புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
90 Posts - 71%
heezulia
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
255 Posts - 75%
heezulia
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 6:03 am

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’

கறுப்பு நிலா

(1971 -72 சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு மலரில் வெளியான கவிதை. இளங்கலை முதலாமாண்டு பயின்ற போது எழுதப்பட்டது. தமிழ்த்துறையின் கடும்கண்டனத்திற்கும் மாணவர்களின் கணிசமான வரவேற்புக்கும் ஆளான கவிதை)

கண்ணகியே தாயே கறுப்பான இரும்பிடையே
பொன்னகையே பூவே புரட்சித் துறவியவன்
தீட்டிவைத்த காவியமே திருமகளே தேனுக்குள்
போட்டுவைத்த பழம்போலப் பூந்தமிழர்க் கினிப்பவளே

மாதத்தின் முழுநிலவே மறமகளே உன்னினிய
பாதத்தில் சின்னமகன் பாட்டுமலர் தெளிக்கின்றேன்

உச்சிமிகக் குளிர்ந்துவிட உன்னைப் புகழ்ந்துவிட்டேன்
நிச்சயமாய் இனிஎன் நினைப்பைச் சொல்லுகிறேன்

அந்திப் பூ விரிவதுபோல் அறிவை விரித்து வைத்துச்
சிந்தித்தேன் ஆமாம் சிரிப்புத்தான் வந்ததம்மா

உள்ளபடி உன்வாழ்க்கை உலகுக் குதவாத
செல்லுபடி ஆகாத சிறுகாசு தானென்பேன்

உண்ணுகின்ற சோற்றில் உமியொட்டி இருத்தல்போல்
பொன்மகளே உன் வாழ்வும் புழுதி படிந்ததென்பேன்

பருவநிலாக் காலத்தில் பயிரைப் போய் காவாமல்
அறுவடைக்குச் சென்றால், ஓர் ஆழாக்கும் கிட்டாதே

தொட்டு மாலையிட்டோர் தோகையரைக் கூடியபின்
விட்டுப் பிரிந்து வேறுதிசை போனாலும்
கண்ணீரைத் தினம் சிந்திக் கண்மூடி வாழ்வதுதான்
பெண்டிர்க்குக் கற்பென்று பேசினால் அக்கற்பே
இந்த உலகித்தில் இல்லா தொழியட்டும்
சந்தையிலும் விலை பொகாச் சரக்காகிப் போகட்டும்

கல்லாகிப் போனவளே கண்ணகியே நீபெற்ற
பொல்லாத மகனொருவன் புலம்புவதைக் கேளிங்கே

கட்டில் சுகங்காணக் காளையவன் செலும்போதே
தட்டிக் கேட்டிருந்தால் தவறி யிருப்பானா?

பெட்டிப் பாம்பாகப் பேசா திருந்ததுதான்
கட்டழகே நீசெய்த கடுங்குற்றம் முதற்குற்றம்

உப்புக் கடல்நோக்கி ஓராறு செல்லுவதும்
இப்புவியில் வியப்பில்லை எழில்மகளே உன்கணவன்
தப்பான கடல்நோக்கித் தாவிச் செலும்போதே
அப்பப்பா ஈதென்ன அநியாயம் எனச்சொல்லி
அணையொன்றைக் கட்டியந்த ஆண்மகனை தடுத்திருந்தால்
தினைவனத்துக் கிளிபோலத் திருமகளே வாழ்ந்திருப்பாய்

அளவாகத் தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்
அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம்

அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்குப் போனதம்மா காத்துவைத்த உன்சொத்து

உத்தமிநீ என்றேநான் ஒப்புகொள்வேன் ஆனால்
நித்திலத்தேன் பெட்டகத்தை நீயுன்றன் கைக்குள்ளே
வைத்திருக்கத் தெரியாமல் வாழ்விழந்து போனாயே
பைத்தியந்தான் உன்னைப் பார்புகழ பாடியவன்

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Tகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Hகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Iகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Rகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 6:04 am

படையிழ்ந்த பின்னாலே பார்கவர நினைத்தாயே
கரமொடிந்த பின்னாலே கைவளையைக் கேட்டாயே

சிறகொடிந்த பின்னாலே தேன்மயிலே வானத்தில்
பறந்துவர நினைத்தாயே பால்திரிந்த பின்னாலே
குடிக்க நினைத்தாயே குளிரலைமேல் வெண்ணிலவைப்
பிடிக்க முயன்றாயே பேதைத் தலைமகளே

அறம்பாடி; மதுரை அரசன் புகழ்பாடித்
திறம்பாடும் பூநகரைத் தீயால் எரித்தாயே

அத்திறத்தைச் சோணாட்டில் அணுவளவு காட்டிநின்றால்
சத்தியமாய் வாழ்வில் தளிர்த்துச் செழித்திருப்பாய்

மன்னவனும் மாண்டதனால் மதுரை எரிந்ததனால்
உன் கணவன் நிலையாக் உன்னிடத்தே மீண்டானா?

கண்ணீரைத் துடைத்தானா? கனிமகளே உன்வாழ்வில்
பன்னீரைத் தெளித்தானா? பாவி, படுபாவி

கயவன் இழிந்தமகன் கண்மூடிப் போனவுடன்
மயங்கி விழுந்தாயே மடமகளே வாழ்நாளில்
பொய்யாகிப் போனம்கன் புழுதியிலே செத்ததனால்
ஐயோ ஆ என்றலறி அழுது துடித்தாயே

காவித்தில் உனைக்கண்டு கண்ணீரா நான் வடித்தேன்?
ஆவி சிலிர்த்தேனா? அல்ல... சிரித்துவிட்டேன்

வேடிக்கை தானம்மா விந்தைதான் உன் போக்கு
சூடிக் களிக்கும் சுகப்பூவாம் உனைவிட்டே
ஓடித் திரிந்தானே உன்மத்தன்; அப்போதே
தேடிப் பிடித்துத் திருத்தி அழைத்திருந்தால்
வாடிவிட்ட பயிராக வருந்தா திருந்திருப்பாய்
ஆடிமிகக் களித்திருப்பாய் அமைதியிலே நின்றிருப்பாய்

கலங்காமல் நீயன்று களமேறத் துணியாத
பலன்தானே தாயேநீ பட்டதுயர் மதுரையிலே

மோகக் கதையதனை முடித்துவிட்டே உன்கணவன்
வேகமாய் உனைநாடி வீடுதேடி வந்தவுடன்
சிரித்துக் களித்துச் செவியெல்லாம் தேன்பாய
உரித்த சுளைபோலும் உன்னிதழை நீதிறந்து

”சிந்தைநிலாக் காவலரே சிலம்பிதனை நாடித்தான்
வந்தீரோ?” என்றுனது வாய்நிறையத் தேன்வழியச்
சொன்னாயே பாவி சுவையொழுக; சிலம்புதனை
அன்னவனின் கைமீ(து) அளிக்கத் துணிந்தாயே

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Tகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Hகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Iகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Rகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 6:05 am

பத்தினியாய் நீயிருந்தும் பயனில்லை உண்மையிலே
பித்தம் பிடித்தவள்நீ பேதை பெரும்பேதை

அநியாயக் காரனுக்கே ஆரத்தி எடுத்தவள் நீ.
கனியென்றே எண்ணிக் கருங்கல்லைக் கடித்தவள் நீ

பல்லுடைந்து போனதற்கும் பதறித் தவிப்பதற்கும்
எள்ளுருண்டை காரணமா ஏந்திழையே? உன்கணவன்
வெட்டி விழுந்தவுடன் வேங்கையென உந்தோளைத்
தட்டி விரைந்தாயே தமிழரசன் பேரவைக்கு
”தேரா மன்னனெ” னத் தென்னவனைச் சொன்னாயே
ஆராய்ந்து பார்த்தாயா அன்னமே உண்மையிலே
மன்னனல்லன் தேராதான் மலர்க்கொடியே நீயேதான்

பொன்னகையைக் காவாமல் புவியில தொலைத்துவிட்டுப்
பெரும்பழியைப் புவிமீது பெரிதாய்ச் சுமத்துவதில்
பொருளென்ன? புரியாத புதிரம்மா உன் வாழ்வு

பட்டுத் துகில்விரித்த பவளம்பூம் பஞ்சனையில்
தொட்டுப் பிடித்துச் சுவையிதழில் விரல் தடவிப்
பதமான சுகங்கண்டு பாவிமகன் உனைப்பற்றி
முதலிரவில் சொன்னதெல்லாம் மோகமொழி தானென்றே
அறியாமல் போனாயே அதுவுன்றன் பிழையலவா?
பிரிக்காத ஏடுன்னைப் பிரிந்தெங்கோ போனானே

எச்சரிக்கை செய்தேன் எழுதுங் கவிஞர்களே
முச்சீரால் தான்வெண்பா முடிந்துவிட வேண்டுமெனும்
சட்டம் வகுத்திருக்கும் சந்தத் தமிழ்போலக்
கெட்ட மகனைநீ கிழித்துவைத்த கோட்டினையே
விட்டுப் பிரியாத வேலையினைச் செய்வதற்கு
சுட்டுவிழியாலே சொக்கவைத்துச் சிக்கவைக்கத்
தவறி விழுந்தவுனைத் தாய்க்குலமா பாராட்டும்?
கவலைக் காவியம் நீ கண்ணீரால் தான் முடிந்தாய்

தாய்க்குலமே தாய்க்குலமே தங்கமகன் சொல்லுகிறேன்
வாய்ச்சாலக் காரனென்றென் வார்த்தைகளைத் தள்ளாதீர்
கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப் போலிருங்கள்
மற்றவற்றில் அந்த மடமகளை மறந்திடுங்கள்

இப்போதும் அவளைப் போல் ஏமாந்து நின்றிருந்தால்
முப்போதும் கண்ணீரில் மோனநிலை கொண்டிருந்தால்
கடலுள் விழுந்தசிறு கடுகாகிப் போவீர்கள்
இடருள் சிக்குண்டே எருக்கம்பூ ஆவீர்கள்.

கருவுடைந்த முட்டையெனக் கலங்கித் தவிப்பீர்கள்
வருத்தத்தில் தானுங்கள் வாழ்நாளைக் கழிப்பீர்கள்
சுகப்பட மாட்டீர்கள்; சூறைக் காற்றுக்குள்
அகப்பட்ட பஞ்சினைப்போல் அலைந்தே அழிவீர்கள்

குலமகளை, தமிழ் நெஞ்சக் கோவிலுக்குள் இருள்போக்கி
விளக்கேற்றி நெஞ்சுக்குள் வீற்றிருக்கும் பொன்மகளைத்
திறனாய்வு செய்கின்ற தீவட்டித் தடியன் யார்?
அறுக்கத்தான் வேண்டும் அன்னவனின் நாக்கையெனச்
சீறுகின்ற பெரியீர் சிந்தையிலே அறப்பாட்டுக்
கூறுகின்ற பூமகளைக் கொஞ்சுதமிழ் அஞ்சுகத்தை
நிந்தித்(து) எழுதவில்லை நினைவெல்லாம் ஒருநிலையாய்ச்
சிநதித்தே எழுதியுள்ளேன் சிந்திக்க வேண்டுகிறேன்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Tகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Hகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Iகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Rகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 10:12 am

என் தமிழ் ,கவிதை ஆசான் தந்த கவிதையை ,ரசித்து அதன் ருசியை ஈகரை அறிய தரும் தோழிக்கு நன்றி.....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 21, 2010 10:13 am

சூப்பர் அதிரா அக்கா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 10:15 am

kalaimoon70 wrote:என் தமிழ் ,கவிதை ஆசான் தந்த கவிதையை ,ரசித்து அதன் ருசியை ஈகரை அறிய தரும் தோழிக்கு நன்றி.....

ருசித்துப் பாராட்டிய தோழனுக்கு என் மனமார்ந்த நன்றி.... கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Tகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Hகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Iகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Rகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 10:16 am

ரிபாஸ் wrote:சூப்பர் ஆதிரா அக்கா

மிக்க நன்றி ரிபாஸ் கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Tகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Hகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Iகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Rகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 10:27 am

Aathira wrote:
kalaimoon70 wrote:என் தமிழ் ,கவிதை ஆசான் தந்த கவிதையை ,ரசித்து அதன் ருசியை ஈகரை அறிய தரும் தோழிக்கு நன்றி.....

ருசித்துப் பாராட்டிய தோழனுக்கு என் மனமார்ந்த நன்றி.... கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550

நான் எப்போதும் வைரமுத்து கவிதைகளை ,அவர் பேசும் மேடைப்பேச்சுகள், படிப்பதும் , கேட்பதும் எனக்கு ரொம்பவும் விருப்பம்.அந்த வைர வரிகளை,சொல்லும் நேர்த்தியை,கருத்தை இன்றைய காலத்தின் ஓட்டத்தோடு ,
சொல்லும் கவியை ரசிப்பேன் ருசிப்பேன்,காதலிப்பேன்.நன்றி தோழி..மீண்டும் சொல்கிறேன்.மீட்டு தந்தமைக்கும்,நீங்களும் வைரமுத்து ரசிகை என்பதருக்கும் நன்றி .நன்றி. நன்றி .
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 10:34 am

kalaimoon70 wrote:
Aathira wrote:
kalaimoon70 wrote:என் தமிழ் ,கவிதை ஆசான் தந்த கவிதையை ,ரசித்து அதன் ருசியை ஈகரை அறிய தரும் தோழிக்கு நன்றி.....

ருசித்துப் பாராட்டிய தோழனுக்கு என் மனமார்ந்த நன்றி.... கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550

நான் எப்போதும் வைரமுத்து கவிதைகளை ,அவர் பேசும் மேடைப்பேச்சுகள், படிப்பதும் , கேட்பதும் எனக்கு ரொம்பவும் விருப்பம்.அந்த வைர வரிகளை,சொல்லும் நேர்த்தியை,கருத்தை இன்றைய காலத்தின் ஓட்டத்தோடு ,
சொல்லும் கவியை ரசிப்பேன் ருசிப்பேன்,காதலிப்பேன்.நன்றி தோழி..மீண்டும் சொல்கிறேன்.மீட்டு தந்தமைக்கும்,நீங்களும் வைரமுத்து ரசிகை என்பதருக்கும் நன்றி .நன்றி. நன்றி .
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
Spoiler:

மிக்க நன்றி கலைநிலா..இன்னும் அவர் கவிதை ஒன்றை அவர் வாயால் கேட்ட சிறு செய்தயுடன் தருகிறேன்.. அடுத்து.. கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Tகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Hகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Iகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Rகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 21, 2010 12:37 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:
kalaimoon70 wrote:என் தமிழ் ,கவிதை ஆசான் தந்த கவிதையை ,ரசித்து அதன் ருசியை ஈகரை அறிய தரும் தோழிக்கு நன்றி.....

ருசித்துப் பாராட்டிய தோழனுக்கு என் மனமார்ந்த நன்றி.... கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ 154550

நான் எப்போதும் வைரமுத்து கவிதைகளை ,அவர் பேசும் மேடைப்பேச்சுகள், படிப்பதும் , கேட்பதும் எனக்கு ரொம்பவும் விருப்பம்.அந்த வைர வரிகளை,சொல்லும் நேர்த்தியை,கருத்தை இன்றைய காலத்தின் ஓட்டத்தோடு ,
சொல்லும் கவியை ரசிப்பேன் ருசிப்பேன்,காதலிப்பேன்.நன்றி தோழி..மீண்டும் சொல்கிறேன்.மீட்டு தந்தமைக்கும்,நீங்களும் வைரமுத்து ரசிகை என்பதருக்கும் நன்றி .நன்றி. நன்றி .
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மேலும் ஒருமுறை அக்காவுக்கு நன்றி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக