புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
2 Posts - 1%
prajai
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
2 Posts - 1%
சிவா
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
435 Posts - 47%
heezulia
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
30 Posts - 3%
prajai
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_m10அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Tue Apr 20, 2010 10:21 am

அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா
பிரசாத்



அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் P110
ம்மா..!
எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம்
தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.
இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.

பெண்குலத்துக்கென்றே இயற்கை
அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை! தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து,
உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே!

ஆனாலும், இந்தப் பெருமையை
அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா
வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக்
கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள்.

தாய்மை ரொம்ப சுலபமான விஷயமில்லைதான்.
கருவில் உதித்த சிசுவை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, உடலளவிலும் உள்ளத்து
அளவிலும் பல மாற்றங்களை சந்தித்து, அதைப் பிரசவிக்கும்வரை அவள் எதிர்கொள்ளும்
பிரச்னைகளும் ஏராளம்தான். சொல்லப்போனால், பிரசவம் என்பதே ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம்
போன்றதுதான். ஆனாலும், தாய்மைப்பேறு என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒவ்வொரு
பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்! பத்து மாதங்கள் பட்ட
கஷ்டமெல்லாம் பிரசவித்த நொடியில், தனது குலக்கொடியை பார்த்தமாத்திரத்தில் பஞ்சாகப்
பறந்துவிடுமே!

கருத்தரித்த நாளில் இருந்து,
பிரசவிக்கும் நாள் வரை இளம்தாய்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏராளம். அம்மாவிடம்,
மாமியாரிடம், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெளிவுபெற்றாலும், விடை சிக்காத எத்தனையோ
கேள்விகள் அவர்களின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும். அந்தக் கேள்விகள்
அனைத்துக்கும் முழுமையான விளக்கங்கள் தருவதும், தாய்மைப் பேறு பற்றிய
கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும்தான் இந்த இணைப்பின் நோக்கம்.

உங்கள் சார்பாக நாங்கள் கேள்விகளை
தொடுக்க, பத்து மாத பராமரிப்பு பற்றி விளக்கங்களும் டிப்ஸ்களும் தந்தார்கள்
மகப்பேறு மருத்துவத்தில் மிக நீண்டகால அனுபவம் பெற்ற டாக்டர் ஞானசெளந்தரி மற்றும்
மகளிர் சிறப்பு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் ஆகியோர்.

வாருங்கள்.. தாய்மைப்பேறின் மகத்துவத்தை
அறிவோம்!

கருத்தரித்திருப்பதை எப்படி
உறுதிப்படுத்திக் கொள்வது?

மாதவிலக்கு தள்ளிப் போவது
கர்ப்பத்துக்கான முதல் அறிகுறி. பிறகு, மருத்துவரை அணுகி சிறுநீர்ப் பரிசோதனை மூலம்
அது கர்ப்பம்தானா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம்.

முன்புபோல 40, 45 நாட்களெல்லாம்
காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, விலக்காக வேண்டிய நாளிலிருந்து இரண்டாவது நாளே
சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பமா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு மருத்துவம்
இப்போது முன்னேறியுள்ளது.

எந்த வயதில்
கருத்தரித்தால் தாய்க்கும் சேய்க்கும் நலம்?

இருபத்தோரு வயதிலிருந்து முப்பத்தைந்து
வயதுவரைதான் கருவுறுதலுக்கான சரியான காலகட்டம். அப்போதுதான் கருப்பை உள்ளிட்ட
அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும். கருவுறுதலுக்குக்
கைகொடுக் கும் வகையில், மாதாமாதம் ஆரோக்கியமான சினைமுட்டை சீறிவருவதும் இந்த
வயதில்தான்.

முப்பத்தைந்து வயதுக்குப் பிறகு
கருத்தரித்தல் என்பது தாய்க்கும் அசெளகரியம். குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க
அதிக வாய்ப்பிருக்கிறது.

மாதவிலக்குக்குப் பிறகு எந்தெந்த
நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் கரு தங்கும்?

மாதவிலக்கு ஆன தினத்திலிருந்து
பதினான்கு அல்லது பதினைந்தாவது நாள்தான் அந்த சுபயோகத் திருநாள். அப்பொழுதுதான்
சினைப் பையிலிருந்து சினை முட்டை வெடித்து வெளியே வரும். மாதத்துக்கு ஒரு முறை
வெளிவரும் இந்த சினை முட்டை ஒரே ஒரு நாள்தான் உயிரோடு இருக்கும். அதற்குள் தாம்பத்ய
உறவு நடந்தால்தான் பெண்ணின் வஜினாவில் சேரும் உயிரணு, சினை முட்டையோடு சேர்ந்து
கருவாகும்.

இதில் ஆச்சரியமான விஷயம்.. சினைமுட்டை
வெடிக்கும் அந்த நாளில் பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அதை வைத்தும்
இன்றுதான் ‘அந்த’ நாள் என்பதை கண்டுபிடிக்கலாம்.

ஆணும் பெண்ணும்
உடலால் இணையும் உறவுதான் கருத்தரித்தலின் முதல் நிலை.. ஓ.கே. அதன்பிறகு என்ன
நடக்கிறது?

உடல் உறவின்போது பெண்ணின் வஜினாவை
அடையும் ஆணின் விந்துவில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருக்கும். அவை அனைத்தும்
பெண்ணின் சினை முட்டையைத் தொட்டுவிட வேண்டும் என்று முட்டி மோதினாலும், கடைசியில்
வெற்றி வாய்ப்பு ஒரே ஒரு உயிரணுவுக்குத்தான். உடனே, மற்ற உயிரணுக்கள் உள்ளே நுழைய
முடியாதபடி சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிவிடும். இப்போது வெற்றி பெற்ற
உயிரணுவும், சினை முட்டையில் இருக்கும் உட்கருவும் கைகோர்க்க, பெண் கர்ப்பிணி
ஆகிறாள்.

பிறக்கும்
குழந்தை ஆணா? பெண்ணா? என்பது எப்போது, எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

பெண்குழந்தை பெற்றாள் என்பதற்காகவே
மனைவியை வெறுக்கும் கொடிய மனம்கொண்ட கணவர்களுக்கு இந்த பதில் அதிர்ச்சியைத் தரும்.
ஆமாம், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பதே கணவன்தான். சினைமுட்டை யின் உள்ளே
செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்தான் அதை தீர்மானிக் கிறது.. அதுவும்கூட
உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த நொடியிலேயே!

கர்ப்பம்
என்றதும் உடனே தலை காட்டும் மசக்கை எதனால் ஏற்படு கிறது?

புத்தம்புதிதாக ஒரு உயிரே உருவா கிறதே..
இதுபோன்ற அறிகுறிகள்கூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காதே! இந்தக் காலகட்டத்தில்
சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப் படும்வரை,
வாந்தி யும் மயக்கமும் ஏற்ப டும். இதைத்தான் மசக்கை என்கிறோம்.

கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம்
பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது
அதிகமாக இருக்கும்.

எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி,
டீ, ரசம்.. என்று அதுவரை ‘கமகமக்குதே’ என்று சொல்ல வைத்த பல வாசனைகளும் இந்த
சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். தொட்டதற்கெல்லாம் வாந்தி வரும்.

அதற்காக வயிற்றை சும்மா காய
விடக்கூடாது. அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும். வாய்க்கு என்ன
பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.

இந்தச் சமயத்தில் புளிப்புச்
சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய்,
புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச்
சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது.
டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும்
எடுத்துக்கொள்ளலாம். ‘எதற்கும் அடங்க மாட்டேன்’ என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே
போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், மருத்துவமனை யில் சேர்த்து ட்ரிப்ஸ்
ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.

இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ,
சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப்
பார்க்கவேண்டும். இன்னொரு விஷயம்.. சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி
தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம்
கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர
வாய்ப்பிருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக,
மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு.

அதிகமாக வாந்தி
எடுத்தால், குழந்தை தலை நிறைய முடியோடு பிறக்கும் என்கிறார்களே.. உண்மையா?

கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும்
எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி
அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக இப்படிச்
சொல்கிறார்களோ என்னவோ.. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த
தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானதுதான் என்றாலும், விடாமல்
துரத்தும் அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தை களாகவும்
இருக்கலாம்! ‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’ என்றாலும் இப்படி அதிகமாக வயிறு புரட்டும்!

முத்துப்பிள்ளை
கர்ப்பமா? அப்படியென்றால்?

கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக
திரண்டிருக் காமல் குட்டிக் குட்டி உருண்டை களாக மாறி, ஒன்றோடோன்று ஒட்டியபடி
கருப்பை முழுக்க நிறைந்திருப்பதுதான் ‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம். இது குழந்தையாக
உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்துவிடலாம்.

ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்களே.. அது என்ன?
எதனால் ஏற்படுகிறது?

முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக
இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம்,
ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும். கடைசியில்
கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்!

ஆரோக்கியமான கர்ப்பம் இப்படியிருக்கும்.
ஆனால் சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர
ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்கள்.

ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று
இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின்
தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது. நோய் தொற்று
காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது
ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு
ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட
குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும்.

அதுமட்டுமல்ல, இதனால் உயிருக்கே ஆபத்து
வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால்
என்னாகும்? முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உடனே
கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க
வேண்டிய விஷயமிது.

கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம்
அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.

மசக்கைக்கு
பின் வேறு ஏதாவது உடல்ரீதியாக பிரச்னை வருமா?

கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக
அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.

நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள்
சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக
சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில்,
பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு
கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும்,
மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை.

15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க
ஆரம்பிக்கும். கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு
நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை
மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட
பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.

தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை,
பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது
நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான
உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர்
இரத்த அழுத்தம் உள்ளவர் களுக்கு அதிக உப்பு ஆகாது.

சிலருக்கு இந்த சமயத்தில் கால்
வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக்
கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம்.
இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து
கொள்ளவேண்டும்.

ஆண் குழந்தை
என்றால் சீக்கிரமே பிறந்துவிடும் என்கிறார்களே, உண்மையா?

‘பத்து மாத பந்தம்’ என்று பெருமையாகச்
சொல்லிக் கொண்டாலும் கருப்பை ஒரு கருவைச் சுமப்பது, மொத்தம் ஒன்பது மாதம் ஒரு
வாரம்தான் (இதுகூட கரு உருவாவதற்கு முன்பு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து எடுத்துக்
கொள்ளப்படும் கணக்குதான்). இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று எந்த
வித்தியாசமும் கிடையாது. எந்தப் பாகுபாடும் இல்லாமல் இயற்கை இரு வகையான
குழந்தைகளையும் சமமான நாட்கள்தான் தாயின் வயிற்றில் இருக்கச் செய்கிறது.

‘ட்ரைமெஸ்டர்’
என்கிறார்களே.. அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்..

பத்து மாதம் என்று பொதுவாக சொன்னாலும்
கர்ப்ப காலம் மூன்று மூன்று மாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான்
ட்ரைமெஸ்டர் (Trimester) என்கிறோம்.

முதல் மூன்று மாதங்கள் வரை ‘முதல்
ட்ரைமெஸ்டர்’.. நான்காவது மாதத்திலிருந்து ஆறாவது மாதம் வரை இரண்டாவது
ட்ரைமெஸ்டர்.. ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை ‘மூன்றாவது
ட்ரைமெஸ்டர்!’

முதல் ட்ரைமெஸ்டரில் மசக்கையும், அதனால்
உண்டாகும் சோர்வும்தான் முக்கியமான விஷயம். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில்
மசக்கை நின்றுவிடும். வெகு சிலருக்குத்தான் அது மேலும் தொடரும். முதல்
ட்ரைமெஸ்டரில் டாக்டரிடம் செக்கப் செய்துகொண்டால், பொய் கர்ப்பம், முத்துப்பிள்ளை
கர்ப்பம் போன்றவற்றை தடுத்துவிடலாம்.

முதல் ட்ரைமெஸ்டரில் கரு, கருப்பையில்
அழுத்தமாக தங்கியிருக்காது என்பதால் அதிர்வுகள் கொஞ்சம் அதிகரித்தாலும் கரு
கலைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த காலகட்டத்தில் வெகுதூரம் பயணம் செய்வது
என்பது கூடவே கூடாது.

சரி… இந்த
ட்ரைமெஸ்டர் காலங்களில் கருவின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

முதல் மாதத்திலேயே கருவுக்கு நரம்பு
மண்டலம் உருவாகத் தொடங்கி விடும். நாற்பது நாட்களுக்குள் முதுகுத் தண்டு, இதயம்
ஆகியவை ஓரளவு உருவாகி, கருவுக்கான ரத்த ஓட்டமும் ஆரம்பித்துவிடுகிறது. கருவின் ரத்த
ஓட்டத்தை தாயோடு இணைக்கும் ரத்தக் குழாயின் மற்றொரு பெயர்தான் தொப்புள்கொடி.

இரண்டாவது மாதத்தில் கருவின் இதயம்
மெதுவாகத் துடிக்கவே துவங்கிவிடும். கை, கால்களும் காதுகளும் வடிவம் பெறுவது
இப்போதுதான். மூன்றாவது மாதம், முகத்தின் அங்கங்கள் முறையாக வளர ஆரம்பிக்கும்.

இரண்டாவது ட்ரைமெஸ்டர் தொடக்கத்தில்
அதாவது, நான்காவது மாதத்தில் வயிறு சற்றே மேடிடத் தொடங்கும். வயிற்றின் தசைகளும்
தோலும், கருவின் வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி விரிவடையும்.

(பிரசவத்துக்கு பிறகு, விரிவடைந்த தோல்
மறுபடியும் சுருங்கிவிடும். இப்படி எலாஸ்டிக் போல சுருங்கி விரிவதால்தான் குழந்தை
பெற்றுக் கொண்ட பெண் களுக்கு அடிவயிற்றில் வரிவரியாக கோடுகள் விழுகின்றன. கருவுற்ற
நான்காம் மாதத்திலிருந்து விட்டமின் ஈ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒன்றை
அடிவயிறு முழுக்கத் தடவி, அரைமணி நேரம் ஊற விட்டு, பிறகு குளித்தால், வயிற்றில்
வரிகள் விழாது. சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது
நல்லெண்ணெயில் கலந்து தடவினாலும் நல்ல பலன் இருக்கும்.

சில பெண்களுக்கு மார்பகம்கூட பெரிதாகி
பிறகு சிறிதாகும். அதனால் மார்பகங்களிலும் இதேபோன்று வரிகள் விழலாம். அதற்கும்
மேற்கூறிய ஆயில் மஸாஜ் பலனளிக்கும்)

தொல்லைகள் அற்ற கர்ப்ப காலம் என்றால்
அது இரண்டாவது ட்ரைமெஸ்டர்தான். மசக்கை நீங்கி, நன்றாக சாப்பிட முடியும். உற்சாகமாக
சுழல வைக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நன்றாக சுரப்பதால் இந்த ட்ரைமெஸ்டரில் பெண்களின்
முகம் பளீரென்று புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்!

குழந்தை ஆண், பெண் என்பதை
தீர்மானிக்கும் பிரத்யேக உறுப்புகள் வளர ஆரம்பிப்பது இந்த நான்காம் மாதத்தில்தான்!
ஐந்தாவது மாதத்தில், கிட்டத்தட்ட அரை குழந்தையாகிவிட்ட கரு, அசைந்து தன்னைச்
சுற்றியுள்ள பனிக்குட நீரில் சுகமாக நீச்சலடிக்க ஆரம்பிக்கும்.

ஐந்தாவது மாதத்திற்கு மேல் கருவின்
அதாவது குழந்தையின் உருவ, உள் உறுப்புகள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். புருவ
முடி வளர்ச்சி முதற்கொண்டு முகம் முழுமையாக உருப்பெறும்.

ஆறாவது மாதத்தில் அந்த குழந்தைக்கு
மட்டுமேயான தனித்தன்மையாக கை விரல்களில் ரேகைகள் அமையும்.

மூன்றாவது ட்ரைமெஸ்டரின் தொடக்கத்தில்
அதாவது, ஏழாம் மாதத்தில் வயிறு பெருத்து விடுவதால் சுலபமாக உட்கார்ந்து
எழுந்துகொள்ள முடியாது. மூச்சு வாங்கும். படுத்து எழுவது சிரமமாகத் தோன்றும்.
இடுப்பு, முதுகில் அவ்வப்போது வலிப்பது போல் இருக்கும். நேரத்துக்கு சாப்பிட்டு,
வாக்கிங் போய்வருவது நல்லது.

எட்டாவது மாதத்தில் லேசான அசதி
இருக்கும்தான். ஆனால், கை கால் வலி, தலை சுற்றல், கண் இருட்டிக்கொண்டு வருவது
மாதிரி பிரச்னைகள் இருந்தால், டாக்டரிடம் போகவேண்டும். ரத்தப்போக்கு இருந்தாலோ,
நீர் இறங்கிக்கொண்டே இருப்பது போலிருந்தாலோ, வலி அதிகம் இருந்தாலோ உடனடியாக
சிகிச்சை பெறுவது நல்லது.

மூன்றாவது ட்ரைமெஸ்டருக்கு முன்பே,
அதாவது ஏழாவது மாதத்துக்கு முன்பே கருவிலிருக்கும் குழந்தை வெளியேறினால் அது
‘அபார்ஷன்’. ஏழு மாதத்துக்குப் பிறகு, தவிர்க்க முடியாத நிலையில் வெளியேறினால்
அந்தக் குழந்தையை இன்குபேட்டர் மாதிரி இயந்திரங்களில் வைத்து காப்பாற்றலாம். ஆனால்
அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் வர
வாய்ப்பு அதிகம்.

குழந்தை வெளியே வர ஏதுவாக ஒன்பதாவது
மாதத்தில், தலைப் பாகம் கீழே இருக்கும்படி பொசிஷன் மாறுகிறது!

குழந்தையின்
அசைவுகள் பற்றி..?

ஐந்தாவது மாதத்திலேயே குழந்தையின் அசைவை
நன்றாக உணரமுடியும். அப்போதிருந்து ஏழாவது மாதம் வரை பனிக்குட நீரில் விஸ்தாரமாக
நீச்சலடிக்கும் குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதால் பின்னாளில் இடநெருக்கடி
காரணமாக சும்மா கை, கால்களை மட்டும் அசைக்கும்.

இதனால், ஐந்தாவது மாதத்தில் குழந்தை
உதைத்ததற்கும் இப்போது உதைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சிலர் இதனை
புரிந்து கொள்ளாமல், ‘குழந்தை அசைவு அவ்வளவாக இல்லை’ என்று கவலையோடு வருவார்கள்.
அதிலும் பிரசவ காலம் நெருங்க நெருங்க இந்தப் புகார்கள் அதிகரிக்கும்!

ஒன்பதாம் மாதத்தில் குழந்தையின்
துடிப்பு குறைவாக இருக்கும். கடைசி மாதத்தில் ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்சம்
ஐந்து முறை துடித்தாலே போதும். அதுவும் இல்லை என்று தோன்றினால், சிறிதுநேரம் இடது
புறமாக ஒருக்களித்துப் படுத்து கணக்கிட்டுப் பார்க்கலாம்.. அப்போதும் குறைவாக
இருந்தால் டாக்டரிடம் செல்வது நல்லது. ஒருவேளை குழந்தையை தொப்புள் கொடி
சுத்தியிருக்கலாம்.

கர்ப்ப
காலத்தில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாமா?

கரு உருவான முதல் மூன்று மாதங்கள்
மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்பே சொல்லியிருப்பது இதற்கும்
பொருந்தும். கரு, கருப்பையில் சரியாகப் பொருந்தியிருக்காது என்பதால் அந்த நேரத்தில்
அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் நிறைய. செக்ஸ் வைத்துக் கொள்வ தால்கூட சில சமயங்களில்
அபார்ஷன் ஆகலாம். அதனால் முதல் மூன்று மாதங்களில் அந்த உறவு வேண்டாமே..

அதேபோல், ஒன்பதாவது மாதத் திலும்
தாம்பத்ய உறவைத் தவிர்த்துவிடுங்கள். ‘இன்பெக்ஷன்’ ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்ப
தற்காகத்தான் இந்த அட்வைஸ்!

அப்படியானால்
மற்ற ஐந்து மாதங்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா?

எந்த பிரச்னையும் இல்லாமல் நார்மலான
கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் என்றால் அதிக அலட்டல் இல்லாமல் உறவு
வைத்துக்கொள்ளலாம். கருப்பையில் கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஏற்படும் பெண்கள்,
கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பெண்கள்
ஆகியோருக்கு இது பொருந்தாது. அப்படிப்பட்ட பெண்கள், பிரசவம் வரையிலுமே தாம்பத்ய
உறவைத் தவிர்ப்பது நல்லது.

கருவைச்
சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்கப் படுத்தால் கருவை நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்ளும்
என்கிறார்களே.. உண்மையா? எப்படி படுக்க வேண்டும்?

மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது
என்பது சரிதான். ஆனால், அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல. மல்லாந்த நிலையில்
படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை
அழுத்தும். இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ‘பி.பி’ இறங்கும். அதனால்
தலைசுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்க்கும்,
சேய்க்கும் நலம்.

குங்குமப்பூ
சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?

குழந்தைக்கு நிறம் தரும் சக்தியெல்லாம்
குங்குமப் பூவிடம் இல்லை. இதுதான் உண்மை. சிலருக்கு பாலின் வாடை பிடிக்காது. மசக்கை
சமயத்தில் அது இன்னும் அதிகமாக வயிற்றைப் புரட்டும். அதனால்தான் மாறுதலான மணம்
மற்றும் சுவைக்காக குங்குமப்பூவை பாலில் கரைத்துக் குடிக்கும் பழக்கம் வந்தது.
அதையும் குடிக்கமறுக்கும் பெண்களுக்கு என்ன செய்வது? அதனால்தான் குழந்தையின் கலர்
என்ற சொக்கவைக்கும் வார்த்தையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.

குழந்தைகளின் நிறத்துக்கு காரணம்
பரம்பரையாக வரும் மரபணுக்கள்தான்!

சாப்பாட்டு
விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் கர்ப்பிணிகள் எப்படி நடந்து
கொள்ளவேண்டும்?


கர்ப்பிணிகள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க
வேண்டியது சாப்பாட்டு விஷயத்தில்தான்.சும்மா இல்லை. இரண்டு உயிர்களுக்கும் சேர்த்து
சாப்பிட்டாக வேண்டுமே..

கால்சியமும் இரும்புச் சத்தும் மிகமிக
அவசியம். தினமும் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் இவை தவறாமல் இருக்க வேண்டும்.

தினம் ஒரு ஆப்பிள், வாழைப்பழம்
சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் வராமல் இருக்கும். அசைவம் சாப்பிடுபவர்கள் நாள்
ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம். மட்டன், சிக்கன், மீன் வகைகளை
சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் இரவில் வேண்டாம்.

சாப்பாட்டில் மட்டுமல்ல.. குடிநீர்
விஷயத் திலும் கவனம் தேவை. சுத்த மான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி
வடிகட்டி குடிப்பது நல்லது. இல்லாவிட்டால் அசுத்தமான நீரால் மஞ்சள் காமாலை போன்ற
பிரச்னைகள் வரலாம்.

சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. அப்படிப்
படுத்தால் நெஞ்சை அடைப்பதுபோல் அவஸ்தையாக இருக்கும்.

இரண்டு
பேருக்குச் சாப்பிட வேண்டுமே என்று ஊட்டமாகச் சாப்பிட்டு அதனால்
உடல்எடைஅதிகரித்தால்..?

அதிலும் கவன மாக இருக்க வேண்டும். நல்ல
உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் அதே சமயம் முடிந்த அளவுக்கு வேலைகள் செய்தும்,
நடை பயிற்சியின் மூலமும் உடல் எடை அதிகரித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மற்ற நாட்களை விட கர்ப்ப காலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடை கூடுதலாக இருக்கலாம்.
அதற்குமேல் அதிகரிக்கக் கூடாது.

கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே ரத்த
அழுத்தம் அதிகரிக்கும். எடை அதிகரித்தால் அந்த அளவு மேலும் கூடி பல்வேறு
பிரச்னைகளைத் தரும். பிரசவத்திலும் சிக்கல் வரும்.

சில பெண்களுக்கு, எட்டாம், ஒன்பதாம்
மாதங்களில் உடம்பில் நீர்கோத்து, கை கால்கள் வீங்கிவிடும். இவர்கள் உணவில் உப்பைக்
குறைத்துக் கொள்ளவேண்டும். பார்லியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சி
குடித்தாலும் உடல் நீர் சிறுநீராக வெளியேறி எடை குறையும்.

கர்ப்பம்
உறுதியானதுமே டாக்டர்கள் பட்டை பட்டையாக இரும்புச் சத்து மாத்திரைகளை அள்ளிக்
கொடுத்து தொடர்ந்து சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால், இரும்புச்சத்து மாத்திரை
சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும் என்ற ஒரு பேச்சு பரவலாக இருக்கிறதே?

கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும்
வதந்திகளில் இதுவும் ஒன்று. அதை நம்பாதீர்கள். ரத்த விருத்திக்காகக் கொடுக்
கப்படுவதுதான் இரும்புச் சத்து மாத்திரைகள். கர்ப்பிணிகள் அதிலும் குறிப்பாக இந்திய
கர்ப்பிணிகள் ரத்தசோகை நோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஃபோலிக் (folic) ஆசிட் பற்றாக்குறை
காரணமாக ஏற்படும் ரத்தசோகை நோயை இரும்புச் சத்து மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடுவதன்
மூலமே சரிப்படுத்தி விட முடியும்.

சரிவிகித உணவுகளைத் தவறாமல்
சாப்பிடுபவர்களாக இருந்தாலும், மேற்கொண்டு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை,
மருந்துகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

சிலருக்கு
கருப்பையில் புண் வருகிறதே.. ஏன்?

அதற்காகத்தான் கர்ப்பமான ஆறு முதல்
எட்டாம் மாதத்திற்குள் டி.டி எனப்படும் ‘டெட்டனஸ் டாக்ஸாய்டு’ தடுப்பூசியை இரண்டு
முறை கட்டாயம் போடச் சொல் கிறோம். பிரசவ சமயத்தில் தாய்க்கும், சேய்க்கும் கிருமித்
தொற்று ஏற்படாமல் தடுக்க வும் இந்தத் தடுப்பூசி உதவும்.

இரண்டு தடுப்பூசியும் முடிந்தபின்
அல்ட்ரா ஸ்கேனிங் செய்வது நல்லது. பிரசவ நேரத்தில் வரும் எத்தனையோ பிரச்னைகளை
முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்கு ஸ்கேனிங் மிக அவசியம். வயிற்றில் குழந்தை சரியான
நிலையில் தான் இருக்கிறதா என்று சந்தேகமின்றித் தெரிந்துகொள்ளவும் இது பயன்படும்.

கருவுறுதலுக்கு
முன் விசேஷ பராமரிப்பு எதுவும் தேவையா?

கருத்தரிக்கும் பெண்ணின் உடல் நிலை
சாதாரணமாக இருக்கும்பட்சத்தில், கருவுறுதலுக்கு முன் பிரத்யேகப் பராமரிப்பு எதுவும்
தேவையில்லை. ஆனால், சர்க்கரை நோய், வலிப்பு, இதயநோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள்
உள்ளவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் முன்பே, முழு உடல் பரிசோதனை
செய்து, மருந்துகள் எடுத்துக் கொண்டு, உடலை கருத்தரிக்க ஏற்ற நிலையில்
வைத்துக்கொண்ட பிறகே கருவுறுதல் நல்லது. இதனால் கர்ப்பகாலம் மற்றும் பேறுகாலத்தில்
ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். அவற்றைப் பற்றிகொஞ்சம் விளக்கமாகவே
பார்ப்போம்..

சர்க்கரை
நோய்
:
சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை
மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி சர்க்கரை நோய் நிபுணரும் தொடர்ந்து பரிசோதிக்க
வேண்டும். சிறுவயதிலிருந்தே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கர்ப்ப காலத்திலும்
இன்சுலின் கண்டிப்பாக தேவைதான்.

மாத்திரைகளை சாப்பிட்டுக்
கொண்டிருப்பவர் களும்கூட இன்சுலின் பயன்படுத்தினால் நல்லது.

ஏன் மாத்திரை வேண்டாம் என்றால்.. அதனால்
குழந்தைக்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மாத்திரையில்
இருக்கும் வீரியம் தாயிடமிருந்து குழந்தைக்கும் போகும்.ஆனால், இன்சுலின் அப்படி
குழந்தைக்குப் போகாது.

வளர்ந்த பிறகு அதாவது டீன்|ஏஜ் கால
கட்டத்தில் சர்க்கரை நோய்க்கு ஆளானவர்களாக இருந்தால் ஊசி, மாத்திரை இரண்டையும்
தவிர்த்துவிட்டு உணவு, உடற்பயிற்சி மூலமே சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவர
முயற்சிக்க வேண்டும்.

ஏற்கெனவே குடும்பத்தில் யாருக்கேனும்
சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் ஐந்தாம் மாதத்தில் ‘குளுகோஸ் டாலரன்ஸ் பரிசோதனை’
செய்து சர்க்கரையின் அளவைத் தெரிந்து அதற்கேற்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக உயர் ரத்த அழுத்தம்..
ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் (பி.பி)
இருப்பவர் களுக்கு அதன் பாதிப்பு ஏழாவது மாதத்திலிருந்துதான் தெரியத் தொடங்கும்.
கால் வீக்கம் முக்கியமான அறிகுறி. அடிக்கடி தலைசுற்றி படபடப்பு வரும்.
சாதாரணகர்ப்பிணிகளைவிட இவர்களுக்கு அடிக்கடி ரத்த

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Tue Apr 20, 2010 10:23 am

நிர்வாகிகளுக்கு முழு கட்டுரையையும் பதிய முடியவில்லை உதவி தேவை

indra devi d/o baktaru
indra devi d/o baktaru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 01/04/2010

Postindra devi d/o baktaru Tue Apr 20, 2010 12:46 pm

வெரி குட் டிப்ஸ் போர் ஆல் லேடி'ச

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Tue Apr 20, 2010 2:40 pm

அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் 678642 அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் 678642 அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் 678642



அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 20, 2010 2:44 pm

நன்றி நன்றி அன்பு மலர்



அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Aஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Aஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Tஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Hஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Iஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Rஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Aஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 20, 2010 2:46 pm

நல்ல,பயனுள்ள பதிவு அஜீம்.

அஜீம் முழு கட்டுரையும் பதிய முடியலை உதவுங்கல்ன்னு சொல்லி இருக்கார்.ஏதாவது செய்யுங்கப்பா.



அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Uஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Dஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Aஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Yஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Aஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Sஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Uஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Dஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் Hஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 20, 2010 3:05 pm

கட்டுரையின் தொடர்ச்சி:

இதய நோய்..
சிறுவயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் கருத்தரிப்பதற்கு முன்போ அல்லது கர்ப்பம் உறுதியான உடனேயோ டாக்டரிடம் தனக்கு இதய நோய் இருப்பதையும், அதற்காக சாப்பிடும் மருந்துகளையும் பற்றி தெளிவாக சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் கூடுதல் கவனத்தோடு அந்தத் தாயையும், அவள் வயிற்றில் வளரும் சிசுவையும் எந்த ஆபத்தும் இன்றி காப்பாற்ற முடியும்.
இப்போதெல்லாம் இதய நோய் உள்ளவர்கள்தான் என்றில்லை.. பொதுவாக கர்ப்பிணிகள் அனைவரையுமே ஈ.ஸி.ஜி, கார்டியாக் எக்கோ போன்ற இதயம் தொடர்பான பிரச்னை களைத் துல்லியமாக அறிவிக்கும் சோதனை களைச் செய்யச் சொல்கிறோம். மருத்துவத் துறையைப் பொறுத்தவரை,வருமுன் காக்கும் நல்ல விஷயமாகத்தான் இது இருக்கிறது.
வலிப்புபற்றி சொல்ல வேண்டும் என்றால்.. சிறுவயதிலிருந்தோ அல்லது மணமான பிறகோ வலிப்பு நோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை எடுத்து முதலில் வலிப்பை குணப்படுத்திவிட்டு, பிறகு கர்ப்பம் தரிக்கலாம் என்றுதான் பெரும்பாலும் நினைக் கின்றனர்.
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒரு முறை வலிப்பு வந்துவிட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் அது திரும்ப வரலாம். முழுக்க அதனை குணப்படுத்தி விட்டோம் என்று சொல்ல முடியாது. அதனால் வலிப்புக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டேதான் கர்ப்பம் ஆக வேண்டி இருக்கும்! குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்று வலிப்புக்கான மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தக்கூடாது. அது தாயின்உயிருக்கே உலை வைத்துவிடலாம்.
இவர்களுக்குப் பிரசவ சமயத்தில் டாக்டரின் அதீத கவனிப்பு தேவை. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் ‘பிரசவ வலி வரட்டும்.. பிறகு, மருத்துவ மனைக்கு போகலாம்’ என்று காத்திருக்காமல் பிரசவ தேதி இதுவாகத்தான் இருக்கும் என்று டாக்டர் குறிப்பிடும் நாளுக்கு ஓரிரு நாட்கள் முன்னமே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது.
வலிப்பு நோய் உள்ளவர் கள் கருவுற்றதும் மருத்துவ ரிடம் வரும்போதே, தனக்கு அந்நோய் உள்ளது என்று கூறிவிடுவது நலம். அப்படி சொல்லாமல் விடும் பட்சத்தில், பிரசவ சமயத்தில் வலிப்பு வந்தால் அது பிரசவகால வலிப்பா, இல்லை எப்போதும் வரும் வலிப்பா எனத் தெரியாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் குழப்பம் ஏற்படும்.
ஆஸ்துமா:இந்த பாதிப்பு உள்ளவர் களும் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஆஸ்துமா உள்ளவர்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்று எதிலெல்லாம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்களோ அதிலெல்லாம் கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். திருவிழா போன்ற நெரிசல் மிகுந்த இடங்களிலும், தூசி நிறைந்த இடங்களிலும் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அதையும்மீறி ஏதேனும் பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனை யுடன் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக டி.பி. எனப்படும் காசநோய்..
இந்த நோயை வந்த வேகத்திலேயே விரட்டும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறிவிட்டது. ஆனாலும் டி.பி-யால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான மருந்து சாப்பிடும் சமயத்தில் கருத்தரிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் டி.பி\க்கான மருந்துகளின் வீரியம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்!
கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற தொல்லைகளுக்கு வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? இதுபற்றி இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகிறதே..
பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் காய்ச்சல், தலைவலி என்று எந்த தொல்லை வந்தாலும் அதற்கான மருந்துகளை சாப்பிட மறுக்கிறார்கள், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில்! தானாக மருந்துக் கடைகளில் கேட்டு எதையாவது வாங்கி விழுங்குவதுதான் தவறே தவிர, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை. சொல்லப் போனால், அப்போது மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் விடுவதுதான் தவறு. தொந்தரவுகள் முற்றிவிடும்.
கர்ப்பகாலத்தில் என்ன பிரச்னை என்றாலும் உங்கள் உடல்நிலையை நன்கு பரிசோதித்த பிறகே மருத்துவர்கள் எந்த மாத்திரையும் கொடுப்பார்கள்.
காய்ச்சலை சரிப்படுத்த கர்ப்பிணி சாப்பிடும் மருந்தால் கருவுக்கு பாதிப்பு வராது. ஆனால், மருந்து சாப்பிடாமல் காய்ச்சலை வளரவிடும்போதுதான் அந்தக் காய்ச்சல் கிருமிகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்த நாளில் பிரசவம் நடைபெறும் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தாலும், மிகச்சரியாக இதோ இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதை கர்ப்பிணியே உணர்ந்து கொள்வது எப்போது?
பிரசவம் எப்போது நடக்கும் என்பதை எவ்வளவு அனுபவப்பட்ட டாக்டராலும் மிகத்துல்லியமாக சொல்ல முடியாது. கடைசி மாதவிலக்கு தேதியை மனதில் கொண்டு தோராயமாகத்தான் பிரசவ தேதி கணிக்கப்படுகிறது.
ஆனாலும், பிரசவத்துக் கான அறிகுறியாக இயற்கையே மூன்று விதமாக எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது. பிரசவ வலி, ஷோ, பனிக் குடம் உடைவது ஆகியவைதான் அந்த மூன்று அறிகுறிகள்.
பிரசவ வலி என்பது மாதவிலக்கு சமயத்தில் வருவதுபோல் இருக்கும். இடுப்பின் மேலிருந்து கீழாக வலி எடுக்க ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு வலிக்கும்.ஹார்மோன் சுரப்பு விகித மாறுபாடுதான்இதற்குக் காரணம்.
கருப்பையில் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து தலை நன்றாக இறங்கியதும் ஹார்மோன் சுரப்பு அளவு மாறுபடும். உடனே வலி ஏற்பட்டு பிறகு கருப்பையின் கழுத்து மெள்ள விரிவடையும். பிறகு, கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து மெள்ள மெள்ள தலை, நெஞ்சு என்று கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை வெளியே தள்ளப்படும்.
கருப்பை அளவுக்கு சுருங்கி விரியும் தன்மை உடலில் வேறு எந்த பாகத்திற்கும் இல்லை.
பத்து நிமிடம், இருபதுநிமிடம் என்று விட்டு விட்டுத்தான் பிரசவவலி வரும். அப்படி வருவதுதான் தாய்க்கும் நல்லது. குழந்தைக்கும் நல்லது. வலி வராத அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வலி ஏற்பட்டவுடன் இந்த ரத்த ஓட்டம் தடைபட்டு விடுகிறது!
சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறுவதுதான்‘ஷோ’ என்று சொல்லப்படுகிறது. கருப்பையின் கழுத்துப் பகுதி திறக்க ஆரம்பித் ததும் அங்கே இந்த திரவம் சுரக்கும்.
கருவிலிருக்கும் குழந்தை, கருப்பை வழியாக இறங்கத் தொடங்கியதுமே குழந்தையைச் சுற்றியிருக்கும் பலூன் போன்ற பனிக்குடத் தின் ஒரு பகுதியும் இறங்கும். சில சமயம் அந்த பலூன் பாகம் உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் நீர், பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதை புரிந்துகொள்ளாமல் சில பெண்கள் தங்களுக்கு அதிகப்படியான சிறுநீர் வெளியேறுகிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.
வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பனிக்குடம் உடைந்ததுமே மருத்துவ மனைக்கு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மொத்த பனிக்குட நீரும் வழிந்துவிடும். இது பிரசவத்தை சிக்கலாக்கி விடும்.
இந்தப் பனிக்குட நீர், இளநீர் மாதிரி இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். மாறாக, மஞ்சள் அல்லது பழுப்பு வண்ணத்தில் இருந்தால் உள்ளே குழந்தை மலம் கழித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியிருந்தால் இன்னும் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
வாரிசை வரவேற்க ஒரு தாய் உடலளவில் தயாராவது போல, மனதளவிலும் தயாராவது முக்கியம். அதிலும் பிரசவம் என்னும் அற்புதமான நிகழ்வை எதிர்கொள்ள சந்தோஷமும் ஆவலுமாகக் காத்திருத்தல் அவசியம். பிரசவத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதில் பாசிடிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மனதைக் குழப்பிக்கொள்ளாமல் எப்போதும் ரிலாக்ஸ்டாக இருக்கவேண்டும். நல்ல எண்ணங்களுடன் இருத்தல், நல்ல படங்களை பார்த்தல், இனிய இசை கேட்டல் போன்றவை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவும். அழுமூஞ்சி சீரியல் களை இந்த சமயத்திலாவது பார்க்காமல் தவிர்க்கலாமே!
புத்தம்புது உயிர் ஜனிக்கும் இனிய நிகழ்வுதான் பிரசவம். அதைப் பரவசத்தோடு எதிர்கொள்ள வேண்டும். பிரசவம் என்பதே வலியுடன் கூடிய நிகழ்வு தான் என்பதை கூடியவரை நினைவில் வைத்துக்கொண்டால் பிரசவ நேர பயத்தையும் டென்ஷனையும் தவிர்க்கலாம்.
கர்ப்ப காலம் முடிந்து, பேறுகாலம் வந்துவிட்டது என்றால், முதலில் வலி அரை மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வரும். பின்னர் அது அதிகரிக்கும். வலி என்றாலுமே, 45 நொடி மட்டுமே வலி இருக்கும். பிறகு சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த வலி வரும். இரு வலிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட்டு ரிலாக்ஸ் செய்தால், கர்ப்பப்பை வாய் சுலபமாக திறந்து, பிரசவம் எளிதாக, சுகமாக நடைபெற உதவும்.
பிரசவ வலி ஆரம்பித்ததும் கருப்பையின் வாய் திறந்து குழந்தை வெளியே வர குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆகும். அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கருப்பையின் வாய் திறக்கவில்லை என்றால், வலியை அதிகப்படுத்த ஆக்ஸிடோஸின் டிரிப் தரப்படும். அப்புறமும் வலி அதிகமாகவில்லை என்றால் டாக்டரே பனிக்குடத்தை உடைத்துவிட்டு பிரசவம் பார்ப்பார்.
கருப்பை வாய் திறந்து குழந்தையின் தலை தெரிந்தவுடன் குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வரும் வேலைகள் ஆரம்பமாகும். அந்த நேரத்தில், குழந்தை வெளியே வர இயலாத அளவுக்கு பெண்ணுறுப்பில் சிக்கல் இருப்பின் வஜினாவை லேசாகக் கத்தரித்து துளை விரிவாக்கப்படும். ‘எபிசியோட்டமி என்று சொல்லப்படும் இந்த காரியத்தை பெரும்பாலும் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்குத்தான் செய்வார்கள்.
குழந்தையின் தலை தெரிய ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள் குழந்தை பிறந்துவிட வேண்டும். கர்ப்பிணி எந்த அளவுக்கு முக்கி முக்கிக் குழந்தையை வெளித்தள்ள முயற்சிக்கிறாரோ அந்த அளவுக்கு குழந்தை சீக்கிரமாகவும் சுலபமாக வும் வெளியே வரும்.
சவுக்கால் அடித்ததுபோலவும், உலகிலுள்ள அத்தனை வலிகளையும் ஒருசேர போட்டு அழுத்தியது போலவும் பிரசவ வலி கஷ்டப்படுத்தினாலும், அத்தனையும் தான்பெற்ற குழந்தையை முதன்முதலாக பார்க்கும் அந்த மந்திர நிமிடத்தில் மாயமாக மறைந்துவிடும்.
ஆர். ஹெச். டைப் என்கிறார்களே.. அப்படியென்றால் என்ன?
ரத்தத்தில் A, B, O, AB என நான்கு முக்கியமான வகைகள் உண்டு. இதுதவிர, ரத்தத்தில் Rh பாசிட்டிவ், Rh நெகட்டிவ் என்ற இருபிரிவுகளும் உண்டு. இதில் Rh நெகட்டிவ் உள்ள தாய் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்.
அம்மா Rh நெகட்டிவ்வாக இருந்து, அப்பா Rh பாசிட்டிவ்வாக இருந்து குழந்தை Rh பாசிட்டிவ்வாக உருவாகி விடுகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். பிரசவ நேரத்தில் அம்மாவின் ரத்தத்தில் அவருடைய ரத்தத்துடன் தொடர்பில்லாத ‘ஆன்டிபாடி’ உருவாகிறது. அதாவது குழந்தை கருப்பையில் விட்டுச் செல்கிற பாசிட்டிவ் ரத்தத்தால் இது உருவாகிறது.
முதல் பிரசவத்தின்போதுதான் குழந்தை இப்படி ஒரு ‘ஆன்டிபாடி’யை விட்டுச் செல்வதால் அப்போது குழந்தைக்கோ அம்மாவுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. அந்த தாய் மீண்டும் கருவுறும்போது இரண்டாவது குழந்தைக்குத்தான் மிகப் பெரிய பாதிப்புகளை அது உண்டாக்குகிறது.
இதைத் தவிர்க்க, முதல் குழந்தை பிறந்ததுமே குழந் தைக்கு ரத்தப் பரிசோதனை செய்து அதன் வகையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் ரத்தம் பாசிட்டிவ் வகையாக இருக்கிற பட்சத்தில் இதற்கென்றே இருக்கிற விசேஷ ஊசியை 24 மணி நேரத்துக் குள் அந்த தாய்க்குப் போட்டால் இந்த ஆன்டிபாடி உருவாகி இரண்டாவது குழந்தைக்கு எதிரியா காமல் தடுக்க முடியும்.
முதல் டிரைமெஸ்டரில் ரத்தப் பரிசோதனை செய்யும்போதே அம்மாவின் ரத்த வகையைத் தெரிந்து கொண்டால் இந்த விஷயத் தில் கவனத்துடன் இருக்க முடியும்.
Rh பாசிட்டிவ் அம்மாக்களுக்கு இந்தப் பிரச்னையெல்லாம் இல்லை. அதேபோல், தாய் Rh நெகட்டிவ்வாக இருப்பினும் குழந்தையும் Rh நெகட்டிவ்வாக இருந்துவிட்டால் பிரச்னையில்லை.
இரண்டாம் முறை அம்மாவாக போகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
முதல் பிரசவத்தில் அந்த அனுபவம் புதிது என்பதால் எப்படியிருக்குமோ என்ற பயம்தான் பிரதானமாக இருக்கும். அடுத்ததில் அந்த பயம் தெளிந்திருக்கும் என்பதால் அவ்வளவு டென்ஷன் இருக்காது.
முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதேநேரம், முதல் குழந்தை சிசேரியன் என்றால் அடுத்ததும் சிசேரியனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது சுகப்பிரசவமாக ஐம்பது சதவிகித வாய்ப்பு உண்டு (பெல்விஸ் சிறியதாக இருந்தால் வேறு வழியேஇல்லை. இரண்டாவது குழந்தை யையும் அறுவைசிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும்).
முதல் பிரசவத்தில் சிக்கல் இருந்திருப்பின், ‘ப்ரீ ப்ரெக்னென்சி கவுன்சிலிங்’ செய்து கொள்வது நல்லது. அப்படி செய்யும்போது, முன்னெச் சரிக்கையாக தாய் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வழி முறைகள் விளக்கப்படும். பாதுகாப்பான பிரசவத்துக்கு அது உதவும்.
இரண்டாவது முறை கருத்தரிக்கும் தாய்மார்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் முதல் குழந்தை. தனக்கு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், எங்கே தன் தாயின் கவனமும் பாசமும் மொத்த மாய் அந்தக் குழந்தைக்கே போய்விடுமோ என்ற ஏக்கம் முதல் குழந்தையை ஆக்கிரமிக்க தொடங்கும்.
அந்த சமயத்தில் தாயுடன் தந்தையும் அந்தக் குழந்தையிடம் கூடுதல் பரிவு காட்ட வேண்டும். `நீதாண்டா செல்லம் வீட்டுக்கு மூத்த கன்னுக் குட்டி. வரப்போற பாப்பாவை நீதான் பத்திரமா பாத்துக்கணும்.
அது உன்னை அண்ணா/ அக்கானு கூப்பிடுமே.. அதுக்கு எல்லாம் சொல்லித்தரப் போறதே இந்த தங்கக்கட்டிதானே’ என்ற ரீதியில் பேசி, மனதளவில் தயார் செய்ய வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய், `பாப்பாக்கு என்ன பேர் வைக்கலாம்.. சொல்லு கண்ணு’ என்றெல்லாம் உற்சாகப்படுத்தினால், முதல் குழந்தை ஜோராக உங்களைவிட ஆர்வமாக தனது உடன்பிறப்பை வரவேற்கத் தயாராக இருக்கும்.
9 மாதங்கள் வரை குறிப்பிடத் தகுந்த உடல் மாற்றங்களோ, பிரச்னைகளோ இல்லாதவரை, வழக்கமான தடுப்பூசி, ஸ்கேனிங் போன்றவை தொடரலாம்.
பிரசவத்துக்கு முந்தின நாள் வரை அலுவலகத் துக்குச் சென்று வேலை பார்த்த தாய்மார்கள் எத்தனையோ பேர் உண்டு!
தொகுப்பு: ஜி.கோமளா, நா.பிரேமா
——————————————————————————-
நன்றி:-டாக்டர் ஞானசெளந்தரி மற்றும் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்.
நன்றி:-அ.வி


அஜீம் மிக நீளமான கட்டுரைகளை இரண்டு பதிவாக பதியுங்கள் முதல் பாதியை பதிவாகவும் இரண்டாம் பாதியை பின்னேட்டமாக பதியவும் அப்போதுதான் முழுமையான கட்டுரையை ஒரே பதிவாக பதியமுடியும்..!




kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 20, 2010 4:29 pm

அனைவரும் அறிய வேண்டிய தகவல் இது நன்றி தோழரே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக