புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
429 Posts - 48%
heezulia
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
29 Posts - 3%
prajai
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா சொன்ன பாடம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 6:02 am

பள்ளி முடிந்து பிள்ளைகள் வீடு நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தனர்.​ பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஆனந்தியோ அன்னநடை போட்டுக் கொண்டிருந்தாள்.​ மற்ற மாணவிகளுக்கெல்லாம் வீட்டிற்குப் போவது சந்தோஷமான சமாச்சாரம்.​ ஆனால்,​​ ஆனந்திக்கோ வீட்டை நினைத்தால் வேதனை வந்து விடும்.

ஆனந்தி படிப்பில் ஆர்வமுள்ளவள்.​ அதனால்தான் அதிக மதிப்பெண் எடுத்து வருகிறாள்.​ ஆனால்,​​ பள்ளியை விட்டு வீட்டிற்கு சென்றாலோ அவளது அம்மா வீட்டு வேலை செய்யச் சொல்லி அவளை பாடாய்ப்படுத்தி விடுவார்.

விலங்கியல் ஆசிரியை இன்று வீட்டில் வைத்து பிராக்டிக்கல் நோட்டில் இதயத்தின் நீள்வெட்டுத் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களை குறித்து வரச் சொல்லியிருந்தார்.​ படம் தெளிவாகவும்,​​ எழுத்து அழகாகவும் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டிருந்தார்.

ஆனந்திக்கு படிப்பு வரும் அளவிற்குப் படம் வரைய வராது.​ ""வெள்ளைத் தாளில் படத்தைப் போட்டுப் போட்டுப் பார்த்து கை திருந்திய பின்தான் நோட்டில் அதனை வரைய முடியும்.​ படம் வரைந்து பார்க்க வீட்டில் நேரம் வேண்டுமே!​ அம்மா வீட்டு வேலையை செய்யச் சொல்லி என்னை வாட்டி எடுத்துடுவாங்களே!'' என்று மனதிற்குள் எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தாள்.​ அவளைப் பார்த்த தாய் தமயந்தி திட்ட ஆரம்பித்து விட்டார்.

""ஏண்டி... ​ ஆனந்தி,​​ பள்ளி விட்டு மத்த பிள்ளைகளெல்லாம் எந்நேரமே வந்துட்டாங்க.​ உனக்கு ஏண்டி இவ்வளவு நேரம்.​ நேரத்தோடு வந்தா வீட்டு வேலையை சீக்கிரம் பார்த்துட்டு நீ படிக்கலாமே!​ சோம்பேறியா இருக்கிற உன்னை மேய்க்கறதுக்குள்ளே நான் படுற பாடு இருக்கே...'' என்று சலித்துக் கொண்டார் தாய்.

தாய் சொன்ன வார்த்தையால் மனதில் சங்கடப்பட்டுப் போனாள் ஆனந்தி.​ அம்மா சொல்லுவதற்கெல்லாம் இதுநாள் வரை பொறுமையாகவே இருந்தவள் இன்று பொங்கி எழ ஆரம்பித்து விட்டாள்.

""அம்மா...​ படிக்கறது என் வேலை.​ வீட்டு வேலை பாக்கறது உன் வேலை.​ நீ பார்க்க வேண்டிய வேலையை என்னை பார்க்கச் சொல்றீயே.​ நான் போட வேண்டிய படத்தை எனக்கு நீ போட்டு தருவியா?​ எனக்கு படிப்புதான் முக்கியம்.​ இனிமே நான் எந்த வீட்டு வேலையுமே செய்யப் போறதில்லே'' கோபப்பட்டாள் ஆனந்தி.

""ஏண்டி...​ உன்னை நான் எந்நேரமுமா வேலை வாங்கறேன்.​ காலையிலே ஒரு மணி நேரம்,​​ மாலையிலே ஒரு மணி நேரந்தானே வேலை வாங்கறேன்.'' ​

""இப்படி நீ வீட்டு வேலை வாங்கினா என் படிப்பு பாழாகிடாதா?​ ஒண்ணு என்னை படிக்கவிடு.​ படிப்பை விட உனக்கு வீட்டு வேலைதான் முக்கியம்னா என் படிப்பை நிறுத்திடு.​ நான் வீட்டிலேயே இருந்திடுறேன்.''

""ஏண்டி... ​ பெரிய பெண்ணாகிட்டோமேனு பெத்த தாயையே எதிர்த்து பேச ஆரம்பிச்சுட்டியா?''

""பின்ன என்னம்மா...​ படிக்கற என்னை சதா வேலை வாங்கிக்கிட்டிருந்தேன்னா என்னால நல்லா படிக்க முடியுமா?''

""ஆனந்தி...​ கெட்டிக்காரப்புள்ளே என்ன வேலை பார்த்தாலும் நல்லாவும் படிச்சுடுவா.​ சோம்பேறிதனமானவாதான் நல்லாவும் படிக்க மாட்டா...​ ஒழுங்காகவும் வேலை செய்யா மாட்டா.​ உன்னைக் கெட்டிக்காரியா ஆக்க ஆசைபடறேன்.''

""அதுக்காக இந்தச் சின்ன வயசிலே நான் வீட்டு வேலைய பார்க்கணுமா?​ என் படிப்பு கெட்டுடாது.''

""ஆனந்தி... ​ உனக்கு விளையாட்டு பருவம் முடிஞ்சி இப்போ விவரம் தெரியற பருவம் வந்திடுச்சு.​ அதனாலதான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்க.​ ​ நீ பொண்ணா பொறந்திட்டியே.​ அதனாலதான் புத்திமதி சொல்ல வேண்டியிருக்கு.​ வீட்டை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குத்தான் பொறுப்பு அதிகம்.''

""அது எப்படிம்மா?''

""ஆனந்தி...​ எனக்கு உடம்புக்கு முடியாம நான் ரெண்டு நாள் படுத்த போது நீங்க எப்படியெல்லாம் சங்கடப்பட்டீங்க?​ சரியா சாப்பிட முடியாம...​ நேரத்துக்கு நீ பள்ளிக்குப் போக முடியாம...​ அழுக்குத் துணியெல்லாம் அப்படி அப்படியே கிடக்க...​ எந்த வேலையும் பார்க்க முடியாம...​ போட்டது போட்டபடியே கிடந்ததே,​​ நினைவிருக்கா?''

""நீயில்லாம நாங்க சங்கடப்பட்டது நிஜம்தான்.​ அதுக்காக இப்பவே நான் வீட்டு வேலை பார்க்கணுமா?''

""ஆமாம்.​ இப்பவே நீ வீட்டு வேலைகளை படிச்சுக்கிட்டாதான் எனக்குக் கொஞ்சம் வேலை பளு குறையும்.​ உன்னுடைய எதிர்காலத்துக்கும் அது பிரயோசனமா இருக்கும்.''

""படிக்கவும் செய்யணும் வேலைப் பார்க்கவும் செய்யணும்னா எப்படிம்மா?''

""இந்த வயசிலே ரெண்டுமே முடியும்.​ அறிவு பலம் பெற படிக்கணும்.​ உடல் நலம் பெற உழைக்கணும்.​ அதுதான் உன் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும்.​ அதற்குதான் உனக்கு நான் இப்படி பயிற்சிக் கொடுக்கிறேன்.​ வீட்டு வேலை தெரிஞ்சுக்கிட்டா தனியா நிக்கலாம்.''

""அதனாலதான் இரண்டிலுமே உனக்கு நான் பயிற்சிக் கொடுக்கிறேன்.​ ஆணைவிட பெண்ணுக்கு பொறுப்பு அதிகம் என்கிறதாலேதான்,​​ நான் உனக்கு கொடுக்குற பயிற்சியை கொடுமையா நினைச்சிட்டியே.​ பெத்த தாய் தன் பெண்ணை கொடுமைப் படுத்துவாளா?​ பெத்தவங்க எது சொன்னாலும் அது பிள்ளைங்களோட முன்னேற்றத்திற்கு.

""நீ நல்லா வாழணும்.​ நல்ல பேர் எடுக்கணுமுன்னுதான் இத்தனையும் செய்யறேன்.​ என்னை நீ விரோதியா நினைச்சுக்கிட்டியே.​ பெத்தவங்க பிள்ளையை கண்டிக்கிறது தப்பா...​ நீ சொல்லு'' என்று கேட்டார் தமயந்தி.

""இல்லம்மா...​ நான் பேசுனதுதான் தப்பு.​ நீங்க என்னை கொடுமைப்படுத்துறதா நான் நினைச்சதுதான் தப்பு.​ பெத்த தாயையே தப்பா நினைச்சது நான் செய்த மிகப் பெரிய தப்பும்மா.''

""கல்வி பாடத்தை ஆசிரியர் நடத்துவார்.​ வீட்டுப் பாடத்தை அம்மாதான் நடத்துவார்னு இப்போ நல்லாவே நான் புரிஞ்சுக்கிட்டேன்.​ பெத்தவங்களோட எந்தச் செயலிலும் பிள்ளைங்களோட நலம் இருக்கும்னு இப்போ நான் நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன் அம்மா.​ இனிமே நான் நல்லா படிக்கவும் செய்வேன்.​ வீட்டு வேலைகளை தெரிஞ்சு உழைக்கவும் செய்வேன் அம்மா'' என்று சொன்ன மகளை அரவணைத்துக் கொண்டாள் தாய் தமயந்தி.​

மாசு. சௌந்தரராசன்



அம்மா சொன்ன பாடம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 29, 2010 8:20 am

நல்ல சமூக நலம் மிக்க கதை அண்ணா.
தங்கைகள் இதை பின் பற்றினால் சரி.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக