ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அர்த்தமற்ற பயங்கள் (phobia) Poll_c10அர்த்தமற்ற பயங்கள் (phobia) Poll_m10அர்த்தமற்ற பயங்கள் (phobia) Poll_c10 
Dr.S.Soundarapandian
அர்த்தமற்ற பயங்கள் (phobia) Poll_c10அர்த்தமற்ற பயங்கள் (phobia) Poll_m10அர்த்தமற்ற பயங்கள் (phobia) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமற்ற பயங்கள் (phobia)

4 posters

Go down

அர்த்தமற்ற பயங்கள் (phobia) Empty அர்த்தமற்ற பயங்கள் (phobia)

Post by சிவா Tue Apr 20, 2010 9:23 pm

அர்த்தமற்ற பயங்கள் (phobia)


·போபியா என்பதற்கு ஏதோ ஒரு இடத்தை, பொருளை, அல்லது ஒரு நிலைமையைப் பற்றி ஏற்படும் ஒரு அர்த்தமில்லாத, தேவையற்ற பயம். இது ஏன், அல்லது எப்படி ஏற்படுகிறதென்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாது. சில சமயம் சிறு வயதில் ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்ச்சியால் ஏற்படலாம். அல்லது ஏதோ ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துவிடுமோ என்ற கற்பனையான பயத்தில் கூட ஏற்படலாம். தெனாலி படத்தில் கமல் சொல்லுவாரே எலியைப் பார்த்தால் பயம், புலியைப் பார்த்தால் பயம், அதைப் பார்த்தால் பயம் , இதைப் பார்த்தால் பயம் என்று அடுக்கிகொண்டே போவாரல்லவா? அது கூட இந்த ·போபியா வகையைச் சேர்ந்ததுதான்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தப் பொருளையோ, அல்லது நிகழ்ச்சியையோ நேரிடையாக சந்திக்கும்போதோ அல்லது சந்திக்க நேரிடுமே என்ற எதிர்பார்ப்பிலோ இந்தப் பயம் ஏற்படும். இந்த மாதிரியான ·போபியாக்கள் சகஜமானதுதான். உதாரணமாக சிலருக்கு கூட்டங்க¨ளைக் கண்டால்- ஒருவிதமான பயம் ஏற்படும். எங்கே தான் அதில் நசுங்கிவிடுவோமோ என்பது போல அனாவசியமான கற்பனைப் பயங்கள் . அதனால் ஒரு திகில் ஏற்படுகிறது. அப்போது அவர்களுக்கு மூச்சுத்திணறல், வேர்த்துவிடுவது , படபடப்பு போன்ற உடல் ரீதியான அடையாளங்கள் ஏற்படும்.

·போபியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக தாங்கள் அச்சப்படுகிற நிகழ்ச்சியையோ அல்லது பொருளையோ முடிந்தவரை தவிர்க்கவே முயல்வார்கள். சிலவிதமான ·போபியாக்கள் அன்றாட வாழ்கையைப் பாதிக்காது. ஒருவருக்கு பாம்பைப் பற்றிய பயமென்றால் அவருடைய தினசரி வாழ்வை அது பாதிக்காது. ஆனால் கூட்டங்களைப் பார்த்தால் பயம் என்ற ·போபியா இருந்தால் நிச்சயமாக அது ஒருவருடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். இதை அவர்களால் எப்படித் தவிர்க்க முடியும்? அத்தகைய நிலைமைகளைத் தவிர்க்க அல்லது தப்பிக்க முயன்று, அது முடியாமல் அந்த சம்பவத்தை எதிர்கொள்ளும்போது அவர்களுடைய நடுக்கம் மிகவும் அதிகமாகிறது.

அதேபோல சிலருக்கு திறந்த வெளிகளைக்கண்டால் பயமாக இருக்குமாம். [அகோரா போபியா). பெரிய பெரிய மைதானங்கள், ஏர்போர்ட் டெர்மினல் போன்ற இடங்களைப் பார்த்தால் அவர்களுக்கு பயம். இதனால் முடிந்தவரை அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க முயல்வார்கள். ஆனால் இது எப்படி சாத்தியம்? இத்தகைய தினசரி வாழ்கையைப் பாதிக்கும் பயங்கள் தங்களுக்குள் ஒரு எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவித்து அவர்களுடைய அன்றாட வாழ்கையைப் பாதிக்கிறது.

ஆமாம், இத்தகைய ·போபியாக்களை எப்படி சமாளிப்பது?

இத்தகைய·போபியாக்கள் மிகத்தீவிரமாக இருந்தால் அதை மனோதத்துவ ரீதியில் மருத்துவரிடம் கவுன்சலிங் பெறுவது அவசியமாகும். எதற்காகப் பயப்படுகிறார்களோ அந்த நிகழ்ச்சியையே எதிர்கொள்ள வைப்பது அல்லது பயத்தைத் தரக்கூடிய அந்த எண்ணங்களை எப்படி சமாளிப்பது என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவது என்று இந்த மனோதத்துவ சிகிச்சை தேவைக்கேற்றார்போல வேறுபடும்.

உதாரணமாக ஒருவருக்கு எட்டுக்கால் பூச்சியைப்பற்றிய ·போபியா இருக்கிறது என்றால் எட்டுக்கால் பூச்சியின் படத்தை முதலில் பார்க்கச்செய்தல், அடுத்ததாக ஒரு ப்ளாஸ்டிக் மாடலைக் காண்பித்தல், பின்பு ஒரு சின்ன பூச்சியை ஒரு ஜாடிக்குள் வைத்து பார்க்கச்செய்தல், தொடச்செய்தல் என்பதுபோல படிப்படியாக அவர்களது பயத்தை போக்குவது ஒரு உளரீதியான திட்டம்.

அதே போன்று ஒருவருக்கு விமானப் பயணத்தைப்பற்றிய பயம் இருக்கலாம். விமானம் நொறுங்கி விழுந்து விடுமோ என்ற பயம். அப்போது அவர்களுக்கு " நீங்கள் முன்னால் எவ்வளவு முறை விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்கள் அப்போதெல்லாம் ஒன்றும் நேரவில்லையல்லவா? என்பதுபோல நம்பிக்கை தருகின்ற உரையாடல்கள்.

இதைப்போல அவர்களுடைய ·போபியாவின் தன்மையையும் தீவிரத்தையும் பொருத்து அவர்களுடைய சிகிச்சை முறையை மனோதத்துவ மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள். இது Cognitive behavior therapy என்று அழைக்கப்படுகிறது.

மன நல மருத்துவரிடம் செல்ல விரும்பாதவர்களுக்கு கீழே தரப்பட்டுள்ள புத்தகத்திலுள்ள பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும்:

"Mind Over Mood: Cognitive Treatment Therapy Manual for Clients" - Christine Padesky, Dennis Greenberger Guilford Press

இது தவிர ·போபியாவைப் போக்க ஹிப்னோதெரபியும் பலன் தரும் சிகிச்சையாகக் கருதப்படுகிறது.

இப்போது சில முக்கியமான ·போபியாக்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

விமானப்பயணம் - ஏரோ·போபியா
மிருகங்கள் - ஜு·போபியா
இருட்டு - ஸ்காட்டோ·போபியா
மரணம் - தனடோ·போபியா
நாய்கள் - சைனோ·போபியா
கூட்டங்கள் - டெமோ·போபியா
மூடப்பட்ட இடங்கள் - க்லஸ்ட்ரோ·போபியா
நெருப்பு - பைரோ·போபியா
தனிமை - ஆட்டோ·போபியா
திறந்தவெளி-அகோரா·போபியா
இதய நோய்- கார்டியோ·போபியா

இன்னமும் இதைப்பற்ற்றி எழுதிக்கொண்டே போனால் உங்களுக்கு , எங்கள் எழுத்தைப் பற்றிய ·போபியா வந்துவிடும். ஆமாம், அதற்கு பத்மஜனோ·போபியா என்று பெயர் வைக்கலாமோ?

- பத்மஜன்


அர்த்தமற்ற பயங்கள் (phobia) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அர்த்தமற்ற பயங்கள் (phobia) Empty Re: அர்த்தமற்ற பயங்கள் (phobia)

Post by அன்பு தளபதி Tue Apr 20, 2010 9:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அர்த்தமற்ற பயங்கள் (phobia) Empty Re: அர்த்தமற்ற பயங்கள் (phobia)

Post by kalaimoon70 Tue Apr 20, 2010 10:18 pm

இன்னமும் இதைப்பற்ற்றி எழுதிக்கொண்டே போனால் உங்களுக்கு , எங்கள் எழுத்தைப் பற்றிய ·போபியா வந்துவிடும். ஆமாம், அதற்கு பத்மஜனோ·போபியா என்று பெயர் வைக்கலாமோ?


அஹா (வடிவேலு படம் ) எப்படி எல்லாம் எழுதுகிறார்கள் பாருங்க .. ஜாலி ஜாலி


நல்ல தகவல் நன்றி தல.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அர்த்தமற்ற பயங்கள் (phobia) Empty Re: அர்த்தமற்ற பயங்கள் (phobia)

Post by சபீர் Tue Apr 20, 2010 11:55 pm

kalaimoon70 wrote:இன்னமும் இதைப்பற்ற்றி எழுதிக்கொண்டே போனால் உங்களுக்கு , எங்கள் எழுத்தைப் பற்றிய ·போபியா வந்துவிடும். ஆமாம், அதற்கு பத்மஜனோ·போபியா என்று பெயர் வைக்கலாமோ?


அஹா (வடிவேலு படம் ) எப்படி எல்லாம் எழுதுகிறார்கள் பாருங்க .. ஜாலி ஜாலி


நல்ல தகவல் நன்றி தல.
சியர்ஸ் சியர்ஸ் புன்னகை புன்னகை புன்னகை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அர்த்தமற்ற பயங்கள் (phobia) Empty Re: அர்த்தமற்ற பயங்கள் (phobia)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum