ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:41 pm

நுரையீரல் புற்றுநோய்கள் அறிமுகம்
நுரையீரல் புற்றுநோய்கள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை. பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களிலும், குறிப்பாக புகைபிடிப்பவர்களிலும் ஏற்படுகிறது. ஆரம்பநிலைகளில் கண்டறியப்படின் குணமாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஓரளவிற்கு உண்டு. பொதுவாக மிகவும் உயர் நிலையிலுள்ள புற்றுநோயினை (மிகவும் வளர்ச்சியடைந்த மற்றும் பரவுதலுக்குட்பட்ட) குணப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். ஆயின் சிகிச்சையானது புற்றுநோய் மோசமடைந்து செல்வதை தாமதப்படுத்துகிறது.

முதன்மையான நுரையீரல் புற்று நோய்கள்
முதன்மையான நுரையீரல் புற்றுநோய்கள் நுரையீரல் கலங்களிலிருந்து உருவாகின்றது. முதன்மையான நுரையீரல் புற்று நோயில் பல வகைகள் உண்டு. இரண்டு மிகப் பொதுவான வகைகளாக ஸ்மோல் செல் (சிறிய கல ) நுரையீரல் புற்றுநோய் மற்றும் நொன்ஸ்மோல் செல் (சிறியதல்லாத கல) நுரையீரல் புற்றுநோய். நொன்ஸ்மோல் செல் நுரையீரல் புற்றுநோய்களுக்குள் ஸ்காமஸ் செல் புற்றுநோய் (மிகப் பொதுவன நுரையீரல் புற்றுநோய் ஆகும்) அடினோகாசினோமா மற்றும் லார்ஜ் செல் காசினோமா அடங்குகின்றன.. 5 ல் 1 ஸ்மால் செல் வகை புற்றுநோயாகும், ஏனையவை ஸ்மோல் செல்அல்லாத வகை புற்றுநோய்களாகும். இவ்வாறான புற்றுநோய் வகைகள் யாவும் சுவாசக்குழாய் மேலணியில் காணப்படும் பல்வேறு வகை கலங்களிலிருந்து உருவாகின்றது. மேலும் சில அரிதான வகை நுரையீரல் புற்றுநோய்களும் வேறு வகையான கலங்களிலிருந்து உருவாகின்றன.


Last edited by சபீர் on Thu Apr 22, 2010 5:53 pm; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:41 pm

ஒவ்வொரு வகையான நுரையீரல் புற்று நோய் கலங்களும் வேறுபட்ட குணாதிசயங்களை கொண்டுள்ளன. உ-ம் ஸ்மோல் செல் காசினோமா மிக விரைவாக வளர்ச்சியக் கூடியது மற்றும் பரவலடைகிறது. ஸ்மோல் செல் கசினோமாவானது நோய் நிர்ணயம் செய்யப்படும் போது அனேகமானோரில் ஏற்கனவே ஏனைய உடற் பாகங்களுக்கு பரவலடைந்து காணப்படும். மாறாக ஸ்காமஸ் கல / படை கொண்ட செதின் மேலணிக் கல புற்று நோயானது மிகவும் மெதுவாகவே வளர்ச்சியடைவதுடன் ஏனைய உடற் பகுதிகளுக்கு பரவலடைய சில காலம் செல்கிறது.

இரண்டாம் நிலையான நுரையீரல் புற்று நோய்கள்
இரண்டாம் நிலையான அல்லது பரவுகை காரணமாக தோன்றிய நுரையீரல் புற்று நோய்கள் என்பவை உடலின் ஏனைய பகுதிகளில் தோன்றும் புற்று நோயானது பரவுகைக்குட்பட்டு நுரையீரலை வந்தடைவதாகும். நுரையீரலானது ஏனைய புற்று நோய்கள் பரவுவதற்குரிய ஒரு பொதுவான பகுதியாகும். இதற்கு காரணம் குருதியானது பூரணமாக நுரையீரல்களினூடாக பாய்ந்து செல்கிறது மற்றும் அக்குருதி உடலின் எந்தவொரு பகுதிக்குமுரிய புற்று நோய் கலங்களை கொண்டிருக்கும்.

மீசோதீலியோமா

இது நுரையீரலை சூழ்ந்துள்ள புடை மென்சவ்விற்குரிய புற்று நோயாகும். உண்மையில் இதுவொரு நுரையீரல் புற்று நோயல்ல.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:42 pm

நுரையீரல் புற்றுநோய்க்குரிய காரணங்கள்

புற்றுநோய்க் கட்டியானது ஒரு தனியான அசாதாரண கலத்திலிருந்து ஆரம்பிக்கிறது. இங்கு சில காரணிகளால் கலத்தின் குறிப்பிட்ட சில பரம்பரை அலகுகள் பாதிப்படைவதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அசாதாரண கலம் உருவாக்கப்படுவதுடன் கட்டுபாடின்றிய பிரிகையும் நிகழ்கிறது. சில குறிப்பிட்ட ஆபத்துக்குரிய காரணிகள் புற்று நோய் உருவாகும் ஆபத்தினை அதிகரிக்கின்றன.

புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தல் நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்குரிய மிக முக்கிய ஆபத்தான காரணி. மற்றும் இதுவே பிரதான நோய்க்காரணியுமாகும். புகையிலையில் காணப்படும் இரசாயனப் பொருட்கள் புற்று நோய்ப் பதார்த்தங்களாகும். இவை கலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக புற்றுநோய் ஏற்படுத்தப்படுகிறது. ஏற்த்தாள 10 ல் 9 நுரையீரல் புற்று நோய்கள் புகைத்தல் காரணமாக ஏற்படுத்தப்படுகின்றன. புகைக்காதோருடன் ஒப்பிடுகையில் தினமும் 1-14 சிகரட்டுகள் வரை புகைப்பவர்களில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக இறக்கக்கூடிய ஆபத்தானது 8 மடங்குகள் வரை உயர்வானது. மற்றும் தினமும் 25 சிகரட்டுகளுக்கு மேல் புகைப்பவர்களில் ஆபத்தானது 25 மடங்குகளாகும். ஆயின் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்தானத்தானது புகைப்பிடிக்கும் காலத்தின் அளவிலேயே அதிகளவில் தங்கியுள்ளது. அதாவது தினமும் ஒரு பக்கற் சிகரட்டினை 40 வருடங்களுக்கு ப்கைக்கும் போதுள்ள ஆபத்தானது தினமும் இரு பக்கற்றுக்களை 20 வருடங்களுக்கு பயன்படுத்துவதை விட மிகவும் ஆபத்தானது.

புகைப்பிடித்தல் நிறுத்தப்பட்டு 15 வருடங்களின் பின்னர் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்தானது புகைபிடிக்காதவர்களை ஒத்ததாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:43 pm

[b]ஏனைய காரணிகள்
புகைப்பிடித்தல் பழக்கம் அற்றவர்களில் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபது மிகக்குறைவாகும். ஆயின் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் ஏனையோரின் புகைக்கு வெளிப்படுத்தப்படும் போது சிறிதளவு ஆபத்து காணப்படுகிறது. சில பதார்த்தங்களுடன் உ-ம் கதிர்த்தாக்கமுடைய பதார்த்தங்கள், அஸ்பெஸ்ரோஸ், நிக்கல், குரோமியம், போன்றவற்றுடன் தொடர்புற்று தொழில் புரிபவர்களில் ஆபத்து உயர்வாகும், பிரதானமாக அவர்கட்கு புகைத்தல் பழக்கமும் காணப்படும்போதாகும். வளி மாசடைதலும் சிறிதளவு ஆபத்துகுரியதாகும்.

நுரையீரல் புற்று நோய்க்குரிய பாரம்பரிய நோய்ச்சரிதை முதற் சந்ததி உறவினர்களிடையே குடும்பத்தில் காணப்படுதல் சற்று ஆபத்தினை அதிகரிக்கிறது.
குறிப்பு: அநேகமான நுரையீரல் புற்று நோய்கள் பாரம்பரியமாக காணப்படுவதில்லை.
[/color][/color]




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:48 pm

நுரையீரல் புற்றுநோய் குணங்குறிகள்

வெவ்வேறு நோயாளிகளுக்கிடையே குணங்குறிகள் வேறுபட்டவை. பலரிலே ஆரம்பநிலைகளில் குணங்குறிகள் ஏதும் காணப்படுவதில்லை. நுரையீரல் புற்றுநோயானது சந்தர்ப்பவசமாக X கதிர்ப் பரிசோதனையானது வேறு காரண்ங்களுக்காக மேற்கொள்ளப்படும் போது கண்டறியப்படும்.
நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக
தொடர்ச்சியான இருமல்
இருமும் போது இரத்தம் அல்லது இரத்த கசிவுடனான சளி வெளியேறல்.
இலேசான நெஞ்சுவலி
களைப்பு மற்றும் உடல்சக்தியற்ற தன்மை
உடல்நிறை குறைவடைதல்
மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது இளைப்பு/தொய்வு – விசேடமாக புற்றுநோய்க் கட்டியானது சுவாசக்குழாய்களிலே வளர்ச்சியடையும் போது அது காற்றோட்டத்தினை பகுதியாக தடைப்படுத்தும் சந்தர்ப்பங்களிலாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:49 pm

புற்று நோயானது வளர்ச்சியடைந்து செல்லும் போது குணங்குறிகள் மோசமடைகின்றன.
மேற்கூறிய குணங்குறிகள் மோசமடையக்கூடும்
நுரையீரல் அழற்சி /நியூமோனியாவானது புற்றுநோய்க் கட்டியால் தடைப்படுத்தப்பட்டுள்ள சுவாசக்குழாய்க்கு சேய்மையான நுரையீரல் பகுதியிலே உருவாகக்கூடும். இவ்வாறான கிருமித்தொற்றானது நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு கட்டுப்படாது காணப்படலாம்.
நுரையீரல்களுக்கும் புடைமென்சவ்வுகளுக்குமிடையே திரவங்கள் தேக்கமடையக்கூடும். இதனால் சுவாசசிரமம் மோசமடையக்கூடும்.
நுரையீரலின் உச்சிப்பகுதியிலே காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் அவ்வழியாக செல்லும் நரம்பு நார்களை அழுத்துவதன் காரணமாக தோள் மற்றும் புயங்களில் வலி, அங்கபலவீனம், விறைப்பு போன்றவை உணரப்படலாம்.
இதயத்திலிரிந்து தலைப்பகுதிக்கு குருதியை கொண்டு செல்லும் நாளங்கள் புற்று நோய் கட்டியினால் அழுத்தப்படுவதன் காரணமாக முகம் வீக்கமடையலாம்.
சில ஸ்மோல்செல் காசினோமாக்கள் அதிகளவு ஓமோன்களை உருவாக்குகின்றன இதன் காரணமாக உடலின் ஏனைய பகுதிகளில் பல்வேறு குணங்குறிகள் உருவாகின்றன.
புற்று நோயானது ஏனைய அங்கங்களுக்குப் பரவும் போது ஏனைய பல்வேறு குணங்குறிகளை தோற்றுவிக்கிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:49 pm

நுரையீரல் புற்றுநோயை நோய்நிர்ணயம் செய்தல்

வைத்தியர் நுரையீரல் புற்றுநோயென சந்தேகிக்கும் தருணத்தில் பொதுவான ஆரம்பப்பரிசோதனையாக நெஞ்சுப் பகுதிக்குரிய X கதிர்ப் பரிசோதனையானது மேற்கொள்ளப்படும். இது மிகவும் எளிய மற்றும் விரைவான பரிசோதனையாகும். மற்றும் இதில் நிழற்பட மாற்ற்ங்களை அவதானிக்க முடியும். ஆயின் நெஞ்சுப்பகுதிக்குரிய X கதிர்ப் படமானது புற்றுநோயினை உறுதி செய்வதற்கு பயன்படுவதில்லை காரணம் பல்வேறு காரணங்களால் இதை ஒத்த நிழற்பட மாற்றங்கள் உருவாகக் கூடும் என்பதாலாகும். எனவே ஏனைய பரிசோதனைகள் அவசியமாகும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:54 pm

நோயினை உறுதி செய்தல்
புற்றுநோயென சந்தேகிக்கும் யாவரிலும் நோயானது கட்டியின் சிறுதுண்டு / மாதிரிப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படும். இம் மாதிரியானது பின்னர் நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிக்கப்பட்டு அசாதாரண கலங்கள் நோக்கப்படும். புற்றுநோயின் வகையினையும் தீர்மானித்துக் கொள்ள முடியும். பின்வருவனவர்றில் ஏதாவது ஒரு முறையில் மதிரியானது பெறப்படும்.

Bronchoscope) சுவாசப் பாதைக்குரிய குழாயுருவான ஒளிப்பட தொலைகாட்டிப் பரிசோதனை. இதுவே பொதுவாக சுவாசக்குழாய்களின் உட்பகுதியை அவதானிக்கவும் கட்டிகளின் மாதிரிகளை பெற்றுக் கொள்ளவும் பயன்படுத்தப்படும் பரிசோதனை முறையாகும். இப்பரிசோதனைக்குரிய கருவியானது மெல்லிய வளையும்தன்மையுடைய தொலைகாட்டியாகும். இது ஒரு பென்சிலினுடைய தடிப்பைக் கொண்டிருக்கும். கருவியானது நாசித்துவாரத்தினூடாக செலுத்தப்பட்டு தொண்டை வாதனாளி ஊடாக சுவாசக் குழாய்களினுள் இடப்படும். இதில் கணப்படும் விசேட ஒளி கடத்தும் பதார்த்தமானது வளைவிடங்களிலும் ஒளியை கதிர்க்க செய்வதனால் வைத்தியரால் தெளிவாக அவதானிக்க முடிகிறது. இக்கருவியிலே மேலும் கவ்விகள் மூலம் சுவாசக்குழாய் சுவர்களிலிருந்து இழைய மாதிரிகளை பெறக்கூடியதாக இருக்கும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:55 pm

நுரையீரல் புற்றுநோய் நோய்நிர்ணயம்

பரிசோதனைகள்


சளிமாதிரிப் பரிசோதனை. இதற்காக நோயாளியிடம் சளியினை சேகரிக்குமாறு கூறப்படும். புற்றுநோய் கலங்களை சில சந்தர்ப்பங்களில் நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
ஊசிமூலமாக சுவாசக்குழாய் மாதிரியினை சேகரித்தல். இங்கு வைத்தியர் மெல்லிய ஊசியொன்றை நெஞ்சறைச் சுவரினூடாக செலுத்துவதன் மூலம் சிறிய இழைய மாதிரி ஒன்றை பெற்றுக் கொள்ளுவார். புற்றுநோய் கட்டியின் எக்ஸ்கதிர்ப் படங்கள் வைத்தியர் புற்றுநோய் கட்டியின் அமைவிடத்தை இனங்கண்டு ஊசியினை செலுத்துவதற்கு உதவுகின்றது. வலியினை தவிர்ப்பதற்கு தோலானது விறைப்பூட்டப்படும்.
புடை மென்சவ்விடை இடைவெளியினுள் காணப்படும் திரவ மாதிரியினைப் பெற்றுக்கொள்ளல். நுரையீரலை அடுத்து திரவமானது தேக்கமடைந்து காணப்படின் (புற்று நோய் காரணமாக விருக்கலாம்) மெல்லிய ஊசிமூலம் திரவ மாதிரி பெற்றுக்கொள்ளப்படும். திரவமானது புற்று நோய்க் கலங்களுக்காக பரிசோதிக்கப்படும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Thu Apr 22, 2010 5:56 pm

நெஞ்சறைக்குழிக்குரிய ஒளிப்பட தொலைகாட்டிப் பரிசோதனை. இது நெஞ்சறை பகுதியில் காணப்படும் நிணநீர் கணுக்களை நேரடியாக அவதானிக்கவும் அவற்றின் மாதிரிகளை பெற்றுக் கொள்ளவும் பயன்படுகிறது. இது நோயாளியை பூரணமாக மயக்கிய நிலையில் மேற்கொள்ளப்படும். கழுத்துப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சிறிய சத்திர சிகிச்சை மூலமான வொட்டினூடாக இது கீழ் நோக்கி வாதனாளிக்கு சமாந்தரமாக நெஞ்சறைக் குழியினுள் செலுத்தப்படும்.
வீடியோ படத்துடனான நெஞ்சறைக்குழிக்குரிய ஒளிப்பட தொலைகாட்டி மூலமான சத்திர சிகிச்சை. இக்கருவி நெஞ்சறை சுவரினூடாக செலுத்தப்படும். இது பூரணமாக மயக்கிய நிலையில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வைத்தியரால் நுரையீரலினை நேரடியாக பார்வையிட முடிவதுடன் மாதிரியினை பெற்றுக் கொள்ளவும் முடியும்.
சுவாசக்குழாயின் உட்புறமான அல்ட்ரா ச்வுண்ட் ஸ்கான் உதவியுடனான ஊசிமூலமான சுவாசக்குழாய் மாதிரிப் பரிசோதனை.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum