுந்து நிற்கிறார். “உமது வாக்கைச் சரிவர நிறைவேற்றுவீர் என்பதற்கு அத்தாட்சி யாது? அதனை நீர் உரிய வைகயில் செய்து தந்தால் அக்காரியத்தை நானே செய்து முடிக்கிறேன்” என மார்தட்டி எதிர்ச்சவால் விடுகிறார். உடனே அபூஜஹல் அனைவரையும் கஃபாவுக்கு அழைத்து சென்று அங்கிருந்த ‘ஹுபல்’ என்ற விக்கிரகத்தின் முன்நின்று தனது சொல்லை அணுப்பிசகாது காப்பதாக வாக்குத் தத்தம் செய்து கொடுக்கிறான். வாலிபர் திருப்தியடைகிறார். அடுத்த கணம், முப்பத்து மூன்று வயதினை எய்தியுள்ள அவ்விளவல் கையில் பளபளக்கும் வாளேந்தி சபா குன்றின் மீதுள்ள அர்க்கம் மாளிகையை நோக்கி வீறு நடைபோட்டுச் செல்கிறார். போகும் வழியில் அவ்வாலிபரை, நுஜம் பின் அப்துல்லாஹ் அல்நஹ்ஹாம் என்பவர் – சிலர் ஸஅத் பின் அபீ வக்காஸ் எனக்கூறுகின்றனர் – சந்திக்கிறார். “காளையரே!. கையில் வாளேந்திக் கடுகி நடக்கின்றீரே!. காரணமென்னவாம்” என வினவுகிறார். அதற்கு அவ்வாலிபரிடமிருந்து “முஹம்மதை இன்று நான் ஒழித்துக் கட்டச் சபதம் புண்டு செல்கிறேன்” என்ற பதில். “அதிருக்கட்டும்!. உம் தங்கையும் மைத்துனரும் முஹம்மதுவின் மார்க்கத்தில் சேர்ந்துள்ளதை நீர் அறியீரோ? உமது வீட்டைச் சேர்ந்தவர்களைத் திருத்திச் செம்மைப்படுத்திய பிறகல்லவா நீர் முஹம்மதை ஒழித்துக் கட்ட முற்பட வேண்டும்”! என நுஜம் நயம்பட இடித்துரைக்கிறார்.

வாலிபரின் கால்கள் திசை மாறுகின்றன. அகப்பார்வை அர்க்கம் மாளிகையை விட்டுத் தங்கை வீட்டின் பக்கம் திரும்புகிறது. வாலிபரின் கண்கள் தீப்பொறிகளைச் சிந்த ஆரம்பிக்கின்றன.

தங்கையின் வீடு அது உள்ளே தாழிடப்பட்டுள்ளது. உள்ளிருந்த ஒருவர் ஏதோ ஒருவித இராகத்துடன் பாடுவது போன்ற இனிய நாதம் காற்றில் மிதந்து வந்து வாலிபரின் செவிகளில் பாய்கிறது. காது தாழ்த்திச் சற்று அதைக் கேட்கிறார். பின் பொறுமையற்றுக் கதவைப் படபடவெனத் தட்டுகிறார். உள்ளே நிசப்தம் நிலவுகிறது. கதவு மெதுவாகத்திறக்கிறது. வீட்டினுள் வாலிபர் சரேலெனப் பாய்கிறார். சுற்றிலும் கண்ணோட்டமிடுகிறார். தங்கை உம்மு ஜமீல் பாத்திமாவையும் மைத்துனர் ஸயீதுப்னு ஜைதையுந் தவிர மற்றெதுவும் அங்கே புலப்படவில்லை. கண்கள் கனலைக் கக்கதங்கையை நோக்கி, “ஏ பாத்திமா! இப்போது நீங்க்ள ஏதோ பாடுவது போன்ற சத்தம் கேட்டதே அது என்ன? என வினவுகிறார். மைத்துனர் ஸயீதும் மனைவியின் அருகில் நின்று கொண்டிருக்கிறார். “ஒன்றுமில்லையே!” என்ற தங்கையின் பதில் கேட்டு வாலிபருக்கு ஆத்திரம் பொங்குகிறது. “நீங்கள் முஹம்மதுவின் மார்க்கத்தில் சேர்ந்துள்ளதை நான் அறியமாட்டேன் என்றே எண்ணுகிறீர்கள்” எனக் கர்ஜித்தவாறு மைத்துனர் மீது பாய்கிறார். அண்ணனுக்கும் கணவருக்கும் குறுக்கே விழுந்து பர்த்தாவைப் பாதுகாக்க முன்வருகிறார் பாத்திமா. வாலிபரின் வாள்முனை பாத்திமாவின் முகத்தில் பாய்ந்து இரத்தம் பீறிடுகிறது. குருதியைக் கண்டதும் வாலிபரின் ஆத்திரம் ஒருவாறு அடங்குகிறது. தங்கையை இரக்கத்துடன் நோக்குகிறார். பாத்திமாவுக்கு ஏதோ ஒருவித உத்வேகமும், உணர்ச்சியும், தைரியமும் பிறக்கிறது. அண்ணனை நோக்கி, “ஆம் அண்ணா! நபிகள் முஹம்மதுவின் மார்க்கமான இஸ்லாத்தைத்தான் தழுவியுள்ளோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை” எனத் துணிவுடன் கூறுகிறார் பாத்திமா. என்றுமில்லாத் துணிவை இன்று தங்கையினிடம் கண்டு ஆச்சரியமுற்று அவ்வாலிபர் படிப்படியாகச் சாந்தமடைந்து தங்கையை அனுதாபத்துடன் நோக்கியவராய், “பாத்திமாவே, நீங்கள் இப்போது ஓதிக் கொண்டிருந்ததை எனக்குச் சற்று காண்பியுங்களேன்” எனப்பரிவுடன் கேட்கிறார்.

தங்கை சற்று தயங்குகிறார். அண்ணன், “நான் ஒன்றும் செய்யமாட்டேன், படித்துப் பார்த்துவிட்டுத் திரும்பத்தந்து விடுகிறேன்” எனக் கூறுகிறார். தங்கைக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. தம் அண்ணனுக்குத் தண்ணீர் கொடுத்து முகம், கை, கால் சுத்தி செய்யச் சொல்லிப் பின் மண்டியிட்டுப் பணிவான முறையில் உட்கார்த்தி, திருக்குர்ஆன் 20ம் அத்தியாயமான “தாஹா”வின் பிரதியைக் கையில் கொடுக்கிறார்.

வாலிபர் அதனை ஆவலுடன் மரியாதையுடனும் பெற்று ஓத ஆரம்பிக்கிறார். அது அவரை ஆகர்ஷிக்கிறது. மீண்டும் ஓதுகிறார், மீண்டும் ஓதுகிறார், இராகத்துடன் அழகுபட ஓதுகிறார், ஓதி, ஓதி உளப் புளகாங்கிதமடைகிறார். உடல் நடுங்குகிறது. நயனங்கள் ஆனந்தக் கண்ணீரை வடிக்கின்றன. வாலிபருக்கு பயந்து அதுவரை அறையுள் ஒளிந்திருந்த கப்பாப் பின் அல் அரத் என்ற போதகாசிரியர் இப்போது அறையைவிட்டு வெளியே வருகிறார். அனைவரும் கூடி அளவளாவுகின்றனர். இதன்பின் வாலிபர் தங்கையின் வீட்டை விட்டு அர்க்கம் மாளிகை நோக்கி அடியெடுத்து வைக்கிறார். முற்றிலும் மனமாற்றமடைந்த ஒரு புது மனிதராக! புனிதராக!! அன்று வெள்ளிக்கிழமை. அர்க்கம் மாளிகையில் அண்ணலார் வீற்றிருந்து தம் தோழர்களுக்கு அறப்போதம் செய்து கொண்டிருக்கிறார்கள். அபூஹஜல் “தாருன் நத்வா”வில் சவால் விடுத்ததையும் அதனை வாலிபர் ஒருவர் ஏற்று வாளேந்தி வந்துகொண்டிருப்பதையும் கேள்வியுறுகிறார்கள். ஆனாலும், நபிகள் நாதர் எவ்விதக் கிலேசமுமில்லாது சாந்த சொரூபியாகவே காட்சியளிக்கிறார்கள். அச்சமோ ஆதுரமோ எதுவும் அவர்களது திருவதனத்தில் கிஞ்சித்து பிரதிபலிக்கவில்லை. உடனிருந்த மற்றவர்கள் பயமுற்றவர்களாய்க் காணப்படுகின்றனர்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by சிவா Mon Apr 26, 2010 4:25 pm

சற்று நேரத்தில் தாழிட்ட கதவு தட்டப்படுகிறது. சாவித் துவாரத்தின் வழியே ஒருவர் பார்த்துவிட்டு அவ்வாலிபர் வந்துவிட்டாரெனத் தெரிவிக்கிறார். “நல்லெண்ணத்துடன் வந்திருந்தால் அவரை நன்கு உபசரிப்போம், தீய நோக்கோடு வந்திருந்தால் அவரை வாளாலேயே அவரைக் கொன்றொழிப்போம்”. இவ்வாறு பெருமானாரின் சிறிய தந்தை ஹம்ஸா அங்கிருந்தவர்களுக்குத் தைரியங் கூறுகிறார். கதவைத் திறக்குமாறு பெருமானார் சமிக்ஞையால் பணிக்கிறார்கள். கதவு திறக்கப்படுகிறது. வாலிபர் நுழைந்ததும் நுழையாததுமாகப் பெருமானார் பாய்ந்து சென்று அவரின் தோள்களைத் தம் திருக்கரங்களால் பற்றி உலுக்கியவாறு, “கத்தாபின் மைந்தரே! இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்தொழியும் வரை கல்லுருவைத் தான் நீர் கடவுளாகக் கருதி வணங்கி வருவீரோ? அதனைக் கைவிட்டு ஏகனாகிய இறைவனைத் தொழ முன்வரமாட்டீரோ?” எனக் கனிவுடன் வினவுகிறார்கள். அதுகேட்ட வாலிபர். “நாயகமே! வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் ஒருவனே என்றும் தாங்கள் தான் அவனுடைய திருத்தூதர் என்பதையும் நான் ஏற்றுள்ளேன் எனும் விஷயத்தைத் தங்களிடம் தெரிவிப்பதற்கெனவே நான் இங்கு வந்துள்ளேன்” எனக் கத்தாபின் மைந்தர் உமர் சிரம் தாழ்த்தி அடக்கத்துடன் பதில் கூறுகிறார். அண்ணலார் உமரைக் கட்டியணைத் தவர்களாய், “அல்லாஹு அக்பர்” என மும்முறை முழங்குகிறார்கள். கூடியிருந்தோர் அனைவரும் பெருமானாரைப் பின்பற்றி மறு முழக்கம் செய்கின்றனர்.

அபூஜஹலையோ அல்லது உமரையோ தமக்கு உதவியாகத் தருமாறு முன் இரவு செய்த பிரார்த்தனையை ஏற்ற இறைவனுக்கு உளமார நன்றி செலுத்தியவர்களாக நபிகள் பிரான் உமரை அழைத்து வந்து தமது இருக்கையினருகில் அமரச் செய்கிறார்கள். உரையாடலும் உபதேசமும் தொடருகின்றன. ஹம்ஸா இஸ்லாத்தில் சேர்ந்து மூன்று தினங்கள் கழித்து உமர் இஸ்லாத்தில் இணைந்தார். இவ்விரண்டு நபித்துவம் ஆறாம் ஆண்டில் நிகழ்ந்தவையாகும்.

“பாரூக்” (பகுத்துக் காட்டுபவர்) என்னும் சிறப்புப் பெயர் பெற்ற ஹலரத் உமர் இப்னு கத்தாப், மக்காவில் செல்வமிக்க அதீ குடும்பத்தைச் சேர்ந்தவர். அபூஜஹலின் சகோதரி ஹன்தமா பின்து ஹிஷாம் என்பவளின் புத்திரர் இஸ்லாத்தை தழுவமுன் பெருமானாரைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர், உடலுறுதியுள்ளவர். ஊக்கம் நிறைந்தவர். அஞ்சா நெஞ்சத்தினர். நெறி தவறாதவர். நேர்மை மிக்கவர்! ஆற்றலும் திறமையுங்கொண்டவர். எடுத்த காரியத்தை ஆர்வத்தோடும் அக்கறையோடும் செய்து முடிக்கும் சாமர்த்தியசாலி. இதனால், மக்கா வாலிபர்களிடையே ஹலரத் உமருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகமிருந்து வந்தன. இவ்விதப் பண்புகளால் ஹலரத் உமர் பெருமானார் காலத்திற்குப் பின் முஸ்லிம்களின் இரண்டாம் கலீ.ஃபாவாக தேர்ந்தெடுக்கப்பெற்று பத்தாண்டு காலம் அரசோச்சும் பாக்கியம் பெற்றார். இவரது காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் பதின்மடங்கு விரிவடைந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா ஆகிய முக்கிய கண்டங்களிலும் பரவி நின்றது. “எனக்குப்பின் தீர்க்கதரிசி ஒருவர் வர வேண்டுமானால், உமர்தான் தகுதி பெற்றவர்” எனப் பெருமானார் அவர்களே பாராட்டியுள்ளார்கள். ஹலரத் அபூபக்கர் அவர்களைப் பற்றி அண்ணலார் இவ்வாறு மொழிந்ததாகவும் கூறப்படுகிறது. அன்றியும் “எனக்குப் புவியில் இரு மந்திரிகளிருக்கின்றனர். அன்றியும் ஜிப்ரீலும், மீக்காயிலும்” எனவும் பெருமானார் நவின்றுள்ளார்கள். முஸ்லிம் அல்லாதாருக்கு முஸ்லிம் அரசு விதிக்கக்கூடிய பாதுகாப்பு வரியான ‘ஜிஸ்யா’ அநீதமானது என அதிருப்தியுற்று பைரோஸ் என்ற கிறிஸ்தவன் ஹலரத் உமர் அவர்கள் தொழுகையிலிருக்கும் போது அவரைக் கட்டாரியால் தாக்கி விட்டான். அதன் காரணமாகத் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் அவர் உயிர் நீத்தார்.

உமர் இஸ்லாத்தில் சேர்ந்த செய்தி காட்டுத்தீபோல் மக்கா நகர் முழுவதும் பரவிவிட்டது. இதுநாள் வரை நபிகள் பெருமானாரைத் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் கஃபாவுக்குச் சென்று தொழுக முடியாத நிலையிலிருந்து வந்தனர். இஸ்லாத்தில் சேர்ந்த சின்னாட்களில் முஸ்லிம்களும் குறைஷிகளைப் போல் பகிரங்கமாகக் கஃபாவுக்குச் சென்று இறைவனைத் தொழ வேண்டுமென ஹலரத் உமர் பெருமானாரிடம் முறையிட்டு வந்தார். எனவே ஒருநாள் நபிகள் நாதர் அவர்கள், ஹலரத் ஹம்ஸாவும் ஹலரத் உமரும் தம்வலமும் இடமுமாகக் கொண்டு மற்ற முஸ்லிம்களனைவரும் புடைசூழக் கஃபாவுக்குச் சென்று இறைவனைத் தொழுது தவாபும் செய்து திரும்பினர். இதற்குப் பின் முஸ்லிம்கள் அச்சம் நீங்கிக் கஃபாவுக்குச் சென்று தொழுது வரலாயினர்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 4 Empty Re: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum