புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மக்கா வாழ்க்கை
பரம்பரை
ஆசியாவிலுள்ள பல நாடுகளில், தென்வடலாக 1500 மைல் நீளமும் கிழமேலாக 800 மைல் அகலமுள்ள பாலைவனப் பிரதேசமான அரபு நாடும் ஒன்று. அந்த நாடு செழிப்பால் வறண்ட நாடு. ஆயினும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் ஒளிதில் தொடர்பு கொள்ளத்தக்க முக்கியமான ஓர் இடத்தில் அது அமைந்திருக்கிறது. எனவே தான் மக்கா பண்டைக்காலங்தொட்டு ஒரு முக்கிய வியாபார கேந்திரமாகத் திகழ்ந்து வந்துள்ளது.
இவ்வித நடு நாயகமான ஓர் இடத்தில் அரபு நாடு அமைந்திருந்த போதிலும், வளமில்லாத பாலைவனப் பிரதேசமாக இருக்கும் காரணத்தினால், சுற்றுப்புற நாடுகளை அரசாண்ட அரசர்கள் எவரும் அரபு நாட்டின் மீது ஆசையோ, அக்கறையோ கொண்டு ஆட்சி கொள்ளமுன் வரவில்லை. ஆனதால், அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரலாயினர். இங்கு வாழ்ந்த வழுகின்ற மக்களை, நூஹ் நபியவர்களின் புத்திரர் ஷாம் என்பவரின் வழித்தோன்றல்களான ஆதிப் பழங்குடி அரபியர்கள், பாலைவன அராபியர்கள், குடியேறிகளான அந்நியர்கள் என மூன்று பெரும் பிரவுக்குள் அடக்கலாம்.
அரபுநாட்டில் குடியேறி வசித்த அந்நியர்களில் ஆபிரஹாம் தீர்க்கதரிசி என்னும் இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயீல் நபியும் சேருகின்றனர். இப்ராஹீம் நபி இராக்கிலுள்ள கல்தூனியா என்ற இராச்சியத்தைச் சேர்ந்தவர். இவருடைய சிறிய தந்தை ஆஸர் என்பவர் கோயில்களுக்கு உருவ வழிபாடு செய்வோருக்கும் விக்கிரகங்கள் செய்து கொடுத்து வந்தார். இப்ராஹீம் நபி விக்கிரக வணக்கத்தை கண்டித்து ஏக இறைவனை வணக்குமாறு மக்களிடையேப் பிரச்சாரம் செய்தார். இதனால் அவரின் சிறிய தந்தையும் அந்நாட்டு அரசன் நம்ரூது என்பானும், உற்றார் உறவினரும் இவரை வெறுத்து அந்நாட்டை விட்டும் வெளியேற்றிவிட்டனர்.
எனவே, அவர் பாலஸ்தீனம் சென்று அங்கு கன்ஆன் என்னும் இடத்தில் தங்கினார். பின் அங்கிருந்து வெளியாகி சிரியாவுக்கு வந்து வசித்த போது தமது சிறிய தந்தையின் மகளான சாரா என்ற பெண்மணியை மணம் செய்து கொண்டார். சில காலஞ்சென்று மீண்டும் சொந்த நாட்டுக்கு வந்து இறைவனின் மகத்துவத்தைப் பற்றியும், விக்கிரக வணக்கத்தைக் கண்டித்தும் பிரச்சாரம் செய்யலானார். அதனால் அரசன் நம்ரூது அவரை நெருப்புக் குண்டத்துள் எறியச் செய்தான். இறைவனின் ஆணைப்படி அந்நெருப்பு அவருக்கு குளிர்ந்த புங்காவாக மாறி விட்டது. பின்னர் சொந்த நாட்டைத் துறந்து மனைவி சாராவுடன் எகிப்து நாட்டுக்குச் சென்றார். எகிப்து அரசன் ரக்கிய்யூன் என்பான் இப்ராஹீம் நபியைக் கண்ணியப்படுத்தி பல வெகுமதிகளுடன் அரசகுமாரி ஹாஜரா என்ற மங்கையையும் பரிசிலாகக் கொடுத்தனுப்பினான்.
இப்ராஹீம் நபியவர்களுக்கும் வயதாகி வந்தது. ஆயினும் சாராவைக் கொண்டு மகப்பேறு கிட்டாதிருந்தது. எனவே ஹாஜராவையும் அவர் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் ஹாஜராவுக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது. அவ்வன்புக் குழந்தைக்கு இஸ்மாயீல் என அழகுத் திருப்பெயர் சூட்டி மிக்கப் பற்றுப் பாசத்துடன் வளர்த்தார்கள். இப்ராஹீம் நபியவர்களுக்கு அது சமயம் 86 வயதாக இருந்தது. அதன்பின் மூத்த மனைவி சாராவுக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு இஸ்ஹாக் எனப் பெயரிட்டார். அது போழ்து இப்ராஹீம் நபி 99 வயதை அடைந்திருந்தார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜம்ஜம் ஊற்று
இஸ்மாயீல் நபி பச்சிளங்குழந்தையாக இருந்த போது இறைவனது கட்டளைப்படி ஹாஜராவையும் குழந்தையையும் பாரான் என்னும் வனாந்திரப் பிரதேசமான அரேபியாவில் மக்கா என்னுமிடத்தில் கொண்டு வந்து விட்டு அங்க வசித்து வருமாறு இப்ராஹீம் நபி ஏற்பாடு செய்தார்கள். அங்கு ஒரு நாள், குழந்தை இஸ்மாயீலுக்கு தண்ணீர் தாகமேற்பட்டுப் பரிதாபமாக தவித்து அழுதது. கைவசம் தண்ணீரில்லாத நிலையில் குழந்தையின் பரிதாபந் தாங்காத அன்னை ஹாஜரா, சபா, மர்வா என்ற இரு குன்றுகள் மத்தியிலுள்ள இடத்திலும் வேறு இடங்களிலும் தண்ணீரைத் தேடி அங்குமிங்கும் ஓடி அலைந்தார். எந்த இடத்திலும் தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தையின் வீறிட்ட அலறல் தாயின் உள்ளத்தைப் பிழிந்தெடுக்க, அலைந்து கொண்டிருந்த அன்னை ஹாஜரா மனங்கசிந்து உருக்கமுடன் இறைவனைப் பிரார்த்தித்தார். அந்நேரத்தில் வானவர் ஜிப்ரீல் குழந்தை இருந்த இடத்தில் தோன்றித் தம் குதிங்காலால் மிதிக்கப் பள்ளமுண்டாகியது. குழந்தை இஸ்மாயீல் அலறித் துடிக்கும் போது கால்களை உதறி அடித்ததில் பள்ளமேற்பட்டதாகவும் கூறுவர்.
அக்குழியினின்று இனிய நீர்க்குமிழியிட்டு வெளிவந்தது. தண்ணீருக்காக அலைந்து திரிந்த அன்னை ஹாஜரா எங்கு அலைந்தும் நீர் கிடைக்காமையால் ஏமாற்றமும் மனச்சோர்வும் உற்றவராக குழந்தை இருந்த இடம் நோக்கி அசந்து போய் வந்தார். என்ன ஆச்சரியம்!. அங்கு வந்து பார்த்த போது குழந்தையின் அருகில் தண்ணீர் குமிழியிட்டு வழிந்தோடுவதைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தவராக இரு கரமேந்தி இறைவனைப் போற்றினார். தண்ணீர் எங்கே பெருக்கெடுத்தி ஓடி விரைவில் வற்றி விடுமா எனப் பயந்து “ஜம் ஜம்” நில் நில் எனப்பத்தட்டத்துடன் கூறியவராய் அவ்வூற்றைச் சுற்றி மணல் கொண்டு அணைகோலினார். நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பு குமிழியிட ஆரம்பித்த இப்புனித ஜம் ஜம் ஊற்று இன்றும் குமிழியிட்டுக் கொண்டு மக்காவுக்கு வரும் இலட்சோப லட்சம் மக்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வருவது இறைவனின் ஒப்பற்ற அதிசயங்களில் ஒன்றாகும்.
அன்றியும், ஜம்ஜம் நீரில் எல்லாவிதத் தாதுப் பொருள்களும் கலந்திருப்பதாக மருத்து பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை பொதுவாக உடம்புக்கு ஆரோக்கியமளிப்பதுடன் எலும்பை உறுதியாக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், சர்ம நோய், வயிற்றுக் கோளாறுகளைப் போக்கவும், கொழுப்புச் சத்தைக் கரைக்கவும், களைப்பு, சுவாச காசத்தை நீக்கவும், நீரிழிவு, கல்லடைப்பு, வயிற்றுப் போக்கை அகற்றவும், பாரிச வாயுவை கலைக்கவும் கூடிய சக்தி வாய்ந்தவை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து நபிகள் பெருமானார் (ஸல்) “ஜம் ஜம்” எந்த எண்ணத்தில் அருந்தப்படுகிறதோ அதற்குரிய பயனைத் தரக்கூடியதாயிருக்கிறது” என இரத்தினச் சுருக்கமாக இயம்பியுள்ளார்கள். ஜம் ஜம் தண்ணீரை எவ்வளவு காலத்திற்குப் புட்டியில் அடைத்து வைத்தாலும் அது கெடுவதுமில்லை. வாடை மாறுவதுமில்லை. இதில் தான் அதன் மகத்துவமும் அதிச சக்தியும் பொதிந்துள்ளதைக் காணுகிறோம்.
இளவல் இஸ்மாயீல் சுமார் 12 வயதை அடைந்திருந்த போது, அது சமயம்மக்காவில் வசித்து வந்த நபி இப்ராஹீம் அவர்களுக்குத் தம் ஏக புத்திரரைப் பலியிடுமாறு, குர்பானி செய்யுமாறு - இறைவன் கனவில் அறிவித்தான். இக்கனவு தொடர்ந்து மூன்று இரவுகள் நிகழ்ந்ததால் நபியவர்கள் அது இறைவனின் திட்டமான கட்டளை என உறுதி புண்டு, விடிந்ததும் தம் உயிரன்ன புத்திரரிடம் கனவு கண்ட விஷயத்தைக் கூறினார்கள். தந்தைக்கு நிகரான இறையன்பு புண்ட தனயரும் கனவில் பெற்ற கட்டளையைக் கடிதில் நிறைவேற்றுமாறு தந்தையை வேண்டினர். நபியவர்கள் தம் செல்வ மைந்தனை அழைத்துக் கொண்டு மக்காவுக்கு அருகிலுள்ள மினாவில் இரு குன்றுகளுக்கு இடையிலான பள்ளத்தாக்கு ஒன்றினை அடைந்து பலியை நிறைவேற்ற முனைந்த போது பலிவாள் பணிய மறுத்து விட்டது. கழுத்து அறுபடாது போயிற்று. உடனே இறைவன், நபியவர்களின் குர்பானி உளப்புர்வமாக நிறைவேறி விட்டதாக அசரீரியால் அறிவித்து, அருகில் நின்ற ஆடொன்றை அதற்குப் பகரமாகப் பலியிடுமாறு கட்டளையிட்டான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குறைஷிகள்
அன்னை ஹாஜரா காலமானதன் பின் நபி இஸ்மாயில் (அலை) அமாலகா கோத்திரத்தைச் சார்ந்த உமரா என்ற அரபுப் பெண்ணை மணம் முடித்திருந்தார்கள். பாலஸ்தீனம் சென்று மக்கா திரும்பிய நபி இப்ராஹீம் அவர்கள் மகனைக் காணச் சென்றபோது மருமகள் வீட்டிலிருந்தாள். ஆனால் அப்பெண்ணோ மனிதரின் மேதை மரியாதை அறியா உபச்சாரமற்ற மட்டியாக இருந்தாள். இதனைக் கண்ட நபியவர்கள் மகன் வந்தவுடன், ஒரு பெரியவர் பரி மீது வந்ததாகவும் அவர் இந்த வீட்டின் வாசற்படி சரியில்லாதிருப்பதால் அதை மாற்றியமைக்குமாறு கூறிச் சென்றதாகவும் தகவல் சொல்லுமாறு பணித்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள்.
சிறிது நாள் கழித்து நபியவர்கள் மீண்டும் தம் மகனைக் காணவந்தபோது வீட்டிலிருந்த புதிய பெண் நபியவர்களை நலன் விசாரித்து நன்கு உபசரித்துத் தங்க வைத்திருந்தார் நபி இஸ்மாயீல் அவர்கள் வீடு திரும்பியபோது தாம் வாசற்படியை மாற்றியமைத்தது குறித்து நபி இப்ராஹீம் அவர்கள் மகிழ்வும், மனத்திருப்தியும் அடைந்திருந்ததைக் கண்டார்கள். அரபிகளில் ஜிர்ஹம் கோத்திரத்தைச் சேர்ந்த ஸைதாவென்னும் இப்பெண்மணியின் திருவயிற்றில் உதித்த சந்ததியின் எழுபதாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தாம் நம் பெருமானார் நாகயத் திருமேனி (ஸல்) அவர்கள்.
அதன்பின் இபுறாஹீம் நபியவர்கள் இறைவனது கட்டளைப்படி ஆதம் நபியவர்களால் இப்புவுலகில் முதல் வணக்க ஸ்தலமாக நிறுவப்பெற்று நூஹு நபிக்காலத்து வத்தப் பெருவெள்ளத்தால் மறைந்து போன கஃபத்துல்லாஹ்வை அந்த இடத்தில் அடையாளங் காட்டப்பெற்று அதனைப் புதிதாக எடுத்துக் கட்டினார்கள். இத்திருப்பணியில் நபி இஸ்மாயீல் அவர்கள் தம் தந்தைக்கு முழு உதவியாக இருந்து அக்கட்டிடத்தை கட்டி முடித்தனர். கட்டிட நிர்மாணத்தின் போது, இறைநேசச் செல்வர் இபுறாஹீம் நபியும் தனயர் இஸ்மாயீல் நபியும் “எங்கள் இறைவா! எங்கள் வித்தின் சந்ததியினரான அவர்களிடமே உன் திருவசனங்களை ஓதிக் காண்பிப்பவராகவும், வேதத்தையும் விவேகத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மையில் வளர்ப்பவராகவுமுள்ள ஒரு தூதரை எழச் செய்வாயாக!. நிச்சயமாக நீயோ வல்லமையுடையோனும் பேரறிவு படைதோனுமாய் இருக்கின்றாய்” (2:129) என இரு கரமேந்தி இறைஞ்சி வந்தனர். அன்று முதல் தந்தையும் மகனும் கஃபத்துல்லாஹ்வில் நியமமாக இறைவணக்கம் புரிந்து வந்தனர். இதனைக் கண்ட மக்காவிலும் சுற்று வட்டாரத்திலுமுள்ள ஏனைய மக்களும் கஃபத்துல்லாஹ்வைத் தங்களுக்கும் வணக்க ஸ்தலமாக ஆக்கிக் கொண்டனர். அங்கு ஆண்டுத் திருவிழாக்களும் நடந்து வரலாயின. இஸ்மாயில் (அலை) 136 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து மரணித்தார்கள். இஸ்மாயில் நபியவர்களின் புதல்வர் பன்னிருவரில் தலைமகன் நாபித் ஆவார்.
இவ்வாறிருக்க, மக்கா விரிந்து மக்கள் பெருகிய போது வேற்றிடந்தேடி அதனை விட்டும் வெளியேறியவர் ஒவ்வொருவரும் அந்நகரின் புனிதத் தன்மையை மனதிற் கொண்டு அதனின்றும் ஒரு கல்லை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர். அவர்கள் குடியேறிய அவ்வவ்விடங்களில் அக்கல்லை இருத்தி கஃபாவை இடம் வருவது போல் அதையும் சுற்றி வரலாயினர். இப்பழக்கம் காலப்போக்கில் அவர்களுக்கு விருப்பமான அல்லது உள்ளங்கவரும் கற்களை எடுத்துக் கொண்டு போய் அவற்றை வணங்கிவரும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இவ்வாறு பல தலைமுறைகளுக்குப் பின் அம்மக்கள் இப்ராஹீம் (அலை) பின்பற்றி வந்த மார்க்கத்தை மறந்து மனம் போனவாறு கற்களை வணங்கும் விக்கிரக வணக்கத்தாராக மாறி விட்டனர்.
நாபிதின் கிளையில் நாற்பதாம் தலைமுறையில் அத்னான் என்பவர் பிறந்தார். அவரின் பதினோராம் சந்ததியில் பிஹ்ர் என்பவர் பிறந்தார். இவரைத் தான் மக்கள் “குறைஷ்” பெரு வணிகர் என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்து வந்தனர். குறைஷ் என்பது சமுத்திரத்தில் பல மிக்க மீன் ஒன்றினுக்குரிய பெயராகும். எனவே குறைஷ்கள் என்பது வீரமறவர் என்பதையும் குறிப்பதாயிருக்கிறது. பிஹ்ரின் ஏழாம் பௌத்திரராக குஸையி கி.பி. 398ல் பிறந்தார். இவர் காலத்தில் கஃபாவின் நிர்வாகம் மீண்டும் குறைஷிகளின் கைக்கு வந்தது. “தாருன் நத்வா” என்ற நகர மன்றத்தை மக்காவில் தோற்றுவித்த மூல புருடர் இவரேயாம். ஆண்டுதோறும் அந்நகருக்கு வரும் யாத்ரிகர்களுக்கு தேவையுள்ள தண்ணீர், உணவு மற்றும் சவுகரியங்கள் செய்து கொடுப்பது இப்பெருந்தகையின் பொறுப்பாக இருந்து வந்தது.
குஸையின் புதல்வர் அறுவரில் அப்துல் மனாப் (கி.பி. 430) இரண்டாவது மகன். அவரின் புத்திரர் அறுவரில் ஹாஷிம் (கி.பி. 464) ஒருவர். இவர் மக்காவிலும் அதற்கு வெளியிலும் மிக்க செல்வாக்குப் பெற்று விளங்கினார். தம் மூதாதை குஸையியைப் போல் யாத்திரிகர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அன்றியும் குறைஷிகளின் வியாபாரங்கள் ஒழுங்குற நடைபெறுவதற்கான வழிமுறைகளையும் ஹாஷிமே வகுத்தளித்தார். குறைஷிகள் வியாபாரத்திற்காகச் செல்லும் பாட்கைளில் வழிப்பறி நடவாதவாறு பல கூட்டத்தாருடனும் உடன்படிக்கைகள் செய்து கொண்டார். ரோமானியச் சக்கரவர்த்தி அபிஸீனியா மன்னர் இவர்களிடம் தூதுகள் அனுப்பிக் குறைஷிகள் அந்நாடுகள் சுங்கம் செலுத்தாது வாணிபம் செய்து வருவதற்கான சலுகைகளையும் பெற்றார். இதனால் மக்கா நகரம் வியாபாரத்தில் தழைத்தோங்கி வலிவும் பொலிவும் பெற்றுத் திகழ்ந்தது. அந்நகரம் ஒரு பரிசுத்த ஸ்தலமாக மட்டுமின்றி வியாபாரக் கேந்திரமாகவும் வாணிபக்கூட்டங்கள் சந்தித்துத் தங்கி வணிகப் பெருமாற்றங்கள் செய்து பிரித்து செல்லும் பெருஞ்சந்தையாக விளங்கியது. மக்காவின் மக்களுக்கு வாணிபமே ஜீவனோபாயமாக இருந்தமையால் அவர்கள் குறைஷிகள் எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்தனர். ஆதிதேவாலயமாம் கஃபாவினால் தாங்கள் பெற்றிருந்த பெருமையும் யாத்திரிகர்களின் வருகையால் அடைந்து வந்த வருவாய்களும், வாணிபக் கூட்டங்களின் நடமாட்டத்தால் அடர்ந்தேறிவந்த செல்வமும் குறைஷிகளைச் செழிப்புறச் செய்தன. இவற்றின் காரணமாக அவர்கள் தங்களை மிக்காரும் தக்காரும் இல்லையெனக் கருதி செருக்குற்று நின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
நன்றி தல.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
இரு பலிகள்
ஹாஷிமுக்குப் பெருமானார் அவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் (கி.பி. 496) ஏக புத்திரராக பிறந்தார். இவர் மதீனாவின் நஜ்ஜார் கோத்திர அழகியான ஸல்மாவுக்குப் பிறந்தவர். இவரது உண்மைப்பெயர் ஆமிர் என்பதாகும். அப்துல் முத்தலிபுக்குப் பிறவியில் நெற்றியில் நரை மயிர் இருந்ததால் மக்கள் அவரை ஷைபா என அழைத்தனர். தமது பெரிய தந்தை முத்தலிபின் பராமரிப்பில் வாழ்ந்ததால் இவர் தம்மை அப்துல் முத்தலிப் (முத்தலிபின் அடிமை) என நாமம் சூட்டிக் கொண்டார். ஹாஷிம், வியாபார நிமித்தம் யத்ரிபு சென்றிருந்த பொழுது ஸல்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.
குஸையுடைய புத்திரர் அப்துமனாப் நம்முடைய தகப்பனார் காலத்திலேயே கஃபாவின் திருப்பணி, தண்ணீர் வழங்குதல், உபசரித்தல் முதலிய காரியங்களைக் கவனித்து வந்தார். குறை தமது மூத்த மகன் அப்துத் தாரும் இப்பணிகளைச் செய்து வர வேண்டுமென விருப்பங்கொண்டார். எனவே, தமக்குப்பின் அப்துத்தார் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கூறிச் சென்றார். அப்துமனாபும் தம் தந்தையின் எண்ணப்படி அவற்றை அப்துத்தாரிடம் ஒப்படைத்துவிட்டார்.
அப்து மனாபுக்குப்பின் அவரது மக்கள் அப்துத்தாரின் மக்களிடம் வாதாடியதில் கஃபாவின் பாதுகாப்பு, கொடி, “தாருன் நத்வா” நிர்வாகம் ஆகியவை அப்துத்தாரின் மக்களுக்கும், தண்ணீர் வழங்குதல், யாத்திரிகர்களை உபசரித்தல் ஆகியவை அப்துமனாபுடைய புத்திரர்களுக்குமெனப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அப்துமனாபுடைய புத்திரர்கள் தங்களுக்கிடையில் தங்கள் திருப்பணி பற்றித் திருவுளச் சீட்டுப்போட்டதில் அப்பாக்கியம் ஹாஷிமுக்குக் கிடைத்தது. இவரது ஏகபுத்திரர் அப்துல் முத்தலிப் ஏற்றுச் சிறப்பாக நடத்தி வந்தார்.
அப்போது ஹாஷிமுடைய சகோதரர் அப்துஷ் ஷம்ஸுவின் புதல்வர் உமய்யா இவற்றை அபகரிக்க எண்ணங்கொண்டு வழக்காடினார். ஆனால் குறைஷிகள் அனைவரும் தாருன் நத்வாவில் கூடிப் பேசி அத்திருப்பணிகளை அப்துல் முத்தலிபே தொடர்ந்து நடத்திவருமாறு சமரசஞ் செய்வித்தனர். எனினும், உமய்யாக்களுக்கு ஹாஷிமிகளின் மீது அழுக்காறு இருந்துகொண்டே வந்தது.
மக்காவுக்கு வரும் யாத்திரிகர்களுக்குத் தண்ணீர் வழங்கும் பொறுப்பும் கவுரமும் நபிகள் நாயகம் அவர்களின் பாட்டனரான அப்துல் முத்தலிபுக்கும் அவருக்கு ஐந்து தலைமுறைகளுக்கு முன்னுள்ள அவர் மூதாதையருக்கும் இருந்து வந்தது. ஆயினும் ஜம்ஜம் கிணறு தூர்ந்து போயிருந்த இடம் எதுவென்பது யாருக்கும் தெரியாதிருந்தது. அதன் பெருமையைப் பற்றி மக்கள் பேசிக்கொள்வார்களேயன்றி, அதைக் கண்டுபிடிப்பதில் எவரும் ஆர்வம் காட்டினாரில்லை. இக்கிணற்றைக் கண்டுபிடித்தால் தமது தண்ணீர் பந்தல் தர்மத்திற்கு மிக்க உதவியாக இருக்குமே என்ற எண்ணம் மட்டும் அப்துல் முத்தலிபுக்குச் சில காலமாக இருந்து வந்தது.
ஓரிரவு, அவர் கஃபாவுக்கு அருகாமையில் நபி இஸ்மாயீலும் அவர்களின் அன்னை ஹாஜராவும் அடக்கமாகியுள்ள அரைவட்ட வடிவமுள்ள ஹிஜ்ர் என்னும் தலத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அமரர் ஒருவர் கனவில் தோன்றி ஜம்ஜம் கிணற்றைத் தோண்டுமாறு கட்டளையிட்டுச் சென்றார். ஆனால் அவ்வானவர் கிணறு இருக்கும் இடத்தை தெரியப்படுத்தினாரில்லை. அடுத்த இரவும், மூன்றாம் இரவும் அதே இடத்தில் அப்துல் முத்தலிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவ்வானவர் மீண்டும் மீண்டும் தோன்றினார். மூன்றாம் இரவுதான் கஃபாவின் எல்லைக்குள் குறைஷியரின் இஸாப், நாயிலா விக்கிரகங்களுக்கு மத்தியில் கிணறு இருந்த இடத்தை அவ்வானவர் அடையாளங் காட்டி, அங்கு ஓர் எறும்புப் புற்றின் மீது அண்டங்காக்கையொன்று அமர்ந்து கொத்திக் கொண்டிருக்கும் எனவும் அறிவித்துத் தெளிவுபடுத்திச் சென்றார்.
மறுநாள் காலையில் மண்வெட்டி கடப்பாரை சகிதம் அப்போது இருந்த ஒரே மகன் ஹாரிதையும் அழைத்துக் கொண்டு வானவர் அடையாளம் சொன்ன இடத்திற்கு அப்துல் முத்தலிப் சென்றார். கனவில் அறிவித்தபடி அங்கு அண்டங்காக்கை எறும்புப் புற்றின் மீது உட்கார்ந்து கொத்திக் கொண்டிருந்தது. உடனே அப்துல் முத்தலிப் அவ்விடத்தில் தமது கிணறு தோண்டும் பணியை ஆரம்பித்தார்.
பைத்தியக்காரத்தனமாக இவர் இவ்வேலையில் இறங்கியிருக்கிறார் எனக் கூறி மற்ற குறைஷிகள் எவரும் அவருடன் பங்கு கொள்ளவோ அல்லது உதவவோ, ஊக்கமளிக்கவோ முன்வரவில்லை. இதைக் கண்ட அப்துல் முத்தலிப், மனம் நொந்தவராக இறைவனிடம், “இறைவா! இந்தப் புனிதப் பணியில் என்னுடன் ஒத்துழைக்க எவரும் முன்வரக் காணோம், ஆனால் நீ அருள்கூர்ந்து எனக்குப் பத்துப் புத்திரர்களை அளித்து, இந்த ஜம்ஜம் கிணற்றைக் கண்டுபிடிப்பதிலும் எனக்கு வெற்றியை நல்குவாயானால், என் புத்திரர் பதின்மரில் ஒருவனை உனக்கு நான் உயிர்த்தியாகம் செய்துவிடுகிறேன்” என பிரார்த்தித்துப் பிரதிக்னை எடுத்துக் கொண்டார். இறைவனும் அவரது பிரார்த்தனை ஏற்று மொத்தம் அவருக்குப் பதினைந்து புதல்வர்களையும், ஆறு புதல்விகளையும் அளித்து ஜம்ஜம் கிணற்றையும் கண்டுபிடிக்க அருள்பாலித்தான். அன்று முதல் இன்று வரை மக்காவுக்கு யாத்திரை செல்லும் மக்களுக்கு ஜம்ஜம் தான் ‘மாஉல் ஹயாத்’தாக, உயிரூற்றாக நின்று உதவுகிறது.
தமக்குப் பத்து ஆண் மக்கள் பிறந்ததின் பின்னரே அப்துல் முத்தலிபுக்குத் தாம் எடுத்துக்கொண்ட பிரதிக்கினை நினைவுக்கு வந்தது. உடனே அதை நிறைவேற்ற உறுதிபூண்டு தம் மக்கள் பதின்மரையும் குடும்பத்தாரையும் அழைத்துக்கொண்டு கஃபாவுக்குச் சென்றார். அங்கு பதின்மரின் பெயர்களையும் தனித்தனியாக எழுதித் திருவுளச் சீட்டுப் போட்டு எடுத்ததில், தம் அழகு மைந்தர் அப்துல்லாஹ்வின் (கி.பி 545) பெயர்தான் கைக்கு வந்தது. இவர் அப்துல் முத்தலிபின் அன்பு மனைவி பாத்திமா என்பவரின் மணி வயிற்றில் பிறந்தவர். இம்மைந்தன் மீதுதான் அவர் அலாதியான கரிசனங்காட்டி வந்தார். திருவுளச் சீட்டில் அப்துல்லாஹ்வின் பெயர் வந்திருப்பதைக் கண்டு அங்கு கூடியிருந்த குடும்பத்தார், மக்கள் அனைவரும் கோவெனக் கதறியழுதனர். அங்கிருந்த சில நல்லவர்களும் பெரியவர்களும் அப்துல் முத்தலிபை நோக்கி, “நீர் அப்துல்லாஹ்வைப் பலியிடுவது கூடாது, ஒவ்வொருவரும் இப்படித் தம் அன்புக் குழந்தைகளைப் பலி கொடுக்க ஆரம்பித்தால் மக்களின் நிலைமை என்னாவது? அதற்குப் பிராயசித்தமாக ஒட்டகங்களை பலியிடுவதுதான் அறிவுடைமையாகும்” என மாற்றுப் பரிகாரம் கூறினர். இதனைப் பூசாரியுள்பட அங்கிருந்த அனைவரும் ஆமோதித்தனர். எனவே, அப்துல் முத்தலிபும் இப்பரிகாரத்திற்கு ஒருவாறு சம்மதித்தார்.
பின், அப்துல்லாஹ்வின் பெயரையும் ஒட்டகம் பத்தின் எண்ணிக்கையையும் தனித்தனிச் சீட்டெழுதிப் போட்டுக் குலுக்கி எடுத்தார்கள். அதிலும் அப்துல்லாஹ்வின் சீட்டே கைக்கு வந்தது. ஒட்டக எண்ணிக்கையை பத்துப் பத்தாக அதிகரித்துச் சென்று இறுதியில் நூறு ஒட்டகை என்ற சீட்டைப் போட்டு குலுக்கி எடுத்தபோது தான் ஒட்டகைச் சீட்டு கைக்கு வந்தது. அப்துல்லாஹ்வின் பெயர் வரவில்லை.
கூடியிருந்தோர் அனைவரும் ஆறுதல் பெருமூச்சு விட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்துல்லாஹ்வின் உயிர் காக்கப்பட்டது. அப்துல் முத்தலிபு நூறு ஒட்டகங்களைப் பலியிட்டுத் தம் விரதத்தை இனிதுற முடித்து மனநிறைவு கொண்டார். அன்று முதல் அரபு நாட்டில் நரபலிக்குப் பகரமாக நூறு ஒட்டகங்களை அறுப்பது என்பது நிலை நிறுத்தப்பட்டது. இவ்வழகுசால் அப்துல்லாஹ்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமைத் தந்தையாவார். இறைவனுக்காகப் பலியிட அழைத்துச் செல்லப்பட்ட நபி இஸ்மாயீல் அவர்களையும் அன்னாரின் வழித்தோன்றலான தம் அன்புத் தந்தையையும் மனதில் கொண்டுதான் பெருமானார் அவர்கள் “நான் பலியிட அழைத்துச் செல்லப் பட்ட இரு தந்தையரின் புதல்வனாக இருக்கிறேன்” எனக் கருத்தாழத்துடன் ஒருமுறை கூறினார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுவிழா முழுமதி
இளவல் அப்துல்லாஹ்வுக்கு இருபத்தி நான்கு வயதான போது, அப்துல் முத்தலிப் தம் அன்புத் திருமகனுக்கு யத்ரிபிலிருந்து வந்து மக்காவில் தம் சிறிய தந்தை உஹைபின் இல்லத்தில் தங்கியிருந்த வஹ்ப் இப்னு அப்துமனாப் இப்னு ஜஹ்ரா என்பவரின் அழகுத் திருமகள் ஆமினா என்ற மங்கை நல்லாரைப் பெண் பேசிச் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார். அதே சமயம் உஹைபின் புதல்வி ஹாலாவை அப்துல் முத்தலிப் தமக்குத் திருமணம் செய்து கொண்டார். ஹலரத் ஹம்ஸாவும் சபிய்யாவும் மற்றுமிருவரும் இப்பெண்மணிக்குப் பிறந்தவர்களாவர். திருமணமாகிச் சில மாதங்களில் அப்துல்லாஹ் வியாபார நிமித்தம் சிரியாவுக்குச் சொன்றார். அங்கிருந்து மக்கா திரும்புகையில் யத்ரிபிலுள்ள தம் மைத்துனர் வீட்டில் வந்து தங்கினார். அங்கு அவர் நோயுற்றுக் குணமாகாது இறைவன் நாட்டப் படி யத்ரிபிலேயே மரணமாகி நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்துல்லாஹ் கி.பி. 545ல் பிறந்து 571ல் இறப்பெய்தினார். நபிகள் பெருமான் (ஸல்) அவர்கள் அதுசமயம் தம் அன்னை வயிற்றில் எட்டு மாதச் சிசுவாக இருந்தார்கள். அப்துல்லாஹ் இறக்கும் போது தம் மனைவிக்கும் மகனுக்கும் பிதுரார்ஜிதமாக விட்டுச் சென்ற சொத்துக்கள் ஐந்து ஒட்டகங்களும் சில ஆடுகளும் உம்மு ஐமன் என்னும் ஒரு நீக்ரோ பெண் அடிமையுமேயாகும். ஆமினாவின் மணி வயிறு பெற்ற மாணிக்கச்சுடர் பத்து மாதங்கள் கழிந்ததும் யானை ஆண்டு ரபீயுல் அவ்வல் திங்கள் 12ம் நாள் கி.பி. 571 ஏப்ரல் 20, திங்கள் கிழமை அதிகாலையில் மறுவிலா தெழுந்து முழுமதி எனலாய் இப்புதலத்தில் உதித்தது.
தாமரை மலரத் தண்தளிர் மலரத்
தழல்கனி முச்சுடர் மலர
காமுறு தமிழும் கங்கையும் மலரக்
காற்றொடு வெளியெலாம் மலர
மாமண மேனி மங்களம் மலர
மணிநபி நாயகர் இன்றே
ஆமினா என்னும் அன்னை எம்அன்னை
ஆர்தவ கர்ப்பமே மலர்ந்தார்
எண்ணெலாம் மலர எழுத்தெலாம் மலர
இன்சுவைப் பாவினம் மலர
பண்ணெலாம் மலர, பகருகவிஞ் ஞானப்
பாடெலாம் மலரவே மேலாம்
ஒண் கலையான நுண்கலை மலர
உம்மிமா நபிமணி இன்றே
பெண்ணின மணியாம் ஆமினா அன்னை
பெருந்தவ கர்ப்பமே மலர்ந்தார்!
வேதமெய்ஞ் ஞான மோனமே மலர
வியனெழில் மானுடம் மலர
சோதரம் மலர, சோபனம் மலர
சொர்க்க நன் நானிலம் மலர
சாதகம் மலர சாந்தியே மலர
ஸையிது னாநபி இன்றே
மாதருக் கரசி ஆமினா அன்னை
மாதவ கர்ப்பமே மலர்ந்தார்
எனக்கவிஞர் முகம்மது மூஸா இனிமையுறப் பாடியுள்ளார்.
பெருமானாரின் பிறப்பு ஈஸா நபியவர்களுக்குச் சுமார் 571 வருடங்களுக்குப் பின்னரும், தாவூது நபியவர்களுக்கு 1800 வருடங்களுக்குப் பின்னரும், மூஸா நபியவர்களுக்கு 2300 வருடங்களுக்குப் பின்னரும், இப்ராஹீம் நபியவர்களுக்கு 3070 வருடங்களுக்குப் பின்னரும், நூஹு நபியவர்கள் காலத்து வந்த பெருவெள்ளத்திற்கு 4490 வருடங்களுக்குப் பின்னரும், ஆதம் நபியவர்களுக்கு 6750 ஆண்டுகளுக்குப் பின்னரும் நிகழ்ந்ததாக வால்டயர் என்னும் பிரெஞ்சு சரித்திர ஆசிரியர் குறிப்பிடுகிறார். யானைப்படை கஃபத்துல்லாஹ்வின் காரணமாக மக்கா வாசிகளான குறைஷிகளுக்கு ஏற்பட்டிருந்த செல்வம், செல்வாக்கு, பெருமை இவற்றைக் கண்டு பொறாமையுற்ற அபிஸீனிய மன்னரின் ஆட்சியின் கீழிருந்த யமன் மாகாணத்தின் கவர்னரான அப்ரஹா அல்அஷ்ரம் என்னும் கிறிஸ்தவர் கஃபத்துல்லாஹ்வை இடித்துத் தரைமட்டமாக்கும் எண்ணத்தில் யானைப் படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு மக்காவைத் தாக்க வந்தார்.
அப்ரஹாவுக்கேற்பட்ட ஆத்திரம் எதனாலெனில், யாத்திரைக்காக அரபு நாட்டு மக்களனைவரும் மக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைத் திசை திருப்புவான் வேண்டி அவர் தனது தலைநகரான ஸன்ஆவில் மிக்க அழகான கலீஸ் என்ற கிறிஸ்தவ மாதா கேவரில் ஒன்றை நிர்மாணித்து மக்களை அங்கு யாத்திரைக்கு வருமாறு அழைப்புகள் விடுத்தார். ஆனால் அரபு நாட்டு மக்களோவெனில், மக்காவையும் அதில் இடம் பெற்றுள்ள கஃபாவையுந்தான் புனிதமாகக் கருதினார்களேயன்றி அப்ரஹாவை மதித்து அவர் கட்டிய “கலீஸை”த் தரிசிக்க ஸ ன்ஆவின் பக்கம் முகந்திருப்பக் கூட மனங் கொண்டார்களில்லை. இதுவே, அப்ரஹாவின் பொறாமைத் தீயை மூண்டெழச் செய்து கஃபத்துல்லாஹ்வின் மீது படையெடுக்குமாறு அவரைத் தூண்டியதாகும். ஆனால், இறைவனோ தன் இல்லத்தைக் காக்கும் முறையில் “அபாபீல்” என்ற ஒரு வகைக் குருவிகளைக் கூட்டமாக அனுப்பி அவற்றின் அலகுகளிலும் கால்களிலும் பற்றியிருந்த “ஸிஜ்ஜீல்” என்ற சிறிய கற்களைக் கொண்டு அப்ரஹாவையும் அவருத யானைப் படையையும் அழியச் செய்தான். அப்பறவைகள் உதிர்த்த கற்கள் யானைகள் மீதும் படை வீரர்கள் மீதும் பட்டு அவர்களை ஊடுருவித் துளைத்துச் சென்று மடியச் செய்தன.
அபாபீல் பறவைகள் கரிய நிற உடலும், பச்சை நிறக் கழுத்தும், மஞ்சள் நிறச் சொண்டும் உடையனவாயிருந்தன. “ஸிஜ்ஜீல் கற்களில் சில ஹலரத் அலீயின் சகோதரி உம்முஹானி வீட்டில் இருந்ததைப் பார்த்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். இச்சம்பவம் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சுமார் 50 தினங்களுக்கு முன் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிற. எனவே தான், இந்த வருடத்தை மக்கள் யானை ஆண்டு என அழைக்கின்றனர்.
இளவல் அப்துல்லாஹ்வுக்கு இருபத்தி நான்கு வயதான போது, அப்துல் முத்தலிப் தம் அன்புத் திருமகனுக்கு யத்ரிபிலிருந்து வந்து மக்காவில் தம் சிறிய தந்தை உஹைபின் இல்லத்தில் தங்கியிருந்த வஹ்ப் இப்னு அப்துமனாப் இப்னு ஜஹ்ரா என்பவரின் அழகுத் திருமகள் ஆமினா என்ற மங்கை நல்லாரைப் பெண் பேசிச் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார். அதே சமயம் உஹைபின் புதல்வி ஹாலாவை அப்துல் முத்தலிப் தமக்குத் திருமணம் செய்து கொண்டார். ஹலரத் ஹம்ஸாவும் சபிய்யாவும் மற்றுமிருவரும் இப்பெண்மணிக்குப் பிறந்தவர்களாவர். திருமணமாகிச் சில மாதங்களில் அப்துல்லாஹ் வியாபார நிமித்தம் சிரியாவுக்குச் சொன்றார். அங்கிருந்து மக்கா திரும்புகையில் யத்ரிபிலுள்ள தம் மைத்துனர் வீட்டில் வந்து தங்கினார். அங்கு அவர் நோயுற்றுக் குணமாகாது இறைவன் நாட்டப் படி யத்ரிபிலேயே மரணமாகி நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்துல்லாஹ் கி.பி. 545ல் பிறந்து 571ல் இறப்பெய்தினார். நபிகள் பெருமான் (ஸல்) அவர்கள் அதுசமயம் தம் அன்னை வயிற்றில் எட்டு மாதச் சிசுவாக இருந்தார்கள். அப்துல்லாஹ் இறக்கும் போது தம் மனைவிக்கும் மகனுக்கும் பிதுரார்ஜிதமாக விட்டுச் சென்ற சொத்துக்கள் ஐந்து ஒட்டகங்களும் சில ஆடுகளும் உம்மு ஐமன் என்னும் ஒரு நீக்ரோ பெண் அடிமையுமேயாகும். ஆமினாவின் மணி வயிறு பெற்ற மாணிக்கச்சுடர் பத்து மாதங்கள் கழிந்ததும் யானை ஆண்டு ரபீயுல் அவ்வல் திங்கள் 12ம் நாள் கி.பி. 571 ஏப்ரல் 20, திங்கள் கிழமை அதிகாலையில் மறுவிலா தெழுந்து முழுமதி எனலாய் இப்புதலத்தில் உதித்தது.
தாமரை மலரத் தண்தளிர் மலரத்
தழல்கனி முச்சுடர் மலர
காமுறு தமிழும் கங்கையும் மலரக்
காற்றொடு வெளியெலாம் மலர
மாமண மேனி மங்களம் மலர
மணிநபி நாயகர் இன்றே
ஆமினா என்னும் அன்னை எம்அன்னை
ஆர்தவ கர்ப்பமே மலர்ந்தார்
எண்ணெலாம் மலர எழுத்தெலாம் மலர
இன்சுவைப் பாவினம் மலர
பண்ணெலாம் மலர, பகருகவிஞ் ஞானப்
பாடெலாம் மலரவே மேலாம்
ஒண் கலையான நுண்கலை மலர
உம்மிமா நபிமணி இன்றே
பெண்ணின மணியாம் ஆமினா அன்னை
பெருந்தவ கர்ப்பமே மலர்ந்தார்!
வேதமெய்ஞ் ஞான மோனமே மலர
வியனெழில் மானுடம் மலர
சோதரம் மலர, சோபனம் மலர
சொர்க்க நன் நானிலம் மலர
சாதகம் மலர சாந்தியே மலர
ஸையிது னாநபி இன்றே
மாதருக் கரசி ஆமினா அன்னை
மாதவ கர்ப்பமே மலர்ந்தார்
எனக்கவிஞர் முகம்மது மூஸா இனிமையுறப் பாடியுள்ளார்.
பெருமானாரின் பிறப்பு ஈஸா நபியவர்களுக்குச் சுமார் 571 வருடங்களுக்குப் பின்னரும், தாவூது நபியவர்களுக்கு 1800 வருடங்களுக்குப் பின்னரும், மூஸா நபியவர்களுக்கு 2300 வருடங்களுக்குப் பின்னரும், இப்ராஹீம் நபியவர்களுக்கு 3070 வருடங்களுக்குப் பின்னரும், நூஹு நபியவர்கள் காலத்து வந்த பெருவெள்ளத்திற்கு 4490 வருடங்களுக்குப் பின்னரும், ஆதம் நபியவர்களுக்கு 6750 ஆண்டுகளுக்குப் பின்னரும் நிகழ்ந்ததாக வால்டயர் என்னும் பிரெஞ்சு சரித்திர ஆசிரியர் குறிப்பிடுகிறார். யானைப்படை கஃபத்துல்லாஹ்வின் காரணமாக மக்கா வாசிகளான குறைஷிகளுக்கு ஏற்பட்டிருந்த செல்வம், செல்வாக்கு, பெருமை இவற்றைக் கண்டு பொறாமையுற்ற அபிஸீனிய மன்னரின் ஆட்சியின் கீழிருந்த யமன் மாகாணத்தின் கவர்னரான அப்ரஹா அல்அஷ்ரம் என்னும் கிறிஸ்தவர் கஃபத்துல்லாஹ்வை இடித்துத் தரைமட்டமாக்கும் எண்ணத்தில் யானைப் படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு மக்காவைத் தாக்க வந்தார்.
அப்ரஹாவுக்கேற்பட்ட ஆத்திரம் எதனாலெனில், யாத்திரைக்காக அரபு நாட்டு மக்களனைவரும் மக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைத் திசை திருப்புவான் வேண்டி அவர் தனது தலைநகரான ஸன்ஆவில் மிக்க அழகான கலீஸ் என்ற கிறிஸ்தவ மாதா கேவரில் ஒன்றை நிர்மாணித்து மக்களை அங்கு யாத்திரைக்கு வருமாறு அழைப்புகள் விடுத்தார். ஆனால் அரபு நாட்டு மக்களோவெனில், மக்காவையும் அதில் இடம் பெற்றுள்ள கஃபாவையுந்தான் புனிதமாகக் கருதினார்களேயன்றி அப்ரஹாவை மதித்து அவர் கட்டிய “கலீஸை”த் தரிசிக்க ஸ ன்ஆவின் பக்கம் முகந்திருப்பக் கூட மனங் கொண்டார்களில்லை. இதுவே, அப்ரஹாவின் பொறாமைத் தீயை மூண்டெழச் செய்து கஃபத்துல்லாஹ்வின் மீது படையெடுக்குமாறு அவரைத் தூண்டியதாகும். ஆனால், இறைவனோ தன் இல்லத்தைக் காக்கும் முறையில் “அபாபீல்” என்ற ஒரு வகைக் குருவிகளைக் கூட்டமாக அனுப்பி அவற்றின் அலகுகளிலும் கால்களிலும் பற்றியிருந்த “ஸிஜ்ஜீல்” என்ற சிறிய கற்களைக் கொண்டு அப்ரஹாவையும் அவருத யானைப் படையையும் அழியச் செய்தான். அப்பறவைகள் உதிர்த்த கற்கள் யானைகள் மீதும் படை வீரர்கள் மீதும் பட்டு அவர்களை ஊடுருவித் துளைத்துச் சென்று மடியச் செய்தன.
அபாபீல் பறவைகள் கரிய நிற உடலும், பச்சை நிறக் கழுத்தும், மஞ்சள் நிறச் சொண்டும் உடையனவாயிருந்தன. “ஸிஜ்ஜீல் கற்களில் சில ஹலரத் அலீயின் சகோதரி உம்முஹானி வீட்டில் இருந்ததைப் பார்த்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். இச்சம்பவம் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சுமார் 50 தினங்களுக்கு முன் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிற. எனவே தான், இந்த வருடத்தை மக்கள் யானை ஆண்டு என அழைக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிராம வாழ்க்கை
தந்தையைக் காணும் பாக்கியம் பெறாத தம் அன்புப் பேரனாருக்கு பாட்டனார் அப்துல் முத்தலிப், சிறப்பான விருந்தொன்றை நடத்தி மக்கள் அனைவர் முன்னிலையிலும் “முஹம்மது – புகழப் பெற்றவர்” என்னும் அழகுத் திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்து மனம் புரித்தார். அன்னை ஆமினா தன் கண்மணியை “அஹ்மது” பெரும் புகழுக்குரியவர் என்ற செல்லப் பெயரிட்டு அழைத்து அகங்குளிர்ந்தார். மக்காவிலுள்ள செல்வந்தர் வீடுகளில் பிறக்கும் குழந்தைகளைச் சுற்றுப் புறக்கிராமாங்களில் இருந்து வரக்கூடிய ஹவாஸின் வகுப்பைச் சார்ந்த செவிலித் தாய்மார்களிடம் ஒப்படைத்து வளர்க்கச் செய்வது அந்நாட்டுப் பழக்கமாக இருந்து வந்தது. பெருமானார் (ஸல்) பிறந்த சமயத்திலும் அது போல் தாயிப் பிரதேசத்திலிருந்து பல செவிலித் தாயாக வந்து மக்காவில் பிறந்திருந்த குழந்தைகளைப் பெற்றுச் சென்றனர். ஆனால் பாலகர் முஹம்மது ஒரு தகப்பனில்லாக் குழந்தையாக இருந்ததால் போதிய சன்மானம் கிடைக்காதெனக் கருதி எவரும் அவரை ஏற்கத் துணியவில்லை. செவிலித்தாயார் அனைவரினும் கடைசியாக ஹலீமா அஸ்ஸஃதிய்யா பின்து அபீ துஐப் அஸ்ஸஅத் பின் பக்ர் என்ற பெண்மணி மக்காவை வந்தடைந்தார். இம்மாதரசி தம் மெலிந்த கோவேறு கழுதையில் பால்வற்றிய இளைத்த ஒட்டகையையும் இழுத்துக் கொண்டு தம் கணவர் ஹாரித் பின் அப்தில் உஸ்ஸாவுடனும் கைக்குழந்தையுடனும் வந்து சேர்வதில் காலதாமதமாகி விட்டது. அதனால், நல்ல சன்மானம் கிடைக்கக்கூடிய பணக்கார வீட்டுக் குழந்தை எதுவும் அப்பெண்மணிக்குக் கிடைக்க வாய்ப்பில்லாது போயிற்று. இதில் பாலகர் முஹம்மதுவை ஏற்பதானால் பிரதிபலன் சரியாகக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற தயக்கம் வேறு ஏற்பட்டது. ஆனாலும் வெறுங்கையுடன் வீடு திரும்பினால் மற்றவர்களின் நகைப்பிற்கு இடமாகுமே என்ற அச்சம் வேறு குறுக்கிட்டது.
இவ்வாறான சங்கடங்களுக்கிடையில் மனதை ஒருவாறாகத் தேற்றி கணவரையும், கலந்து கொண்டு, அநாதையாம் முஹம்மதுவை, அற்புதப் பொக்கிஷத்தை, அரவணைக்க முன் வந்தார். அம்மாது நல்லாள் ஹலீமா அப்துல் முத்தலிபும் ஹலீமாவிடம், “பெண்ணே! கவலையுற வேண்டாம். இக்குழந்தையைக் கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்து வருவீர். உமக்கு மற்றவர்களைப் போன்றோ, அல்லது அதிகமாகவோ நான் அன்பளிப்புச் செய்வேன். என ஆறுதல் மொழி கூறினார்.
அப்துல் முத்தலிபிடமிருந்து குழந்தையைப் பெற்ற ஹலீமா அதைத் தம் மடி மடி மீதமர்த்திப் பாலூட்ட முன் வந்தார். அது தன் செவிலித் தாயின் முகத்தைக் களிப்புடன் நோக்கிய வண்ணம் பால் சுவைக்கத் துவங்கியது. என்ன ஆச்சரியம்!.
கடும் பஞ்சத்தின் காரணமாக துவண்டு வறண்டிருந்த ஹலீமாவின் மார்பகங்கள் விம்மிப் பெருத்து மளமளமவெனப் பாலைச் சுரந்தன. குழந்தை முஹம்மதுவும் ஹலீமாவின் மைந்தன் அப்துல்லாஹ்வும் வயிறு முட்டப் பாலருந்தி நிறைவு கொண்டனர். பிரயாணக் களைப்பு தீர அங்கு சற்று தூங்கி விழித்த ஹலீமாவின் கணவர் தம் கிழட்டுப் பெண் ஒட்டகையைப் பார்க்கச் சென்ற போது அதன் மடு பருத்துப் பால் நிரம்பி நின்றதைக் கண்டு ஆச்சரியமுற்றார். பின் ஒட்டகையிலிருந்து பாலைக் கறந்து கணவனும் மனைவியும் வயிராற அருந்திப் பசி தீர்ந்தனர்.
மறுநாள் காலையில் ஹலீமாவும் குழந்தை முஹம்மதுவும் கோவேறு கழுதையிலமர்ந்து மக்காவை விட்டு கிராமத்தை நோக்கிப் பயணமாயினர். களைத்துச் சோந்திருந்த அக்கோவேறு கழுதை இப்போது பீடு நடை போட்டு மற்றக் கோவேறு கழுதைகளை முந்திக் கொண்டு விரைந்து சென்றது. ஹலீமா தம் கிராமத்தை அடைந்த சில தினங்களில் அவரது இல்லம் வறுமை நீங்கி சுபிட்சம் பெற்றுத் திகழ்ந்தது. கால்நடைகள் பெருகின. உணவுப் பொருட்கள் குவிந்தன. குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆறு மாதத்திற்கொரு முறை ஹலீமா, பாலகர் முஹம்மதுவை மக்காவுக்கு அழைத்து வந்து அவரது தாயார், பாட்டனார் இவர்களிடம் காட்டிச் செல்வது வழக்கம். ஹலீமாவிடம் தம் குழந்தை செழுமையுடன் வளர்ந்து வருவதைக் கண்டு அன்னை ஆமினாவும் உளம் புரித்தார்.
இவ்வாறாக, ஆண்டுகள் மூன்று உருண்டோடிய பின் ஹலீமா, பாலகர் முஹம்மதுவுக்குப் பால்குடி மறக்கடித்து அன்னை ஆமினாவிடம் ஒப்படைத்துச் செல்ல அழைத்து வந்தார். எனினும், அழகு முஹம்மதுவை அன்னையிடம் விட்டுச் செல்ல மனமில்லாது ஹலீமா ஏக்கமுற்று நின்றாக அவரது ஏக்கத்தைப் போக்கும் வகையில் மக்காவில் அது போழ்து ஏதோ தொத்து நோய் பரவியிருந்தது. இதனால் அன்னை ஆமினா குழந்தைனயத் திரும்பவும் ஹலீமா வசமே ஒப்படைத்து மேலும் சிறிது காலம் வைத்துப் பாதுகாத்து வரச்சொன்னார். பெரு மகிழ்ச்சியடைந்த ஹலிமா பேரருள் பெ;ற பாலகர் முஹம்மதுவைத் தாம் தேடக் கிடைக்காத தங்கமாக அள்ளியணைத்துக் கிராமம் திரும்பினார். அங்கு மேலும் இரண்டாண்டுகள் முஹம்மதுவைச் சீரும் சிறப்புமாகத் தன் மக்களுடன் வைத்து வளர்த்து ஐந்து வயது பூர்த்தியான போது அன்னை ஆமினாவிடம் கொண்டு வந்து ஒப்படைத்துச் சென்றார். தமக்கும் பாலூட்டி வளர்த்த மாதரசி ஹலீமாவின் மீ பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அன்பும் பாசமும் என்றும் பசுமையாகவே இருந்து வந்தது.
ஹலீமா வாழும் ஹ_னைன் பிரதேசத்தைச் சேர்ந்த அரபு மக்கள் கலப்பற்ற சுத்தமான அரபுமொழி பேசுபவர்கள,; இவர்களின் பேச்சு இனிமையாகவும், எளிமையாகவும், திறமையாகவும், செம்மையாகவும், ஆழமாகவும் இருக்கும் தமது குழந்தைப் பருவத்தின் ஐந்து ஆண்டுகளைப் பெருமானார் அவர்கள் அப்பிரதேசத்து பனூ சஅத் வம்சத்து மக்களிடையே வாழ்ந்து கழித்ததின் காரணமாக, எழுதப் படிக்கத் தெரியாதவர்களாயிருந்தும், அவர்கள் மக்கா வாழ் மக்களை விட மிக்கத் திறமையாகவும், செம்மையாகவும், திருத்தமாகவும், கவர்ச்சியாகவும் அரபி மொழி பேசும் ஆற்றல் பெற்று திகழ்ந்தார்கள். இஸ்லாம் அரபு நாட்டில் பரவுவதற்கு அண்ணலார் பெற்றிருந்த மொழி சிறப்பும் ஒரு முக்கிய காரணம் என்று சரித்திர ஆசிரியர் பலர் எடுத்துக் கூறுகின்றனர். “பொருட்செறிவு, விரிவாக விஷயங்களை வெளியிடும் பேச்சு வன்மையுடன் அல்லாஹ் என்னை அனுப்பியுள்ளான். உங்களிடை நான் மிகவும் அதிகமான நாவன்மையவன். பிறப்பால் நான் குறைஷி குலத்தை சேர்ந்தவன். எனது நாவு ஹவாஸின் கூட்டத்தாரில் ஓர் உட்பிரிவினரான பனூ ஸ அதின் நாவாகும்” என நபிகள் கோமான் தன் தோழர்கள் மத்தியில் நவின்றுள்ளார்கள்.
சுத்தமான காற்றும், ஆரோக்கியமான சூழல்களும் கொண்ட கிராமப்புறத்தில் வாழ்ந்த காரணத்தால் பாலகர் முஹம்மது அழகிய தோற்றமும், உடற்கட்டும் ஆரோக்கியமும் பெற்றவராக விளங்கினார்கள். அன்றியும் தம் மைந்தர் திருத்தமாகவும் அழகாகவும் அரபு மொழி பேசுவதைக் கண்ட அன்னை ஆமினா அளவற்ற பரவசமுற்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அநாதை நிலை
சிறிது காலஞ் சென்று, செல்வ முஹம்மதுவை அழைத்துப் போய் யத்ரிபில் வசிக்கும் தம் உற்றார் உறவினரிடம் காண்பித்து வரவும், தனது அன்புக்கணவர் அப்துல்லாஹ்வின் சமாதியைத் தரிசித்து வரவும் அன்னை ஆமினா எண்ணங்கொண்டார். எனவே, தமது பணிப்பெண்ணான பரகா என்ற உம்மு ஐமனையும் பாலகர் முஹம்மதையும் அழைத்துக் கொண்டு அப்துல் முத்தலிபிடம் விடைபெற்று யத்ரிபுக்குப் பயணமானார். அங்கு சென்று தம் உற்றார் உறவினர்களைச் சந்தித்து உரையாடி நலம் கேட்டுத் தம் மாணிக்க மைந்தர் முஹம்மதுவையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். தனயனை அழைத்துச் சென்று, தம் கணவர் நோயுற்றுக் காலமான தம் சகோதரன் இல்லத்தையும் காண்பித்தார். தாயார் சொன்ன செய்திகளும் அடையாளம் காட்டிய இடங்களும் பாலகர் முஹம்மதுவின் பிஞ்சு உள்ளத்தில் பசுமரத்தாணியெனப் பதிந்து என்றும் நினைவில் நின்று வந்தன.
ஒருமாத காலம் யத்ரிபில் தங்கிய பின்னர், அன்னை ஆமினா தம் பாலகரையும், பணிப்பெண்யையும் அழைத்துக் கொண்டு உறவினரிடம் பிரியா விடை பெற்று மக்காவை நோக்கிப் பயணமானார் பயணம் தொடர்ந்த சில தினங்களில் பயணிகள் மூவரும் யத்ரிபுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள அபுவா என்ற சிற்றூரை அடைந்தனர். இறைவனது நாட்டத்தை என்னென்போம்! அன்னை ஆமினா அவ்விடத்தில் மீளா நோயுற்று தம் இருபத்தாறாம் பிராயத்தில் இறைவனடி சேர்ந்தார்.
பாலகர் முஹம்மது தமது ஆறாண்டு வாழ்விலேயே அருமைத் தந்தையும், அன்புத் தாயுமற்று அநாதையாகி நின்ற அவலநிலையை என்னென்போம்! இந்நிலையைத் தாங்களே சுதாவில் அனுபவித்து அறிந்ததின் காரணமாகவேபிற்காலத்தில் பெருமானார் அவர்கள் அநாதைகள் மீது அளவற்ற கருணையுற்றுஆதரவளித்து வந்தார்கள்.
அன்னை ஆமினாவை அப்வாவில் நல்லடக்கம் செய்து விட்டு பணிப்பெண் உம்மு ஐமன் பாலகர் முஹம்மதை அழைத்துக் கொண்டு மக்கா நகர் வந்து சேர்ந்தாள். நடந்த விபரங்களைப் பாட்டனார் அப்துல் முத்தலிபிடம் எடுத்துரைத்து குழந்தையை அவரிடம் ஒப்படைத்தாள். இளம் வயதில் பெற்றோரை இழக்குமாறு பேரர் முஹம்மதுவுக்கு நேர்ந்த அபாக்கிய நிலையை எண்ணி அப்துல் முத்தலிப் அளவற்ற துயரமும் வேதனையுமடைந்து அழுது கண்ணீர் வடித்தார்.
பிஞ்சுப் பருவத்தில் பெற்றோரைப் பறிகொடுத்துத் திக்கற்ற நிலையிலிருந்த பேரரை அப்துல் முத்தலிப் மிக்கப் பரிவோடும் பாசத்தோடும் வளர்த்து வந்தார். இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. நூற்றுப்பத்து வயதைக் கடந்து நின்ற அப்துல் முத்தலிப் இப்போது நோயுற்றார். தமது வாழ்நாள் முடிவெய்துகிறது என்பதை உணர்ந்தார். பாலகர் முஹம்மதை யாருடைய பாதுகாப்பில் ஒப்படைத்துச் செல்வது என்பது பற்றிப் பலவாறு சிந்தித்தார். தாமே ஒரு முடிவெடுப்பதை விடத் தம் மக்களைக் கலந்து செய்வதே நல்லதென அவரது மனம் துண்டியது. அனைவரையும் அழைத்து வரச் செய்து பேரரது பிற்காலம் பற்றிய பிரச்சினையை அவர்கள் முன்பு வைத்தார். பணக்கார பெரிய தந்தையான அபூலஹப் என அழைக்கப்படும் அப்துல் உஸ்ஸாவும் ஏழைப் பெரிய தந்தையான அபூதாலிபும் தம் தம்பியின் புதல்வரைப் போற்றி வளர்க்கப் போட்டியிட்டனர். ஆனால், பாட்டனாரும் பேரரும் ஏழையாகவிருந்த அபூதாலிபையே உவந்தேற்றுக் கொண்டனர். அப்துல் முத்தலிப் கி.பி. 579ல் மரணமடைந்தார். அரபு நாட்டு வள்ளலும் பரோபகாரியுமான ஹாத்திம் தாயும் இதே ஆண்டில் காலமானதாகச் சொல்லப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெரிய தந்தை அபூதாலிப்
அப்துல் முத்தலிபுக்கு நான்கு மனைவியரிந்தனர். அவர்கள் மூலம் அவருக்குப் பதினைந்து ஆண்களும், ஆறு பெண்களும் பிறந்தனர். இவர்களில் ஜுபைர், அபூதாலிப், அப்துல்லாஹ் ஆகிய மூன்று ஆண்களும், ஐந்து பெண்களும் மக்ஜூமி வமிசத்தைச் சேர்ந்த அம்ரு என்பவரின் புதல்வி பாத்திமாவின் வயிற்றில் பிறந்தவர்கள். எனவே அபூதாலிப் தம் உடன் பிறந்த தம்பி மகன் முஹம்மதுவைத் தமது சொந்தக் குழந்தைகளினும் அதிகப் பிரியமாகப் பேணி வளர்த்து வந்தார்.
அவரது மனைவி பாத்திமாவும் அவ்வாறே தம் சொந்தக் குழந்தைகளினும் மேலாக அன்பு பாராட்டினார். இதனால், பெற்றோரில்லா ஏக்கம் பெருமானார் அவர்களுக்கு ஓரளவு குறைந்திருந்தது. அபூதாலிப் நேர்மையானவராகவும் திகழ்ந்தார்.
சிறுவன் முஹம்மதுவுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்த பொழுது அபூதாலிப் வியாபாரத்துக்காக சிரியா செல்ல நேர்ந்தது. பயண ஏற்பாடுகள் நடைபெறுவதைக் கண்ட இளைஞர் தாமும் பெரிய தந்தையுடன் பிரயாணம் செய்து வர எண்ணங்கொண்டார். தம் உள்ளக் கருத்தைப் பதனமாக வெளியிட்டுக் காட்டினார். அதனைச் செவியேற்ற அபூ தாலிப் தம்பி மகனைத் தம்முடன் வர அன்புள்ளங் கொண்டு அனுமதித்தார்.
சிரியாவில் புஸ்ரா என்னும் இடத்தில் பஹீரா என்ற பெயருடைய கிறிஸ்தவப் பாதிரி ஒருவர் இருந்தார். அவர் சிறுவர் முஹம்மதுவின் அங்க அடையாளங்களைக் கூர்மையாக நோக்கி, வருங்கால தீர்க்கதரிசி இவர்தான் என்பதை உறுதி செய்து கொண்டு, அபூதாலிபிடம், “இந்த இளவலுக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது, இவரை நக்கு கண்காணித்து வளர்த்து வாருங்கள். யூதர்கள் இவரை இன்னாரென்று அறிந்தால் உயிராபத்து விளைவிக்கவும் எத்தனிப்ர். எனவே, வந்த காரியத்தை விரைவில் முடித்துக் கொண்டு தாமதியாது ஊர் திரும்புங்கள்” என எச்சரித்தார் அபூதாலிபும் அவ்வாறே வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டு தம் தம்பி மகனுடன் கடிதில் மக்கா வந்து சேர்ந்தார். இந்த வியாபாரத்தில் அபூதாலிபுக்கு எப்போதும் கிடைப்பதை விட அதிகமான இலாபம் கிடைத்தது.
ஏந்தல் நபி இளம் பிராயத்திலேயே வாணிபம் செய்ய முற்பட்டுவிட்டார்கள். தங்களிடம் பணமில்லாதிருப்பினும் பொருளுள்ளவர்களுடன் கூட்டுச் சேர்ந்து சிறமையுடன் வியாபாரம் செய்து இலாபத்தில் சமபங்கு அடைவார்கள்.
முஹம்மது சிறுவராயிருந்தபோது தம் பெரிய தந்தையின் ஆடுகளை மேய்ப்பது வழக்கம். பெரிய தந்தைக்குத் தாம் ஒரு சுமையாகத் தோன்றக்கூடாது என்பதற்காக மற்றவர்களின் ஆடுகளைக் கூலிக்கும் மேய்த்து வந்தார்கள். ஆடுகளை மக்காவுக்கு வெளியேயுள்ள கராரீத் என்னும் மைதானத்தில் மேயவிட்டுச் சிறுவர் முஹம்மது சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள். மற்ற ஆடு மேய்க்கும் சிறுவர், அவரைத் தங்களுடன் விளையாட வருமாறு அழைப்பர். அதற்கு முஹம்மது, “நாம் விளையாடித் திரிவதற்காகப் படைக்கவில்லையே! வேறு ஏதோ உன்னத காரியத்திற்காக வன்றோ படைக்கப்பட்டுள்ளோம்!” எனப் புத்திசாலித்தனமாக பதில் கூறி விளையாடச் செல்ல மறுத்துவிடுவார். எனினும், வாலிபத்தை எய்தியக்கால் அவர்கள் தற்காப்புக்கான குதிரைச் சவாரி, ஓட்டப் பந்தயம், வாள்வீச்சு, மல்யுத்தம், அம்பெய்தல் போன்றவற்றில் ஆர்வமுடன் பங்கு கொண்டார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7