புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
7 Posts - 5%
viyasan
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 12:58 pm

First topic message reminder :



மக்கா வாழ்க்கை


பரம்பரை

ஆசியாவிலுள்ள பல நாடுகளில், தென்வடலாக 1500 மைல் நீளமும் கிழமேலாக 800 மைல் அகலமுள்ள பாலைவனப் பிரதேசமான அரபு நாடும் ஒன்று. அந்த நாடு செழிப்பால் வறண்ட நாடு. ஆயினும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் ஒளிதில் தொடர்பு கொள்ளத்தக்க முக்கியமான ஓர் இடத்தில் அது அமைந்திருக்கிறது. எனவே தான் மக்கா பண்டைக்காலங்தொட்டு ஒரு முக்கிய வியாபார கேந்திரமாகத் திகழ்ந்து வந்துள்ளது.

இவ்வித நடு நாயகமான ஓர் இடத்தில் அரபு நாடு அமைந்திருந்த போதிலும், வளமில்லாத பாலைவனப் பிரதேசமாக இருக்கும் காரணத்தினால், சுற்றுப்புற நாடுகளை அரசாண்ட அரசர்கள் எவரும் அரபு நாட்டின் மீது ஆசையோ, அக்கறையோ கொண்டு ஆட்சி கொள்ளமுன் வரவில்லை. ஆனதால், அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரலாயினர். இங்கு வாழ்ந்த வழுகின்ற மக்களை, நூஹ் நபியவர்களின் புத்திரர் ஷாம் என்பவரின் வழித்தோன்றல்களான ஆதிப் பழங்குடி அரபியர்கள், பாலைவன அராபியர்கள், குடியேறிகளான அந்நியர்கள் என மூன்று பெரும் பிரவுக்குள் அடக்கலாம்.

அரபுநாட்டில் குடியேறி வசித்த அந்நியர்களில் ஆபிரஹாம் தீர்க்கதரிசி என்னும் இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயீல் நபியும் சேருகின்றனர். இப்ராஹீம் நபி இராக்கிலுள்ள கல்தூனியா என்ற இராச்சியத்தைச் சேர்ந்தவர். இவருடைய சிறிய தந்தை ஆஸர் என்பவர் கோயில்களுக்கு உருவ வழிபாடு செய்வோருக்கும் விக்கிரகங்கள் செய்து கொடுத்து வந்தார். இப்ராஹீம் நபி விக்கிரக வணக்கத்தை கண்டித்து ஏக இறைவனை வணக்குமாறு மக்களிடையேப் பிரச்சாரம் செய்தார். இதனால் அவரின் சிறிய தந்தையும் அந்நாட்டு அரசன் நம்ரூது என்பானும், உற்றார் உறவினரும் இவரை வெறுத்து அந்நாட்டை விட்டும் வெளியேற்றிவிட்டனர்.

எனவே, அவர் பாலஸ்தீனம் சென்று அங்கு கன்ஆன் என்னும் இடத்தில் தங்கினார். பின் அங்கிருந்து வெளியாகி சிரியாவுக்கு வந்து வசித்த போது தமது சிறிய தந்தையின் மகளான சாரா என்ற பெண்மணியை மணம் செய்து கொண்டார். சில காலஞ்சென்று மீண்டும் சொந்த நாட்டுக்கு வந்து இறைவனின் மகத்துவத்தைப் பற்றியும், விக்கிரக வணக்கத்தைக் கண்டித்தும் பிரச்சாரம் செய்யலானார். அதனால் அரசன் நம்ரூது அவரை நெருப்புக் குண்டத்துள் எறியச் செய்தான். இறைவனின் ஆணைப்படி அந்நெருப்பு அவருக்கு குளிர்ந்த புங்காவாக மாறி விட்டது. பின்னர் சொந்த நாட்டைத் துறந்து மனைவி சாராவுடன் எகிப்து நாட்டுக்குச் சென்றார். எகிப்து அரசன் ரக்கிய்யூன் என்பான் இப்ராஹீம் நபியைக் கண்ணியப்படுத்தி பல வெகுமதிகளுடன் அரசகுமாரி ஹாஜரா என்ற மங்கையையும் பரிசிலாகக் கொடுத்தனுப்பினான்.

இப்ராஹீம் நபியவர்களுக்கும் வயதாகி வந்தது. ஆயினும் சாராவைக் கொண்டு மகப்பேறு கிட்டாதிருந்தது. எனவே ஹாஜராவையும் அவர் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் ஹாஜராவுக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது. அவ்வன்புக் குழந்தைக்கு இஸ்மாயீல் என அழகுத் திருப்பெயர் சூட்டி மிக்கப் பற்றுப் பாசத்துடன் வளர்த்தார்கள். இப்ராஹீம் நபியவர்களுக்கு அது சமயம் 86 வயதாக இருந்தது. அதன்பின் மூத்த மனைவி சாராவுக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு இஸ்ஹாக் எனப் பெயரிட்டார். அது போழ்து இப்ராஹீம் நபி 99 வயதை அடைந்திருந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 1:34 pm

அல் அமீன்

வாலிபத்திலேயே பெருமானார் அவர்கள் நேர்மையுடன் நடந்து, சத்தியத்தைக் கடைப்பிடித்து, வாக்குத் தந்தங்களை வாய்மை தவறாது நிறைவேற்று பவராகவும், அமானிதங்களை அக்கறையுடன் காத்து ஒப்படைப்பவராகவும் இருந்து வந்தார்கள். எனவே, ஒழுக்கத்தின் உயர் குன்றான அவர்களை மக்காவிலுள்ள மக்கள் அனைவரும், “அல் அமீன்” நேர்மையாளர் என்னும் சிறப்புப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.

அன்றைய மக்காவில் நோக்குமிடமெல்லாம் குடியும், கூத்தியும், கொலை, களவு, சூதும், இழைந்து கொண்டிருந்ததின் நடுவில் பெருமானார் அவர்கள் பத்தரை மாற்றுப் பசும் பொன்னாகப் பிரகாசித்து எவ்விதத் தீய செயல்களிலும் ஈடுபடாமல் தங்களைக் காத்துக் கொண்டார்கள். அன்றியும், எந்த விக்கிரகத்தின் எதிரிலும் அவர்கள் தலை சாய்ந்தறியார்கள். அவற்றிற்காகப் பலியிடப்பட்ட மிருகங்களின் இறைச்சியையோ, பிரசாதம் போன்ற படையல்களையோ ருசி பார்த்ததும் கிடையாது. இவ்வாறு வாழ்க்கையில் அவர்கள் தூய்மை காத்து நின்றார்கள். பெருமானாருக்குப் பதினாறு வயதாக இருந்தபோதே அவர்கள் மக்கள் நலன் காக்கும் பரோபகாரக் காரியங்களில் ஈடுபாடு கொண்டு பணியாற்றி வந்தார்கள். மக்காவில் அப்போது சீர்திருத்தக் கருத்துக் கொண்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வலியாரின் வன்முறைகளுக்கும் வஞ்சகச் செயல்களுக்கும் இலக்காகி நிராதரவாக நிற்கும் எளியார்களுக்கு உதவிடும் வகையில் “ஹில்புல் புளுல் (கி.பி. 595) என்றதொரு நற்பணி மன்றத்தைத் தோற்றுவித்து அரும்பணி புரிந்து வந்தனர். இதில் நம் அண்ணல் நபியவர்களும் அன்று அங்கம் வகித்து நலிவுற்ற மக்களுக்கு நன்மைகள் பல புரிந்தார்கள்.

எற்றமிகு ஏந்தல் நபி இறை தூதராவதற்கு – நுபுவ்வத்துக்கு ஏழெட்டு ஆண்டுகட்கு முன்பு, அப்துல்லாஹ் பின் அபில்ஹமா என்னும் நண்பரொருவர் ஒரு பேரத்தின் போது பணம் எடுத்து வருவதாகக் கூறி அவர்களை ஓரிடத்தில் நிற்க வைத்து விட்டு சற்று நேரத்தில் திரும்பி விடுவதாகக் கூறிச் சென்றவர் அதனை மறந்து திரும்பி வராதிருந்து விட்டார். மூன்று தினங்கள் வரை பெருமானார் அங்கு அவருக்காகக் காத்து நின்றார்கள். நான்காம் நாள் அந்நண்பர் திடுகூறாக அவ்வழியே செல்லும்போது பெருமானாரைக் கண்டு திடுக்கடும் வெட்கமுமுற்று மன்னிப்புக் கேட்டு நின்றார். பெருமானார் வெறுப்புணர்ச்சி சிறிதுமின்றி, “என் செய்வது? எனது சொல்லைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?” என்று மட்டும் குறிப்பிட்டார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 1:38 pm

திருமணம்

மக்க மாநகரிலேயே பெரும் செல்வச் சீமாட்டியாகவும், வர்த்தகத் திலகமாகவும், ஒழுக்கத்தின் குன்றாகவும், பண்பில் சிறந்தவராகவும் வாழ்ந்தார். நாற்பது பயதை எட்டிய கதீஸா நாச்சியார் என்னும் மாது சிரோமணி, இவர் முன்பு இரு கணவருக்கு வாழ்க்கைப்பட்டு விதவையானவர். எவ்வளவு தான் திறமைசாலியாக இருப்பினும் ஒரு பெண் தனது திரண்ட செல்வத்தையும் பெருங்கொண்ட வியாபாரத்தையும் பொறுப்பு மிக்க ஓர் ஆண் மகனின் துணையின்றி எவ்வாறு கட்டுக்கோப்புடன் நன்கு நிர்வகிக்க முடியும்? மக்காவிலிருந்து சரக்கு ஏற்றிய வணிக ஒட்டகக்கூட்டம் ஆயிரம் புறப்பட்டால் அதில் பாதிக்கு மேல் கதீஜா நாச்சி யாரைச் சேர்ந்ததாக இருக்கும் என்றால், அம்மாது நல்லாரின் பெருமிதமான வியாபாரத்தையும் குவடு முட்டிய செல்வத்தையும் நாம் ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம். எனவே, தமது திரண்ட செல்வத்தையும், வியாபாரத்தையும், நிருவாகம் செய்வதற்கு அவர் தகுதியும், திறமையும் நாணயமும், அனுபவமுள்ள ஓர் ஆண்மகனைத் தம் மனத்தால் தேடிக் கொண்டிருந்ததில் வியப்பில்லை. அவரைத் தம் பணியாளராகவல்லாமல் தமக்கே உரியவராக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்பதும் அவரது பெரு விருப்பமதாக இருந்து வந்தது.

கதீஜா நாச்சியாரின் கூரிய பார்வையில் முஹம்மது என்னும் இளவல் தான் அதற்கும் முற்றும் பொருத்தமுடையவர் எனப்பட்டது. அவ்வாலிபரின் திறமை, நாணயம், சொல்லுறுதி, கண்ணியம் இவற்றையெல்லாம் தம் உறவினர் குஸைமா இப்னு ஹகீம் மூலம் கேட்டறிந்தார். உடனே ஆளனுப்பி வாலிபர் முஹம்மதுவை வரவழைத்துத் தமக்காக சிரியா சென்று வியாபாரம் செய்து வருமாறு கேட்டார். பெரிய தந்தை அபுதாலிபை மேவிய பின் இளவல் முஹம்மது, கதீஜா நாச்சியாரிடம் சிரியா சென்று வர ஒப்புதலளித்தார். அது சமயம் புறப்பட்ட வாணிபக் கூட்டத்துடன் கதீஜா நாச்சியாரின் சரக்கேற்றிய ஒட்டகங்கள் இளைஞர் முஹம்மதுவின் தலைமையில் அணிவகுத்துச் சிரியா நோக்கிப் பயணமாயின. கதீஜா நாச்சியார் தமது நம்பிக்கைக்குரிய இளம் பணியாளான மைசராவையும் உடன் செல்லுமாறு அனுப்பி, அவரை முஹம்மதுவுக்கு உதவியாக இருந்து வருமாறும், அத்துடன் அவரின் வியாபாரத் திறமைகளையும் மற்ற நடவடிக்கைகளையும் அறிந்து வருமாறும் பணித்தார்.

கட்டழகர் முஹம்மது தாம் ஏற்றிச் சென்ற சரக்குகளையெல்லாம் சிரியாவில் நல்ல முறையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து. வேறு வித சரக்குகளையும் கொள்முதல் செய்து கொண்டு மைசராவுடன் மக்கா நோக்கிப் பயணமானார். அப்போது நண்பகல், வெய்யில் கடுமையாகக் காய்ந்த காலம். வழியில் காளையர் முஹம்மது மீது கதிரவன் வெப்பம் தாக்கா வண்ணம் வானவர் இருவர் சிறகு விரித்து தண்ணிழல் பரப்பி வந்ததைக் காண மைசரா ஆச்சரியமுற்றார். மேகம் நிழல் பரப்பி ஊர்ந்து வந்ததாகவும் கூறுகின்றனர். மக்காவை அடைந்ததும் முஹம்மது நேரே கதீஜா நாச்சியாரை அண்மி தாம் சிரியாவில் செய்து வந்த வியாபாரத்தின் கணக்குகளை அணு பிசகாது ஒப்பவித்து, வியாபாரச் சரக்குகளையும், மீதப்பணத்தையும் ஒப்படைத்து விட்டு, இல்லம் திரும்பினார். மைசராவும், முஹம்மதுவின் வியாபார சாமர்த்தியத்தையும், பேரங்களின் போது உரையாடும் இனிய பண்பினையும் அவரில் தான் கண்ட அதிசயச் சிறப்புகளையும் ஒன்று விடாது தம் எஜமானியிடம் எடுத்துரைத்தார். கதீஜா நாச்சியார் எல்லாவற்றையும் காதாரக் கேட்டு மகிழ்ந்து தம் உள்ளங்கவர் முஹம்மதுவுக்கு வாக்களித்த தொகைக்கு மேல் இரட்டிப்பாகக் கொடுத்து மற்றும் பல பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.

கட்டிளங்காளையரான முஹம்மதுவின் நடையுடை பாவனை, மேதை, மரியாதை, கம்பீரம் ஆகிவனைத்தும் ஒன்று சேர்ந்து கதீஜா நாச்சியாரின் உள்ளத்தைக் கவ்வி, அதில் ஒருவித கவர்ச்சியை, பற்றை, பாசத்தை, காதலை, ஏக்கத்தை வளர்த்து விட்டன. இது அப்பெண்ணரசியிடம் ஒரு நீக்கவியலா ஏக்கமாக, காதல் கனலாக மாறி விட்டது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பின், “அடைந்தால் முஹம்மதுவை அடைவேன். இன்றேல் விதவையாகவே இருந்து விடுவேன்”. என்ற சங்கல்பத்தினைப் புண்டு விட்டார். கதீஜா நாச்சியார் அவர் விதவையானபோது பல குறைஷிச் செல்வந்தர்களும், தாஹிரா அல்லது பரிசுத்தமானவர் என்ற சிறப்புப் பெயர் பெற்ற அப்பெண்கள் நாயகியை அடைவதற்குப் பெருந்தவம் புரிந்தனர்.

இவர்களெல்லாம் தங்கள் மனக்கோரிக்கையைப் பலகால் விடுத்தும், அவற்றையெல்லாம் மறுத்து ஒதுக்கி விட்டார் அம்மாது நல்லார். இப்போது தம் உள்ளக்கிடக்கையை நபீஸா பின்து முநய்யா என்ற பெண்மணியின் மூலமாக முஹம்மது அவர்களுக்கு வெளியிட்டுக் காட்டலானார். நபீஸா கொண்டு வந்த நற்செய்தியைத் தம் பெரிய தந்தை அபூதாலிபிடம் தெரிவித்து, அவரது ஆலோசனையை அனுமதியையும் வேண்டி நின்றார். அவரும் தம் குடும்பத்தைச் சார்ந்த பெரியவர்களுடன் கலந்து, ஏகோபித்த சம்மதத்தினை நபீஸாவிடம் கூறியனுப்பினார். திருமண ஏற்பாடுகள் சிறப்பாகவும் துரிதமாகவும் நடைபெற்றன.

குறித்த நாளன்று பெருவிருந்து நடத்திப் பெருமானாருக்குக் கதீஜா நாச்சியாரை மக்காவின் பிரபலஸ்தர்கள் முன்னிலையில் விமரிசையாகத் திருமணம் செய்விக்கப்பெற்றது. கதீஜா நாச்சியாரின் தந்தை குவைலித் அப்போது காலமாகி விட்டதால், அவரின் சிறிய தந்தை அம்ரிப்னு அஸத் முன்னின்று இத்திருமணத்தை நடத்திக் கொடுத்தார். திருமண நிச்சயதார்த்தம், மற்ற மாப்பிள்ளை சார்பான காரியங்களைப் பெருமானாரின் சிறிய தந்தை ஹம்ஸா முன்னின்று நடத்தி வைத்தார். பெண்ணுக்குரிய மஹராக 500 தினார்கள் (தங்க நாணயங்கள்) 20 பெண் ஒட்டகைகள் எனவும் கூறப்படுகிறது. கொடுக்கப்பெற்றன. அப்பொழுது அண்ணலாரின் வயது 25 ஆகவும் கதீஜா பிராட்டியாரின் வயது 40 ஆகவும் இருந்தது.

பெருமானாரின் நேசர்களையும், குடும்பத்தாரையும் கதீஜா நாச்சியார் மிகுந்த அன்புடனும், உவப்புடனும் வரவேற்று உபசரித்து வந்தார். விசேஷ அழைப்பின் மீது திருமணத்திற்கு வருகை தந்த அண்ணலாரின் செவிலித் தாய் ஹலீமாவை கதீஜா நாச்சியார் நன்முறையில் உபசரித்துப் பெருமைப்படுத்தினார். ஊர் திரும்பிய ஹலீமாவுக்குப் பெருமானார் தம்பதிகள் நாற்பது ஆடுகளையும் ஓர் ஒட்டகையையும் அது சுமக்கும் அளவு சாமான்களையும் அன்பளிப்புச் செய்து அனுப்பி வைத்தனர். வறுமைப்படும் போதும் பஞ்ச காலங்களிலும் ஹலீமா, பெருமானாரிடம் வந்து அன்பளிப்புப் பெற்றுச் செல்பவராய் இருந்தனர்.

கதீஜா நாச்சியாருக்குப் பெருமானார் மூலம் காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர்) என்ற இரண்டு ஆண்களும், ஜைனப், ருகையா, உம்மு குல்தூம், பாத்திமா என்ற நான்கு பெண்களும் பிறந்தனர். ஆண் மக்கள் இருவரும் குழந்தைப் பருவத்திலேயே காலமாகிவிட்டனர்.

இத்திருமணத்தின் வாயிலாகப் பெருமாட்டி கதீஜா நாச்சியாரின் திரண்ட செல்வம் அண்ணலாரின் ஆதிக்கத்தில் வந்துற்றது. அதனை ஏழைகள், ஆதரவற்றோர், இயலாதோருக்கு வழங்கித் தமது ஈகைத்தன்மை, தயாள குணம், இரக்கச் சிந்தனை முதலிய கல்யாண குணங்களை நிதர்சித்துக் காட்டும் பெரு வாய்ப்பு பெருமானாருக்குக் கிட்டியது. மக்கள் மத்தியில் அவர்களது மதிப்பும், கண்ணியமும், செல்வாக்கும் முன்னிலும் பன்மடங்கு உயர்ந்தன. அவையன்றி பெருமானார் தமது ஆத்மசோதனை, தவம், பிரபஞ்ச ஆராய்ச்சி, இறைவனை அறியும் முயற்சி முதலிய பாரமார்த்திக விஷயங்களில் ஈடுபடுவதற்கான உந்து தலையும் ஓய்வையும் நிம்மதியையும் கதீஜா பிராட்டியாரின் சௌபாக்கிய நிலை அளிப்பதாயிருந்தது.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:07 pm

இறைதாகம்

இவ்வாறிருந்து வருங்கால், தாம் பிறந்து வாழும் மக்கமா நகரில் விக்கிரக வணக்கங்களும், மனதுக்கு ஒவ்வாப் பழக்க வழக்கங்களும், அனாச்சாரங்களும் மலிந்திருப்பதைப் பெருமானார் கண்டார்கள். மக்கள் அறியாமையில் உழன்றனர். மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கியிருந்தனர். ஒற்றுமையற்று ஒன்றுக்கும் உதவாத காரியத்திற்கெல்லாம் ஓயாச் சண்டையிலீடுபட்டு வந்தனர்! விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கோ, சகிப்புத் தன்மையோ அவர்களிடம் சிஞ்சித்தும் இல்லாதிருந்தது. மது அருந்துவதும், மங்கையரை முயங்குவதும், சூதாடுவதும், பந்தயம் விடுவதும், அவர்களின் அன்றாட அலுவல்களாக அமைந்திருந்தன. பொதுவாக, அரபு நாடு எங்கினும் மக்கள் இந்தவிதமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

நேர்மையும் பரிசுத்தத் தன்மையுமுள்ள உள்ளம் படைத்த அண்ணலார் மக்களின் இந்த அநாகரிக வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தார்கள். மனம் நொந்தார்கள். துணக்குற்றார்கள். இத்தீமைகளைக் களைந்து அகற்ற வழி காணுவதில் சிந்தையைச்செலுத்தினார்கள். நேர்மை, திறமை, அறிவு, ஊக்கம் இவற்றை மட்டும் துணையாகக்கொண்டு தீயவர்களை நல்லவர்களாக்கி விடுவது முடியாத காரியம் என்பதையும், மனிதனைப் படைத்துள்ள மகாசக்தியான அவ்விறைவனின் துணையும் அவனது அருளும் தேவை என்பதையும் உணர்ந்தார்கள்.

விக்கிரக வணக்கத்தை அக்காலத்தில் வெறுத்த பலர் இப்ராஹீம் நபியுடைய மார்க்கத்தை விளக்கம் காணுவதில் முயன்று வந்தனர். இவர்கள் “ஹனீப்” என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தனர். இந்த “ஹனீப்”கள் ஒரு சமூகமாக கூட்டத்தாராக – அமையாமல், அவரவரும் தத்தம் மன சாட்சியும் அறிவாராய்ச்சியும் காட்டியவழியில் உண்மைத் தெய்வத்தை கண்டறிவதில் முயன்று நின்றனர். அண்ணலாரும் இத்தகைய “ஹனீப்”களில் ஒருவராக இறைவனைப் பற்றிய சத்திய சோதனையில்தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

எனவே, அந்த மகா சக்தியின் உதவியையும், கருணையையும், வழிகாட்டுதலையும் நாடியவர்களாக மக்கா நகருக்கு வடகிழக்கே சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள “ஹிரா” என்னும் குன்று நோச்கிச் சென்று அதிலுள்ள குகையொன்றில் தனித்திருந்து இறைவனின் தியானத்திலும், சிந்தனையிலும் ஈடுபட்டு வந்தார்கள். நோன்பிருந்தும் தவம் செய்தார்கள். தமது தியானம், வணக்கம், நோன்பு இவற்றிற்கு உற்றகாலமாக ரமளான் மாதத்தைப் பிரதானமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ரமளான் மாதங்களில் ஹிராக் குகைக்குச் சென்று தனித்திருந்து தியானம் புரிவது பாட்டனார் அப்துல் முத்தலிபின் வழக்கமாகவும் இருந்து வந்தது எனவும் கூறுகின்றனர். ஹிரா குகைக்குத் தாங்கள் மட்டும் தனித்துச் செல்வதன்னியில், தம் அன்பு மனைவி கதீஜா நாச்சியாரையும் குழந்தைகளையும் ஓரோர் சமயம் அழைத்துச் செல்வதும் உண்டு. இவ்வரும் தவத்தினைப் பெருமானார் ஓராண்டு மட்டுமே நடத்தினார் களென்பதில்லை. திருமணமான பின்னர் சுமார் பத்தாண்டு காலமாக இவ்வாறான கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:08 pm


ஹஜருல் அஸ்வத்



கி.பி. 605ம் ஆண்டு பெருமானாருக்கு அப்போது 35 வயது. இறைவனின் இல்லமான கஃபத்துல்லாஹ்வைப் புதுப்பித்துக் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பணியை மக்காவின் நான்கு பிரதான கோத்திரத்தாரும் மேற்கொண்டு செய்து வந்தனர். கட்டுமான வேலை ஆள் மட்டத்துக்கு உயர்ந்தவுடன், அதில் இப்ராஹீம் நபியவர்கள் பதித்திருந்த “ஹஜருல் அஸ்வத்” என்னும் புனிதக் கருங்கல்லை அது முன்பிருந்த இடத்தில் எடுத்து வைத்துக் கட்ட வேண்டியதாயிருந்தது. அக்கல்லைத் தூக்கிக் கொண்டு போய் அந்த இடத்தில் வைக்கும் பாக்கியம் தங்களையே சார வேண்டுமென எண்ணியவர்களாய், அந்நான்கு கோத்திரத்தாரும் தனி உரிமை கொண்டாடி ஐந்து நாட்கள் வரை வழக்காடினர். விவாதம் முற்றி வன்செயல் மூளும் நிலை ஏற்பட்டது. அப்போது சட்டென்று அங்கிருந்த முதியவரான அபூ உமய்யா பின் முகீரா அல்மக்ஜூமி என்பவர் அவர்களை இடைமறித்து “நாம் ஏன் வீணில் சண்டையிட்டுக் கொண்டு இரத்தம் சிந்த வேண்டும்? நாளை அதிகாலையில் பனீஷைபா என்னும் பாபுஸ்ஸலாம் வாயில் வழியே இந்த தேவாலயத்திற்கு முதன் முதலாக யார் பிரவேசிக்கின்றாரோ அவரிடமே நம் வழக்கைச் சொல்லி தீர்ப்புக் கோருவோம். அவரது தீர்ப்பின் படியே நாம் நடந்து கொள்வோம். என்ற அரியதொரு யோசனையைக் கூறினார். அதனை அனைவரும் ஒரு மனதாக ஏற்றனர். மறுநாள் அதிகாலையில் கஃபாவுக்குள் யார் பிரவேசிக்கின்றார் என்பதைக் காண அனைவரும் விடியும் வரை அங்கு விழித்துக் காத்திருந்தனர்.

வைகறையின் போது பாபுஸ்ஸலாம் வாயில் வழியே தேவாலயத்தை நோக்கி ஓர் உருவம் வந்து கொண்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது. நெருங்கி வந்த அந்த உருவம் “அல் அமீன்” என்பதை அறிந்ததும், காத்திருந்த மக்கள் களி பேருவகை கொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அண்ணலார் அங்கு வந்ததும் விஷயத்தை கேட்டறிந்து ஒரு கணம் சிந்தித்தார்கள். பின், தங்கள் மீதிருந்த போர்வையை எடுத்து விரித்து அதன் மீது “ஹஜருல் அஸ்வத்” கல்லைத் தங்கள் திருக்கரங்களால் எடுத்து வைத்து வாதாடிய கோத்திரத்தார் நால்வரையும் போர்வையின் நான்கு விளிம்புகளையும் பற்றிக் கல்லைப் பதிக்க வேண்டிய இடத்தருகே கொண்டு வந்து வைக்கச் சொன்னார்கள். இத்தீர்ப்பை அனைவரும் பரம திருப்தியுடன் ஏற்று அவ்வாறே கல்லைப் போர்வையுடன் தூக்கிக் கொண்டு போய் வைத்தனர். பெருமானார் அதை மீண்டும் தம் திருக்கரங்களால் தூக்கி கஃபாவின் சுவரில் அதற்குரிய இருப்பிடத்தில் வைத்து கட்டிட வேலையைத் தொடருமாறு பணித்தார்கள். அதன் பின் கஃபத்துல்லாஹ்வின் கட்டுமானம் துரிதமாக நடைபெற்றப் பூர்த்தியானது. அப்போது அதன் உயரம் 18 முழம் அல்லது 27 அடியாக இருந்தது.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:08 pm

இறைவனின் தூதர்


இறைவனின் அருட்பெருங் கருணையை இறைஞ்சியவர்களாக அண்ணலார் அருத்தவங்கிடத்தும் வணக்கம் புரிந்தும், நோன்பிருந்தும் வருங்காலை, அவர்களது நாற்பதாம் வயதை ஒட்டிய சில மாதங்களாக உடனுக்குடன் நனவாகி வந்த பல கனவுகளைக் கண்டும், நல் ஆசி கூறும் அதிசயத் தொனிகளை கேட்டும் வந்தார்கள். அதையடுத்து, பிரமாண்டமான மனித உருவில் ஒருவர் அடிக்கடி தோன்றிப் பெருமானாரைப் பிடிக்க வருவதுபோல் நெருங்குவதும் பின் விலகிச் செல்வதுமாக இருந்துவந்தார். இக்காட்சிகள் நாயகம் அவர்களுக்குப் பயத்தையும் மனக்குழப்பத்தையும் உண்டாக்கிக் கொண்டிருந்தன. சில சமயங்களில் இருதயமே வெடித்து விடுமோ என அஞ்ச வேண்டும் போலிருந்தது. இதனால் அண்ணலாரின் ஊணுறக்கங்கெட்டு உடம்பு நலிவுற ஆரம்பித்தது. இதனைக் கண்டு கவலையுற்ற அன்பு மனைவி கதீஜா நாச்சியார் தம் அன்பு நாயகருக்குத் தைரியம் பல கூறி தேறுதல் செய்து வந்தார். என்றும் நன்மையையே நாடி நற்காரியங்ளையே புரிந்து வரும் நாயகம் அவர்களுக்கு இம்மாதிரி நடைபெற்று வருவது நன்மை விளைவிப்பதாக இருக்குமேயல்லாது ஒருக்காலும் தீமை பயக்காது என ஆறுதல் கூறி உற்சாகமூட்டி வந்தார் அம்மங்கையர்க்கரசி.

இவ்வாறு இருந்து வருங்கால், அவ்வாண்டு ரமளான் மாதமும் வந்துவிட்டது. பெருமானார் வழக்கம் போல் ஹிராக் குகைக்குச் சென்று நோன்பிருந்து கடுந்தவத்தில் ஈடுபட்டார்கள். அம்மாதத்தின் பிற்பகுதி இரவொன்றில் இது 27ம் பிறை திங்கள்கிழமை இரவென்பது மார்க்க அறிஞர் பெரும்பாலாரின் முடிவாகும். அண்ணலார் அருந்தியானத்தில் மூழ்கித் தூக்கமும் விழிப்புமான ஓர் மத்திய நிலையில் மல்லாந்து படுத்திருந்தார்கள். அப்போது இருள் கம்பியிருந்த குகை திடீரென ஒளிமயமாகக் காட்சியளித்தது. அதைத் தொடர்ந்து இடி முழக்கம் போன்ற ஓர் எதிரொலி எழுந்து குகையின் உள்ளும் புறமும் அலைபோன்று பரவியது. அந்த ஒளி மயத்தினூடே அதனினும் மிக்கப் பிரகாசமாக, புன்முறுவல் பூத்த வண்ணம், மனித உருவம் ஒன்று தோன்றி நின்றது.

நித்தில நிரைத்த விருசிறை யொழுங்கு
நீணிலாக் கதிர்கள் விட்டொழுக
வித்திரு மத்தாள் சிறந்தணி திகழ
வில்லுமிழ் கரங்கிடத் திலங்கப்
பத்திவிட் டெறிக்குஞ் செம்மணி யிருகட்
பார்வையிற் கருணைவீற் றிருக்கச்
சித்திர வடிவைச் சுருக்கிமா னிடர்போற்
செபுறயீ லவ்விடத் தடைந்தார்.


அது வேறு யாருமல்ல. தம் முன் அடிக்கடி வந்து சென்ற, தம்மைப் பலகாலும் வாதனைப் படுத்தி வந்த பெரிய உருவந்தான அது பெருமானார் சுருட்டி மடக்கி எழுந்து உட்கார்ந்து அதனைக் கூர்ந்து நோக்கினார். தங்க மயமான எழுத்துக்கள் பொறித்த பீதாம்பரம் ஒன்றைக் காட்டி அண்ணலாரை விளித்து, :”ஓதுவீராக!.” என்றது அவ்வுருவம் பெருமானார் மெய்சிலிர்த்து விதிர்ப்படைந்த நிலையில் “எனக்கு ஓதத் தெரியாதே” எனத் தடுமாற்றத்துடன் பதிலிறுத்தார்கள். அவ்வுருவம் நாயகம் அவர்களை நெருங்கி இறுகக் கட்டியணைத்தபின் “ஓதுவீராக” எனச் சற்று உரக்கக் கூறியது. அதற்கு அண்ணலவர்கள் “நான் ஓதினவன் அல்லனே” எனப் பரிதாபந்தோய்ந்த குரலில் பதிலளித்தார்கள். இப்போது அவர்களின் உடம்பு வியர்வையால் நீராடி நின்றது. மறுமுறையும் அவ்வுருவம் பெருமானாரை அண்மிக் கட்டியணைத்த பின் விலகி நின்று “ஓதுவீராக” என முன்னிலும் சற்று உரத்துக் கூறியது. அதற்கு நாயகம் அவர்கள் “நான் எதை ஓதுவது” என வாய் குழற உதடு பதய வினவினார்கள். மூன்றாம் முறை அவ்வுருவம் உடலிலுள்ள உயிர் வெளியேறுமாப் போல் இறுகக் கட்டித் தழுவிய பின் “ ஓதுவீராக! அனைத்தையும் இரட்சிப்பவனாகிய உம் இறைவனின் திருநாமங் கொண்டு, அவன் மனிதனை இரத்தக் கட்டியினின்றும் உருவாக்கினான். ஓதுவீராக!. உமது இறைவன் மகோன்னதமானவன்: எழுதுகோலினால் அறிவை விரிவாக்கியவன். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு அறிவித்துத் தந்தவன்” என்ற ஐந்து திருவசனங்களை ஓதிக் காட்டியது அவ்வொளி உருவம். இவை திருக்குர்ஆன் 96ம் அத்தியாயத்தின் முதல் ஐந்து திருவசனங்களாகும். இவ்வைந்தும் பெருமானாரின் உள்ளத்தில் கல்மேல் எழுத்தாகப் பதிந்து விட்டன.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:10 pm

அத்தொனி அலையலையாக வானவெளியில் பரவி எதிரொலி செய்து நின்று, பின்னர் படிப்படியாக அவ்வுருவமும் ஒளியும் ஒலியும் குறைந்து மறைந்தன. எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் அன்று இறைவனின் இறுதித் தூதராக, நபிமார்களின் முத்திரையாக முடிசூடப் பெற்றார்கள். நபிகள் பெருமான் எழுதப்படிக்கத் தெரியாத “உம்மியாக” இருந்தார்கள்.

“நபியே நீர் இதற்கு முன்னர் (திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னர்) எந்த வேதத்தையும் கற்று அறிந்தவரல்லர். உமது வலக்கரங்கொண்டு எதையும் எழுதியருமல்ல” என இறைவன் தன் திருமறையின் 29:48 திருவசனத்தில் குறிப்பிடுகிறான். இந்நிகழ்ச்சி கி.பி. 610 ஆகஸ்டு 23-24 அதிகாலை 3:30, 4 மணியளவில் நிகழ்ந்ததாக கணித்துள்ளனர். அப்போது அண்ணலாரின் வயது 41 ஆக இருந்தது.

கிழக்கு வெளுக்கிறது. வியப்பும் அச்சமும் கலந்த ஒருவித நடுக்கத்துடன் இறைவனின் இன்னருள் தூதர் ஹிராவினின்றும் வீடு நோக்கி விரைந்தார்கள். வீட்டின் கதவு தட்டப்பட்டது. கணவரின் வருகையை எதிர்பார்த்தவராக இராக்காலங்களில் தூங்கியும் தூங்காமலும் படுக்கையில் கிடந்த கதீஜா நாச்சியார், கதவு தட்டும் சப்தம் கேட்டுப் பதறி எழுந்து சென்று யாரெனக் கேட்டு, பெருமானார் வந்திருப்பதைத் தெரிந்து விரைவில் கதவைத் திறந்தார். உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அண்ணலார் தம் அருமை நாயகியை விளித்து “என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்” எனக்கூறியவர்களாய்ப் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டார்கள்.

மனம் பதறிய அம்மாதரசி, தம் கணவரைப் போர்வை கொண்டு போர்த்தியவராக, “அபுல்காஸிம்! தங்களுக்கு என்ன நேர்ந்தது? தாங்கள் எங்கு சென்றீர்கள் நேற்றுத் தானே ஹிராவுக்கு ஆளனுப்பித் தங்களைப் பார்த்து வரச் சொன்னேன். அவர்கள் தேடி அலைந்து பார்த்து விட்டு தங்களைக் காணவில்லை என வந்து சொன்னார்கள். தாங்கள் ஏன் இவ்வாறாக மாறுதலடைந்து இருக்கிறீர்கள்? தங்களது திருவதனம் இதற்குமுன் என்றுமில்லா ஜோதியை வீசி நிற்பதையும், தங்களின் திருமேனி நான் முகர்ந்தறியா நறுமணத்தை முகிழ்வதையும் நான் காண்கிறனே! தங்களுக்கு யாதேனும் நேர்ந்ததோ? தயை கூர்ந்து நடந்ததைச் சொல்லுங்கள், என் பெருமானே! எனப் பரிவும், பாசமும், கனிவும் கரிசனையும் கலந்து ஏக்கத்துடன் வினவினார். போர்வைக்குள் கிடந்த பெருமானார் தம் துணைவியாரிடம் ஹிராக்குகைக்குள் நடந்த அற்புதங்களை யெல்லாம் ஒன்றுவிடாது விவரித்து, நாமூஸ் (ஜிப்ரீல்) ஓதிக் காண்பித்த ஐந்து திருவசனங்களையும் ஒப்பிப்பார்கள். எல்லாவற்றையும் கதீஜா நாச்சியார் இன்புறக் கேட்டு, இனம் புரியா மகிழ்வடைந்து, அண்ணலாருக்கு ஆறுதல் மொழி பகர்ந்தார்.

“உம்மீது வேதம் இறக்கப்படுமென நீர் ஆதரவு வைத்திருக்கவில்லை, உமது இறைவனின் கிருபையாலேயே அன்றி” (28:86)

“உமது இறைவன் உம்மைக் கலக்கமுற்றவராகக் கண்டு நபித்துவத்தை அருளினன்” (குர்ஆன்)


இப்போது கதீஜா நாச்சியார் எழுத்து தம்மைப் போர்த்திக் கொண்டு தம் பெரிய தந்தையின் மகன் வரகா இப்னு நௌபல் என்பாரின் இல்லம் நோக்கி நடந்தார்.

வரகா, யூத, கிறிஸ்தவ வேதங்களை நன்கு கற்றறிந்தவர். உருவ வழிபாட்டில் ஈடுபடாதவர். எனவே தான், ஹிராக் குகையில் நடந்தவற்றைத் தம் அண்ணனிடம் சொல்லி ஐயத் தெளிவு பெறலாம் எனக் கருதி கதீஜா நாச்சியார் அங்கு சென்றார். தங்கை கூறியவற்றைக் கேட்டபோது, வரகாவின் மனதில் “உம்மைப் போல் ஓர் தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர் தம் உடன் பிறந்தாரிலிருந்து எழுப்பி என் வார்த்தைகளை அவரது வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லிக் காண்பிப்பார்” என மூஸா நபிக்கு இறைவன் கூறிய வார்த்தைகளும் (உபாகமம் 18:18) “வேத நூலானது கல்வி பெறாத அவருக்கு அளிக்கப்பெற்று, “ஓதுவீராக!” என்னும் அத்திரு வசனங்களை ஓதுமாறு கூறப்படுங்காலை, எனக்கு ஓதத் தெரியாதே! எனக் கூறுவார். (ஏசாயா 29:12) என்ற வேத வாக்கியங்களும் பளிச்சிட்டன. அவர் கதீஜா நாச்சியாரை நோக்கி, “தங்கையே நிச்சயமாக இவர்தான் மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் ‘வஹி’ (தேவ அறிவிப்பு) கொண்டு வந்த நாமூஸுல் அஃலம் (ஜிப்ரீல்) ஆவார். உலக மாந்தர் இதுவரை எதிர்பார்த்திருந்த உலக மாநபி உம் கணவர் முஹம்மதுவேயாவார். விரைவில் வீடு சென்று அவரைக் கண்ணினை இமை காப்பாது போல் காத்து வருவாய்!” எனக் கூறி அனுப்பினார். கதீஜா நாச்சியார் இல்லம் திரும்பி வரகா சொன்ன செய்திகளைப் பெருமானாரிடம் கூறித் தைரியமூட்டினார். அதுகேட்டு அண்ணலாரும் ஒருவாறு மன நிம்மதியடைந்திருந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:11 pm

அவற்றை அவ்வுருவத்தினிடம் ஒப்பித்துக் காண்பித்தார்கள். அவ்வளவோடு அவ்வுருவம் மறைந்து விட்டது. பெருமானார் சட்டெனப் பொதும்பை விட்டும் வெளிவந்து சுற்றும் முற்றும் அதனைத் தேடினர். காணாது தவித்தனர். அது சமயம் அவ்வுருவம் வானமெங்கும் பேரொளியாகப் பெருகி நின்று,

“முஹம்மதே! நீ
இறைவனின் தூதராவீர்!.
யான் அவன் பணியாள்
ஜிப்ரயீல் என்னும்
வானவராயிருக்கும்”


என கணீரென முழங்கியது.


ஓர் நாள் நாயகம் அவர்கள் வழக்கம் போல் ‘தவாபு’ செய்யக் கஃபாவுக்குச் சென்றபோது வரகாவைச் சந்திக்க நேர்ந்தது. ‘வஹீ’ வந்த அவ்விரவு ஹிராக் குகையில் நடந்தவற்றை அண்ணலாரின் அமுதவாயால் கேட்ட வரகா, “உம்மை இறைவன் தன் இறுதி நபியாக நியமித்துள்ளான். மக்கள் உம்மைப் பொய்யரென்றும், பைத்தியக்காரரென்றும், சூனியக்காரரென்றும் பழித்துரைப்பர். விரோதம் பாராட்டுவர். தாங்கவொண்ணாத துன்பம் விளைவிப்பர். வீட்டை விட்டும் விரட்டியடிப்பர். எனவே நீர் என்றும் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளும். எனக்கூறிப் பெருமானாரின் நெற்றியில் முத்தமிட்டு ஆசி கூறி அனுப்பினார். வரகா கூறிய வார்த்தைகள் பெருமானாருக்குப் பெரும் ஆறுதலளித்த போதிலும், வீட்டை (மக்காவை) விட்டும் விரட்டியடிப்பர்” என்ற சொற்கள் மட்டும் நபிகள் நாதரின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்று இடையறாது ஒலித்துக் கொண்டிருந்தன.

“நாம் குர்ஆனைப் படிக்கும் போதெல்லாம் அது நமக்குப் புதிதாகவே தோன்றுகிறது. அதனுடைய ஆகர்ஷண சக்தி நம்மை அதன் பால் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்ப்பது தெரிகிறது. சில இடங்களில் அது நம்மை கிளு கிளுக்கச் செய்கின்றது. சில இடங்களில் அது நம் கண்களில் நீரை வரவழைக்கின்றது. இறுதியாக, அது தன்னைப் படித்தவர்களைத் தன்மீது ஆவல் கொண்டவர்களாக ஆக்கி விடுகிறது.” என்கிறார் ஜெர்மன் மகாகவி கத்தே.

“திருக்குர்ஆன் பரிசுத்தமான நடையையும், ஞானத்தையும், சத்தியத்தையும், அற்புதமாக்கிக் கொண்டது. இதை ஒரு ஸ்திரமான மாபெரும் அற்புதமெல்லாம், ஏனெனில் முஹம்மது நபி (ஸல்) ஒன்றும் படித்திருக்கவில்லை. அவர் வாய் மூலம் வெளிப்பட்ட திருக்குர்ஆன் பெரிய சட்ட புஸ்தமாகவும், பொதுவழிபாட்டுக்குரியதாகவும் மானிட வர்க்கத்தின் ஆறிலொரு (நான்கிலொரு) பங்கு மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடியதாகவும் அமைந்து விட்டது. எக்காலத்துக்கும் எந்த அரசாங்கத்துக்கும் எப்போதும் பொருந்தக்கூடிய நூல் திருக்குர்ஆன் ஒன்றே” எனக் குறிப்பிடுகிறார் வரலாற்றாசிரியர் பாஸ்வர்த் ஸ்மித் என்பவர்.

“திருக்குர்ஆன் ஒரு காவியமல்லவென்றால், அது ஒரு காவியமா, அல்லவாவெனநிர்ணயிப்பது மிகக்கடினம். அது கவிதையைக் காட்டிலும் சிறந்தது, அது ஒரு சரித்திரத் தொகுப்பன்று! ஒருவருடைய வாழ்க்கை வரலாறுமன்று! மூஸா நபி அவர்கள் தூர்ஸீனா மலையில் வசனித்த விருத்தாந்தங்கள் அடங்கிய ஞான போதமுமன்று, உண்மையான, பொய்யான தீர்க்கதரிசிகள் யாவர் என்பதைப் பற்றித் தர்க்க ரீதியான முறையில் பிளேட்டோ எழுதிய வேதாந்த ஆராய்ச்சிப் பிரபந்தமுமன்று!

“இது ஓர் தீர்க்கதரிசியின் அறைகூவல். தனக்குத் தானே நிகராய், எனினும் அதன் ஆழிய கருத்துக்கள் அகில உலகத்துக்கும் பொதுவானவையாய், விரும்பியோ விரும்பாமலோ எக்காலத்தவரும் அதன் உபதேசங்களை ஏற்று நடந்தே தீர வேண்டியதாய் அமைந்திருக்கின்றது.

“இந்த அறைகூவல் அரண்மணைகளிலும், பாலைவனங்களிலும், பட்டணங்களிலும், ஏன், சாம்ராஜ்யங்களிலும், வித்தியாசமின்றி எதிரொலித்தது, முதலில் இந்த அறைகூவல் உண்மையான விசுவாசிகளை ஊக்குவித்து உலகத்தையே வெற்றி கொள்ள உதவியது. அதன்பின் அது ஒரு புனருத்தாரண இயக்கமாயத் திரண்டு, கிரீஸிலும் ஆசியாவிலுமுள்ள ஆக்க ஞானங்களை உருவாக்கி, அந்தகாரத்தில் ஆழ்ந்திருந்த கிறிஸ்தவ ஐரோப்பாவில் ஊடுருவிப்பாய்ந்தது” என டாக்டர் சாமுவேல் ஜான்ஸன் தமது “ஓரியண்டல் ரிலிஜண்ஸ்” என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:11 pm

“இயற்கையை வருணிக்கும் பல கருத்தோவியங்கள் குர்ஆனின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. உயிர்த்துடிப்புடன் வெளிப்படும் இச்சொற் சித்திரங்கள், வாய்விட்டு வாசிக்கும் பொழுது, பாலையின் மணல் பா இசைப்பது போலவும், அலைகடல் ஆர்த்தெழுவது போலவும் நாம் உணர்கிறோம். சொல்லழகும், பொருட்செறிவும் நிறைந்த திருக்குர்ஆனின் வசனங்கள் நம் இதயத்தை ஈர்க்கின்றன.

“அன்பு பற்றியும், அருள் பற்றியும் மனிதப் பண்பு பற்றியும், இயற்கை எழிலைச் சுற்றிப் படரும் கருத்துப் படையல்கள் மூலம் மெய்யறிவு பற்றியும் உணர்ந்து வியப்புறுகிறோம்.

விண்மீன்கள் கண் சிமிட்டும் வியனுறு வானவெளியில் விளைந்திடும் அற்புதங்கள், நியதி தவறாது இரவைப் பின் தொடரும் பகல், ஆழ்கடலில் ஆடி அசைந்து செல்லும் மரக்கலங்கள், வானத்து முற்றத்திலே வண்ணச் சிறகடித்து வளைந்து, வளைந்து, செல்லும் பறவைக் கூட்டங்கள், நாற்கால் பாய்ச்சலிலே பாய்ந்தோடும் குதிரை இனம், ஆடாது நிற்கும் மலர், தூங்கும் கற்குன்றங்கள், வீசும் தென்றல், வேவும் நெருப்பு, விரைந்தோடும் கார்முகில் கூட்டம், இனிய நீர்ப்பெருக்கு, பெண்மையின் குளிர்நோக்கு, பச்சிளங்குழந்தையின் பரவசச் சிரிப்பு, கனிந்து தொங்கும் பழக் குலைகளைச் சுமந்து சாய்ந்து நிற்கும் ஈச்சமரங்கள், நம்பிக்கை கொண்ட மனிதர்களே! அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து கொள்வதற்கு இவை இணையற்ற சான்றுகளன்றோ?” என வினவுகின்றார் பிரெஞ்சு ஆசிரியர் ஜார்ஜ் ரோத்ராண்டு.

“இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிகழும் நிகழ்சிகளுக்கு அடிப்படையாக இயங்குவது குர்ஆன் வாழ்க்கைக்குரிய சட்டங்கள், இறைவனுடைய ஒருமை, உரிமைகளின் வரம்புகள், தண்டனைகளின் விவரங்கள், சமுதாய அமைப்புகள், நீதியின் நிலைகள் ஆகிய அனைத்தும் திருக்குர்ஆனின் தௌ;ளிய முறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன” என ஹங்கேரிய அறிஞர் தேஹாவெனஸத்தே கூறுகிறார்.

ஹிராக் குகையில் முதல் வேத வசனங்கள் வெளியான தன் பின் சுமார் ஆறுமாத காலம் வரை வானவர் ஜிப்ரீல் மீண்டும் தோன்றவுமில்லை. புதிய திருவசனம் எதுவும் கொண்டு வரவுமில்லை. அதனால் பெருமானார் கிலேசமும் சஞச்லமுமுற்ற நிலையில் இருந்து வந்தார்கள். முதல் வெளிப்பாட்டுக்குப் பின்பிருந்தே எப்போதும் தங்களைப் போர்வையால் போர்த்திக் கொள்வது அவர்களது நீங்கா வழக்கமாகிவிட்டது. ஆறு மாதங்கழித்து அண்ணலாருக்கு மிக்க ஆறுதலளிக்கும் வகையில் “உம் இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை, வெறுக்கவுமில்லை, நிச்சயமாக பிற்பகுதி (வாழ்க்கை)யானது முற்பகுதியை விடச் சிறப்புடையதாக விருக்கும்! இன்னும் நிச்சயமாக உம் இறைவன் நீர் மன நிறைவு கொள்ளும் அளவு உமக்கு வழங்கக் கூடியவனாகயிருக்கின்றான்” என்ற திருவசனங்களைக் கொண்ட 93வதுர் அத்தியாயம் வெளியானது. அதனையடுத்து,” (அங்கியால்) போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து சென்று (மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக!” எனவுள்ள 74வது அத்தியாயம் வெளியானது. இதன்பின் நபிகளார் இறைவனின் தூதைத் தம் நம்பிக்கைக்குரியவர்களிடம் வெளியிட்டு அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். பெருமானாரின் தூதைக் கதீஜா நாச்சியார் ஹிரா வெளிப்பாட்டின் போதே ஒப்புக்கொண்டு இஸ்லாத்திலாகிவிட்டார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:12 pm


இறைவணக்கம்




இதனை அடுத்து, இறைவணக்கம் பற்றிய கட்டளையைக் கொண்ட 73வது அத்தியாயம் வெளியானது. அதன்டி தொழுகையைக் கடைப்பிடித்துக் காலையிலும் மாலையிலும் இரண்டு ரக்அத்துகள் வீதம் தொழுது வந்தார்கள். ஒருநாள் மக்காவின் அருகிலுள்ள குன்றுக்குச் சென்றிருந்த போது, வானவர் ஜிப்ரீல் தோன்றித் தம் குதிங்காலால் தரையை மிதித்துப் பள்ளப்படுத்தி, அதினின்று தண்ணீர் குமிழியிடச் செய்து அதனைக் கொண்டு ‘ஒலூ’ செய்து காட்டினார். பெருமானாரையும் அவ்விதமே செய்து கொள்ளுமாறு பணித்து இருவரும் ‘ஒலூ’ செய்து கொண்ட பின் ஜிப்ரீல் முன்னின்று தொழுக வைத்து வணக்க முறையையும் கற்றுத்தந்துவிட்டு மறைந்தார். பெருமானாரின் விண்ணேற்றத்தின்போது ஐவேளைத் தொழுகையை இறைவன் முஸ்லிம்களுக்கு நியமம் செய்தபின் அவற்றின் வணக்க நேரங்களை அண்ணலாருக்கு அறிவிப்பான் வேண்டி அவ்வவ்வேளைகளிலும் அமரர் ஜிப்ரீல் தோன்றி ஒவ்வொரு
தொழுகையின் முன்னேரம் பின்னேரத்தைப் பொழுதைக் கணக்கிட்டுக்காட்டி நிர்ணயித்துக் காண்பித்துச் சென்றார்.

நபிகள் பிரான் வீடு திரும்பித் தாம் ஜிப்ரீல் மூலம் கற்ற தொழுகை முறையைத் தம் செல்வ நாயகி கதீஜா பிராட்டி யாருக்கும் கற்றுக்கொடுத்து இருவரும் இரவு நேரங்களி;ல் இறைவணக்கத்திலீடுபட்டு வந்தனர். ஓர் இரவு தூக்கத்திலிருந்த பத்து வயதுச் சிறுவர் அலீ கண்விழித்த போது தம் அண்ணனும் அண்ணியும் தனித்தனியாக நிலை நிற்பதும், குனிவதும், நிமிர்வதும் பின் மண்டியிட்டுச் சென்னியைத் தரையில் வைப்பதுமாகச் செயல்புரிவதைக் கண்டு ஆச்சரிய முற்றார். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து பல இரவுகள் செய்து வருவதைப் பார்த்து, அதன் காரணத்தைத் தாமாகப் புரிந்துகொள்ள இயலாமல், ஒருநாள் பெருமானாரிடம் அதுபற்றிப் பரிவுடன் வினவினார். அதற்கு அண்ணலார், தாம் இறைவனால் அவனின் திருத்தூதராக நியமிக்கப்பெற்று அவனது ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்து விளக்கக் கட்டளையிடப்பட்டிருப்பதாகவும், வானவர் ஜிப்ரீல் தமக்கு இறைவசனங்கள்
கொண்டு வருவதாகவும் இறை வணக்க முறைகளையும் அவரே வந்து கற்றுத் தந்ததாகவும் அதன்படியே தாமும் தம் மனைவியும் நடந்து வருவதாகவும் நயமுடன் விளக்கிக் கூறினார்கள். இவற்றைக் கேட்ட அலீ “அவ்வாறாயின், நானும் தங்களையே பின்பற்றி நடப்பேன்” எனக் கூறியவாறு கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் சேர்ந்து தொழுகையையும் அன்றிலிருந்தே கைக் கொண்டார். பத்து வயதுச் சிறுவரேயாயினும் அலீ மிக்கத் திடசித்தமுடையவராயிருந்ததைக் கண்டு கணவரும் மனைவியும் ஆச்சரியக் களிப்புள் ஆழ்ந்தனர்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:13 pm


அலீ (ரலி)


பெருமானாரின் பெரிய தந்தை அபூதாலிபின் புதல்வர் தாம் அலீ. இவர் கி.பி. 600ல் பிறந்தார். அலீ சிறுவராக இருந்தபோது அரபு நாட்டில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அதனால் அபூதாலிப் தமது பெரிய குடும்பத்துடன் வறுமையுற்று நின்றார். அதுகண்ட அண்ணலாரும் அவர்கள் தம் சிறிய தந்தை அப்பாஸும் அபூதாலிபிடம் சென்று, “தாங்கள் அதிகக் குழந்தைகளுடன் ஏன் சிரமப்பட வேண்டும்? நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பிள்ளையை அழைத்துச் சென்று வளர்த்து வருகிறோம், அதற்கு அனுமதி அளியுங்கள், தங்களுக்கு இதனால் குடும்ப பாரம் சற்று தணியுமென எண்ணுகிறோம்” என வேண்டி நின்றனர். அபூதாலிப் அதற்கு ஒருவாறு இணங்கியவராய் தம் மூத்த மகன் ஜஃபரை அப்பாஸுடனும் இளைய மகன் அலீயைப் பெருமானார் அவர்களுடனும் அனுப்பி வைத்தார். இரு சிறுவர்களையும் அழைத்துச் சென்ற அவர்கள் பற்றுடனும் பாசத்தோடும் வளர்த்து வந்தனர். சிறுவர் அலீக்கு அப்போது ஆறு வயதாக இருந்தது.

நபிகள் பிரானும் அலீயும் பகல் காலங்களில் மக்காவுக்கு அருகிலுள்ள முற்கூறிய குன்றுக்குச் சென்று இறை வணக்கம் புரிந்து வந்தனர். சில தினங்களுக்குப் பின், அபூதாலி தம் தம்பி மைந்தர் முஹம்மது, இறைவனின் தூதராகப் புதியதொரு மார்க்கத்தைப் பிரகடனப்படுத்தி இக்குன்றுக்குச் சென்று தொழுதுவருகிறார் என்பதைக் கேள்வியுற்றார். அதனை அறிந்து கொள்வதற்காக, ஒரு நாள் பெருமானாரும், அலீயும் அங்கு சென்றிருப்பது தெரிந்து தாமும் அக்குன்று நோக்கி சென்றார். அங்கு தம்பி மகனும், தனயனும் புதிய முறையில் இறைவணக்கம் புரிவதைக் கண்டு வியப்புற்றார். தொழுது முடிந்ததும் அவர்களை அணுகி, “என் தம்பி மகனே! இப்போது நீர் பின்பற்றியுள்ள மார்க்கம் யாது?” என கனிவுடன் வினவினார்.

அதற்கு நபிகள் கோமான், “பெரிய தந்தையே! இப்போது நாங்கள் பின்பற்றியுள்ள மார்க்கம் இறைவனுடையதும் அவன் உவப்பிற்குரியதுமாகும், அவனின் முந்தையத் திருத்தூதர்களும், வானவர்களும், நம்முடைய மூதாதை நபி இப்ராஹீம் அவர்களும் பின்பற்றி வந்த மார்க்கமும் இதுவேயாகும்” எனப் பணிவன்புடன் எடுத்துக்கூறி, இறைவன் தம்மை அவனுடைய திருத்தூதராக நியமித்து வானவர் ஜிப்ரீல் மூலம் தமக்கு புர்கான் வேதத்தை இறக்கியருளிவரும் விவரங்களையும் இஸ்லாத்தின் ஏகத்துவக் கோட்பாடுகளையும் விளக்கிக் காட்டி, “பெரிய தந்தையே! தூங்களும் இறைவனின் இந்த உண்மைச் சன்மார்க்கத்தை பின்பற்றி ஈருலக ஈடேற்றத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என வினயமுடன் கூறி நின்றார்கள். ஆதுகேட்ட அபூதாலிப் ஒரு கணம் சிந்தனையிலாந்தார். பின் பெருமானாரை நோக்கி, “என் தம்பி மகனே! நூர் மாசு மறுவற்ற மாணிக்கம், உண்மையின் உறைவிடம். நூர் கூறியவனைத்தும் உண்மை என்பதை நான் நன்கு அறிவேன். எனினும், பன்னெடுங்காலமாக நம் மூதாதையர் பின்பற்றி வரும் கொள்கையைக் கைவிடுவது மக்கள் மத்தியில் நமக்கிருக்கும் கண்ணியம் கௌரவம் இவற்றைக் கெடுத்துவிடுமே என அஞ்சுகிறேன். அந்நிலையை ஏற்க நான் தயாராகயில்லை. எனினும், உனது புதிய மார்க்கத்தின்பால் நீர் மக்களை அழைக்குங்காலை, உமக்கு இடர் ஏதும் நேராவண்ணம்ஈ எனது இறுதி மூச்சு வரை உதவியாக இருந்து பாதுகாப்பேன்” என உணர்ச்சி ததும்பக் கூறினார்:

உறுதியளித்தார். பின்னர், தம் மகன் அலீயை விளித்துத் தம்முடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், அலீயோவெனில், தாம் உத்தமர் நபிகளாருக்கு உறுதுணையாக நிற்கப்போவதாகக் கூறி உடன் செல்ல மறுத்துவிட்டார். அது கண்டு அபூதாலிப் ஆத்திரங் கொள்ளவில்லை. மாறாக, புன்முறவல் பூத்தவராய், “நல்லது, உன் விருப்பப்படியே நடந்துகொள். முஹம்மதுவுடன் இருப்பது நன்மை பயக்குமேன்றித் தீமை ஒரு போதும் நேராது,” என மொழிந்தவராய் அவ்விடத்தை விட்டும் அகன்றார்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக