புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
90 Posts - 71%
heezulia
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
255 Posts - 75%
heezulia
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நச்சுப் பாம்பு Poll_c10நச்சுப் பாம்பு Poll_m10நச்சுப் பாம்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நச்சுப் பாம்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 6:16 pm

புதிய வேலையில் சேர்ந்து, இரு நாள் கழித்து, அதிகாலையில்தான் அந்தக் கனவு வந்தது. அவனது அறையின் வாயிலின், வராந்தாவின் ஓரத்தில் ஒரு கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்தது. அது கனவு போலும். ஒரு காட்சி, அவ்வளவுதான். அக் காட்சி வரும்போது, கண்மூடிய நிலையில், சற்றே இழுத்தாற்போல், மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. நிச்சயம் அது கொடிய விஷப்பாம்பு என்ற உணர்வும் அக் காட்சியினூடே உணரப்பட்டிருந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். ஏதோ ஆபத்து நடக்கப் போகிறது. சமீபத்தில்தான் தந்தை மரணமடைந்திருந்தார். முன்பொருமுறை இப்படி ஒரு பாம்புக் கனவு வந்தது. அவை குட்டிப் பாம்புகள். விஷமற்ற பாம்புகள், காலில் கொத்துகிறது ஒன்று, அதை விரட்ட, கையில் கொத்துகிறது இன்னொன்று. அதன்பின் ஒரு வாரம் காய்ச்சலால் துன்பமடைந்தான். அதிகாலையில் அவன் மிகவும் குழப்பமடைந்திருந்தான்.

அவனுடன் மேலும் இருவர் தங்கியிருந்தனர். ஒருத்தர், பி.எச்.இ.எல். அருகிலுள்ள ஒரு தனியார் இண்டஸ்ட்ரியில் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசராக உள்ளார். இன்னொருவர் பெயர் சம்பத். காட்டூரைத் தாண்டியுள்ள, கிளினீங் பவுடர் கம்பெனியில் கிளர்க்காகப் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர். திருவெறும்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் 4-ஆவது மாடியில் அந்த அறையிருந்தது. எல்லோருமே அங்கு தங்க ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஓடியுள்ளன. சம்பத்திற்கு வயது 22. பி.எஸ்சி முடிக்கவில்லை. பெயிலான பாடங்களையும் படிப்பதற்காக, திருச்சியில், இந்த வேலை வாங்கி சம்பத்தின் குடும்பத்தினர், அவனை இங்கு சேர்த்திருந்தனர். இன்னொருவர் பெயர் காந்திமுத்து, குடும்பஸ்தர். அவனும், சம்பத்தும் ஏறக்குறைய ஒத்த வயது. அவன் அருகிலுள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் புதிதாகச் சேர்ந்திருந்தான். அவனும் சம்பத்தும் அடிக்கடி பேசிக் கொள்வது உண்டு. சிறிதளவு நட்பும் உண்டு. குடும்பஸ்தர் அவ்வளவாகப் பேசுவதில்லை. அவனுடைய இலக்கிய நண்பர் சாந்தகுமார் பக்கத்து அறை. அவருடன் சில கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்தனர். நிறைய முறை யோசித்துக் குழம்பியிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

அவன் படபடவென்று கிளம்பி, கல்லூரிக்குச் செல்ல வண்டியைப் பிடித்தான். அங்கிருந்து ஏறக்குறைய முப்பது நிமிடம் ஆகும். பெரிதும் அவன் பிரயாணங்களை விரும்புவது உண்டு. நிறையச் சிந்திக்க முடியும். ஜன்னலோரம் அமர்ந்திருந்த அவன் மீது சட்டென குளிர் காற்று அறைந்தது. அவன் அந்தக் கனவைப் பற்றியே யோசித்தான். அவன் கனவுகளை நம்புபவன். இக் கனவு எப்படி பலிக்கப் போகிறதோ? அறைக்கு வெளியே நச்சுப்பாம்பு ஊர்கிறது. அப் பாம்பு எப்படி நான்கு மாடி கடந்து வந்தது? நச்சு என்பது தெளிவாகத் தெரிந்தது. இப்போதுகூட அந்தப் பயங்கர உணர்வின் கணத்தை அவனால் திரும்ப உணர முடிந்தது. நச்சுத்தன்மை துரத்துகிறது? 'பாம்பு எப்போதும் மனுக்குல எதிரி'. பாம்பு ஆதிகாலம் தொட்டே நம்மைத் துரத்தி வருகிறது. குட்டையான கட்டுவிரியனை ஒரு முறை கிராமத்தில், அவர்கள் அடிக்கும்போது பார்த்திருக்கிறான். அவர்கள் கூறியுள்ளார்கள் கட்டுவிரியன் கொடும் நச்சுடையது. நிறையப் பாம்புக் கதைகளும், சம்பவங்களும் நினைவில் வந்தன. திண்டுக்கல்லில் ஒரு வீட்டில் (மண் வீடு) ஒரு குழந்தை, இரவு கொடிய அரவம் (நல்ல பாம்பு) தீண்டி இறந்தது. அவ் வீட்டில் அக் குழந்தை இறந்து ஒரு வாரம் கழித்து, அதன் தாய், தந்தை இருவரும் அதே அரவம் தீண்டி மரித்தனர். ஒரே நாளில் இரு பாடைகளும் கொல்லப்பட்ட பாம்பும் போயின. அவ் வீட்டின் எலி வளையில், அப் பாம்பு இருந்து வந்ததாம். வீட்டிற்குள் நச்சுடன் வசித்து வருகிறார்கள் மனிதர்கள்.

அவன் கல்லூரியிலிருந்து வேலை முடிந்து திரும்பி அறைக்கு வந்து கொண்டிருந்தான். சம்பத் அன்று சீக்கிரமாகக் கம்பெனியிலிருந்து வந்துவிட்டான். உடம்பு சரியில்லை. உடம்பு வலிக்கிறது என்றான். நான் ஏதாவது டாக்டரிடம் காட்ட வேண்டியதுதானே? என்றேன். அவன் அமிர்தாஞ்சன் வாங்க அருகே மெடிக்கல் கடைக்குச் சென்றான். சில்லரையாக ரூ.10 கேட்டான். அமிர்தாஞ்சன் வாங்கிக் கொண்டான். எப்போதும் சாப்பிடும் டீக்கடையில், டீ குடித்தோம். வழக்கமாகப் பேசும் கலகலப்பில்லை. காய்ச்சல் அடிக்கிறது என வெளிப்படையாக, உறுதியாகக் கூறினான்.

அறையில், காந்திமுத்து ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். பல குடும்பப் பொறுப்புகள். சம்பத் கட்டிலில் படுத்துக் கொண்டான். சாந்தகுமார் வந்தார். சில இலக்கிய விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர், அவனிடமிருந்து பல விஷயங்களைக் கேட்டறிவார். சம்பத் கட்டிலில் படுத்துக் கொண்டான். சம்பத்தும், அவரும், அவனை, 'குருவே' என விளையாட்டாக அழைப்பதுண்டு. இருவரும் உணவருந்த ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு வந்தனர். வரும் வழியில், அவனது பழைய மாணவனைச் சந்தித்தான். 'சார், உங்க ரூம்க்கு போய்ட்டுத்தான் வரேன், இப்பதான் சாப்ட போனோம் - என்றான் அவன். உங்க ரூம் மேட், என்னா சார் அப்படி? என கைகளை விரித்துக் காட்டியபடி கேட்டான். சும்மா, ஒன்றுமில்லை, காய்ச்சல், உடம்பு வலி என்றான் அவன். அப்புறம் மாணவன் போய் விட்டான். அவன் அறைக்கு வந்தபோது சம்பத் உறங்கிக் கொண்டிருந்தான்.

ஏதோ மாத்திரை. உடம்பு வலிக்கு சாப்பிட்டிருப்பான் என நினைத்துக் கொண்டே படுக்கையில் படுத்து கண் மூடியபோது, கட்டுவிரியன் நினைவுக்கு வந்தது. வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. ஆகவே ·பேன் அதிக வேகத்தில் வைக்கப்படும். சம்பத்தும், காந்திமுத்தும் வெளி வராந்தாவில் தரையில் படுக்க இம்மாதம் முதல் ஆரம்பித்திருந்தனர். சம்பத் உடல்நிலை சரியில்லையாதலால் ·பேனை குறைவான வேகத்தில் வைத்துக் கொண்டான். காந்திமுத்துவும் இல்லை. அன்று வராந்தாவில் யாரும் படுக்கவில்லை. அவன் சட்டென எழுந்து வராந்தாவை நோட்டம் விட்டான். எந்த வித ஆபத்திற்குமான அறிகுறியில்லை. கட்டுவிரியன் எப்படி இவ்வளவு மாடி ஏறி வர முடியும்? சிறு வயதில் கேட்ட, இளவரசன் கதை ஞாபகத்திற்கு வந்தது. அந்த இளவரசன் நாகம் தீண்டியே சாக வேண்டுமென சாபம் பெற்றவன். அரசன் எவ்வளவு முயன்றும், அவனைக் காப்பாற்ற இயலாமல் அவன், கடலில் உள்ள கப்பலில், வைக்கப்பட்டும் கூட, எலுமிச்சைப் பழத்திலிருந்து நாகம் தீண்டிச் சாவான். சாக வேண்டி சாபம் பெற்றது அவனா? யாவரும் சாபம் பெற்றவர்களே? மேலே விட்டத்திலிருந்து கட்டுவிரியன் விழலாமோ? மேலே நோக்கினான். பின்பு ஆசுவாசப்படுத்திக் கொண்டு படுக்கைக்குச் சென்றான். இருள் அங்கு கவிந்தது. உறக்கம் கூடக் கண நேர மரணமே, யாரோ கூறியது ஞாபகம் வந்தது.

அதிகாலையில் அவன் கண் விழித்தபோது ஏறக்குறைய 4.45. சம்பத் வெளியே நின்று கொண்டிருந்தான். கிளம்புங்க சார், சரியாகயிருக்கும். (ஏனெனில் கல்லூரி காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும்). அவன் உடம்பு பரவாயில்லையா, என்றான். வேணா லீவு போட்டுக்கங்க என்றபடியே குளிக்கச் சென்றான். சம்பத் அன்றிரவு ஓரிரு முறை எழுந்திருந்தது நினைவுக்கு வந்தது. அவன் வெளியே உலவியது போலிருந்தது. மேலும், வாளியை உருட்டிய சத்தம் கேட்டது. அவன் வயிறு கெட்டிருக்கக்கூடும் என நினைத்தபடியே குளித்துவிட்டுக் கிளம்பி, சம்பத்திடம் கூறிவிட்டுப் புறப்பட்டான். சம்பத் கட்டிலில் படுத்திருந்தான்.



நச்சுப் பாம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 6:16 pm

அன்று மாலை 5 மணி போல் அறைக்குத் திரும்பியபோது சம்பத் படுத்திருந்தான். டாக்டரிடம் காட்டினீர்களா? என்றான். ஆம், என்றபடியே சில மாத்திரைகளை படுத்திருந்தபடியே காட்டினான். ஊருக்குப் போங்க, பக்கந்தானே, அவன் 'ஆமா சார்' என்றான். அதைப் பெரிதாக அவன் விரும்பவில்லை.

சாந்தகுமார் வந்தார். அவர் எப்போதும் சற்று அதிகமாகவே அன்பு காட்டுபவர். காலையில் ஆபீசுக்குப் போயிட்டு, பின்பு மதியம் லீவு போட்டுவிட்டு, காட்டூரில் ஒரு டாக்டரிடம் காட்டியதைக் கேட்டறிந்தார். இருவரது விசாரிப்புக்கும்தான் எத்தனை வேறுபாடு, மாத்திரை மற்ற விஷயங்களை அக்கறையுடன் கேட்டறிந்தார். பின்பு குருவே, ஏதாவது கூறுங்கள் என்றார். சம்பத்தும், பார்த்துக் கொண்டிருந்தான். அவன் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தான். வேலைக்குப் போனதால் நிறைய மாணவர்கள் வந்து விட்டதால், எங்களை விட்டுவிடாதீர்கள் என்றார் சாந்தகுமார். நீங்க எல்லாரும், நல்ல சிஷ்யர்கள் இல்லை. ஆகவே உங்களை இனிமேல் விட்டுவிடப் போகிறேன், என்றான். விளையாட்டாக சம்பத் சிரமப்பட்டுச் சிரிக்க முயன்றான். அவனால் சிரிக்க முடியவில்லை. சாந்தகுமார் ·பேனை ஆ·ப் செய்யட்டுமா என்றார். அவனுடைய குளிரை அவரால் உணர முடிந்திருந்தது. சம்பத் சாப்பிடும்போது, இரண்டு இட்லி, சர்க்கரையுடன் வாங்கி வரும்படி சாந்தகுமாரிடம் கேட்டுக் கொண்டான். அவர் என்னிடம் சாப்பிடப் போகும்போது, அழைப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். பின் அவன் படித்துக் கொண்டிருந்தான். சம்பத் உறங்கினான். 8.30 மணியாகியும் சாந்தகுமார் வரவில்லை. அவனுக்கு எரிச்சலாக வந்தது. சற்று நேரம் கழித்து அவர் வந்தார். அவனை மறந்துவிட்டு, பிற நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு வந்திருந்தார். கையில் சம்பத்திற்கான பொட்டலம். அவனுக்கு மேலும் எரிச்சலாயிற்று. சாரி சார், என்றார். எரிச்சலை அடக்கியபடியே அவன் சாப்பிடச் சென்றான். சாப்பிட்டு விட்டு திருநெல்வேலிக்கு அவனது பேராசிரியருக்குப் போன் செய்யக் காத்திருந்தான். அந்த பூத்தில் ஏறக்குறைய 1/2 மணி நேரம் இதில் விரயமானது. போய்ப் படுக்க வேண்டும் என திருப்பினான் லாட்ஜை நோக்கி.

லாட்ஜ் பரபரப்படைந்தது போலிருந்தது. வாட்ச்மேனைக் காணவில்லை. ஒருவேளை சாப்பிடப் போயிருக்கலாம். இரண்டாவது மாடி ஏறிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து அறையிலிருக்கும் பையன் இறங்கி வந்து கொண்டிருந்தான். என்ன சார், உங்க ரூம் மேட்டிற்கு? குழம்பியபடியே ஏன் என்னா? என்றான். உங்களுக்குத் தெரியாதா? இப்பத்தான் சாப்பிட்டுட்டுப் போன் பண்ணிட்டு வரேன், ஒன்னுந்தெரியாது என்றான். சம்பத்துக்கு திடீரென கை, கால் வெட்ன மாதிரி இழுத்து, அப்படி வெளியே போன சத்யா, பாத்துட்டு ஓடி அவனைக் கட்டிலிலிருந்து விழாம தூக்கினாரு. மூச்சு வேற இழுக்குது, உடனே எல்லாருமே சேர்ந்து தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடியிருக்காங்க. சாந்தகுமார்? அவரும்தான் கூட போயிருக்காரு. கீழே இறங்கினப்ப உடம்புலே சூடேயில்லை. பின்னாடி கைலி நனைஞ்சு ஈரமாயிருந்தது. அனேகமாக முடிஞ்சிரும், என்றான்.

அவனுக்குப் பகீரென இருந்தது. ஒன்றும் புரியவில்லை. ரூமிற்குக் வேகமாகச் சென்றான். சம்பத் பெட்டியைத் திறந்து, மதியம் காண்பித்த டாக்டர் சீட்டை எடுத்தான். டைரி கிடந்தது. எதற்கும் பார்த்துக் கொண்டான். அவனது ஊர் வ.புதூர் என்றிருந்தது. சில பேப்பர்கள். சில இடங்களில் ''மஞ்சுளா'' ''மஞ்சுளா'' என எழுதியிருந்தது. வேற சில பேப்பர்களில் ''நம் அன்பு மட்டும் உண்மை'' அது உலகிற்குத் தெரியாது. புரியாது. அது உலகின் பார்வைக்குக் கேவலம்'' என கிறுக்கல்கள் இருந்தது. அவனது கம்பெனி அட்ரசைக் குறித்துக் கொண்டான். அந்தப் பேப்பர்களையும் பத்திரமாக வைத்துக் கொண்டான். பெட்டியில் குறிப்பிடும்படி வேறயில்லை. கொடியிலிருந்த சட்டை, பேன்ட் பைகளிலும் எதுவுமில்லை. கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டான். பேன்ட் மாட்டிக் கொண்டு, திகிலான இதயத்துடன், ஆஸ்பத்திரிக்குச் சென்றான். அருகிலிருந்த ஒரு சாதாரண ஆஸ்பத்திரி வாசலில் நிறையப் பேர் நின்றிருந்தனர். சாந்தகுமார் எங்கே? என்று கேட்டபடியே உள்ளே சென்றான். யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. சார் என்றபடியே அவனை நோக்கி வந்தார் சாந்தக்குமார். முடிஞ்சு போச்சு என்றார். சம்பத் எங்கே? சற்று தூரத்திலிருந்த பெஞ்சைக் காட்டினார். அருகே செல்ல பயமாகயிருந்தது. மரணமா? உறக்கமா? மயக்கமா? இரு மாதம் முன்புதான் அப்பாவின் மரணம். அவனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. கிழ நர்சு அது முடிஞ்சு போன கேஸ், இடத்தைக் காலி பண்ணுங்க, பெரிய டாக்டர் வந்தா திட்டுவாரு எனக் கத்தினாள். சாந்தகுமார், புதுசா வந்த லேடி டாக்டர்தான் பாத்துச் சொன்னாங்க. அவங்க ரொம்பப் பயப்படுறாங்க. இப்பதான் படிச்சு முடிச்சுருப்பாங்க போல. கிழவி இரைந்து கொண்டிருந்தாள். சத்யாவும் பிற நண்பர்களும் வந்தனர். வெளியே கார் நின்றிருந்தது. கூட்டமாகயிருந்தது. அனைவரும் சம்பத்தைத் தூக்கி காரில் ஏற்றினர். கூட்டம் அங்கங்கே பிரிந்தது. ஒவ்வொருவருக்கும் நிறையக் கருத்துக்கள். நிறையப் பேச்சுக்கள். ஆஸ்பத்திரிக்கு வெளியிலிருந்தோம். அனேகமாக அனைவரும் உயிர் போனதாகவே கூறினர். ஒரு ஆறுதலுக்காகத்தான் சம்பத்தை எடுத்துப் போயுள்ளனர். மாடியிலிருந்து இறங்கும்போதே முடிந்துவிட்டது, என்றனர்.

சாந்தகுமாரும், அவனும் மீண்டும் அறைக்குச் சென்று பார்த்துவிட்டு, கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு திரும்பினர். அவன் இறக்கக்கூடாது என்றே மனம் எதிர்பார்த்தது? யார் மற்ற வேலைகளைச் செய்வது? வேலைக்குச் சேர்ந்து 3 நாளே ஆகிறது. சம்பத் வீட்டிற்கு யார் பதில் சொல்வது? ஒரே பையன் வேறு, சாந்தகுமாரிடம் அந்தப் பேப்பர்களைப் பற்றிக் கூறினான். ஆஸ்பத்திரிக்கு அருகிலேயே பஸ் ஸ்டாண்டு இருந்தபடியால், அங்கங்கு இருந்த கூட்டம் அவர்களை நோக்கி வந்தது. ஒவ்வொருவரும் ஒரு கருத்துக் கூற, கூற எரிச்சலும், கோபமும் வந்தது. பஸ்சில் ஏறி எங்கு போவது? மணி 10.30 ஆகிவிட்டது. ஜங்ஷனுக்கா? அல்லது வேற வந்த இடத்துக்கு? ஒரு 15 நிமிடம், பல இடங்களிலிருந்து போன் செய்தோம். உருப்படியாக எதுவும் தெரியவில்லை. ஒரு வழியாகச் சம்பத்தை ஏற்றிச் சென்ற கார் திரும்பியது. விசாரித்ததில், சம்பத் இறந்தது உறுதியாகிவிட்டது. காட்டூரில் ஒரு டாக்டர் கூறியுள்ளார். அவர்கள் காட்டூரில் உள்ளனர். இரவு நேரங்களில், பஸ்சில் இதே காட்டூருக்குச் சினிமாவுக்குச் சென்றதுண்டு. மனம் கிலி பிடித்திருந்தது. சொல்ல இயலாத உணர்வுக் குழப்பங்கள். மரணம் மிகச் சமீபத்தில் ஒவ்வொரு பிரயாணமும் வேறுபட்டது. மேலும் உறுதியான முடிவுகளுடையது.

காட்டூரில் இறங்கியவுடன் தூரமாகச் சத்யாவும் பிறகும் எதிர்கொண்டனர். தூரமாக ஒரு வீட்டின் வாசலில் சம்பத் படுக்க வைக்கப்பட்டிருந்தான். போக்குவரத்தின்போது வெளிச்சம் படும்போது தெளிவாகச் சம்பத் தெரிந்தான். அவன் உறங்குவது போலவேயிருந்தது. எழுந்து வர மாட்டானா? இனி வரப் போவதை எப்படிச் சமாளிப்பது? போலீஸ், கேஸ் என ஆகுமோ? அவனது ரூம் மேட் என்ற வகையில் பொறுப்பு அதிகம். காந்திமுத்து வேறயில்லை. என்ன செய்வது? சத்யா, சம்பத்துடன் பணிபுரிந்த பக்கத்து அறை நண்பரிடம் கூறியுள்ளார். ஜி.எச்.சிற்கு, ஆம்புலன்சுக்குப் போன் செய்துள்ளார். மணி 11.30 ஆகிவிட்டது. காரில் கொண்டு வந்தவுடன் மதியம் பார்த்த அதே டாக்டர் எதிர்பட்டதால் காட்டியுள்ளனர். அவர் உடனே 'ஹார்ட் அட்டாக்' இறந்து போய் 1 மணி நேரம் ஆகிவிட்டது. கொண்டு போய் விடுங்கள், என்று வீட்டிற்குச் சென்று கதவை அடைத்துவிட்டார். யார் பிணத்துடன் இருப்பது என போய் விட்டார். கார் டிரைவர் உடம்பை இறக்கு என கத்தியுள்ளான். இல்லையெனில் 11/2 லட்சம் கொடு, என்றானாம். பிணம் சென்ற வண்டியில் யார் பயணிப்பார்கள். நடு ரோட்டில் போட்டுவிட்டு ஓட்டிக் கொண்டு போய் விட்டான். டாக்டர் வீட்டு வாசலில், டாக்டருக்குத் தெரியாமல் படுக்க வைத்துள்ளனர். இவர்கள் தூரமாக உட்கார்ந்துள்ளனர். யாவரும் பிணத்தை விட்டு ஓடுகின்றனர். சம்பத்தை - உடம்பை - பிணத்தை விட்டு ஓடுகின்றனர். இறப்பதை விட, இதைப் போல் இறக்கக்கூடாது. உற்றார் உறவினர் யாருமற்று இப்படித் தெருவில் என்ன பாவமோ? யார் பாவி? யார் பாவியில்லை?. சம்பத்தின் தாய்க்கு, அவன் மேல் உயிராம். யாரை எப்படி எதிர்கொள்வது? அவனுடன் வேலை பார்க்கும் சிலர், மேலதிகாரிகளிடமும், வீட்டிற்கும் தகவல் தெரிவிக்க அனுப்பப்பட்டுள்ளனர். வீட்டில் 'சீரியஸ்' என அழைத்து வர ஆள் போயுள்ளது.



நச்சுப் பாம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 6:16 pm

12.30 போல் ஜி.எச்.சிலிருந்து ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் பிணம் என்பது தெரிந்ததும், போய் விட்டனர். திட்டிக் கொண்டே மேலும் வந்த செலவுக்கு ரூ.50 வாங்கிக் கொண்டனர். அருகிலிருந்த சிமென்ட் கட்டையில் உட்கார்ந்தனர். ஆன்மா எங்கேயிருக்கும்? மேலே வட்டமிடுகிறதா? விசாரணைக்குப் போயிருக்குமா? இருளில் மேலிருந்து ஏதோ பார்ப்பது போல் குத்தியது. பளீரென அவ்வப்போது சம்பத்தின் முகம் தெரிந்து மறைகிறது. ஒளி வரும்போதெல்லாம் சம்பத்தினைத் தெளிவாக ஒருமுறை நோக்கினான். உறக்கம்தான் அது.

சம்பத் பணிபுரியும் கம்பெனியின் ஒரு பார்ட்னர் காரில் வந்தார். நிலைமையை விளக்கினோம். உடனே ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்யப் புறப்பட்டார். நாங்கள் தனித்து விடப்பட்டோம். தூரமாக சம்பத் 'சாரி' என்பது போல் பட்டது. அவன் சாதுவானவன்தான். இவ்வளவு படித்துவிட்டு, ஒரே ஆண் பிள்ளையாய் இருந்துவிட்டு, குடும்பத்தைப் பார்க்க வேண்டிய சமயத்தில் இறந்துவிட்டான். ஏன் இந்த 22 வருட வாழ்வு? இதன் அர்த்தம்? இதன் நோக்கம்? இவனின் பெற்றோர்களின் பாவமா? இவனுடைய பாவமா? அப்படியென்ன சாவுக்கேதுவான பாவம்? விதிதான் என்பதா? இரண்டாம் ஆட்டம் படம் முடிந்து ஜனங்கள் வந்தனர். ஒரு போலீஸ்காரர் வேறு. பயம் பிடித்துக் கொண்டது. நல்ல வேளையாய் அவர் நேரே போய் விட்டார். டாக்டர் வீட்டின் வாசலில் பிணம். அவர் வெளியே வந்தால்? மேலும் பிரச்சினைதான்.

சற்று நேரத்தில் ஒரு பெண் கைக் குழந்தையுடனும், இரு ஆண்களுடனும் டாக்டரைத் தேடி வந்தனர். அவர்கள் வீட்டு வாசலில் போய் அழைப்பு மணியை அடித்தனர். யாவரும் சம்பத் அருகே. நாங்களும் போனோம். 'லைட்' எரிந்தது. டாக்டர் வெளியே வந்தார். தூக்கக் கலக்கத்துடனே கதவைத் திறந்தார். சம்பத்தை, வியாதியுள்ள ஒருவன் தூங்குகிறான் என அவர்கள் நினைத்து அவனைக் கடந்து சென்றனர். டாக்டர் அதிர்ஷ்டவசமாக அவனைப் பார்க்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அவர்கள் திரும்பினர். விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. மறுபடியும் கடந்து சென்றனர். டாக்டர் வந்தார். எதையும் கவனிக்காமல் கேட்டைச் சாத்திவிட்டுப் போய் விட்டார். 'அப்பாடா' என இருந்தது.

கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. சம்பத்தை நண்பர்கள் அதில் ஏற்றினர். பின்பு அவர்கள் வீட்டிற்குச் சென்ற ஆள் திரும்பக் காத்திருந்தனர். குக்கிராமம் உள்ளே செல்ல பஸ் கிடையாது. நேரம் ஆகலாம். யார் இந்த மஞ்சுளா? நம் அன்பு உலகின் பார்வைக்குக் கேவலம். ஆனால் உண்மையான அன்பு. ஆக இது பெண் சம்பந்தப்பட்டது. நிச்சயமாகக் காதல் இராது. காதலிப்பது ஏன் உலகின் பார்வைக்குக் கேவலம்?

சம்பத்தின் உலகம் நமக்குத் தெரியவில்லை? அங்கே பெண் இருக்கிறாள். அன்பு இருக்கிறது. 'கேவலம்' இருக்கிறது. அவர்கள் விளையாட்டாகப் பெண்களைப் பற்றிக் கேலி பேசுவது உண்டு. சம்பத்தும் நிறைய விஷயங்கள் பேசியதுண்டு. அவனிடம் சம்பத், தனது குடும்ப விஷயங்களைக் கூறியுள்ளான். அவனுக்கும் அப்பாவுக்கும் பெரிய உறவு ஒன்றுமில்லை. அவனது அம்மாதான் எல்லாம். தங்கைக்குச் செய்ய வேண்டிய கடமை இது பற்றியும் பேசியுள்ளனர்.

சம்பத் அதிகாலையில் தினமும் டைரியில் ஏதோ எழுதுவது போல் தோன்றும். சில நேரங்களில் ஆழ்ந்த சிந்தனை வயப்படுவதும் போலும் தெரியும். இதையெல்லாம் கவனித்த, அவன் சம்பத்திடம், உங்க மனசை கஷ்டப்படுத்தும் ஒரு பிரச்சினை இருக்கு என்றான். சம்பத் ஆச்சரியமாக, எப்படித் தெரியும்? 'அதாயாமில்லை'. பின்பு அவன் சில காரணங்களையும், அவனது பேச்சுக்களையும் வைத்து உண்மை என உறுதியாக நிரூபித்தான். சம்பத் ஒத்துக் கொண்டான். அவனது கம்பெனியில், அவனது நெருங்கிய நண்பனுக்குத்தான் பிரச்சினை, அவனுக்கில்லை என்றான். அவன் நண்பனும், ஒரு பெண்ணும் அன்பாகப் பழகுகின்றனர். அவள் திருமணமானவள். ஒரு ஆண் குழந்தை நான்கு வயதில் உண்டு. இருவரும் மிக நெருங்கி பழகும் அன்புடையவர்கள். ஆனால் தவறான நோக்கமில்லை. அவளின் கணவன் கம்பெனியின் மற்றொரு பிரிவில் வேலை செய்கிறான். இந்த அன்பைக் கம்பெனி முழுதும் தவறாக எடுத்துக் கொண்டு அவதூறாக, கேவலமாகப் பேசுகின்றனர். படிக்காத தொழிலாளிக்கு இதெல்லாம் புரிவதில்லை. அன்பை, நட்பை கேவலமாகப் பேசுகின்றனர். இருவரும் அருகருகே அமர்ந்திருப்பார்கள். ஒரே பிரிவு, ஒரே அறை; இதை எப்படித் தீர்ப்பது என தெரியவில்லை! என்றான்.

சுருக்கமான தீர்வு எனில் யாராவது ஒருவர் அல்லது இருவரும் கம்பெனியை விட்டுப் போவதுதான் என்றான் அவன். சம்பத் அவனது கூற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள இயலாமல் பார்த்தான். நாமிருப்பது தமிழ்நாட்டில் - திருச்சியில். மக்களின் மனம் குறுகிய கண்ணோட்டத்திலேயேதான் இயங்கும். தவறாகத்தான் யாவரும் பேசுவர். சமூக நியதி அப்படி. ஒவ்வொருவரின் வாய் வழியாக இது புதிதாக வருபவர்களுக்கும் பரவும். இதை நிறுத்த முடியாது. அவர்களிருவரும் நட்பை நிறுத்தினாலும் இது தொடரும். இம் மாதிரியான ஒரு பொது இடத்தில் இதைத் தவிர்க்க இயலாது. அவர்களில் ஒருவர் கம்பெனியை விட்டுப் போனாலுமே இது தொடரத்தான் செய்யும். அப்படி உண்மையான அன்பிற்கு அவசியம்தான் என்ன இப்போது? நிச்சயமாக இது இருவருக்கும் ரொம்பத் தேவைதானா? அவளுக்குக் கணவன், குழந்தைகளை மீறி அவனிடம் அன்பு வர, உண்மையான அன்பு மட்டுமா காரணம்? அவனுக்கு வேற ஆண் நண்பர்கள் கம்பெனியில் இல்லையா? அப்படி அவள் எதைக் கொடுக்கப் போகிறாள்? உண்மையான அன்பிற்கும் மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு, கவர்ச்சி இருவருக்குமே இருக்கத்தான் செய்யும்? என்றான். இடையிடையே விவாதம் நடந்தாலும் இதுதான் சுருக்கம். ஒருவேளை அந்த ஆண் நண்பன் சம்பத்தாக இருக்குமோ?



நச்சுப் பாம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 6:17 pm

மணி 2.30 தூரமாய் ஒரு பஸ் நின்றது. சிலர் இறங்கினர். அவனுக்கு உதறல் எடுத்தது. எதைச் சொல்வது? யாரை எப்படிச் சமாளிப்பது? பயம் அதிகமாகியது. அருகே நெருங்கினர். கம்பெனி ஆளும் கூட வந்தான். சத்யாவும், பிறரும் நெருங்கினர். சத்யா, சாந்தகுமார் அமைதியாக நின்றனர். அவர்கள் சம்பத் எங்கே? என்றவாறே நெருங்கிவிட்டனர். அவர்களிருவருக்கும் நாக்கு குழறி, ஒருவாறாக வண்டியைக் காண்பித்தனர். அவள் என்னாது என்..ம் என்றவாறே வீறிட்டு அலறினாள். சம்பத்தின் அப்பா, ''டே சம்பத்து'' என்று கத்தியது ஒரு பெரும் காளை கத்தியது போல் இரவெங்கும் ஒலித்தது. இருவரும் தலை தலையாய் அடித்து, கதறி மண்ணில் புரண்டனர். கொடுமை, கொடூரம் இதையெல்லாம் காண! அந்தக் கணங்களை எழுத்தால் எழுதயியலாது. கூட வந்த சிலருடன் சத்யா விஷயத்தைக் கூறி ஒருவாறாக வண்டி ஏற்றினர். அவள் சம்பத்தின் அம்மா வண்டியில் ஏற, ஏற்ற பட்டபாடு, அந்த அழுகையை இதயம் உள்ள எவராலும் பார்க்க முடியாது. நல்ல வேளையாக ஒரு இளைஞர் வந்திருந்தவர் உதவினார். சின்னம்மா, சின்னம்மா என்றார். வாயைப் பொத்திக் கொண்டார். கூடவே அணைத்துக் கொண்டார்.

வண்டியில் அவன் மட்டும் டிரைவருடன் முன்னே அமர்ந்து கொண்டான். பின்னால் சத்யா, சாந்தக்குமார், மற்றவர்கள், சம்பத்துடன் அமர்ந்திருந்தனர். ஒரே கத்தல், அழுகை, ஒப்பாரி. அவனால் எதையும் யோசிக்க இயலவில்லை. முன் சீட்டிலிருந்தது ஆறுதலாகயிருந்தது. அழுகையை விட சம்பத்துடன் எப்படிப் பிரயாணிப்பது? ஏனோ அதை நினைத்தாலே கிலி பிடித்தது. அவள், ஏண்டா? எம் புள்ளையக் கொன்னுட்டாங்கடா. உடம்பு சரியில்லைன்னா பெத்தவங்ககிட்ட அனுப்ப வேண்டியதானே ஏன்னு கேளுடா? என்று கத்திக் கொண்டே வந்தாள். ''எம் புள்ளையக் கொன்னுட்டாங்களே'' என அடிக்கடி கத்தி மாரில் அடித்துக் கொண்டாள். அவர் அமைதியாகயிருந்தார். திடீரென கத்தினார். ஒருமுறை அவரும் வேலையாள் ஒருவரும், சம்பத்தைத் தேடி வந்திருந்தனர். சம்பத் அப்போது கம்பெனியிலிருந்து வரவில்லை. துருவித் துருவி சம்பத்தைப் பற்றி விசாரித்தார்கள். அவன் தப்பா எடுத்துக்காதீங்க, உங்க பையனை நீங்க சந்தேகப்படறீங்களா? என கேட்டு விட்டான். அவர் மழுப்பினார். பின்பு அவனைப் பற்றி விசாரித்தார். அவனது குடும்பச் சூழல், அவனது பொறுப்புகள் பற்றிக் கூறினான். அவர் மிகவும், அவனை நம்புவதாகக் கூறினார். சம்பத்தை, அவனை நம்பி விட்டுச் செல்வதாகவும், சம்பத்தைத் திருத்தும்படியாகவும் கூறினார். சம்பத்தும் வந்து விட்டான். வீட்டிற்கு ஒருமுறை வாங்க தம்பி, என அனைவரும் புறப்பட்டனர். சம்பத் வழியனுப்பச் சென்றான். அவன், அப்பா, மகன் உறவு அவ்வளவு சிறப்பானதல்ல என்று மட்டும் தெரிந்து கொண்டான்.

முதன்முதலில் இது தற்கொலையாக இருக்குமா? என சந்தேகப்பட ஆரம்பித்தான். பெண்ணின் மீது இனம் புரியா கவர்ச்சி-அன்பு. கம்பெனி முழுவதும் கேவலம். மன உளைச்சல் தற்கொலையாக இருக்குமா?

திருமணமான பெண்ணுடன் ஜாலியாகப் பழகினால் பிரச்சினை வராது. ஏன்னா பழியைப் புருஷன் மேல போட்டுறலாம். கல்யாணமான பெண்களுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின் கணவன் கசக்க ஆரம்பித்து விடுவான். ஜாலியாக இருக்கணும்னா, கல்யாணமான ·பிகரை பாருங்க என அனைவரும் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சம்பத்தும் கூட இருந்தான்.

அவன் முதலில், இது உடல்நலக் குறைவு என்றே நினைத்தான். சம்பத் மிகவும் பலகீனமான உடம்பு உடையவன். ஆறு மாதத்துக்கு முன் ஒரு நாள் மழையில் மிகவும் நனைந்து, மயக்கமடைந்து, விழுந்துவிட்டானாம். பின்பு அவனே ஒரு ஆஸ்பத்திரியில் சென்று 15 நாள், ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டானாம். டாக்டர் உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக்கச் சொன்னாராம். சம்பத் கூறியுள்ளான். என்ன வியாதி அது? ஆனால் சமீபத்தில் மிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளான். எல்லாம் சேர்ந்து உயிர் போய் விட்டது. இப்படித்தான் முதலில் நினைத்தான். ஆனால் தற்கொலையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏதாவது மாத்திரை சாப்பிட்டிருந்தால்... உயிரைத்தான் மனிதர்கள் எவ்வளவு துச்சமாக மதிக்கிறார்கள்.

5.30 மணி. ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்ததும், அவர் மீண்டும் ஒரு முறை பிளிறினார். குலை நடுங்கியது. அவன் உள்ளூர பயந்தான். கிராமத்தின் முகம் கோரமானதும் கூட. அவர்கள், அவன் மீது பாய்ந்தால். வண்டி நின்றது. அவன் ஒருபுறம், வேறு சிலர் ஒருபுறமாகச் சடலத்தைத் தூக்கிச் சென்றனர். ஊரே கூட ஆரம்பித்தது. சம்பத் உயிருடன் இருந்தால், இப்போதுள்ள வரவேற்பே வேறயாக இருக்கும். கும்பல் சூழ்ந்தது. படித்த அந்த இளைஞர் அறிமுகப்படுத்திக் கொண்டார். பி.இ. படித்திருப்பதாகக் கூறினார். அப்பாடாவெனயிருந்தது. விஷயத்தைக் கூறினான். மஞ்சுளா என்பது யார்? சம்பத்தின் தங்கை. அப்புறம் அந்தக் காகிதங்களை அவரிடம், கொடுத்தான். 'பாய்சன் சாப்பிடவில்லை' என உறுதிப்படுத்திக் கொண்டார். திடீரென சம்பத்தின் அப்பா ஓடி வந்தார். அவனைப் பார்த்தார். ஏதோ சொல்ல வாயெடுத்தவர் திரும்ப போய் விட்டார். சத்யா, சாந்தகுமார், அவன் மூவரும் மட்டுமே புதியவர்கள். ஒவ்வொருவராக வந்து என்னவென்று விசாரித்தனர். அங்கங்கு சந்தேகக் கேள்விகள், முகங்கள் அவன் 'கொலைப்பழி' ஒன்றுதான் இன்னும் ஏற்கவில்லை. அதுவும் இப்போது பூர்தியாகிவிடும் போலுள்ளது. ஒவ்வொருவரிடமும் திரும்பத் திரும்ப மாறாமல் அதையே கூற வேண்டியிருந்தது. அவன் உள்ளூர பயந்திருந்தான். உண்மையில் இச் சாவுக்கு அவன் எவ்வகையில் தொடர்புடையவன். யாருடைய சாவுக்கும் யாரும் பொறுப்பாளியா? நாம் நினைத்தால் ஒரு உயிரை எடுக்க முடியுமா? அல்லது நம் உயிரைத்தான் இவர்கள் எடுத்து விட முடியுமா?

7 மணி அளவில் ஒருவர் வந்தார். மூவரையும் அழைத்து டீ வாங்கித் தந்தார். அவர் சம்பத்தின் அக்கா வீட்டுக்காரர். அவரிடமும் திரும்பவும் கூற வேண்டியிருந்தது. டீ குடிக்க முடியவில்லை. பசி வேற உயிரை பிய்த்தது. யாவரும் சம்பத்தைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆறு மாதத்திற்கு முன் சம்பத்திற்கு மயக்கம் வந்தது. உண்மையில் ''பர்ஸ்ட் அட்டாக்'' ஆக இருக்குமா? இருக்க வாய்ப்பு உள்ளது. சாவதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் உடல் வலியால் பயங்கரமாக அவதிப்பட்டுள்ளான். வயிறு கெட்டுள்ளது. தூக்கமின்றி அலைந்துள்ளான். அந்த வெயிலில் உடல் பயங்கரமாக வேர்க்க, பேன் காற்றில், குளிரை உணர்ந்துள்ளான். சொல்ல இயலா உடல் வலி, மூச்சிரைப்பு, இறுதியில் இதயம் அடங்கிவிட்டது. இது இரண்டாவது அட்டாக். மன உளைச்சல், உடல் பலகீனம், இப்படி யோசித்தல் இது சாதாரண மரணமே. மேலும் 22 வயதில் ஹார்ட் அட்டாக் வருமா?



நச்சுப் பாம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 6:17 pm

உறவினர் வர, வர வழக்கமான சாவு வீட்டு சம்பிரதாயங்கள், அழுகை, ஒப்பாரி, பறையொலி கேட்டு அலறி எழுந்தான். நிறைய ஊகங்கள். யாவரும் அவனைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது போலிருந்தது. கிராமம் அதன் மோசமான பக்கங்கள் தெளிவாகக் கண்ணில் பட்டன. பின்பு அந்த வேலையாள் வந்தான். தனியே அழைத்தான். உண்மையில் நடந்தது என்ன? என வினவினான். கூறியதும், அவன் உறுதியாகக் கூறினான். இது கொலை என்று.

தம்பிக்கு ஆபீசில் உள்ள கல்யாணமான ஒரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. வேலையாள் கூற, கூற, பொட்டில் அறைந்தது போலிருந்தது. அவன் யூகித்தது சரிதான். அந்தப் பெண் மலையாளி. அவள் கணவனும் சம்பத்திற்குப் பழக்கமானவன்தான். இந்த விஷயம், சம்பத் அப்பா, அம்மா அனைவருக்கும் தெரியும். இதனால்தான் அன்று விசாரிக்க வந்தனராம். ஊரில் பல பேர் இவ்வாறு கூறக் கேள்விப்பட்டனராம். உங்க தம்பி, ஆபீசில் ரொம்ப ஜாலியாக இருக்கார், என ஒரு லாரி டிரைவர் (இவங்க பக்கத்து ஊர்) கூறியுள்ளார். தம்பியும், அவளும் ஒன்றாகச் சாப்பிடுவார்கள். சினிமாவுக்குக் கூட போயுள்ளனர். ஒரு நாள் பஸ்சில், தம்பி, அவள், அவள் குழந்தையும் போனதை இவனே பார்த்துள்ளானாம். கேட்டதற்கு பிரெண்டு என்றானாம். மேலும், அக்குழந்தையைத் தம்பி தூக்கி வைத்துள்ளான். ஆச்சரியமாக இருந்தது. இடையிடையே அந்த வேலையாள், கோபத்தையும் வேதனையையும் வெளியிட்டான். அவளின் வீட்டுக்காரருக்கு, தம்பி ஒரு லோடு கரும்பு வாங்கிக் கொடுத்தானாம்.

அன்றிரவு, சேதி சொல்லி வந்தவன் அவளின் கணவன்தான். ஆனால் அப்புறம் வரவேயில்லை. இப்போது வரைவில்லை. கரும்பு வாங்க வந்தவன் இப்போது ஏன் வரவில்லை? சந்தேகப்பட்டான் அந்த வேலையாள். நேற்றிரவு சாப்பாடு எடுக்கவே இல்லையாம். ஏதோ நடக்கப் போகிறது என உள்ளுணர்வு கூறியதாம்.

சத்யா, சாந்தகுமாரிடம் தனியாக இது பற்றி பேசினான். சத்யா சொன்னான். இந்த விஷயத்தைச் சொன்னவுடனே ஒரு கம்பெனி ஆள். 'அய்யோ, தங்கச்சி வளர்மதிக்கு என்ன சொல்வேன்' என்றானாம். வளர்மதி அவள்தான் அனைத்திற்கும் காரணம். மதியம், ஆஸ்பத்திரிக்குச் செல்லுமுன் ஆபீசிற்குச் சென்று வந்துள்ளான் சம்பத். காட்டூரில்தான் அவள் வீடு உள்ளது. காட்டூரில்தான் டாக்டரிடம் மதியம் காண்பித்துள்ளான். அந்த டாக்டர் இரவு காட்டியபோது, ஒரு கம்பெனி ஆளிடம், மதியம் கூறியதை நினைவுபடுத்தினார். அப்ப அந்த ஆள், சம்பத்துடன் டாக்டரை மதியம் பார்த்துள்ளான். அவன்தான் சேதி சொல்லி வந்தவன். அவன்தான் வளர்மதியின் கணவன். ஆக சம்பத் மதியம் ஒருவருடன் சேர்ந்து மாத்திரை சாப்பிட்டுள்ளான். இது கொலையா? ஆண்டவரே எங்கு போய் முடியுமோ?

சற்று நேரத்திற்கெல்லாம், கம்பெனி லாரி வந்தது. கும்பலாய் ஆண், பெண் கூட்டம். ஓவென கதறியது. யாருடைய மரணத்துக்கோ மக்களால் எப்படி ஓட்ட முடிகிறது. அவன் கண்களிலும் நீர். இதேபோல் கும்பல்தான் அவன் அப்பா மரணத்திலும் வந்தது. அவன் கதறினான்.

கூட்டத்தில் ஒரு பெண்ணைச் சத்யா காண்பித்தான். அவள்தான். அவள் கதறியழுதாள். திடீரென ஒரு கும்பல் ஓடியது. அவள் மயக்கமடைந்தாள். அது வளர்மதிதான். அவளைத் தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் ஓடியது. அவளின் கணவன் அங்கு வரவில்லையென வேலையாள் கூறினான், காதில்.

கொஞ்ச நேரத்தில் கும்பல் புறப்பட்டு, லாரி திரும்பியது. இப்போது கும்பலில் யாரிடமும் அழுகையில்லை. சம்பத் அப்பா, ஏதோ புரிந்தவராக, தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டிருப்பார் போல. பாடை கட்ட ஆரம்பித்தனர். பிற வேலைகள் நடந்தன. சடங்குகள் செய்தனர். அழுகை உயர ஆரம்பித்தது. ''உன் ஆசையெல்லாம் எங்கப்பா, ஒங் கனவெல்லாம் எங்கப்பா'' என்று சம்பத்தின் அம்மா கதறினாள். 'எம் புள்ளைய கொன்னுட்டாங்களே' என மாரில் அடித்து கதறினாள். அவனுக்குச் சுரீரென்று குத்தியது.



நச்சுப் பாம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 6:17 pm

ஊர்வலம் புறப்பட்டது. உறவினரின் கதறல் மிகக் கொடுமையாகயிருந்தது. நேற்றிரவு யாருமற்ற அனாதையாய், ரோட்டில் கிடந்த சம்பத் நினைவுக்கு வந்தது. ஊரே திமிறியது. மனம் கசிந்தது. பிரிவு உணரப்படக்கூடிய தருணத்தின், முக்கியத்துவத்தில் சாக வேண்டும். இல்லையெனில் சாவிற்கு கூட மரியாதை கிடையாது.

ஆற்றை அடைந்தது ஊர்வலம். விறகுகள், எரு, வைக்கோல் போன்றவைகளை வைத்து சிதை தயாரித்திருந்தனர். இறுதியாகச் சம்பத்தின் முகத்தை அருகே பார்த்தான். நீலம் பாதித்திருந்தது. கண் வெளியே பிதுங்கியிருந்தது. உண்மையில் பயமாகயிருந்தது. அப்பா, சிதைக்குத் தீ மூட்டினார். திடீரென ஆறே அதிரும்படி பிளிறினார். 'டே, சம்பத்தூ....' மகாக் கொடுமை. தீப்பற்றி எரிந்தது. அதைக் காணச் சகியாமல் அவன் திரும்பிக் கொண்டான்.

எல்லோரும் திரும்பினர். மூவரும் உடனே புறப்பட்டனர். அந்த வேலையாலும், மற்றவர்களும் சாப்பிடச் சொன்னார்கள். பசிதான் ஆனால், வேண்டாமென கிளம்பி விட்டனர்.

வேலையாள் மட்டும் பஸ் ஸ்டாப் வரை வந்தான். இறக்கும்போது கூட இருந்தீர்களா? என்றான். இல்லையென பதிலளித்தான். அவன் அந்த இடைவெளியில் அவன் ஏதாவது செய்திருக்கக்கூடும். பின் ஏன் இங்கு வரவில்லை?

'அந்தத் தே....ளை' மதியமே கொன்னுருப்பேன் என்று கத்தினான். நாளை யாவரும் வருவதாகக் கூறினர். மூவரும் அறைக்குத் திரும்பினர். பாரதப் போர் ஓய்ந்தது போலிருந்தது அறைக்குப் போகவே பயமாகயிருந்தது.

மறுநாள் மாலை கல்லூரி விட்டதும், அறைக்குத் திரும்பின பின் சம்பத் வீட்டார் வந்தனர். சம்பத்தின் பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அவர்கள், சம்பத் மேலும் குறை உள்ளது. மேலும் ஒரு பெண்ணின் வாழ்வில் திரும்பவும் துன்புறுத்த விரும்பவில்லை. இத்துடன் முடித்து விடுவோம் என கூறிச் சென்றனர்.

அன்றிரவு படுத்தபோது 'நச்சு' நினைவிற்கு வந்தது. வராந்தாவில்தான் சம்பத் படுப்பான். அங்குதான் கட்டுவிரியன் வந்தது. நச்சு தீண்டியது சம்பத்தைத்தான். அது துரத்தியது சம்பத்தைத்தான். அரவம் வராந்தா வரை வந்துவிட்டது. அறைக்குள் வர எவ்வளவு காலம் ஆகும்? கண்களை மூடினான். அவன் கண்ணில் நச்சுப்பாம்பு ஊர்ந்தது.


எம்.எஸ்தர்




நச்சுப் பாம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 19, 2010 6:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் தல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நச்சுப் பாம்பு Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக