ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?

4 posters

Go down

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Empty நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?

Post by நிலாசகி Sat Apr 24, 2010 9:38 am

ஆயில்யம்,மூலம்,கேட்டை,விசாகம்,
பூராடம்




பொதுவாக இந்த நக்ஷத்திரங்களில்
பிறந்தவர்களின்
ஜாதகங்களை நமது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணத்திற்கு
தேர்ந்தெடுப்பதற்கு
பயப்படுகிறோம். கீழ்கண்ட காரணங்களினால் குடும்பத்திற்கு ஆகாத
நக்ஷத்திரங்களாக கருதுகிறோம்.

1. ஆயில்யம் மாமியாரை பாதிக்குமோ என்ற பயம்.
2. மூலம் மாமனாருக்கு ஆபத்து வருமோ என அஞ்சுகிறோம்.
3. கேட்டை மூத்த மைத்துனருக்கு கெடுதல் என்று நம்புகிறோம்.
4. விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என சொல்லப் படுகிறது.
5. பூராடம் நூலாடாது என்று சொல்கிறார்களே.

இந்த கட்டுரையில் இந்த ஐந்து நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில்
என்ன
சொல்லப்பட்டிறிக்கிறது என்று தெரிந்து கொள்வோமா? முதலில்

1. இந்த தோஷங்கள் ஆண் நக்ஷத்திரஷங்களுக்க கிடையாது.
2. எந்த நக்ஷத்திரமும் கெட்ட நக்ஷத்திரம் இல்லை.
3. சுத்த ஜாதககங்களானால் இந்த தோஷங்கள் அனுபவத்திற்கு வருவதில்லை.

இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை ஓதுக்காதீர்கள்.
ஜாதகங்களை
ஆராய்ந்து பார்த்த பிறகு முடிவு செய்வது நல்லது.
இந்த நக்ஷத்திரங்களில் பிறந்த பலர் திருமணம் செய்துகொண்டு நன்றாக
இருக்கிறார்கள். மேலும் நமது குடும்பத்தில் கூட இந்த
நக்ஷத்திரங்களில்
பிறந்தவர்கள் இருக்கலாம் அல்லவா?
ஆகையால் இந்த நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன சொல்லப்
பட்டிருக்கிறது என தெரிந்து கொள்வோம்.


1.

ஆயில்ய நக்ஷத்திரம்

ஆயில்யம் கடக ராசியில் உள்ளது. கடகம்
சந்திரனின் ஆட்சி வீடு. சந்திரன் தாய்க்கு காரகர். மாமியார் மணமகனின்
தாய்.
ஆகவே தாயின் காரகரால் தாயாருக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தாயின்
காரகர்
தன் தாயாரைக் கொல்ல மாட்டார்.
ஆயில்யத்தின் அதிபதி புதன். ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு 10ம் வீடு
மாமியார்
வீடு. இந்த வீட்டில் புதபகவான் செவ்வாய் அல்லது ராகு கேதுவுடன்
சேர்ந்து
நின்றாலோ, அல்லது 4 ம் வீட்டில் இவ்வாறு காணப் பட்டாலோ
மாமியாருக்கு கெடுதல்
ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் புதன் ஆட்சி, உச்சம் பெற்று
சுக்கிரனின் சாரம்
பெற்று இருந்தால் மாமியாருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

ஆயில்ய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல்
அந்த
ஜாதகங்களை உங்கள் ஜோதிடரிடம் ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது.
சுத்த
ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.



2.
மூலம் நக்ஷத்திரம்.


ஆனி மூலம் அரசாளும்,
பின் மூலம்
நிர் மூலம் என்பது ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று
மாறுபட்டதால், மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களின் வரன்களை
ஏற்றுக்கொள்ள
பயப்படுகிறோம். இதன் உண்மை பின்வருமாறு.

ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சூரியனும்,
சந்திரனும்
உபய வீடுகளில் இருப்பதால் பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இதனால்
பலவிதமான
நன்மைகளும் நாடாளும் யோகங்களும் ஏற்படுகின்றன.
இதையே ஆனி மூலம் அரசாளும் என்று சொல்கிறோம். (ஆனி மூலம் என்பது
ஆண்மூலம்
ஆகியது)

மூலம் நக்ஷத்திரத்தின் 4 வது பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு ஏற்படும்

பிரச்சினைகளை எளிதில் சமாளித்து தனது எதிரிகளையும் நிர்மூலம் செய்து

வெல்லக்கூடிய திறமை உள்ளவர்கள். இதுவே பின்மூலம் நிர்மூலம்
எனப்படும். எனவே (பின்
மூலம் என்பது பெண் மூலம் ஆகியது)

சரி, ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தானே
மேற்படி
விளக்கம், மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால்
யாருக்காவது ஆபத்து
வருமா ? என்று ஒரு கேள்வி கேட்கலாம்.
மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமனாருக்கு ஆபத்து என்பது
எல்லா
பெண்களுக்கும் பொருந்தாது.
லக்னத்துக்கு 3 ம் வீடு மாமனார் வீடு. இங்கு கேது இருந்தாலோ மற்றும்
4 வது 9
வது வீடுகளில் கேது காணப்பட்டாலோ மாமனாருக்கு கெடுதல் நேரலாம்.
மற்றபடி மூலம்
நக்ஷத்திரத்தால் மட்டும் எநத வித தோஷமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பரிகாரம்- கேதுவின் நக்ஷத்திரம் மூலம். திருமணமாகாத பெண்களும்,
ஆண்களும்
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகரையும்,
திருப்பதி
அருகெ காளஹஸ்த்தியில் இருக்கும் பாதாள விநாயகரையும், மயிலாடுதுறை
அருகேயுள்ள
கேதுவின் ஸ்தலமாகிய கீழ்பெரும்பள்ளத்திற்கும் சென்று பரிகாரம்
செய்துவருவது
நன்மை தரும்.

மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல்
அந்த
ஜாதகங்களை
உங்கள் ஜோதிடர் மூலமாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வது நல்லது.
சுத்த
ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

கேட்டை நக்ஷத்திரம்


கேட்டை
மூத்த
மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. ராசி சக்கரத்தில் 5ம்
இடத்தில்
பாபிகள் இருந்தால் மூத்த மைத்துனருக்கு கெடுதல் ஏற்படலாம்.
கேட்டையின் அதிபதி
புதன். இவருடன் 5ம் வீட்டில், ராகு,கேது,குரு,செவ்வாய், தொடர்பு
காணப்பட்டால்,
மூத்தமைத்துனருக்கு ஏதேனும் துன்பம் ஏற்படலாம். மற்றபடி எந்தவித
ஆபத்தும் வர
வாய்ப்பு இல்லை.

ஆகையால் கேட்டை நக்ஷத்திரத்தில் பிறநத பெண்களின் ஜாதகங்களை உடனடியாக
ஒதுக்காமல், மேற்கண்டவாறு தோஷம் உள்ளதா? மூத்தமைத்துனருக்கு துன்பம்
வருமா?
என உங்கள் ஜோதிடரை அணுகி முடிவு செய்யவும். சுத்த ஜாதகமானால் தீங்கு
எற்பட
வாய்ப்பில்லை.


விசாகம்

நக்ஷத்திரம்.

விசாகம்
இளைய
மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப் படுகிறது. ராசி சக்கரத்தில் 9ம்
இடத்தைப்
பார்த்து இளைய மைத்துனருக்கு இன்னல் வருமா என்று தெரிந்து
கொள்ளலாம். 9ம்
வீட்டில் ராகு,கேது,செவ்வாய் நின்றால் இளைய மைத்துனருக்கு ஆயுள்
குறைவை
ஏற்படுத்தலாம்.
விசாகத்தின் அதிபதி குருபகவான். குருவுடன், புதன் சேர்ந்து
காணப்பட்டாலோ
அல்லது குரு கெட்டு இருந்தாலோ இளைய மைத்துனருக்கு சில இன்னல்கள்
ஏற்படலாம்.
ஆனால் குருபகவான் வலுவாக இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

உங்களிடம் வரும் விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்த வரனின் ஜாதகத்தில்
இவ்வாறு
உள்ளதா என்று ஜாதகத்தை ஓர் நல்ல ஜோதிடர்டம் பரிசீலித்து முடிவு
செய்யுங்கள்.
விசாகம் என்ற உடனே ஒதுக்காதீர்கள். சுத்த ஜாதகங்களானால் பாதிப்பு
இருக்காது.

பூராடம் நக்ஷத்திரம்
ஆயில்யம், மூலம்,
கேட்டை,
விசாகம் நக்ஷ்ததிரங்களுக்கு மேலே சொல்லப்பட்ட விளக்கம் போல்
பூராடம்
நூலாடாது என்பதற்கு ஜோதிடத்தில் ஆதாரம் எதுவும் தென்படவில்லை.
ஆகையால்
பூராடம் நூலாடாது என்பது பழக்கத்தில் ஏற்பட்டதாக கொள்ளலாம். பூராடம்
நூலாடாது
என்றால் தாலி நிலைக்குமா என்று பயப்படுகிறோம். ஆனால் பூராடம்
நூலாடாது
என்றால் திருமாங்கல்யம் ஆடிப்போகாமல் நிலைத்து நிற்கும் என்று சிலர்

நம்புகின்றனர். ஆண் பெண் இருவருக்கும் ஆயுள் பாவம் பலமாக இருந்தால்
எந்தவித
பாதிப்பு வர வாய்ப்பு இல்லை.

பூராடம் நக்ஷத்திரஙகளின் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண்

இருவருடைய ஆயுள் பாவங்கள் நன்றாக இருக்கின்றனவா என உங்கள் ஜோதிடர்
மூலம்
தெரிந்துகொண்டு முடிவு செய்யவும்.




நன்றி :http://www.vivahasangamam.com/


தீதும் நன்றும் பிறர் தர வாரா நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Empty Re: நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?

Post by சிவா Sat Apr 24, 2010 11:41 am

///
1. இந்த தோஷங்கள் ஆண்
நக்ஷத்திரஷங்களுக்க கிடையாது.
2. எந்த நக்ஷத்திரமும் கெட்ட
நக்ஷத்திரம் இல்லை.
3. சுத்த ஜாதககங்களானால் இந்த தோஷங்கள்
அனுபவத்திற்கு வருவதில்லை.///

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550


நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Empty Re: நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?

Post by ராஜா Sun Apr 25, 2010 12:01 pm

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Empty Re: நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?

Post by krishnaamma Sun May 30, 2010 9:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Empty Re: நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum